• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் 2

New member
Joined
Mar 19, 2026
Messages
4
என்னடி சொல்ற என்று தீபிகா காயத்ரியிடம் கேட்க

அட ஆமா டி என்ன பண்றதுன்னு புரியல. இப்போ என்ன பண்றதுன்னு புரியல என்றாள்.

அது எப்படி காயத்ரி அஞ்சு வருஷம் லவ் இப்போ ப்ரேக் அப்புண்ணு சாதாரணமா சொல்றாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கும் தான் டி என்றால் காயத்ரி.

எப்படியாவது மகேஷ் சார பார்த்து பேசணும் என்று யோசித்தபடியே ஜூஸ் ஐ பருகினால். தீபிகா சற்று யோசித்தபடியே ஏண்டி காயத்ரி நம்ப ஏன் மகேஷ் சார் க்குக்கு தெரிஞ்சு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசிபாக்க கூடாது என்க

காயத்ரி யோசித்தபடியே மம் நல்லா ஐடியா என்று இருவரும் பில் கட்டிவிட்டு வெளியே வந்தனர்.

பஸ்ஸ்டோபில் நின்று கொண்டு இருக்க இங்க என்ன பண்ற தீபி என்று குரல் மிக அருகில் கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க அங்கே ஆறடி உயரத்தில் கம்பீரமான பார்வையையுடன் அழுத்தமாக அந்த இரு பெண்களையும் பார்த்தான்.

இவர் என்ன இங்க வந்து நிக்கிறாரு என்று தீபிகா பதட்டமாக

அவனை காண காயத்ரியின் மனமோ ஆஹ இவனா. இவன் என்ன இங்க. காயு என்ன நடந்தாலும் நிமிர்ந்து மட்டும் அந்த ஆள் மூஞ்சிய பாக்காத என்று குநிந்தே இருந்தாள்.

தீபிகாவோ காயத்ரியை பார்த்தவள் அடி பாவி எப்டி கோத்துவிட்டு ஒண்ணுமே தெரியாது மாதிரி நின்னுறுக்காலே என்று வராத தைரியத்தை வரவைத்து

அண்ணா அது செம் ஹாலிடே அதான் சும்மா வெளில என்று முடிக்கவில்லை.

இனி இப்படி வீட்ல சொல்லாம வராத சீக்கிரம் வீட்டுக்கு போ என்றுவிட்டு தன் பைக்கை எடுத்தவன் காயத்ரியின் குனிந்தபடி நிற்கும் நிலையை பார்த்து திமுறுபுடிச்ச கழுத என்று முணுமுணுத்து வண்டியை எடுத்திருந்தார்.

என்னடி உங்கன்னன் என்ன முறைக்கிராரு சொல்லி வை எல்லா நேரமும் ஒரே மாதிரி அமைதியாக இருக்கமாட்டேன் என்று தீபிகாவின் பக்கம் திரும்பியவள்

அப்போதுதான் அவளது கோபத்தை கண்டு அசடு வழிந்தவலாக என்னடி ஏன் டி கோபமா இருக்க என்றுவிட்டு கேட்க நீயெல்லாம் பிரெண்டாடி துரோகி என்று தீபிகா அவளை திட்ட தொடங்க

சரி விடு டி உன் உடன்பிறப்ப பார்த்தா எனக்கு ஆகாதுன்னு தெரியும் ல சாரி டி என்று ஒருவாறு தீபிகாவை சமன் செய்தவள் வீட்டின் அருகில் இருக்கும் பார்குக்கு சென்றனர்.

காயத்ரியின் முகவாட்டதை புரிந்தவல் இப்போ என்ன பண்றது காயு என்று தீபிகா கேட்க எனக்கும் ஒன்னும் புரியல. மகேஷ் சார் கிட்ட வேற எப்படி பேசமுடியும் என்றே யோசித்து பெண்ணவள் குழம்பினாள். என்னால நந்தினி அக்காவ பாக்க முடியலை. பித்து புடிச்சு போனவ போல இருக்கா என்று கண்ணில் கண்ணீரோடு கூற தீபிகாவுக்கு தவிப்பாக இருந்தது.

நான் வேனா அண்ணன் கிட்ட பேசவா என்றவுடன் காயத்ரி அவளை முறைக்க இல்ல டி அண்ணன் பேசினா கண்டிப்பா இது சொல்வ் ஆகும்னு தோணுது என்று விட்டு அவளையே பாக்க

இங்க பாரு தீபு இப்போதான் நம்ம குடும்ப சண்ட இல்லாம நம்ம தெரு அமைதியாக இருக்கு அது உனக்கு புடிக்களை என்றால் உடனே தீபிகா அவளை முறைக்க இப்படி மொரைக்காத டி ரொம்ப பயம் வருது எனக்கு என்றுவிட்டு பின் தீபிகா பாத்துக்கலாம் விடு என்றுவிட்டு இருவரும் வீடு வந்து சேர மாலை நான்கு ஆனது.

அப்போதும் நந்தினி கட்டிலில் படுத்து இருக்க காயத்ரிக்கு தான் என்ன செய்ய என்று புரியவில்லை. அம்மா அம்மா என்று குரல் கொடுக்க இங்க தான் டி இருக்கேன் என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுதவரை போய் பார்க்க அங்கே அவரோ என்ன டி சப்படிரியா என்றார். இல்லமா தீபிகா கூட இப்போதான் சாப்டு வந்தேன் என்றவள் அக்கா சாப்டாள என்றதும் அவளை பார்த்தவர்

இன்னும் இல்ல நானும் எவ்ளோ சொல்லிட்டேன் கேட்க மாற்றா என்றுவிட்டு தன் வேலையை செய்து கொண்டுருந்தார்.

அறைக்குள் சென்றவள் அக்கா என்க நந்தினி எழுந்துஅமர்ந்தால். என்ன ஆச்சு காயத்ரி மகேஷ் அஹ பாத்தியா என்றதும் இல்லை என்று தலையாட்டியவல் நந்தினியின் பரிதவிப்பு கண்டு மனம் சுணங்கினால். நந்தினியோ காயு நம்ம வேணும்னா அவர் வேல செய்ற இடத்துக்கு போய் பார்ப்போமா என்று கூற

இல்லக்கா நானும் தீப்பி யும் போனோம் ஆனா அங்க அவர் வேலை விட்டு போய்ட்டார் சொல்றாங்க என்றுவிட்டு மெதுவாக அவள் அருகில் அமர்ந்தாள். ஏக்கத்துடன் அப்போ என்ன அவர் லவ் பண்லயா என்ன ஏமாதீருக்காரா என்று கேட்க

அதுவரை இப்படி யோசிக்காத காயத்ரி நந்துவிடம் திரும்பி இதுக்கு என்ன பதில் அப்படினு உனக்கு நாளைக்கு தெரியும் நான் விசாரிக்கிரென் கா என்றுவிட்டு அவளிடம் உணவை நீட்ட பசியின் பிடியில் நந்தினியும் மறுக்காமல் வாங்கி சாப்பிட்டால்.

காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை ஆனால் மறுநாளே நந்தினி சொன்னா கோணத்தில் விசாரிதவலுக்கு தூக்கிவாரிப்போட்டது.

மகேஷின் நெருங்கிய நண்பன் ஒருவன் மகேஷின் தப்பான செயலை சொன்னான். அவன் இதுவரை பல பெண்களை இப்படி ஏமாற்றி பணம் மற்றும் அவர்களை சலிக்கும் வரை பயன்படுத்தி பின் அதை வைத்து அவர்களை மிரட்டி தன்னை காப்பாற்றி கொண்டது பற்றியும் அவனை பற்றி தெரிந்து ஒரு வாரம் முன்புதான் போலீஸ் அதிகாரி அரெஸ்ட் செய்தார் என்றும் கூற அவருக்கு கைகூப்பி நன்றி சொன்னவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே தெரியவில்லை.

இப்படி தன் அக்காவின் வாழ்கை ஆபத்தில் இருந்து உள்ளது என்பதை நினைதவழுக்கு நெஞ்சம் பதைபதைதது. அப்படியே ஹாலின் சோஃபாவில் அமர்ந்தாள். தன் அக்கா இதை தாங்குவாலா என்று பல்வேறு யோசிதவலுக்கு பதில் மட்டும் கிடைக்காமல் போனது என்ன விந்தையோ???
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top