- Joined
- Aug 31, 2024
- Messages
- 460
- Thread Author
- #1
4
இன்று:
“அம்மாஆச்சீஈஈ... ரெடியாஆஆஆ... நான் ரெடியாகி அரைமணி நேரமாகுது” என வேகமாக அலறினாள்.
“இருமா. இதோ வந்திடறேன்மா.”
“ஆமா வந்திருறேன்னு சொல்லியே கால்மணி நேரமாகப் போகுது. வயசுப்பொண்ணு நானே இவ்ளோ குய்க்கா கிளம்பிட்டேன். உங்களுக்கு ஏன் இவ்ளோ லேட்டாகுது. ஹ்ம்... மேக்கப்பை கம்மி பண்ணச் சொன்னா கேட்குறீங்களா?”
கதவு திறந்து வெளியே வந்து அவள் காதைத் திருகிய லோஜி, “நீ ஒரு மணிநேரம் மேக்கப் பண்ணினதை நான் வெளியில சொன்னேனா? நீ மட்டும் ஏன் தெருவே வேடிக்கை பார்க்கிற மாதிரி கத்திச் சொல்ற?”
“ஹான் அது அப்படித்தான். ராசிக்கு பொறுமைன்றதே கிடையாது. ப்ச்... அதைவிட்டு என்னைப் பாருங்க அம்மாஆச்சி. ராசி எப்படியிருக்கா?” என புருவம் உயர்த்திக் கேட்டபடி சிரித்தாள்.
சிரிக்கும் பேத்தியையே பார்த்திருந்தவர், “என் ராசாத்திக்கு என்ன குறைச்சல். அழகுன்னா அழகு அப்படியொரு அழகு” என கையால் திருஷ்டி கழித்தார் லோஜி.
“ஹை.. ஹை இதான வேணான்றது. நான் ரொம்பல்லாம் அழகில்லைன்னு தெரியும். நீங்க புளுகு மூட்டையை அவிழ்த்து விடவேண்டாம்.”
“சரிமா பாஸ்மார்க் ஒரு எய்ட்டி போட்டுருறேன் ஓகேவா?”
“எய்ட்டி இருக்கேனா? நான் ஜஸ்ட் பாஸ்னு நினைச்சேன். சரி சரி வாயடிக்காம கோவிலுக்கு கிளம்புங்க டைமாச்சிது.”
“உன்னை... நான் வாயடிக்கிறேனா!” என அவளின் தலையில் தட்டி, “கண்டிப்பா சீக்கிரம் போகணும். இல்லன்னா அம்மன் கோவிச்சிப்பாங்க.”
“நோ ப்ராப்ளம் லோஜி நான் லஞ்சம் குடுத்து சரி பண்றேன்.” பேசியபடியே இருவரும் வீட்டைப் பூட்டி காருக்கு வந்தனர்.
“அத்தை நானு வரேன்” என்றபடி ப்ரீடா குட்டி வர... ராசி ஜெபிதாவைப் பார்க்க... “உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்னா கூட்டிட்டுப் போ ராசி” என்றாள் அவள்.
“ஹேய்! நான் கோவிலுக்குப் போறேன்.”
“ஸோ வாட்?”
“இல்ல உ..னக்கெதுவும்...” என இழுத்தவளை நேராக பார்த்த ஜெபிதா “நோ ப்ராப்ளம் ராசி. பாப்பாவைக் கூட்டிட்டுப் போ” என்றாள்.
“தேங்க்ஸ் ஜெபி. உன்னை மாதிரி எல்லாரும் இருந்தா மதப்பிரிவினையே வராது.”
சிரித்தபடியே “ஏதோ என்னால முடிஞ்ச சின்ன மாற்றம்” என்றாள்.
அந்த சிரிப்பை தான் வாங்கி, “ப்ரீ டார்லிங் வாங்க போகலாம்” என்று மூவரும் சற்று தள்ளியிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைப் பொருள் வாங்கி காலணிகளைக் கழற்றி உள்ளே வர, யாரோ தன்னைத் தொடர்வது போன்ற பிரமை ஏற்பட்டது.
சுற்றிலும் பார்வையால் துளாவியவள் கண்களில் எதுவும் சிக்காமல் திரும்பி கோவிலினுள் நுழைந்து விநாயகரை தரிசித்து அம்மன் சந்நிதிக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுத்தார்கள்.
ஐயர் ஆரத்தியுடன் முன்னே வர பக்தியுடன் தொட்டு வணங்கி நிமிர்ந்தவள் கண்கள் கனலைக் கக்கியது எதிரிலிருந்தவனைப் பார்த்து. கண்களில் கோபம் கரைபுரண்டோட கடவுளை வணங்கி பிரகாரம் சுற்றி வெளியே வந்தவள், அடக்கிய கோபத்துடன், “அம்மாஆச்சி நீங்க பாப்பாவைக் கூட்டிட்டு கார்ல போயி உட்காருங்க. எனக்கு ஒரு சின்ன வேண்டுதல் இருக்கு இதோ வந்திருறேன்.”
‘எனக்குத் தெரியாம என்ன வேண்டுதல்?’ என மனதில் நினைத்தாலும், “சரிமா சீக்கிரம் வா. வெயில் கொளுத்துது” என்றார்.
“ம்.. சரி” என்றவள் மனதினுள், ‘நானும் கொளுத்தத்தான் தேடுறேன்’ என அவனைத் தேடினாள். அவளுக்குத் தெரியாமல் வருவதாக எண்ணி பதுங்கியபடி வாசல்படி வந்தவன் “ஓம் சக்தி” என்ற கோஷத்தில் நிமிர்ந்து பார்க்க.. அதற்குள் காலைப் பிடித்தபடி ‘ஆ’ என்றலறி படியிலேயே அமர்ந்து காலைத் தடவினான்.
“என்ன பக்தா கால் வலிக்குதா? குறி தப்பாம அடி கரெக்டா பட்டிருக்கு போல?”
‘ம்...’ என தலையாட்டி பின் அர்த்தம் புரிந்து நிமிர்ந்தவன் கண்முன் ராசி நிற்க, பதறி எழுந்தவனை... “ஏன்டா எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ திருந்தமாட்டியா? படிக்கிற வயசுல சைட்டா அடிக்கிற? உன்னை...” என்று அவனை அடித்து புரட்டி எடுத்தாள்.
காருக்கு சென்று கொண்டிருந்த லோஜியின் காதில் விழுந்த சத்தத்தில் திரும்பி வந்து, “ஏய் ராசிமா. என்னடாயிது நடுரோட்டுல? வா வீட்டுக்குப் போகலாம்.”
“நீங்க போய் காருக்குள்ள உட்காருங்க அம்மாஆச்சி. இதோ வந்திடறேன். ரொம்ப நாளாவே என்கிட்ட வாலாட்டிட்டிருக்கான். எத்தனை தடவை வாயால வார்ன் பண்றது. அதான் இன்னைக்கு கையால வார்ன் பண்றேன். இனி ஜென்மத்துக்கும் பொண்ணுங்க இருக்கிற பக்கம் பார்க்கவே கூடாது.”
“ராசிமா இருந்தாலும்...”
‘மூச்..’ என்று அவரை அடக்கி காரில் உட்கார வைத்து அவனிடம் நெருங்கி அடிக்க கை ஓங்க... அனாயாசமாக ஒரு கை அவளைப் பிடித்து தன்னிடம் சேர்த்து இழுத்தது. அந்த திடீர் இழுப்பில் தடுமாறி இழுத்தவன் மேலேயே விழப் பார்த்தவள் தன்னை சுதாரிப்பதற்குள்...
“போதும்ங்க பையன் இதுக்குமேல் தாங்கமாட்டான்” என்றான் இழுத்தவன்.
காலை தரையில் பதித்து நிதானமானவள், எவனோ ஒருவன் தன்னைப் பிடித்திழுத்ததில் கோவம் வந்து, “முதல்ல கையை விடுறீங்களா?” என அவனிடமிருந்து கையை உருவியபடி, “பெருசா பேச வந்திட்டீங்க? இவனையெல்லாம் நல்லா போட்டு மிதிக்கணும்” என்றாள்.
“கூல் மேடம். எதுக்கு எமோஷனலாகுறீங்க?”
“பின்ன என்னங்க.. இவன் எங்க தெருதான். அதிலும் என்னைவிட சின்னப்பையன் வேற. அறிவு வேண்டாம். நிறைய முறை தப்பு பண்றன்னு திட்டியிருக்கேன். அப்படியிருந்தும் என்ன தைரியமிருந்தா.. ராஸ்கல்.. இவனை” என திரும்பவும் அடிக்கப்போக...
அதற்குள் மற்றொரு கையால் அவளைத் தடுத்து, பின்னால் ஒரு கையால் சைகை காண்பித்து அவனை ஓடச் சொல்ல... “ஏய் நில்லுடா! ஓடாத. ஓடுன கொன்னுருவேன்” என சத்தமிட்டவள், தன்னைத் தடுத்தவனிடம் திரும்பி, “ஏன் அவனைத் தப்ப விட்டீங்க? என்ன ஆணுக்கு ஆண் சப்போர்ட்டா? பொதுவா இப்படி டைம்ல பொண்ணுக்குத்தான சப்போர்ட் வருவீங்க? இப்ப என்ன.. புது டெக்னிக்கா?” என கோபமாக அதட்டினாள்.
“இப்பக்கூட உங்களுக்குத்தான சப்போர்ட் பண்றேன்” என்றவனை புரியாமல் ராசி பார்க்க... “அதையெல்லாம் சொன்னா உங்களுக்கு இருக்கிற கோவத்துல புரியாது. ஆமா, அதான் உங்க தெருன்றீங்கள்ல அப்புறம் அவங்க அம்மாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ண வேண்டியது தானங்க?”
“அதையெல்லாம் செஞ்சாச்சி சார். அவங்க சொல்லத்தான் செய்வாங்க. இவன் அடங்கணுமே. அவனோட அக்கா என்னோட க்ளாஸ்மேட். இவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் சுத்துறான் ஏன்டான்னு கேட்டா நடிகர் தனுஷ், ப்ளேயர் சச்சின் டெண்டுல்கரோட சேர்த்து இன்னும் நாலஞ்சு பேரை சேம்பிள் காட்டி மேரேஜ் பண்ணிக்கலாம்னு கேட்குறான்.”
“ஓ...” என்று விஷயத்தை கிரகித்தவன், “சரிங்க நீங்க கிளம்புங்க எல்லாரும் பார்க்கிறாங்க” என்றான்.
“பார்த்தா எனக்கென்ன? வேடிக்கை பார்க்கிறவங்களா அவனோட டார்ச்சரை தாங்குறாங்க. நான்தான அவனோட அசட்டுச் சிரிப்பையும், வழியுற வழிசலையும், எப்பப்பாரு யாரோ நம்மளை ஃபாலோ பண்றாங்களேன்ற ஃபீலையும் தாங்குறேன்.”
அவளின் வார்த்தையில் வந்த சிரிப்பை அடக்க படாதபாடு பட்டவன், “ஹலோ மிஸ் போதும். இனி அவன் உங்க சைடு வரமாட்டான். நீங்க போங்க” என்று சமாதானப்படுத்தி அனுப்பி கோவிலைப் பார்த்தவன் உள்ளே சென்றவர்கள் திரும்பி வருவதைப் பார்த்ததும் காரை நோக்கிச் சென்றான் சரத்.
காருக்குள் அமர்ந்தவளிடம், “யார்மா அது?” என்று லோஜி கேட்க...
“யாருக்குத் தெரியும். பஞ்சாயத்து பண்றேன்ற பெயர்ல அந்த ராக்கியை அனுப்பிட்டாங்க. இன்னொரு டைம் அந்த ராக்கி என் கையில மாட்டட்டும் பார்த்துக்கறேன்” என பல்லைக் கடித்தபடி காரை ஸ்டார்ட் செய்தவள் கண்களில் தன்னைத் தடுத்தவன் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது பட, “மவனே உனக்கு இருக்குடா ஒரு நாள். என்கிட்ட மாட்டாமலா போவ!” மனதினுள் கரித்துக் கொட்டியவள் அவனருகே ஒரு பெண் வந்து உரிமையாய் விபூதி வைத்து விடுவதைக் கண்டாள். ஏனோ அதற்கும் கோபம் வந்தது.
“இடியட்ஸ் இதென்ன வீடா. ஒண்ணு கோவிலுக்கு உள்ளயிருக்கும் போது வச்சிவிட்டா வித்தியாசம் தெரியாது. நடுரோட்டுல வயசுப்பொண்ணு வச்சி விடுறா. அப்படியே நிற்கிறான். இவன் என்னை மட்டம் தட்டுறானா.”
“ஏன் ஒய்ஃபா கூட இருக்கலாம்” என்ற மனச்சாட்சியிடம்,
“ஒய்ஃபா இருந்தா மட்டும் நடுரோட்டுல ரொமான்ஸ் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்களா என்ன?”
“உனக்கு ஏன் புகையுது?” என்ற மனதிடம்,
“ஹான்.. அந்த ராக்கியை ஓட வச்சான்ல அதான்” என்றபடி கொந்தளித்த மனதை, ‘ராசி கூல் கூல்’ என்று சமாதானப்படுத்தினாள்.
“அத்தை ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றீங்களா?” என்ற குரலில் இளகுவாகி...
“ஓ... வாங்கித் தர்றேனே. உங்கம்மா என்னை அடிக்காமலிருந்தா” என்றாலும் ஐஸ்க்ரீம் பார்லர் நோக்கி காரை விட்டாள்.
“என்னாச்சிடா? ஏன் உள்ள வரல?”
“இல்லக்கா ஒரு பொண்ணு அவள்கிட்ட வம்பு பண்ணின பையனைப் போட்டு வெளுத்துக் கட்டினா. இவன் வேற ஆளே சரியில்லை. பின்னாடி இதை மனசுல வச்சிட்டு, இப்பவரை சும்மா சுத்திட்டிருந்தவன் இனிமேல் தப்பா எதாவது முடிவெடுத்தா, உயிர் பிரச்சனையாச்சே. அதான் அவனை ஓடவிட்டு அவளை சமாதானப்படுத்தி அனுப்பினேன்” எனும்போது தான் அந்தப் பெண் தீபா விபூதி பூச.. ராசி அவர்களைப் பார்த்தது.
“சரி கார்ல ஏறுங்க.”
“சரிடா. குட்டிமா கல்யாணத்தைப் பற்றி பேசத்தான வந்தோம். பையன் எப்ப வர்றான்?”
“எப்ப வர்றான் இல்ல. வந்தாச்சி. பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னதாலதான் நான் உங்களை வரவழைச்சேன். ஊருக்குப் போயிட்டா பார்க்கவோ, பேசவோ சந்தர்ப்பம் கிடைக்காதாம். ரொம்ப ஃபீல் பண்றாப்ல அதான் ஒரு சின்ன ஏற்பாடு. அப்படியே தீபாவுக்கு நகையும் புடவையும் இங்கேயே எடுத்திரலாம்னுதான் வரச்சொன்னேன்” என்றான்.
“இதெல்லாம் ஓவர் சாரே. பொண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வந்த காலம் போயி, இப்ப நாங்க மாப்பிள்ளையை பார்க்க வரணுமோ?”
“அதானடா.. அவங்க வீட்ல நம்மளை தப்பா எடுத்துக்க மாட்டாங்களா?”
“அதெல்லாம் எடுத்துக்க மாட்டாங்க. இதுல எந்த ப்ராப்ளமும் வராது. எல்லாம் சொல்லிதான வரவழைச்சேன். அப்பல்லாம் மண்டையை ஆட்டிட்டு, இப்ப என்ன வந்தது. என்னை நம்பி இந்த சம்பந்தத்தை தைரியமா குட்டிக்கு முடிச்சி வைக்கலாம்.”
“ஓகே சாரே.”
“ஏய்! என்னது சாரே மோரேன்னுட்டு?” சரத் தீபாவை அதட்டல் போட...
“ம்க்கும்... நீங்க மட்டும் குட்டின்னு சொல்லலாமா?” என சிணுங்கினாள்.
“ஓகே வாபஸ். சரி வாங்க ஹோட்டல்ல போயி மாப்பிள்ளையை மீட் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம்.”
“அது வீடா? உங்க ஆபீஸ் ரூம்ல பெட்டை தூக்கிப்போட்டா அது வீடாகிருமா சாரே?”
“திரும்பவுமா” என சரத் அவளை முறைத்து, “நான் என்ன பண்ண முடியும் சிங்கிள் பெர்சன் எனக்கெதுக்கு தனி வீடு. அதான் ஆஃபீஸ்லயே தங்கிக்குறேன்” என்றான்.
“என்னவோ போடா. நாங்களும்தான் டபுளாகிருன்னு சொல்றோம். காதுல வாங்கினால் தான” என தன்பாட்டில் புலம்பினார்.
அதைக் காதில் வாங்காதவன் அந்த ஹோட்டலை நோக்கி காரை விட்டான்.
“ஆமா. இதைக் கேட்டா மட்டும் வாய் திறந்திராத” என அக்கா முனகுவது காதில் விழுந்து மறுவழியாக சென்றது.
‘ஷப்பா.. ரெண்டு காது கடவுள் ஏன் படைச்சார்னு இப்பத்தான தெரியுது’ என சரத் மனதில் நினைத்தது தனிக்கதை.
அடையாரிலுள்ள ரெஸ்டாரண்டில், “அம்மாஆச்சி இவளுக்கு ஒண்ணு போதும். அதிகம் குடுத்தா ஜெபி திட்டுவா. ஒரே ஒரு சாக்லேட் ஐஸ்க்ரீம் தான்.”
“அத்தை எனக்கு ஸ்ட்ராபெர்ரி வேணும்?”
“சரி சரி இரு சர்வ் பண்றவங்க வரட்டும். வாங்கித் தர்றேன்” எனும்போது வந்த பையனிடம், “ஒரு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம். ஒரு காஃபி” என்றாள்.
“ராசிமா உனக்கு?”
‘ம்கூம்...’ என தலையாட்டி, “எனக்கு லோஜி கையால போடுற பூஸ்ட் மட்டும்தான் வேணும். நீங்க நான் சொன்னதை எடுத்துட்டு வாங்க” என்றனுப்பினாள்.
இவர்களின் பின்புறமிருந்த இடத்தில் சரத்தின் குடும்பம் வந்தமர்ந்தது.