• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
713
2



“போன வாரம் ரெண்டு நாள் லீவுல வந்திருந்தேன்டா குட்டீஸ். மகன் வந்திருக்கானேன்ற ஆசையில ஞாயிற்றுக்கிழமை பிரியாணி செஞ்சித்தர நானும் சும்மா வளைச்சி வாங்கிட்டேன். அப்புறம் தூக்கம் வரல. வயிறு ஃபுல் டைட்டுன்றதால உருளவும் முடியாம, புரளவும் முடியாம திணறி, சரி மொட்டை மாடியில போய் படுத்துக்கலாம்னு செல்போனும் கையுமா போயிட்டேன்.”

“உங்களுக்குத் தெரியுமா? எங்கப்பா சுதாகரனும், அத்தையும் அதான் உங்க சுபாஷிணி அம்மா ரெண்டுபேரும் கூடப்பிறந்த பாசமலர்கள். அதனாலதான் என் பெயரைக் கூட தங்கை நியாபகமா சுபாஷ்னு வச்சிட்டாங்க. தங்கச்சி தன்னைவிட்டு தூரம் போகக்கூடாதுன்னு செங்கல்பட்டுலயும், மதுராந்தகத்துலயும் டிவி ப்ரிட்ஜ் இன்னும் வீட்டுக்குத் தேவையான பொருட்களும் சேர்ந்த ஷோரூம் வச்சிருந்த எங்க மாமாவை முடிச்சாங்க.”

“அப்பவே அண்ணன் தங்கை ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வீடுகட்டி மாடிக்கு நடுவுல ஒரு குறுக்கு சுவர் கட்டி தங்கை குடும்பத்தை அங்கேயே வச்சிட்டார். இவங்க பாசத்துல பொங்கிப்போன எங்க மாமா எதையோ பேசி ரெண்டு குடும்பத்துக்கும் பகையை உண்டாக்கிட்டார். அப்போதிருந்து இப்பவரைக்கும் அந்த குடும்பத்து பொண்ணுங்க என்னை திரும்பிக்கூட பார்க்காதுங்க. நான் பார்க்க மாட்டேன்றது வேற விஷயம்” என்றான் அந்த நேரத்திலும் தன்னை நல்லவனாக்கி.

“இப்ப என்ன பிரச்சனைன்னா, நான் தூங்கப் போனேன்லயா, அன்னைக்கு நைட் ரெண்டு மணியிருக்கும். அப்ப என்மேல யாரோ தண்ணீரை தெளிச்சாங்க. யார்டா அது இவ்வளவு தைரியமான்னு வரிஞ்சிக்கட்டிட்டு எழுந்தா, அது நம்ம வர்ணபகவான். சரியா போச்சி போன்னு சொல்லி போனை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போயி கட்டில்ல படுத்துட்டேன். நல்ல தூக்கம் வேறயா. அப்படியே கண் அசர்றேன் யாரோ காலை என்மேல போட்டு, ஏய், ரொம்பக் குளிருது.. என்னை கட்டிப்பிடிச்சிக்கோன்னு ஒரு குரல் காதோரத்தில் கேட்டுது.”

“பார்ரா நம்ம கனவுல கூட பொண்ணு வருதேன்னு சந்தோஷத்துல, கனவுதானேன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாது பெண்கள் மென்மையானவங்கன்னு சொல்வாங்க. அந்த கனவுப்பெண்ணும் அவ்வளவு ஷாப்ட்” என்று ரசித்தவன் மனதினுள் முதல் தடவை உணர்ந்த அந்த அனுபவம் இன்னும் உடலில் சில்லென்று இருந்தது.

“கட்டிப் பிடிச்சிட்டிருக்கும் போது திடீர்னு, ஏய் நீ எப்படி என்னைவிட ஹைட்டான? பட், இந்த குளிருக்கு இதான் சூப்பராயிருக்குன்னு முழுவதும் என்னுடன் ஒண்டினாள் அக்கனவுப்பெண்.”

“ஆனாலும் பசங்களா, அந்த கனவு கனவாவே இருந்திருக்கலாம். விதி ரூம்போட்டு விளையாடிச்சி!”

‘ப்ச்.. ப்ச்..’ என பிள்ளைகளின் பல்லி ஒலி சப்தங்கள் அவன் காதில் விழ, முகத்தை அப்பாவியாய் வைத்து அடுத்ததைத் தொடர்ந்தான்.

“காலையில ஏழுமணியிருக்கும் மழை பெய்ததால் நேரம் தெரியல. வெளியில் ஹாலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக எழுந்திருக்கேன், ஒரு பொண்ணு என்னை கட்டிப்பிடிச்சிப் படுத்திருக்கா. ஒரு செகண்ட் அரண்டே போயிட்டேன். யாரது என் பெட்ரூம்லன்னு பார்த்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. ஐயோ! இவ எப்படி என் ரூம்ல? வீடு ஒரே மாதிரி இருக்கிறதால மாத்தி வந்து படுத்துட்டாளோன்னு நான் பார்க்க, ஒரு பையனோட படுத்திருக்கோமேன்னு உறுத்தலில்லாம ஹாயா படுத்து தூங்குறா. அவளை எழுப்பலாம்னு போனா, அதுக்குள்ள மறுபடியும் பெல் அடிச்சது.”

“அம்மா யார் பெல் அடிக்கிறாங்க பார்க்கலாம்லன்னு கைலியை கட்டுனபடியே கதவைத் திறந்தபடி கட்டி முடிச்சிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன், அத்தையும் மாமாவும் அவங்க சின்னப் பொண்ணும். என்னடா பெரிய உலக அதிசயமா இருக்கு, நம்ம வீட்டுக்கு இவங்க வர்றாங்களா? அப்ப பகையை முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்களான்னு நினைப்பு பலவிதத்துல ஓடுது.”

“ஆனா, வந்தவங்க என்னை அந்த காஸ்ட்யூம்ல கொலை வெறியோட பார்க்க, நான் பெரிய இவனாட்டம் வாங்கத்தை. வாங்க மாமான்னுட்டு, அப்பா யார் வந்திருக்கா பாருங்கன்னு சௌண்ட் குடுக்க, எங்கப்பா ஜாகிங் முடிச்சிட்டு பக்கத்து வீட்டுக்குள்ள நுழையுறாங்க. அப்பவாவது நான் சுதாரிச்சிருக்கணும். எங்கே விதிதான் டன்டனக்கா டான்ஸ் ஆடுச்சே!”

அப்பாவைப் பார்த்து, “அப்பா அங்க எங்க போறீங்க? நம்ம வீடு இங்கயிருக்குன்னு” பாசத்தோட அழைக்க, போற வர்ற ஜனங்க நிற்க ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பத்தான் அடுத்த ஏழரை ஆரம்பிச்சது. “ஹேய் கீர்த்தி நைட்டே வந்தாச்சா. அதெப்படிடி திடீர்னு ஹைட்டான. குளிருக்கு சூப்பரா உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டேன்னு சொன்னப்பத்தான் நைட் என்னோட ரூம்ல நடந்தது கனவில்ல, நிஜம்னு தெரிஞ்சது.”

“ஓ மை காட்!” என பிள்ளைகள் எக்கோ கொடுக்க...

“அடக்கிரகமேன்னு அவளைப் பார்த்து, நீ எப்படி எங்க வீட்ல, என் ரூம்குள்ளன்னு சொல்லும் போதே அவளோட அதிர்ச்சி முகத்தால எனக்குள்ள ஏதோ இடறிடுச்சி.”

“என்னது? நான் உன் ரூம்லயா? நீ யாரு? நீ இங்க என்ன பண்ற? கீர்த்தி நீதான நைட் என்னோட படுத்திருந்த? அப்படின்னு அவளோட தங்கச்சிகிட்ட கேட்டாள்.”

“அக்கா நாங்க இப்பத்தான் வீட்டுக்கே வர்றோம்” என்று அசராமல் அக்காவின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாள் அவளின் பாசமலர்.

“சட்டென்று கால் நழுவ தள்ளாடி சுவற்றில் சாய்ந்தவள் பார்வை குற்றச்சாட்டோடு என் மேலேயே இருக்க.. எனக்குமே ஒண்ணும் புரியல. மாமா என்னை செவுடுகாட்டி ஒண்ணு விட்டார் பாருங்க. அப்பத்தான் தெரிஞ்சது...”

“என்ன.. என்ன தெரிஞ்சது அண்ணா?” அதுவரை சாக்லேட்டிற்காக காத்திருந்தவர்கள் கதையில் மூழ்கி ஆர்வத்தில் கேட்க...

“ம்.. என்னை அடிச்சிட்டார்ன்றது தான்.”

“ம்க்கும்.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா” என பிள்ளைகள் முனகி மேலே சொல்லச் சொல்லி சைகை செய்தார்கள்.

“அந்தப் பொண்ணு கண்ணுல தண்ணீரோட என்னை பார்வையிலேயே எரிக்கிறாள்னா, இங்க என்னோட கன்னம் அடியால எரியுது. ஆனாலும், அவளோட கண்ணீர் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சி. அத்தை என்கிட்ட வந்து இங்க என்ன பண்றன்னு கேட்டாங்க.”

“அதை நான் கேட்கணும் அத்தை. எங்க வீட்ல நீங்க என்ன பண்றீங்க? ஏன் உங்க பொண்ணு என் பெட்ரூம்ல வந்து படுத்தாள்னு கேட்டுட்டேன். அவ்வளவுதான்! தவளை தன் வாயால கெடும்னு உள்ள பழமொழிக்கு சரியான சாம்பிள் பீஸ் நான்தான்.”

“என்னடா சொல்ற? நைட்புல்லா ஒரே பெட்லயான்னு?” பக்கத்து வீட்டம்மா டௌட் கேட்க, நானும் யாயான்னு கூலா பதில் சொல்லி செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டேன்.”

அதன்பின் அனைத்தும் அவன் நினைவுகளில் ஒடியது.

“சுபாஷ் தூக்கக் கலக்கத்துல ஏதோ உளறுறன்னு தெரியுது. இது உங்க வீடு கிடையாது. எப்படி உள்ள வந்த? என்றார் சுபாஷிணி.

“என்ன அத்தை உளர்றீங்க? இது எங்க வீடு” என்று உரிமையாக சொன்னான்.

“அத்தை வீட்டைத்தான் தன் வீடுன்னு பையன் உரிமை கொண்டாடுறான்பா” என கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது.

அதுவரை வீட்டுக்கு வெளியே என்னவோ என்று பார்த்துக் கொண்டிருந்த சுபாஷின் அப்பா சுதாகர் பல்லைக்கடித்தபடி கோபத்தை அடக்கி, “என்ன பண்ணிட்டிருக்கன்னு புரியுதாடா? இது நம்ம வீடு இல்ல. நல்லா பாரு” என்றார் கடுமையான குரலில்.

சுற்றிலும் பார்த்தவன் அவர்களின் குடும்ப போட்டோவைப் பார்த்து அப்படியே நிற்க, தொண்டைக்குள் எச்சில் விழுங்கியபடி, “அப்பா! சாரிப்பா. நான் நம்ம வீட்டுக்குள்ள வர்றதா நினைச்சி பக்கத்துல வீட்ல..” வார்த்தைகள் ததிங்கினத்தோம் போட ரொம்பவே திணறினான்.

“பாவம் பையன். எத்தனை நாள் தெரியாம வந்திச்சோ தெரியலையே?” கூட்டம் அவனுக்காக வருத்தப்பட்டு கிசுகிசுத்தது கூட்டம்.

“வாடா” என்று சுதாகர் வீட்டுக்கு இழுத்துப் போகுமுன் வழிமறித்த சுபாஷிணி, “என் பொண்ணுக்கு ஒருவழியை சொல்லிட்டு போங்க” என்றார்.

“என்னமா? என்ன அர்த்தத்துல பேசுறன்னு புரியல? என்ன வழியை சொல்லணும்?” புரியாமல் அவர் கேட்க...

“அர்த்தம் வேணுமா? உங்க பையன் பண்ணின அனர்த்தத்துக்கு அர்த்தத்தை நான் எங்க போய் தேடுறது. இவ்வளவு ஆனதுக்கப்புறம் என் பொண்ணை எப்படி வெளியில கல்யாணம் பண்ணிக் குடுக்க முடியும்? ஒழுங்கா உங்க பையனையே மேரேஜ் பண்ணிக்கச் சொல்லுங்க. இல்லன்னா நடக்கிறதே வேற” என்றார் கோபத்தில்.

அதுவரை அதிர்ச்சியிலிருந்த கார்த்திகா கண்ணீர் துடைத்தபடி, “அம்மா நான் எந்த தப்பும் பண்ணல. எனக்கெதுக்கு இந்த தண்டனை. தப்பு செஞ்சது இவன். அவனுக்கு தண்டனை குடுக்கிறதை விட்டுட்டு தாம்பூலம் நீட்டுறீங்க. நான்லாம் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்” என்றாள் பிடிவாதமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
713
“கார்த்திமா உனக்காகத்தான்டா பேசுறேன். இப்பவே பாரு எல்லாரும் என்ன மாதிரி பேசுறாங்கன்னு. இது உன் வாழ்க்கைடா. இதுல நான் விளையாடுவேனா?”

“அவங்க பேசினா நடக்காததை நடந்ததா சொல்வீங்களா? அப்ப அவங்க சொல்றது நிஜமாகிடாதா?”

“சாரி அத்தை. என்னாலயும் இவளை மேரேஜ் பண்ணிக்க முடியாது. தப்புதான் தெரியாம எங்க வீட்டுக்குள்ள போறதா நினைச்சி உங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். அதுமட்டுமில்லாம இவ எங்க அப்பாவோட எதிரி பொண்ணு” என்றான்.

அவனுக்கு இவள் என்ன என்னை வேண்டாமென்று சொல்வது என்ற எண்ணமே.

“அதை நீ வீடு மாத்தி வந்து படுக்கும்போது யோசிச்சிருக்கணும். இல்லயா மத்தவங்க முன்னாடி இப்ப உளறுனியே, உங்க பொண்ணு ஏன் என்னோட பெட்ரூம்ல படுத்திருக்காள்னு அப்பவாவது யோசிச்சிருக்கணும்.”

“நான் மட்டும் உளறலை. உங்க பொண்ணும்தான் என்னை கட்டிப்பிடிச்சி உறங்கினதை உளறினா” என மெல்ல முணுமுணுக்க...

“டேய்! இங்கயிருந்தா நீ சரிப்படமாட்ட. முதல்ல நீ வீட்டுக்கு வா” என்றார் அவன் தந்தை.

அதற்குள் அவனின் தாயும் தங்கையும் பதறியபடி வர, “டேய் சுபாஷ் பக்கத்து வீட்டு மீனாக்கா என்னென்னவோ சொல்றாங்க. என்னடா பண்ணின நீ?” என்றார் படபடப்புடன்.

“நான் ஒண்ணுமே பண்ணலம்மா. தூக்கத்துல நம்ம வீடுன்னு நினைச்சி இங்க வந்து படுத்துட்டேன். அது இந்த பொண்ணோட ரூம்னு தெரியாதுமா. இந்தப் பொண்ணுதான் என்னை கட்டிப்பிடிச்...” என முடிக்குமுன் பளாரென்று ஒரு அறை விட்டார் அவனின் தாய் வாணி.

“நீ என்ன தப்பு பண்ணிருக்க தெரியுமா? ஒரு பொண்ணோட வாழ்க்கைடா. ஈஸியா சொல்ற அந்தப்பொண்ணு கட்டிப்பிடிச்சாள்னா, அது அவ தங்கைன்னு நினைச்சி. தடிமாடு நீன்னு தெரிஞ்சிருந்தா விளக்கமாத்தாலே நாலு போட்டு அனுப்பியிருப்பா” என்றவர் நாத்தனாரிடம் திரும்பி “சுபா நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்” என்றார் நாத்தனாரைப் பார்த்து.

அதில் இன்னுமே அழுகை வர முகம் மூடி அழுதவளைப் பார்த்தவன், ‘அச்சோ இப்படி அழுறாளே. யாராவது அழாதன்னு ஆறுதல் சொல்லுங்களேன்’ என்றது அவன் மனம். மனதில் மட்டுமே!

“அண்ணி இப்படி நடக்கும்னு யாரும் யோசிக்கக்கூட இல்ல. ஆனா, நடந்ததை ரப்பர் கொண்டு அழிக்க இது சாதாரண தப்பும் இல்ல. தெரியாம நடந்திருந்தாலும் உங்க பையன் என் பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டணும். இது என்னோட சின்னப் பொண்ணுக்காகன்னு மட்டுமில்ல, உங்க பொண்ணுக்காகவும்தான்” என்றார் மற்ற இரு பெண்களுக்காகவும் யோசித்து.

“சரி சுபா. நீ டேட் பிக்ஸ் பண்ணு. முறைப்படி எல்லாத்தையும் நடத்தலாம். இன்னைக்கு ஈவ்னிங்கே நிச்சயதார்த்தம்” என்றார் முடிவாய்.

“சுபா நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டியா?”

கணவனின் குரலில் அவர்புறம் திரும்பி, “சரிங்க நீங்க சொல்லுங்க? இதுக்கு என்ன முடிவு பண்ணலாம்? இவனை போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கலாமா? அப்புறம் வெளியே பேசுறவங்க வாயை எப்படி அடைப்பீங்க. வேறொருத்தன் வந்து உன்னோட மாமா பையன் நைட் புல்லா உன் பெட்ரூம்ல படுத்திருந்தானாமே அப்படின்னு கேட்டா, அவனுக்கு என்ன பதில் சொல்வீங்க? வேற யாரும் வேண்டாம், இங்க என்ன நடந்ததுன்னு தெரிஞ்ச பக்கத்துல உள்ள யாரையாவது, ரெண்டு பேரும் தங்கம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்?” என்றார் உலகநடப்பு புரிந்தவராய்.

மனைவியின் கேள்விகள் அனைத்தும் நியாயமாகப்படவே, “நீ செய்யுறதை செய்” என்றார் தணிவாகவே.

“நீங்க என்னண்ணா சொல்றீங்க? இல்ல முடியாது குடும்பப்பகைதான் முக்கியம்ன்றீங்களா?”

“இல்லமா. தப்பு என் பையன் மேலதான். இருந்தாலும் இது வாழ்க்கை. அதை நாம வலுக்கட்டாயமா திணிக்கிறோமோன்னு தோணுது.”

“அது அவங்களோட தப்பு. நைட் பின்கதவை பூட்டாம அஜாக்கிரதையா இருந்தது கார்த்தியோட தப்புனா, யார் வீட்டுக்குள்ள போறோம்னு தெரியாம வந்து படுத்தது சுபாஷோட தப்பு. அதுக்கு நாம ஒண்ணும் பண்ணமுடியாது.”

ஹ்ம்.. என பெருமூச்சிவிட்டபடி, “அப்ப சரி. ஈவ்னிங் நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணுமா” என்று மகனை அழைத்துச் சென்றார்.

“அம்மா.. ஏன்மா?” என்ற மகளின் கண்ணீர் வருத்தத்தைக் கொடுத்தாலும், “அவன் தப்பானவன் இல்லமா. எங்க அண்ணன் மாதிரி நல்ல பொறுப்பான பையன். இது அவனுக்குமே ஒரு அதிர்ச்சியான விஷயம்தான். புரிஞ்சி நடந்துக்கோ. அவனைவிட பெஸ்ட் லைஃப் பார்ட்னர் உனக்கு கிடைக்கமாட்டாங்க.”

“அப்ப தெரிஞ்சிதான் பண்றீங்களா?” கோபமாக தாயிடம் நேரடியாகவே கேட்டாள்.

“தெரிஞ்சி பண்ணலாம்னுதான் நினைச்சிருந்தேன். இப்ப நடந்ததுக்கு யாரும் பொறுப்பில்ல. ஏன் உனக்கும் அவனுக்குமே சம்பந்தமில்ல. இது கடவுள் போட்ட முடிச்சிடா. சரி பேசிட்டேயிருக்காம ஈவ்னிங் பங்சனுக்கு ரெடியாகு” என்று நகர்ந்தார்.

“அப்பா நீங்களும் இதுக்கு சப்போர்ட் பண்ணப்போறீங்களா?” என்றாள் யாராவது தன்னை இதிலிருந்து காப்பாற்ற மாட்டார்களா என்பதுபோல்.

“இருமா எதாவது பண்ணலாம். எப்படியும் கல்யாணம்னா உடனேவா வைக்கப் போறாங்க. இன்னைக்கு பேசட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்” என ஆறுதல் படுத்தினார்.

“நிறுத்திடலாமாப்பா?” ஆவலாக கேட்ட மகளிடம்.. “கண்டிப்பாடா. சான்ஸ் தேடலாம்” என ஆறுதலளித்தார்.

“சான்ஸ்தான! உங்க பொண்டாட்டி குடுத்திர கிடுத்திரப் போறாங்க” என்றாள் கார்த்திகா.

“எதுவாயிருந்தாலும் மாம்ஸ் ஹேண்ட்சம்யா. நீயும் ஓகேதான். ஆல் தி பெஸ்ட் கார்த்தி.” வாழ்த்தியபடி நிற்காமல் ஓடிவிட்டாள் கீர்த்தி. நின்றிருந்தால் தன்னைக் கொன்றுவிடுவாளே!

அங்கோ சுபாஷ் கத்திக் கொண்டிருந்தான். “தெரியாமல் பண்ணின தப்புக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லப்பா.”

“அதை நீ வீடு மாற்றி இறங்கும்போது யோசிச்சிருக்கணும்.”

“அத்தை பேசுற மாதிரியே பேசாதீங்கப்பா” என்றான் கோபமாக.

“அது இரத்தபாசம் அப்படித்தான் இருக்கும். கார்த்திகா நல்ல பொண்ணுடா. இப்ப உள்ள சில பொண்ணுங்க மாதிரி ஓவர் அலட்டல் கிடையாது. தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிற அமைதியான பொண்ணு. உன்னை நல்லா பார்த்துப்பாடா” என்றார் மருமகளை மகன் புரிந்துகொள்ள வேண்டுமென்று.

“அப்பா உங்க தங்கச்சி பொண்ணுன்றதுக்காக பொய்யெல்லாம் சொல்லாதீங்க. அவ கத்துற கத்து, அதுவும் அக்காவும் தங்கையும் போடுற சண்டை எனக்குத் தெரியாது நினைச்சீங்களா?”

“டேய்! அது தன்னுடைய வீடு, தன்னுடைய மனுஷங்கள்ன்ற உரிமையான பேச்சு சண்டை. இது கூட இல்லன்னா அவங்க மனுஷங்க லிஸ்ட்லயே சேர்க்க முடியாது. எங்க உரிமையிருக்கோ, அங்கதான் கோபமும், சண்டையும் வரும். ஏன் நீ வித்யாகிட்ட சண்டை போட்டதில்லையா என்ன? அது மாதிரிதான் இதுவும். மத்தபடி வெளியில யார்கிட்டயாவது வாய்குடுத்து பார்த்திருக்கிறியா?”

இல்லையென்ற மகனின் தலையாட்டலில், “இப்ப நடந்ததெல்லாம் மறந்துட்டு வாழ்க்கையை அவளோட வாழப்பாரு” என புத்திமதி சொல்லிக் கிளம்பினார்.

“அண்ணா, கார்த்திகா அண்ணி சூப்பர் சாய்ஸ்தான். எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். நல்ல அழகு. பட், கலர் மட்டும் உன்னளவுக்கு பார்த்தா கொஞ்சம் கம்மிதான்” என்ற தங்கையிடம்,

“ம்..ப்யூட்டி பார்லர் கூட்டிட்டுப்போயி என்னளவுக்கு மாத்திடறேன். போவியா” என்றான் கடுப்புடன். “என்னம்மா உங்க பங்குக்கு எதுவும் இருக்கா? இருந்தா முடிச்சிருங்க.”

“நீயே நொந்து போயிருக்கடா. நானும் எதுக்கு அட்வைஸ் பண்ணனும். உனக்கே தெரியாதா கார்த்தி நல்ல பொண்ணுன்னு” என ஆரம்பித்தார்.

“இதுக்கு உங்க ஊர்ல என்ன பெயர்? போங்கம்மா. அட்வைஸ் பண்ண வந்துட்டாங்க” என்றான் கடுப்புடன்.
 

Latest profile posts

வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top