• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
460
6



இன்று:

மாலை வேலைவிட்டு திரும்பிய ராசி மூன்றாவது வீட்டு மாடியைப் பார்த்து ஹாரன் அடிக்க, அங்கிருந்து ப்ரீகுட்டி எட்டிப் பார்க்கவில்லை. ஐந்து நிமிடம் தொடர்ந்து அடித்தும் வராததால், ‘தூங்கிட்டா போலிருக்கு’ என நினைத்தாலும், ‘இது அவள் தூங்குற டைம் கிடையாதே. உடம்பு சரியில்லையோ? சரி எதுவாயிருந்தா என்ன, வீட்டிற்குப் போயிட்டு திரும்ப வந்து பார்த்துக் கொள்ளலாம்’ என்று கிளம்பினாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் லோஜியிடம் சொல்லிவிட்டு ப்ரீகுட்டியைத் தேடி வந்தவளுக்கு அங்கிருந்த மயான அமைதி ஏதோ சரியில்லையென்று சொன்னது. உள்ளே நுழைந்ததும் கண்கள் குழந்தையைத் தேட ஒரு ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“ப்ரீ டார்லிங் ஈஈஈ..” என்ற சத்தம் கேட்டு எழுந்த குழந்தை பதிலுக்கு ‘ஈஈஈ..’ என ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

“என்ன டார்லிங்? உன்னோட அம்மா முகத்துல பல்ப் பீஸ் போயிருக்கு. என்ன காரணம்?”

வேகமாக வீட்டிலுள்ள லைட்டைப் பார்த்த குழந்தை, “இல்லையே எறியுதே” என்றதும், “அப்படியா! அப்ப எனக்குத்தான் கண் சரியில்லையோ?” என்றவள் ஜெபிதாவை ஆராய்ச்சியாய் பார்க்க அவளோ இவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. “ஜெபி எதாவது சண்டையா? ரெண்டு நாள் முன்னாடி தான கல்யாண நாள் வந்தது. அதுக்குள்ள சண்டைக்கு என்ன அவசியம்? வெரி பேட்” என்று முடிக்குமுன் ஜோசப் வெளியே வர, “அட அண்ணா! நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?” ஆச்சர்யமாய் கேட்டு, “சரி ஏன் ரெண்டுபேரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்றாள்.

“ஒண்ணுமில்லம்மா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா? பாப்பாவை இன்னைக்கு நைட் நீ கூட்டிட்டுப் போறியா? காலையில கொண்டு வந்து விடு.”

“சரிண்ணா. அதுக்கு ஏன் ஹெல்ப்னு சொல்லிட்டு. ப்ரீ டார்லிங் அத்தை கூட வர்றீங்களா?”

“வர்றேன் அத்தை” என்றதும் இருவரும் கிளம்ப வீட்டிற்கு நடக்கும் வழியிலேயே என்னென்னவோ எண்ணங்கள். ‘மேரேஜ் டே கொண்டாடினப்ப ஜாலியா தான இருந்தாங்க. அதுக்குள்ள என்னாச்சி? ரெண்டு பேருமே விட்டுக் கொடுத்துப் போகுற ஆளுங்க. ப்ரச்சனை வீட்டிலிருந்தா இல்லை வெளியிலிருந்தா?’

அடுத்தவர் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைப்பது தவறென்று தெரிந்தாலும், அவர்களை யாரோ போல் கண்டுக்காமல் செல்ல மனம் கேட்கவில்லை ராசிக்கு. திருமணம் முடிந்ததிலிருந்து தங்கள் வீட்டினருகிலேயே இருக்கிறார்கள். உறவு முறை சொல்லி அழைக்கும் அளவு பழக்கம். ஆண் துணையில்லாத தங்களுக்கு ஒரு சகோதரனாக பழகுவது சேவியரின் இயல்பு.

யோசனையாய் குழந்தையுடன் உள்ளே நுழைந்தவளை, “என்ன ராசி உன்னோட டார்லிங் உன்னோடதான் தூங்குவேன்னு அடம் பண்ணினாளா?” என்ற லோஜியின் வார்த்தைகளுக்கு பதிலில்லாமல் போனதும், வேகமாக ராசியின் எதிரே வந்து தடுக்க, பதறி விலகியவளை “என்னாச்சிமா? எதாவது பிரச்சனையா? யாராவது உன்கிட்ட வம்பிழுத்தாங்களா?” எனவும்,

“ஹையோடா! என்கிட்ட வம்பிழுக்க இந்த ஏரியாவுல எவனுக்குத் தைரியமிருக்கு. வந்திருவாங்களா என்கிட்ட” என எகிற...

“அதான பார்த்தேன்” என ஆதரித்து, “அப்புறம் ஏன்மா டல்லா இருக்க? அதுவும் குழந்தையோட வந்திருக்க? ஜெபி வீட்டுல எதாவது பிரச்சனையா?” என ஆதரவாய் கேட்டார்.

கண்களால் குழந்தையைக் காட்டி அமைதியாக இருக்கச் சொல்லும்போதே பிரச்சனை அவர்கள் வீட்டில்தான் என தெரிந்தது. சிறிது நேரம் அரட்டைக்குப் பின் இரவு உணவை முடித்ததும், “அம்மாஆச்சி ஏன்னு தெரியல அண்ணாவும், ஜெபியும் நார்மலா இல்ல. என்ன பிரச்சனைன்னும் தெரியல. ரொம்ப நேரமா அழுதிட்டிருந்திருப்பா போல, குரலே சரியில்ல. நான் பார்த்துட்டு வரட்டா?”

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டையா இருக்கும்மா. நாம தலையிடுறது தப்பு” என்றார் பெரியவராக.

“சரி அம்மாஆச்சி. எதுவும் கேட்கல. ஆனா, சமையல் பண்ணின மாதிரி தெரியல. நான் போய் கொடுத்துட்டு வரட்டுமா?”

“சரிமா கொடுத்துட்டு வா. அவங்களா சொன்னா எதைனாலும் கேட்டுக்க. மத்தபடி அவங்க விஷயத்துல ரொம்பல்லாம் தலையிட வேண்டாம்” என்றதும் சம்மதமாக தலையசைத்து, டிபனோடு அவர்கள் வீட்டு வாசலுக்கு சென்றவள் கதவைத் தட்டுமுன் அப்படியே நின்றாள்.

“ஜெபி ப்ளீஸ் இதை மறந்திருமா. நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.”

“என்னால எப்படிங்க முடியும் நினைச்சாலே உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. நான் யாருக்கு என்ன கொடுமை பண்ணினேன்னு தெரியலையே. எனக்கு ஏன் இந்த நிலைமை? எனக்கு இப்படியெல்லாம்.. எப்படிங்க” என கதறியவளை அணைத்து ஆறுதல் சொல்ல வந்தவனை தடுத்து,

“இல்ல என்கிட்ட வராதீங்க. வந்தீங்கன்னா நான் எதாவது தப்பான முடிவெடுத்துருவேன்” என கதறி அரற்றியவளை நோக்கி...

“நான் உன் புருஷன்மா” என்றான் வேதனையோடு.

“வேண்டாம். எனக்கு யாரும் வேண்டாம். ஐயோ! எனக்கு அசிங்கமாயிருக்குதுங்க. வெளியில போயி யார் முகத்திலயும் விழிக்கக்கூட பயமாயிருக்கு. யாராவது ஒரு வார்த்தை கேட்டுட்டா நான் செத்துருவேன்.”

“ஜெபி ஸ்டாப் இட். அசிங்கம் உனக்கு மட்டுமில்ல எனக்கும் தான்னு புரிஞ்சிக்கோ. அந்த மட்டும் நாம ரெண்டு பேரும்தான் இருக்கோம்னு நிம்மதியாயிரு. இப்படி அழுதுட்டேயிருந்தா ப்ராப்ளம் சால்வ் ஆகிருமா என்ன? வா வந்து ஜுஸாவது குடி” என்று மனைவியை நெருங்கினான்.

“ஐயோ! பக்கத்துல வராதீங்க சொல்றேன்ல. யார் எப்ப என்ன பண்ணுவாங்களோன்னு பயமாயிருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்” எனும்போதே இதற்குமேல் வெளியே நிற்பது சரியில்லையென்று கதவு தட்டி உள்ளே நுழைந்தவளைப் பார்த்ததுமே இருவரும் பதறியபடி கண்ணீர் துடைத்தார்கள்.

எதுவுமே கேட்கக்கூடாது என வந்தவள் தான். இருந்தாலும், அவர்களிருவரின் கேள்வி பதிலில் பிரச்சனை பெரிதென்று எண்ணியவள் கொண்டு வந்ததை மேஜையில் வைத்துவிட்டு அவர்களெதிரில் வந்து நின்று, “என்ன பிரச்சனை?” என்றாள் நேரிடையாக.

“ஒண்ணுமில்லம்மா. சும்மா பேசிட்டிருந்தோம்.”

“பொய் சொல்றீங்கண்ணா. முழுசா கேட்கலன்னாலும், பாதியாவது கேட்க வேண்டியதா போச்சி. உங்களுக்குள்ள பிரச்சனைன்னா உள்ளே வராமலேயே திரும்பியிருப்பேன். பட் பிரச்சனை வேறன்னு தோணுது. ஜெபி இந்தளவுக்கு ஃபீல் பண்றபடி என்ன நடந்தது?”

“இல்லமா. நீ வீட்டுக்குப் போ. சின்ன பிரச்சனைதான் நான் பார்த்துக்கறேன்” என்றான் கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி.

“இல்ல.. இவ செத்துப் போயிடுவேன்ற மீனிங்ல பேசுறா. என்னைக் கண்டுக்காம போகச் சொல்றீங்களா? எங்களுக்கு எதாவதுனா நீங்க முன்னாடி வந்து நின்னு எல்லா ப்ராப்ளமும் சால்வ் பண்ணுவீங்க. உங்களுக்கு எதாவதுன்னா நாங்க எதையும் கண்டுக்க கூடாது அப்படித்தான?” என்றாள் கோபமாக.

“அச்சோ.. அந்த அசிங்கத்தை எப்படி சொல்ல முடியும் “என்றவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், உள்ளே சென்று தன் செல்போனை எடுத்து வந்து குரு குறிப்பிட்ட வீடியோவில் ப்ளே பட்டனை அழுத்தி அவளிடம் கொடுத்துவிட்டு அறைக்குச் சென்று கதவடைத்தான்.

சேவியர் வீட்டு மாடிப்பால்கனி வழியாக ஆரம்பமான வீடியோ, மாடியறையிலுள்ள அவர்களின் படுக்கையறைக்குள் சென்றது. “ஜெபி பாப்பா என்ன பண்றா?” என்றபடி சேவியர் அறைக்குள் நுழைய...

“மேடம் தூங்கியாச்சி?”

“ஓ...” என்றவன் கண்ணடித்தபடி, “அப்ப நீ ஃப்ரீன்னு சொல்லு.”

“நோ.. நோ நான் பிஸி” என திரும்பியவளை பின்னிருந்து அணைத்து, ஒரு கையை அவள் சேலை விலக்கி இடையினில் விட்டு மறு கையால் அவள் தோளணைத்து நகரவிடாமல் செய்து, “ரொம்ப பிஸிங்களா மேடம் எனக்கு கொஞ்சம் டைம் கிடைக்குமா?” என காதோரம் கிசுகிசுக்க..

“எதுக்கு?” என்ற வார்த்தை ஹஸ்கி வாய்சில் அவளிடமிருந்து வந்தது.

“கொஞ்சம் டைம்.. கொஞ்சிறதுக்கு டைம் கேட்டேன். தப்பா” என கழுத்தில் முத்தமிட, அதில் கிறங்கியவள், “கொஞ்சிறதுக்கு இப்ப டைம் இல்ல. பாப்பா முழிச்சிக்கிற நேரம். அதுவுமில்லாம பால்கனி கதவு, பெட்ரூம் கதவு ரெண்டும் லாக் பண்ணாம இருக்கு” எனும்போது வீடியோ சட்டென்று நகர்ந்திருந்தது.

“நம்ம வீட்டுக்கு யாரு வரப்போறாங்க சொல்லு? அதுவுமில்லாம நமக்கு இன்னைக்கு கல்யாண நாள்” என்றவன் அவளைத் தன்புறம் திருப்பி, “அதாவது என்ன சொல்ல வர்றேன்னா நமக்கு பர்ஸ்ட் நைட் தெரியுமா?” என்றான் கண்ணடித்து.

அதில் வெட்கப்பட்டவள் அவனை விட்டு சட்டென்று விலகி, “எனக்குத் தெரியுறத விடுங்க.. முதல்ல அங்க பாருங்க” என்று பெட்டைக் காண்பித்து “இவங்க இருக்காங்க நியாபகம் இருக்கட்டும்” என எச்சரிக்கை போல் சொன்னாலும், கண்களால் விழுங்கியபடி கணவனை காதலுடன் பார்த்திருந்தாள்.

மனைவியின் பார்வை அழைப்பினில் தைரியம் பெற்றவன் அவள் புடவையைப் பிடித்திழுத்ததும் தன்மேலேயே விழுந்தவளை இறுக்கியணைத்து முத்தங்களிட்டபடி மேலே முன்னேறும் முன் குழந்தையின் அழுகுரல் கேட்க, “ச்சோ... விடுங்க சொன்னேன்ல” என்றபடி சட்டென்று விலகி ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தபடி குழந்தையிடம் செல்ல...

“சே.. குழந்தை சொதப்பிடுச்சே” என மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது.

பார்த்து முடித்தவளுக்கு அவர்களின் நிலைமை புரிந்தது. “வீட்டுக்குள்ள வந்து கவர் பண்ணியிருக்கான்னா, இங்க பக்கத்துல இருக்கிறவனாகத்தான் இருக்கணும்.” வீடியோவை பார்த்தவளுக்கு அது வாட்சப் மெச்சேஜ் என்று தெரிய, “மை காட் பப்ளிக்ல போட்டுட்டானா?” என்ற அதிர்விலிருந்து வெளியே வரவே நிமிடங்களானது. “பொறுக்கி இவனை என்ன செய்யலாம்?” என யோசித்தவள், படுக்கையறை கதவை நெருங்கி “அண்ணா வெளியில வாங்க. இப்படி அடைஞ்சி கிடந்தா எதுவும் சரியாகப் போறதில்லை. அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்றாள்.

“என்னத்த பார்க்கச் சொல்ற ராசி?” என ஆவேசமாக எழுந்தவள், “அன்னைக்கு மட்டும் பாப்பா அழலைன்னா, ஒரு நிமிஷம் யோசிச்சிப் பாரு. ஒருத்தன் கேமராவோட நின்னுட்டிருந்தது தெரியாம நாங்...” முடிக்க முடியாமல் விம்மி அழுதவளை ஓடி வந்து தன்னுடன் சேர்த்தணைத்து, “ஜெபி அழாத. இது கொஞ்சம்... கொஞ்சம் என்ன நிறையவே சகிக்க முடியாதது தான். அநேகமா இதை எடுத்தவன் பக்கத்துல தான் இருக்கணும்னு தோணுது. சீக்கிரமே கண்டுபிடிச்சிரலாம். போலீஸ்கு...” என ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல்...

“அச்சோ! வேண்டாம் ராசி. இப்ப கொஞ்சமாவது உள்ளது எல்லாருக்கும் தெரிஞ்சி, அதுவும் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கு தெரிஞ்சிதுன்னா.. வேண்டாமே!” என கண்களால் கெஞ்சியவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது ராசிக்கு.

“ஸ்ஸ்.. ஜெபி சொல்ல வந்ததை முழசா கேளு. போலீஸ்கு போனா பிரச்சனையாகும். நான் பேங்குக்கு போற வழியில ஒரு டிடெக்டிவ் ஆஃபீஸ் பார்த்திருக்கேன். ஸோ.. அப்படி ட்ரை பண்ணலாம். அவங்ககிட்ட போனா நியூஸ் வெளில வராம பார்த்துக்கலாம்.”

“பார்த்து.. பார்த்து என்ன செய்யுறது அவனை. எப்படினாலும் போலீஸ் கிட்டதான ஒப்படைக்கணும்.”

“என்னமா! இதையெல்லாம் நான் யோசிக்காமல் இருப்பேனா. அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும். அப்புறமா பாரு” என்றாள் பல்லைக்கடித்தபடி.

திருமண நாளென்று இரண்டு நாள் முன்னிருந்த மகிழ்ச்சியென்ன, இப்பொழுது இவர்களிருக்கும் நிலையென்ன? மனம் கொதித்தது ராசிக்கு. இன்னும் சில கேள்விகள் கேட்டு, “அண்ணா இந்த செல்போன் எடுத்துக்கட்டா. இன்வெஸ்டிகேஷனுக்கு யூஸாகும்.”

சரியென்று சம்மதித்தவன், “போன் வந்தா அட்டெண்ட் பண்ணாதமா. லேண்ட் லைன் கூட கட் பண்ணிட்டேன். முன்னாடி நம்ம பக்கத்து வீட்டிலிருந்த லாயர் விசாரணைன்ற பெயர்ல துக்கம் விசாரிக்கிறார். இன்னும் ஒருசிலரும் அப்படித்தான்” என குரல் உடைந்தவனை தேற்றி, “நான் பார்த்துக்கறேன். நீங்க இந்த பிரச்சனையிலிருந்து வெளியில வாங்க. சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். முதல்ல ரெண்டுபேரும் சாப்பிடுங்க மணி எட்டரை தான் ஆகுது. முடிஞ்சா இன்னைக்கு நைட்டோ, இல்லைன்னா காலையிலேயோ கூட இதை சால்வ் பண்ணிரலாம்” என்றபடி வீடியோ வந்த நேரம் பார்த்தாள். ஒன்றரை மணிநேரம் ஆகியிருந்தது. ‘இரண்டு நாட்கள் முன் எடுத்தவன் அன்றே போடாமல், ஏன் இன்று போட்டிருக்கிறான்?’ என்ற குழப்பமும் அவளிடம் வந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
460
நேரே வீட்டிற்குச் சென்றவள் தன் பாட்டியிடம் சொல்ல.. “நேரமாகிருச்சிமா. நானும் வரவா?” என்றவரிடம் “இல்ல அம்மாஆச்சி நான் பார்த்துக்கறேன்” என்றதும் “ஜாக்கிரதைமா” என அனுப்பி வைத்தார்.

“யுவர்ஸ் ஃப்ரண்ட்” முன்னர் ஸ்கூட்டியை நிறுத்தியவள் ‘ரொம்ப சின்ன ஆஃபீஸா இருக்கே. இல்ல பெரிய ஆஃபிஸ் வச்சிருக்கிறவங்களை விட இந்த மாதிரி சின்னதா வச்சிருக்கிறவங்க கிடைக்கிற கேஸை தன் முன்னேற்றத்தை மனசுல வச்சிக்கிட்டு சரியாவும், நேர்மையாகவும் முடிப்பாங்க’ என்றே தோன்ற தைரியமாக உள்ளே நுழைந்தவளுக்கு வெளியிலிருந்து பார்த்த அந்த பத்துக்குப் பத்தடி ரூம் இதுவா என்றிருந்தது.

உலக அதிசயத்தையே உள்ளடக்கியது போல் லைட் செட்டிங்கும், தரைகளும் அங்கிருந்த இன்டீரியர் ரெகரேட்ஸும், ப்ளவர் வாஷும் அசத்தியது அவளை.

உள்ளே நுழைந்து அங்கிருந்தவரிடம் கேஸ் விஷயமாக பேச வேண்டுமென்றதும், பக்கத்திலிருந்த அறையை காண்பித்து அனுப்ப... அறைக்குள் சென்றவளைப் பார்த்ததும் சிரித்தாற்போல் ‘வெல்கம்’ சொன்னவனை பார்த்து, “இவனா?” என்றாள் ஒலியில்லாத உதடசைப்பில்.

“நானே தான் மிஸ். உட்காருங்க. என்ன விஷயம்?” என்றான் அதே புன்னகையுடன். அவள் உள்ளே நுழையும் போதே சிசிடிவி கேமராவில் பார்த்து விட்டான். ‘இவள் எங்கடா இங்க நாம இங்கிருக்கிறோம்னு தெரிஞ்சே வம்பிழுக்க வந்தாளா?’ என்று நினைத்ததும் அவளை கூர்ந்து கவனிக்க முகத்தில் ஒருவித பதற்றம் இருந்தது. ஏனோ அந்த நிமிடமே அதைக் கலையத் துடித்தது அவன் மனம்.’

அவள் அமர்ந்ததும், “சொல்லுங்க என்ன விஷயம்? இவ்வளவு நேரம் கழிச்சி வந்திருக்கீங்கன்னா கண்டிப்பா எதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கணும். பழசையெல்லாம் நினைச்சி குழம்பாம விசயத்தைச் சொல்லுங்க” என்றான் சிரிப்பை விலக்கி அமைதியாக.

“சார் நான் ராசி.”

‘ம்.. நைஸ் நேம். ராசி நமக்கும் நல்ல ராசிதான்’ என மனதினில் தோன்றினாலும், தன் தொழிலை எண்ணி அவளின் பேச்சைக் கவனித்தான்.

“சார் எப்படி ஆரம்பிக்கிறது தெரியல. இது வெளில சொல்ற விஷயமில்ல,. என் ப்ரண்டும் அவ ஹஸ்பண்டும் வீட்டுக்குள்ள தனியா இருக்கும்போது எவனோ வீடியோ எடுத்திருக்கான். இதை எடுத்து இரண்டு நாளாச்சி. ஆனா, இன்னைக்கு அதுவும் ஒன் அன்ட் ஆஃப் ஹவர் முன்னாடிதான் வாட்சப்ல போட்டிருக்கான். இந்த வீடியோ ரொம்ப பரவுரதுக்குள்ள அதை டெலீட் பண்ணனும். சீக்கிரத்திலேயே இதுக்கு காரணம் யார்னு கண்டுபிடிச்சி ஹெவியா பனிஷ் பண்ணனும்” என்றவள் முகம் கோபத்தில் ஜ்வலித்தது.

“கண்டிப்பா பண்ணிரலாங்க” என்றவன் வீடியோவை ஓடவிட்டு அதையே நிதானமாக பார்க்க... அவனையே பார்த்திருந்தவள், ‘அதை அவன் ஆசையாக பார்க்கிறானோ?’ என்ற எண்ணம் வர.. ‘எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தானோ’ என தோன்றியதும் தன்னையே அதட்டிக் கொண்டாள். ‘சே.. இந்த மாதிரி ஏஜென்சி வச்சிருக்கிறவங்க இந்த சின்ன சம்பவத்துக்கே சலனப்படுவாங்களா என்ன?” நினைக்கையிலேயே...

“பொறுக்கி ராஸ்கல்” என்று கோபத்தில் சத்தமாக வார்த்தையை சரத்தின் உதடுகள் உதிர்த்தது.

அவனை ஆச்சர்யமாக, ஆராய்ச்சியாக பார்த்தாள் ராசி. இவன் கெட்டவனில்லை நல்லவன்தான் இவனை முழுவதும் நம்பலாம் என்ற எண்ணம் ஸ்திரமானது.

முழுவதும் பார்த்தவன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும், “நல்லவேளை குழந்தை காப்பாத்திருச்சி” எனும்போதே இன்னொரு ஆண்குரலும் கேட்க வேகமாக வீடியோவை திரும்ப ஓடவிட்டு கடைசியில் அந்த குரலைக் கேட்டான். “சே.. குழந்தை சொதப்பிருச்சே!” அப்பொழுது தான் அவளும் கேட்டாள்.

சேவியர், ஜெபிதா தம்பதியர்தான் அவசரத்தில் எதையும் சரியாக உணரவில்லை என்றால், ராசியும் அதிர்ச்சியில் கடைசியாக வந்த குரலை கவனிக்காமல் விட்டிருந்தாள். அதை திரும்ப போட்டு பார்க்க கூச்சப்பட அப்படியே விட்டாள். அதைத்தான் சரத் கண்டுகொண்டு திரும்பத் திரும்ப போட்டு கன்பார்ம் செய்தான்.

“இந்த குரல் உங்களுக்கு பழக்கமா?”

“கெஸ் பண்ண முடியல சார். நேர்லன்னா ஒருவேளை இந்த வாய்ஸ் கண்டுபிடிக்க சான்ஸ் இருக்கு.”

“ம்... வயசு எப்படியும் இருபத்து இரண்டுக்குள்ள இருக்கலாம். அநேகமா பக்கத்துல உள்ளவனாகத்தான் இருக்கணும்ன்றது என்னோட கெஸ்.”

“நானும் அதையே தான் சார் நினைச்சேன்.”

“இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு இப்ப போகலாமா? இல்ல நாளைக்கு காலையில வரவா. நான் வர்றதால உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

“கிடையாது சார். அதுக்குள்ள இந்த வீடியோவை அழிக்க முடிஞ்சா நல்லாயிருக்கும்.”

“கண்டிப்பாங்க. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க” என்று போன் மூலம் அந்த வீடியோ வந்த நேரம் எல்லாம் கொடுத்து வீடியோ எங்கும் ஓபன் ஆகாமல் செயலிழக்கச் செய்யச் சொல்லி, அதே நேரம் அது யாரிடமிருந்து சென்றிருக்கிறது என்று தெரிவிக்கச் சொல்லி போனை வைத்து அவளிடம் வந்து, “கிளம்பலாமா” என்றான்.

“சா..ர் இது வெளியில யாருக்கும்” என தடுமாறியவளை மறித்து “போலீஸ்கிட்ட போகக்கூடாதுன்னு தான நேரம் காலம் பார்க்காம என்கிட்ட வந்திருக்கீங்க. இந்த காரணம் தெரியாதளவுக்கு நானொண்ணும் முட்டாள் இல்லங்க. என்னை நீங்க தாராளமா நம்பலாம். அப்புறம் போற இடத்துல உங்க ப்ரண்டா என்னை ட்ரீட் பண்ணுங்க. அப்பத்தான் பார்க்கிறவங்களுக்கு சந்தேகம் வராது.”

“சாரி சார்” என்றவள் தவறாக பேசிவிட்டோமோ என தலைகவிழ..

“எதுக்குங்க தலை குனியுறீங்க? உங்க ப்ரண்ட்கு நல்லது செய்யணும்னு நினைக்கறது தப்பேயில்ல. எதுல வந்திருக்கீங்க?”

“ஸ்கூட்டியில” என்றாள்.

“ஓ.. இனிமேல் நைட்ல ஸ்கூட்டி ஓட்டிட்டு வராதீங்க. கார் இல்லன்னா தெரிஞ்ச ஆட்டோ இருந்தா வாங்க” என்றவன் அவளின் புரியாத பார்வையை சந்திக்காமல் முன்னே சென்று தன் பைக்கை எடுக்க, தோளைக் குலுக்கியபடி ராசி வண்டியை ஸ்டார்ட் பண்ணியதும் அவள் பின்னே சென்றான்.

சரத்தும், ராசியும் சேவியர் வீடு வர இரவு ஒன்பது ஆனது. ஹாலிங்பெல் அழுத்தி யாரென்று விசாரித்து உள்ளே அனுமதித்த சேவியர் வந்திருந்தவனைக் கேள்வியாய் பார்த்தான்.

“சார் தான் அண்ணா நான் சொல்லியிருந்தேன்ல அந்த டிடெக்டிவ் ஏஜன்ஸி ஓனர் பெயர்.. பெயர்” என இழுத்தபடி, ‘அச்சோ! இதுவரை இன்னும் பேரைக்கூட கேட்காம இருந்திருக்கோமே’ என நினைக்க...

“ஹலோ சார். என் பெயர் சரத்” என தன்னை அறிமுகப்படுத்தி ராசியைப் பார்க்க... அவள் சற்று அசடு வழிய “சாரி. கேட்க மறந்திட்டேன்” என்றாலும், “சரத்” என்ற பெயரை உச்சரிக்க மறக்கவில்லை.

“அதனாலென்னங்க. நீங்க இருந்த டென்சன்ல உங்க வீட்டைக் கண்டுபிடிச்சி வந்ததே பெரிய விஷயம். இதுல மத்ததெல்லாம் எப்படி நியாபகமிருக்கும்” என அவளை வார...

அவளோ அவனை முறைத்து, “வேண்டாம். என்னைப்பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்.”

“ஆத்தாடி! நான் இந்த ஆட்டத்துக்கு வரல” என்று சரத் பயப்படுவதுபோல் நடிக்க..

“அது அந்த பயம் இருக்கணும்” என்றாள் சிரிப்புடன்.

சேவியரோ தன்னுடைய கவலையையும் மீறி அவர்களை வித்தியாசமாக பார்த்திருந்தான். “ராசி இவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா? இப்பத்தான் பெயர் தெரியலன்னு சொன்ன?” என்றான் சந்தேகத்தோடு.

“தெரியும்ணா. இரண்டு டைம் மீட் பண்ணியிருக்கேன். ஏடாகூடமான நேரத்துல. பெயர்தான் தெரியாது” என்றாள் உண்மையாக.

‘ஓ..’ என்றபடி தன்னை சரத்திற்கு அறிமுகப்படுத்த.. “சாரி சார் வந்ததும் வராததுமா நான் வம்பு பேசிட்டிருக்கேன். உங்க ஒய்ஃப் எங்க?”

“அவளுக்கு வெளி ஆளுங்க யாரையும் பார்க்க பிடிக்கலன்றா சார். இதைப் பார்த்ததிலிருந்து அழுதிட்டிருக்கா. என்னால சமாதானம் செய்ய முடியல.”

அவளின் நிலையை யூகித்தவனோ, “ஓ.. அவங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் சார். ரெண்டு மூணு நாளைக்கு இப்படித்தான் இருப்பாங்க. மெல்ல சரிபண்ணிரலாம். இப்ப நான் ஸ்பாட்டை பார்க்கலாமா?” என்றதும் மாடியிலுள்ள அறைவழியாக பால்கனி அழைத்துச் செல்ல, அங்கிருந்து சுற்றிலும் உள்ள வீடுகளை நோட்டம் விட்டான்.

ஒரே தெருவில் எதிரெதிரான பெரியவீடுகள். கொஞ்சம் வசதியானவர்கள் இருக்கும் ஏரியாதான். அதாவது மேக்சிமம் சொந்த வீட்டினர். சுற்றிலும் பார்வையிட்டு வந்தவனின் புத்தியில் ஒரு வீடு சிக்க.. உடனே பால்கனி லைட்டை அணைத்து விட்டு “நீங்க உள்ளே போங்க” என்றவன் அங்கேயே குனிந்தமர்ந்தான். சில வினாடிகளில் மெல்ல தலையுயர்த்திப் பார்க்க.. எதிர் வீட்டிற்கு அடுத்த இரண்டாவது வீட்டிலிருந்து ஒருவன் எட்டிப் பார்ப்பதும் பின்னர் குனிவதுமாக இருப்பதைக் கவனித்தான். இருந்தாலும் அவனது பார்வை வேறெங்கிலும் செல்கிறதா என்று காண இல்லை இங்குதான் அவனின் பார்வை விழுந்தது. ஒரு முடிவுடன் ராசியை அழைத்து அந்த வீட்டைக் காண்பித்து யார் வீடு என்ற விவரம் கேட்டான்.

“அந்த வீடா?” என்று ஆச்சர்யத்தோடு கதவருகில் நின்றிருந்தவள் சரத்தை நோக்கி வர..

“ஆமா. ஏன் இவ்வளவு ஆச்சர்யபடுறீங்க ராசி?”

“சார் கோவில்ல ஒருத்தனை அடிச்சேனே. அவன் வீடுதான் அது.”

“என்னது அவன் வீடா?” என்பது இப்பொழுது சரத்தின் முறையானது. “சரிங்க அவனை இப்ப வெளியில கூப்பிடணும். என்ன பண்ணலாம்? எதாவது ஐடியா இருக்கா?”

“இதுக்கு ஐடியாவெல்லாம் தேவையில்லை சார். அந்த பொறுக்கி ப்ரண்ட்ஸ் நாலைந்து பேரோட மாடியில ஒய் பை கனெக்ஷன் குடுத்து பொழுதை ஓட்டிருக்கும். பத்து மணிக்கெல்லாம் மொத்த பொறுக்கிக் கூட்டமும் கீழிறங்கி வந்து இந்த தெரு என்டிங்ல இருக்கிற மரத்தடியில ஒரு மணிநேரம் அரட்டையடிச்சிட்டு கிளம்புவாங்க” என்றவள், ஏதோ தோன்ற.. “அவனை சந்தேகப்படுறீங்களா சார்?” என்றாள்.

“எஸ். சந்தேக லிஸ்ட்ல இருக்கான். அவனோட க்ரூப்பை இப்பவே தூக்கினா யார் பண்ணிய வேலைன்னு தெரிஞ்சிரு”ம். உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே என்றதும் ராசியின் முறைப்பைக் கண்டு, “சாரி நான் பார்த்துக்கறேன்” என்று மணியிடம் போன் செய்து விஷயத்தை மேலோட்டமாக சொல்லி அவர்களைத் தூக்க ஏற்பாடு செய்து ராசியிடம் திரும்பியவன்... “நீங்க காலையில ஆஃபீஸ் வர்றீங்களா? உங்க ப்ரண்டையும் கூப்பிட்டுட்டு? இனிமேல்னா லேட் நைட் ஆகிரும்” என்றான்.

“அப்ப வீடியோ சார்?” என்றாள் குரல் இறங்க.

“அதெல்லாம் கவலைப்படாதீங்க. நான் கிளம்பறதுக்குள்ள அந்த ப்ராப்ளம் சால்வ் பண்ணிடுறேன்” என்றான் நம்பிக்கையாக.

“ஓ.. தேங்க்யூ சார்” என்ற நொடி சட்டென்று அவளின் வாய்பொத்தி தன்புறம் இழுத்தணைத்தான் சரத்.

அதிர்ந்து நின்றாள் ராசி.
 
Top