- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
16
“என்ன மேடம் அப்படியே ஸ்டன்னாகிட்டீங்க? ஒரு ஹாய்! ஹலோ! ஹவ் ஆர் யூ! எதுவுமே கிடையாதா?” என்றான் வித்யாவின் முன் கையை ஆட்டியபடி.
ஆனந்த்தின் கிண்டலில் உணர்வு வந்து, “ஹாய்! நீங்க வரமாட்டீங்க சொன்னாங்க. நீங்க எப்படி இங்க?”
“அதுல மேடம்கு சந்தோஷம்போல. வரவேண்டாம்னுதான் நினைச்சேன். ஏன்னா மேரேஜ்கு அப்புறம் ஸ்பெஷல் லீவு எடுக்கணுமே” என்று அர்த்தமாய் அவள் கண்பார்க்க... அவன் பார்வை தவிர்த்து குனிந்தவளுக்கு உள்ளுக்குள் படபடப்பு வர, கீர்த்தியைத் தேடியலைந்தனவோ கண்கள்!
“எங்க கம்பெனி பிராஞ்ச் செங்கல்பட்டு சைடு ஆரம்பிக்கிறதுக்குதான் அங்க வந்ததே. பக்கத்துல ஆசிரமம் இருந்ததால அந்த இடம் வேண்டாம்னு சொல்லி, இங்க சென்னை உரகடம் ஏரியால பார்த்து, இப்ப பில்டிங் ஒர்க் நடந்துட்டிருக்கு. அங்க ஏதோ ப்ராப்ளம்னு அனுப்பி வச்சாங்க. இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பிருவேன். நீங்களும் இன்னைக்கு வர்றதால, ஒரு த்ரீ ஹவர்ஸ் பெர்மிஷன் கேட்டு எம்.டிக்கு லெட்டர் அனுப்பிட்டு ரிப்ளை கூடப் பார்க்காம வந்துட்டேன்.”
“அச்சோ ஏன் ரிப்ளை வர்றதுக்கு முன்ன வந்தீங்க? ஒரு வேளை பெர்மிஷன் குடுக்காம உங்க மேல எதாவது ஆக்ஷன் எடுத்தாங்கன்னா, உங்க நேம் ஸ்பாய்ல் ஆகுமே” என வருத்தப்பட்டாள்.
அவளின் அக்கறையில் மென்மையாக புன்னகைத்தவன், “அப்படி ஒரு சூழ்நிலை வந்தா பேசிப்பார்ப்பேன். இல்லன்னா ரிசைன் பண்ணிட்டு வேற வேலை தேட வேண்டியதுதான்” என்றான் கூலாக.
“இல்ல அப்படிலாம் நடக்காது. நான் சாமிகிட்ட வேண்டிக்கிறேன்” என்றாள் சற்று பயத்துடன்.
“என்ன மிஸஸ்.வித்யானந்த் வேலை போயிடும்னு பயப்படுறீங்களா?” என்று அவளைக் கலாட்டா செய்தான்.
அவனை முறைத்து, “அண்ணனும் ஐடி ஃபீல்டுதான். வேலையை விட்டுட்டு இன்னொரு கம்பெனி போற எக்ஸ்பீரியன்ஸ் ஒர்க்கர்கு அதைவிட கூடுதல் சம்பளத்தோட வேலை கிடைக்கும்னு தெரியாதளவு முட்டாள் கிடையாது. அதுவும் மூணு மணிநேர ப்ராப்ளம்காக மெமோ குடுப்பாங்களே தவிர, வேலையை விட்டு தூக்கலாம் மாட்டாங்க. நான் சொன்னது உங்க எம்.டிகிட்ட உங்களோட பெயருக்குக் கலங்கம் வந்திடக்கூடாதுன்னு” என்றாள் கோபமாக.
“வாவ்! மிஸஸ்.வித்யானந்த்கு நிறைய தெரிஞ்சிருக்கு. தேங்க் காட். என்னடா எதுவுமே தெரியாத பச்சைப்புள்ளைய கல்யாணம் பண்ணப்போறோமே, எல்ல்லாத்தையும்” ‘ல்’லில் அழுத்தம் கொடுத்து, “நாமதான் சொல்லித்தரணும் போலன்னு நினைச்சேன்.”
“ஹான்” என விழி விரித்து அவனைக்கா ண...
“நீ பெரிய பொண்ணுதான்” என்று கண்ணடிக்க, சட்டென்று அவள் பார்வையைத் திருப்ப, அனுவும் கீர்த்தியும் வந்து கொண்டிருந்தார்கள்.
“அண்ணா நீ எப்ப வந்த? வரப்போறதா சொல்லவேயில்ல” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் அனு.
“அதுவா, என் ஒய்ஃப் முதல்முறையா நம்ம ஊருக்கு வர்றதால பார்க்க வந்தேன். அப்படித்தான மிஸஸ்.வித்யானந்த்?” குறும்புடன் கேட்டான்.
“போதும் நீங்க மூணு பேரும் போடுற டிராமா. நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சிதான அவங்க என்னை தனியா விட்டுட்டுப் போனாங்க. இதுகூடத் தெரிஞ்சிக்காத பச்சைக் குழந்தையா நான்.”
“சோ ஸ்வீட் அண்ணி” என இருவரும் கொஞ்சினர்.
“நான்தான் உன்னைப் பெரிய பொண்ணுன்னு ஒத்துக்கிட்டேனேமா.” அப்பாவியாய் ஆனந்த் சொல்ல...
‘அச்சோ, மானத்தை வாங்குறானே!’ அவனை அடித்து நொறுக்க எழுந்த கையை மடக்கி முறைத்து, “சாப்பிட வாங்கப் போனவங்க ஏன் சும்மா வந்தீங்க?” என்றாள்.
“கொஞ்சம் கூட்டம் அதிகம் அண்ணி. அண்ணா நீ வாங்கிட்டு வா” என்றதும், யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென்று கேட்டதும் அனு தனக்குத் தேவையானதை சொல்ல, கீர்த்தியோ, “இங்க என்ன ஸ்பெஷல்னு கேட்டு வாங்கிட்டு வாங்கண்ணா” என்றாள்.
கடைசியாக வித்யாவைப் பார்த்தபடி நிற்க, தனக்காக நிற்பதை உணர்ந்து, “நான்-வெஜ் இல்லாத எதுனாலும் ஓகே” என்றதும் ஆர்டர் கொடுத்து, வந்ததும் சாப்பிட்டு முடித்து அங்கேயே சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
வரலட்சுமியிடமிருந்து அனுவிற்கு போன் வர, “இதோ வர்றோம்மா” என்று, “இன்னும் நேரம் போச்சி அவ்வளவுதான். எல்லாரும் கிளம்புங்க” என்று லிப்ட் அருகில் வர, திறந்த லிப்டிலிருந்த ஆட்கள் வரவும் அனுவும் கீர்த்தியும் உள்ளே சென்று வித்யா செல்லுமுன், “நெக்ஸ்ட் வரும்போது ஏறிக்கோங்க” என ஒருவர் அவளைத் தடுத்தார்.
“கீர்த்தி” என தவிப்புடன் அழைத்த வித்யாவின் கைபிடித்து, “படி வழியா கீழ போகலாம் வா” என்றான்.
பொது இடத்தில் கையைப் பிடித்தவனிடம், “கையை எடுங்க. ஒரு வயசுப்பொண்ணு கையைப் பிடிக்கிறது தப்புன்னு தெரியாதா?” என்றாள் கோபமாக.
“நான் பெரிய பொண்ணு கையைத்தான பிடிச்சேன். ஒரு வயசுப்பொண்ணை இல்லையே” என்று சிரிப்புடன் சொன்னான்.
“நீங்க இன்னும் கையை எடுக்கல” என்று அவனின் கையைத் தன்னிடமிருந்து விலக்கும்போது,
“ஏன்பா அதான் பிடிக்கல சொல்றாங்கள்ல. பப்ளிக் ப்ளேஸ்ல பொண்ணு கையைப் பிடிச்சி இழுக்கிற?” என்று ஒருவர் கேட்டார்.
“சார் இது எங்க பெர்சனல்.”
“பெர்சனல் வீட்டுக்குள்ள இருக்கணும். பப்ளிக்ல வந்தா கேட்கத்தான் செய்வாங்க. கேட்கக்கூடாதுன்னு நீ சொல்ல முடியாது” என்று நியாயம் பேசினார்.
“சார் அநியாயத்தைக் கண்டு பொங்குற உங்க குணம் எனக்குப் புரியுது. ஆனா, இது நீங்க நினைக்கிற மாதிரி பிரச்சனை கிடையாது” என்றான் அமைதியாக.
“பொண்ணு கையைப் பிடிச்சி இழுக்கிறது பெரிய விஷயமில்லையா? பாரு அந்தப்பொண்ணு எப்படி பயந்து போயிருக்கு.”
“அவளோட பயம் நீங்க பண்ற அலப்பறையினால வந்தது” என்றான் கடுப்புடன்.
சிசிடிவியைப் பார்த்திருந்த மேலாளருக்கு ஏதோ பிரச்சனையென்று புரிய வேகமாக லிப்ட் நோக்கி வந்து விசாரிக்க, ஆனந்தை முந்திக்கொண்டு அந்த நபர் சொல்ல... “சார் இங்க வர்ற லேடீஸ்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்றது எங்க ரூல்ஸ்ல ஒண்ணு. நீங்க கைபிடிச்சதும் இவங்க திட்டினதை சிசிடிவில பார்த்தேன். பார்க்க டீசன்டா இருக்கீங்க, இது தப்புன்னு தெரியலையா? மத்த பொண்ணுங்களையும் உங்க வீட்டுப் பொண்ணுங்களா பாருங்க சார்” என்று அறிவுரை சொன்னார்.
“நானும் எங்க வீட்டுப் பொண்ணைத் தவிர வேற யாரையும் தொட்டுப் பேசினதில்ல சார். வேணும்னா பாருங்க” என்று கண் காண்பித்த இடத்தில் பார்க்க... அங்கிருந்த அனைவரும் அடிப்பாவி! லுக் விட்டார்கள்.
சம்பந்தப்பட்டவளோ, கூட்டம் சேர்ந்த பயத்தில் ஆனந்தை நெருங்கி தன்னிரு கைகளால் அவனின் கைபிடித்து ‘போகலாம்’ என்பதாய் நின்றிருந்தாள்.
“கலிகாலம்டா சாமி. புருஷன் தொட்டதுக்குத்தான் இப்படி சிலிர்த்துக்கிச்சாக்கும். ஒண்ணு ஆம்பளை மேல விழுந்து நம்மைப் பார்க்க முடியாம முகம் சுழிக்க வைக்குதுங்க. இல்ல இப்படி ஆப்போசிட்டா செய்து நமக்கே பல்ப் குடுத்து படுத்துதுங்க” என்று தலையிலடித்துக் கிளம்பினர்.
அதில் கோபம் வந்தவன், “ஹலோ! அநியாயத்தைக் கண்டு பொங்குனவரே, எதையும் அரைகுறையா தெரிஞ்சிட்டு போகாதீங்க” என்று அவரை நிறுத்தி, “இவங்களுக்கும் எனக்கும் அடுத்த வாரம் இதே நாள்ல கல்யாணம். இதுவரை இவங்ககிட்ட நான் பேசியிருக்கேன்னா, அது பொண்ணு பார்த்த பின்னாடி வீட்ல உள்ளவங்க சம்மதத்தோட ஒன்றிரெண்டு முறைதான். அப்புறம் இன்னைக்குதான் பார்க்கிறேன். ஒரு சிலர் மாதிரி ஊர் சுத்துற ரகம் கிடையாது. அப்படி எங்க வீட்ல வளர்க்கவுமில்ல.”
“கைபிடிச்சது தற்செயல்னு இவங்களுக்கும் தெரியும். கட்டிக்கப் போறவனா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி கை பிடிக்கிறது தப்புன்னு சண்டை போட்டாங்க. இப்ப நீங்கள்லாம் வந்ததும் பயத்துலதான் கை பிடிச்சி இழுத்திட்டிருக்காங்க. இந்த கடைக்கு வந்தது கூட எங்களுக்கு கல்யாண ஜவுளி எடுக்கத்தான். அதையும் ப்ரூப் பண்ணனுமா?” என சத்தமிட்டு, “இதுக்கும் மேல எதையும் உங்களுக்கு நிரூபிக்கணும்னு அவசியமில்ல. இனிமேல் உண்மை எதுன்னு தெரியாம பேசாதீங்க. நீங்க கிளம்பலாம்” என்று கோபத்துடன் நின்றிருந்தான்.
“சாரி தம்பி. சாரிம்மா” என்று அவர் நகர... கடை மேளாலருமே மன்னிப்பு கேட்டார்.
“பரவாயில்ல சார். எல்லாரும் பொறுக்கியா இருக்கமாட்டாங்க. தாய் தங்கைன்னு பெண்களோட வளர்ந்தவன் நான். கண்ணால பார்த்ததை வச்சி இனிமேல் விசாரிக்காம தீர்ப்பு சொல்லாதீங்க. வா தியா போகலாம்” என்று படிக்கட்டு நோக்கி நகர்ந்தான்.
அவனையேதான் பார்த்திருந்தாள் வித்யா. அவன் மேலிருந்த மதிப்பு இன்னுமின்னும் அதிகமாக, இதயமும் அழகாக இடம் மாறியதோ! படிக்கட்டில் இறங்கும் பொழுது அவள் நின்று அவனையும் நிறுத்தி, “சாரி. என்னாலதான்” என்றாள் வருத்தத்துடன்.
அவள் கையைத் தட்டிக்கொடுத்து, “உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் தியா. ஆனா இப்ப...”
அவனின் ‘தியா’ என்ற அழைப்பில் புதிதாய் பார்த்தவள், “ஆனாவுக்கு இப்ப என்ன?” என்றாள் மனதில் தோன்றிய ஆனந்தத்தை மறைத்து.
“இப்ப இன்னும் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. அங்கங்க கல்யாணம்னு பேசிட்டாலே போன்ல மணிநேரக்கணக்குல பேசி, வீட்டிற்குத் தெரியாம டேட்டிங் அது இதுன்னு இல்லாத கண்றாவியெல்லாம் பண்றாங்க. கல்யாணத்திற்குப் பிறகு உரிமையா அனுபவிக்க வேண்டியதை முன்னாடியே அனுபவிச்சி அலுத்து, லைப் லாங் சண்டை போட்டே வாழ்க்கையைக் கெடுத்துக்கிறவங்கதான் அதிகம். அதுவும் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்சப்னு கொஞ்ச நஞ்ச அட்டகாசம் பண்ணல. பட் நீ எல்லாத்தையும் விட வித்தியாசமானவள். என்னோட தியா.. வித்யா!” என்றான் காதலுடன்.
வித்யாவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைப் படித்தவன், “ஏதோ நான்றதால அடி விழல. இதே வேற யாராவதா இருந்தா, செத்தான்டா சேகர்தான்” என்றதும் அவள் சிரிக்க, அச்சிரிப்பில் தானும் கலந்து. “நான் சொன்னது நிஜம்தான?” என்றான் புன்னகை மாறாது.
“நூத்துக்கு நூறு சரி. வேற யாராவதா இருந்தா... ப்ச்.. இப்ப எதுக்கு வேணாம் விடுங்க. நீங்க வந்தது அத்தைக்குத் தெரியுமா?”
“நான் சென்னை வந்திருக்கிறது மட்டும்தான் தெரியும். இங்க வந்தது தெரியாது. அனுவுக்குதான் இங்க வர்றது தெரியும். அம்மாவுக்கும் இனிமேல் தெரிய வச்சிடுறேன்.”
“அப்ப நீங்களும் திருட்டுத்தனம் பண்றீங்கள்ல?” என்று முறைத்தாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடி தனியா நீங்க எங்கயாவது மீட் பண்ணினீங்களான்னு, வருங்கால சந்ததியர் கேட்டா, ஆமான்னு சொல்ல ஒரு சந்திப்பு வேணுமேமா. அதான் இது...” என்று சிரித்ததில், வித்யாவோ உரிமையுடன் அடிக்க ஓங்கிய கையை மடக்கினாள்.
“உரிமையை உடனே வெளிப்படுத்திடணும் தியா” என்றான் மடங்கிய அவளின் கையைப் பார்த்தபடி.
பர்ஸ்ட் ப்ளோர் வந்ததும் அனுவும் கீர்த்தியும் “ஏன் லேட்? போன் மேல போன் வருது” என்றார்கள்.
“சின்ன பிரச்சனையாகிருச்சி. அதான் லேட்.”
“பிரச்சனையா? ஏன் என்னாச்சி?” என்றார்கள் பதற்றத்துடன்.
“அதெல்லாம் ஒண்ணமில்ல அண்ணி. இந்த மாதிரி நேரத்துல பதற்றப்படக்கூடாது. வாங்க உள்ள போகலாம்” என்றவள், “நீங்க?” என்று ஆனந்தைப் பார்த்தாள்.
“நீங்க போங்க. நான் அம்மாகிட்டக் கேட்டுட்டு வரலாம்னா வர்றேன். இல்லன்னா அப்படியே கிளம்புறேன்” என்றதும் மெல்ல தலையசைத்துச் சென்றாள்.
தேவையான ஆடைகள் அனைவருக்கும் எடுத்து மதிய உணவும் அங்கேயே முடித்து, நகைக் கடைக்குச் செல்வது வரை ஆனந்த் வரவில்லை. ‘அத்தை வேண்டாம் சொல்லிட்டாங்களா? அதான் வரலையா?’ ஏனோ புதிதாக எழுந்த ஆசை அவனை இன்னொரு முறை பார்க்கத் தூண்ட, பிறரறியாமல் கண்கள் அவனைத் தேடியது. ‘அவனைத் திருட்டுத்தனம் பண்றீங்களா?’ எனக் கேட்டவள் கண்களுடன் சேர்ந்து மனமோ அதையே செய்தது எவருமறியாமல்.