- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
18
செல்லத்துரை தினக்குறிப்பிலிருந்து,
“எனக்கு டைரி எழுதும் பழக்கமில்லை. என் மனச் சஞ்சலங்களைப் புரிந்த நண்பன் ஒருவன், மனதிலுள்ள மொத்தத்தையும் இதில் கொட்டினால் கொஞ்சம் மனபாரம் குறையும் என்று கொடுத்ததுதான் இந்த டைரி. எழுத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதாமே!”
“இத்தனை வயதிற்குப் பின் எதை எழுதுவது? என்று மனம் கேட்க, எழுதித்தான் பாரேன் என்றது மூளை. ஒருவழியாக பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன். எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்ற குழப்பம் எழுகிறது. அப்பா, அம்மா, தங்கை என்பது அழகிய நினைவுகள். என் மனபாரத்திற்குக் காரணம் மனைவி என்கிற பொழுது அவளைப்பற்றியே எழுதலாமே!”
“அழகான அன்பான வாழ்க்கை என்று சொல்ல, என் பிள்ளைகளைத் தவிர என்னிடம் எதுவுமேயில்லை. காதல் என்ற மாயவலையில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போனவன் நான். தாய் தகப்பனை எதிர்த்துதான் திருமணம் செய்தேன். இரண்டு பேருக்குமே சொந்த ஊர் திருவண்ணாமலை அருகிலிருக்கும் பொன்னூர் கிராமம்தான்.”
“என்னதான் காதல் திருமணம் என்றாலும் ராஜேஸ்வரி இயல்பாக இல்லை என்று அடிக்கடி தோன்றும். என் மனைவி என்ற உரிமையில் நெருங்கினால் அவளோ ஒரேயடியாகத் தள்ளிப்போய்விடுவாள். விட்டுப்பிடித்தால் ஓரேயடியாக விலகினாள். திருமண வாழ்க்கையில் ஆண் பெண் உறவு சகஜமென்று சொல்லிப் பார்த்தும் பிரயோஜனமில்லை. அவளுக்கு அந்த உறவில் பிடித்தமில்லை என்பது புரிகிறது. என்னால் அப்படியிருக்க முடியலையே. நிஜமாகவே என்னுடையது காதல்தானா? என்ற கேள்வி எழ, ஒரு கட்டத்தில் அவளுக்குதான் என் மீது காதலில்லை என்று தெரிந்தது.”
“ஒருநாள் பிடிக்காமல் ஏன் கல்யாணம் செய்தாய்? என கேட்டதற்கு, தங்கள் பாதுகாப்பிற்காக என்றாள். பாதுகாப்பிற்கு இப்பொழுது எந்தக் குறையும் இல்லையே, இனியாவது என்னுடன் வாழ்க்கையை வாழலாமே என கேட்டதற்கு, பிடிக்கவில்லையென்று சொல்லிவிட்டாள். ஒரு அளவிற்கு மேல் கெஞ்சுவது எனக்கே அசிங்கமாக இருந்தது. வேறு வழியில்லாமல்தான் இந்த பாழாய்போன குடியில் தெரிந்தே விழுந்தேன்.”
“என் மகனின் ஏழாவது பிறந்தநாளன்று வேடிக்கை பார்க்க அவனை அழைத்துக் கொண்டு போனேன். அப்பொழுது ஒரு பெண்ணின் புடவை விலகி...”
“அத்தை படிக்க வேண்டாம் சொல்லுங்க” என்றான் செந்தூரன். வயதுப்பெண் ஆண்கள் நடுவில் படிக்கும் விஷயமாகத் தெரியவில்லை அவனுக்கு.
“அவள் ஒண்ணும் சின்னப்பிள்ளை கிடையாது செந்தூர் கண்ணா. இந்த இடம் மட்டும்தான். நான் படிச்சதாலதான் அவள்கிட்டக் கொடுக்கச் சொன்னதும் தைரியமா கொடுத்தேன். நீ படி பவிமா” என்றார்.
“அதைக் கண்டு மனதிற்குள் ஒருவித சலனம். ஒரு வினாடி சலனத்தால் என்னை நானே வெறுத்தேன். ஒழுக்கம் முக்கியமென்று வளர்க்கப்பட்ட, வளர்ந்த எனக்குள் இப்படியொரு எண்ணம் வரலாமா? அது எவ்வளவு பெரிய அசிங்கம். எங்கே தப்பான வழிக்குச் சென்று விடுவோமோ என்ற பயம் என்னை அலைக்கழிக்க, உரிமை உள்ளவளிடம் என் எண்ணம் மாறும் விதம் சொல்லி கேட்டேன். அவள் தர மறுக்க, அவ்வுரிமையை சில சமயம் அவள் அனுமதியில்லாமல் நானே எடுத்தேன். அதீத மன அழுத்தம் இருந்தால் மட்டுமே அவளை நாடுவது. அது தப்பு நிரந்தரமில்லையென்று தெரிந்துமே அதைச் செய்து, அந்த வலியையும் சேர்த்தே சுமக்கிறேன்.”
“பவானி வயிற்றில் வந்தது நாங்கள் எதிர்பாராதது. அப்பொழுதும் சந்தோஷம் எனக்கு மட்டுமே! செந்தூரனுக்கு வைத்த அதே மிரட்டல். எனக்கு மனைவியை விட பிள்ளைகள் முக்கியமாகத் தெரிகிறார்கள். என்னை உயிர்ப்போடு, உயிரோடு வைத்திருப்பவர்கள் அவர்கள்தானே! எனக்குப் பிறந்ததைத் தவிர அவர்களும்தான் என்ன தப்பு செய்தார்கள்?”
படிக்கப் படிக்கக் கண்களில் கண்ணீர் பிரவாகம் பவானியிடம். துடைத்தபடியே தொடர்ந்தாள்.
“என் ஆயுள் குறைந்துவிட்டதென்று மருத்துவர் சொல்கிறார். வாழ விருப்பமில்லாதவனுக்கு ஆயுள் இருந்தால் என்ன, குறைந்தால் என்ன? சாவைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டேன். இந்த மருத்துவர் வேறு, அந்த ட்ரீட்மெண்ட் பண்ணுங்க, இந்த ட்ரீட்மெண்ட் பண்ணுங்க என்று உயிரை வாங்குகிறார். இறப்பு உறுதியென்று தெரிந்த பின், எதற்குத் தேவையில்லாத செலவெல்லாம்.”
“என் மகன் மருத்துவம் படிக்கிறான். அவன் தங்கச்சியை அவன் பார்த்துப்பான். ரொம்ப பொறுப்பான பையன்..”
கேட்டுக்கொண்டிருந்த செந்தூரனால் தந்தையின் நம்பிக்கை வார்த்தையைப் பொறுக்க இயலாது, “இல்ல.. இல்லப்பா. நான் பொறுப்பான பையன் கிடையாது. ஏன்பா என்மேல் நம்பிக்கை வச்சீங்க? ஐயோ! உங்க நம்பிக்கையை நான் காப்பாத்தலைப்பா. நான் பாவிப்பா” என்று கதறினான்.
கணவனின் அழுகை தாளாது எழுந்து அவனிடம் வந்தவள் கையை அதியன் பிடித்து நிறுத்தி, “அழட்டும் விடுக்கா” என்றான்.
“அழ விட்டுட்டு வேடிக்கை பார்க்கச் சொல்றியா?” என்று தம்பியிடம் பாய,
“நீ சைக்யாட்ரிஸ்ட் என்பதை மச்சானைப் பார்த்தா மறந்திருற? அழுகை சில நேரம் நல்லதுதான். அதுவும் ஆண்கள் அழுகை எல்லா கசடுகளையும் விலக்கி வெளில வரும்” என,
“நானில்லாதப்ப தனியா இருந்து அழ வைத்துப்பார். இப்ப நான் கூடயிருக்கணும்டா” என்று தம்பியின் கையை உதறி கணவனிடம் சென்று ஆறுலாய்த் தோள்தொட,
“வேண்டாம் அன்பழகி! நீ போயிரு. நான் உனக்கு வேண்டாம். உன் கூடயிருந்து உன்னை நோகடிக்கத் தயாராயில்லை. எனக்கு பொண்ணுங்க உணர்வுகள் தெரியலை அன்பழகி. நான் நல்லவனும் கிடையாது. நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்திருறேன். நீ வேற யாரை...” வேகமாக கணவன் முன்புறம் சென்றவள் பளாரென்று கன்னத்தில் அடி வைத்தாள்.
அதிர்ந்து நின்றவனிடம், “என்னை.. என் கண்ணைப் பாருங்க. கண்ணை அங்கயிங்க அலைவிடாமல் பாருங்க” என்றாள் அதட்டலாக.
அவள் கண்பார்த்த நொடி சுற்றம் மறந்து, கண்ணெனும் சுழலுக்குள் சிக்கிய உணர்வு செந்தூரனுக்கு. தண்ணீர்த் திராட்சைக் கண்களுள் தொலைய, அங்கே அவன் அவள் மட்டுமே!
கணவனின் பார்வையின் வீரியம் சற்று அதிகமிருந்ததோ! மங்கையவளும் மதிமயங்கிப் போகையில் சுதாரித்து, “என்ன டைவர்ஸ் வேணுமா?” என்றாள்.
“ம்ம்..” என்றவன், அவளின் முறைப்பில் “ம்கூம்” என்றான் வேகமாக.
“என்ன பழக்கமிது? எப்பப்பாரு உங்களை நீங்களே தாழ்த்திக்கிட்டு, தப்புத்தப்பா முடிவெடுக்குறது? நேர்ல எதுவும் செய்யலைனாலும் இப்பவரை உங்க.. சாரி நம்ம குடும்பத்தைக் காப்பாற்றியது நீங்கதான். எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு உங்கம்மா மாதிரி விட்டுட்டுப் போகலையே? இப்பவரை நீங்கதான் குடும்பத்தலைவன். உங்ககிட்ட குறை இருக்குதான். இல்லைன்னு சொல்லமாட்டேன். இந்த உலகத்துக்குல குறையில்லாத மனிதன் யாருமே கிடையாதுன்னு படித்த உங்களுக்குத் தெரியாதா? நிறை குறை சோந்ததுதான் மனித வாழ்வு. நிறையை மட்டும் பக்கத்துல வச்சிட்டு, குறையைத் தூக்கிப்போட்டா, இந்த உலகத்துல குடும்பம்னு ஒண்ணு இருக்கவே இருக்காது.”
“அப்புறம் என்ன சொன்னீங்க? பொண்ணுங்க உணர்வா? பொண்ணுங்க உணர்வுகளைப் புரிஞ்சிக்காமல் போனது உங்க தப்பில்லையே? நீங்க வளர்ந்த விதம் அப்படி. ராஜேஸ்வரியம்மா மேல உள்ள அதிருப்தியில் மாமாவும் உங்களுக்கு சொல்லித்தர மறந்திருப்பாங்க. பவிக்குட்டி!” என்று நாத்தனாரைப் பார்த்தவள், பவானியின் கலங்கிய கண்கள் கண்டு, ‘அழாதே’ என்பதாய் தலையசைத்து கணவனிடம் திரும்பி, “என்ன சொல்ல தெரியலை. இப்பவும் நான் சொல்ல வர்றது அவளை நீங்க பார்த்திருந்திருக்கலாம்” என்று அவனது தப்பைச் சுட்டிக்காட்டவும் மறக்கவில்லை.
செந்தூரனோ சிலையாய் நின்றிருக்க, “ஹ்ம்... நடந்ததைப் பேசி எதுவும் ஆகப்போறதில்லை. அதைவிட எப்ப உங்க தப்பை நீங்க உணர்ந்தீங்களோ, அப்பவே உங்களுக்குப் பொறுப்பு வந்திருச்சி. இப்ப முழு மனிதன் நீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு உங்களை நீங்களே வருத்திக்கக்கூடாது. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?” என்றாள் அவன் கண்பார்த்து.
“அப்ப ஐ லவ் யூ சொல்லு?” என்றான் வேகமாக.
“என்னது?” என சில நொடித் தடுமாற்றம் வந்த பொழுதும், அன்பழகிக்குள் சிறு வெட்கமும் எழுந்ததென்னவோ உண்மை.
பேச்சு நல்லமுறையில் திசைமாறுவதை உணர்ந்ததுமே சிறு புன்னகையுடன் சதாசிவம் ராகினி இடத்தைவிட்டு அகல, மற்ற மூவரும் ஏதோ சினிமா பார்ப்பதுபோல் ஆவென்று பார்த்திருந்தார்கள்.
“ம்.. இப்பவே, இந்த நிமிடமே சொல்லு?” என அடமாக நின்றான் செந்தூரன்.
“செந்தூரா! நான் என்ன பேசிட்டிருக்கேன். நீங்க என்ன...” என்றவள் முகம் சிவக்க, மனம் கூத்தாட, இதழ்களில் மென்புன்னகை ஒன்று எழுந்தது.
“சிரிச்சா அழகாதான் இருக்க அன்பழகி. காலம் முழக்க அதை ரசிக்கிறேன். இப்ப சொல்லு?” என்றான்.
சட்டென்று அவள் முகம் சூடேற, உடலிலுள்ள காதல் அணுக்களெல்லாம் அழகாய் அவளை இம்சிக்க, “ம்.. சொல்லு?” என்று மாயப்புன்னகை சிந்தி இன்னுமே மனைவிக்கு இம்சையைக் கூட்டியவன், “என்னை.. என் கண்ணை மட்டும் பார்த்துச் சொல்லு செந்தூர அழகி” என்று மீசையை மெல்ல திருக, அவளின் இதயமும் அதில் சிக்கித் தவித்ததென்னவோ உண்மை.
“டாக்டர் மாதிரியா பண்றீங்க?” என்றவள் குரல் இறங்கியிருக்க,
“டாக்டர்லாம் வெளியில. இப்ப உன் புருஷனா மட்டும்தான் கேட்குறேன். சொல்லு?” சொல்லாமல் போகவிடமாட்டேன் என்பதாய் நின்றான்.
“அப்ப ஐ லவ் யூ” என்றாள் சற்றே அலட்சியக்குரலில்.
“என்ன? எனக்குக் கேட்கலை” என்க,
“எங்களுக்கும் கேட்கலை” என்று சத்தமில்லாமல் கேட்டு அகிலன், அதியன், பவானி மூவரும் அமர்ந்திருந்தபடியே இரு கன்னத்திலும் கைகொடுத்து வேடிக்கை பார்த்திருக்க,
“ஐ லவ் யூ சொன்னேன்” என்றாள் அவளும்.
“இந்த ஐ லவ் யூ எனக்குப் பிடிக்கலை. இன்னும் அழகா, அழுத்தமா சொல்லு?” என்று அவளைச் சீண்ட,
“யூ.. உன்னை.. ஐ லவ் யூ செந்தூரா! உன்னை நான் காதலிக்குறேன்! உன்னை மட்டுமே காதலிக்குறேன்! உன்னை மட்டுமே காதலிப்பேன்! நீயே என்னை மறுத்தாலும் என் காதல் நீ மட்டும்தான் செந்தூரா! ஐ லவ் யூ! ஐலவ் யூ இடியட்” என்று கத்தினாள்.
நொடிகூடத் தாமதிக்காது மனைவியை அணைத்திருந்தான் செந்தூரன்.
அவளின் ஐ லவ் யூவில் “வாவ்!” என்பதாய்ப் பார்த்திருந்த மற்ற மூவரும், செந்தூரனின் அணைத்தலில் “அச்சோ!” என கண்ணை மூடி திரும்பிக் கொண்டார்கள்.
“தேங்க் யூ. தேங்க் யூ சோ மச் அன்பழகி. எங்க உன்னை மிஸ் பண்ணிருவேனோ நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பயந்துட்டேயிருந்தேன். இப்ப என் அழகி என் கைக்குள்ள. லவ் யூ இந்த செந்தூரனின் அழகியே!” என்று நெற்றியில் முத்தமிட, இதமாய் நாடி நரம்பெல்லாம் இறங்கிய அவனின் காதலில், அளவிட முடியா வெட்கத்தில் தன் முகத்தை அவனுள்ளே புதைக்க, இன்னும் இறுக்கிக் கொண்டான் அவனின் செந்தூர அழகியை.
“முதல்முறை நான்னு தெரியாம, சாமியம்மாவைப் பேசினது சின்னப் பொண்ணாயிருந்தா தோள்ல தூக்கிப்போட்டு சுத்தியிருப்பேன் சொன்னீங்கள்ல? நான்னு தெரிந்ததும் ஏன் செய்யலை?” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்படியா? சாரி நானே மறந்துட்டேன். தூக்கிரவா அன்பழகி” என்று குனியப்போக,
அதற்கு மேல் முடியாது தங்கள் இருப்பை உணர்த்த, “அச்சோ! நாங்களும் இருக்கோம். போனதும் தூக்கிக்கோங்க” என்ற சத்தத்தில் தங்களின் நிலை உணர, ‘அச்சோ!’ என வெட்கம் வகைதொகையில்லாமல் அவளை ஆட்கொள்ள, திரும்பவும் கணவன் மார்பில் தஞ்சமடையப் போனவள், நிதர்சனம் உணர்ந்து தன்னறைக்கு ஓடிச்சென்று தஞ்சமடைந்தாள்.