• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
6



‘அண்ணி! எங்க ஸ்கூல்லயா படிச்சீங்க?’ என்று ஆச்சர்யத்துடன் கேட்கப்போன சாதனாவின் கையை அழுத்தி பேசாமல் தடுத்து சுபா பேசுவதை கேட்கச்சொன்னான்.

“தேவின்ற பெயரும், ரொம்ப ஸ்ட்ரிக்ட் ருல்ஸூம், ஒழுக்கத்துக்கு பெயர் போன ஸ்கூல்னும் கேள்விப்பட்டதால அப்பா எங்களை அங்க சேர்த்தாங்க. அண்ணாவுக்கும் எனக்கும் ஐந்து வயசு வித்தியாசம். அண்ணா டென்த் படிக்கும் போது நான் ஃபிஃப்த் படிச்சேன். சிவா அவன் தான் என்னோட பரம எதிரி” என்றாள் கோபத்தில். “அப்ப அவன் நைன்த் படிச்சிட்டிருந்தான்.”

அதைக் கேட்கும்போது ஜீவாவின் முகத்தில் வியப்புடன் கூடிய ஒருவித பரவச உணர்வு தோன்றியது.

“அத்லடிக்ல அவங்க ரெண்டுபேரும் எடுத்தது ரன்னிங்கும், லாங் ஜம்ப்பும். எங்கண்ணாவுக்கும், அவனுக்கும் ஸ்போர்ட்ஸ்ல அப்பப்ப மோதல் வரும். ரெண்டு பேருமே டேலண்டட் பெர்சன்ஸ்னு மிஸ்ஸூங்களே சொல்வாங்களாம் என் ப்ரண்ட்ஸ் சொன்னாங்க. அந்த சிவா என் அண்ணாவோட ஜுனியர்ன்றதால அடிக்கடி யார் முதல்லன்ற போட்டி அவங்களுக்கு.”

“அண்ணா ஜெயிச்சிட்டா என்கிட்ட அடி வாங்கிக்கோன்னு, லைட்டாதான் இருந்தாலும், அவனும் சின்னப்பையன் இல்லையா, அதை பெரிய அடியா நினைச்சி, டென்த் பசங்களைத் தூண்டிவிட்டு அடிக்க விடுவானாம். அதுக்கு ஸ்நாக்ஸ், சாக்லேட்ஸ் லஞ்சம் வேற. ஒரே க்ளாஸ்ன்றதால அண்ணன் அவங்களை கவர் பண்ண, சிவாவால ஒண்ணும் பண்ண முடியல. ஸோ, அவன் குறி என்மேல விழுந்திருச்சி” என்றதும் தாயும், மகனும் ஒருவரையொருவர் அர்த்தமுடன் பார்த்தார்கள்.

“உன்மேலன்னா?” என வந்தனா கேட்க...

“அண்ணா மேல உள்ள கோபத்தை அவனோட தங்கை நான்றதால என்மேல காட்ட ஆரம்பிச்சான். என் பெயர் கேட்டதுக்கு நான் சொல்லல. மிரட்டினதும் தான் சொன்னேன். அதுக்கு உன் பெயர் சுப்புவா சொன்னான். சுப்பு இல்ல சுபான்னு சொன்னதுக்கு, இனி அப்படித்தான் உன்னைக் கூப்பிடுவேன்னான். அன்னையிலிருந்து எங்க பார்த்தாலும் சுப்பு தான். எனக்கு கோவம் கோவமா வரும் அப்படிக் கூப்பிடாத சொன்னா கேட்க மாட்டான். வேணும்னே கூப்பிடுவான். அண்ணாவுக்கும், அவனுக்கும் முட்டிக்கிச்சினா ஃப்ரீ பீரியட்ல வந்து ஜடையைப் பிடிச்சி இழுத்து சுப்புன்னு வம்பிழுத்துட்டுப் போவான்.”

“அண்ணாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணினப்ப யாருன்னு கேட்டதுக்கு சிவா சொன்னேன். அதுக்கு அண்ணா அந்தப் பெயர்ல நைன்த் ஸ்டூடண்ட் யாரும் தெரியாதே சொன்னான். நேரடியா காண்பிக்கலாம்னா அண்ணா கூட இருக்கும் போது கண்ணுல சிக்க மாட்டான். அண்ணாவுக்கும் டென்த் பிஸி. மறுவருஷம் அண்ணா பெரிய க்ளாஸ். அவனும் டென்த் அதனால அவன் டார்ச்சர் கொஞ்சம் குறைஞ்சது. அப்புறம் நான் அவன் கண்ணுல பட்டா மட்டும் சுப்பு சொல்லிட்டு போயிடுவான். அதுக்கப்புறம் யாரும் என்கிட்ட வம்பிழுத்ததில்ல” என்று சொல்லி முடித்து “இப்ப அதை நினைச்சா காமெடியா இருக்குல்ல. அப்ப எனக்கு செமையா கோபம் வரும்” என்றாள்.

“தெரியும்” என்றான் ஜீவா.

“என்னது தெரியுமா? உங்களுக்கெப்படி?” என கேள்வியெழுப்ப,

“ஓ... தெரியும் சொன்னேனா? இல்லமா தெரியுது சொல்ல வந்தேன். உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டானா?”

“ம்... ரொம்பவே.”

“அவன் இப்ப உன் எதிர்ல வந்தா என்ன பண்ணுவ தேவி?” எனவும் திருதிருவென விழித்தவள், “என்ன பண்ணனும்? ஏன் பண்ணனும்? அது அந்த வயசோட முடிஞ்சிருச்சி. அவனே மேல் க்ளாஸ் போகப்போக என்னை மறந்திட்டான். இத்தனை வயசுக்கப்புறமும் அதே கோபத்தோட இருக்க அவன் என்ன கொலைக்குற்றமா பண்ணினான். இல்ல நான் தான் ராட்சசியா? சின்ன வயசுல அறியாமல் பண்ணின தப்புக்கு, விவரம் தெரிஞ்சி தண்டனை குடுக்கணும்னா என்ன அர்த்தத்துல சொல்றீங்க புரியல?”

“இப்ப அவன் உனக்கு முன்னாடி வந்தா ப்ரெண்ட்லியா பேசுவதான?”

“வந்தா பார்த்துக்கலாம்” என்றாள். வந்தனாவிற்கு புரிந்ததால், “ஜீவா டைமாகுது போய் படுங்க” என அனைவரையும் விரட்டினார்.

தங்களறைக்குள் வந்து மனைவியை படுக்கவைத்து கண்களில் மருந்திட்டுக் கொண்டே, “தேவிமா இந்த சுப்புன்ற நேம் சூப்பராயிருக்கே. இதெப்படி இத்தனை நாள் எனக்கு தோணாமல் போச்சி” என்றதும்... அவன் மருந்திட்ட விழிகளில் கொஞ்சம் வித்தியாசம் தெரிந்ததும் தன்னை முறைக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “என்னடா முறைக்கிற?” என்றான் குரலில் அப்பாவித்தனத்தைக் கொண்டுவந்து.

“உங்களை...” என்று அவனுக்கு அடிபோட்டு, “எனக்குப் பிடிக்கலன்னு சொன்னேன்தான அப்புறமென்ன சுப்புன்னு ஆரம்பிக்கிறீங்க?”

“பட் எனக்குப் பிடிச்சிருக்கேடா தேவி!”

“அதெல்லாம் முடியாது போ” என்றாள்.

“அடிப்பாவி அப்படியே சந்தடி சாக்குல போ சொல்ற?”

“நீங்க இப்படிப் பேசினா நானும் அப்படித்தான் பேசுவேன்” என சட்டமாக சொன்னதும், சிரித்தபடியே அவள் தலைமுடி வருடி குட்நைட் சொல்லி, மறுபுறம் வந்து படுத்தவன் நினைவுகள் பள்ளிக்காலத்திற்கு சென்றது. மெல்ல மனைவியின் புறம் திரும்பியவன், முதலில் அவளைப் பார்த்ததை நினைவில் கொண்டு வந்தான்.

பினோபார்ம் யூனிபார்மில் நல்ல கலராக கொழுகொழு பொம்மை போலிருந்த சுப்புவின் முகம் தெளிவாக இல்லாவிட்டாலும் அந்த உருவம் நினைவில் வந்தது.

“ஜீவதேவி” என்ற தங்கள் பள்ளியின் பெயர் சொல்லும்போதே ‘சுபா தங்கள் பள்ளியில் படித்தவளா’ என்ற ஆச்சர்யமே. அவள் மேலே பேசப்பேச அந்த சிவா, ஜீவாவின் மனக்கண்ணில் வந்தான்.



“டேய் சிவா! அந்த சீனியர்கு ஃப்ரீ பீரியட் போல உன்னோட ப்ரண்டை போட்டிக்கு வரச்சொல்லுன்னு சொல்றான். என்ன பண்ணலாம்?” என்றபடி வந்தான் ஹரி.

“டேய்! நீ திருந்தவே மாட்டியா என் பெயர் சிவா இல்ல ஜீவான்னு எத்தனை முறை சொல்றது?”

ஆம். சுபாவின் பரம எதிரியான சிவா தான் ஜீவா.

ஹரிக்கு ஜ, ஜா வரிசை வார்த்தைகள் சிறுவயது முதலே வராது. ஜிலேபி-சிலேபியாகும். ஜீரோ-சீரோவாகும். அதே போல் ஜீவா-சிவா ஆனான். ஒன்பது படிக்கும் ஜீவாவும், பத்து படிக்கும் ப்ரேமும் ரெண்டுங்கெட்டான் வயதினருக்கேயான போட்டி மனப்பான்மையில் விளையாட்டு தனியாக வைத்து, தாங்கள் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்களில்லை என்பதை காண்பிப்பதற்காக, அடிக்கடி போட்டி வைத்து ஜெயிப்பதும், தோற்பதுமாக இருப்பர்.

சீனியரான ப்ரேமை ஒன்றும் செய்ய முடியாத தன் வயதை முதன்முறையாக நொந்தான் ஜீவா. ஒரே க்ளாஸா இருந்திருந்தால் கூட அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம் என்று தன்னையே கடிந்து கொண்டவன், ஒரு நாள் காரிலிருந்து தன் தங்கையுடன் பேசியபடி அவளது க்ளாஸில் பத்திரமாக கொண்டு போய் விட்டு வந்த ப்ரேமைப் பார்த்தான். அவன் தங்கையை அழவைத்தால் ப்ரேமைப் பழிவாங்கிய திருப்தி கிடைக்குமென்று கணக்கிட்டவன், மறுநாளே அவளிடம் சென்று பெயர் கேட்டான்.

அண்ணனைப் போலவே அந்த கொழுகொழு பேபியும் முறுக்கிக் கொள்ளவும், கொஞ்சம் ஓங்கிய குரலில், “நான் பெரியவன் தான கேட்டா சொல்லமாட்டியா?” என்று தன் பெரிய மனுஷத்தனத்தை அந்த குழந்தையிடம் காட்டினான்.

அதில் பயந்து, “சுபா” என குனிந்தபடி சொல்ல, அது ‘சுபு’ என ஜீவாவின் காதில் விழுந்தது. அதில் ஒரு ‘ப்’ சேர்த்து “சுப்புவா?” என்றான் அந்த நல்லவன்.

“சுப்பு இல்ல. சுபா” என்றாள் பதிலுக்கு.

“ப்ச்...ப்ச் இனி நான் இப்படித்தான் கூப்பிடுவேன்.”

“எனக்கு பிடிக்கவில்லை” என அவள் மறுக்க, “அப்ப கண்டிப்பா சுப்பு தான் என்று தன் முதல் வெற்றிக்கான வெற்றிப்புன்னகை பூத்தான். தாயிடம் எதையும் மறைத்து பழக்கமில்லாததால் வந்தனாவிடம் மட்டும் சொல்ல, தப்பு என்று தாய் புரியவைத்தாலும், “ரொம்பல்லாம் வம்பு பண்ண மாட்டேன்மா” என்று தாயை சமாளித்தான்.

ஜீவா அந்த பள்ளியின் உரிமையாளரின் வாரிசு என்று அங்குள்ள ஆசிரியர்களைத் தவிர மாணவ, மாணவிகளுக்குத் தெரியாது. அதைச் சொல்லி அவன் மிரட்டவும் இல்லை. ஒன்றிரெண்டு முறை ஹரியுடனிருக்கும் போது வம்பு செய்ததால் தான் அவன் பெயர் சிவா என்றே சுபாவிற்கு தெரியும்.

எப்பொழுதெல்லாம் ப்ரேமிற்கு போரடிக்கிறதோ, அப்பொழுது ஜீவா அவனிடம் மாட்டுவான். அவர்களுக்குள் முட்டும் பொழுதெல்லாம் சுபாவின் பாடுதான் திண்டாட்டமாகிப் போகும். அப்பொழுதே நீளமாக இருந்த இரட்டைப் பின்னலைப் பிடித்திழுப்பது, பாக்சைப் பிடிங்கி வைத்து வம்பிழுப்பதென மாணவர்களுக்கேயான பாணியில் அவளைக் கலாட்டா செய்வான். தாயின் வளர்ப்பு அந்த வயதிலும் அதற்கு மேல் தப்புகள் செய்ய யோசிக்கக்கூடத் தோன்றவில்லை ஜீவாவிற்கு.

அவனின் ஒன்பதாம் வகுப்பு இறுதியில் ஒருநாள் அழுதேவிட்டாள் சுபா. அதுவரை கோபத்தில் முகம் சிவந்து, உதடு பிதுக்கும் போது அவனுக்கு ரசனையாக இருந்ததால், தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தவன், அவளின் கருவிழிக் கண்களில் கண்ணீரைப் காணவும் ஏனோ அவளை ரொம்ப தொல்லை செய்கிறோமோ என நினைத்து அதற்குமேல் வம்பிழுப்பதைக் குறைத்துக் கொண்டான்.

ஜீவா பத்தாவது படிக்கும் பொழுது, சுபா சுடிதாரை யூனிபார்மாக அணிந்திருந்ததால், ஜீவாவின் கண்களுக்கு கொஞ்சம் பெரிய பெண்ணாகத் தோன்றியதால் மற்றவர்கள் முன்பு எதுவும் சொல்லாமல், என்றாவது ஒருநாள் விளையாட்டுக்கு சுப்பு என்று சொல்லிச் சென்றுவிடுவான். நாட்கள் ஆக ஆக படிப்பில் கவனம் செலுத்த அப்படி ஒரு பெண் அறிமுகமானதையே மறந்துவிட்டான்.

சென்னையிலேயே எம்எஸ்ஸி, பிஹெஜ்டி முடித்து பெங்களுரிலுள்ள சைன்ஸ் இன்ஸ்டிடியூட்டில் வேலைக்கமர, அதே நேரம் சாதனாவும் ப்ளஸ்டூ முடித்திருந்ததால் அண்ணன் இருக்குமிடம் சென்று படிப்பதாக சொல்ல, பிள்ளைகளுக்காக அங்கேயே வீடு வாங்கி செட்டிலானது ஜீவாவின் குடும்பம். அவன் பார்க்கும் வேலை கூட அவனது ஆசைக்காக பார்ப்பது தான்.

தனக்கென்றிருந்த ஆசையை பெற்றவர்கள் நிறைவேற்றவில்லையே என்ற எண்ணம் அவனுக்கு எந்த காலத்திலும் வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான், அவனின் படிப்பிற்கோ, வேலைக்கோ எந்த தடையும் சொன்னதில்லை விவேகானந்தன் தம்பதியர். தகப்பனாருக்கு வயதான பின் பள்ளியை தானே பார்த்துக் கொள்வதாக ஏற்கனவே சொல்லிவிட்டான்.

இத்தனை வருடங்கள் கழித்து அந்த சுப்புவே அவன் மனைவியாகியிருக்கிறாள். கடவுள் போட்ட முடிச்சை என்னவென்று சொல்வது. அந்த சுப்புவையே தன் மனைவியாக பார்க்கும் பொழுது எப்படி உணர்கிறோம் என்று வரையறுக்க முடியவில்லை ஜீவாவினால். அது சந்தோஷமா, மனதில் தோன்றிய ஒருவித நிம்மதியா அவனே அறியான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
வளை முதல் முதலில் பார்த்தவுடனே தாயிடம், ‘இவள்தான் உங்கள் மருமகள என சொல்ல வைத்தது எது? விபத்து நடந்து அவளின் முகம் மோசமாக காட்சியளித்த போதும், குறித்த முகூர்த்தத்தில் இந்த திருமணம் நடந்தே தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க வைத்தது எது? குருடியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா? என்று சிலர் பரிகாசம் செய்த பொழுது, அவளுக்கு கண்ணாக நானிருப்பேன் என கோபம் கொள்ள வைத்தது எது?’ கேள்விகள் தொடர்ந்தது...

தலைக்கு கைகொடுத்து சாய்ந்தவாக்கில் மனைவியின் புறம் திரும்பி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஆராய்ச்சியில் ஈடுபட்டான். சின்னவயதிலேயே நீளமாக இருந்த தலைமுடி இன்று இன்னும் கூடுதலாக அடர்த்தியாக இருந்தது. சின்னவயது முகம் முழுவதுமாக நினைவு வரவில்லை என்றாலும், அந்த புஸுபுஸு என்றிருந்த கன்னங்கள் கொஞ்சம் வற்றி வயதிற்கேற்ற அழகைக் கொடுத்திருந்தது. கொழுக்மொழுக் உடல் வற்றி குண்டுமில்லாமல், ரொம்ப ஒல்லியுமில்லாமல் மீடியமான உடலமைப்பில் இருந்தாள். காந்தமென ஈர்க்கும் கண்கள்.

நெற்றி முடி விலக்கி விரல்களால் கன்னம் தொட்டு இதழ்களால் கன்னத்தில் முத்தமிட்டு, லிப்ஸ்டிக்கில்லா ரோஸ் நிற உதடுகளை வருடுகையில் அவளிடம் அசைவு தெரிய, மூச்சிவிட மறந்து வேகமாக கையை எடுத்தான். பின் தூக்கத்தில்தான் நெளிந்திருக்கிறாள் என்று தெரியவும் மூச்சை வெளியிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இதுவரை மனைவியின் மீது மனம் சஞ்சலமடைந்தாலும், அவளைத் தொட தயக்கம் இருந்தது. இப்பொழுது அந்த தயக்கம் முழுசாக தீரவில்லையென்றாலும், அவளிடம் குறும்பு செய்யும் எண்ணம் தலைதூக்கியது.

“சுப்பு” அந்த பெயரை உச்சரிக்கும் பொழுதே மனதில் இனம்புரியா உணர்வு ஆட்கொண்டது. அவளைத் தனக்குக் கொடுத்த கடவுளுக்கு கணக்கில்லா நன்றிகள் சொன்னான். இந்த உண்மையை ரகசியமாக வைத்து அவளுக்கு கண்கள் தெரிந்ததும், அவளுடனான சுமூகமான வாழ்க்கை வாழ ஆரம்பித்த பிறகு சொல்லி அவளது கண்களும், முகமும் காட்டும் ஜாலங்களைக் காணப்போகும் நாளுக்காக காத்திருக்கலானான்.

அவனுக்கென்ன தெரியும் அதன் முன்பே தன்னைவிட்டு ஆசை மனைவி பிரிந்து போவாள் என்று. பின், தைரியமாக அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, இடையில் கைபோட்டு படுத்துறங்கினான்.

நடு இரவில் அவன் மனைவி விழித்ததையோ, இருவருக்குமிடையில் இருந்த வெற்றிடத்தை நிரப்பியதையோ, கைகளால் முகம் தேடி கன்னம் தொட்டு இதழ் முத்தம் கொடுத்ததையோ, கணவனின் முக அமைப்பை கைகளால் வருடி உணர்வினால் உள்ளத்தினுள் பதித்ததையோ, வருடிய கைகளை அவன் மேலேயே போட்டு பின் உறங்கியதையோ எதையுமே உணராமல் உறங்கிக் கொண்டிருந்தான் அவளின் ஜீவனாகிய ஜீவா.

மறுநாள் காலையிலேயே மாமனாரிடமிருந்து போன் வர, ப்ரேம் சென்னை திரும்பியதை உறுதி செய்து பேசிமுடித்து மனைவியிடம் கொடுத்து குளிக்கச் சென்றான். அப்பா, அம்மா, அண்ணன் என அனைவரிடமும் பேசியவளுக்கு, சந்தோஷத்தையும் மீறி குழப்பமே மிஞ்சியது.

குளித்து முடித்து ஆடைமாற்றி வந்தவன் மனைவியின் குழப்ப முகம் பார்த்து, அருகிலமர்ந்து அவளின் கை எடுத்து தன் கைகளுள் பொருத்திக் கொண்டு, “என்னடா, ஏதோ யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு? வீட்ல யாரும் எதாவது சொன்னாங்களா?” அவள் இல்லையென்று தலையாட்ட... “அது இல்லன்னா அவங்களைப் பார்க்கணும் போல இருக்கா?” என்றதற்கும், மறுத்து தலையாட்டியவள் கணவனின் தோள் சாய்ந்து கண்மூட... இடது கையால் தோள் சாய்ந்த மனைவியின் தோளணைத்து ஆறுதலாகப் பிடித்தான்.

அந்த இதத்தை இருவரும் அனுபவிக்க சில நிமிடங்கள் கழித்து, “டைமாகுது நான் கிளம்பறேன்மா” என்றதும்,

‘ம்...’ என்ற ஒற்றை வார்த்தை பதிலாய் கிடைக்க, நிறைய குழப்பத்தில் இருக்கிறாள் என புரிந்தவன், அவளை கூலாக்க எண்ணி, “என்ன குழப்பம் என்னோட சுப்புக்கு?” என்றான்.

அந்த வார்த்தை உடனே வேலை செய்தது. “என்னது சுப்புவா? அப்படிக் கூப்பிடாதீங்க சொன்னேன்ல?” என்று சிலிர்த்தவளிடம்...

“நீ இப்படி இருந்தா, நான் அப்படித்தான் கூப்பிடுவேன் சுப்பு” என்றான்.

“அத்தை இவங்களைப் பாருங்க” என்று மாமியாரை அழைக்க...

“என்னடா பிரச்சனை?” என்றபடி வந்தனா வர...

“அம்மா அவ எப்படா நம்மளைக் கூப்பிடுவாள்னு வாசல்லயே காத்திட்டிருந்தீங்களா என்ன?”

“அடப்போடா! காலையிலேயே எனக்கு வேற வேலையில்ல பாரு. உங்க ரூம் வாசல்ல காத்துக்கிடக்க. என்ன தேவிமா எதுக்கு கூப்பிட்ட?”

“அத்தை இவங்க என்னை சுப்பு சொல்றாங்க. அப்படி சொல்ல வேண்டாம் சொல்லுங்க?” என புகார் செய்ய...

“ஆமாங்க. டிஐஜி மேடம் என் ஒய்ஃப் கம்ப்ளைண்ட் குடுக்குறாங்க. அதை வாங்கிட்டு, என்னைப் பிடிச்சி உள்ள தள்ளுங்க” என நக்கலடிக்க...

“உள்ள தூக்கிப் போடமாட்டேன் ஜீவா சார். இந்த ரூமைவிட்டு வெளில தூக்கிப் போட்டிருவேன்” என தாய் சொல்ல...

“தாயே நான் தங்களுக்கென்ன துரோகம் செய்தேன். கட்டிய மனைவியை, கணவனிடமிருந்து, சே... கட்டிய கணவனிடமிருந்து, மனைவியைப் பிரிக்கும் வேலையை செய்கிறீர்கள்? ஐயகோ! இதைத் தட்டிக்கேட்க என் தந்தை எனதருகில் இல்லையே. என் தங்கையும் இன்று விரைவில் பணிக்கு சென்று விட்டாளே. நான் என் செய்வேன்” என நெஞ்சில் குத்தியபடி பழையபட ஹீரோ ஸ்டைலில் வசனம் பேச...

அதைப் பார்த்து வாய்விட்டு சிரித்த மனைவியினருகில் சென்று, “இது தேவையா தேவிமா? நம்ம பிரச்சனையை நாமளே தீர்த்துக்கலாமே நடுவுல நாட்டாமை எதுக்கு?”

அந்த சிரிப்பினூடே “அதானங்க நாட்டாமை எதுக்கு? நானே பேசிட்டு தீ...தீ...தீர்த்துடறேன். அத்தை நீங்க கிளம்புங்க” என்றாள்.

அவளின் பாவனைகள் புரிந்த வந்தனா, “மகனே மாட்டினடா நீ” என சத்தமாக சொல்லியே வெளியே சென்றார்.

“தேவி! அம்மா என்னவோ சொல்லிட்டுப் போறாங்களே. என்னடா?” என புரியாதவன் போல கேட்டவனின் அருகில் வந்து “இதான்ங்க” என இரண்டடிகள் போட, “இது இல்லடா செல்லம்” என்று ஓங்கிய கைக்கு முத்தமிட்டு, அப்படியே கன்னத்தில் முத்தமிட்டு, “இதான் தேவிமா. கிளம்புறேன் பை. மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துக்கோ. நான் நைட் வந்திருவேன்” என்று கிளம்பினான்.

‘முத்தம் குடுத்துட்டு ஓடிட வேண்டியதே வேலையா போச்சி’ என்று சிரித்தவள், பின் தாயிடம் பேசியதை நினைத்தாள், ‘மாப்பிள்ளையோட சந்தோஷமா இருக்கிறியாமா?’ பெண்ணைக் கட்டிக்கொடுத்த அனைத்து தாய்க்கும் இருக்கும் முதல் கவலை. அதிலும் மகளின் கல்யாணம் நடந்த சூழ்நிலையோ முற்றிலும் வேறு. அதனால் தாயின் கேள்வியிலேயே எல்லாம் சரியாகியிருக்க வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. அதற்கான அர்த்தம் புரிந்ததால், ‘ம்’ என்ற வார்த்தையை மட்டுமே தாய்க்கு கொடுத்திருந்தாள்.

ஒரு முத்தத்திற்கே குடுக்கவா, வேண்டாமா என்று பல யோசனைகளின் பின் குடுத்துவிட்டு ஓடுபவன். பொண்டாட்டியை தொடுவதற்கு அவளின் உறக்கத்தை உறுதி செய்து கைபோடுபவன். இதுவரை புரியாத கணவனின் விலகல் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. ஏன்? என்ன காரணமாக இருக்க முடியும்? என்னை அவங்களுக்கு பிடிக்காதென்று சொல்ல வாய்ப்பே இல்லை. முகமெங்கும் காயமிருந்த அந்த நிலையிலேயே தன்மேல் வைத்திருந்த அன்பு, தற்பொழுது அதிகமாகியிருக்கிறதே தவிர இம்மியளவும் குறையவில்லையே. விபத்து நடந்தது தன்னால்தான் என்ற எண்ணத்திலா? அதுவாகத்தான் இருக்குமென்ற முடிவிற்கு வந்திருந்தாள். ஏனெனில் காரில் போகும்போதே உரிமையாகப் பேசமாட்டியா சுபா என உரிமைக்குரல் எழுப்பியவனாயிற்றே!

இன்னொன்றும் அவளுக்கு இடித்தது, அன்று பேசும்பொழுது சுபா என்றழைத்தவன் அதன்பின் அவ்வாறு அழைத்ததில்லை என்பதை உணர்ந்தாள். ‘நாமாக இதைச் சொல்வது தவறு. அவனாக நெருங்கினால் பார்த்துக் கொள்ளலாம்’ என நினைத்தவள், அறைக்குள் அடைந்து கிடந்தால் மனம் கண்டதையும் நினைக்குமென மாமியாரைத் தேடி ஹாலுக்குச் சென்றாள்.

ஜீவாவிற்கு செல்லும் வழியெல்லாம் மனைவியின் யோசனை முகமே வர, காரை நிதானமாக ஓட்டியபடி என்னவாகயிருக்கும் என்று யோசித்தான். இந்த சமயத்தில் என்றால், தாய் மகளிடம் கேட்கும் கேள்வியாகத்தான் இருக்குமென்று சரியாக யோசித்தான்.

இதை எப்படி சரிசெய்வதென்று இவனே குழப்பத்தில் இருக்கும் பொழுது மனைவியிடம் என்னவென்று கேட்பான். உடனே காரை ஓரம்கட்டி முந்தினதினம் மனைவி பள்ளியைப்பற்றி பேசியதை ப்ரேமிடம் பகிர, ப்ரேமிற்கோ சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம்.

“மற்றதை நேரில் பேசிக்கலாம் மச்சான்” என்று போனை வைத்து, மானசீகமாக மனைவியிடம் “இன்னும் கொஞ்ச நாள்தான் தேவி எனக்காக பொறுத்துக்கோமா’” என சொல்லிக் கொண்டான்.
 
Top