• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
22



‘பேசாமல் ஜீவாவுக்கு அந்த யோகாவை கட்டிவச்சிரலாமா’ என நினைத்தவள்... பின், “ச்சீய்... என்ன யோசனை சுபா இது. உனக்கே அதிகமா கொஞ்சம் அசிங்கமா தெரியலையா?” தன்னைத்தானே திட்டியபடி சேலை முந்தானையை கையில் வைத்து சுருட்டியபடி தவிப்புடன், ஹாலுக்கும் வாசலுக்குமாய் அலைந்து கொண்டிருந்தாள்.

மனைவியின் தவிப்பு புரிந்தவனாக மெல்லிய புன்னைகையுடன் அவள் கொடுக்க மறந்த காஃபியை க்ளாஸில் ஊற்றி பேப்பரையும் எடுத்துக்கொண்டு அமைதியாக ஹாலில் வந்தமர்ந்தான். அவளின் முகத்தைப் பார்க்கப்பார்க்க சிரிப்பு வந்தது ஜீவாவிற்கு. சிரித்தாள் திட்டுவாளென்று அமைதிகாத்தான்.

யோகா சரியாக எட்டு மணிக்கெல்லாம் தந்தையுடன் ஜீவா வீட்டிற்குள் நுழைந்தாள். இவள் நேற்று தூங்கவேயில்லை போல என ஜீவா, சுபா இருவரும் நினைத்தத்தில் இருவருக்கும் ஒற்றுமையே. “உட்காருங்க. காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள் சுபா.

“நேத்து பாப்பா தூங்கவேவிடலை தம்பி. அப்பா சீக்கிரம் கிளம்பணும் மறந்து ரொம்ப நேரம் தூங்கிறாதீங்கன்னு ஒரே தொல்லை. நீங்கதான் மாப்பிள்ளைன்னும் போது அந்த தொல்லையை தாராளமா பொறுத்துக்கலாம்” என்று அதற்கு ஒரு பெரிய விளக்கம் கொடுத்தபடி சிரித்தார்.

‘ஆமா ரொம்பதான் தாராளம்’ என்று அவர் பேச்சில் முகம் சுழித்தாலும், காஃபியை கொடுத்து நகர்ந்து நின்றாள்.

“சொல்லுங்க தம்பி. பெரியவங்க வந்தாச்சா? மேற்கொண்டு பேசலாம்தான? என் மகளுக்கு அம்மா கிடையாது. அதனால் கொஞ்சம் செல்லம் ஜாஸ்தி. இருந்தாலும் குடும்ப உறவுகளைப்பற்றி சொல்லித்தான் வளர்த்திருக்கேன். என் பொண்ணுன்றதால சொல்லல தம்பி. உண்மையிலேயே எங்க லட்சுமி நல்ல பொண்ணு” என்றார் சற்று பெருமையாகவே.

“சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க நினைக்கிறேன். அன்னைக்கு உங்க பொண்ணுகிட்ட பேசுறேன் அவங்களும் என்னை பேசவிடாம அவங்க மட்டும் பேசிட்டு போயிட்டாங்க. நீங்களும் பேசவிடாம பண்றீங்க?”

“சாரி தம்பி. இப்ப சொல்லுங்க என்ன விஷயம்?”

“எனக்கு கல்யாணமாகிருச்சி” என்று அடுத்து பேச வாய் திறப்பதற்குள்... “தெரியும் தம்பி. ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்கன்னும் தெரியும். விசாரிக்காம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பேனா. எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். என் பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு” என்று எதிரிலிருப்பவர் பேசுவதை முழுவதும் கேட்காமல் தொடர்ந்தார்.

“அச்சோ! கொஞ்சம் நிறுத்துறீங்களா. பிரிஞ்சா திரும்ப சேரமாட்டோம்னு நீங்களே முடிவு பண்ணிப்பீங்களா? இது தற்காலிகப் பிரிவுதான். நீங்க வேற பையனா பாருங்க போங்க சார்.”

“தம்பி அந்தப் பொண்ணு திரும்பிவராது. நீங்க தைரியமா போய் பேசலாம்னு சொன்னாங்க.”

“யார் சொன்னாங்க?”

“விசாரிச்சப்ப தெரிஞ்சது தம்பி.”

“ஏன் சார் என்னைப் பிடிக்கலையா? நான் அழகாயில்லையா? அதனாலதான் வேண்டாம்னு மறுக்குறீங்களா?” யோகா கலக்கத்துடன் கேட்டாள்..

“ஏங்க உங்களுக்கென்னங்க சூப்பராயிருக்கீங்க!” என்று அவளை வாய்விட்டுப் பாராட்ட... அப்பாராட்டலில் யோகா முகம் பளிச்சடித்தது.

‘லூசு! லூசு! சும்மாவே அவ இவங்கமேல போதையில இருக்கா. இதுல சூப்பராயிருக்கீங்கன்னு வேற சொல்லிட்டு இவங்க வேலைக்காக மாட்டாங்க. இவங்களை...’ கணவனெதிரில் போய் நின்றவள், “அறிவிருக்கா உங்களுக்கு?” என எடுத்த எடுப்பில் கேட்டு, “அவங்க ஏற்கனவே உங்கமேல க்ரஷ்ஷா இருக்காங்க. இதுல நீங்க வேற வர்ணிக்கிறீங்களோ! எஸ் ஆர் நோ சொல்றதுக்கில்லாம வழவழன்னு பேச்சை இழுத்தடிச்சிட்டிருக்கீங்க” என்று திட்டினாள்.

“நான் எஸ் சொல்லவா? நோ சொல்லவா தேவிமா?” என அப்பாவியாக மனைவியிடம் கேட்டவனை முறைத்து, “லூசா நீங்க. பேசத் தெரியலன்னா கம்முன்னு இருக்கலாம்ல. என்னை வெறுப்பேத்துறதா நினைச்சி ஒரு பொண்ணோட ஃபீலிங்ஸ்ல விளையாடுறீங்க” என்று கணவனை ஒருபிடி பிடித்து பின், கருணாகரனிடம் திரும்பி “இந்த கல்யாணம் நடக்காது சார். இவரோட ஒய்ஃப் டைவர்ஸ்லாம் குடுக்கமாட்டா. நீங்க வேற இடம் பாருங்க” என்றாள்.

“மேம் என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க? சாரைப் பார்த்து அறிவிருக்கான்லாம் கேட்குறீங்க? கல்யாணம் நடக்காதுன்னு வேற அபசகுனமா சொல்றீங்க? அதுவும் என் முன்னாடி. ரிலேஷன்னா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா?”

“அதை நீங்க கேட்க வேண்டிய அவசியமில்லை மிஸ்.யோகா சம்பந்தப்பட்டவர் என்னைக் கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கிறேன்.” யோகாவிடம் பேச பிடிக்காமல் கருணாகரனிடம் திரும்பி “அந்த பொண்ணோட அப்பா, அண்ணா யாரு தெரியுமா”’ என்று தன் அப்பாவையும், அண்ணனையும் பற்றி சொன்னாள்.

‘ரொம்ப பெரிய இடமாயிருக்கே’ என நினைத்தாலும், “அவங்க பெரிய ஆளுங்களா இருந்தா என்னமா, அந்த பொண்ணுதான் வாழ வரமாட்டேன்னு சொல்லியிருச்சாமே? அதுக்காக இவர் கடைசிவரை இப்படியே இருக்கணுமா என்ன?”

“சார் முதல் பொண்டாட்டி டைவர்ஸ் கொடுக்கலன்னா, அதுக்கப்புறம் எத்தனை கட்டினாலும் அதுக்கு அர்த்தம் வேற தெரியுமா? உங்க பொண்னை அந்தமாதிரி வாழவைக்கத்தான் ஆசைப்படுறீங்களா?” என வார்த்தைகளில் விஷத்தைத் தடவ...

“ஏய்! என்ன பேசுற நீ? அவரே அமைதியாயிருக்கும் போது உனக்கேன் கோபம் வருது?” யோகா கோபத்தில் கத்த...

“அவங்க அமைதியா இருந்ததாலதான் நான் அமைதியை கைவிட வேண்டியதாகிப் போச்சி. எனக்கேன் கேபம்னா கேட்கிற, உனக்கு கல்யாணம் முடிஞ்சி உன் புருஷனை எவளாவது மாப்பிள்ளை கேட்டு வந்தா தெரியும். ஏன் எனக்கு கோபம் வந்ததுன்னு.”

“புரியலையே!” என விழித்தவளிடம்...

“இதுக்குமேல புரியுற மாதிரி சொல்லணும்னா, இரு டெமோ காட்டுறேன்” என்று யோகாவிற்கு எதிர்புறம் நின்றிருந்த கணவனிடம் சென்று, அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க, வந்த சிறு தயக்கத்தையும் உதறி சட்டென்று இறுக்கியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

தன் உரிமைக்காக யோகாவிடம் சண்டையிடும் அவனுடைய சுப்புவை ரசித்துக் கொண்டிருந்த ஜீவா, ‘உன் மனசு சீக்கிரமே என்னை ஏற்றுக்கொள்ளும் சுப்பு. அந்த நம்பிக்கை எனக்கு இப்ப நிறையவே வந்திருச்சிடா.’ மனைவியின் பேச்சிலிருந்த உரிமையுணர்வில் தங்களின் பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடுமென்ற நினைப்பு ஒருவித மயக்கத்தை தர அதை அனுபவித்தவன் பின் சுதாரித்து, யோகாவைப் பார்த்து “தேங்க்ஸ்” என்று வாயசைத்தான்.

“இட்ஸ் ஓகே சார்” என்றாள் பதிலுக்கு அவனைப்போலவே.

கணவனை விட்டுவிலகி யோகாவிடம் திரும்பியவள், “ம்... இந்த டெமோ போதுமா? சந்தேகம்னா இன்னும் ஏழுமாசம் கழிச்சி வா. இதுக்கு ப்ரூஃப் குழந்தையா எங்க வீட்ல இருக்கும்” என்று அனைத்தையும் ஒரு வேகத்தில் பேசி, செய்து முடித்தவள் தான் அதிகமாக பேசுகிறோமோ, நினைத்த நொடி சட்டென்று நடந்த விஷயங்கள் கண்முன் தோன்ற, ஐயோ என்றிருந்தது சுபாவிற்கு.

கோபத்தில் யோகாவிடம், “எல்லாம் உன்னாலதான். முதல்ல இங்கயிருந்து போறியா?” கத்தியபடி தலையைப் பிடித்து அமர்ந்தாள்.

“சுப்பு” என்று அருகில் வந்தவனை கைநீட்டி தடுத்து, “சாரி ரியலி சாரி ஜீவா. நீங்க அவங்களையே மேரேஜ் பண்ணிக்கோங்க. நான் உங்களுக்கு வேண்டாம். என்னை மாதிரி ஒரு பிடிவாதக்காரி, கோபக்காரி, ரோஷக்காரி என்னைக்கும் உங்களுக்கு வேண்டாம்” என்று தன்னறைக்குள் நுழைந்து தாளிட்டாள் அவள் மனதையும் சேர்த்து.

ஜீவாவும் மனைவியின் திடீர் மாற்றத்தில் அதிர்ந்து தலையில் கைவைத்தபடி அமர... “என்ன சார் இப்படியாகிருச்சி? நல்லாதானே இருந்தாங்க?”

“ம்... நல்லாத்தான் இருக்கிறா. அதுக்குள்ள சில வேண்டாத நினைவுகள் வந்து எல்லாத்தையும் கெடுத்திருது. எனிவே தேங்க்யூ மிஸ். தேங்க்யூ சார்.”

“பரவாயில்லை தம்பி. உங்க ஒய்ஃப்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. விட்டுக் கொடுக்கவும் முடியாம, விட்டு விலகவும் முடியாம தவிக்கிறது அவங்க கண்ணுலயே தெரியுது. சீக்கிரம் சரியாகிடும் அப்ப நாங்க கிளம்புறோம்” என்று சென்றார்கள்.

அன்று பள்ளியில் தனியாக பேசியபொழுது, ‘டைவர்ஸ் வாங்குங்க’ என்று யோகா சொன்னதும், சட்டென்று கோபத்தில் எழுந்தவன் பின் வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாகி, அவள் சென்றதும் ப்ரேம்கு போன் செய்து பிரச்சனையின் தீவிரத்தைச் சொல்ல, அவன் ராஜனிடம் சொல்லி அந்தப் பெண்ணின் அப்பாவைத் தனியே சந்தித்து உண்மை சொன்னார்.

அன்று மாலையே ஜீவாவும், ப்ரேமும் யோகாவின் வீடு சென்று அவளைத் தனியாக சந்தித்து விஷயம் சொல்ல, மன்னிப்பு கேட்டவளிடம் இவர்கள் உதவி கேட்க அதன் பேரில்தான் அப்பாவும், பெண்ணும் வந்தது. ஆனால், வந்ததற்கு சரியாக அனைத்தும் முடிந்திருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம். இது தோல்வியைத் தழுவவும், மனைவியை எப்படி தன் வழிக்கு இழுப்பதென்று தெரியாமல் விழித்தான்.

அன்றே விவேகானந்தன், வந்தனா வர, அழுத முகத்துடனிருந்த சுபாவை விசாரிக்கவும் அவள் ஒன்றுமில்லையென்று நகர, மகனும் அதையே சொல்லி பட்டும்படாமல் பேசி நகரந்தான். “எத்தனை நாள் இவங்களுக்கு தனிமை கொடுத்தாலும் திருந்தமாட்டாங்க போலிருக்கே” என்று புலம்பத்தான் முடிந்தது அவர்களால்.

மறுநாளே சுபாவிடம் வந்து மன்னிப்பு கேட்ட யோகா. தான் சொன்னது ஜீவா சாரை அல்ல என்னுடைய உட்பி வெளிநாட்டுல இருக்காங்க என்று யோகா பள்ளியில் உள்ளவர்களிடம் கொளுத்திப்போட அதுவும் தீயாய் எறிந்து இரண்டு நாட்கள் புகைந்து மூன்றாம் நாள் இல்லாமலே போனது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அன்று காலையில் பள்ளிக்குச் சென்றதிலிருந்தே உடல் ஏதோ செய்ய சிறிது நேரம் சமாளித்தவளால் முடியாமல் போக, மதியம் மூன்று மணிக்கெல்லாம் விளையாட்டு மைதானத்தின் அருகிலிருந்த கட்டிடத்திலமர்ந்து காற்று வாங்கியபடி, பிள்ளைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தவளுக்கு தன் சின்ன வயது நியாபகங்கள் வந்ததும் உதட்டில் முறுவலும் வந்தது. பால் முகத்திற்கு சற்றும் பொருந்தாத முரட்டுத்தனம் காட்டிய சிவா வந்து “சுப்பு” என்றழைத்தான். சட்டென்று தலையை உதறி “சே... இதென்ன கண்டதையும் நினைச்சிட்டு” என்று திரும்பவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அவளறியாமல் அவளின் எண்ணவோட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தான் ஜீவா.

அதேநேரம் அங்கு வந்த அகிலா சுபாவினருகில் அமர, “அகி நான் படிச்ச இதே ஸ்கூல்ல பிரின்சிபலா இருக்கிறது எவ்வளவு சந்தோஷமாயிருக்கு தெரியுமா. நான் படிச்சப்ப இருந்த அதே ரூல்ஸ்தான். எக்ஸ்ட்ரா பில்டிங்ஸ் வந்திருக்கு. நாங்க நட்ட செடியெல்லாம் மரங்களா பார்க்க பார்க்க மனசெல்லாம் ஒருவித பரவசம் இருக்கு பாரு சொல்ல வார்த்தைகளே இல்ல.”

அதான் உன் முகத்துல பல்ப் எறியுறதைப் பார்த்தாலே தெரியுதே சுபா.

“நான் பிஃப்த் படிக்கும்போது சிவான்னு ஒரு பையன் என்னை வம்பிழுப்பான் பாரு, பயங்கரமா கோபம்வரும். இப்ப இந்த பசங்களையெல்லாம் பார்க்கும்பொழுது அது கூட அந்த வயசுக்கேத்த ஒரு அழகுதான் இல்லையா?’

“சிவா!” என அகிலா ஏதோ யோசனையில் கேட்க,

“ம்... சிவா!” என்றாள் சுபா.

“சிவா, ஜீவா பேர் பொருத்தம் கொஞ்சம் வித்தியாசம். தூரத்துலயிருந்து யாராவது கூப்பிட்டா இரண்டு நேமும் ஒரே டோன்லதான் ஒலிக்கும்.”

வேடிக்கை பார்ப்பதிலும் தோழியிடமும் கவனம் வைத்திருந்தவள் அகிலாவின் பேச்சில் திரும்பி, “ஹேய்... அகி. இப்ப என்ன சொன்ன?”

“சிவா, ஜீவா நேம் தூரத்திலிருந்து கூப்பிட்டா ஒரே டோன்ல வரும்னு சொன்னேன். இதுல என்னடி தப்பு கண்டுபிடிச்ச?” என்ற அகிலாவிற்கு முத்தமிட்டு, “எனக்கு ஒரு சந்தேகம் அகி. அதை க்ளியர் பண்ணிட்டு உன்கிட்ட பேசுறேன்” என்றபடி அலுவலக அறை நோக்கிப் போனவளை புதிராகப் பார்க்க... அவள் பின்னாலேயே ஜீவா செல்வது தெரிந்ததும், ‘என்னவோ நல்லது நடந்தா சரிதான்’ என தோழியின் வரவிற்காக காத்திருக்கலானாள்.

அலுவலக அறை நுழைந்த சுபா தான் படித்த வருஷத்தைக் கணக்கிட்டு அந்த வருடம் விளையாட்டு மாணவர்கள் பட்டியலை தேடிப்பிடித்து எடுத்து அத்லடிக்கில் ரன்னிங், லாங் ஜம்ப், உள்ள மாணவர்களைப் பார்க்க, பத்தாவதில் ப்ரேம் பெயர் இருக்க, ஒன்பதாவதில் ப்ரேம் சொன்னதுபோல் சிவா என்ற பெயரே இல்லை. சந்தேகத்துடன் எஸ் வரிசையை விட்டு ஜெ வரிசைக்கு வந்தவள் “ஜீவானந்த்! நைன்த் ஏ” என்றிருந்ததைப் பார்த்ததும் முகம் பலவித உணர்ச்சிகளைக் காட்டியது.

‘சுப்பு இல்ல சுபா என்னோட நேம்.’ ‘இல்ல நான் சுப்புன்னுதான் கூப்பிடுவேன்.’ சிறுவனாய் சிவா சொன்னது. ‘சுப்பு நல்லாயிருக்குல்ல தேவி. இனி அப்படியே கூப்பிடுறேன்.’ கணவனாய் ஜீவா சொன்னது. பழையதும், புதியதும் போட்டி போட முகம் பல வர்ணணைகளைக் காட்ட, ‘சிவா, ஜீவா ரெண்டு பேரும் ஒண்ணேதானா?’ இதை ஏன் அன்னைக்கே என்கிட்ட சொல்லல? நான் சொன்னதும்தான் அவங்களுக்கு நான் இந்த ஸ்கூல்ல படிச்சதே தெரிஞ்சிருக்கும். அதான் சிவா நேர்ல வந்தா நல்லா பேசுவியா, கோபப்படுவியா கேட்டீங்களா? சிவா இதென்ன இன்னொரு நேம்?”

அவளைப் பார்த்தபடியே வந்தவன் ‘என் பொண்டாட்டி புத்திசாலிதான்பா. சொல்லாமலேயே கண்டுபிடிச்சிட்டாளே’ என்று சுற்றிலும் பார்வையிட்டு யாருமில்லையென்றதும் மனைவியின் பின்னிருந்து அணைத்து “சுப்பு” என்றான்.

திடீர் அணைப்பில் பயந்து திரும்பியவள் சுப்பு என்ற பெயரைக் கேட்டதும் யாரென்று புரிந்துவிட, வசீகரச் சிரிப்புடன் தன்முன் நின்றிருந்தவனையே அதிசயமாகப் பார்த்து, “சிவா” என்றாள் கண்கள் மின்ன.

அந்த கண்களுக்குள் தன்னைத் தொலைத்து “எஸ் அதே சிவாதான்.” என்னவென்று காரணம் தெரியாவிட்டாலும் ஒருநிமிடம் சந்தோஷத்தில் எங்கிருக்கிறோம் என்பதையும் உணராது கணவனைக் கட்டிக்கொண்டவள், பின் விலகி “ஏன் முன்னாடியே சொல்லல?” என்றாள்.

“அப்ப உனக்கு பார்வை வரலையே தேவிமா. வந்ததும் இந்த கண்கள் காட்டும் ஜாலத்தை நேர்ல ரசிக்கணும்னுதான் சொல்லல. இப்ப அந்த ஜாலங்களை பார்த்துட்டேன். இன்னொருபுறம் நீ கோபப்படுவியோன்னு பயம்.”

“நான் ஏன் கோபப்படணும்?” என்று கணவனை நெருங்கி அவன் சட்டை பட்டனை திருகியபடி, “ஜீவா எனக்கு சிவாதான் பிடிச்சிருக்கு. நான் அப்படியே கூப்பிடவா?” என்றாள்.

ஜீவா தங்களிருவருக்கும் உள்ள இடைவெளியை இன்னும் குறைத்து, “உன்னிஷ்டம் தேவி. எனக்கும் இந்த சுப்புவைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் மனைவியின் வெட்கத்தை ரசித்து.

“ஜீவா எப்படி சிவா ஆச்சிது?”

என் ஃப்ரண்ட் ஹரிக்கு ஜ,ஜா வரிசை வராது தேவி. அதான் சிவா-ஜீவா ஆகிட்டேன்.”

“அந்த காலமெல்லாம் அப்படியே இருந்திருக்கலாம்ல. இப்பப்பாருங்க நமக்குள்ள எவ்வளவு இடைவெளி.”

“நமக்குள்ள எங்கடா இடைவெளி இருக்கு. நீ நினைச்சா கொஞ்சம் இருக்கிற இடைவெளியை இல்லாமலே பண்ணலாம்டா சுப்பு” என்று தன் தற்போதைய நிலையை சொன்னான்.

சட்டென்று “அதெப்படி முடியும்? அது நடக்கவே நடக்காது” என்று அவனை விட்டுவிலகி வேகமாக வெளியே சென்றாள்.

“ப்ச்... யார்றா இவ! ஆ...ஊன்னா கரெக்டா போயிட்டிருக்கிற ஃபில்ம்ல கிளைமேக்ஸ் மட்டும் சொதப்புற மாதிரி, க்ளைமேக்ஸை என்ட் பண்ண விடமாட்டேன்றா.” மனம் சலித்தபடி நின்றான்.

முகம் வெளிறியபடி வந்த தோழியைப் பார்த்த அகிலா, “என்னடி சார் உன் பின்னாடி வர்றதைப் பார்த்து, எதோ ரொமான்ஸ்ல வெட்கப்பட்டு வருவன்னு பார்த்தா, இப்படி வர்ற?”

“ப்ச்... போ அகி. ரொமாண்டிக்காத்தான் ஆரம்பிக்குது. கடைசியில் நான்தான் பழசை நினைச்சி அவங்களை குழப்பிட்டு வந்திடுறேன்.”

“எனக்கென்னவோ சுபா நீ அந்த விஷயத்தை மன்னிச்சி, மறந்திட்டன்னுதான் தோணுது. இப்ப நீ அதை ஒத்துக்க முடியாம இழுத்துப் பிடிக்கிறியோன்னும் தோணுது.”

சுபா முறைப்புடன் யோசனையாய் தோழியைப் பார்க்க...

“அதெப்படி அதுக்குள்ள சரியாகும் சரியாகுற விஷயமான்ற எண்ணம் உனக்குள்ள இருக்கு. அதை நீ தெரிஞ்சிக்க ட்ரை பண்ணல. தெரிஞ்சிக்கிட்டா நீ தப்பானவளாகிடுவியோன்ற ஒரு தப்பான எண்ணம் உனக்குள். இல்லன்னா யோகா மிஸ் மாப்பிள்ளை கேட்டு வந்தப்ப நீ அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்ட. கரெக்டா சொல்லணும்னா ஒரே வீட்ல நீங்க ரெண்டுபேரும் இருக்க சான்ஸே இல்லை. நீ சொன்ன காரணமும் அதான். ஒரே வீட்ல இருந்தா எங்க அவரை வெறுத்திடுவியோன்ற எண்ணத்துலதான் பிரிஞ்சிருக்க. அப்படியிருக்கிறப்ப இப்ப வரைக்கும் உங்களுக்குள்ள சின்ன உரசல்கூட வந்ததில்லை. ஏன் தெரியுமா சுபா, பழிவாங்குறது, முறைச்சிட்டிருக்கிறது உன்னோட இயல்பு கிடையாது. உன்னோட முகமூடியை சீக்கிரமே கழட்டியெறியப்பாரு இல்லன்னா இதே நிரந்தரமாகிரும்.” சுபாவின் மனதிலுள்ளதை ‘இதான் நிஜம்’ என்று அடித்துப் பேசினாள் அகிலா.

‘அகி சொல்வது உண்மையா? நான் மாறிட்டேனா? அப்படின்னா இப்ப நான் நடிக்கிறேனா” தலைவலிப்பது போலிருந்தது அவளுக்கு..

தலையைப் பிடித்தவளின் உணர்வுகளைப் படித்தவள் அவளை மாற்றுவதற்காக, “சரி அதைப்பற்றி வீட்ல போயி யோசி. அப்ப எதுக்கு அவ்வளவு வேகமா ஓடின?”

“நீ சொன்ன சிவா, ஜீவா ரெண்டுபேரும் ஒண்ணுதானோன்னு ஒரு சந்தேகம். அதை க்ளியர் பண்ணத்தான் போனேன்.”

“க்ளியர் பண்ணியாச்சா?”

‘ம்...’ ஜீவாதான் சிவாவோ என்று தனக்கு வந்த சந்தேகத்தை கண்டுபிடித்தது, அதை அவளின் கணவன் தீர்த்து வைத்ததையும் சொன்னாள்.

“சரி ரெண்டுபேர்ல யாரைப் பிடிச்சிருக்கு சுபா. சிவா ஆர் ஜீவா?”

“ரெண்டு இல்லடி மூணு.”

“மூணா?” அகிலா வாய்திறக்க.

“எஸ்டா. அது ஆனந்த் ஒருத்தரே வெவ்வேறு பெயர்ல என் லைஃப்ல வந்தவங்க. ஆனந்த் நேம் சொல்லும்போதே முகத்தில் ஒருவித இறுக்கம் வந்தது. ஆனந்த் நேம்லதான் அறிமுகமானாங்க அகி. அவனும் அதான் எனக்கு முதல்ல பார்த்தாங்களே அவனுக்கு அந்த நேம்ன்றதால எனக்குப் பிடிக்கல? அப்புறம் ஜீவாவா என்னோட கஷ்ட, நஷ்டத்துலயும் பங்கெடுத்து மனசுலயும் பங்கெடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப சிவாவா என்னோட மனசை ஆட்டுவிக்கிறாங்க.”

“ஏதோ ஒருவகையில் உன் புருஷனைப் பிடிச்சிருக்கே. என்ன அப்பப்ப மலையேறிடுற.”

“எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு அகி?”

“சரியான சந்தேகத்துக்குப் பிறந்தவடி நீ. முன்னாடில்லாம் இப்படி இல்லையே. இதென்ன புதுசா கண்டதையும் போட்டு குழப்பிக்கிற. பி பிராக்டிகல் சுபா. எனக்கென்னவோ நான் சொன்னதுமாதிரி பிரச்சனை இல்லாட்டியும், நீ உருவாக்கறியோன்னு தோணுது. எப்படித்தான் உன் ஹஸ்பண்ட் இவ்வளவு பொறுமையா இருக்கிறாரோ போ.”

“அகி தங்கச்சியை எதுவும் சொல்லாதே?” என்று ஆஜரானான் தாண்டவ்.

“வாங்க பாசமலரே! என்னடா புள்ள கண்ணைக் கசக்குது. இன்னும் எந்தவிதமான எதிரொளியும் எங்கிருந்தும் வரலையேன்னு பார்த்தேன். இவளை எதுவும் சொல்லிடக்கூடாதே. நீங்களாச்சி, உங்க தங்கையாச்சி. எனக்கு க்ளாஸ்கு டைமாகிருச்சி. நான் கிளம்பறேன். பைடி” என்றபடி நடந்தாள்.

“தாண்டவ்ணா வீட்ல எல்லாரையும் பார்க்கணும் போலயிருக்கு.”

“சாயங்காலம் அம்மா வீட்டுக்குப் போயிட்டுப் போகலாமா பாப்பா?”

“இல்லை. வெளில அவங்களறியாமல் பார்க்கணும்” என்றாள்.

“பார்க்கலாம் பாப்பா. நீங்க கவலையை விடுங்க. கண்டிப்பா நான் கூட்டிட்டுப்போறேன்” என்றான்.

மாலை பள்ளி முடிந்து வீடு செல்ல அங்கு தன் குடும்பமே இருந்தது. இன்றுதான் பார்க்கவேண்டும் போலிருந்தது. அதற்குள் தன் வீட்டில் அவர்களைக் கண்டதும் உள்ளம் துள்ள, சந்தோஷ முகத்துடன் உள்ளே வந்தவள், “அம்மா” என்று அருகில் சென்றாள்.

“அண்ணி நாங்க அண்ணனைப் பார்த்துட்டு, அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தோம். வேற யாரையும் பார்க்க வரல” என்றதும் சுபாவிற்கு படக்கென்று கண்கள் கலங்க...

“என்னண்ணி நீங்க? மாசமாயிருக்கிற பொண்ணுகிட்ட போயி விரோதம் பாராட்டிக்கிட்டு. நீ போயி ப்ரஷ்ஷாகிட்டு வாமா” என்று வந்தனா சொன்னார்.

அவர்களைப் பார்த்ததே போதுமென்ற மனநிலையில் அமைதியாக தன்னறையை நோக்கி நகர்ந்தவளை, “நான் உங்களைப் பார்க்கத்தான் அண்ணி வந்தேன். எப்படியிருக்கீங்க? அன்ட் எப்படியிருக்காங்க என் செல்லம்” என்று சுபாவின் வயிற்றைக் காண்பிக்க.

“நல்லாயிருக்கோம் சாதுமா. ஹார்ட்பீட் எல்லாம் நல்லாயிருக்கு சொன்னாங்க. சாது அண்ணன்..” என்று பரேம் இருக்குமிடம் திரும்பினாள்.

அதுவரை தங்கையையே பார்த்திருந்தவன், செல் நோண்டுவது போல் பாவனை செய்தான். ராஜனும் மகளையே பார்த்திருக்க, அவள் அவர்புறம் திரும்பும்போது வேறுபுறம் பார்த்தார். இந்த ஓரங்க நாடகம் அவர்கள் இரவுவரை அங்கேயே இருந்து உணவு முடித்து செல்லும்வரை தொடர்ந்தது. அவள் பார்க்கும்போது தாங்கள் திரும்புவதும், பார்க்காதபோது இவர்கள் பார்ப்பதுமாக விடைபெற்றார்கள்.
 
Top