- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
8
அப்பாவின் சொல்லாத பாசத்தில் கரைந்தவள், அவரின் தோள் சாய, கலங்கிய கண்களை விழி உருட்டி தடுத்தாள். கண்ணீர் வந்தால் அனைவரும் தன் மீது பாய்வார்களே என்று.
“வாவ்... என்ன ஒரு சென்டிமெண்ட் சீன். இது நம்ம வீடான்னு இருக்கு. இப்படி ஒரு சீன் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாதே. அண்ணா எடு அந்த நாற்காலியை. கூட்டு அந்த பஞ்சாயத்தை. நாட்டாமையா நான் இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்றேன்.”
“அப்படியே ஆகட்டும்ங்க” என்ற ஜீவா, “நாட்டாமையை பக்கத்துல வச்சிக்கிட்டு நீங்க நாட்டாமை பண்றது தப்பில்லைங்களா?” என்று பணிவாக கேட்க...
“நாட்டாமையே பஞ்சாயத்துல நிற்கும் போது, நாட்டாமைக்கு நாட்டாமை பண்றதுல தப்பேயில்லை.”
“ஏனுங்க எனக்கொரு சந்தேகமுங்க? கேட்கலாமுங்களா?”
“தாராளமாக கேட்கலாம். என்ன சந்தேகம் உனக்கு கேள் மகனே. நான் க்ளியர் செய்கிறேன்.”
பல்லைக் கடித்தபடி, ‘எல்லாம் நேரம்’ என நினைத்தவன், “இல்லீங்க? இந்த ஆலமரம், வெத்தலை பெட்டி, பக்கத்துல தண்ணீர் செம்பு, சுத்திலும் வயசான நாலஞ்சு கரை வேஷ்டிகாரங்க, ஊர் ஜனங்கன்னு எதுவுமில்லீங்களே? இது பஞ்சாயத்து தானுங்களா? ஏன் கேட்கிறேன்னா? ப்ராது யாரும் குடுக்கலீங்க? ப்ராது குடுக்காம யாருக்குங்க தண்டனை குடுக்கப் போறீங்க?”
“ப்ராது குடுக்கலன்னா என்னங்க ப்ரதர்? நானே குடுத்து நானே தீர்ப்பும் சொல்லிக்கிறேன்.”
“எப்படின்னு கொஞ்சம் விளக்கமாவே சொல்லுங்கங்க? ஏன்னா உங்களவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் பத்தாதுங்களே?” என பவ்யமாக சொல்ல...
“அது தெரிஞ்சிதான ப்ரதர் உங்களை நாட்டாமையா உட்கார வைக்காமல் நானே உட்கார்ந்தது. ப்ராது என்னன்னு சொல்லிடுறேன். இந்த வீட்டுப் பொண்ணு சாதனாவை சீக்கிரமா அத்தையாக்கலைன்னு கேஸ் வந்திருக்கு. அதுக்கான விளக்கம், திருவாளர்.ஜீவானந்த் அவர்களும் அவர்களின் தர்மபத்தினி சுபஸ்ரீதேவி அவர்களும் பதில் சொல்ல வேண்டும்” என்று சொல்லி முடித்தாள்.
“அடிக்கழுதை! உன்னை என்ன பண்றேன் பாரு” என ஜீவா அடிக்கத் துரத்த, அனைவரும் சிரித்தபடி அவர்களைப் பார்க்க... “வந்துமா வந்து காப்பாத்துங்க. டாட்! என்னைக் காப்பாற்றாம வெட்டியா என்ன வேடிக்கை வேண்டிக்கிடக்கு” என்று சத்தமிட்டபடி ஓட...
“இதெல்லாம் நீ பேச ஆரம்பிக்கும் போது தெரிஞ்சிருக்கணும்” என்றாலும், அவர்களுக்குமே தங்களால் நேரடியாக கேட்க முடியாத கேள்வியை சாதனா கேட்டதால் இருவரில் யாராவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வாயே திறக்கவில்லை.
அதற்கு பதில் சொல்லாமல் விளையாட்டாக மாற்றிய மகனை வேதனையோடு பார்த்தார் வந்தனா. இவன் மனதை எப்பொழுது மனைவியிடம் திறப்பான் என்று. பின் மனதைத் தேற்ற, இந்த விளையாட்டு இன்று முடியாதென்று பெரியவர்கள் அவரவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றார்கள்.
சுபாவிற்கோ சாதனாவின் கேள்வியில் பலவிதமான கற்பனைகள் தோன்றியது. ஒரு குழந்தை வயிற்றுக்குள்ளிருந்து ‘அம்மா’ என்றழைப்பது போன்ற பிரமை ஏற்பட, டக்கென்று கையை எடுத்து வயிற்றில் வைத்துப் பார்த்தாள். ‘என் வயிற்றில் எனக்கென்று ஒரு குழந்தை பிறக்குமா? எப்படி? கணவனின் கைபடாமல் கருத்தரிக்க நான் ஒன்றும் குந்திதேவி இல்லையே. வெறும் தேவியாயிற்றே!’
ஜீவாவின் விலகல் இப்பொழுது பூதாகரமாய் தெரிய ஆரம்பித்தது. ‘ஏனிந்த விலகல்? என்னைப் பிடித்து செய்த திருமணம் தானே. பின்னே எதற்காக இந்த விலகல்?’ என மனம் மருகியது. ஏதோ இருக்கிறது? என்று காரணம் தேடியலைந்தது மனம்.
மனைவியின் உணர்வுகள் புரியாமல், வந்தனா அன்று சொன்னது உண்மையாகிக் கொண்டிருப்பதை அறியாமல் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ஜீவா.
சுபா யோசனையுடனிருக்க, அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டாள் சாதனா.
“ஏய்! சாது. அவளை விடு.”
“அதெப்படி விடுவோம். உன்னை மடக்குற ஒரே ட்ரம்கார்டு அண்ணி தான. வேற யாரை பிடிச்சாலும் உன்கிட்ட நான் வாங்கிக் கட்டிப்பேன். அண்ணி அடிக்க வேண்டாம் சொல்லுங்க” என்றாள் சலுகையாக...
அவர்களின் விளையாட்டில் சுயநினைவு வந்த சுபா, “அவங்க அடிக்கமாட்டாங்க முன்னாடி வா” என்றழைத்தாள்.
ஜீவா மனைவியின் முன்புறம் வந்து நிற்க, “என்னை அடிக்க உங்க முன்னாடியே ரெடியா நிற்கிறதைப் பாருங்கண்ணி” என்றதும், “விடுங்க பாவம் சின்னப்பொண்ணு தான?”
“தேவி நீ நடுவுல வராத” என்று தங்கையை எட்டிப்பிடிக்கப் போக, அதற்குள் சாதனா வேகமாக தப்பி ஓட, சுபாவைப் பிடித்திருந்த சாதனாவின் கையை வேகமாக எடுத்ததால், அதில் தடுமாறிய சுபா, தங்கையை எட்டிப்பிடிக்க வந்த ஜீவாவின் மேல் விழ இருவரும் பின்னேயிருந்த ஷோஃபாவில் அணைத்தது போல் விழுந்தார்கள்.
விழுந்த நிமிடம் சுபாவின் கண்களிலிருந்த கண்ணாடி கீழே விழ, மனைவியின் கண்களைப் பார்த்ததிலும், அவளின் இந்த நெருக்கத்திலும், உடலியல் மாற்றங்கள் நடக்க, எதுவுமே நடக்காமலிருப்பது போல் வெளியே காட்டினாலும், மனைவியின் இதயத் துடிப்பு தன்னுள் கேட்க, ஒரு கை மெல்ல அவளின் இடையைப் பிடிக்க, இன்னொரு கை அவளின் கூந்தலினுள் நுழைய இருவரும் ஒருவித மயக்கத்திலிருந்த வேளையில், “சுப்பு சூப்பராயிருக்கடி” என்று அவளின் தலையை தன் முகத்துக்கு நேரே அழுத்திப்பிடித்து முகமெங்கும் முத்தமிட, சில நிமிடங்கள் தொடர்ந்த முத்தப் பயணத்தில், நெகிழ்ந்திருந்தவளுக்கு ஹாலில் இருப்பதை மூளை நியாபகப்படுத்த, கணவனை விட்டு விலகி எழுந்து நின்று முகம் முழுக்க நாணத்துடன், “என்ன நீங்க ஹால்ல வச்சி என்னென்னவோ பண்றீங்க?” என்று சிணுங்கல் குரலில் கூறினாள்.
“அப்படி என்னென்ன பண்ணிட்டேன் உன்னை. ஒண்ணுமே பண்ணமுடியாம தானே நிற்கிறேன்” என்று தன் இயலாமையை ஏக்கத்துடன் சொல்ல...
‘உங்களை யார் தள்ளி நிற்கச் சொன்னது’ என்ற வார்த்தைகள் மனதினுள்ளேயே இழுக்கப்பட்டு, “இது ஹால் நியாபகம் இருக்கட்டும்” என்றாள்.
“அப்ப வாடா ரூம்கு போயிடலாம். அங்க போயி பார்த்துக்கலாம்” என கைபிடித்து அழைக்க...
“ச்சோ... உங்களை என்ன தான் பண்றது? பேசாம போயிடுங்க. இல்ல சாதனாவை எதுக்காகத் துரத்துனீங்களோ, அந்த அடி உங்களுக்கு என் மூலமா கிடைக்கும். எப்படி வசதி?”
“போச்சுடா... தேவிமா நீயுமா? உன்னை ரொம்ப அமைதின்னு நினைச்சேன்டா.”
“நீங்களா நினைச்சிக்கிட்டா அதுக்கு நானா பொறுப்பு. எங்க வீட்ல நானும் ரௌடிதான்” என்று புருவம் உயர்த்தினாள் அவனின் மனைவி.
“சுப்பு” என்றபடி கிறக்கத்துடன் அவளருகில் வந்து நெருங்கி நிற்க, அவனின் நெருக்கம் தன்னுள் ஏதோ செய்ய பின்னால் நகர்ந்தவளை தன்னுடன் சேர்த்தணைத்து, இதழ் பிடித்து “ஓவரா பேசாதடி. நீ பேசும்போது இந்த உதடு அசையுது பாரு, அதை...”
“உதை. ஒழுங்கா ஓடிப்போயிருங்க” என அவனைத் தள்ளிவிட அதேநேரம் பார்த்து மாமனார் வர, “ஹ்ம்... நீ குடுத்து வச்சது அவ்வளவு தான்டா ஜீவா” என மனைவிக்கு மட்டும் கேட்குமாறு, தன் ஏக்கத்தை வெளியிட்டு தன் முயற்சிகளைக் கைவிட்டு அறைக்குள் சென்றான்.
கணவனின் சொல்லில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற அப்படியே ஷோபாவில் அமர்ந்தாள்.
மாலையில் அனைவரும் கோவில் செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, சுபா சேலை கட்டவா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்த ஜீவா, மனைவியின் முகம் பார்த்து, “என்ன தேவி கோவிலுக்கு கிளம்பலையா? உடம்புக்கெதுவும் சரியில்லையா... ஏன் டல்லா தெரியுற?” என்று கழுத்தில் கைவைத்துப் பார்க்க...
கணவனின் கையை விலக்கி, “உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லங்க. அது அம்மா சேலை கட்டிவிடுறேன்னு சொன்னாங்க. இன்னும் வரல? அதான் வெய்ட் பண்றேன்.”
“ஓ... நான் வேணும்னா கூப்பிட்டு வரவா தேவி?”
“அவசியமில்ல நானே வந்துட்டேன்” என சுந்தரி வர, “எவ்வளவு நேரம்மா காத்திருக்கிறது? இதுக்கு நான் சுடிதாரே போட்டிருப்பேனே.”
“ஸ்... தேவிமா சைலன்ட்டா இரு. கோவிலுக்குப் போகும்போது ஏடாகூடமா பேசக்கூடாது சரியா.”
முகம் சுழித்தபடி உதடுபிதுக்கி, ‘ம்...’ என்று தலையாட்டும் மனைவி சிறுவயது சுப்புவாகவே தெரிய அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் ஜீவானந்த்.
“சேலை எங்கயிருக்கு?” என மகளிடம் கேட்ட மாமியாரிடம்... “அத்தை ஒரு நிமிஷம்” என்று அட்ராக்டான ரெட்கலர் ஃபேன்சி புடவையைக் கொண்டு வந்து கொடுத்து டவலுடன் பாத்ரூம் சென்றான்.
“சேலை சூப்பராயிருக்கு. எப்படா தேவி எடுத்தீங்க?”
“சேலையா? நாங்களா? இல்லையேமா. வீட்லயிருந்து கொண்டு வந்ததுதான். ஏன் கேட்குறீங்க?”
“இது அம்மா உனக்குக் குடுத்தது இல்லமா” என்று கபோர்டிலுள்ள சேலைகளை ஆராய, அனைத்தும் புத்தம்புது சேலைகள் செட்டாக இருந்தது. ஃபேன்சி சேலைகள் முதல் பட்டுப்புடவை வரை. அதில் எதுவும் பொண்ணுக்காக தான் கொடுத்தது இல்லை. அவர் கொடுத்தது மற்றொரு பக்கத்தில் இருந்தது.
“மருமகன் உனக்காக எடுத்திருக்காங்க தேவிமா. உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு சொல்லாம விட்டிருப்பாங்க. ரெட்கலர் நல்ல செலக்ஷன். ஆளை அடிக்காம, ஆளை அசத்துது இந்த புடவை” என்று சொல்ல சுபா தாயின் கையிலுள்ள சேலை மட்டும்தான் கணவன் எடுத்தது என நினைத்தாள்.
‘சரியான கள்ளன். புடவை எடுத்ததைக்கூட என்கிட்டச் சொல்லாமல் மறைச்சிருக்கீங்க.’ கணவனை வசைபாடிக் கொண்டிருக்கும் போதே தாய் புடவை கட்டிவிட ஆரம்பிக்க...
ராஜனின், ‘சுந்தரி’ என்ற அழைப்பில், “பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க வந்திடுறேன்” என்றார்.
“ஒரு நிமிஷம் வந்துட்டுப் போமா.”
“அம்மா எதாவது முக்கியமான விஷயமாக இருக்கப்போகுது, என்னன்னு தான் கேட்டுட்டு வாங்களேன்.”
“சரி இதைப் பிடி” என்று புடவைக்கு முந்தானை மடிப்பெடுத்ததை பின்குத்தி கையில் கொடுத்து, “இதோ வர்றேன்” என்று வெளியே சென்றார்.
அவர் சென்ற அடுத்த நிமிடம் குளியலறையிலிருந்து ஜீவா வர, மனைவியை அறைகுறை ஆடையில் பார்த்ததும் விக்கித்துப் போனான். முந்தானையை நெஞ்சோரம் பிடித்தபடி நின்றிருந்தவளை தொண்டையில் எச்சில் முழுங்கியபடி பார்த்தது பார்த்தபடி நிற்க...
தற்செயலாக திரும்பிய சுபாவிற்கு கணவனின் நிழல் உருவம் கண்டு தாய் வந்துவிட்டதாக எண்ணி, “அம்மா எவ்வளவு நேரம் இப்படியே பிடிச்சிட்டு நிற்கிறது? யாராவது இப்படிப் பார்த்தா என் மானம் போகும் சீக்கிரம் வாங்கம்மா” என்றதும் அவளருகில் ஜீவா வர, “இந்தாங்கம்மா பிடிங்க.” கணவனென்று தெரியாமல் அவனிடம் நீட்ட...
சுற்றிலும் பார்த்தவன் யாருமில்லையென்றதும், உதட்டோரப் புன்னகையுடன் மெல்ல மனைவியனருகில் சென்று நீட்டிய முந்தானைப் பகுதியை பக்குவமாக வாங்கி, மெல்ல தோள் பகுதிக்கு வந்து ஜாக்கெட்டில் பின் குத்தும் சமயம், விரலின் மூலம் பாய்ந்த மின்சாரத்தில் உடல் விதிர்க்க, சந்தேகத்தில் யாரென்று அவனைத் தொட, வெற்று உடம்பில் நீர்த்திவலைகளும், சோப்பின் வாசனையும், தொடு உணர்ச்சியிலும் யாரென அறிந்தவள், உடலை மறைக்க முயற்சிக்க... அதற்கு அவசியமேயில்லாமல் பின் குத்தி முடித்து, புடவையை முன்புறம் சரிசெய்தான்.
“நீ.. நீங்க எப்ப வந்தீங்க? அ..அம்மா எங்க?” என்று திணற...
மனைவியின் விழிகள் காட்டிய பாவனைகளில் தன்னைத் தொலைத்தவன் மனைவியின் காதோரம் குனிந்து, “சுப்பு சூப்பராயிருக்கடி. அப்படியே உன்னை..” வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த...
“ச்சோ... சுப்பு சொல்லாதீங்க சொல்லியிருக்கேன்ல” என்று சிணுங்கல் மொழியில் கூறினாள்.
“உன் வாய்தான் சொல்லாதீங்க சொல்லுது. மனசு அப்படிச் சொன்ன மாதிரித் தெரியலையே?” என்று இன்னமும் நெருங்க... “ப்ச்... பக்கத்துல வராதீங்க. அம்மா வந்திடப் போறாங்க.”