- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
7
ஒரு மாதங்கள் கடந்திருந்த வேளையில், இந்த ஒரு மாதத்திற்குள் விவேகானந்தன் எப்பொழுதும் போல் வாரம் ஒருமுறை வந்து செல்ல, வரதராஜனும், சண்முகசுந்தரியும் இருமுறை வந்து மகளைப் பார்த்துச் சென்றிருந்தார்கள்.
ப்ரேம் அப்பா வைத்திருக்கும் ஸ்டீல் பேக்டரியையும், தனக்கென்று ஆரம்பித்திருந்த பைக் உதிரிபாகம் தயாரிக்கும் நிறவனத்தையும் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்ததால், அதன் பிறகு வரவாய்ப்பில்லாமல் போனது. தங்கையிடம் தினமும் ஒருமுறை போன் செய்து பேசாவிட்டால் அவனுக்கு தூக்கமே வராது.
சாதனா ஒருமுறை “அண்ணி உங்கண்ணாவுக்கு வரப்போற பொண்ணு உங்க ரெண்டு பேரோட பாசத்தைப் புரிஞ்சி அட்ஜஸ்ட் பண்ணிப் போறவளா இருக்கணும். இல்ல, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு இருந்தாள்னா, உங்க ரெண்டுபேர் பாடும் திண்டாட்டம் தான்” என கேலி செய்தாள். பின், “அண்ணி இதை மேலோட்டமா நான் காமெடி மாதிரி சொல்றேன், நல்லா யோசிச்சிப் பார்த்தா இதான் உண்மையும் கூட” என விளையாட்டாக ஆரம்பித்து சீரியஸாக முடித்தாள்.
சுபாவிற்குமே சாதனா சொல்வதுதான் உண்மை நிலவரம் என்று தெரிந்தது. அதற்காக அண்ணனிடம் பேசாமல் எப்படி இருப்பது. ஐந்து வயது மூத்தவன் என்பதால், தொட்டதற்கெல்லாம் அண்ணனையே சார்ந்திருந்தவள் சுபா. தன் தேவை அனைத்தையும் அவனிடம் கேட்டே பழகியவள். தாயும், தகப்பனும் கண்டிப்பையும், ஓழுக்கத்தையும் சொல்லித் தந்தார்கள் என்றால், அண்ணன் தோழமையை சொல்லித் தந்தவன். வெளிநாடு சென்று படிக்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தும், தங்கைக்காக, சென்னையும், சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலேயே எம்பிஏ முடித்தான்.
அனுபவத்திற்காக அப்பாவின் ஸ்டீல் பேக்டரியை ஒருவருடம் தானே நடத்தி, அதன்பின் அப்பாவின் சம்மதத்துடன் நண்பன் ஒருவன் துணையுடன், கம்பெனிக்கு முதல் ப்ரேம் போட நண்பனை பார்ட்னராக்கி ஆரம்பித்தது தான் “தேவி இன்டஸ்ட்ரீஸ்”. இரண்டு வருட போராட்டங்களுக்குப் பிறகு கம்பெனி மெல்ல மேலே அடியெடுத்து வைக்க, அண்ணனின் நண்பன் வெளிநாடு செல்வதாக சொல்ல, தடுத்த ப்ரேமிடம்...
“உனக்காகவும், ஒரு எக்ஸ்பீரியன்ஸிற்காகவும் தான் முதல் போடலன்னாலும் பார்ட்னரா சேர்ந்தேன். இது உன்னோட கம்பெனி, என்னைக்கும் அது உன்னோட பெயர் மட்டும்தான் சொல்லணும். நான் வெளிநாடு போகணும்ன்றது என்னோட ஆம்பிஸன். நல்ல சான்ஸ் ஒண்ணு கிடைச்சது கப்புன்னு பிடிச்சிட்டு கிளம்பிட்டேன். நோ மோர் கொஸ்டின்ஸ்டா ப்ரேம்” என்று லீகல் பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து கிளம்பினான்.
“அண்ணன் ஆரம்பித்த கம்பெனி கூட என் பெயரில் தான் சாதனா. சமீபத்துல சென்னை அவுட்டோர்ல செகண்ட் யூனிட் ஆரம்பிச்சிருக்கான். என்மேல் இவ்வளவு பாசமாக இருக்கும் அண்ணனை எப்படி வேண்டாமென்று ஒதுங்க முடியும்?” நாத்தனாரிடம் தன் வருத்தத்தைச் சொன்னாள்.
“உங்கண்ணன் நல்ல டேலண்டான ஆள்தான் அண்ணி. இப்ப உள்ள ட்ரெண்ட்ல சொல்லனும்னா பாசக்கார பய. பேசாம உங்கண்ணா கம்பெனியிலேயே நான் ஜாய்ன் பண்ணியிருக்கலாம். ஆயிரத்தெட்டு இன்டர்வியூ தொந்தரவிருக்காது. சாப்பாடு கூட அத்தையையே அனுப்பச் சொல்லலாம். ம்... எல்லாத்துக்கும் ஒரு லக் வேணும் போல” என்றாள்.
டக்கென்று சுபாவிற்கு ‘ஏன் சாதனாவை அண்ணனுக்கு முடிக்கக்கூடாது’ என்ற யோசனை வந்தது. அண்ணனுக்கு தொழிலில் உதவி பண்ணவும் சாதனாவால் முடியும். யோசித்தாள் ஆனால் கேட்கத்தான் மனம் வரவில்லை. ஏதோ ஒரு தயக்கம், கண்டிப்பாக ஒருநாள் கேட்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
இதோ ஒரு மாதத்திற்குப் பிறகு, சுபாவின் கண்கள் தெளிவில்லாமல் மங்கலாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. கணவனின் ‘ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே’ என்ற வார்த்தை கொஞ்சம் வேலை செய்தது. கண்ணாடி போட்டிருந்தாலும் நடப்தற்கு கொஞ்சம் பார்வை உதவி செய்தது. அதாவது பெரிய பொருள்கள் ஓரளவு மங்கலாக இருந்தாலும் கண்ணுக்கு புலப்படும். சின்ன பொருட்கள் தான் கண்ணுக்கு சிக்காது.”
சாதனா வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்திருந்த வேளையில், ஒருநாள் அவளைத் தேடி அவளிருப்பிடம் வந்த ராஜ் அவளிடம் தனியாக பேசவேண்டுமென்றும், மதியம் கேன்டீன் வரச்சொல்லி சென்றான்.
ஒன்றும் புரியாமல் குழம்பியவள், ‘இவன் என்ன எனக்கு ஆர்டர் போட்டுட்டுப் போறானா? நான் கேர்ள்ஸ் கூப்பிட்டே கேன்டீன் போனதில்ல. இந்த லட்சணத்துல பையன் பின்னாடி எப்படிப் போவேன்? கூப்பிட்டா வருவேன்னு அவன் எப்படி நினைக்கலாம்? நான் ஒண்ணும் அந்தளவுக்கு நடந்துக்கலையே’ என பலவாறு குழம்பியவள், ‘நோ இது தப்பு நான் போகக்கூடாது’ என்ற முடிவிற்கு வந்து வேலையிலாழ்ந்தவள் அவனை மறந்தே போனாள்.
மாலையில் வேலை முடித்து வெளியே வந்து ஸ்கூட்டியை நெருங்க, வழிமறித்து நின்றான் ராஜ். “என்ன சார்? வழியை மறிச்சிட்டு நிற்கிறீங்க?” என்றாள்.
“ம்... உன்னோட ஓடிப்பிடிச்சி விளையாடத்தான்” என்று கோபத்துடன் சொன்னான் வார்த்தையின் வீரியம் புரியாமல்.
“சார்... மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று சற்று கோபமாக சொல்ல...
“ஹேய்! என்ன கோபப்படுற? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா? அதான் கோபத்துல வார்த்தை தப்பா வந்திருச்சி.”
“மறுபடியும் தப்பு பண்றீங்க சார்! மரியாதை மனுசனுக்கு அவசியம். கோபத்துல வந்தாலும் இடம், பொருள், ஏவல்னு பார்த்துப் பேசணும். அதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு. அப்புறம் எனக்காக காத்திருந்தது உங்க தப்பு. நான் ஒண்ணும் காத்திருங்கன்னு சொல்லலையே?”
“ஓகே... ஓகே... ஏன் கேன்டீன் வரல?”
“வரணும்னு தோணல அதான் வரல.”
“உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லிட்டுப் போனேனே.”
“நீங்க கூப்பிட்டா நான் உங்க பின்னாடி வருவேன்னு எப்படி நினைச்சீங்க? என் ப்ரண்ட்ஸ் கூப்பிட்டே இதுவரை நான் எங்கேயும் போனதில்லை. அதிலேயும் நீங்க ஒரு ஆண். அதுவுமில்லாம, எதோ கட்டிக்கப்போற பொண்ணு மாதிரி வான்னு ஆர்டர் போட்டுட்டுப் போறீங்க?”
‘கட்டிக்கலாமான்னு கேட்கத்தான் ஆர்டர் போட்டதே’ என மனதினுள் நினைத்து, “சாரி நான் நின்னு பேசிட்டுப் போயிருந்திருக்கணும். ரொம்ப நேரம் ஒரு பொண்ணுகிட்டப் பேசிட்டிருந்தா பார்க்கிறவங்க எதாவது கதை கட்டுவாங்களேன்ற எண்ணத்துல தான் சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு வேகமா போயிட்டேன். நீங்க இப்படி தப்பா எடுத்துப்பீங்கன்னு தெரியாது” என்றான் தணிவாகவே.
“இட்ஸ் ஓகே. இப்ப சொல்லுங்க என்கிட்ட என்ன பேசணும்?”
“அ...அது இங்கே வைத்து எப்படிங்க?’”
“ஏன் சார்? இங்கே வைத்துப் பேசாம, அதுக்காக ரூம் போட்டா பேச முடியும். சும்மா சொல்லுங்க?”
“இல்லங்க இங்க பேச முடியாது. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க” எனும்போது தான் அவனை நன்றாக கவனித்தாள். ஒருவித டென்சன் அவன் முகத்தில், ‘ஏன் இவ்வளவு டென்சன். சாது! ஏதோ இருக்குடி எதுக்கும் உஷாராவே இரு’ என மனம் சொன்னது.
“ம்... சொல்லுங்க. என்ன விஷயம்? ஏன் லேட்டுன்னு அம்மா கேட்கிறாங்களோ இல்லையோ கண்டிப்பா எங்கண்ணி கேட்பாங்க.”
“சரிங்க... சாரிங்க நாளைக்கு மீட் பண்ணலாமா?”
‘ச்சோ... விடமாட்டான் போலவே. பேசாம சரி சொல்லி இந்த ராஜ்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்’ என நினைத்தவளுக்குத் தெரியாது, அது தொடர்கோடு, தொடர்ந்து தன்வீட்டில் அடிக்கப்போகும் புயலென்று.
“ஓகே சார் நாளைக்கு வர்றேன். பட் கொஞ்சநேரம் தான் இருப்பேன். நீங்க சொன்னதுதான் பார்க்கிறவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதில்லையா?”
“தேங்க்ஸ் சாதனா. டென் மினிட்ஸ் போதும். இப்ப கிளம்புங்க” என வழிவிட்டான்.
மறுநாள் சொன்ன நேரத்திற்கு கேன்டீன் வர, “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டவனிடம், “எனக்கு எதுவும் வேண்டாம். உங்களுக்கு வேணும்னா நான் பேசிட்டு கிளம்பியதும் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க” என்றாள்.
“ஓகே நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்” என்று ராஜ் சொன்னதும் என்னதான் வெளியே காட்டாமல் மறைத்தாலும், என்ன வரப்போகிறதோ என்ற டென்சன் சாதனாவிற்குள் இருந்தது.
“சாதனா நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம் ஆசைப்படுறேன். வில் யூ மேரீ மீ” என்றான் பட்டென்று.
சாதனா ஒரு நிமிடம் அயர்ந்துதான் போனாள். அவன் கொடுத்த பில்டப்பிற்கு காதல் கீதலென தத்துபித்தென்று உளறுவான், லெப்ட்ல அன்ட் ரைட்ல அடி கொடுத்து குட்பை சொல்லிவிட்டு வரலாமென்று கணக்கிட்டு வந்தவளின் கணக்கு தப்பாகியது. அசையாது அமர்ந்திருந்தவளிடம்...
“சாதனா என்னாச்சி?”
ராஜின் குரல் கேட்டதும் உணர்வு வந்து “நத்திங்” என்றாள்.
“தப்பா எதுவும் கேட்டுட்டேனா? உங்களுக்கு இஷ்டமிருந்தா சொல்லுங்க. இல்லன்னா நோ ப்ராப்ளம். நாம எப்பவும் ஃப்ரண்ட்ஸாவே இருப்போம். நீங்க யோசிச்சி சொல்லுங்க. இப்ப கிளம்புங்க” என்றான்.
அங்கிருந்து வந்து தன் கேபினில் அமர்ந்ததும்தான் மனம் வேலை செய்யவே ஆரம்பித்தது. ‘ஏன் அவன் கேட்டதுக்கு மறுத்துப் பேசாமல் வந்திட்டேன்? ஏதோ நினைச்சிப் பேசப்போக ஏதோ வந்த பயத்துலயா? இப்ப அவன் எதுவும் சொல்லாமல் வந்ததுக்கு என்ன மீன் பண்ணியிருப்பான், அச்சோ... எனக்கும் சம்மதம்னுதான... மை காட் ஏன் லூசு மாதிரி பேசாம வந்திட்டேன்.’
‘இந்த ஆண்களுக்கு, பொண்ணுங்களை கவர் பண்ண இது ஒரு டெக்னிக்கா இருக்குமோ? நாம எவ்வளவு பார்க்கிறோம். ப்ச்... பழகியது வரை நல்லவனாகத்தான் தெரியுறான். கூடக்கொஞ்ச நேரம் பேசினால், மத்தவங்க நம்மளை தப்பா நினைப்பாங்க சொல்றான். லவ்னு சொல்லி உளறல. நல்லவன் தானோ? அதுக்காக அவனிடம் வாழ்க்கையை ஒப்படைக்க முடியுமா? ஆமா, நான் ஏன் போட்டு குழம்பிட்டு இருக்கேன் என்று தன்னையே திட்டி, இந்தப் பிரச்சனையை வீட்ல உள்ளவங்ககிட்ட விட்டுட்டா அவங்க பார்த்துக்கப் போறாங்க. நமக்குத் தெரியாத குணங்கள் பெரியவங்க பார்வையிலிருந்து தப்பாது’ என்ற வழி கண்டுபிடித்த திருப்தியில் வேலையை பார்க்கலானாள்.
மாலையில் அவளின் பதிலுக்காய் காத்திருந்தான் ராஜ்.
தூரத்தில் வரும்போதே ராஜ் தன் பதிலுக்காக நிற்பதைப் பார்த்தவள், ‘சரின்னு சொல்லிட்டா இப்படி அடிக்கடி பார்க்கணும் பேசணும்னு வந்து நிற்பானோ? நீ என்ன தான்டி நினைக்கிற? பிடிக்கலன்னா உடனே நோ சொல்லிடேன்’ என மனம் சொல்ல அதை தட்டி அவனிடம் சென்றவள், “நீங்க நேரடியா கேட்டதால நானும் நேரடியாகவே சொல்லிடுறேன்” என்று சாதனா சொன்னதும்...
ஒருவித எதிர்பார்ப்புடன் கண்கள் பளபளப்புடன் பார்த்தவன், அவள் சொன்னதைக் கேட்டதும் அமைதி ஆனான்.
“இந்த மாப்பிள்ளை செலக்ட் பண்றது மாதிரியெல்லாம் எனக்கெதுவும் தெரியாது. எதுவாயிருந்தாலும் எங்க வீட்ல நேரடியா பெரியவங்ககிட்ட பேசிக்கோங்க” என்றாள்.
அவள் பதில் புஸ்ஸென்றானாலும், தன்னை மறுக்கவில்லை என்ற எண்ணம் வர, “தேங்க்ஸ் சாதனா. நாம புதுசா பண்ற ப்ராஜெக்ட் இன்னும் ஒன் மன்த்ல முடிஞ்சிடும். அது முடிஞ்ச அடுத்த நாள் உங்க வீட்டுக்கு வந்து பேசறேன்.”
“ஓகே” என்று தோள் குலுக்கியவள், “அப்புறம் இன்னொரு விஷயம். இதை சாக்கா வச்சிட்டு மத்தவங்க முன்னாடி என்கிட்ட பேசமாட்டீங்கன்னு நம்புறேன். நீங்க எதாவது பேச வந்து நான் கண்டுக்கலன்னா உங்களுக்குத் தான் இன்சல்டிங்கா இருக்கும்.”
‘ஹ்ம்... பேசுனா கொன்னுடுவேன்டா மடையான்னு ஜாடையில சொல்றாளோ?’ என நினைத்தவன், “கண்டிப்பா உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குற வரைக்கும் உங்ககிட்ட அனாவசியமா பேசமாட்டேன்” என்றான்.
வீட்டிற்கு வந்தவள் எப்பொழுதும் போல் தாயிடமும், அண்ணியிடமும் ராஜ் கேட்டதைச் சொல்ல, இரு பெண்களுக்கும் கவலையாகிப் போனது. இருவரின் சாய்ஸும் ப்ரேம் தான். கொஞ்ச நாட்கள் போகட்டுமென்று தள்ளிப் போட்டது தப்போ என்று தோன்றியது இருவருக்கும். ராஜை சொன்ன பிறகு ப்ரேமைப் பற்றிய பேச்செடுக்க மனம் வரவில்லை. அவனைப் பிடிக்காமல் போயிருந்தால் கேட்டவுடனேயே மறுத்திருப்பாளே. பிடித்ததால் தானே வீட்டிற்கு வந்து பேசச் சொல்லியிருக்கிறாள் என்ற எண்ணமே காரணம்.