- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
4
திருமணத்திற்கு ஐந்து நாள்களேயிருந்த வேளையில், கார்த்திகாவிற்கு ஆபீஸிலிருந்து போன் செய்தான் சுபாஷ். புது நம்பரென்பதால் எடுக்காமல் விட, மறுபடியும் அடித்ததும் யாரென்றுதான் பார்ப்போமே என்று எடுத்து காதில் வைக்க வைத்த செகண்ட்...
“ஏய் போன் வந்தா எடுக்கிற பழக்கமில்லையா? கல்யாணத்தை நிறுத்த என்ன பண்ணியிருக்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு போன் பண்ணினா எடுக்கமாட்டேன்ற” என்று எரிந்து விழுந்தான்.
‘ம்... உன் மூஞ்சி இதுல வரல.’ சொல்ல வாய்திறந்தவள், “இது அன்நோன் நம்பர் உன்னோடதுன்னு தெரியாது. பசங்கதான் நீ எதோ ஏற்பாடு செய்திருக்கிறதா சொன்னாங்க. அப்புறம் ஏன் என்கிட்ட கேட்கிற. நீ இருக்கியேன்னுதான் நான் எதுவும் பண்ணல.”
“லூசு என் சைடு பெய்லியரானா, உன் சைடு சக்சஸாக சான்ஸ் இருக்குல்ல. அப்புறம் அதென்ன வா போன்னு சொல்ற. நான் உன்னைவிட பெரியவன். மாமா பையன்கூட. சோ, மரியாதையா பேசு ஓகே.”
‘சரிடா’ என மனதில் சொல்லி, “சரிங்க” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்.. மரியாதை கூட உன்கிட்ட கேட்டு வாங்க வேண்டியிருக்கு. இந்த லட்சணத்துல நமக்கு கல்யாணமாம் வெளங்கிடும்.”
“நான் இதுவரை யாரையும் மரியாதைக் குறைவா நடத்தினதில்ல.” அவளின் வேகமான பதிலில்...
“அப்ப என்னைப் பார்த்தா உனக்கெப்படி தெரியுது?” என்றான் காட்டமாக.
போனை சற்று தள்ளி வைத்தவள், “சாரி இனி இப்படி பேசல” என்றாள் மனதார.
‘என்னடா இவ எதைக்கேட்டாலும் சரின்னு சொல்லி மேல பேசி சண்டைபோட வாய்ப்பு குடுக்கமாட்டேன்றா. டேய் சுபாஷ் இது கூட நல்லாத்தான்டா இருக்கு. சிக்கினாடா உனக்கொரு அடிமை’ என மனம் மத்தளம் கொட்டியது.
வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் அமர்ந்து, “அப்பா அந்த சுபாஷ் என்னை எப்பப்பார் விரட்டிட்டேயிருக்கான். என்னாலல்லாம் அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எதாவது பண்ணுங்கப்பா.” அழப்போகும் குழந்தையாய் பேச...
“கார்த்திமா, சொன்னா தப்பா எடுத்துக்காத. என்னடா அன்னைக்கு அப்பா அப்படி குதிச்சாங்களே, இன்னைக்கு ஏன் மாத்திப் பேசுறாங்கன்னு. உண்மையிலேயே சுபாஷ் நல்ல பையன்மா.”
“அந்த நல்ல பையன்தான் என்னை மிரட்டுறானாப்பா?” என்றாள் அவன் மேலுள்ள கோபத்தை தந்தையிடம் காட்டி.
“அது மனசுல உள்ள ஏமாற்றத்தால பண்றது. உன்னைத்தவிர வேற யார்கிட்டேயும் அப்படி பேசினதில்ல. இதை மிரட்டலா எடுத்துக்காம உரிமைப்பேச்சா நினைச்சிப்பாரு. அதுவுமில்லாம இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு அவனுக்கும் தெரியும். வீட்ல யார்கிட்டேயும் உன்னை கட்டிக்கமாட்டேன்னு குதிக்க முடியல. தெரியாமல் செஞ்சாலும் அவன் பண்ணினது தப்புன்னு அவனுக்கே தெரியும். தன்னோட ஆதங்கத்தை உன்கிட்ட காட்டுறான். சரி அவன் பேசுறான்னு பதிலுக்கு நீ பேசாம இருந்தியா என்ன?”
“இல்லப்பா திரும்ப திட்டத்தான் செய்றேன். வெளியில கொஞ்சம் மனசுக்குள்ள கொஞ்சம்னு.”
“நீ எந்த உரிமையில் திட்டுற?” என்றார் மகளை நேராகப்பார்த்து.
“அ..அது மாமா பையன்ல. அதனால தான்பா” என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.
“இந்த மாமா பையன்ற உறவு எப்பல்லயிருந்து கார்த்திமா?”
“அப்பா அது தெரியலப்பா. நீங்க கேட்டதும் சொல்ல தோணிச்சி.”
“உனக்குத் தெரியுமாடா, போன வருஷம் நம்ம கீர்த்தியோட சீனியர் ஸ்டூடண்ட் ஒருத்தன் கீர்த்தியை டார்ச்சர் பண்ணிட்டிருந்திருக்கான். நைட் பின்னாடியிருந்து அழுதுட்டிருந்தவகிட்ட வித்யா விசாரிச்சா. வேற யார்கிட்டேயும் சொல்ல முடியாததை அவகிட்ட சொல்ல... அவ சுபாஷ்கிட்ட சொல்லி, ஒரே நாள்ல அந்த பிரச்சனையை பெரியவங்க காதுக்கு வராமலேயே தீர்த்து வச்சிட்டான். இது யாருக்கும் தெரியாதுன்னு அப்படியே மறைச்சிட்டாங்க. ஏன் உனக்கே நான் சொல்லி இப்பத்தான தெரியுது.”
“நான் அவங்க பேசிட்டிருந்ததைக் கேட்டுட்டிருந்தேன். சுபாஷால முடியலன்னா நாம பார்த்துக்கலாம்னுதான் சைலண்ட்டா இருந்தேன். அதுக்கு அவசியமேயில்லாமல் பண்ணிட்டான் என் மருமகன். அதே மாதிரி ஆசிரமத்துல வர்ற சில பிரச்சனைகளை பேசுற இடத்துல பேசி தட்டுற இடத்துல தட்டின்னு சரி பண்ணிருறான். உனக்கு நல்ல கணவனாகவும், நல்ல காவலனாகவும் இருப்பான்மா” என்றார் மகளின் தந்தையாய்.
“அப்பா.. ஆனாலும்...”
“இன்னும் என்னடா?”
“என்னை கருவாச்சின்னு சொல்றான்பா. நான் என்ன கருப்பாவாயிருக்கேன்?” எனறாள் அழுகுரலில்.
“அது உன்னை கோபப்படுத்தச் சொன்னது. அவனோட இயலாமையை பெரியவங்ககிட்ட காண்பிக்க முடியலை. அதை உன்கிட்ட கொட்றான்.”
“கல்யாணத்தை நிறுத்தப்போறதா அவன் பசங்ககிட்ட சொல்லியிருக்கான்பா” என்றாள்.
“பார்த்தியா! உன்னோட பெரியவனை வார்த்தைக்கு வார்த்தை அவன் இவன்னு பேசுற?”
“சாரிப்பா” என தலைகவிழ்ந்த மகளின் தலையை வருடி, “அவன் பிள்ளைங்ககிட்ட பந்தா காட்ட சொல்லியிருப்பான்மா. அப்படில்லாம் பெரியவங்களை மீறி எதுவும் செய்யமாட்டான். அவனை வேற யாராவோ பார்க்காம உன் வருங்கால புருஷனா, மாமா பையனா பாரு எல்லாம் சரியாகிடும்.”
“ம்..சரிப்பா.”
“போமா. எதையும் போட்டு கன்ஃப்யூஸ் பண்ணிக்காம சாப்பிட்டு படுத்து தூங்கு” என்றனுப்பினார்.
இரவில் தங்கையும் ஜாடைமாடையாக அவனைப் புகழ, ‘நல்லவன்தானோ!’ என மனதில் முதல் முறையாக நினைத்தாள். தூக்கம் வராமல் எதற்கோ இமேஜை ஓபன் செய்து வரிசையாக போட்டோஸ் பார்த்தவள் கண்களில், அவனின் புகைப்படமே வரிசையாக பட்டது. இத்தனை போட்டோ தன் செல்லில் எப்படி என யோசிக்க, அருகில் படுத்திருந்த தங்கைதான் காரணமென்று புரிந்தது.
அதே நேரம் அவனுடனான அன்றைய இரவுகளின் நினைவுகளும். ‘சே.. அவங்களா என்னை வந்து கட்டிப்பிடிச்சாங்க. நானாதான குளிருதுன்னு போனேன். அவங்களுக்கு அது கனவாகத்தான தோன்றியிருக்கும்.’ தங்கை என்று அவனை நெருங்கி அணைத்தபடி படுத்தது மனக்கண்ணில் தோன்றி முகம் சிவக்கச் செய்தது.
‘இவங்களை வேண்டாமென்று சொல்லும் நான், வேறொருவனை திருமணம் புரிந்தால் இந்த மாதிரி, ச்சீ..ச்சீ.. அசிங்கம்’ என நினைக்கும் போதே மனம் அவனை ஏற்றுக் கொண்டது புரிந்தது. தான் எதற்காக அவனிடம் அடங்கிப் போகிறோம் என்றதற்கும் காரணம் புரிய, புது கண்ணோட்டத்துடன் கணவனாகப் போகிறவனைப் பார்த்தாள்.
அவன் நின்றிருந்த தோரணையும், அந்த சிரிப்பும் அவள் மனதைக் கொள்ளை கொண்டது. “ம்..சொஞ்சோண்டு அழகாத்தான் இருக்க நீ.” நினைவுகள் வார்த்தைகளாய் வெளியே வர நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு காலை திருமண பத்திரிக்கையை கம்பெனியில் அனைவருக்கும் கொடுத்து சுபாஷ் வெல்கம் செய்யவும், நண்பர்கள் அவனிடம் பெண்ணின் போட்டோ கேட்க, தன் செல்லில் இல்லையென்று சொன்னவனுக்கு நிச்சயத்தன்று வித்யா போட்டோ எடுக்க செல் கேட்டது நினைவுவர, போனை எடுத்து கேலரியைப் பார்த்தான்.
கார்த்திகா செல்லில் முழுக்க இவனென்றால், சுபாஷின் செல்லில் முழுவதும் அவளின் புகைப்படங்களே! பல்வேறு கோணங்களில் போட்டோ எடுக்கப்பட்டிருந்தது. பார்த்ததுமே தெரிந்தது அனைத்தும் அவளறியாமல் எடுத்ததென்று.
நண்பர்கள் செல்லைப் பிடுங்கி, “வாவ்! சிஸ்டர் சூப்பரா இருக்காங்கடா” என புகழ...
“என்னது இந்த கருவாச்சி அழகாயிருக்காளா? இவனுங்க என்ன லூசா!” மனதினுள் நினைத்ததை மறைத்து நன்றி சொல்லி சிரித்தான்.
“உனக்கு ரொம்ப மேட்சிங்டா. பார்த்தாலே தெரியுது ரொம்ப அமைதியான டைப்னு. அதான் வீட்ல பார்த்ததும் செலக்ட் பண்ணிட்டாங்க போல.”
‘ஆமா வீட்ல செலக்ட் பண்றாங்க. என்னோட தூக்கம் செலக்ட் பண்ணின பொண்ணுன்னு வெளியில சொன்னா இவனுங்க என்னை ஒருவழி பண்ணிட மாட்டாங்களா.’ மனம் அவனைக் கேள்வி கேட்க அதைத் தட்டிவிட்டு, “சரிடா மேரேஜ்கு டென் டேஸ் லீவ் போட்டிருக்கேன். நீங்க ஸ்ட்ரெய்ட்டா செங்கல்பட்டு வந்து என்னை கூப்பிடுங்க. இல்லன்னா நேரே மண்டபத்துக்கே வந்திருங்க” என்றான்.
பத்திரிக்கை வைத்து முடிந்ததும் வீட்டிற்கு செல்ல பஸ்ஸில் ஏறியமர்ந்தவன் செல்லில் உள்ள போட்டோவைப் பார்க்க, என்ன பார்த்தும் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதைப் பார்த்தபடியே கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்தான்.
“யார் தம்பி புதுப்பட ஹீரோயினா? சூப்பராயிருக்காப்பா! நம்ம சினி ஃபீல்டுல எங்கயிருந்துதான் பொண்ணுங்களை பிடிப்பாங்களோ தெரியல. ஹ்ம்.. நாமெல்லாம் இவ்வளவு அழகு புள்ளைங்களை இப்படி போட்டோவுலதான் பார்த்துக்க முடியும்” என்றார் ஏக்கமூச்சோடு.
அவர் பேசியது சுபாஷிற்கு பிடிக்காமல் போக, “ஹலோ! இவள் என் அத்தை பொண்ணு” என்றான் கடுப்பாக.
“சாரி தம்பி. பொண்ணு அழகாயிருந்ததா அதான். இந்த மாதிரி பொண்ணுங்க கிடைக்கிறது கஷ்டம். முடிஞ்சா நீயே கல்யாணம் பண்ணிக்கோ. இல்லன்னா யாராவது முந்திடப்போறான்.” தன் மனதிலுள்ளதை சொல்லியபடி நகர்ந்தார்.