- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
14
மறுமாதம் முதல் வாரத்தில் வழக்கு நீதிமன்றத்திற்கு வர, ஏதோ ஒரு பயத்தில் ராஜேஸ்வரி வராமல் தங்கையை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்.
நீதிபதி வந்ததும் வழக்கு எண் வாசித்து முடித்ததும், “செந்தூரன் உங்க இரண்டு குடும்பத்துக்கும் பாதுகாப்புப் போட்டாச்சி. ஏன் ஏமாற்றிக் கல்யாணம் செய்தீங்க? ஏன் விவாகரத்துக் கேட்குறீங்கன்றதை இப்பச் சொல்லுங்க?” என்றார் நீதிபதி இளந்திரையன்.
“எங்க அம்மாதான் ஐயா காரணம்” என்றதும் ராஜலட்சுமிக்குப் பக்கென்றானது.
“உங்க அம்மாவா? அதாவது சாமியம்மா?”
“ஆமாங்கய்யா” என்றவன் அன்றைய தேதியையும் நேரத்தையும் சொல்லி, “நான் சொல்ற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கோ சொன்னாங்க. நான் நீங்க பார்த்த பொண்ணு வேண்டாம் சொன்னேன்.”
“அம்மா பார்த்த பெண்ணை வேண்டாம் சொல்லுற அளவுக்கு என்ன பிரச்சனை?”
“அதென்னவோ தெரியலைங்க ஐயா. எங்கம்மாவுக்கு எங்களைக் கண்டாலே ஆகாது. நானும் என் தங்கச்சியும் அன்புன்னா என்னன்னே தெரியாமல்தான் வளர்ந்தோம். திடீர்னு ஒருநாள் சாமியாரா போயிட்டாங்க. அதே மாதிரி திடீர்னு ஒருநாள் வந்து நான் சொல்லுற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கணும்னு கட்டாயப்படுத்தினாங்க.”
“என்னன்னு?” என்றார் நீதிபதி இளந்திரையன். ஏனோ, வழக்கின் சுவாரசியத்தில் இருபக்க வழக்கறிஞர்களையும் விடுத்துத் தானே வக்கீலாகிப் போனார்.
“அதை நான் சொன்னா யாரும் நம்பமாட்டாங்க ஐயா. இந்த உலகம் தாய்மையையும், தாயையும் கடவுளா மதிக்குது. ஒரு தாய் இப்படிச் செய்வாங்களா கேட்டா எல்லாரும் இல்லைன்னுதான் சொல்வாங்க. அதனால சாமியம்மாவும் இருந்தா இந்த விசாரணைக்கு வசதியாயிருக்கும் ஐயா” என்றான் பவ்யமாய்.
“இங்க அவங்க வந்திருக்காங்களா?”
“இல்லைங்க ஐயா. பக்கத்துல உள்ள விநாயகர் கோவில்ல இருக்காங்க. அதிகபட்சம் பத்து நிமிடத்திற்குள்ள இங்க வரவைக்கலாம்” என்றான் பவ்யம் குறையாது.
“இன்ஸ்பெக்டர் மணிவாசகம் இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள சாமியம்மா இங்கே இருக்கணும்” என்று கட்டளையிட்டதும் அடுத்த நொடி சல்யூட் வைத்து அவர் கிளம்ப, நடந்ததைச் சொல்லி அக்காவைப் பாதுகாக்க நினைத்து ராஜலட்சுமி போன் செய்ய, அதே நேரம் ஒரு சிறுவனால் சாமியம்மாவின் கைபேசி களவாடப்பட்டது செந்தூரனின் கைங்கர்யத்தால்.
“சதாசிவம் உங்க மனைவி இப்ப நல்லாயிருக்காங்கதானே? கொலை செய்ய முயற்சித்தது யாருன்னு தெரிஞ்சதா?” என்றார் நீதிபதி.
“நல்லாயிருக்காங்க ஐயா. இதுவரை யாருன்னு தெரியலை. பையன் வரவை அவங்க எதிர்பார்க்கலை போல. அவனைப் பார்த்ததும் தள்ளிவிட்டுட்டு ஓடிட்டாங்க. தாயைப் பார்க்குற வேகத்துல பையனும் அவங்களைப் பிடிக்காமல் விட்டுட்டான்.”
“ஓஹ் வர வர வீட்டுக்குள்ளேயும் பாதுகாப்பில்லை. ஜாக்கிரதையாயிருங்க சதாசிவம்” என்றார்.
சதாசிவத்துடன் குடும்ப ரீதியாகவும் பழக்கம் உண்டென்பதால் இந்த விசாரணை. சில உப்புப் பெறாத வழக்குகளை இளந்திரையனே பேசி அனுப்பிவிடுவார். சற்று இளகிய மனம் உள்ளவரும் கூட.
காவலதிகாரி மணிவாசகத்துடன் ராஜேஸ்வரி வர, தங்கையைத் தேடி அவ்விடம் உட்காரச் சென்றவரை, “உங்ககிட்ட விசாரணை இருக்கு. நீங்க கூண்டுக்கு வாங்கம்மா” என்று அவரைக் கூண்டிலேற்றி விலகி நின்றார் மணிவாசகம்.
தாயை அங்கு கண்டதில் செந்தூரனின் முகத்தில் வெற்றிப்புன்னகை எட்டிப்பார்க்க, ஒருவித அலட்சியபாவமும், சொல்லொணா ஆத்திரமும் வந்தது அவனிடத்தில்.
“வணக்கம்மா” என்று நீதிபதி ராஜேஸ்வரியை வணங்க, பதில் வணக்கமாக தானும் கைகுவித்தார் ராஜேஸ்வரி.
“உங்ககிட்ட சில சந்தேகங்கள் கேட்க வேண்டியதாயிருக்கு. உங்க சார்பா நீங்களே வாதாடுறீங்களா? இல்லை வக்கீல் யாரையாவது ஏற்பாடு பண்ணிக்கிறீங்களா? நாங்க பண்ணனும்னாலும் சொல்லுங்க பண்ணிரலாம்?” என கேட்டார்.
கோர்ட் படி ஏறியாகிவிட்டது. இனி ஆள் வைத்து வாதாடுவதெல்லாம் சரிவராதென்று பட, “நானே வாதாடுறேன்” என்று எழுதிக் காண்பித்தார்.
“அப்ப சரி. அதியன் நீங்க கேட்க வேண்டியதைக் கேட்கலாம்” என்று நீதிபதி அனுமதி கொடுத்ததும் அவருக்கு நன்றியுரைத்து எழுந்த அதியன் ராஜேஸ்வரியிடம் வந்து, “சாமியம்மா! உங்ககிட்டக் கேட்கிற கேள்விக்கு மறைக்காம, மறுக்காம பதில் தரணும்” எனவும், அவரும் மையமாகத் தலையசைக்க, “உங்க பெயர் என்ன?” என்றான்.
அவரோ வேகமாக எழுத்துப்பலகையை எடுத்து சாக்பீஸால் எழுதிக் காண்பித்தார்.
“மேடம்! இந்த எழுதுறது, படிக்குறது இதெல்லாம் உங்ககிட்ட வர்ற ஜனங்ககிட்ட வச்சிக்கோங்க. இங்க வாய் திறந்து பேசணும்” என்றான் அழுத்தமாக.
தான் மௌனம் பூண்டிருப்பதாக எழுதிக்காண்பிக்க, “பரவாயில்லை. உங்க மௌனத்தை எங்களுக்காகக் கொஞ்சம் உடைங்க” என்றான்.
அவரோ ‘சாமி குற்றம்’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள,
“ஓ... அப்படிச் சொல்றீங்களா? ஆனாலும் மேடம், உண்மையைச் சொல்றதுக்காக உங்க மௌனவிரதத்தை முறித்தால் எந்த சாமி குற்றமும் வராது. அப்படியே சாமி குற்றம்னா எல்லார்கிட்டயும்ல பேசாமல் இருக்கணும். அதெப்படி உங்க தங்கச்சிகிட்ட மட்டும் குரல் வருது” என்றதும் ராஜேஸ்வரி மறுப்பாகத் தலையசைக்க, “என்ன இல்லைன்னு சொல்றீங்களா? இதை நீங்களே பார்த்துப் பதிலைச் சொல்லுங்க நீதிபதி அவர்களே” என்று தன் கைபேசியைத் திறந்து ஒரு ஒளிப்படத்தை எடுத்து அங்கிருந்த ரைட்டரிடம் கொடுத்து நீதிபதி பார்வைக்கு அனுப்பினான்.
சென்ற முறை நீதிமன்றத்தின் வெளி வளாகத்திலும், உள்ளேயும் பேசியது, அதுவும் வன்மத்துடன் பேசியது பதிவாகியிருக்க அதைத் திரும்ப வாங்கிய அதியன், “இது நீங்கதானே?” என்றான் கிண்டலுடன்.
ஆமென்று அவர் தலையசைக்க, “இப்பச் சொல்லுங்க? உங்க பெயர் என்ன?” என்றான் திரும்பவும்.
ராஜேஸ்வரியோ கடவுளை வேண்ட ஆரம்பித்து நீதிபதியைப் பாவமாகப் பார்க்க,
நீதிபதியோ, “சொல்லுங்க மேடம்? போன முறை இங்க எடுத்த வீடியோதான் அது. இப்ப நீங்க வாய் பேசலைன்னா, மக்களை ஏமாத்துறதா சொல்லி ஃபோர்ஜரி கேஸ்ல போட்டுருவேன்” என்றார் மிரட்டலாக.
“என் பெயர் ராஜேஸ்வரிங்க ஐயா” என்றார் வேகமாக.
“குட். உங்க கணவர் என்ன செய்யுறார்? எத்தனை பிள்ளைங்க?” என்றான் அதியன்.
“கணவர் இறந்துட்டார். பையன் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு இருக்காங்க.”
“ஓ.. கணவர் எப்படி இறந்தார்?” என்று எதையோ அறியக் கேட்க,
“தெரியாது” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார்.
“சரி விடுங்க. அதை அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கும் உங்க மருமகளுக்கும் என்ன பிரச்சனை? யாரைக் கேட்டாலும் அவங்க திருமணம் நடக்க நீங்கதான் காரணம்னு சொல்றாங்க?” என்றான்.
“எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் கிடையாது.”
“ஓஹ் ஓகே” என்று அடுத்த வீடியோ பதிவை நீதிபதியிடம் கொடுக்க, அன்று கோவிலில் நடந்தது ஓடிக்கொண்டிருந்தது.
“இந்த வீடியோவுக்கு உங்க பதில் என்ன?” என்றார் நீதிபதி.
“அது சின்னப்பொண்ணு ஐயா. அதான் மனசுல தோன்றியதைப் பேசிருச்சி. அதை நான் அப்பவே மறந்துட்டேன்” என்றார் எதுவுமறியாதவராய்.
“மறந்த நீங்க ஏன் நல்லாயிருக்கிற இருவர் ஜாதகத்தை செவ்வாய்தோஷம் இருக்குன்னு பொய் சொல்ல வைத்து அன்பழகி குடும்பத்தை நம்ப வச்சீங்க?”
“நான் எதுவும் செய்யலை” என்றார் உறுதியாக.
“அப்படியா? என கேலியாகக் கேட்டு அவரின் இரத்தக் கொதிப்பை அதிகமாக்கிய அதியன், “நீதிபதி அவர்களே! பொய் ஜாதகம் பார்த்த அந்த ஜோதிடர் ராமசாமியை விசாரிக்க விரும்புகிறேன்” என்றதும் டவாலி பெயரை மூன்று முறை அழைக்க, அவர் வந்ததும் செந்தூரன் கூண்டிலிருந்து இறங்க, ஜோதிடர் தன் வாக்குமூலத்தில் சாமியம்மாள் பெயரைச் சொல்லி சேகர் என்பவர் வந்து பேசியதும், அவரே சாமியம்மாவை போனில் பேச வைத்ததாகவும் சொன்னதோடு, நல்ல பொருத்தமுள்ள இரு ஜாதகத்தையும் செவ்வாய்தோஷம் என பொய்யுரைக்கச் சொன்னதையும் மறைக்காது சொன்னார்.
“இப்ப என்ன சொல்றீங்க?” என்று ராஜேஸ்வரியிடம் கேட்டான் அதியன்.
“அவர் பொய் சொல்றார். நல்லாயிருக்கிற ஜாதகத்தை மாற்றி தோஷமுள்ள ஜாதகம்னு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதை நான் செய்யலை” என்று உறுதியாகக் கூறினார் ராஜேஸ்வரி.
“ஆனா, இதை நான்தான் செய்தேன்னு மிஸஸ்.ராகினிகிட்டேயும், மிஸஸ்.அன்பழகிகிட்டேயும் சொல்லியிருக்கீங்களே? அதை இல்லைன்னு சொல்லப் போறீங்களா?”
“என்மேல வீண் பழி போடுறாங்க. நான் எந்நேரமும் அம்மன் நாமத்தை உச்சரிக்கிறவள். பொய் புரட்டு எனக்குப் பிடிக்காத ஒண்ணு” என்றார் தைரியமாகவே.
“ம்.. பொய் புரட்டு உங்களுக்குப் பிடிக்காது. ஓகே. மிஸ்டர்.சேகரை வரவழைக்க கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றான் நீதிபதியைப் பார்த்து.
டவாலியின் அழைப்பில் சேகர் வர, “சொல்லுங்க சேகர்? ஜாதகத்தை மாற்றியதோடு, பையனுக்கு அப்பா அம்மா நீங்கன்னு நம்பவச்சி கல்யாணத்தை முடிச்சிருக்கீங்க? எதனாலன்னு சொல்ல முடியுமா? உண்மையை மறைக்கலாம்னு நினைத்தால் கண்டிப்பா இரண்டு வருட ஜெயில் உறுதி. ஏன்னா, நீங்க நடிச்சதுக்கு சாட்சி நிறையவே இருக்கு. ஏன் அவங்க கல்யாணப் பத்திரிக்கையே பெரிய சாட்சி. அதோட சேர்த்து அட்டம்ட் மர்டர் கேஸ் சிலதிலும் உங்க பெயர் இருக்கு. ஃபோர்ஜெரிக்கு இரண்டு வருடம். அட்டம்ட் மர்டருக்கு ஒரு ஏழெட்டு வருடம். ம்.. எப்படியும் பத்து வருட ஜெயில் உறுதி” என்றான்.
“இ..இல்லை எனக்கு எதுவும் தெரியாது” என பயத்தையும் மீறி சொல்ல,
“உங்க விதியை மாற்ற யாரால் முடியும்?” என்றபடி ஒரு வீடியோவை நீதிபதியிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தவன், “நீங்களே பாருங்க ஐயா. மனைவியின் சொந்த அக்கா மகளை காலேஜ் கேம்பஸ்லயே வைத்துக் கொல்லப் பார்த்திருக்காங்க. இந்த வீடியோ இவர் போன்லதான் இருந்தது. எப்படி வந்ததுன்னு அவர்தான சொல்லணும்?” என்று நிறுத்தினான்.
அதைப் பார்த்த நீதிபதி தன் லேப்டாப்பை சேகர் புறம் திருப்பி, “இதுக்கென்ன சொல்றீங்க?” என கேட்டதும் அரண்ட சேகர் ஏதோ பேசுமுன், “ஐயா! இந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டிதான் என்னைப் பெத்த அந்த தெய்வம் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க” என நேரம் பார்த்து மாட்டிவிட்டான் செந்தூரன்.
‘இது சீனியர் ரசிகாவோட வேலையாச்சே. இதெப்படி...’ உண்மையைச் சொல்ல பவானி எழப்போகையில் அவளின் கைபிடித்த அன்பழகி, “அமைதியா நடக்குறதை வேடிக்கை பார் பவிக்குட்டி” என்றாள்.
‘ம்..’ என்றவள், “என்னைக் கொலை செய்யப்போறதா எப்படி அண்ணி அவங்களால சொல்ல முடிஞ்சது? அந்நேரம் அண்ணன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்க. என்னைக் காரணமா வைத்து இன்னும் என்னென்ன செய்தாங்களோ தெரியலையே” என்றாள் புலம்பலாக.
“எல்லாமே தெரிய வரும்” என்றாள் அன்பழகி.
“இதுக்கென்ன சொல்றீங்க சேகர்? இது போதுமே உங்களை ஜெயில்ல போட” என்றான் அதியன்.
“இல்லை வேண்டாம். நான் சொல்லிருறேன்” என்று ஜாதகம் மாற்றியதில் ஆரம்பித்து தற்செயலாக நடந்த விபத்தைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி செந்தூரனைப் பயமுறுத்தி சம்மதிக்க வைத்தது வரை சொன்னதோடு, “இதெல்லாம் அண்ணியோட ஐடியாப்படிதான் சார் செய்தேன்” என பயத்துடன் முடித்தார்.
“தம்பி என்ன பேசுறீங்க? அவங்க ஏதோ சொல்றாங்கன்னா நீங்க செய்யாததை செய்ததா ஒத்துக்குறீங்க” என்று ராஜேஸ்வரி சேகரை அதட்டினார்.