- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
18
புதுமணமக்கள் அறைக்குள் சென்ற பிறகு, “ஜீவா நீ இருந்து நாளைக்கு மறுவீடு கூட்டிட்டு வந்துவிடு” என்று தாய் சொல்ல...
“எனக்கு வீட்ல ஒரு வேலை இருக்குமா. முடிந்ததும் திரும்பி வந்திடுறேன்” என்று ஒருமணிநேரம் கழித்து வந்தவன் ஒரு முடிவோடு மாடிக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவன் மனைவியினருகில் அமர்ந்து அவளையே பார்த்திருந்து, இரு கண்களிலும், கன்னங்களிலும் முத்தமிட... உடலசைந்தவளை கண்டுகொள்ளாமல், உதடோடு உதடு சேர்க்கும் நேரம் சட்டென தூக்கம் கலைந்தவள் அதிர்ந்தாற்போல் பார்த்தாள். அவ்வளவு நேரமும் அவன் வந்தால் எவ்வாறு சமாளிப்பதென்று எண்ணியபடி சற்றுமுன் கண்ணயர, கணவனின் முத்த சீண்டலில் கண்விழித்து அதிர்ந்து பார்த்தாள்.
அந்த பார்வையில் விழுந்தவன் திரும்பவும் கண்களில் முத்தமிட, வேகமாக எழுந்தமர்ந்து அவனைத் தள்ளிவிட்டாள்.
“ஏன் தேவி? என்ன பிரச்சனை உனக்கு? என்னை எதுக்காக அவாய்ட் பண்ற?” நேரடியாகவே கேட்டான்.
“எ... எனக்கு பிடிக்கல?”
“ஏன்?” என ஒற்றை வார்த்தையால் வினவ...
“ஏன்னு சொல்ல முடியாது. எனக்கு பிடிக்கல அவ்வளவுதான்.”
“உனக்கு கண் தெரியுமா தேவி?”
ஒரு வினாடி அதிர்ந்தவள் இல்லையென்று தலையாட்ட, அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவன் ‘ஓ...’ என்றபடி அவளை நெருங்க... அவளோ பின்னால் நகர... “கண்ணு தெரியாது சொன்ன? நான் உன்பக்கத்துல வர்றது எப்படி தெரியுது?”
“முழுசாதான் தெரியாது. உருவம் தெரியுமில்லையா?”
அதற்கும் ஒரு ‘ஓ...’ போட்டு, அவளை நெருங்கி, அவள் சுதாரிக்குமுன் உதட்டில் அழுந்த முத்தமிட்டு சில வினாடிகளில் விட்டவன், “ஐ லவ் யூ சுப்பு! ஐ லவ் யூ” என்று தன் சர்ட்டுக்குள் வைத்திருந்த ஒரு ஃபைலை எடுத்து மனைவியிடம் கொடுத்து கதவைத்திறந்து வெளியேறினான்.’
கணவன் சென்ற சில நிமிடங்கள் கழித்தே சுயஉணர்வு பெற்றவள், ‘இங்கே என்ன நடந்தது?’ என்பதுபோல் பார்த்தபடி நிற்க... கையிலிருந்த ஃபைல் என்னையும் பாரேன் என, அதைத்திறந்து பார்த்தவள் முகத்தில் ஏசியையும் மீறி வியர்வை அரும்புகள்...
‘தெரியுமா அவங்களுக்கு? தெரிஞ்சுமா எதுவும் கேட்காம தெரியாத மாதிரி இருந்தாங்க? ஏன்?’ மனதில் சோர்வு வந்தது. சற்று நேரத்தில் மனதைத்தேற்றி எப்படியாகிலும் அனைவருக்கும் தெரிந்துதானே ஆகணும். ஃபைலைப் பார்த்தே தன் பிரச்சனையை கணவன் கண்டுகொண்டான் என்பது தெரிந்தது. ‘என் மனமறிந்து நடப்பவன். ஹ்ம்... முன்னாடியே சொல்லியிருந்தா, அட்லீஸ்ட் லாஸ்ட்டைம் கேட்டப்ப சொல்லியிருந்தா கூட இந்த பிரிவுக்கு அவசியமிருந்திருக்காது.’ கணவன் சொன்ன ஐ லவ் யூ சுப்பு அவளை அசைக்க, “நான் இந்த மாதிரிதான் முடிவெடுப்பேன்னு, என் முடிவு தெரிஞ்சே சொன்னீங்களா ஜீவா? ஐ லவ் யூ ஜீவா. உங்களைவிட பலமடங்கு எனக்கு உங்களைப் பிடிக்கும். ஆனா, சேர்ந்து வாழ்றது கஷ்டம் ஜீவா. வெரி சாரி” என்றாள் தனக்குள்ளே.
மறுவீடு சடங்கெல்லாம் முடியும் வரை கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் ஒரு மௌன நாடகம் நடத்த, பெங்களுர் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. மருமகளை அழைக்க வந்த மாமியாரிடம், “நான் பெங்களுர் வரல அத்தை. இனி வரவும் மாட்டேன்” என்றாள்.
அவளின் அந்த பதிலில் வீட்டினர் அனைவரும் அதிர்ந்து, “ஏன்?” என்ற கேள்வி அவர்களிடமிருந்து புறப்பட்டது.
தன்னைச் சுற்றி நின்றவர்களை ஒரு பார்வை பார்த்து, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் கண் பார்த்தவள் சற்று தடுமாறி, பின் “எனக்கு கண் தெரியும். அதுவும் இருபது நாட்கள் முன்பே” என்றாள்.
அனைவரும் ஒருசேர சந்தோஷப்பட்டு பின், “ஏன் இத்தனை நாள் சொல்லலை?” என்ற கேள்வியோடு பார்க்க... அதிர வேண்டியவனோ, ‘உன்னை எனக்குத் தெரியாதா’ என்பதுபோல் நிற்க...
கணவனின் புறம் கைநீட்டி “இவங்கதான் காரணம்” என்றாள்.
“என்ன சொல்ற பாப்பா? இதுக்கும் மாப்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம்? அவங்க தப்பா எதுவும் செய்யமாட்டாங்க” என ராஜன் சொல்ல...
ஒரு விரக்திப் புன்னகையை வெளியிட்டு, “சரியாகவும் எதையும் செய்யலையேப்பா?” என்றாள்.
அனைவருக்கும் எதோ புரிவது போலிருந்தது. ஜீவாவிடம் திரும்பிய ராஜன், “இன்னும் சொல்லலையா?” என்று கேட்க, கலங்கிய மனதைக் கட்டுப்படுத்தி இல்லையென்று தலையசைத்தான். அந்த பதிலிலேயே சுபாவைச் சார்ந்தவர்கள் சோர்வுற்று... ‘சொல்லியிருக்கலாமே!’ என்பதுபோல் பார்த்தார்கள்.
அவர்களின் குற்றப்பார்வையை தாங்கும் சக்தியில்லாமல் தலைகவிழ்ந்தான் ஜீவா.
கணவனின் தலைகுனிவை பார்த்தவளுக்கு நெஞ்சோரம் வலித்தது. மற்றவர்கள் முன் குற்றவாளியாக தன் கணவன் நிற்கிறானே என்று கண்கள் கலங்கியது.
“தேவிமா அவன் சொல்ல ட்ரை பண்ணினான். ஆனா, எங்க நீ அவனைத் தப்பா எடுத்துப்பியோன்னு பயம்தான்மா அவனைத் தடுத்தது.”
“எது தடுத்தாலும் சொல்லியிருக்கலாம் அத்தை. இரண்டரை மாசம், எழுபத்தைந்து நாள் இதுல ஒரு பத்து நிமிஷம் கூடவா அவங்களுக்கு கிடைக்கல?”
“தேவி புரிஞ்சிக்கோடா. அவன் ஏதோ உன்மேல உள்ள அன்புல...”
“நானும் அதே அன்புலதான் அத்தை வேண்டாம்னு சொல்றேன். கோபத்துல அவங்களோட சேர்ந்திருந்தா அன்புன்னு ஒண்ணு எனக்கு இல்லாமலே போயிரும். பக்கத்துலயிருந்து அவங்களை நான் சொல்லாலயோ, செயலாலயோ கஷ்டப்படுத்த விரும்பல. நாங்க சேர்ந்து வாழ்றதுன்றதும் நடக்காத ஒண்ணு.”
“தேவிமா!”
“வேண்டாம் அத்தை. நீங்க என்ன சமாதானம் பண்ணினாலும் என்னால வரமுடியாது.”
“ஏன் பாப்பா இப்படிப் பண்ற? நடந்ததை மறந்து வாழ முயற்சிக்கலாமே? மருமகன் தங்கமானவர். யாருக்கு இந்த மாதிரி புருஷன் கிடைக்கும்” என மருமகனுக்காய் சுந்தரி மகளிடம் மன்றாடினார்.
“மறக்கிறதா? எப்படிமா, எப்படி முடியும் என்னால? அதை நினைச்சாலே எனக்கு என்னையே எரிச்சிக்கலாம் போலயிருக்கு” என்று அத்தனை நாள் சேர்த்து வைத்த கோபத்தையும், இயலாமையையும் தன் மொத்தக்குரலில் காட்டி கத்தினாள். அவளின் வார்த்தைகள் தீயாய் மற்றவர்களைத் தாக்க, அனைவரின் அதட்டலையும் ஒருசேரக் கேட்டவள், கணவனைப் பார்த்தாள்.
‘நீயா பேசியது?’ என்பதுபோல் வலிமிகுந்த பார்வை ஒன்றை வீசி வீட்டைவிட்டு வெளியே சென்றான்.
கண்கலங்க செல்பவனையே சுபா வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “உன்னோட கோபம் நியாயமானதுதான் தேவி. ஆனா, இந்தளவுக்கு எதிர்பார்க்கலை. உன்னோட வரவுக்காக எங்க வீட்டு வாசற்கதவு எப்பொழுதும் திறந்திருக்கும். நாங்க கிளம்பறோம்” என்று வந்தனா வருத்தத்துடன் வெளியேறினார்.
“என்ன வார்த்தை பேசிட்டீங்கண்ணி? அண்ணா பாவம் அண்ணி. உங்களை நேசிச்சது கூட தப்பு சொல்வீங்களா? அவன் கண்கலங்கி நான் பார்த்ததில்லை. நீங்க சொன்னதை எங்களாலயே தாங்க முடியலையே, அவன் எப்படி? பேசுறதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் அண்ணி” சாதனா அழுகையுடன் கூற... ப்ரேம் மனைவியைத் தொட, “என்னால முடியலங்க” என கணவன் தோள் சாய்ந்தழுதாள்.
“தேவி கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டதா நினைச்சி தப்பு பண்ணினது நாங்க. இதுல அவங்க சைடு தப்பு எதுவுமில்லமா” என ப்ரேம் தங்கைக்கு புரியவைக்க முயற்சித்தான்.
“கல்யாணத்துக்கு பிறகு தெரியும்தான?” நிதானமாக அண்ணனிடம் கேட்டாள்.
“ஓ... அப்ப முடிவா என்னதான் சொல்ல வர்ற?” என்றார் ராஜன்.
“நான் ஆம்பத்திலிருந்தே சொல்றதுதான்பா என்னோட முடிவும். என்னால அவங்களோட சேர்ந்து வாழ முடியாது” என ஆணித்தரமாக சொல்ல...
“அப்ப உனக்கு இந்த வீட்ல இடமும் கிடையாது” என்றார் ராஜன்.
“அப்பாஆஆஆ...” என்று சுபா அதிர, மற்றவர்களும் அவரின் இந்த முடிவில் அதிர்ந்து நின்றார்கள்.
“ஆமா. அப்பாதான் சொல்றேன். உன் புருஷனோட சேர்ந்து வாழ்றதாயிருந்தா இங்கயிருக்கலாம். இல்லையா மனசுமாற கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டாலும் இருக்கலாம். கடைசிவரை இப்படியேதான் இருப்பேன்னு சொன்னா, உனக்கு என் வீட்டுல இடமில்லை. நீ வெளில போகலாம்” என்றார் கறாராக.
“அப்பா நான் உங்க பொண்ணுப்பா. என்னோட ஃபீலிங்ஸ் புரிஞ்சிக்க மாட்டீங்களா?”
“நானும் என் பொண்ணில்லன்னு சொல்லலையே? அதனாலதான் மனசுமாற டைம் எடுத்துக்கோ சொல்றேன். மாட்டேன்னா எனக்கெது நியாயம்னு படுதோ அதைத்தான் செய்வேன்” என்றார் அழுத்தமாக.
“என்னங்க” என்ற மனைவியிடமும், “அப்பா, மாமா” என்ற மகன், மருமகளிடமும்... “இது என்னோட முடிவு” என்றார்.
அதற்குமேல் மற்றவர்களால் பேச முடியவில்லை.