- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
9
“சாமி கும்பிட்டாச்சினா வீட்டுக்குக் கிளம்புங்க” என்ற குருமூர்த்தியின் குரலில் அனைவரும் நடப்புக்கு வர காமாட்சி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
முதன்முதலாக அவர்கள் வீட்டின் முன் நின்ற காரைப் பக்கத்திலுள்ளவர்கள் வியப்புடன் பார்வையிட்டு யாரென்று விசாரிக்க...
“எங்க அத்தை மகன் குடும்பம். கல்யாணத்துல பார்த்து கூட்டிட்டு வந்துட்டேன்” என்று அவர்களை அனுப்பி, “வீடு பெருசால்லாம் இருக்காது மச்சான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நான் குடிக்க எதாவது வாங்கிட்டு வர்றேன்” என்றவரை அவர்கள் தடுக்க... அதற்குள் புடவையை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்த திருமொழி, “நீங்க பேசிட்டிருங்க. நான் கடைக்குப் போயிட்டு வர்றேன்” என்று கூடையுடன் கையில் சிறிது பணமும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
வீட்டைச் சுற்றி நோட்டமிட்டபடியிருந்த கதிர் வெளித்திண்ணையில் அமர்ந்து அவளையே வேடிக்கை பார்த்திருக்க பக்கத்திலிருந்த கடையிலேயே தேவையானதை வாங்கி வருபவளைப் பார்த்தவன் சின்னதாக புன்னகைத்தான்.
அவளோ, கோவிலில் அவனுடன் சேர்த்துப் பேசியதில் உள்ள கோபத்தில் அவனிடம் முகம் திருப்பிப் போனாள்.
“கோபமாம்” என்று சிரித்தவன், “பட் எனக்குச் சந்தோஷமாயிருக்கே மொழி. உண்மையிலேயே சந்தர்ப்பம் கிடைச்சிருந்தா கோவில்ல வச்சி உன்னை என் மனைவியா மாத்தியிருப்பேன். கதிர் உனக்கு வேண்டாம் சரி! என்னில் பாதியான இளாவை உன் அத்தானா ஏத்துக்கோடா போதும்.” மனம் அவளைக் கொஞ்சிக் கெஞ்சியது.
உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் காஃபியுடன், கடலை மாவினால் செய்த வடையுடன் வர பேசிக்கொண்டே அந்த நேரத்தை இனிமையாய் கழித்தார்கள்.
“திருமா நீ தம்பியைக் கூட்டிப்போய் தோட்டத்தைக் காட்டுறியா?”
“தாயாரே! உங்களுக்கான ஏரியாவாம் வாங்க போகலாம்” என்றான் பரபரப்பாக.
“இதோ வந்துட்டேன்டா மகனே. எப்ப எப்பன்னு காத்திருந்தேன். ஏங்க நீங்க வர்றீங்களா?” கணவனிடம் கேட்க...
“எனக்குக் கால் வலிக்குது சிவா. காமாட்சிகிட்டப் பேசிட்டிருக்கேன். நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் சிவா சீக்கிரம் வரப்பாரு நைட் கிளம்பணும்” என்றார்.
சரியென்று மூவரும் நடக்க... சற்று தூரம் சென்றபின், “இது கடலைக்காடு அத்தை” எனக் காண்பித்த இடத்தில் காய்ந்த செடிகளே நின்றது.
“என்ன மொழி எதாவது பூச்சி அரிச்சிருச்சா. செடிலாம் காய்ந்து போய் கிடக்குது?”
“கடலைச்செடி காஞ்சதுன்னா காய் முத்தி அறுவடைக்குத் தயாராகியிருச்சின்னு அர்த்தம். இன்னும் நாலைந்து நாள்ல எடுத்துடலாம்” என்று ஒரு செடியை அப்படியே இழுக்க அது கொத்துக் கொத்தாய் காயுடன் வந்தது. அதிலுள்ள மணலைத் தட்டி கடலையைப் பிய்த்து பருப்பை சிவகாமியிடம் கொடுக்க... அதை வாயிலிட்டு, “ம்... நல்லாயிருக்கு மொழி. நான் ஒண்ணு பறிக்கிறேன்” என்று கடலைச்செடியை கொஞ்சம் வலுகொண்டு இழுத்தார்.
“அத்தை அதை இழுக்க கஷ்டப்பட வேண்டாம். சாதாரணமா இழுங்க வந்திரும்” என்றதும் ஒன்றை உருவ கொத்தாய் வந்த கடலைகளைப் பார்த்தவருக்கு அந்தச் செடிகள் அனைத்தையும் தானே பிடுங்கி எடுக்க ஆசை வந்தது.
அவரின் ஆசையை உணர்ந்தாளோ திருமொழி, “நீங்க கொஞ்சம் செடி பறிச்சிருங்க அத்தை. வீட்டுக்குப் போகும்போது எடுத்துட்டுப் போகலாம்.”
தாயின் சந்தோஷத்தையும் திருவின் கனிவையும் கவர் செய்தான் கதிர்.
மகனுக்கும் கடலையை உடைத்துக் கொடுக்க... திரும்பத் திரும்பக் கேட்டவனிடம், “சார் போதும். பச்சைக்கடலையை அளவுக்கதிகமா சாப்பிட்டா வயிறு வலிக்கும். வீட்டுக்கு எடுத்துட்டுப் போயி கடலையை வேகவச்சித் தர்றேன்” என்று அடுத்து இருந்த பூந்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.
“மொழி பூந்தோட்டம் அழகாயிருக்கு. பூ பறிக்கலையா?”
“அப்பவே பறிச்சிட்டுப் போயிருப்பாங்க. இது கிரேந்திப்பூ! பறிச்சி முடிச்சாலும் பறிச்ச மாதிரியிருக்காது. மஞ்சள் ஆரஞ்சு கலர் பூக்களோட தோட்டம் எப்பவும் அழகாயிருக்கும். பூப்பறிக்கும்போது நாங்க யாராவது ஒருத்தர் இருப்போம். இன்னைக்கு கல்யாணத்துக்குப் போனதால தெரிஞ்சவங்க மூலமா வேலையை முடிச்சிட்டேன்.”
“டேய் மகனே! இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்குதோ இல்லையோ.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. போட்டோ எடுடா. நம்ம வீட்டு ஹால்ல வைக்கணும்” என்றார் ஆசையாக.
பூக்களுடன் தாயும், அவளும் அழகாக கவர் செய்தது இளங்கதிரின் செல்போன். நேர்த்தியாய் அனைத்தும் அழகாய் வர, “சூப்பராயிருக்கு தாயாரே! அப்படியே இன்னும் இரண்டு போஸ் குடுங்க” என்று அவரை அப்படி இப்படி அலைக்கழித்து அவரை எடுப்பதாய் பெயர் செய்து சிலது மங்கையவளையும் எடுத்துக் கொண்டான்.
“அடுத்து மாந்தோப்பு இருக்கு அத்தை. போகலாமா?” சிவகாமியின் சந்தோஷத் தலையாட்டலில் அங்கேயும் அழைத்துச் சென்றாள்.
“ஹேய் மொழி! எல்லாம் உங்களோடதா? அழகாயிருக்கு.”
“ஏன் சார் திடீர் சந்தேகம்? எங்களோடதுதான். நான் வந்தப்ப அத்தைக்கு இந்த மாந்தோப்பு மட்டும்தான் இருந்தது. எங்க ரெண்டு பேரோட இத்தனை வருஷத்து உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் கடலைக்காய் போட்டிருக்கிற இடமும், அந்தப் பூந்தோட்டமும்.”
“ம்... க்ரேட்” என மனதார பாராட்டினான்.
“இது மாம்பழ சீசன் இல்ல. நெக்ஸ்ட் வரும்போது சீசன் டைம் பார்த்து வாங்க.”
“கண்டிப்பா மொழி. இனிமேல் ஹாலிடேஸ்னா அது அணைப்பட்டிதான்.”
“சரிங்கத்தை இருட்டிருச்சி. வாங்க போகலாம்” என்று திரும்பி வரும்பொழுது மறக்காமல் பறித்து வைத்திருந்த கடலையை எடுத்து வந்து கதிரிடம் சொன்னாற்போல் வேக வைத்தும் கொடுத்தாள்.
இரவு உணவு முடித்ததும் குருமூர்த்தி மனைவியைக் கிளம்பச்சொல்லி அவரைக்காண, அவரோ கண்டுகொள்ளாமலிருக்க... ‘இவளை நம்பினா இன்னைக்கு இங்கேயே உட்கார வச்சிருவா’ என்று “சி.. சிவ்...” எனும்முன் “ஹேய் யக்கா” என இடையிட்டது பிரஷாந்தின் குரல்.
“டேய் தம்பிப்பையா! என்னடா இந்த நேரத்துல?”
“சும்மதான்கா. உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி. அதான் எல்லா வேலையையும் சீக்கிரமே முடிச்சிட்டு வந்துட்டேன். சாதம் இருக்கா? எனக்குப் பசிக்குதுக்கா” என வயிற்றைத் தடவிக் காண்பித்தான்.
“சாரிடா தம்பி. வா போகலாம்” என்று உட்காரவைத்துப் பரிமாற அவன் கண்களில் உள்ள கனிவை கதிரைப்போல் சிவகாமியும் கண்டார்.
‘உடன்பிறவாத ஒருவன் ஒரு பெண்ணிடம் அக்கா உறவு சொன்னாலும் சொந்த அக்காபோல் உறவாட முடியுமா?’ இதோ இருவரையும் பார்த்தால் வேறு வேறாகத் தோன்றவில்லை. அது ஏனென்றுப் புரியவில்லை சிவகாமிக்கு.
“நீயாக்கா சமையல் செய்த? ம்... எங்க அத்தான் குடுத்து வச்சவர்” என்று மறைமுகமாக கதிரைக் கண்டான்.
அவனோ ‘ஏன்டா சிக்கல்ல மாட்டி விடுற’ என்பதாய் ஒரு பார்வை பார்க்க...
“நானும் அத்தையும் சேர்ந்துதான்டா பண்ணினோம்” என்றதும் காமாட்சியையும் பாராட்டி சாப்பிட்டு முடித்து பைக்கிலிருந்து ஒரு பாத்திரம் எடுத்து வந்து, “கல்யாணப் பலகாரம் அம்மா குடுக்கச் சொன்னாங்க” என்று தந்தான்.
“தேங்க்ஸ்டா” என்று உள்ளே வைத்து வர...
“அப்புறம் மச்சான் அப்படியே வாசல்ல ஒரு தூக்கத்தைப் போடுவோமா? காலையிலேயே கோவிலுக்குக் கூட்டிட்டு வரச்சொல்லி அண்ணன் சொன்னாங்க.”
படபடப்புடன் பேசிக்கொண்டே போனவனைத் தடுக்க வழியில்லாது குருமூர்த்தி முழிக்க... சிவகாமியோ, “கோவில் எங்கடா?” என்றார்.
“தெரியலங்க அத்தை. அதை மட்டும் சஸ்பென்ஸ்ல வச்சிருக்காங்க. அங்க போனதும்தான் நமக்குத் தெரியும். நானும் கேட்டுப் பார்த்துட்டேன். எங்க வாயே திறக்கலை. சரி போகும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். குழந்தைங்களை இந்தப் பெரியவங்க எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க அத்தை.”
“உங்களை விடவாடா நாங்க ஏமாத்துறோம்” எனும்போது சிவா என தன்னைச் சுரண்டிய கணவனைப் பார்த்து என்னவென்று கேட்க, “வா கிளம்பலாம் டைமாகுது. என்னால இங்க இருக்கவே முடியல. ப்ளீஸ் சிவா சொன்னாப் புரிஞ்சிக்கோ” என கெஞ்ச ஆரம்பித்தார்.
அவரின் மனமும் சற்று இளகியதோ, “சரிங்க கிளம்பலாம்” என்றதும் கணவனின் முகம் மலர்வதைப் பார்த்தவர் மனம் கனிய சிரித்தபடி பையனிடம் திரும்பி, “ராஜா நாம ஊருக்குப் போகலாம்” என்றார்.
“அம்மா! ஆனா...” கேள்வியாய்ப் பார்த்தான். அவனுக்கு இன்னும் தாயை அதிகம் எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை என்ற குற்றவுணர்வு.
“ஒண்ணும் பிரச்சனையில்ல. அப்பாவுக்குப் பிடிக்கலன்னாலும் நம்மளோட இருந்தாங்கள்ல. அதுக்காவது மரியாதை குடுக்கணும் ராஜா. நாம கிளம்பலாம்.”
பிரஷாந்திற்குத்தான் அதிர்ச்சி. தன்னுடைய எண்ணமெல்லாம் எங்கே பலிக்காமல் போய்விடுமோ என்ற பயம் அவனுக்குள்.
சில நிமிடங்களிலெல்லாம் காமாட்சி திருமொழியிடம் விடைபெற்று பிரஷாந்திடம் சொல்லிக் கிளம்பி வாசல் செல்கையில், அவர்களை வழிமறித்துக் குறுக்கே வந்து படுத்தான் பிரஷாந்த்.
அனைவரும் பதறிக் கேட்க...
“என்னைவிட்டுப் போறீங்கள்ல.. போங்க போங்க எல்லாரும் என் பிணத்தைத் தாண்டிப் போங்க” என்றான் படுத்தபடியே.
“ஏய் என்னடா பண்ற? எழுந்திரு?” எனறான் இளங்கதிர்.
“இல்ல நீங்க ஊருக்குப் போகமாட்டேன் சத்தியம் பண்ணுங்க. இல்ல என் பிணத்தைத் தாண்டிப் போங்க” என்று திரும்பவும் சொல்ல...
‘கடவுளே! போறவங்களை ஏன் இவன் தடுக்கிறான். இவங்க கிளம்பினா சமீபகால என் கனவுப் பிரச்சனையும் கொஞ்சம் தீருமே.’ மனம் நினைத்தாலும் அவர்களைத் தடுக்க அவன் சந்தானம் காமெடியை செய்யும்போது ஒருபக்கம் சிரிப்பும் வர... அவர்கள் மூவரும் புரியாது விழிப்பதைப் பார்த்து இது சினிமாவில் வரும் காமெடி சீன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புரிந்தது. அதைச் சொல்ல வாயெடுத்தவளை பிரஷாந்தின் கெஞ்சல் பார்வையும், காமாட்சியின் தலையசைப்பும் தடுத்தது.
அவருக்குமே உறவென்று யாருமில்லை என்ற ஏக்கம் இருக்கும்தானே. அதனாலேயே திருமொழி அமைதியாகிவிட்டாள்.
கதிருக்குமே தங்களைத் தடுக்கத்தான் அப்படி செய்கிறான் என்று தெரியும். அதற்காக பிணம் என்று பேசுவது தப்பு என்பதால் அவனைக் கண்டிக்கப் போகையில்...
“நீ ஏழுந்திருப்பா. நாங்க ஊருக்குப் போகலை” என்றார் குருமூர்த்தி.
‘அவ்வார்த்தைதனை உச்சரிக்காமலே இருந்திருக்கலாம் அவர். கதிர் அவனைச் சமாதானப்படுத்தியிருப்பான். விளைவு!’
சிவகாமி கணவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.
“பரவாயில்ல சிவா. உனக்கும் அந்தக் கோவில் போகணும்னு ஆசையிருக்குல்ல? அதனால போய்ட்டு நாளைக்கு ஈவ்னிங் ஊருக்குப் போகலாம்” என்றதும் நன்றியாய் கணவனைப் பார்த்து... “வா திருமா நாம ஒரு ரௌண்ட் அடிச்சிட்டு வருவோம்” என்று கிளம்பினார்.
பிரஷாந்த் எழுந்து நிற்கையில் கதிர் பளாரென்று ஒரு அறைவிட்டான். “இளா அத்தான்” என்றான் அதிர்வாய்!
“கதிர் என்ன பழக்கம்?” அதட்டினார் குருமூர்த்தியும்.
“சாரிப்பா” என்று தகப்பனிடம் மன்னிப்பு கேட்டு பிரஷாந்தை வெளியே காருக்கருகில் கூட்டி வந்து, “என்னடா ட்ராமா இது.. பிணத்தைத்தாண்டிப் போங்கன்னு. எப்பயிருந்துடா கோழையான? மதியம் உங்கப்பாகிட்ட வீர வசனம் பேசினது யாருடா?”
“மச்சான்!”
“கேட்டேன்டா. நீங்க ரெண்டு பேரும் பேசின எல்லாத்தையும் கேட்டேன். திருமொழி உன் அக்கான்னு சொன்னதுவரை தெரியும்.”
குருவிடம் காமாட்சியைக் கோர்த்துவிட்டு சிரித்தபடி வந்த கதிர், பெண் வீட்டின் பின்பகுதியில் ஒரு மரத்திற்கடியில் நின்றிருந்த பிரஷாந்தை நோக்கி வர...
“நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நினைக்கலப்பா? உண்மையிலேயே உங்களை என் அப்பா ஸ்தானத்துலதான் பார்க்கிறேன். ஆனா நீங்க... என்னைப் பலிகடா மாதிரிதான் வளர்த்திருக்கீங்கள்ல? என்னைக்குப்பா கிடா வெட்டு?” என நக்கலுடன் கோபமாகக் கேட்டான்.
“அன்பு! ஏன்டா இப்படிப் பேசுற? நான் அப்படி நினைச்சி வளர்க்கலடா” என்றார்.