• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
23



சுபாவிற்கு ஏழாவது மாதமாக, வாந்தி நின்று முகத்தில் அழகு கூடுதலாகத் தெரிந்தது. வயிற்றிலிருக்கும் சிசு அழகுக்கு அழகு சேர்த்தது. அது தாய்மை அவளுக்களித்த பரிசு.

எப்பொழுதும் போல மனைவியையே விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருந்த ஜீவா, “ஹ்ம்... இப்படியே பொண்டாட்டியை பார்த்தே ஏங்குவதுதான் விதியா கடவுளே! கொஞ்சம் விதியை மாற்றி எழுதேன்!” அவனின் புலம்பல் அவருக்கு கேட்டதுபோல் உடனே தேவதைகள் “ததாத்சு” சொல்லியது.

“ஸ்... தேவதைகளே! ஏன் அவசரப்பட்டு ததாத்சு சொல்லிவிட்டீர்கள்? சொல்வதற்கு முன் என்னிடம் கேட்டிருக்கலாம் அல்லவா?” கடவுள் அவர்களைக் கடிய... தேவதைகள் தலைகவிழ்ந்து, “இனி இந்தத் தவறு நடக்காது கடவுளே! இப்பொழுது சொல்லியாகிற்று! அடுத்த கதையில் வேண்டுமானால் தங்களிடம் கேட்டு சொல்கிறோம். இந்த ஜோடிகளை சீக்கிரம் சேர்த்து வையுங்கள்” என்றதும், “தங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது” என்று கடவுள் ஆசி வழங்கினார் ஜீவா-சுபா தம்பதியருக்கும் சேர்த்து.

“வளைகாப்பு இந்த மாதம் வைக்கலாம்” என்று வந்தனா சொன்னார்.

சுபா மாமியாரிடம் வந்து, “அத்தை நான் அங்கல்லாம் போகல. அப்பா, அம்மா என்மேல கோபத்துல இருக்காங்க. உங்க பையனோட சேர்ந்து வாழலன்னா வீட்டுக்குள்ளயே வரக்கூடாது சொன்னாங்க. நான் எப்படி அங்க போறது? என்னால முடியாது” என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

“தேவிமா! பெத்தவங்க பொண்ணோட லைஃப் கேள்விக்குறியாகிடக் கூடாதுன்னு இரண்டொரு வார்த்தை கூடுதலா பேசுறதுதான். அதுக்கெல்லாம் உன்னை வெறுத்துட்டதா அர்த்தமா. உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க. அதாவது என்னோட மருமகளை எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கறேன். வளைகாப்பு முடிஞ்சி முணாவது நாள் வீட்டுக்கு வந்திரலாம் ஓகேவா.” மனமில்லாமல் சுபா சம்மதிக்க... “நீ எப்பவும்போல இரு. நான் போயி நல்லநாள் பார்த்துட்டு வர்றேன்” என்று காலண்டர் பார்த்து பதினைந்து நாள் கழித்து வரும் வளர்பிறை நாளில் தேதி குறித்தார்.

ஜீவாவும், சுபாவும் கணவன், மனைவியென்று பள்ளியில் யோகாவைத் தவிர இன்னும் யாருக்கும் தெரியாது. சுபாவின் மனமாற்றத்திற்குப் பின் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

காலையில் போன்வர அழைப்பை எடுத்த ஜீவாவின் முகம் பளிச்சென்றானது. “நிஜமா? இல்ல சார் தப்பா எதுவும் இருந்திறக்கூடாதில்லையா. அதான் கன்பார்ம் பண்ணிக்க கேட்டேன். ஓகே சார் தேங்க்யூ.” பேசி முடித்து போனை வைத்தவனுக்கு, ‘ஹேய்!’ என்று சிறுவனாய் துள்ளிக்குதித்த மனதை அடக்கி அப்பாவிற்கு கோன் செய்து விஷயம் சொல்ல... “ஆமாவாடா?” என நம்பாமல் கேட்டவரிடம், “நான் கன்பார்ம் பண்ணிட்டேன் டாட்” என்றான்.

அதன்பின் மாமனார், மச்சானுக்கும் விஷயத்தை சொல்ல எதிரில் அவர்கள் ஆர்ப்பரிக்கும் சந்தோஷமும் தெரிய, புன்னகையுடனேயே போனை வைத்து, மனைவியிடம் நேரில் பார்த்துச் சொல்லக்கிளம்பினான்.

எதிரே வந்த அகிலாவிடம் கேட்க, “அவ ஸ்டாப்ஸ் ரூம்ல இருக்கா சார்” என்றாள்.

“ஏன்மா சார் சொல்லி தள்ளி வைக்கிறீங்க. அழகா அண்ணா சொல்லலாம்ல?”

“கூப்பிடலாம் சார். நீங்க எப்ப உங்க ஒய்ஃபோட சேர்ந்து வாழ்றீங்களோ அப்ப. இந்த சார் எனக்குமே வித்தியாசமாயிருக்கு. அதோட நீங்க சொல்ற ‘ங்க’ கூட வித்தியாசமாயிருக்கு. நான் உங்களை அண்ணான்னு கூப்பிடுறதுக்காகவாவது சுபாவோட சீக்கிரம் சேர்ந்திடுங்க சார்” என அப்பாவியாய் முகம் வைத்துச் சொன்னாள்..

அதில் சிரித்தவன் “தங்களின் வாக்கு நல்வாக்காகட்டும் சிஸ்டர்” என்று ஆசிரியர்களின் ஓய்வு அரை நோக்கிக் கிளம்பினான். வகுப்பு நேரம் என்பதால் சுபா மட்டும் அங்கிருந்த சேரிலமர்ந்து புக் படித்துக் கொண்டிருந்தவள் உடல் சோர்வில் டேபிளில் தலைசாய்ந்து கண்ணயர்ந்திருந்தாள்.

ஜீவா உள்ளே நுழைகையில் அவளின் அமைதியைக் கெடுக்காது அருகிலமர்ந்து தலைவருட, “ம்... சிவா ஐம் ஸ்லீப்பிங். டோண்ட் டிஸ்டர்ப் மீ. இன்னும் டென் மினிட்ஸ் சிவா பளீஸ்” என குழந்தையாக மிழற்ற, அந்த ஒன்பது வயது சுப்பு அவன் கண்முன் வந்து போனாள். சின்ன சிரிப்புடன், “கனவில் கூட நான்தானா! அப்புறம் எப்படி பேபி தூங்குற?” என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

சட்டென்று விழித்தவள் திகைத்தபடி அமர்ந்து, “நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்றாள்.

“ஹ்ம்... உன்னோட சேர்ந்து கபடி விளையாடலாமான்னு பார்க்கிறேன்.”

“ப்ச்... ஸ்கூல்ல வச்சி என்ன விளையாட்டுங்க?” என முடிந்த மட்டும் அவனை முறைத்தாள்.

“ஹேய்! ஆரம்பிச்சிராத தாயே. நான் உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் வந்தேன்.”

“என்ன பெரிய குட் நியூஸ்?” சற்று சலிப்பாகவே கேட்க...

“பெரிய குட் நியூஸ்லாம் இல்ல தேவி. பெரிய பெரிய குட் நியூஸ். ஜீவதேவி மெட்ரிக் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான அவார்ட் கிடைச்சிருக்கு” என்று சத்தமாக சொல்ல...

“நிஜமாவா?”

“கன்பார்ம். வளைகாப்புக்கு ஒருநாள் முன்னாடி அவார்ட் பங்ஷன். கலக்டர் முன்னிலையில் லயன்ஸ் கிளப்ல வச்சி. நேரமிருந்தா கல்வி அமைச்சர் வர்றேன்னு சொல்லியிருக்கார்.”

“உண்மையிலேயே பெரிய குட் நியூஸ்தான்” என்று கணவனின் கன்னத்தில் முத்தமிட்டு, “நான் எல்லாருக்கும் சொல்லிடுறேன்” என்று வெளியே செல்லச் சென்றவளை... கைபிடித்து தடுத்து “நான் குடுத்ததை திருப்பித் தந்துட்டுப்போறியா?” என கேட்டான்.

“என்னது?” என விழித்தவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, கன்னத்தைக் காட்டி இதைத்தான் சொன்னேன்.

“அ...அது தெரியாம ஒரு ப்ளோல வந்திருக்கும்.”

“ஹா...ஹா ப்ளோல” என்று சிரித்தவன் “ப்ளோல வார்த்தைதான் மாறும் கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன முத்தம்லாம் வருது?” என வினயமாக வினவினான்.

“இப்ப என்ன? குடுத்தது தப்புன்றீங்களா? சாரி இனிமேல் குடுக்கலை.” என்று மலையேறினாள் அவனின் சுப்பு.

‘ம்கூம்... இனி பழைய பஞ்சாங்கம் ஆரம்பிச்சிடுவா’ என்று அவள் கையைவிட்டு, “ஈவ்னிங் டீச்சர்ஸ் மீட்டிங் வச்சி சொல்லிக்கோ. நான் அங்க பார்த்துக்கறேன்.” விட்டால் போதுமென்று இடத்தைக் காலி செய்தான். விழாவிற்கு இரண்டு பள்ளி ஆசிரியர்களையும் வரவேற்றிருந்தார்கள்.

மாலையில் நடக்கவிருக்கும் விழாவிற்கு வரவேற்பு வேலைகளை விவேக்கும், ராஜனும் பார்க்க... வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாக விழாவிற்குத் தயாராகினர்.

வீட்டில் குழப்பத்துடன் சுற்றிக் கொண்டிருந்தாள் சுபா. அன்று அகிலா சொன்னதிலிருந்து தனிமையிலிருக்கும் சமயங்களில் யோசித்துப் பார்த்ததில் அவள் சொல்வது உண்மைதானோ என்று தோன்றியது. என்னவென்று தெரியவில்லை ஏதோ ஒரு குழப்பம். ஆம் குழப்பம் மட்டுமே அருகிலிருந்தால் கணவனை வெறுத்து விடுவோம் என்றவளுக்கு மாதங்கள் ஆக ஆக, அதாவது குழந்தைப் பிறப்பு நெருங்க நெருங்க மனதிற்குள் அவளறியாமல் ஒரு ஏக்கம், அந்த ஏக்கம் இயற்கையும் கூட. ஏமாற்றம், தனிமை, எதையோ இழந்த உணர்வு, எதிலும் பிடிப்பில்லாமல் விட்டேற்றியான ஒரு மனநிலை ஏற்பட்டது. அதை எப்படி சரி செய்வதென்றும் புரியவில்லை. யாரிடமும் சென்று தன் நிலைமையை பகிரவும் விரும்பவில்லை.

என்ன, ஏதென்று விசாரித்த மாமியாரிடம், “ஒண்ணுமில்லை அத்தை கொஞ்சம் டயர்ட் அவ்வளவுதான்.” சொல்லியவளுக்குள்ளும் ‘அவ்வளவுதான் வேறெதுவுமில்லை. கூல் சுபா கூல். என்ன டென்சன் உனக்கு? நீ எதையும் குழப்பிக்காத’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

மனைவியின் நிலைமையை அவளறியாமல் பார்த்திருந்தவன் அவளை சேர்த்தணைத்து ‘நானிருக்கிறேன்’ என்று சொல்லத்துடித்த மனதை அடக்கினான்.

வீட்டில் அனைவரும் கிளம்ப, “நீங்க போங்க நான் வர்றேன்” என்று அனுப்பியவன், மனைவியை சரி செய்வதைப்பற்றி யோசிக்கலானான். “சே... பேசாம சைக்காலஜி படிச்சிருக்கலாம்டா ஜீவா நீ. படிச்சிருந்தா தேவி பிரச்சனையை எப்படி தீர்க்கலாம்ன்ற வழி தெரிஞ்சிருக்கும்” என்றான்.

“உன்னை யாரு படிக்க வேண்டாம்னு சொன்னது. இப்ப போயி படி.” அவனின் மனசாட்சி கேட்டது. “ம்... செய்யலாமே.” எனவும் “சே... டேய் ஜீவா போதும் அலட்டாம எதாவது பண்ணு. கடவுளே இன்னுமா என் பிரச்சனை தீரல” என வாய்விட்டுப் புலம்ப...

‘த”ரும் தீரும்” அசரீரியாய் ஒருகுரல் கேட்டது.

“கடவுளே! நீயா பேசியது?”

“ஆமாடா கடவுள்தான். பெயர் கூட ஹரி” என்றதும் சட்டென திரும்பிப் பார்த்த ஜீவா, “ஹரி வாட் எ சர்ப்ரைஸ்?” என்று தோழனை அணைத்துக் கொண்டான்.

“சர்ப்ரைஸ்லாம் இல்ல நேத்தே அப்பா, அம்மாவை ஷாப்பிங்ல பார்த்தேன். விஷயத்தை சொல்லி வீட்டுக்கு வரச்சொன்னாங்க.”

“ஓ... என்கிட்ட சொல்லவேயில்லை. சரிவிடு வேலை பிஸியில மறந்திருப்பாங்க. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம இந்தியா வந்திருக்க? எதாவது விசேஷமா?”

“அதெப்படிடா கரெக்டா சொல்ற? அம்மா ஒரு பொண்ணைப் பார்த்து அவளைத்தான் முடிக்கணும்னு ஒரே அடம். நானும் சரின்னு பார்த்து சம்மதம் சொல்லிட்டேன்.”

“சிஸ்டர் பேர் என்னடா?”

“சீவிதா! என் ராசிக்கு ஃப்ரண்டும், பொண்டாட்டியும் எனக்கு வராத லெட்டர்லதான் வரணும்னு இருக்கும்போல.”

“ஹா...ஹா ஜீவிதாவா! டேய்! நீ சீவிதான்னு சொல்லி அது புரியாம சிஸ்டர் உன்கிட்ட பென்சில் சீவிதரவான்னு கேட்கப்போறாங்கடா. எனிவே கங்க்ராட்ஸ்” என்றான் சிரித்தபடியே.

“என்னோட அவஸ்தை உனக்கு நக்கலாயிருக்கு. ஆமா எல்லாரும் பங்ஷன் போயிட்டாங்களா?” ஜீவா சம்மதமாக தலையசைக்க... “ஏன்டா முக்கியமானவன் நீ இங்கயிருக்கிற. வா போகலாம்” என்று அழைத்துச் சென்றான்.

வீட்டிலுள்ளவர்கள் உள்ளேயிருக்க, சுபா மட்டும் வரவேற்பிலேயே மற்ற ஆசிரியர்களுக்கு விஐபிகளை வரவேற்க சின்னச்சின்ன வேலைகள் கொடுத்தபடி நின்று கொண்டிருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“நீ உட்காரு சுபா நான் பார்த்துக்கறேன்” என்ற அகிலாவிடம், “பரவாயில்லடி. இந்த டைம் வேலை பார்க்கிறது உடம்புக்கு நல்லதுதான். நீ போயி மத்தவங்களை கவனி” என்றாள்.

அதேநேரம் இன்னோவா உள்ளே நுழைவதைப் பார்த்தவள், “கரஸ் வந்தாச்சி. ஜனனி மிஸ் நீங்க பொக்கே கொடுங்க. அப்புறம் கலக்டரோட யார் வந்தாலும் அவங்களையும் கொஞ்சம் கவனிங்க” என்றாள்.

“ஓகே மேம் நாங்க பார்த்துக்கறோம்” என்றார்கள்.

ஹரி காரை தான் பார்க் செய்து வருவதாக சொல்லி ஜீவாவை முதலில் அனுப்ப, வரவேற்பில் உள்ளே நுழைந்தவனையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள் சுபா. ஃபுல்ஹேண்ட் ஒய்ட் சர்ட், ப்ளாக் கலர் பேண்ட். அந்த ட்ரஸ் அவனுக்கு பெரிய மனித தோரணையை கொடுத்தது. ‘அழகன்டா சிவா நீங்க’ என மரியாதை தேய்ந்தும், வளர்ந்தும் வந்தது. மற்ற ஆசிரியைகளின் கண்களிலும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்க, “சே... இந்த சிவா எனக்கு மட்டும் அழகா தெரியக்கூடாது” என முனகிக் கொண்டிருக்க,

ஜீவா சுபாவினருகில் வந்து, “சுப்பு நல்லா பாரு. நான் உனக்கு மட்டும்தான் அழகன். அவங்களுக்கில்ல” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.

கணவனின் பதிலில், ‘எஸ் எப்பவும் எனக்கு மட்டும்தான் அழகன்’ மனதினுள் நினைக்க, அதற்குள், ஜனனி மிஸ் பூங்கொத்து கொடுத்து வெல்கம் செய்ததை, தலையசைத்து ஏற்று பார்வையில் சுபாவை வருடியபடி உள்ளே நகர்ந்தான் ஜீவா.

“டேய் சிவா! ஒரு நிமிஷம் நில்லு நானும் வர்றேன்” என்றழைத்தபடி ஹரி வர, “சிவா” என்றதும் சுபா ஆச்சர்யமாகத் திரும்பி பார்த்தாள். அதற்குள் ஜீவாவினருகில் வந்தவன், “எங்கடா உன் ஒய்ஃப்?” என கேட்டான்.

“ஸ்... மெல்லடா அதோ அந்த ஸ்கை ப்ளு கலர் டிசைனர் சாரிதான்டா.”

சுபாவைப் பார்த்தவன், “ப்ரெக்னண்டா இருக்கிறாங்களா? எத்தனையாவது மாசம் சிவா?”

“ஏழுடா’” என்றதும் வேகமாக சுபாவினருகில் வந்து “சாரி சிஸ்டர். உங்க மேரேஜ்கு வர முடியல. அதனால லேட் வாழ்த்துக்கள்” என்று கையிலிருந்த அன்பளிப்பைக் கொடுக்க... இதை தன்னுடன் வரும்போது பார்க்கவில்லையே என்பதுபோல் ஜீவா நிற்க... “மச்சான் இதையெல்லாம் இப்படித்தான் சீக்ரெட்டா குடுக்கணும்டா” என்றான் நண்பனின் காதருகில்.

“பரவாயில்ல நன்றி. ஆமா நீங்க யாரு?”

“நான் ஹரி. சிவாவோட சின்ன வயசு ஃப்ரண்ட்.”

“ஓ... அந்த ஜி பார்ட்டி நீங்கதானா?”

“ஆமாங்க சிஸ்டர்” என்றதும், “நைஸ் டூ மீட் யூ ப்ரதர்” என்றாள் சுபா.

சக ஆசிரியைகள் “சுபா மேம் உங்க ஹஸ்பண்ட் யாரு? எங்கயிருக்காங்க?” என முதல்முறையாக கேட்க... சட்டென்று திணறியவள் என்ன சொல்வதென்று தெரியாமல் ஜீவாவை சமாளிக்கச் சொல்லி பார்த்தாள்.

மனைவியின் பார்வையிலிருந்த தவிப்பைக் கண்டவன், “ஹரி இது தெரியாதா சிவாதான்” என்று சொல்ல வாயெடுக்க, அவன் வாய்மூடி “இன்னும் இரண்டு நாள்ல நீங்க நேர்லயே பார்ப்பீங்க” என்று ஹரியை இழுத்துக்கொண்டு செல்லும் வழியிலேயே மேலோட்டமாக தேவையான விஷயங்களை மட்டும் தன் நண்பனுக்குச் சொன்னான்.

“என்ன இரண்டு நாள்ல தெரியப்போகுதா? எப்படி தெரியும்? அதுவும் எனக்குத் தெரியாம? சிவா சைடு ரீல் எதாவது ஓடுதா/. சே... லூசு நினைப்பு போகுது பாரு” என தன் தலையிலடித்துக் கொண்டாள்.

அருகிலிருந்த ஜனனி “மேம் உங்க ஹஸ்பண்ட் பத்தி சாருக்கு எப்படி தெரியும்? நீங்க சொல்ல வேண்டிய பதிலை ஜீவா சார் சொல்லிட்டுப் போறாரு?”

“அ...அது சார் என்னோட ரிலேடிவ்தான அதான் எனக்கான பதில் அங்கிருந்து வருது.” அந்தப்பெண் நம்பி தலையாட்டவும், ‘ஷப்பா...’ என மூச்சை இழுத்துவிட்டாள்.

“மேம் நல்லா சமாளிக்கிறீங்க” என யோகா சொல்ல... ‘நீயுமா?’ என்றவாறு சுபா பார்த்தாள்.

அடுத்தடுத்து விஐபிக்கள் வர... அனைவரையும் முறையாக வரவேற்று உள்ளே அனுப்ப... கலெக்டர் வரும் சமயம் ஜீவா-சுபா இருவரும் நின்று வரவேற்க, விழ இனிமையாக முடிந்தது.

கலெக்டர் சென்றதும் அங்கே ஒரு வட்டமேசை மாநாடு நடந்தது. என்ன கூட்டம் என்று அங்கு வந்த ஜீவா அங்கிருந்த ஆசிரியர்களைத் தாண்டி தன் மனைவி அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் சின்ன சிரிப்புடன், “நானும் உங்களோட உட்காரலாமா?” என்றதும்... “ஷ்யூர் சார்” என்று பல இனிய குரல்கள் கேட்டதும் மனைவியைப் பார்த்தவாறு அங்கேயே அமர்ந்தான்.

“சார் நாங்க கேட்கிறதை தப்பா எடுத்துக்கக்கூடாது” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தனர்.

“என்னை உங்க ப்ரண்டா நினைச்சி ப்ரீயா பேசலாம். சொல்லுங்க என்ன கேட்கணும்?”

“சார் உங்களுக்கு மேரேஜ்கு பார்க்கிறாங்களா?” என்று அங்கிருந்த ஆசிரியை ஒருவர் ஆரம்பிக்க...

“ஹா...ஹா அப்புறம் என் ஒய்ஃப் சம்முகம் எடு அந்த உருட்டுக் கட்டையைனு தூக்கிட்டு வந்திருவா பரவாயில்லையா?”

“உங்களுக்கு மேரேஜாகிருச்சா? சொல்லவேயில்லை” என்ற ஆச்சர்யக்குரல்கள் கேட்டு பின், மன்னிப்பு கேட்டு அனைவரும் வாழ்த்து சொன்னார்கள்.

சுபாவைப் பார்த்தவாறே, “ம்... என் ஒய்ஃப்கும் எனக்கும் சண்டை. அதனால சொல்லக்கூடாது சொல்லியிருக்காங்க.”

“வாவ்! சூப்பர் சார்!” ஒரு ஆசிரியை உற்சாகக்குரல் எழுப்ப...

“ஏங்க சண்டைன்றேன் சூப்பர்னு சொல்றீங்க?”

“ஊடலுக்குப் பின்னான கூடல்லதான் சார், காதல் டபுள் ஸ்ட்ராங்காகும்” என அந்த துடுக்கு ஆசிரியையும் பதில் சொன்னாள்.

“அட இருங்க டீச்சர்ஸ்” என்று இடைவெட்டிய பி.ட்டி வாத்தியார், “சார் உங்க ஒய்ஃப் முதல்ல எங்க, எப்ப பார்த்தீங்க? லவ்வோ, அரேஞ்ச்ட் மேரேஜா எதுவாயிருந்தாலும் அந்த டைம் தோன்றிய ஃபீலிங்கை அப்படியே ஃபீலிஙகா சொல்லுங்க சார் கேட்கலாம்.”

அதுவரை அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளியமர்ந்து அவர்களின் அரட்டையை சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்த சுபாவிற்கு, தனக்கு இதுவரைக்கும் விடை தெரியாத அந்த கேள்விக்கு ஜீவாவிடமிருந்து என்ன பதில் வருமென்ற ஆவலோடு திரும்பியமர்ந்து கணவன் முகம் கண்டாள்.

“இன்னைக்கு எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு தெரியுது” என்றவன் மனைவியின் கண்களில் கண்ட ஆவலில் வாய்திறந்தான். “எனக்கு மேரேஜாகி டென் மன்த் ஆகுது. எங்களோடது லவ் மேரேஜும் கிடையாது, அரேஞ்ச்ட் மேரேஜும் கிடையாது. அது ஒரு திடீர் திருமணம்.”

“வாவ்! இன்ட்ரெஸ்டிங்! மேல சொல்லுங்க சார்” என்று மற்றவர்கள் ஊக்க...

“என் மேரேஜ்கு ஒன்வீக் முன்னாடி பர்ஸ்ட் டைம் பார்த்தேன் என் தேவதையை. ஆனா, அதே நேரம் அவளுடைய விபத்துக்கும் நானே காரணமாகிட்டேன்.”

“நீங்களா? எப்படி?” என்பதுபோல் சுபாவின் பார்வையிருக்க...

“பெங்களுர்லயிருந்து திருவண்ணாமலைக்கு ஒரு மேரேஜ் பங்சனுக்கு வந்தோம். லாங் டிரைவ் அதனால காருக்கு டிரைவர் வச்சிட்டோம். செங்கல்பட்டு தாண்டி பைபாஸ்ல ஒரு ரெட்கலர் ஸ்கார்பியோவை முந்தி போனபோது அந்த காரும் இடையில் நுழைய டிரைவர் காரை வளைத்து ஆக்சிடெண்டை தவிர்த்திட்டாரு. அந்த காருக்குள்ள உள்ளவங்களுக்கு எதாவது ஆகியிருக்குமோன்னு கார் ஸ்பீட் கம்மி பண்ணச்சொல்ல, டிரைவரும் வேகத்தை குறைத்தபடி போக, அப்பதான் அந்த காரைப் பார்த்தேன். அதுலதான் என்னோட தேவி தரிசனமும் கிடைச்சது. அப்ப என்ன தோணிச்சின்னா?” அப்படியே அந்த நாளுக்கே சென்றான்.
 
Top