- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
14
சற்று நேரத்திற்கெல்லாம் நர்ஸ் ஒருவர் வந்து, “பேஷண்ட் ரொம்ப பயந்து போயிருக்காங்க. அவங்க ஹெல்ப் இல்லன்னா நார்மல் டெலிவரி சிசேரியனாகிரும். அவங்க ஹஸ்பண்ட் வந்தாச்சா?” எனக்கேட்க...
“நான் அவங்களைப் பார்க்கலாமா சிஸ்டர்?”
“நீங்கதான் அவங்க ஹஸ்பண்டா? உள்ள வாங்க சார். உங்களுடைய அருகாமை அவங்க பயத்தைக் கொஞ்சம் போக்கும்” என்றதும் தொண்டைக்குள் அடைத்த துக்கத்தை மென்று முழுங்கி தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டு நர்ஸைப் பின் தொடர்ந்து உள்ளே செல்ல... “உங்க ஹஸ்பண்ட் வந்தாச்சிமா. இனியாவது கொஞ்சம் போ-ஆபரேட் பண்ணுங்க” என்றார்.
தன்னை நோக்கி புன்னகைத்தபடி வந்த கணவனைக் கேள்வியாய் பார்க்க, மனைவியினருகில் அமர்ந்து அவளின் முகம் பார்த்து சிரிக்க... “எதுக்கு இப்பப் பல்லைக் காட்டுறீங்க? நானே குறை மாசத்துல குழந்தை பிறக்குதேன்னு கவலைல இருக்கேன்” என்றாள் வருத்தத்துடன்.
“நான் கூடதான் குறை மாசம். ஏன் நல்லாத்தான இருக்கேன்.”
“நீங்க ஒன்பதாவது மாசம் பிறந்தீங்க.”
“அதான்மா குறை மாசம் சொல்றேன். சரி எதுக்கு பயந்த?”
“அது உறவுல குழந்தை...”
“கார்த்தி” என அதட்டி, “அது அடுத்தடுத்து தொடர்ந்து சொந்தத்துல பெண்ணெடுத்து பெண் கொடுக்கிறவங்களுக்கு. நமக்குக் கிடையாது புரியுதா?”
‘ம்...’ என அவள் தலையசைக்க... “நம்ம குழந்தை பெருசானதும், சொந்தத்துல முடிக்காம வெளியில பார்த்துக்கலாம்” என... அதற்கும் அவளின் ‘ம்’ என்ற பதிலே வர, “சரி எத்தனை குழந்தை பெத்துக்கலாம்?”
“கார்த்திகா கொஞ்சம் புஸ் பண்ணுங்க” என்று டாக்டர் சொல்ல...
“அவங்க சொல்றதைச் செய் கார்த்தி” என்று அவளின் முகம் வருட, சற்று மனதிலுள்ள பயம் விலக்கியதில் குழந்தைக்கு வழி செய்ய முயற்சிக்க... “என் கேள்விக்கு பதில் சொல்லு கார்த்தி. நாம எத்தனை குழந்தை பெத்துக்கலாம்?” என்றான் திரும்பவும்.
“நான் இங்க பேசுற நிலையிலயா இருக்கேன்” என்று திணற...
“பரவாயில்ல இப்பப் பேசினமாதிரியே பேசு என்றதும்... சுப்புபுபு.. ஓடிப்போயிரு. டெலிவரி நடக்கிற இடத்துல ஆம்பளை உனக்கென்ன வேலை?”
அவள் காதருகில் குனிந்து, “நான் வேலை பார்த்ததாலதான், நீ இங்க வந்து என்னையும் வரவழைச்சிருக்க” என்று கண்சிமிட்டியவன் நிமிர்ந்து, “அடப்பார்றா! நீதான் என் கண்ணாளனைக் காணவில்லைன்னு தேடுனியாம். சிஸ்டர் நீங்க சொல்லுங்க? இவ என்னைத் தேடினாதான?” மனைவியின் கண்பார்த்து நர்ஸின் புறம் திரும்பாமலேயே சிரிப்பை அடக்கியபடி சத்தமாகக் கேட்க... மனைவியவளோ அவன் வார்த்தை தனில் வாயடைத்துப் போயிருந்தாள்.
“ரொம்பவே சார். உங்களைப் பார்த்ததும் மாத்துறாங்க” என்று நர்ஸ் சிரிக்க...
“ஹான் கேட்டுக்கோ. என்னைத் தேடி வழிமேல் விழிவச்சிக் காத்திருந்தவளை ஏமாத்திடக்கூடாதுன்னு வந்தா, நீ என்னையவே விரட்டுற. கலிகாலம் முத்திடுத்து” என முகத்தைச் சோகமாக வைக்க...
“சுப்பூஊஊ உன்னை வீட்டுக்கு வந்து கவனிச்சிக்கிறேன்.”
“ஹேய்! ஸ்..ஸ் இந்த நேரத்துல இப்படிலாம் பேசக்கூடாது” என்றதும் அவள் புரியாமல் பார்க்க... என்னை கவனிக்கிறதுக்கெல்லாம் கொஞ்ச நாளாகட்டும். இல்லன்னா என் பேபிய எப்படிப் பார்த்துப்ப?” அருகில் குனிந்து முணுமுணுக்க...
“ஐயோ! ச்சீ.. டபுள் மீனிங்ல பேசுறதை விடமாட்டியா?” என்று வெட்கம் கொள்ள...
“ஹான் அதெப்படி விடுறது” என்று கெத்தாகப் பேச... அதற்குள் தன் கண்ணாமூச்சி ஆட்டங்களையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய ஜுனியர் கார்த்திகா பூமிக்கு வந்தாள் சுகமாக.
குழந்தை பிறந்த மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிய, தொப்புள் கொடி அறுத்ததும் குழந்தையைக் க்ளீன் செய்து இன்குபேட்டில் வைத்தார்கள்.
‘இன்குபேட்’ என்றதும் அனைவரும் கலங்க... டெலிவரி பார்த்த டாக்டர்.ரோஜா அவர்களிடம் வந்து, “உடல் உறுப்புகளோட வளர்ச்சியெல்லாம் சரியாத்தானிருக்கு. நுரையீரல் கொஞ்சம் வளரணும். அதோட உடம்புலயும் கொஞ்சம் வெய்ட் ஏறணும். அப்பதான் குழந்தை நார்மல் பேபியாயிருக்கும்.. இல்லன்னா ம்..ன்றதுக்கு முன்னாடி ஊர்ல உள்ள வியாதியெல்லாம் காத்துல கலந்து குழந்தையைப் பாதிக்கும்” என்று சொல்ல...
“டாக்டர் குழந்தைக்கு வேறெதுவும்...”
“அதெல்லாம் வேண்டாம் என்கூட நீங்க மட்டும் வாங்க” என்று ஆண்களை மட்டும் அவருடன் அழைத்தச் சென்றவர், தன் கணவர் டாக்டர்.ராகுலிடம் ரிப்போர்ட் கொடுக்க...
அதைப் பார்த்து, “சாரி சார் உங்க குழந்தைக்கு வைரஸ் அட்டாக்காகியிருக்கு. இன்னும் இருபத்தினாலு மணிநேரம் போனால்தான் எதையும் தெளிவா சொல்ல முடியும். லேடீஸ்கு தெரிஞ்சா கலவரமாகுவாங்கன்னுதான் உங்களைத் தனியா கூப்பிட்டுப் பேசிட்டிருக்கோம்.’
“வைரஸ் அட்டாக் எப்படி சார்? இங்கதான் எல்லாவிதமான உபகரணங்களும் இருக்கே. அதனாலதான இங்க சேர்த்தோம். அப்புறம் வைரஸ் எப்படி?”
“மிஸ்டர்.சுபாஷ் ஊசி மூலமாவோ, மருந்து, மாத்திரை, மூலமாவோ, சுத்தமின்மையினால மட்டும் வர்றதில்ல. பிறந்ததும் அவங்க சுவாசிக்கிற வெளிக்காத்துல கூட வைரஸ் கிருமி கலந்திருக்கலாம். உங்க குழந்தைக்கு அதான் நடந்திருக்கு. எங்களால் முடிஞ்ச ட்ரீட்மெண்ட் குடுத்திட்டிருக்கோம். அதுக்கு மேல கடவுள் விட்டவழி.”
“இப்போதைக்கு வைரஸ் கிருமிகளை அழிக்க ஊசி மூலமா மருந்து குடுத்திருக்கோம். ஒரு ஊசி மருந்து விலை பத்தாயிரம் மேல வரும். இன்னைக்கு மட்டும் அந்த ஊசி இரண்டு போட வேண்டியிருக்கு.” பணக்கணக்கிலும் தாங்கள் பெரிய ஹாஸ்பிடல் என்பதைக் காட்டினார்கள்.
குழந்தையின் நிலையைப் பெண்கள் யாரிடமும் சொல்லவில்லை ஆண்கள். குழந்தையைத் தூரத்திலிருந்து பார்க்கிறோம் என்றவர்களையும் பார்க்கவிடவில்லை. ஆண்களின் முகத்திலிருந்த வித்தியாசத்தை உணர்ந்த வாணி, “குழந்தை நல்லாயிருக்காதானே?” என்றார்.
“ஏன் கேட்கிற? டாக்டர் சொல்லிட்டுப் போனாங்கதான?”
“சொல்லிட்டு அப்படியே உங்களையும் கூட்டிட்டுப் போனாங்களே அதான் கேட்டேன்.”
“குழந்தையைப் பத்துநாள் இன்குபேட்ல வச்சிருக்கணுமாம். நாம போயி பார்த்தா இன்ஃபெக்ஷன் வர சான்ஸிருக்குன்னார். பணம் கொஞ்சம் ஆகும்னாங்க.”
“பணம் இருக்கட்டும்ங்க. ஹாஸ்பிடல்னு வந்த பிறகு கணக்குப் பார்க்க முடியாது. கேட்கிறதை கொடுத்துத்தான் ஆகணும். நிஜமாவே குழந்தை நல்லாயிருக்காள்ல?”
“நான்தான் எதுவுமில்லன்னு சொல்றேன்ல வாணி. நீ கேட்கிறதுக்காக இல்லாததை இருக்குன்னு சொல்ல முடியாது. போ போய் மருமகளைப் பார். ஹாஸ்பிடல் வந்தும் மனுஷனை நிம்மதியாயிருக்க விடாம” என்று விரட்ட...
அவரின் அளவிற்கதிகமான கோபத்திலேயே ஏதோ சரியில்லையென்று தோன்றியது. சுதாகர் சற்று கோபக்காரர்தான். ஆனால், இன்று மருமகள் இந்த நிலையில் இருக்கையில்... யாரிடம் கேட்பது போன்ற குழப்பங்கள் எழ, மெதுவாக குழந்தையை வைத்திருக்கும் இடம் நோக்கி நடர்ந்தவருக்கு, குழந்தையைக் கண்டதும் தன்னை மீறிய ஒரு நிம்மதியெழ, அதே நேரம் டாக்டர் குழந்தையை சோதித்து நர்ஸ்களிடம் ஏதோ சொல்ல, அவர்களின் பார்வை குழந்தையின் மீது பாய்ந்து திரும்பி வாணிக்கு ஏதோ சரியில்லையென்று தோன்றியது.
“டாக்டர் பேபி நார்மலாயிருக்கு” என்று நர்ஸ் ஒருவர் சொல்ல...
“நான் சொன்னதை மட்டும் செய். இப்படியே இருக்கட்டும். இப்போதைக்கு தாய்ப்பால் வேண்டாம். நியூஸ் எதாவது வெளில போச்சிது... பி கேர்புல்” என எச்சரிக்கை விட்டார்.
வெளியே வந்த இரு நர்ஸ்கள், “எப்படிப் பேசுறார் பார்த்தியாடி. இருபத்தினாலு மணிநேரம் டைம் குடுத்திருக்கார். எங்கயிருந்துதான் வந்து சிக்குறாங்களோ போ. மனுஷன் அட்டையா உறிஞ்சிட்டுதான் விடுவார்” என தன் ஆதங்கத்தைக் கொட்ட...
“ஹேய் சத்தமா பேசாத. சிசிடிவி இருக்கு” என்றதும் சொன்னவளோ நாக்கைக் கடித்து பின், “இருந்தாலும் டாக்டருக்குப் படிச்சி இவங்க பண்ற அட்டூழியம் இருக்கே, ச்சே.. பணத்துக்காக எல்லாரையும் அழிச்சிடுவாங்கடி.”
“ஏய் சைலண்டாயிரு. அப்புறம் நாமதான் முதல்ல அழிவோம். அடுத்தவங்களுக்குப் பாவம் பார்த்தா நாம அந்தோ பரிதாபமாகிடுவோம். சிக்கியாச்சி இனி போக முடியாது. இது ஒன்வே மாதிரி.”
“ஏன்மா என்னோட பேத்திக்கு எதாவது பிரச்சனையா?” என்று அவர்கள் முன் நின்றார் வாணி.
“யா..யார் உங்க பேத்தி” என்று திணற...
“இப்ப கொஞ்சம் முன்னாடி பிறந்த குழந்தைமா.”
“ஓ... அந்த குழந்தைக்கு வைரஸ் அட்டாக்காகியிருக்குமா. ஒருநாள் கழிச்சிதான் என்னன்னு சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லியிருப்பாரே” என்றனர் சந்தேகமா.
“இ..இல்லமா. வீட்டு ஆம்பளைங்ககிட்ட சொல்லிருப்பார்னு நினைக்கிறேன்” என்று அழ ஆரம்பிக்க...
“கடவுளே! டாக்டர் வேற எதோ ப்ளே பண்ணியிருப்பார் போலவே. நாம பாட்டுக்கு உளறிட்டோம்” என பெண்கள் இருவரும் நினைத்தாலும், “இங்கல்லாம் அழக்கூடாதுமா. சரியாகிடும்னு நம்புங்க” என்றதும் வெளியிலிருந்த விநாயகரைத் தேடிச் சென்ற வாணியின் அழுகை ஈசன் புதல்வனைக் கண்டதும் வெடித்துக் கிளம்பியது.
“பிள்ளையாரப்பா! என் குடும்பத்தோட முதல் வாரிசு உள்ள ஊசலாடிட்டிருக்கு. அதைக் காப்பாத்திக் குடுத்திரு. என் உயிரை எடுத்துனாலும், என் பேத்திக்கு உயிர் கொடு” என்று அழ...
“அண்ணி இப்ப என்ன சொன்னீங்க? குழந்தைக்கு என்ன?”
மனதில் படபடப்புடன் வந்து நின்ற சுபாஷிணியைக் கண்டதும், “சுபா” என்று அழ... “அண்ணி எதுவாயிருந்தாலும் சொல்லிட்டு அழுங்க. டாக்டர் எதுவுமில்லைன்னு சொல்றாங்க. நீங்க வேறெதோ சொல்றீங்க?”
“குழந்தைக்கு ஏதோ வைரஸ் அட்டாக்காம் சுபா. ஒரு நாள் டைம் குடுத்திருக்காங்க. இதை நம்மகிட்ட சொல்லாம மறைச்சிருக்காங்க” என்றார்.
“உங்களுக்கு யார் சொன்னது?” என்றவர் குரல் தழுதழுக்க...
“நர்ஸ் புள்ளைங்க சொன்னாங்க.”
கண்களில் நீர் வழிய, கடவுளிடம் திரும்பி மனதார வணங்கி, “குழந்தைக்கு எதுவும் அகாது அண்ணி. நாம செஞ்ச புண்ணியம் குழந்தையைக் கைவிடாது.” குரலில் உறுதியிருந்தாலும் கண்கள் வேதனையைப் பிரதிபலித்தது.