- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
21
சற்று நேரத்திற்கெல்லாம் அவளைத் தேடி வந்த தாண்டவ் “உங்களை எங்கல்லாம் தேடுறது? விவேக் சார் உங்களை கூப்பிட்டுவரச் சொன்னார் பாப்பா” என்றதும் கண்ணீர் துடைத்து அவனுடன் கிளம்பி மருத்துவமனை வந்து மாமனார் இருந்த அறைக்குள் நுழைய, அங்கே அனைவரும் நின்றிருந்தார்கள்.
அவர்களின் பார்வை தன்னைத் துளைத்தபோதும் மாமனாரின் அருகில் சென்றவள், “சாரி மாமா” என்றாள்.
“முதலில் உட்காரு” என்று தன்னருகில் அமரவைத்தவர், “ஏன்மா சாரி கேட்கிற? சாரி கேட்கிற அளவுக்கு நீயென்ன தப்பு பண்ணின?”
“தெரிஞ்சி எந்த தப்பும் பண்ணினதில்ல மாமா. தெரியாமல் பண்ணின தப்புக்குத்தான் இந்த மன்னிப்பு.” கண்களில் நீருடன் பேசியவள், “மாமா...” என்றழைத்து எதோ சொல்லவர... அவளை கையமர்த்தி “நான் ஒண்ணு சொன்னா சம்மதிப்பியாமா?” என்றார்.
‘எங்கே ஜீவாவுடன் சேர்ந்து வாழச்சொல்வாரோ’ என மனதில் துடிப்புடன் விழித்தாள். அவளின் பயத்தை உணர்ந்தவர், “உனக்குப் பிடிக்காததை கேட்கமாட்டேன்மா” என்று அவளுக்கு நிம்மதியளித்து, “நீ எப்பவும் போல என்னோடவே இருக்கணும். என் பொண்டாட்டி, பிள்ளைன்னு என்னோட இருந்தாலும், எனக்கு நீ ரொம்ப முக்கியம்” என்று நிறுத்தி, பின், “என்னை விட்டு நீ வேறெங்கேயும் போகணும்னு முடிவெடுக்கக்கூடாது. இது என்னோட வேண்டுகோள்தான் கட்டளையில்லை. இதை நீ மறுக்கிறதும், ஏத்துக்கிறதும் உன்னிஷ்டம் பாப்பா. நீ என்னோட இருந்தா நான் சந்தோஷப்படுவேன். யோசிச்சி பதில் சொல்லுமா?” பேசிமுடித்து அசதியில் கண்மூடினார்.
சேர்ந்திருந்தால் பிரச்சனை என்றுதானே விலக முடிவெடுத்தது. இதென்ன புதுக்குழப்பம். தன்னுடைய சூழ்நிலையைக் காரணம் காண்பித்து வலுக்கட்டாயமாக என்னை அவரின் மகனுடன் வாழச் சொல்லவில்லைதான். அப்படிக் கேட்டிருந்தாலும் இந்த சூழ்நிலையில் என்னால் மறுக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். தெரிந்தும் கேட்கவில்லை என்னை முன்னிறுத்தி யோசிக்கும் நல்ல ஆத்மா. என்னோட நீயிருந்தா சந்தோஷப்படுவேன்மா. ‘எப்படி மாமா நான் இப்படி ஒரு முடிவெடுப்பேன்னு முன்னக்கூட்டியே யோசிச்சி பேசுறீங்க? உங்க சந்தோஷம்தான் மாமா எனக்கும் முக்கியம். மற்றதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்’ என்று மனதினுள் நினைத்து மாமனாரைப் பார்க்க... அவரின் மூடிய விழிகளுள் ஒருவித அலைப்புறுதல் இருப்பதை உணர்ந்தாள். மெல்ல அவர் கைபிடித்து “எனக்கும் உங்க சந்தோஷம்தான் முக்கியம் மாமா. நான் உங்களோடவே இருக்கிறேன்” என்றாள் ஒரு மனதாக.
“ரொம்ப சந்தோஷம் தேவிமா. நீ நல்லாயிருப்பமா” என மருமகளை வாழ்த்தி மனைவியிடம் திரும்பி, “வந்து டார்லிங். மருமகளை நல்லா கவனிச்சிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. சரியா?”
“உங்க குசும்பு இருக்கே. அவ என்னோட மருமகளும்தான். நான் பார்த்துக்காம யார் பார்த்துப்பாங்க” என்றபடி சுபாவின் தலைகோத... இத்தனை நாளிருந்த தனிமைக்கு துணை வந்ததை எண்ணி வந்தனாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு “ஐம் சாரி அத்தை” என்றாள்.
“சாரி கேட்கிற அளவுக்கு நீயென்னடா தப்பு பண்ணின?” படக்கென்று சிரித்தாள் சுபா. என்னவென்று கேள்வியாய் மற்றவர்கள் பார்க்க... “அதென்ன புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே மாதிரி நீ என்ன தப்பு பண்ணின கேட்குறீங்க?” கிண்டலாகக் கேட்டவள் சட்டென்று குரல் இறுகி, “நான் தப்பு பண்ணியிருக்கேன் அத்தை” என்றாள் ஜீவாவைப் பார்த்தபடி.
அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்று உணர்ந்தவன் அவளையே பார்த்திருக்க, இருவரின் பார்வைகளும் பல கதைகள் பேச... அங்கு மனங்கள் பேச மறுத்தது. மனங்கள் பேசியிருந்தால் அவர்களுக்கு மருந்து கிடைத்திருக்குமோ?
சில நிமிடங்களுக்குமேல் கணவனின் பார்வையை தாங்க முடியாமல் பாவையவள் பார்வையைத் தழைக்க உதட்டோரம் ஒரு முறுவல் தோன்றி மறைந்தது ஜீவாவிற்குள்.
“நாளையிலிருந்து எப்போதும்போல ஸ்கூல் போமா. எதாவது காரணம் சொல்ல வேண்டாம். அது உனக்கான ஜாப். நீதான் பார்த்துக்கணும். நாளைக்கே புது ஹரஸ்பான்டண்ட் வரப்போறாங்கன்றதை இன்னைக்கே அனோன்ஸ் பண்ணிடச் சொல்லிரு” என்றார் விவேக்.
“யார் மாமா அது?” என்று கேட்டு சட்டென்று நாக்கைக் கடித்தாள். ‘சே... லூசு அவங்க பையன் இருக்கிறான்னு யோசிக்காம வாயை விடுற’ என தன்னையே கடிந்தாள்.
“என் பையன்தான்மா. பெங்களுர் வேலையை ரிசைன் பண்ணிட்டு வர்றான். ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு வயசானாலோ, இல்லை உடல்நிலை சரியில்லாமல் போனாலோ வந்து ஸ்கூல் பொறுப்பேத்துக்கறேன்னு சொல்லியிருந்தான். சொன்னமாதிரியே வந்துட்டான். உனக்கு அதனால ப்ராப்ளம் இல்லையேமா? ஏன்னா, ஸ்கூல்னு வந்தா நீங்க ரெண்டுபேரும் சந்திச்சி டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கும். வீட்லயும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உனக்கு ஓகேன்னா சொல்லு. இல்லன்னா வேறெதாவது முடிவு பண்ணிடலாம்.”
என் மகன். மறந்தும் கூட உன் புருஷன் என்று சொல்லவில்லை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். ‘ஏன் மாமா என்மேல இப்படியொரு பாசம். பையனைக்கூட எனக்காக விட்டுக்கொடுக்க தயாராயிருக்கீங்க. ஆனால், நான் நூலறுந்த காத்தாடியா மேலே பறக்கவும் முடியாம, கீழே விழவும் முடியாம, விண்ணுக்கும் மண்ணுக்குமா தவிச்சிட்டிருக்கேன்.”
சுபாவின் அமைதியைப் பார்த்த ராஜன், “நான் மாப்பிள்ளைய எங்க வீட்டுக்கு கூப்பிட்டுப்போறேன். உங்க மருமகளுக்கு என் மருமகன் அங்கயிருக்கிறது பிடிக்கலைபோல” என்றார் சற்று கோபத்துடன்.
“இல்ல மாமா. உங்க பையன் உங்களோடதான் இருக்கணும். எனக்கெந்த ப்ராப்ளமும் இல்லை” என்று வேகமாக சொன்னாள் சுபா.
‘பாருங்கப்பா! மாமனும், மருமகளுமா சேர்ந்து என்னை வீட்டுக்கும், வீதிக்குமா விரட்டுறாங்க. இப்படியே போச்சின்னா ஜீவா உன்னுடைய வாழ்க்கை, ஹோகயாவா! ஹ்ம்... நல்லா வருவீங்க எல்லாரும்’ என்று மனம் நொந்து புலம்பிக்கொண்டிருந்தான்.
மறுநாள் இரண்டு பள்ளிகளும் பரபரப்பாக காணப்பட்டது. சுபா வழக்கம்போல் அகிலாவை அநதப்பள்ளியில் விட்டு வந்த தாண்டவுடன் முன்னக்கூட்டியே வந்து ஜீவாவை வரவேற்க சக ஆசிரியர்களுடன் தயாராகயிருந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த கருப்பு நிற இன்னோவா கார் பள்ளிக்குள் நுழைய, ஜீவாவை வரவேற்கவென்று நின்று கொண்டிருந்த சுபா காரிலிருந்து இறங்கியவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். உதடுகள் தன்னாலேயே “அழகன்டா” என முணுமுணுத்தது. கண்தெரிந்த பிறகு அவனை நெருக்கத்தில் கூட பார்த்திருக்கிறாள் தான். அந்த நேரங்களில் ஒருவித அழுத்தமும், அளவுக்கதிகமான கோபமும் அவள் கண்ணை மறைத்திருந்தது. இன்று அவன் காரைவிட்டு இறங்கியதிலிருந்து நிதானமாக மனதில் எந்தவித கோபமும் இல்லாமல் பார்க்கிறாள்.
மாநிறத்தையும் தாண்டிய நிறத்தில் பளிச்சென்று சிரித்த முகத்துடன், நல்ல உயரத்துடன், எவ்வளவு அழகான பெண்ணும் வேண்டாமென்று மறுக்கத் தோன்றாத முக அழகு. ‘அழகன்! ஆம் “அழகன்தான். என்ன இல்லை இவனிடத்தில். அழகு, அறிவு, படிப்பு, பண்பு, பணம், இதோ பள்ளிப்பொறுப்பு. ஏன் என்னை அப்படி ஒரு சூழ்நிலையில் மணம் புரிந்தான். வேறொரு பெண்ணை மணந்திருந்தாள் அவன் வாழ்வாவது நன்றாக அமைந்திருக்குமே. கணவனின் வாழ்வையும் கெடுத்து... ம்...’ என்ற பெருமூச்சுடன் ‘விடை காண முடியா விடுகதைதான் தன் திருமணம்’ என்றாள் மனதினுள்.
ஜீவாவும் அவளைக் காண அவனின் பார்வையினால் ஏற்பட்ட கூச்சத்தில் சுபா தலைகவிழ... அவனின் பார்வை மெல்லிய சிரிப்புடன் மனைவியின் மேல் பதிந்தபடியே வர, சுபா தன்னை நிதானித்து தன் பொறுப்பை எண்ணி சக ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்த தயாராகினாள்.
திருமணமாகாத ஒன்றிரெண்டு ஆசிரியைகளின் பார்வை ஜீவாவை விழுங்குவதுபோல் பார்ப்பதை கவனித்தவளுக்கு அதை எண்ணி உள்ளுர சிரிப்பு வந்தது. அவன் தன்னருகில் வருவதற்குள் அந்தப்பெண்கள் ‘ஜீவாவிற்கு திருமணமாகிற்றா? இல்லையா?’ என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்திருன்தனர். அதில் ஒருசிலர் “நாம ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமே!” என்றனர்.
அதில் வந்த சிரிப்பு அதிகமாக, எங்கே தன்னையறியாமல் சத்தமாக சிரித்துவிடுவோமோ என்று தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள். அவளையே கவனித்துக்கொண்டு வந்தவன் மனைவியின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழிக்க, சுபாவும் புன்னகையுடனேயே அனைவருக்கும் ஜீவாவை அறிமுகப்படுத்தினாள்.
பள்ளியின் தற்போதைய நிலவரங்களை சுபா எடுத்துச் சொல்ல, அதை கவனமாக கேட்டவன் பின், ஆசிரியர்களின் எண்ணங்களையும் கேட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு, தேவையில்லாதவற்றை விட்டான். பள்ளியின் முன்னேற்றத்திற்கு அவர்களின் உதவியும் தேவையென்று சொல்லி மற்றவர்களை அனுப்பியவன், தன் தந்தையைக் காப்பாற்றிய பி.ட்டி வாத்தியாரை மட்டும் நிற்க வைத்து நன்றிகள் பல சொன்னான்.
பின்னர் தான் படித்த தங்கள் பள்ளிக்குச் செல்ல அந்த வரவேற்பறையிலேயே சிறுவயது சுப்புவின் நினைவுவர, மனைவியை திரும்ப்பார்த்து சின்னதாக புன்னகைத்தான்.
அவனின் திடீர் புன்னகையின் அர்த்தம் புரியாமல் குழம்பியவள், குழப்பத்துடனேயே அங்கிருந்தவர்களிடமும் ஜீவாவின் அறிமுகம் நடத்தி, கடைசியாக அகிலாவைக் காண்பித்து, “இவங்கதான் நியூ அப்பாய்ண்ட்மெண்ட். அன்ட் தாண்டவ்ணா ஒய்ஃப்” என்றாள்.
“ஓ... சமீபத்திய புதுமண ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்ககிட்ட ஒரு டௌட் கேட்கணுமே?” என்றதும் அவனுக்கு நன்றி சொன்ன அகிலா “என்ன டௌட் சார்?” என்றாள்.
“இவங்களோட எப்படி ப்ரண்டா இருக்கீங்க? சரியான காரசார பார்ட்டி” என்று சுபாவைக் காட்டினான்.
ஒரு நிமிடம் குழம்பியவள் சுபாவிடம் திரும்ப, அவளோ ஜீவாவை காதலாக பார்த்துக்கொண்டிருக்க அவளின் முகம் திருப்பி “உன் ஹஸ்பண்டா?” என்று ஜீவாவிற்கு கேட்காத குரலில் கேட்க... ‘ஆம்’ என்று சம்மதமாக தலையசைத்தாள்.
அதன்பின் சற்று தைரியம் வந்த அகிலா, “சார் சாப்பாட்டுல காரசாரம் இருந்தால்தான் வாய் ருசிக்கும். வயிறு நிறையும். அதுமாதிரிதான் நட்புக்குள்ள எல்லாமே இருந்தாதான் நட்பு அழகாகும்.”
“வாவ்! நீங்க ரொம்ப புத்திசாலிங்க. ப்ரண்டை விட்டுக்குடுக்க மாட்டேன்றீங்க குட்” என்றபடி நடந்தான்.
“உங்காளு சூப்பர்டி. உங்க ஜோடி பொருத்தம் அதைவிட சூப்பர்” என்று சுபாவின் காதருகில் சொல்லி, “செம ஹேண்ட்சமா இருக்காங்க. எப்படிடி இவரை விட்டுட்டு இருக்கிற?”
“ப்ச்... அகி ப்ளீஸ் தெரிஞ்சே கேட்கிற பார்த்தியா?” என்றதும் “ஆமா பெரிய புடலங்கா பிரச்சனை. போடி லூசு” என்ற தோழியை முறைத்து, ஜீவாவை அலுவலக அறைக்குக் கூட்டிச்சென்றாள். என்ன இங்கேயும் அந்த பள்ளியில் நடந்த பட்டிமன்ற தொல்லை இருந்தது.
வேலை சம்பந்தமாக இருவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தும், ஜீவா மனைவியிடம் உருகி வழியவில்லை அந்த பதவிக்கேயான பொறுப்புடன் வேலை செய்தான்.
கணவனின் அந்த உதாசீனப்படுத்துதல் கூட ஒருவகையில் வலிக்கத்தான் செய்தது. அதேபோல் அன்று மருத்துவமனையில் வைத்து பேசிய பிறகு தங்களது சொந்த வாழ்வைப்பற்றி இருவருமே பேசவில்லை. அதிலும் குழந்தையைப் பற்றிப் பேசி சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்கவில்லை. ஒருவேளை அன்று சொன்னதை மறந்துவிட்டானா? இல்லை அது மாயையா? என்ற நினைப்பு வந்தது சுபாவிற்கு. அவனுக்குத்தானே தெரியும் அப்படி சொன்னாலாவது மனம் மாறி தன்னுடன் வரமாட்டாளா என்றது.