- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
8
“நேத்து நைட் கூட இந்தக் கல்யாணத்தை நானே நிறுத்துறேன் சொன்னாங்க. நான் விளையாட்டுக்குன்னு நினைச்சேன் மாமா. இப்படி நான் நினைக்கவேயில்ல மாமா. இப்பவும் இது உண்மையா இருக்கக்கூடாதான்னுதான் நான் நினைக்கிறேன். ஆனா, நிஜம் முன்னாடி நிற்குதே மாமா.” திணறித்திணறி பேசியவள் தன் தகப்பனிடம் வந்து மொத்தமாக வெடித்தாள்.
“உங்க அட்வைஸ் கிடைச்சது வரை என் மனசுல எதுவும் இல்லப்பா. ஆனா, அதுக்கப்புறம் உங்க மருமகனைத் தவிர என் மனசுல வேற யாரும் இல்லப்பா. அவங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்கலப்பா. முதல்ல எப்படி என்னை பிடிக்கலைன்னு சொன்னாங்களோ, அதே நிலையிலதான் அவங்க இன்னும் இருக்காங்க. நான்தான் லூசு மாதிரி அவங்களை நினைச்சி...” முட்டிய அழுகையை அடக்க நினைத்தும் அடங்காமல் அழுகை வர கண்ணீரைத் துடைத்தவள்...
“அன்றைய நிகழ்வு நடக்காமலே போயிருந்தா, கண்டிப்பா நீங்க யார் என்ன முயற்சி செய்திருந்தாலும் எங்க கல்யாணம் நடக்காது. உங்க கனவும் கனவாகவேதான் போயிருக்கும். இப்பவும் அதேதான் இல்லன்னு சொல்ல முடியாதே.”
“நான் கேட்டேன்பா. உங்க வீட்ல பார்க்கிற பொண்ணு நானாயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்கன்னு?” அந்த வார்த்தையை சொல்லுமுன் இன்னும் அழுகை பொங்க தன்னை சமாதானபடுத்தி, “யோசிக்கவே இல்லாம சொல்லிட்டாங்கப்பா, நீயாயிருந்தா யோசிச்சிருப்பேன்னு. நான் உள்ளுக்குள்ள செத்துட்டேன்பா! அந்தளவு தகுதிகூடவாப்பா என்கிட்ட இல்ல. நான் என்னப்பா பண்ணட்டும்?” பாவமாய் கேட்ட மகளையே பார்த்திருந்தார் தணிகாசலம்.
அவளின் வாய் வார்த்தைகளைக் கேட்ட சுபாஷோ உண்மையிலேயே முதன்முதலாக தன்னைத்தானே வெறுத்தான்.
“நான் உங்க பொண்ணா, உங்களோடவே இருந்திடுறேன்பா. இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க. பிடிக்காத ஒரு வாழ்க்கையை சகிச்சிட்டு குடும்பத்துக்காகன்னு அவங்க வாழ வேண்டாம்பா. அப்படி ஒரு வாழ்க்கையும் நரகம்தானப்பா. அதை அவங்களுக்குக் கொடுக்க நான் தயாராயில்லப்பா.”
வெடித்துக் கதறும் மகளின் நிலையைப் பார்த்த பெற்றவருக்கு, தான்தானே மகளின் இந்த நிலைக்குக் காரணம் என்ற குற்றவுணர்வு மேலோங்க அவரின் கண்களுமே கலங்கியது. “என்னடா இப்படில்லாம் பேசுற?” என்றவரின் தோள்சாய்ந்து அழுத மகளின் கண்ணீரைத் துடைக்க வழி தெரியாமல் திகைத்து நின்றிருந்தார்.
வேகமாக அவளருகில் வந்த சுபாஷிணி, “கார்த்திமா அப்படில்லாம் பேசாத?” என்றார்.
திரும்பி தாயை கட்டிக்கொண்டவள், “நான் இப்படில்லாம் பேசணும்னு, ஏன் பேசுவேன்னு கூட நினைக்கலம்மா. நேத்து அவங்க போற போக்குல கல்யாணம்னு ஆகிட்டா அவளைத்தான் லவ் பண்ணுவேன். அந்தப்பொண்ணு நீயாயிருந்தாலும்னு சொன்னதுல ஒரு நம்பிக்கை வந்திச்சி. அதுக்கு முன்னாடி சொன்ன கல்யாணத்தை நிறுத்துறேன்றதை மறந்துட்டேன்மா. என்னோட சந்தோஷத்திற்கு ஆயுள் கம்மி போலமா. நான் என்ன அவ்வளவு கருப்பாவாமா இருக்கேன். நான் அழகில்லையாமா? நீங்கதானம்மா சொல்வீங்க அழகுடி செல்லம்னு. அதான் எனக்கு கர்வமாகிருச்சா. அதுக்கு அடி குடுக்கத்தான் உங்க மருமகனை வீட்டுக்கு அனுப்பினாரா கடவுள்.”
“வாங்கம்மா வீட்டுக்குப் போயிடலாம். என்னால இங்க நிற்கவே முடியல. அசிங்கமாயிருக்கு. எவனோ ஒருத்தனை கூட்டிட்டு வந்து என்மேல சேற்றைப் பூசித்தான் இந்தக் கல்யாணம் நிற்கணுமா? வேண்டாம்மா நாமளே நிறுத்திடலாம்” என்றாள் மன்றாடலுடன்.
மகளின் அழுகையில் சுபாஷின் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் ஆட்டம் கண்டதில் உள்ளுக்குள் உடைந்தார் சுபாஷிணி. ‘அண்ணனைப் பார்த்த நான் என் பெண்ணைப் பார்க்காமல் விட்டுட்டேனா.’ மனம் அரற்றியது இனி என்ன செய்வதென்று புரியாதிருந்தார்.
பளாரென்ற அடித்த சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை அனைவரும் பார்க்க, தாயின் முன் கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்தான் சுபாஷ். அதைத் தடுப்பாரும் யாருமில்லை அங்கே.
அதைப்பார்த்த வித்யாவும், கீர்த்தியும் பதறி அருகில் வர, கார்த்திகாவோ அதை முழுதாக உணரும் நிலையில் இல்லை.
“ஏன்டா தப்பு எல்லாம் நீ பண்ணிட்டு கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்றியா? நீ எப்படிடா என் மகனா பிறந்த?” என்றவர் கார்த்திகாவை இழுத்து வந்து அவன்முன் நிறுத்தி.. அவள் முகம் நிமிர்த்தி, “இவளுக்கு என்னடா குறைச்சல்? அழகு, அறிவு, அடக்கம்னு சேர்ந்த பொண்ணுடா இவ. இவளைவிட ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைச்சிருவாளா என்ன?”
“கலரா பளிச்சின்னு கேட்கிறியே, ரெக்கார்ட் டான்ஸ்கா பொண்ணு பார்க்கிற? வாழ்க்கைக்கு கலர் முக்கியமில்ல. பொண்ணோட குணம்தான் முக்கியம். இவளைப் போயி எப்படிடா... சே..” என்றவருக்கு மனசு ஆறவில்லை.
அத்தையின் கையிலிருந்தாலும் அவனின் முகம் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடி நின்றிருந்தவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவனை இன்னும் இன்னும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளியது.
அங்கு வந்த புதியவனை அடித்து உண்மையை வரவழைக்க நகர்ந்தவனை, ‘கார்த்திகாவின் அவரை அனுப்பியதே உங்க மகன்தான்’ என்ற வார்த்தைகள்தான் தடுத்து நிறுத்தியது. அதில் அதிர்ச்சியுடன் கோபமும் வந்தது சுபாஷிற்கு. ‘மனைவியாக வரப்போகிறவளை அடுத்தவன் சொந்தம் கொண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கிற அளவுக்கு அவ்வளவு கேவலமானவனா நான்?’ ஆண் என்ற வீராப்பு எழ அவளைத் திட்டக் கிளம்பியவன், அவளின் அடுத்தடுத்த வார்த்தைகளிலும் அவளின் அழுகையிலும் உறைந்து போய் நின்றான்.
தன்னைக் காதலிப்பது முதல், திருமணம் என்பதே இனி கிடையாது என்று பேசியது மட்டுமின்றி, ஏன் என்னை அவங்களுக்குப் பிடிக்கல. யோசிக்காம சொல்லிட்டாங்கப்பா யோசிச்சிருப்பேன்னு அவள் சொல்லும்போது அவளின் வலியை முழுமையாக அனுபவித்தான். தான் விட்ட வார்த்தைகளின் வீரியத்தையும் இப்பொழுதுதான் உணர்ந்தான்.
அந்தளவு தகுதியில்லையாப்பா எனும்போது, ‘உனக்கு எல்லா தகுதியும் இருக்கு கார்த்தி. ஆனால், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற தகுதி இப்ப எனக்குத்தான் இல்லையோன்னு தோணுது’ என்றது அவன் மனம்.
‘தன்னை ஒரு பெண் காதலிக்கிறாள். அதுவும் தன்னை தவிர்த்து யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்கிறாள். வேறொரு பெண்ணை பார்த்து தன்னை மணமுடிக்கவும் சொல்கிறாள்’ எனும்போதே அவனுள் புது ரெத்தம் பாய்கிறாற்போல் இன்பமாய் ஓர் உணர்வு. அவளின் அந்த அழுகை அவளுக்கு தான் நம்பிக்கை கொடுக்கவில்லை என்பதை உணர்த்த, உள்ளுக்குள் எதுவோ அழுத்தியது. அவளை தன்னுள் அணைத்து ஆறுதல் சொல்ல ஒவ்வொரு செல்லும் துடித்தது.
அப்பொழுதுதான் அவனுக்கே தெரிந்தது அவளை தான் நேசிப்பது. ஷோரூம் சென்ற தினம் நண்பன் அவளைப் பெண் கேட்டதும், நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக அவளை விட்டுக் கொடுக்காததன் அர்த்தமும் விளங்கியது. ‘ப்பொழுது அவள் கண்களில் கண்ணீரைக் கண்டேனோ அப்பொழுது ஆரம்பித்ததா இந்த நேசம். அவளை வேண்டாமென்று வெளியே சென்னாலும், ஆயிரம் குதித்து அவளையும் காயப்படுத்தினாலும், இதுவரை இந்த திருமணத்தை நிறுத்த தான் ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்காததற்கு காரணம் புரிந்தது.
அதிலும் அவளுக்கு காலில் அடிபட்டு, தன் வார்த்தையிலும் அடிபட்டு வீடு வந்தபொழுது, அவளை சமாதானப்படுத்த என்று அவளைப் பார்த்தவன்... தங்கையிடம் பேசுவதாக எண்ணி தன் மனதைப்பற்றி சொன்னதிலும், அவளின் கண்ணீரிலும்தான் அங்கிருந்து கிளம்பும்போது, என் மனைவின்னு யார் வந்தாலும் அவளைத்தான் நான் காதலிப்பேன். அது நீயாயிருந்தாலும் என்றது ஏனென்று புரிந்தது.
அன்று இரவெல்லாம் யோசித்தும் அவளை திருமணம் செய்யக்கூடாது என்பதை மட்டும் ஒரு செகண்ட் கூட நினைத்தானில்லை. அவள் வீட்டிற்கு சென்ற அன்று அதிர்ச்சியில் கண்களில் கண்ணீருடன் இருந்த முகமே நினைவில் வந்து அவனை உள்ளிழுத்தது. ஏதோ அந்த முகம் நெருங்கி வரவர தனக்குள் ஆழப்பதிந்து, அவளை எதற்காகவும் இனி அழவிடக் கூடாதென்று முடிவெடுத்திருந்தான்.
அதன் பொருட்டே ரிசப்ஷனிலும் சந்தோஷமாகவே கலந்து கொண்டான். ஆனால், இன்றே கண்ணீர் வடிக்கிறாள். அதுவும் என்னால்! மனம் கனத்தது சுபாஷிற்கு, எப்படி அவளை சமாதானப்படுத்தப் போகிறேன் என்று.
“சொல்லுடா? நான் கேட்டுட்டிருக்கேன் பதில் பேசாம நின்னுட்டிருக்க? சொல்லு இவளுக்கென்ன குறை? இவளை வேண்டாம்னு சொன்னேன்னு வையி நீ எனக்கு வேண்டாம்டா” என்றார் அழுகையுடன்.
குறையை என்னிடம் வைத்துக் கொண்டு அவளிடம் குறைகாண எனக்கென்ன தகுதியிருக்கிறது. மனதை திடப்படுத்திக் கொண்டு, “நான் வேண்டாம்னு சொல்வேன்னு எப்படிம்மா எதிர்பார்த்தீங்க. நீங்க சொல்ற பொண்ணுதான் என் ஒய்ஃப்னு சொல்லியிருக்கேன்தான” என்றான் நிதானமாக கார்த்திகாவையே பார்த்தபடி.
“பொய் சொல்லாதடா. அப்புறம் ஏன்டா அவகிட்ட இந்த வார்த்தையை சொன்ன? அவ மனசுக்குள்ள எந்தளவு கஷ்டப்பட்டிருப்பா. உனக்கு ஏன்டா புரியலை?”
“ம்மா.. கொஞ்சம் விலகுங்க” என்று தாயை நகர்த்தி மனைவியாகப் போகிறவளிடம் வந்தவன், “நீ அழகாயிருக்க கார்த்தி” என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு ஏனோ அத்தனை வலிகளையும், வேதனையையும் மீறி சிரிப்பு வந்தது. அதை வெளியிடாமல் உள்ளே அடக்கினாலும், கண்கள் சிறிது காண்பித்ததோ!
“ஒண்ணு சொல்லட்டுமா கார்த்தி, என் மனைவி நீயாயிருந்தாலும் உன்னை மட்டும்தான் காதலிப்பேன்னு சொன்னேன். இப்ப சொல்றேன் இனி எப்பவும் உன்னை.. உன்னை மட்டும்தான் காதலிப்பேன்.” அவளின் நம்பாத பாவனையைக் கண்டவன், “உண்மையைத்தான் சொல்றேன். இது யாரும் கட்டாயப்படுத்தி சொல்லல. நானே யோசிச்சி எடுத்திருந்த முடிவுதான். நாளைக்கு நைட் சர்ப்ரைஸா சொல்லலாம்னு இருந்தேன். இப்படியாகும்னு நினைக்கல.”
“அன்னைக்கு சொன்னதுதான் கார்த்தி என்மேல உள்ள நம்பிக்கையை மட்டும் விட்டுறாத. உன்னை அவமானப்படுத்துற எதையாவது நான் செய்வேனா சொல்லு? அது என்னை நானே அசிங்கப்படுத்திக்கிறது இல்லையா. நான் இப்படி செய்வேனான்னு ஏன் யோசிக்காம போயிட்ட. அவ்வளவுதான் என் மேலுள்ள நம்பிக்கை இல்லையா?” எனும்போது அவளுக்குமே ஏன் அப்படி நினைக்கவில்லை என்று தோன்றியது.
“ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட். இப்ப சொல்லு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? நான் எங்க மாமா மாதிரி காதல் மன்னன்லாம் இல்லமா. காதல் இளவரசன்தான். மேரேஜ் அப்புறமா காதல் மன்னனாக ட்ரை பண்றேன். இது ப்ராமிஸ்” என்றவன்,
காதலிக்கும் ஆசையில்லை
பெண்ணே உன் மனம் புரியும் வரை...
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்!
கண்களில் கட்டிய நீர் சந்தோஷ நீராக அவனையே பார்த்திருந்தாள் கார்த்திகா.
“என்னடா நம்ப முடியலையா?” என்றதும் அவள் ‘ஆம்’ என்று தலையசைக்க, அவளின் கண்ணீர் துடைத்து, “இந்த கண்ணீர்தான் முதல்ல இருந்தே என்னை அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணினது. இந்தக் கண்ணீர்தான் என்னை உன்னை நோக்கி திரும்ப வச்சது. இந்தக் கண்ணீர்தான் உன்னை என்னிடம் சேர்த்தது. இந்தக் கண்ணீரைக் காலத்துக்கும் உன்கிட்ட நெருங்கவிடாம செய்யணும்ன்ற எண்ணத்தை என்னுள்ளே விதைச்சது. ஐம் சாரி” என சட்டென்று அவன் வாய்மூடினாள்.
சிரித்தபடி அவளின் கையை விலக்கி அத்தையிடம் வந்தவன், “சாரி அத்தை உங்க பொண்ணை ரொம்ப அழ வச்சிட்டேன்னு கோபம் இருக்கும். ஏன் உங்க நம்பிக்கைகூட இதுல ஆட்டம் கண்டிருக்கும். அதை சாரின்ற ஒரு வார்த்தையில சரிபண்ண முடியாது. எங்க வாழ்க்கையை வாழ்ந்து காண்பிச்சி சரி பண்றேன்” என்றவன் குரலில் உறுதியிருந்தது.