• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் 4

New member
Joined
Mar 19, 2026
Messages
5
டேய் வெற்றி இன்னும் எதன நாள் தான் சொல்லாம இருக்க போறன் நீ? என்றான் சூர்யா.

வெற்றியோ சற்று நேரம் யோசித்தான் எனக்கு என்ன பண்றதுன்னு தெரிளடா. அத்த இவ்ளோ சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்கன்னு தெறில. அதுவும் ஏற்கனவே அவளே அந்த மகேஷ் விஷயத்தில் பயத்தில் இருந்து வெளில வரல. இந்த நேரத்தில் நானும் அவளை தொல்லை பண்ற மாதிரி இருக்காதா டா. அதுவும் இல்லாமல் அவல நம்ப வீட்ல ஒத்துப்பாங்களா சொல்லு என்றான் வெற்றி.

அப்போ இது எல்லாம் தெரிஞ்சும் எதுக்குடா இப்டி பண்ற. கண்டிப்பா அவ தான் சூர்யா என்னோட பொண்டாட்டி என்று கூறிய வெற்றியின்

அழுத்தம் சூர்யாவை பேச விடாமல் செய்தது. சரி டா பாத்துக்கலாம் விடு. நம்ப இத ரொம்ப கவனமா பண்ணனும் என்று மேலும் இதர கதைகளை பேசிவிட்டு அண்ணனும் தம்பியும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

வெற்றியை அவன் வீட்டில் விட்டு அருகில் ஒட்டி கட்டப்பட்டிருக்கும்

தன் வீட்டுக்குள் நுழைந்தான் சூர்யா. வீட்டுக்கு சென்றதும் மகேஷ்வரி தான் தன் பிள்ளைக்கு உணவு அலித்துவிட்டு போய் படுத்தார்.

சாப்பிட்டு முடித்தவன் தன் அறையில் இருந்த ஸோபாவில் அமர்ந்து வெற்றியின் விஷயத்தை யோசித்தான். அவன் மனதில் நாளை வெற்றியின் திருமணத்துக்கு என்ன செய்வதென்று தீர்மானிக்கலாம் என்று நினைத்தவன் உறங்க சென்றான்.

இப்படி ஒரு வாரம் கடந்த நிலையில் முகேஷ் மீண்டும் காயத்ரி முன்பு நின்று இருந்தான். காயத்ரியின் முகம் பதட்டத்தை காட்டினாலும் அவனை பார்த்துவிட்டு அருகில் சென்றவள் அவனிடம் முகேஷ் நீ எனக்கு ஒரு பிரென்ட். உண்ண அப்படியெல்லாம் என்னால நினைக்கமுடில என்றுவிட்டு அவள் செல்ல எத்தனிக்கும் நேரம்

அவள் கையை பட்ரியவன் காயு நீ எனக்கு வேணும். எனக்கு நீ ஓகே சொல்லணும் என்று பிடிவாதமாய் நின்ரவனை பார்க்கும்போது இது என்ன பைத்தியமா பேசறான் என்று நினைத்தவள் ஒருவாறு அவனது கையை தன் மணிக்கட்டில் இருந்து எடுக்க போராடி கொண்டு இருந்தாள்.

அப்போது ஒரு வலிய கரம் முகேஷின் மணிக்கட்டில் ஒரு முறை இறுக்கி பிடிக்க வலி தாங்காமல் அவன் காயத்ரியின் கைகளை விட்டுவிட்டான்.

யாரென்று பார்த்தால் காயத்ரி அது சூர்யா என்றவுடன் அவனை நன்றி கலந்து பார்க்க அவளை ஆதரவாக தோல் பட்ரிகொண்டால் தீபிகா.

அவளுக்கு அது சற்று சமாதானமாக இருக்க அப்படியே சூர்யா அடிப்பதை கண்டு பதரியவல் கூட்டம் கூடுவதை கண்டவள் அவன் அருகில் சென்று விடுங்க எல்லாரும் பாக்குறாங்க விடுங்க என்று அவனை எவ்வளவு இழுத்துச் செல்ல முயன்றாலும் முகேஷ் ஐ ஒரு வழி செய்து விட்டுதான் நகர்ந்தான்.

திரும்பியவன் தீபிகா நீ கிளாஸ் போ அவ வருவா என்றான். சரி அண்ணா என்று தீபிகா செல்ல காயத்ரியை முறைத்தவன் அறிவில்லை இப்படித்தான் அஜாகரதையா இருப்பியா என்று கூற அவளோ அவனை பார்ப்பதையே தவிர்த்தால். எப்டி நிர்க்குறா பாரு என்று முணுமுணுத்து சென்றுவிட்டான்.

அவன் போன பின் தனக்காக காத்திருக்கும் நண்பியிடம் சென்றவள் அவளை கட்டியணைத்து அழுதாள். தீபிகாவுக்கு அவள் தலையை கோதிவிட சற்று நேரத்தில் அழுகை நின்றது. பின் இருவருமே வகுப்பு செல்ல மனமின்றி கேன்டீன் சென்று குளிர்பானம் பருகினர்.

காயத்ரியின் முகத்தை பார்த்த தீபிகாவுக்கு தன் நண்பியை நினைத்து கவலையாக இருந்தாலும் பேச்சை மாற்றும் பொருட்டு ஏண்டி அன்னைக்கே சொன்னன் என்ன டி எப்டி பேசறான் அப்டின்னு சொன்னதுக்கு அதெல்லாம் அவன் புறிஞ்சிப்பண்ணு சொல்லிட்டு அந்த முகேஷ் பண்ண வேலைய பாத்தியா ஆனா அவன் பயத்துல முழிச்ச முழி இருக்கே அத நெனச்சா கன்ட்ரோல் இல்லாம சிரிப்பு வருது எங்க காயத்ரியும் சிரித்து கொண்டால்.

இருவரும் ஒரு கிளாஸ் கடந்தே வகுப்புக்கு வந்தனர். அதன் பிறகு நேரம் செல்வதே தெரியவில்லை.

ஆனால் முகேஷ் காயத்ரியை அடையும் வெறியில் இன்னும் வெறி பிடித்த போல அமர்ந்திருந்தான்.

காயத்ரி கிரிஜாவிடம் எதுவும் சொல்லவில்லை.

இப்படியே நாட்கள் நகர அன்று கிரிஜாவின் முகம் கலக்கமாக இருப்பதை கண்ட இரு மகள்களும் என்னம்மா என்ன ஆச்சு என்றனர்.

அவரோ பெருமூச்சு விட்டபடி நான் இன்னைக்கு ஜோசியர் பார்த்தேன் அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா என்று கூற என்ன சொன்னாரு என்றனர் இருவரும். கல்யாணம் சொந்தத்துல தான் ரெண்டு பொண்ணுக்கும் நடக்கும் அதுவும் ரெண்டாவது பொண்ணுக்கு தான் முதல கல்யாணம் நடக்கும்னு சொல்றாரு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உடனே காயத்ரி அட நீ ஏன் மா பயபடுற நம்பதான் ஒரு சொந்தம் விடாம சண்ட போட்டு இருக்கொம் இல்ல அப்பறம் எப்டி மா இது நடக்கும் என்று கேட்க கிரிஜாவின் முறைப்பை கண்டு சரி ஒன்னும் இல்ல விடு சும்மா எதையாவது நெனச்சு பதராத என்றுவிட்டு தன் தாயுடன் சீரியல் பார்த்து வில்லிகளை மூவரும் திட்டி தீர்க அப்போதுதான் கிரிஜா சாதாரணம் போல இருந்தார்.

மகள்களிடம் காட்டி கொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு பயம் இருந்துகொண்டு தான் இருந்தது. இப்படியே நாட்கள் கடக்க காயத்ரி தன் புராஜக்ட் விஷயமாக தீபிகாவுடன் அலைந்து கொண்டிருந்தாள். அவள் வேலையில் கவனமாக இருந்தவள் மறுபடி முகேஷ் ஐ கான நேர்ந்தால் நடப்பது என்னாவோ??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top