• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
5



கணவனின் சாது என்ற வார்த்தையில் சிரிப்பை நிறுத்திப் திரும்பியவளைப் பார்த்த சாதனா, அண்ணன் தன்னை கேலி செய்ததை மறந்து, “அடப்பாவி அண்ணா! வீட்ல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு இங்க வேற ஒரு பொண்ணோட சேர்ந்து பல்லைக் காட்டிட்டிருக்கியா? அதுவும் நம்ம வீட்லயே.. என்னைப்பற்றி தப்புத்தப்பா வேற சொல்ற?” என்றதும் இருவரும் வாய்விட்டுச் சிரிக்க...

சுபாவின் சிரிப்பைப் பார்த்ததும்தான் சாதனா மனதில் ஏதோ ப்ளாஷடிக்க, “ஹேய்! அண்ணியா இது?” என ஆச்சர்யப்பட்டவள், “அண்ணா என்னைக் கொஞ்சம் கிள்ளு” என்றாள். வேகமாகவே ஜீவா கிள்ளி வைக்க... “நிஜம்தான். அண்ணியேதான். ஹௌ? இப்படி ஒரு மிராகிள்? அழகாயிருக்காங்க” என வாய்விட்டு பாராட்ட...

அந்த திடீர் பாராட்டில் வெட்கப்பட்டு தலைகுனிந்த மனைவியின் முகத்தை ரசிக்க ஆரம்பித்த ஜீவாவிடம், “போதும்ணா உன் ஒய்ஃபை சைட்டடிச்சது” என்றதும் இன்னும் வெட்கமாக கணவனின் தோளில் முகத்தை மறைத்தாள்.

“பாருங்கப்பா வெட்கத்தை” என சாதனா கிண்டலடிக்க... “ஸ்... சாதுமா போதும் என் ஒய்ஃபை ரொம்ப கிண்டலடிக்காத” என்றபடி மனைவியை தோளில் சாயவைத்த தங்கைக்கு மனதில் ஆயிரம் நன்றிகள் சொன்னான்.

“உன் நன்றியெல்லாம் போதும்” என்றதும் தங்கையைப் பார்த்தவன், “அடிப்பாவி!” என்றான். மனதிலுள்ளதைக் கண்டுபிடித்து விட்டாளே! என்ற எண்ணத்தில்.

“நான் அப்பாவின்றது எனக்கேத் தெரியும். இப்ப அதுக்கென்ன வந்தது? நீ ஏன் இந்த அப்பாவியைக் கிள்ளுன?”

“நான் அடிப்பாவி சொன்னேன். ‘நீ அப்பாவியா உலகம் தாங்காதுடா. நீயே என்னைக் கிள்ளச் சொன்னதால கொஞ்சம் ஸ்பீடா கிள்ளுனேன்.”

“இரு உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன். அண்ணி முதல்ல என்னை மன்னிச்சிருங்க. நான் எதோ ஒரு நினைப்புல உங்களை ஹர்ட் பண்றமாதிரி பிஹேவ் பண்ணிட்டேன். திரும்பவும் சாரி.”

“ஆமா இப்ப வந்து கேளு” என்ற கணவனின் கையை அழுத்தி, “எதுக்கு சாரிலாம் நான் எதுவும் தப்பா நினைக்கல. உங்களுக்கு இருந்தது நியாயமான ஆசைதான. இதுல தப்பு சொல்ல எதுவும் இல்லையே. நான் உங்க இடத்துல இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பேனா இருக்கும். மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம எப்பவும் போல உங்கண்ணனுடன் ஜாலியா இருங்க” என்றாள் சுபா.

“தேங்க்ஸ் அண்ணி இந்த ‘ங்க’ எடுத்துருங்க ஓகேவா” என்க... சுபா சம்மதமாக தலையசைத்ததும்... “அண்ணி வேணும்னேல்லாம் நான் ஹாஸ்பிடல் வராம இல்ல. நிஜமாகவே என்னால வரமுடியாத சூழ்நிலை. எனக்கு அண்ணி நீங்கதான்னு ஆன பிறகு உங்களை எப்படி என்னால வெறுக்க முடியும். அதுவுமில்லாம கடைசி வரை நீடிக்க வேண்டிய உறவு நம்மளோடது. சரி அதைவிடுங்க கண்ணுக்கு என்ன சொன்னாங்க? பார்வை முழுசா எப்ப வரும் சொன்னாங்க? குரல் கூட முழுசா வரல போலிருக்கு?”

“இனிமேல் கொஞ்சம் கொஞ்சமா பார்வை தெரிய ஆரம்பிக்குமாம். இரண்டு மாசம் கழிச்சி ஃபுல் செக்கப் ஒண்ணு பண்ணிட்டா போதும்ன்றாங்க டாக்டர். குரல் முன்னைக்கு இப்ப பரவாயில்ல. போகப்போக சரியாகிடும்னு சொல்லிட்டாங்க” என்று மனைவியைப் பற்றிய டீடெய்ல்ஸ் கொடுத்தான் ஜீவா.

“அண்ணி நீங்க என்ன படிச்சிருக்கீங்க? ஒர்க் பண்ணிட்டிருந்தீங்களா?” என கேட்ட நாத்தனாருக்கு பதிலளிக்க சுபா வாய்திறக்க...

அதற்குள், “எம்சிஏ படிச்சிருக்கா. போன இயர் தான் முடிச்சிருக்கா. வேலைக்கு மாமா போக வேண்டாம் சொன்னதால இவளும் போகல” என்றான் ஜீவா.

“அண்ணா உன்னோட ஹஸ்பண்ட் போஸ்டிங்கை கரெக்டா பண்ற போல” என கிண்டிலடிக்க...

‘ஏன்?’ என்பது போல் புரியாமல் விழிக்க, புரிந்த சுபா மௌனமாக சிரிக்க... “ம்... அண்ணிட்ட கேள்வி கேட்டா நீ பதில் சொல்றியே?” என்றதும் மூவரும் சிரித்தனர்.

“சாதுமா எப்ப வந்த? உன் காலேஜ் ப்ரோக்ராம்ஸ் எல்லாம் பினிஷ்டா? இல்ல இன்னும் போகணுமா?” என்று கையில் மூவருக்கும் காஃபியோடு, வாயில் கேள்வியோடு வந்தார் வந்தனா.

“எல்லாம் முடிஞ்சிது வந்துமா. இனிமேல் சிக்ஸ் மன்த் ட்ரெயினிங் தான். அதுவும் இங்க பெங்களுர்லயே போட்டுட்டாங்க. அப்புறம் வேலைக்கு எங்க தூக்கிப் போடுறாங்களோ யாருக்குத் தெரியும். இது பெரிய கம்பெனின்றதால ஆயிரத்தெட்டு இன்டர்வியூ வச்சிட்டேயிருப்பாங்க. எனக்கும் படிப்புக்கும் ரெஸ்டே இல்லை போல” என அலுத்துக் கொண்டவள், “வந்து என் வாயையே பார்க்காதீங்க. காஃபி குடுங்க ஆறிடப்போகுது.”

“கொஞ்சம் இருடா” என்ற வந்தனா யோசித்த பாவனை காட்ட, ‘இப்ப எதுக்கு இத்தனை பில்டப்பு’ என்று சாதனா நினைக்க... “பாப்பா இப்படிப் பண்ணலாமா பாரு” என தீவிரமாக தாய் உரைக்க...

“எப்படிப் பண்ணலாமா வந்துமா? ரொம்ப சீன் போடுறீங்களே. என்ன குண்டு ரெடியாயிருக்கு தெரிஞ்சிக்கலாமா?”

“குண்டு இல்லடா. உனக்கு இந்த படிப்புலயிருந்து விடுதலை கொடுத்திடலாமா பார்க்கிறேன். பேசாம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரட்டுமா?” சாதனா தாயை முறைக்க...

“அம்மா இதை நான் ஆதரிக்கிறேன்” என்று ஜீவா கைதூக்க...

“ஆமா வந்துட்டான் அரசியல்வாதி பேரன் ஆதரிக்கிறேன், ஆராதிக்கிறேன்னு கையைத் தூக்கிட்டு. என்னண்ணி உங்க பங்குக்கு நீங்க எதுவும் சொல்லலையா? எதுவாயிருந்தாலும் சொல்லிடுங்க.”

“தப்பா எடுத்துக்கலன்னா சொல்றேன். உங்க அண்ணன் மாதிரி ஒரு நல்ல கேரக்டர் உள்ள பையன் கிடைச்சா வேலையாவது ஒண்ணாவதுன்னு தாராளமா கல்யாணம் முடிச்சிக்கலாம் தப்பேயில்லை” என்றாள்.

மனைவியின் மனம் திறந்த புகழ்ச்சியில் உச்சிகுளிர அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிடம், “அண்ணா நாங்களும் இங்க தான் இருக்கோம் பார்வையிலேயே எங்கண்ணிய முழுங்கிடாத. எனக்கு இருக்கிறதும், இருக்கப் போறதும் ஒரே ஒரு அண்ணி” என்றவள் சுபாவிடம் திரும்பி, “அண்ணி நீங்க சொல்றதும் கரெக்ட் தான் அப்படி ஒரு பையன் கிடைச்சா.. நல்லா கேளுங்க... கிடைச்சா கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.

‘ஏன் எங்கண்ணன் ப்ரேம் இல்லையா?’ என்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கிய சுபா நாத்தனாரின் பேச்சைக் கவனிக்கலானாள். “அதுவரைக்கும் நான் வேலைக்குப் போறேன். ஆனாலும், அண்ணி இதை சாக்கா வச்சிட்டு எங்கண்ணனை பற்றி உங்க மனசுல உள்ள கருத்தை தெளிவா சொல்லிட்டீங்க போல” என்று கிண்டலடித்தாள்.

“அப்படியெல்லாம்...” இல்லையென்று சொல்ல வந்ததை நிறுத்தி, ‘உண்மை தானே எப்படி மனசாட்சியில்லாமல் இல்லையென்று சொல்ல முடியும்’ என நினைத்தவள், சாதனாவிடம் “போதுமே” என்றாள் தணிவாக

“வந்து காஃபி என்னாச்சி? பேச்சி பேச்சாயிருந்தாலும், வேலை வேலையாயிருக்க வேண்டாமோ?” என பேச்சை மாற்றி தாயைக் கிண்டலடிக்க ஆரம்பித்தாள்.

“ஹ்ம்... எல்லாம் நேரம்டி” என்று பேசியடிபயே அந்த ரம்யமான மாலை நேரத்தை இதமாக்கினார்கள்

இரவு உணவு முடித்ததும் அவரவர் அறைக்குள் செல்ல, கீழிறிருந்த தங்களறைக்கு அழைத்துச் சென்றவன் ஒருவித மயக்க நிலையிலேயே இருந்தான். சுபாவிற்கும் மாலையில் நடந்த விஷயங்களே மனதினுள் ஓட, மனைவியை படுக்க வைத்து கண்ணிற்கு மருந்திட வந்தவன் மெய்மறந்து அவளின் கண்களையே பார்த்திருக்க... மனம் தாண்டிய உடல் நானும் இருக்கிறேன் என்று அவனுக்கு நினைவுபடுத்தி, உணர்வுகள் மேலெழும்ப திணறித்தான் போனான். மனைவியை அணைக்க எழும்பிய கையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.

கணவனின் போராட்டங்கள் புரியாமல், “என்னாச்சிங்க? மருந்து போடலையா?” என்றாள் அவனின் ஆசை மனைவி.

“அ...அது” என்று பதிலளிக்க முடியாமல் தடுமாறியவன், “ஒரு நிமிஷம் இதோ வந்திடுறேன்” என்று நேரே சென்று தாயின் அறை சென்று கதவைத் தட்டியதும் வெளியில் வந்த தாயை தன்னறைக்கு அழைத்துச் சென்று மருந்தைக் கையில் கொடுக்க... தன்னை முறைத்த தாயிடம், “வந்துமா ப்ளீஸ்” என்றான்.

பல்லைக் கடித்து “என்னவோ பண்ணு” என்று மருமகளிடம் பேச்சிக் கொடுத்தபடி மருந்திட்டு வெளியே வரும் பொழுது, மகனிற்கு ஜாடை காண்பிக்க... மனைவியிடம் சொல்லி வெளியே வந்தவனிடம்...

“நீ பண்றது சரியில்லடா ஜீவா. எதுவாயிருந்தாலும் உன் மனசுல உள்ளதை அவகிட்டப் பேசி சேர்ந்து வாழ்ற வழியைப் பாரு. எத்தனை நாள் மறைக்கிறதா உத்தேசம்? எனக்குத் தெரிஞ்சி இந்த விஷயத்தை இப்படியே விடுறது நல்லதில்லன்னுதான் சொல்லுவேன். நாட்கள் இப்படியே போச்சி அப்புறம் உன் வேலையை நான் எடுத்துக்க வேண்டிவரும். புருஷனுக்கு தன்னைப் பிடிக்கலையோன்னு தேவி சந்தேகப்படுறதுக்குள்ள, அவகிட்டப் பேசி புரியவைக்கிறது உனக்கு நல்லது. இது அரேஞ்ச்ட் மேரேஜ் வேற. கல்யாணம் முடிஞ்ச புதுசுல சின்னச்சின்ன விஷயங்களும் பூதாகரமா தெரியும். சின்னதா இருக்கும் போதே சரிபண்ணு பூதமாக விட்டுறாத. அவ்வளவுதான் சொல்லுவேன்” என்று தன்னறைக்குள் சென்றார்.

செய்வதறியாமல் நின்றவன் தன் நிலையை தானே வெறுக்க அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தான்.

உள்ளே சுபாவோ இவர்களின் எண்ணங்களுக்கு நேர்மாறாய் யோசித்துக் கொண்டிருந்தாள். ‘கண்ணுல மருந்து போடாம ஏன் அத்தையைக் கூப்பிட்டு வந்தாங்க? என்னோட கண் அவ்வளவு மோசமாகவா இருக்கு. இல்ல வேற ஏதோ இருக்கு. என்ன... என்ன?’ என்று மூளையைக் கசக்கியவள் கண்டுபிடித்தது அது ஒன்று மட்டும்தான். அந்த நினைவில் முகம் சூரியனாய் ஒளிர ‘ஒருவேளை அதுவாயிருக்குமோ!’ என நினைத்தவள், மறுநிமிடமே ‘இருந்தா நல்லது தான். இல்லன்னா என்ன பண்றது? இல்லை அதுவாகத்தானிருக்கும்.’ நினைத்த நிமிடம் மனம் மகிழ பலவித எண்ணங்களினூடே கண்ணயர்ந்தாள்.

சில மணிநேரங்கள் கழித்தே உள்ளே வந்த ஜீவா மனைவியின் தூக்கத்தை உறுதி செய்து, மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்து அருகே படுத்து, அவளின் கையை எடுத்து தன்மேல் போட்டுக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலையில் “வந்துமா, என்னோட க்ரீன் கலர் புதுசுடிதார் எங்க? வந்துமா லஞ்ச் ரெடியா? வந்துமா, என்னோட வாட்ச் எங்க? வந்துமா, என்னோட ஸ்கூட்டி சாவி எங்க?” காலையிலிருந்து ஒவ்வொன்றுக்கும் தாயை அழைத்து வீட்டையே இரண்டு பண்ணி அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள் வந்தனாவின் அருமை மகள் சாதனா.

“சே... முதல் நாள் வேலைக்குப் போறதுக்கு இத்தனை சேட்டை ஆகாதுடி. ஆரம்பமே இந்தப்பாடுன்னா அடுத்தடுத்த நாட்கள் தாங்காதுடா சாமி. சீக்கிரமே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பிடணும்” என்றபடியே கிச்சன் வேலையில் ஈடுபட...

“நீங்க நினைச்சவுடனே மாப்பிள்ளைனு யாரும் வந்து க்யூவுல வந்து நிற்கமாட்டாங்க” என்று சொல்லி முடியுமுன், “தேவி” என்ற அழைப்புடன் அங்கு வந்து நின்றான் ப்ரேம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
யாரென்று எட்டிப் பார்த்த சாதனா, ப்ரேமைப் பார்த்ததும் தாயிடம் திரும்பி “அம்மா நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்” என்றாள் வேகமாக.

“ஏன்டி?” என்ற தாயிடம், “மாப்பிள்ளை யாரும் வந்து நிற்கமாட்டாங்க சொன்னேன்ல. ஆனா, உங்க மாப்பிள்ளை ப்ரேம் வந்து நிற்கிறாங்க. என்னன்னு பாருங்க. நான் ஒரு ஹாய் சொல்லிட்டுக் கிளம்பறேன்” என்றாள் வெகு சாதாரணமாக.

ஆம். பேச்சிவாக்கில் அண்ணியின் அண்ணன் என்று சொல்லாமல், அம்மாவின் முறையை வைத்து சாதாரணமாக தான் அவள் சொன்னாள்.

ஆனால், பெற்றவருக்கோ அது சுபசகுனமாகவே தோன்றியது. ‘மருமகள் சொன்ன அனைத்தும் உள்ள அருமையான பையன். இவனை விட வேறு யாரால் தன் பெண்ணை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும்.’ முதலில் மகனும், மருமகளும் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும் இந்தப் பேச்சை எடுக்கலாம் என்று தற்காலிகமாக அந்த நினைப்பை மனதினுள் போட்டு மூடினார்.

அதற்குள் அவனை கண்ட ஜீவா, “வாங்க மச்சான்” என்ன திடீர் விசிட் என்றபடி வர, “ம்... மாப்பிள்ளை விருந்துக்கு வந்திருக்காரு” என்று என்ட்ரியானாள் சாதனா.

கிச்சனில் இருந்தபடியே இதை கேட்ட வந்தனாவுக்கு நம் நினைப்பு சரிதான் என்றே தோன்றியது.

பின் சாதனா, ப்ரேமுக்கு ஹாய் சொல்ல, பதிலுக்கு ப்ரேம் ஹாய் சொன்னதும், “சாரி நான் முதல்நாள் வேலைக்குப் போறேன். ஸோ, பர்ஸ்ட் டேயாவது சீக்கிரமா போகலாம்னு நினைச்சிட்டிருக்கேன். அதனால உங்ககிட்ட நான் ஈவ்னிங் வந்து பேசிக்கிறேன்” என கிளம்ப யத்தனித்தவளை...

“இல்லங்க நானும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். இங்க ஒருத்தரை மீட் பண்ணத்தான் வந்தேன். பத்து மணிக்கு அப்பாய்ண்ட்மென்ட் குடுத்திருக்காரு. அது முடிஞ்சதும் அப்படியே கிளம்பிடுவேன்” என்றான்.

“ஓகே. பார்த்து போயிட்டு வாங்க” என்று கிளம்பியவளிடம், “சாதனா ஆல் தி பெஸ்ட்” என்றான் ப்ரேம்.

“தேங்க்யூ” என்று சிரித்தபடி சென்றாள்.

“என்ன மச்சான் சர்ப்ரைஸ்லாம் குடுக்குறீங்க? ஓரு போன்கூட பண்ணல?”

“சர்ப்ரைஸ் தான் ஜீவா. இங்க எங்க கம்பெனி ஸ்பேர் பார்ட்ஸ் விஷயமா ஒருத்தரோட அப்பாய்ண்ட்மென்ட் கிடைச்சது. இதுவரை இந்தியாவுல மட்டுமே பிசினஸ் பண்ணிட்டிருந்தது போயி வெளிநாடுகள்லயும் எக்ஸ்போர்ட்ஸ் பண்ற மாதிரி ப்ளான். அதுக்காகத்தான் அவரை மீட்பண்ணிப் பேச வந்தேன். தப்பா நினைச்சிக்காதீங்க. நான் இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பிடுவேன்.”

முதலில் ப்ரேமை வாழ்த்தி, “பரவாயில்லை தொழில் விஷயமாகத்தான வந்திருக்கீங்க. நாங்க ஃபீல் பண்ணல. உங்க பாசமலர் எப்படி ஃபீல் பண்றாளோ எனக்குத் தெரியாது” என்றான்.

“ஆமா, தேவி எங்க?”

“அண்ணா...” என்று அறையைவிட்டு வெளியே வந்தவளை கைபிடித்து ப்ரேம் அருகில் உட்காரவைத்து, “நான் வர்றேன் தேவி. வர்றேன்மா” என்று “லஞ்ச் எடுத்து வர்றேன் மச்சான்” என்றவனின் கைபிடித்த ப்ரேம், “தேங்க்ஸ்” என்றான் தங்கையைப் பார்த்தவாறு.

ப்ரேமின் அருகில் குனிந்து, “அவளை என் ஒய்ஃபா குடுத்ததுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். அதனால எதாவது உளறாதீங்க.”

“ஹா...ஹா... என்னது குடுத்தோமா? ஜீவா எடுத்துகிட்டு, குடுத்தோம்னு நல்லபிள்ளையா பேசுறது டூ மச்.”

“மச்சான் பப்ளிக்... பப்ளிக்... நான் கிளம்பறேன் ஓகே” என்று ஓடினான்.

“லவ்லி பெர்சன் இல்லடா தேவி?”

“ம்... ஆமாண்ணா. ரொம்ப நல்லவங்க” எனும் போது தங்கையின் முகத்தில் வந்த மலர்ச்சியைப் பார்த்தவன், விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் திருமணம் செய்தது தப்போ என்று நினைத்திருந்தவனுக்கு, இப்பொழுது தாங்கள் தப்பு செய்யவில்லை நல்லதே செய்திருக்கிறோம். நினைவினூடே தங்கையின், “அண்ணா உன்கிட்ட பேசமாட்டேன் போ” என்ற வார்த்தை விழ...

“என்னமா திடீர்னு என்னாச்சி? நான் என்ன பண்ணினேன்?”

“என்ன பண்ணல? என்னைப் பார்க்க வர்றேன்னு இல்லாம, உன் தொழில் விஷயமாகத்தான வந்திருக்க போ” என்று முகம் திருப்பினாள்.

தங்கையின் கைபிடித்து, “உனக்காக வராம, வேற யாருக்காகடா வருவேன். இன்னைக்கு மீட்டிங் மும்பையிலேயோ, டெல்லியிலையோ நடக்க வேண்டியது. எந்த சம்பந்தமும் இல்லாம பெங்களுர்ல நடக்குதுன்னா, அதுக்கு நான் எவ்வளவு ட்ரிக் பண்ணியிருக்கணும். நம்புடா கொஞ்ச நேரம்னாலும் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

“என்னவோ சொல்ற. ஓகே” என்று பெரிய மனதாய் ஏற்க, அதற்குள் அவர்களிடம் வந்த வந்தனா வீட்டிலுள்ளவர்களைப் பற்றி விசாரித்து, “சாப்பிட்டு உட்கார்ந்து பேசுங்க” என்றழைக்க, உணவு முடித்து சிறிது நேரம் பேசி அவர்களிடமிருந்து விடைபெற்றான் ப்ரேம்.

அண்ணன் சென்றதும், “உங்களுக்கு ரொம்ப வேலை இல்லையா அத்தை. நான் வேற உங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் மாதிரி நிறைய வேலை வைக்கிறேன். எனக்கும் மாத்திரை மருந்துன்னு, ப்ச்... கண்ணுக்கு சரியானதும் உங்களுக்கு ஃபுல் ரெஸ்ட் அத்தை. எல்லா வேலையும் நானே பார்க்கிறேன்” என்றவளுக்குத் தெரியாது சொன்ன வார்த்தையை காப்பாற்றப் போவதில்லையென்று.

“எனக்கொண்ணும் கஷ்டமில்லமா. இது சாதாரணமா பண்ற வீட்டு வேலை தான அதுவும் சமையல் மட்டும்தான் நான். மத்ததுக்கு ஆள் இருக்கு. காலை நேர பரபரப்பு முடிஞ்சா சும்மா உட்கார்ந்து சுவற்றை வெறிக்கப் போறோம். உனக்கு சரியானதும் நாம ரெண்டு பேருமே சேர்ந்து பார்த்துக்கலாம்” என்றதும் சம்மதமாகத் தலையசைத்தாள்.



முதல் நாள் வேலைக்குச் சென்ற சாதனாவிற்கு கம்பெனியின் தோற்றம் மனதிற்கு நிறைவைத் தந்தது. ஐடி கம்பெனிகளில் முதன்மையான இடத்திலுள்ள கம்பெனியில், கேம்பஸில் செலக்ட் ஆவதென்றால் அதற்காக அவளின் உழைப்பு எந்தளவு இருந்திருக்கும். உள்ளே சென்று மேனேஜரைக் கேட்டு அவரை முதலில் பார்த்து, அப்பொழுதும் இன்டர்வியூ வைத்தே தேர்வு செய்தார்கள்.

சாதனாவிற்கு ட்ரெயினிங் பீரியட் என்பதால், ஒரு டீமில் ஜாய்ண்ட் செய்து அடிப்படை வேலைகளைக் கற்றுக் கொடுக்கச் சொல்ல, அந்த டீம் லீடர் ராஜ் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டான். முதல் நாளே சக தோழிகளின் பேச்சும், அவர்களின் நட்பான பழக்க வழக்கங்களும் பிடித்துப்போக, கல்லூரியில் ஒரு சிலர் ஐடி பீல்ட் அப்படி இப்படி என பயமுறுத்தியது போல் ஒன்றுமில்லை என்றானதும், மனதினுள் நிம்மதியாக உணர்ந்தவள் வேலையையும் கவனத்துடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

மாலையில் வேலை முடித்து வீடு வந்தவள் வேலையைப் பற்றியும், தன்னுடைய டீம் மெம்பர்ஸ் பெயர் சொல்லி, நல்லவங்க வல்லவங்க என்று புகழ்ந்து, கம்பெனியின் பிரம்மாண்டத்தையும் புகழ்ந்து வீட்டிலுள்ளவர்களை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தாள்.

“என்ன தேவிமா காதுல ரெத்தம் வருதா?” என மாமியார் கேட்க...

“அத்தை! இதை நான் எப்படி சொல்ல முடியும்னு நினைக்கிறீங்கன்னு என்கிட்ட கேட்குறீங்க? என்னயிருந்தாலும் அவ என்னோட நாத்தனார்” என மருமகள் பதிலளிக்க...

“யூ டூ அண்ணி? வந்துமா நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உங்களை கவனிச்சிக்கிறேன்” என்று தன்னறைக்குச் சென்றாள்.

இரவு உணவு வேளையின் போது மாலையில் மாமியார் மருமகளிடம் சொன்ன விஷயங்களை ஒரு எழுத்து மாறாமல் அண்ணனிடம் சொல்ல, கணவனிடம் குனிந்த சுபா, “ஒய் ப்ளட், சேம் ப்ளட்” என்றாள்.

மனைவியின் சொல்லில் சிரித்தவன், “சாதுமா இப்படியா எல்லாரையும் பேசியே மிரளவைப்ப. பாரு உங்கண்ணி முகத்தை எதையோ குடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா” என்றதும் கணவனின் கையை தன் கையால் இடித்தாள்.

பின், அண்ணனாக வேலை செய்யும் இடத்திலுள்ள சரி தவறுகளை கேட்டுக் கொண்டவன், “பார்ட்டி அது இதுன்னு கூப்பிட்டா போகக்கூடாது. வெளியிடங்கள்ல எதையும் வாங்கி சாப்பிடாத. நம்மகிட்ட நல்லா பேசறாங்கன்றதுக்காக யாரையும் ஈஸியா நல்லவன்னு நம்பிடக்கூடாது! அது கேர்ள்ஸா இருந்தாலும் சரி. உன்னுடைய லிமிட் என்னன்னா என்னன்னு ஒரு ஸ்மைலோட முடிச்சிரு. அப்படியிருந்தா உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க” என்றான்.

“ம்... புரியுதுண்ணா. கண்டிப்பா இதையே ஃபாலோ பண்றேன். நானும் எத்தனை நியூஸ் பார்க்கிறேன் படிக்கிறேன் நான் கேர்ஃபுல்லா இருக்கேன்ணா.”

“குட்” என்றவன் தங்கையின் தலையை வருடி, “அதுக்காக உன்னை எல்லாரும் சிடுமூஞ்சி சொல்வாங்க பரவாயில்லையா சாது” என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.

“ஏன் சிடுமூஞ்சி சொல்லணும்? என் முகம் பார்த்தா அப்படியா தெரியுது?”

“இல்லடா செல்லம். நீ ஒரு வரியில பதில் சொல்லி முடிச்சிட்டன்னா, சே... கூட ஒரு வார்த்தை பேசுனா குறைஞ்சா போயிருவா, சரியான சிடுமூஞ்சி அப்படின்னு சொல்லாம, சிரிச்ச மூஞ்சியா சொல்வாங்க?” என்று சத்தமாக சிரித்தான்.

“அண்ணாஆஆ...” என்றவள் அவனை அடிக்கத் துரத்த... அவர்களின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த சுபாவிற்கு, கணவன் மேலிருந்த மதிப்பு இன்னும் கூடி, ‘இவன் என் கணவன்’ என்ற எண்ணத்தை ஆழ பதித்தது.

உணவு முடித்து ஹாலில் வந்தமர, சாதனா தன் பள்ளிக்கால, கல்லூரிக்கால கலாட்டாக்களை எடுத்து விட்டு கடைசியில் வேலை செய்யுமிடம் வர அனைவரும் காதை மூட, கடுப்பானவள் “இருங்க என் கதையையும் கேட்க யாராவது அப்பாவி மாட்டுவாங்க அப்ப பார்த்துக்கறேன்” என்றாள்.

“பாவம் அந்த அப்பாவி” என்ற ஜீவா தன் பள்ளிக்கால வாழ்க்கை சொல்லாமல் தன் கல்லூரி கால கலாட்டாக்களையும், தற்பொழுது வேலை செய்யுமிடத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் சொல்ல விழுந்து விழுந்து சிரித்தவர்களுக்கு ஜீவா நன்றி சொல்ல...

“போடா! உன்னை கிண்டலடிச்சி சிரிக்கிறோம். நீ என்னடான்னா நன்றி சொல்ற” என்றார் வந்தனா.

“சிடுமூஞ்சிகளைச் சிரிக்க வச்சிருக்கேனே. அது என்னோட வெற்றி தான வந்துமா” என்று அவர் கால் வாரினான்.

“அடப்பாவி அப்படின்னா இப்படின்றியா?” என சாதனா அடிக்கவர... மனைவியிடம் திரும்பியவன் “உன்னோட லைஃப் ஹிஸ்டரியை கொஞ்சம் அவிழ்த்து விடுடா தேவி. உன்னோட ஸ்கூல் பற்றி சொல்லு? என்னென்ன கலாட்டா பண்ணின?” என கேட்டான்.

“நான்லாம் ஒண்ணும் கலாட்டா பண்ணல. நான் நல்ல பொண்ணாக்கும்” என்று தலைநிமிர்த்தி சொன்னாள்.

“சரி சரி. நீ நல்லவ வல்லவ நாங்க ஒத்துக்கறோம். இருந்தாலும், ஸ்கூல், காலேஜ் லைஃப்ல இன்ட்ரஸ்டிங்கா எதாவது நடந்திருக்கும்ல அதைச் சொல்லு கேட்கலாம்.”

“சரிங்க. ஆனா, நான் சொன்ன பிறகு என்னை கேலி பண்ணக்கூடாது” என்றதும் மற்றவர்கள் சம்மதிக்க... “ஸ்கூல் பற்றிச் சொல்லணும்னா எனக்கு அங்க ஒரே ஒரு எனிமி தான் இருந்தான். நான் படிச்சது முழுக்க, ஜீவதேவி மெட்ரிகுலேஷன் ஹையர் செகன்டரி ஸ்கூல்” என்றதும் மூவரும் சுபாவை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஏனென்றால், அது அவர்களின் சொந்தப்பள்ளி.
 
Top