• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
21



ஆனந்த் வீடே கோலாகலமாகக் காட்சியளித்தது. வித்யாவின் வீடு போலல்லாமல் தனி வீடாக இரண்டு க்ரௌண்ட் இடத்தைக் கபளீகரம் செய்து, இரண்டாம் மாடி மொட்டைமாடியாக நிற்க, சரம் சரமாய் சரவிளக்குகள் தொங்க, சுற்றிலும் நின்றிருந்த சில மரங்களிலும் சரவிளக்குகள் டெகரேஷன்.

சாதனா வீட்டிலிருந்து கிளம்பியதுமே ஹாஸ்பிடல் சென்று, பின் ப்யூட்டி பார்லர் சென்று மணப்பெண் மேக்கப் செய்து, வரலட்சுமியும் அனுவும் தாங்கள் போட்டிருந்த நகைகளில் சிலதை அவளுக்குப் போட்டு, அப்படியே கோவில் சென்று இருவருக்கும் அர்ச்சனை செய்து, இன்று எதுவும் நடந்ததற்கான அறிகுறியே இல்லாத அளவு வந்திருந்தார்கள்.

ஆரத்தி எடுக்க அழைத்ததும் எதிரே வந்திருந்தவர்களைப் பார்த்த வித்யாவிற்கு, ஆச்சர்யத்தில் முகம் மலர்ந்து கண் விரிந்தது.

“மிஸஸ்.வித்யானந்த் பார்த்து கண்ணு வெளியில ஜம்ப் பண்ணிடப் போகுது” என்று கணவன் கேலி செய்ததைக் கவனிக்காது, தன் மொத்தக் குடும்பத்துடன் சில உறவினர்களும் அங்கிருக்கக் கண்டவள், “நான் எதிர்பார்க்கவேயில்லங்க” என்றாள் மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன்.

“ஹேய் அண்ணி வெல்கம். வலது காலை எடுத்து வச்சி உள்ள வா. இல்ல...”

“ஏய் வச்சிட்டேன்டி.”

“ஏய் கல்யாணப் பொண்ணா அடக்க ஒடுக்கமாயிருப்ப, இப்ப வம்பிழுத்தால்தான் உண்டுன்னு ஆரம்பிச்சா, பதில் ஏன் பேசுற நீ. ஏன் பேசுற நீ...” என்று கீர்த்தி பிரகாஷ்ராஜை தனக்குள் கொண்டு வர... ‘நீ பாட்டுக்குக் கத்து’ என்பதாய் உள்ளே வந்து அங்கிருந்த ஷோஃபாவில் அமர்ந்திருந்த மாமியாரின் அருகில் சென்று உட்கார்ந்தாள்.

எதிரிலிருந்த வாணிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவரோ கணவரைப் பார்க்க, அவர் மட்டும் என்ன செய்வார் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

“அட எல்லாரும் இங்கயிருக்கிறீங்க. பச்சையம்மா எங்க?”

“அக்கா ரூம்ல பாப்பாவைத் தூங்க வச்சிட்டிருக்கா.”

“சே... வம்பிழுக்க ஆளில்லையே” என்று யோசிப்பதுபோல் அனந்த் சொல்ல...

“அதான் உங்களுக்குன்னு ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கீங்கள்ல, அப்புறம் என்னண்ணா?”

“அட அதுவும் சரிதான்” என்று மனைவியினருகில் சென்று அமர்ந்தான். இரவு சாப்பாட்டிற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக பெரியவர்கள் செல்ல, கீர்த்தியும் சுபாஷும் கார்த்திகாவிடம் செல்ல, மற்றவர்களெல்லாம் ஒரு அறையில் பயண ஓய்வெடுத்தார்கள்.

“வம்பிழுத்திரலாமா மிஸஸ்.வித்யானந்த்?” வில்லன் குரலில் சொல்ல...

“ஏன் உங்களுக்குப் பொழுது போகலையா?”

“பொழுது போயிட்டதாலதான் கேட்டேன்” என்று ஹஸ்கியாக மொழிய... ‘ஹான்’ என்று கணவனைக் கண்டாள். சில வினாடிகளில் அவளின் இடையில் ஏதோ ஊர்வதுபோல் தெரிய, பதறி எழப்போனவள் இடுப்பை அழுத்தமாகப் பிடித்து எழவிடாமல் செய்து, “என்ன நீ இங்கல்லாம் பின் போட்டிருக்க? அப்ப கதைகள்லயும், சினிமாவுலயும் சொல்ற மாதிரி எப்படி இடுப்பைப் பார்க்கிறது? தொடுறது? இந்த இடுப்புல என்னதான் இருக்குன்னு நானும் தெரிஞ்சிக்கணும்” என்றான் பிடிவாதமாக.

“ஏன் இப்படிலாம் பேசுறீங்க? இதெல்லாம் தப்பு.”

“ஓகே பேசல. பட், இன்னும் ஹீட் இருக்கே மிஸஸ்.வித்யானந்த். ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்லாம் இதுக்கு சரிவராது போலவே” என்று யோசிப்பதுபோல் அவள் முகம் பார்த்து, பேசவில்லை என்றதை செயலில் காட்டிச் சிரித்தான்.

“எ..என்ன செய்றீங்க? அ..அது நார்மலா உடலிலிருக்கும் சூடு. கொஞ்சம் விலகி உட்காருங்க” என்று சுற்றிலும் பார்த்தபடி சொல்ல...

“ஃபீவர் செக் பண்ணினேன்மா. கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது. சரி நம்ம ரூம்கு வா. சின்ன ட்ரீட்மெண்ட் அப்புறமா ரெஸ்ட் எடுத்துக்கோ.”

“அச்சோ கையை எடுங்க கூசுது. இப்படிலாம் பேட் டச் பண்ணக்கூடாது” என்றாள் அக்கம்பக்கம் பார்த்தபடி.

“உன்கிட்ட மத்தவங்கதான் பண்ணக்கூடாது. நான் மட்டும் பண்ணலாம்” என்றான் கிறங்கலாக.

“இவ்வளவு நாள் நல்லவனாதான இருந்தீங்க? இப்ப மட்டும் என்ன சேட்டை இது?”

“ஓய்.. அது கேரக்டர் மெய்ன்டெய்ண் பண்ணினது. இது அப்படியில்லையே. என் உரிமை! என் மனைவி!”

கணவனின் நெருக்கம் தாளாது, “ப்ளீஸ் யாராவது வந்துரப்போறாங்க” என்று தயக்கத்துடன் சொல்ல...

“அப்ப என்னோட வா” என்றதும் “எதுக்கு?” என்று அவள் முனக... அதைப் புரிந்தவனோ, மெல்லிய புன்னகையுடன் எழுந்து கைநீட்டினான். நீட்டிய கையைத் தட்டிவிட்டு அவளே எழ... “கையைத் தட்டிவிடுற? இப்ப எப்படித் தட்டிவிடுற பார்க்கலாம்?” என்று தோளோடு சேர்த்தணைத்து மாடியிலிருக்கும் தன் அறைக்கு அழைத்து வந்து கதவு சாத்திய நிமிடம், “ஹேய் என் ரூம்கும் ஒரு பொண்ணு வந்துட்டா. நான் ஹேப்பீ” என்று சந்தோஷத்தில் குதித்தான்.

“என்ன பண்றீங்க நீங்க?” அவனின் அந்த சந்தோஷத்திற்கான காரணம் புரியவில்லை என்றாலும் கணவனின் அந்த மகிழ்ச்சியை ரசித்துப் பார்த்திருக்க... “நீ வேற தியா. நான் காலேஜ் படிச்சப்பவும், வேலைக்குன்னு போக ஆரம்பிச்சப்பவும் சரி, கேர்ள்ஸ் யாரையும் ஃப்ரண்ட் பிடிச்சதில்ல. சாரகேஷ் சொன்ன மாதிரி, என் முகம் பார்த்தாலே கேர்ள்ஸ் ஓடிப்போயிருவாங்க.”

“உங்க முகம் அவ்வளவு ஒண்ணும் பயங்கரமா இல்லையே? பார்க்க ஓகேதான். அப்புறம் ஏன் பொண்ணுங்க பார்க்கல? நீங்க பார்க்கலன்னு சொல்லுங்க” என்றாள் கேலியாக.

“ஹா..ஹா இருக்கலாம். சிலர் பொண்ணுங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன், அங்கயிங்க சுத்தினேன்னு சொல்வாங்க. ஏன் அவனுங்க எல்லை மீறல்களைக் கூட...”

“வாட்?” வித்யா அதிர...

“ஏய் பிராமிஸா நான் இல்லமா. என்னைப் பார்த்து லைபை ஏன்டா என்ஜாய் பண்ணமாட்டேன்ற சொல்வாங்க. சென்னை நாகரீகத்துல வளர்ந்தவன்தான் இருந்தாலும் அம்மா வளர்ப்போ என்னவோ எனக்குப் பிடிக்கல. அப்ப சொல்லிப்பேன் நானும் எனக்கேயான கேர்ள் ஃப்ரண்டைக் கூட்டிட்டு வருவேன்னு.”

“நான் உங்களுக்கு கேர்ள் ஃப்ரண்டா?” கணவனவனை முறைக்க...

“அப்ப நீ கேர்ள் இல்லையா? பார்த்தா அப்படித் தெரியலையே? ஒருவேளை பார்க்கப் பார்க்கத்தான் தெரியுமோ” என்றதில் அவளின் முகம் வெட்கம் கொண்டு சிவக்க, “செக் பண்ணிச் சொல்லட்டுமா?” என்ற கேள்வியுடன் அருகில் வர... “வேண்டாம்” என ஒரு விரல் நீட்டி மிரட்டி அவள் விலக, எட்டி அவளைப் பிடித்தவன், “சோதிக்க ரொம்ப ஆசைதான். பட் உன் ஹெல்த் தடுக்குதே. என்ன செய்யலாம்?”

“ஒண்ணும் செய்ய வேண்டாம். வாங்க கீழ போகலாம்.”

“வேண்டாம் தியா. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. அதுக்குத்தான் கூட்டிட்டு வந்தேன். கீழ அப்புறம் போகலாம்.”

“எல்லாரும் கீழயிருக்கும் போது நாம மட்டும் தனியாயிருந்தா எனக்கே ஒரு மாதிரியிருக்குங்க.”

“தியா நிஜமாவே உனக்கு ரெஸ்ட் தேவை. உன் நிலை எல்லாருக்கும் தெரியும். அதுவுமில்லாம...” என நிறுத்தி அவள் முகம் பார்க்க...

கணவனின் குறுகுறு பார்வையில், “என்ன நிறுத்திட்டீங்க?” எனக்கேட்க... அவனின் அமைதி தொடர, “ப்ச்.. சொல்லப்போறிங்களா இல்லையா?” என மிரட்டிச் சிணுங்கினாள்.

சட்டென்று புன்னகைத்து, “நாம இன்னைக்குத்தான் கல்யாணமான புதுத்தம்பதிகள். அதனால...” ஏதோ வில்லங்கமாக சொல்லப்போவதை உணர்ந்து எச்சில் விழுங்கியபடி, “அதனால..” என்று நிறுத்த... “நமக்குள்ள சம்திங் சம்திங் நடந்தாலும் யாரும் கண்டுக்கமாட்டாங்க” என்றான் கண்ணடித்து.

“சம்திங் சம்திங்னா?”

“எடக்கு மடக்கா!”

ஆவென பார்த்தவள், “நீங்க காலையில வரை இப்படியில்லையே? இப்ப என்ன இப்படிலாம் பேசுறீங்க? எனக்கு பயமாயிருக்கு.”

“இனிமே இப்படித்தான் ஹாங்!” சினிமா பாணியில் சொல்லி, “ஏன் உனக்குப் பிடிக்கலையா? பிடிக்கலைன்னா சொல்லிரு ரூட்டை மாத்திரலாம்.”

“ரூட்டை மாத்துறீங்களா? எப்படி?” ஆர்வமாகக் கேட்க...

“ஏய் செல்லம் ஐ லவ் யூடி” என்று கத்த... ‘அடப்பாவி!’ என்றெண்ணி அவன் வாய்மூடி, “ஏன் இப்படிக் கத்துறீங்க? வெளில கேட்கப்போகுது” என்றாள்.

பார்வை அவள் விழிதனில் நிலைத்திருக்க, அவளின் கையை விலக்கிப் பிடித்தபடி பின்னால் கொண்டு சென்று தன்னுடன் அணைத்து, அவள் கண்களில் தோன்றிய உணர்வுகளைப் பார்த்தபடி, “பிடிச்சிருக்கா?” என ஹஸ்கியாகக் கேட்க...

“ம்... கொஞ்சமா.”

“கொஞ்சமாதானா?”

“அப்படித்தான்னு நினைக்கிறேன்” என தனக்கே கேட்காத குரலில் மொழிய... “ஓ... நீ சொன்னா சரியாதான் இருக்கும்” என கிண்டலடித்தாலும், “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு தியா” என்றான்.

“தியா! ம்... பெயர் நல்லாயிருக்கு. முதல்முறை கூப்பிட்டப்ப யாருடா அது தியான்னு யோசிச்சேன்” என்று சிரித்தாள்.

அவளை விலக்கி நிறுத்தி, “கஷ்டப்பட்டு உன் பெயருக்குள்ள ஒரு பெயரைக் கண்டுபிடிச்சிக் கூப்பிட்டா, யாரோடதுன்னு யோசிச்சேன்னு சொல்றியா? உன்னை...”

சட்டென்று சிரித்து, “இது கூடவா தெரியாம இருப்பாங்க” என்று கட்டிலில் படுக்கக் கூச்சப்பட்டு உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருக்க... “என்ன தியா? அன் ஈஸியா ஃபீல் பண்றியா?” என்றதும் அவள் தலையசைக்க, “நீ தூங்கு. நான் கீழ போறேன்.”

“தேங்க்ஸ்ங்க. எப்படி சொல்றது தெரியாமல்தான் பேச்சை வளர்த்தேன்.”

“என்னது பேச்சை வளர்த்தியா? அப்ப எனக்காகப் பேசலையா நீ?” முகத்தில் சோகத்தைக் காட்டினான்.

“அச்சச்சோ அப்படியில்லங்க” என பதறி மேலே சொல்ல முடியாமல் அமைதியானாள்.

“வம்பிழுக்கத்தான் சொன்னேன்மா. நீ தூங்கு. அப்புறமா வந்து எழுப்புறேன். அதுக்கு முன்னாடி, கொஞ்சம் வெய்ட் பண்ணு வந்திருறேன்” என்று வெளியே சென்று ஐந்து நிமிடங்களில் பாலுடன் வந்தவன் அவளைக் குடிக்கவைத்து அவளுக்குத் தனிமை கொடுத்து கதவு சாத்திவிட்டுச் சென்றான்.

ஏனோ சாதனாவின் சில மணிநேரத் தாமதம் தனக்கு நல்லது செய்திருப்பதை உணர்ந்தாள். தாலி கட்டுமுன் இப்பிரச்சனை வந்திருந்தால்... நினைத்துப் பார்க்கவே பகீரென்றது வித்யாவிற்கு. அப்படி நடந்திருந்தாலும் ஆனந்தைத் தவிர வேறு யாரும் தன் வாழ்வில் வருவது சாத்தியமில்லை என்று தோன்றியது. கணவனின் அன்பு அக்கறையைத் திருமணம் வரை அனுபவித்திருக்க, இன்று அவனின் காதல் தன்னை மூச்சுமுட்ட வைப்பதை என்னவென்று சொல்வதோ! தூக்கம் கண்களைத் தழுவ கணவன் கட்டிய தாலியையும், கொடுத்த செயினைத் தவிர அனைத்தையும் கழற்றி அங்கிருந்த பீரோவில் வைத்து உடல் அசதியில் படுத்ததும் உறங்கிவிட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“ஹேய் பச்சையம்மா எப்படியிருக்கீங்க? வந்ததும் உங்களைத்தான் தேடினேன்” என்று படிக்கட்டிலிருந்து இறங்கும்போதே உற்சாகமாகக் கேட்டபடி ஆனந்த் வர...

“அந்தப் பெயர் சொல்லாதீங்க” என்று கார்த்தி முறைத்தாள்.

“அது கொஞ்சம் கஷ்டம்தான். அந்தப் பெயர் சொல்லக்கூடாதுன்னா, என்னை நீங்க அண்ணான்னு கூப்பிடணும். அது உங்களுக்கு இஷ்டமில்லாத ஒண்ணு.”

“அதெல்லாம் முடியாது” என்று வீம்பு செய்ய...

“சரி விடுங்க பச்சையம்மா.” திரும்பவும் அவளின் முறைப்பைப் பெற்று, “அம்மா நைட் சாப்பாடுக்கு ரெடி பண்ணியாச்சா? இல்ல நான் ஏற்பாடு பண்ணவா?”

“ஆமாடா. எட்டு மணிக்கு வந்து கேளு. அனு வீட்டுக்காரர் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி எல்லாமே வந்திருச்சி.”

“அண்ணா என் அண்ணி எங்க?” என்ற கீர்த்தியிடம், “ரூம்ல தனியா ஆடிட்டிருக்கா. நான் வரவா கேட்டதுக்கு, சோலோ டான்ஸ்தான் பிடிக்குமாம். சரி முதல் முறையா ஒய்ஃப் சொல்றதை மறுக்கக்கூடாதுன்னு வந்துட்டேன்” என்றான் சிரிக்காமல்.

“மச்சான் நீங்க மொட்டை மாடியில ஆடலாமே?”

“அங்கதான் சுபாஷ் கிளம்பினேன். வழியில இந்த பச்சையம்மாவைப் பார்த்தேனா டான்ஸ் மறந்திருச்சி. சரி ஜாய்ண்ட் டான்ஸே பண்ணலாம்னு இங்க வந்து ஐக்கியமாகிட்டேன்” என்றதில் மற்றவர்கள் சிரிக்க...

“ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க? இதுக்குதான் இங்க வரமாட்டேன் சொன்னேன்” என்று ஆனந்த் பேசியதற்கு கணவனிடம் பாய்ந்தாள்.

“இதுக்குதானா பச்சையம்மா?” என்று சுபாஷும் அவளின் கால்வார, “சுப்பூ உங்களை என்ன செய்றேன் பாருங்க” என்று கணவனை விரட்ட...

“ஏய் பச்சை உடம்புக்காரி. இப்படி ஓடாத” என்று பெரியவர்கள் கோரஸாய் சொல்ல... “பச்சைன்ற வார்த்தையை விடமாட்டீங்களா” என்று கோபத்தில் சிணுங்கினாள்.

“அட நாங்க நிஜமாவே பிள்ளை பெத்த உடம்புன்றதைச் சொன்னோம்மா” என... என்ன சொல்வதென்று தெரியாமல் கார்த்தி பே என விழிக்க... “கார்த்தி இந்த முழி எனக்கு ரொம்பப் புச்சிருக்கு” என்று சுபாஷ் கேலி செய்ய, திரும்பவும் தொடர்ந்தது அவனது ஓட்டம்.

அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் வித்யாவைக் கூட்டிவரச் சொல்ல, “இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்மா” என்ற மகனிடம், “நீயாவது இவங்களோட உட்கார்ந்து சாப்பிடுடா” என்ற தாயிடம் அவள் எழுந்ததும் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டான்.

இரவு உணவு முடித்து அனைவரும் செங்கல்பட்டு கிளம்ப... “பச்சைப்புள்ளைய வச்சிட்டு ராத்திரில எப்படி? காலையில போய்க்கலாம்” என்றார் வரலட்சுமி.

“சரிங்கண்ணி. இப்ப நாங்க மத்தவங்களோட கிளம்புறோம். சுபாஷ் கார்த்தி, கீர்த்தி நாளைக்கு வரட்டும்” என்று வரலட்சுமியிடம் சொன்ன வாணி, “உனக்கு சம்மதம்தான சுபா?” என்று நாத்தனாரிடமும் கேட்டார்.

“சம்மதம்தான் அண்ணி. வேற எதுவும்...” முழுதாகக் கேட்காமல் விட்டதைப் புரிந்த வரலட்சுமி, “உடம்பு சரியில்லாத டைம் எதுவும் வேண்டாம். ஆனந்த் கேட்டா கத்துவான். நல்லபடியா குணமானதும் நல்லநாள் பார்த்து செய்ய வேண்டியதை முழுசா செய்திடுறேன் சுபா. வித்யா எங்க வீட்டுப் பொண்ணு. நாங்க நல்லா பார்த்துப்போம். நம்பி கிளம்புங்க” என்றார்.

“அது தெரியும் அக்கா. எங்களைவிட நீங்க நல்லா பார்த்துப்பீங்க. நாங்க வர்றோம்.”

“வித்யாகிட்ட சொல்லிக்கலையா?”

“போய்ப் பார்த்துட்டுதான் அண்ணி வர்றோம். நல்லா தூங்குறா. எழுப்ப மனசு வரல. நீங்களே அவகிட்ட சொல்லிருங்க. நாளை மறுநாள் மூணாவது நாள் கணக்கு வருது. மறுவீடு சேர்த்து பெயர் வைக்கிற பங்க்ஷனும் இருக்குன்றதால எல்லாரும் வந்திருங்க. கூப்பிட வர ஆள் இல்ல அண்ணி. தப்பா எடுத்துக்காம வந்திருங்க” என்றார் வாணி.

“அதெல்லாம் பிரச்சனையில்ல. நீங்க கிளம்புங்க. நாங்க வந்திருறோம்” என்று வரலட்சுமி உறுதியளித்தார். உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட, கீழே வரலட்சுமியுடன் கீர்த்திகாவும், இன்னொரு அறையில் அனுவும் சாரகேஷும் மாடியில் இன்னொரு அறையில் சுபாஷ் கார்த்தியையும் தங்கச் சொல்லி, தங்களறைக்குச் செல்லப்போக... “சாப்பிடலையா ஆனந்த்?” என்றார் வரலட்சுமி.

“காஃபி மட்டும் போதும்மா. மனசு போல வயிறும் நிறைஞ்சிருக்கு. வித்யா நடுவுல முழிச்சா அப்ப பார்த்துக்கலாம்” என்று தாயை அனுப்பி தன் இடம் வர, ‘முதல் முறையாகத் தன் அறையில் தனக்காக ஒரு பெண் எனும் தேவதை!’ சாய்ந்தவாக்கில் படுத்திருந்தவள் அருகிலமர்ந்து, மெல்ல கழுத்தில் கைவைத்து காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க உடலின் ஜில் தன்மையில், காய்ச்சல் விட்டு அந்த அசதி மட்டுமே இருப்பது புரிய மனம் லேசானது.

அவளின் கன்னத்தில் முத்தமிட, தூக்கத்திலும் கன்னம் துடைத்தவளின் செயலில் சிரித்து அவள் முகம் பார்த்தபடி சாய்வாகப் படுத்து, பாவையவளைக் காண எல்லையில்லா மகிழ்வு அவனிடம். ‘விரும்பியது நடக்குமா?’ என்ற கேள்வியுடன் செங்கல்பட்டு போக, விரும்பியது நடந்தும் காலையில் நடந்த குளறுபடிகள் ஒன்றாயிரண்டா.. இவள் மயக்கம் போட்ட விழுகையில் தன் துடிப்பைத் தானே உணர்ந்தவனல்லவா!

அதைவிட மனைவியின் வாய் வழியே அவ்வார்த்தை தனைக் கேட்டபொழுது இதயம் வெடித்தாற்போல் ரணவலி அவனுக்குள். ‘தனக்கும் மனைவிக்கும் உள்ள உறவின் ஆயுள் இரண்டு மணிநேரங்கள் கூட கிடையாதா? அவ்வளவுதானா? ஏன் அப்படிச் சொன்னாள்?’ மற்றவர்கள் சொன்னதையெல்லாம் புரியாமல் பேசுகிறார்கள் என்று பெரிதாக எடுக்கத் தோன்றாதவனால், மனைவியின் புறக்கணிப்பை ஏற்க முடியவில்லை. பெண்களின் புறக்கணிப்புப் புதிதில்லையே என மனம் நினைத்தாலும். மற்றவர்களுடன் அவனின் மனைவியை ஒப்பிட மனமில்லை.

குழப்பத்துடனும் வலியுடனும் வரும்பொழுதுதான் கீர்த்தி அவனைக் கடந்து சென்றது. தனியாக ஓரிடம் சென்று அமர்ந்தவன், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க, வேண்டாம் என்பவளை வற்புறுத்தி அழைத்துச் செல்வதும் தவறென்று பட, தாய் தங்கையிடம் என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் பிரிவை நினைக்கையிலேயே தொண்டையடைத்துக் கண்ணீர் வர, கைக்குட்டை எடுத்து கண்ணீர் தாங்கி அடைத்த தொண்டையைத் திடப்படுத்தி நேரே தாயிடம் சென்றவன் வீட்டிற்கு அழைத்தான்.

“என்னடா உளர்ற? மருமகள் இப்படியிருக்கிறப்ப நாம எப்படிடா போக முடியும்?”

“அ..அவ இப்ப வரலையாம்மா” என்றவனுக்கு என்ன முயன்றும் வலியை வெளிப்படுத்தாமலிருக்க முடியவில்லை.

“என்னடா சொல்ற? ஏ..ஏன் வரலையாம்? சொந்தக்காரங்க கேட்டா என்னடா பதில் சொல்றது. அவங்க சொன்னதை நம்பி உன்னை வேண்டாம் சொல்லிட்டாளா? இருக்காதுடா. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அவ்வளவு பிரச்சனையிலயும் அவள் உன்னைக் குற்றவாளியா பார்க்கலடா. நான் வேணும்னா பேசிப்பார்க்கிறேன்” என்று கண்ணீர் பொங்க இதயம் படபடக்கக் கேட்டார்.

“அம்மா ப்ளீஸ் பதறாதீங்க. பிபி குறைஞ்சிரும். அவளுக்கு எப்ப வரணும்னு தோணதோ அப்ப வரட்டும்மா. நீங்க வாங்க போகலாம். சாரகேஷ் காரை எடுங்க” என்றான்

“அண்ணா நான் வேணும்னா...”

“உனக்குன்னு தனியா சொல்லணுமா? இதுதான் விதி. ஏத்துக்கிட்டு வாங்க. இந்தாங்க சாரகேஷ் கார் சாவி.” சாவியை அவனிடம் கொடுத்து நடக்கையில் எதிரில் வந்த சுதாகர், “மயக்கம் தெளிஞ்ச கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம்னு டாக்டர் சொல்லியிருக்கார் மாப்பிள்ளை” என்றார்.

எதுவுமறியாமல் அவர் பேசுவதை விரக்தியுடன் ஏறிட்டு, “கொஞ்சம் வெளியில போயிட்டு வந்திடுறோம் மாமா” என... எங்கேயென்று கேட்க அவர் வாய் திறக்கையிலேயே, “அரை மணிநேரத்துல வந்திடுறோம்” என்று காருக்குச் செல்ல, கார் ஹாஸ்பிடல் தாண்டி ஒரு கிலோமீட்டர் அளவு செல்கையில், தற்செயலாக நகையைக் கண்ட வரலட்சுமி என்ன செய்வதென்று தெரியாமல் மகனிடம் கேட்க... “இதனால புதுசா பிரச்சனை வேண்டாம்மா. நாம குடுத்துட்டுப் போகலாம்” என்றான்.

கார் திரும்பவும் ஹாஸ்பிடல் வர, “நீங்க குடுத்துட்டு வாங்க சாரகேஷ்” என்று கண்மூடி மனதை அடக்க முயற்சிக்க, சில நிமிடங்களில் வந்த சாரகேஷ் காரை எடுக்க, கார் நகர்ந்த சில நொடிகளில் திடீர் ப்ரேக் போடவும் என்னவென்று கேட்கையில் சாரகேஷ் கைநீட்டிய இடத்திலிருந்தவளைப் பார்த்த நொடி அவன் வசம் அவனில்லை.

அவளைக்கண்ட நொடி சந்தோஷத்தில், ‘என்னைத்தேடி வந்துவிட்டாளா? இப்பதான மாட்டேன்னு சொன்னா’ என முறுக்கிக் கொள்ளத் தோன்றிய மனதை அடக்கி மங்கையவளைக் காண, தலை கலைந்து கண்ணீருடன், ‘முகம் கவலையைக் காட்டவில்லையே? என்னைக் கண்ட மகிழ்விலா! கையில் என்ன? ஐயோ இரத்தம்.’ பார்த்த நொடி அவளருகே நின்றிருக்க, அவள் பேசியதில் தன் தவறு புரிந்தது.

‘இதோ என்னருகில்! என் அறையில்!’ கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள் சொன்னான். மனைவி என்ற உரிமை தந்த தைரியத்தில் அவள் மேல் கைபோட, தூக்கத்திலேயே தட்டிவிட்டாள். மெல்லிய புன்னகை எழ திரும்பவும் கைபோட, மறுபடியும் அதே நடக்க... “உஷார்தான் தியா நீ” என்று சிரித்தபடி திரும்பவும் போட்டான்.

சட்டெனக் கையைத் தட்டிவிட்டு எழுந்தமர்ந்து, தன்மேல் விழுந்தது என்னவென்று தேட... ஆனந்தும் எழுந்து, “என்ன தேடுற?” எனக் கேட்டான்.

அப்பொழுதுதான் அவனைக் கண்டவள், “நீங்க எப்படி இங்க? முதுகுல ஏதோ விழுந்தது தட்டிவிட்டேன். திரும்பவும் விழுந்ததும் பயந்து எழுந்துட்டேன்” என்றாள் படபடப்புடன்.

“ஓ.. சரி நீ படு.”

“இல்லங்க. ஏதோ...”

“ப்ச்... படுத்துக்கோ என்ன விழுந்ததுன்னு சொல்றேன்.”

“நீ..நீங்க எப்படி இங்க?”

“இது நம்ம ரூம் தியா. நாம ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப் நியாபகமிருக்கா?”

“அ..அது நியாபகமிருக்கு. பட்...”

“நான் பக்கத்துல வந்தா மறந்திருது அப்படித்தான? முதல்ல படு சொல்றேன்” என்றதும் சாய்வாகவே அவள் படுக்க, அவளருகில் படுத்ததும் கூச்சத்தில் எழப்போனவள் மேல் கைபோட்டு எழவிடாமல் செய்து, “இன்னைக்கு பர்ஸ்ட் நைட் கொண்டாடுறதா ஐடியாலாம் எனக்கில்ல” என்று சிரிக்க, ‘ஆ’வென அவள் விழிக்கையில் சட்டென்று கண்ணடித்து, பட்டென்று கன்னத்தில் முத்தமிட்டு, “இப்படி கைமட்டும்தான் போட்டேன். அதுக்குதான் இந்தக் குதி குதிக்கிற” என்றான்.

“ப்ளீஸ் கை...” மேலே பேசவிடாமல், “ஸ்ஸ்.. பேசாம தூங்கு” என்று, “தியா எதாவது சாப்பிடுறியா? நைட் சாப்பிடாமலே படுத்துட்டியே? எனக்கேட்க...

“இல்ல வேண்டாம். இப்ப எனக்குத் தூக்கம்தான் முக்கியம். குட் நைட்” என்றதும் சிரித்து, “குட் நைட்” சொல்லி மறுபுறம் திரும்பிப் படுத்தான் ஆனந்த்.

“என்னக்கா இப்படிச் சொல்ற?”

“நீ எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டன்னு நினைச்சேன் கார்த்தி. ஆனா, நீ...”

“நான் என்ன தப்பா சொன்னேன். குழந்தைக்கு தாய்மாமன்னு யாருமில்ல சொன்னேன். இதுல தப்பென்ன? அதான நிஜம்.”

“அக்கா அண்ணாவை ஏன் தாய்மாமனா ஏத்துக்கத் தோணல. அந்தத் தகுதி அவரைத்தவிர யாருக்கும் இல்லக்கா. அண்ணி காதுல விழுந்தா ரொம்ப வருத்தப்படுவா.”

“இதுல அவள் வருத்தப்பட என்னயிருக்கு கீர்த்தி? அத்தை மாமாவா வர்றதுல எனக்கெந்த ஆட்சேபணையும் இல்ல. ஆனா குழந்தையோட உரிமை விஷயத்துல அவர் யாரோதான்” என்றாள் பிடிவாதமாக.

“அந்த யாரோ ஒருத்தரோட மனைவியா, நான் அங்க வரத் தயாராயில்ல அண்ணி.” கண்களில் கோபத்துடன் கார்த்தியை நேருக்கு நேர் பார்த்து எதிரில் வந்து நின்றாள் வித்யா.
 
Top