• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
13



இரவு சீக்கிரமே ஜீவா வீடு வர ப்ரேமிடம் பேசிவிட்டு தன்னறைக்குள் நுழைந்தவனுக்கு, ஜன்னலோரத்தில் நின்றிருந்த மனைவி கவிதையாய் தெரிய, அந்த கவிதையை வாசிக்க அவளின் பின்னால் சென்று, இரு கைகளால் இடைக்கு வளையமிட்டு, கழுத்தில் முகம் புதைத்து, “ஐ மிஸ் யூடி சுப்பு.’ இன்னும் டென் டேஸ் உன்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஐ செக்கப் மட்டும் இல்லன்னா, உன்னை அனுப்பவே மாட்டேன் தெரியுமா?” என்று கொஞ்ச...

“ப்ச்... விடுங்க” என விலக நினைத்தவளை, இன்னும் இறுக்கி முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் அணைப்பிற்குள் அடங்கியவளிடம், “ஹேய் செல்லம்! ஒன் டே.. ஒன் ஷோதான் நடந்திருக்கு. இப்ப ஒரு ஸ்பெஷல் ஷோ போலாமா?”

“ச்சோ! கையை எடுங்க நான் ஊருக்குக் கிளம்பணும்.”

“கிளம்பறதுக்கு டைம் இருக்கு. அதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு” என்று அவளை முன்னே திருப்பி, அவள் கண்களைப் பார்த்தவனுக்கு எப்பொழுதும் போல், “உனக்குப் பார்வை தெரியலன்னு சொல்லிறாத தேவி?” என அவன் மனதில் நினைத்தது வார்த்தையாய் வெளி வந்தது.

ஒரு வினாடி திகிலடித்தது போலானாள் சுபா. “எ... என்ன சொல்றீங்க?” என திக்கித் திணறியபடி கேட்க... “இல்ல, சீக்கிரத்திலேயே உனக்கு முழு பார்வை வந்திரும்னு டாக்டர் சொன்னாங்க. ப்ச்... இன்னும் அதுக்கு நேரம் வரலபோலிருக்கு. உன் கண்ணைப் பார்த்தா முன்ன மாதிரியில்ல க்ளியரா இருக்கு. இருந்தும் ஏன் இன்னும் பார்வை வரல? இதையும் நாளைக்கு டாக்டர்கிட்ட கேட்டுட்டு சொல்லு?”

ஊப்... என இழுத்துப்பிடித்த மூச்சை வெளிவிட, “என்னடா ஏக்கப்பெருமூச்சியா? அதை நான்தான் தீர்த்து வைக்க முடியும்;” என்று இறுக்கியணைத்து முகமெங்கும் முத்தமிட ஆரம்பிக்க, முதலில் அவனைத் தள்ளியவள், கணவனின் மென்மையில் தன் பெண்மனம் இளக, கணவனோடு ஒன்றியவளை அவன் தூக்கி கட்டிலில் கிடத்தும் போதுதான், அதுவரை வேலை நிறுத்தம் செய்திருந்த மூளை விழித்தது. கணவனைப் பார்க்க அவன் முழு மோகத்திலிருப்பது தெரிய, ‘நோ இது தப்பு. ஒரு டைம் பண்ணியதே இன்னும் மனதை அறுக்குது. இதுல அடுத்தது வேண்டாம்’ என்று மனம் சொல்ல, வேகமாக எழுந்தமர்ந்தாள்.

உணர்ச்சியின் வேகத்திலிருந்தவன் அவளருகிலமர்ந்து கொஞ்சியபடியே, “என்னடா எழுந்துட்ட?” என்றான் ஏக்கக்குரலில்.

“எனக்கு இது” என்று மூன்று விரலைக்காட்டி,” நான் ஏதோ மயக்கத்துல மறந்துட்டேன். சாரி” என்று பொய் சொன்னாள். இந்த பொய்யினால் ஏற்படப்போகும் பாதிப்பை அறியாமல்.

“ஓ...” என்றவனுக்குள் ஏமாற்றம் சூழ்ந்தாலும், “ஹ்ம்... நமக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான். நீ கிளம்பத் தயாராகு. நான் ஸ்டேஷன் வர்றேன். எல்லாம் எடுத்து வச்சிட்டியா? இங்க உள்ள மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்சும் எடுத்து வச்சிக்கோ?”

“ம்... சாதனா அப்பவே வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டா.”

“ஓ... சரிமா. இங்க இருக்கிறியா? ஹாலுக்கு வர்றியா?” என்றதும், ரூமில் இருப்பதைவிட வெளியே செல்வதே பெஸ்ட் என்று ஹாலிற்கே சென்றாள்.

“நாங்க ஒன் ஹவர் முன்னாடியே ஸ்டேஷன் போகணும் ஜீவா. பிசினஸ் விஷயமா ஒருத்தரை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் நேரடியா அங்கேயே வந்திடருவார்.”

“சரி மச்சான். நீங்க சொன்ன டைமிற்கே கிளம்பலாம்.”

நானும் வருவேன் என்ற சாதனாவை, நைட் நேரம் வேண்டாமென்று ப்ரேம் மறுத்தான்.

இரவு சீக்கிரமே உணவு முடித்து கிளம்பும் நேரம், சுபா வீட்டிற்குள் குட்டி போட்ட பூனையாய் சுற்றினாள். ‘தான் எடுத்த முடிவு சரியா? தவறா?’ என்ற குழப்பம்.

அவளைப் பார்த்தபடியே சுபாவினருகில் வந்த ஜீவா, அவளின் குழப்பத்தை வேறுவிதமாக நினைத்து, “யூ மிஸ் மீ சுப்பு” என்றான். என்ன சொல்வாள்? அந்த குழப்பத்தில்தானே அவளுக்கும் நேரம் ஆக ஆக, தன் முடிவு சரியா? ஜீவாவை விலகி தன்னால் இருக்க முடியுமா? என்ற எண்ணம் வந்தாலும் சேர்ந்திருக்கவும் வாய்ப்பில்லையென்று தோன்றுகிறது.”

மனைவியின் அமைதியை தனக்கு சாதகமாக்கி, அவளை அணைத்தவன் “இன்னும் பத்து நாள்தான்டா சீக்கிரமே ஓடிரும். அப்புறம் பாரு, உன்னை அங்கேயிங்க நகரவிடாம, நான் எப்படிப் பார்த்துக்கறேன்னு. வேலைநேரம் போக மற்றநேரமெல்லாம் உன்னோடவே இருந்து, உனக்கு என்னென்ன பிடிக்குதோ அதையெல்லாம் செய்யுறதுதான் என்னோட முக்கிய வேலையே” என்றான்.

கணவனின் கற்பனைகள் கற்பனையாகவே போகப்போவது தெரிந்ததால், வெட்கத்திற்குப் பதில் வேதனையே மிஞ்சியது சுபாவிற்கு. “ம்...” என்று சம்மதமாக தலையசைத்து கண்ணீரைக் கட்டுப்படுத்தி, “வாங்க கிளம்பலாம்” என, மூவரும் கிளம்பி இரவு பத்து மணிக்கெல்லாம் ரெயில்வே ஸ்டேஷன் சென்று, சுபாவை ஓரிடத்தில் அமரவைத்ததும், “நீங்க வீட்டுக்குப் போங்க ஜீவா” என்றான் ப்ரேம்

“இல்ல நான் வெய்ட் பண்றேனே?”

“ இல்லங்க டைமாகிருச்சி. நான் அண்ணனோட தான போறேன். நீங்க கிளம்புங்க” என்றதும் அவள் வாய்மூடி, “போறேன்னு சொல்லாத. போய்ட்டு வர்றேன்னு சொல்லு.”

‘இதையெல்லாமா பார்ப்பீங்க?’ என்பது போல் அவள் பார்த்தாள்.

“ஆமா. எல்லாத்துக்கும் பார்ப்பேன் தான். நாளைக்கு டெஸ்ட் ரிபோர்ட் மறந்திட வேண்டாம். வர்றேன் மச்சான்” என்று மனைவியிடமும் தலையசைத்து இரண்டடி எடுத்துவைக்க...

“என்னங்க!” என்ற அழைப்பில் நின்று திரும்பியவனிடம், “உடம்பைப் பார்த்துக்கோங்க” எனுமுன் குரலில் ஸ்ருதி குறைந்திருந்தது. அவளின் குரலில் இருந்த வருத்தம் தெரிய, அவளின் முகம் வருடி “டேக்கேர்” என்றபடி கிளம்பினான்.

கணவன் சென்ற திசையையே கண்கலங்க பார்த்திருந்தவள், ‘டேக்கேர் ஜீவா’ என மனதினுள் சொல்லி அண்ணனுக்குத் தெரியாமல் கண்ணீர் துடைத்து அந்த இடத்திலேயே அமர்ந்தாள்.

அதே நேரம் ப்ரேமை சந்திப்பதாகச் சொன்ன நபர் வர, தங்கையிடம் சொல்லி அவரை சந்திக்கச் செல்ல, இருபதடி தூரத்திலிருந்தாலும் தங்கையை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தான் ப்ரேம். பிசினஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனம் பேச்சில் செல்ல, தங்கையை கவனிக்க மறந்திருந்த சமயம் அது.



“ஹலோ மேடம்! நான் உங்களை இங்க எதிர்பார்க்கவேயில்ல” என்ற அறிமுகமான குரல் கேட்டு திரும்பிப்பார்த்த சுபா முதலில் அதிர்ந்து, பின் சரிசெய்து கேள்வியாய் அவனைப் பார்த்தாள். “நான் ராஜ் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். சாரிங்க நான் வந்தப்ப கொஞ்சம் ப்ராப்ளமாகிருச்சி.”

“ம்... சொல்லுங்க” என்றாள் எதுவும் அறியாதவள்போல்.

“நான் சாதனாவை லவ் பண்றேன். அதான் முறைப்படி பேசி முடிக்கலாம்னு வந்திருந்தேன். உங்க ஹஸ்பண்ட் என்னைப் புரிஞ்சிக்காம பேசவே விடல.”

“புரிஞ்சிக்காம என்ன பண்ணினாங்க? அப்படி நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க?” வந்த எரிச்சலை மறைத்து எதிர்கேள்வி கேட்க...

“அது முடிஞ்சிபோன விஷயம். இப்ப எதுக்குங்க. நான் உங்க வீட்டுப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுறேன். நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணினா..” என இழுக்க...

“ஹெல்ப் பண்ணினா, ஏற்கனவே சுபாவை நடுரோட்டல சாகடிச்சியே. அப்படி இவளையும் சாகடிக்கவா?”

“ஹலோ நான் எங்க சாகடிச்சேன். அந்த நேரம் எனக்கு வேற எதுவும் தோணல. இதுக்கு அப்படி ஒரு அர்த்தமிருக்கா?” இருந்தாலும் சரிதானே என மனதில் நினைத்து, “அந்த பொண்ணு சரியான பட்டிக்காடுங்க. எனக்கு அந்த பொண்ணு சுபா வேற, சாதனா வேறங்க.”

“ஓ...” என்ற வார்த்தையில் கோபத்தை அடக்கியவள், “எங்க சாதனாவும் அதே பட்டிக்காடு டைப்தான். நீங்க அவளுக்கு சரியான சாய்ஸ் இல்ல. அவளுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சி. அவளை இனிமேல் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. இதுக்குமேல எதாவது பண்ணினா என் ஹஸ்பண்ட் உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. கூடவே அவ கட்டிக்கப்போற மாப்பிள்ளை கையில மாட்டினீங்க, உங்க கதி அதோ கதிதான்.”

“என்னங்க மிரட்டுறீங்களா? நீங்க உங்க ஹஸ்பண்ட் பற்றி தெரியாம பேசுறீங்க. சுபாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தப்ப, அவளை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னான். இப்ப என்னடான்னா உங்களை மேரேஜ் பண்ணியிருக்கான்.”

“வேண்டாம் அவங்களை மரியாதையில்லாம பேசாதீங்க. அன்ட் தப்பாவும் பேசாதீங்க. எனக்குப் பிடிக்கல” என்றாள்.

‘ஏங்க உங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் உங்க புருஷன் பண்ணின தப்பைப் பற்றிச் சொல்றேன். நீங்க என்னடான்னா மரியாதையைப் பற்றி பேசிட்டிருக்கீங்க? அவன் சரியான ப்ராடுங்க. என்னை சுயநலவாதின்னு சொல்லிட்டு அவன்தான் சுயநலமா நடந்திருக்கான்.”

“வேண்டாம். போதும் அவங்களை ரொம்ப இறக்கிப் பேச வேண்டாம்” என்று பல்லைக் கடித்தபடி பேச... அதை உணராதவன், “என்னங்க வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் செஞ்ச தப்புக்கு சரியாகிடுச்சி. சாதனாவை எனக்கு கல்யாணம் பண்ணித்தர்றதுல என்னயிருக்கு?”

“நான்தான் சொல்லிட்டிருக்கேன்ல பேசாதன்னு. சும்மா கம்முன்னு இருக்கமாட்ட” என்று அவனை அடிக்க ஓங்கிய கையை பொது இடத்தை மனதில் வைத்து பாதியிலேயே இறக்கி, “உனக்கென்ன பிரச்சனை? அவங்க சுபாவை கல்யாணம் பண்ணலன்றதா? இல்ல சாதனாவை கல்யாணம் பண்ணி வைக்க மறுத்ததா? அவங்க சுபாவை கல்யாணம் பண்ணிக்கலன்றதை நீ பார்த்தியா?” என்றாள் மிதமிஞ்சிய ஆத்திரத்தில்.

அவள் அடித்ததாக நினைத்து கன்னத்தில் கைவைத்தபடி இல்லையென்று ஏதோ சொல்ல வந்தவன் சில வினாடிகளில், அவள் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்து, “சுபா” என்றான் அதிர்ச்சியும், ஆச்சர்யமும், வியப்பும், கேள்வியுமாய்!

“ஆமாம். சுபாவேதான் சுபஸ்ரீதேவி! என்னோட ஹஸ்பண்ட் ஜீவானந்த். இதுவரை நீ திட்டிட்டிருந்த ஜீவா. என்ன ஆச்சர்யமாயிருக்கா? என்னடா முகமெல்லாம் அடிபட்டு கண்ணையும் இழந்தவ, கண்ணெதிரிலேயே நிற்கிறாளேன்னு? அதுக்கு காரணம் நீ சொன்ன அந்த சுயநலவாதி ஜீவாதான் என் ஹஸ்பண்ட்” என்றாள் நிமிர்வாகவும், கொஞ்சம் திமிராகவும். “தென் சாதனாவைக் கல்யாணம் பண்ணிக்கப்போற பையன் யாருன்னு தெரியணுமா? அங்க பாரு” என தன் அண்ணனை கைநீட்டினாள்.

திரும்பிப் பார்த்தவன் வாய் தானாகவே “ப்ரேம்” என்று முணுமுணுத்தது.

“ம்... என் அண்ணன் ப்ரேம்தான். அவன்தான் மாப்பிள்ளை. ரெண்டு வீட்டு சம்மதத்தோட நடந்த சம்பந்தம் இது. அப்புறம், ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்ததுன்னு முழு விபரம் எங்கண்ணனுக்குத் தெரியாது. நீ பொண்ணு வேண்டாம்னு சொன்னது மட்டும்தான் அவனுக்குத் தெரியும். அன்னைக்கே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நீ இங்க நின்னு பேசிட்டிருக்க உயிரோட இருந்திருக்க மாட்ட. எங்கண்ணனே அப்படின்னா, எங்கப்பாவை யோசிச்சிப்பாரு. உன்னால அவங்க ஜெயிலுக்கு போயிரக்கூடாதுன்னுதான் அவங்ககிட்ட நான் மறைச்சிட்டேன். என் ஹஸ்பண்ட்கு எல்லாம் தெரியும். தெரிஞ்சும் அன்னைக்கு உன்னை விட்டாங்கன்னா, அது உன்னை வீட்ல பார்த்ததாலதான். இல்லன்னா உன் நிலைமை ரொம்ப மோசமாயிருந்திருக்கும். புரிஞ்சி விலகிப்போயிடரு. அதான் உனக்கு நல்லது” என்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
சிறிது நேரம் யோசனையிலாழ்ந்தவனை, யோசிக்கட்டுமென்று இருக்கையில் அமர்ந்தாள். தான் செய்த தவறு தெரிந்தாலும், இனி செய்வதற்கு ஒன்றுமில்லையாதலால், “சாரி” என்றான் சுபாவிடம்.

“சாரி... ஹ்ம்... சாரின்னு ஒரு வார்த்தை இருக்கிறதை வச்சி என்னல்லாம் தப்பு நடக்குது இங்க. இந்த ஒரு வார்த்தையில அவனவன் செய்யுற தவறுகளும், பாவங்களும் கூட முடிஞ்சி முடிவுக்கு வந்து முற்றுப்புள்ளியாகிருதுல்ல.”

“திரும்பவும் சாரிங்க. இதைத்தவிர வேறு வார்த்தைகளும் இப்போதைக்கு இல்ல. இருந்தாலும் சாதனாவுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. திடீர்னு அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள்மேல திணிக்காதீங்க?”

“என்னது.. பிடிக்காத கல்யாணமா? அடப்பாவி, காலையில அவள் பண்ணின ரொமான்ஸை நீ பார்த்திருக்கணும். மகனே அப்போ தெரிஞ்சிருக்கும்” என மனதில் நினைத்து, “உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாளா?” என ஒருமையிலேயே தொடர்ந்து கேட்க...

“இல்ல. ஆனா...”

“என்ன ஆனா? நீயா எதாவது கற்பனை பண்ணிக்காம போய் நல்லபடியா வாழப்பாரு.”

“சாரிங்க சுபா. அவளுக்கு என்னைப் பிடிச்சதாலதான், அன்னைக்கு அவங்கம்மா, அண்ணன்கிட்ட சண்டை போட்டா. ப்ரேம் கூட பார்த்தப்பவும் அவள் முகம் சரியில்லை.”

இவனுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று யோசித்தவள், அவளே சொன்னாலன்றி நம்பமாட்டனென்று, அவளுக்கு போன் செய்தபடியே “ஒரு நிமிஷம் அவகிட்டயே கேட்டுக்கலாம்” என்றாள். போனை எடுத்தவள், “அண்ணி அதுக்குள்ளேயா என்னை மிஸ் பண்றீங்க? ஸோ ஸ்வீட் அண்ணி. இன்னும் டைமிருக்கே என்ன பண்றீங்க?”

“சும்மா வெட்டியா உட்கார்ந்திருக்கேன். எங்க உங்களோட பிர்ரதர்ரு பாசப்புறா” என இழுக்க...

“பாசப்புறா கொஞ்சம் தள்ளி நிற்குது. வேணும்னா வந்து தள்ளிட்டுப் போறியா?”

“என்னது! தள்ளிட்டுப் போறதா? ஐய ஐடியா நீங்களே குடுப்பீங்க போல. இந்த ஐடியாவும் நல்லாத்தானிருக்கு. ஆனாலும், அவங்கதான் என்னை சென்னைக்கு கடத்திட்டுப் போகப் போறாங்களே. இருந்தாலும் எனக்கிந்த திடீர் கல்யாணத்துல விருப்பமில்ல அண்ணி” என்றதும், ராஜ் முகம் பிரகாசமாகியது.

‘ஹையோ!’ என தலையிலடிக்காத குறைதான் சுபாவிற்கு. ‘லூசு நேரத்துக்கு ஏத்தமாதிரி பேசுறா. இவன் வேற நான் சொன்னது சரியா ரேஞ்சுல பார்க்கிறான்.’

“என்ன அண்ணி நான் சொல்றது சரிதான?”

“ம்... ஓவர் சரி” என சலித்தபடி சொல்ல...

“எங்க உங்க அண்ணன்?”

“ஹ்ம்... தலைவலி” என்று சுபா ஏதோ புலம்ப...

“யாருக்கு? உங்க அண்ணனுக்கா? நல்லாதான வந்தாங்க. அதுக்குள்ள என்ன?” பதறியபடி கேட்க...

‘ஆஹா.. இது கூட நல்ல ஐடியாவாயிருக்கே’ என நினைத்து, “ம்... யாருக்குத் தெரியும்?” என்றாள் விட்டேற்றியாக.

“மாத்திரை எதுவும் குடுத்தீங்களா?” என்றதும் இப்பொழுது ராஜை பார்த்தியா என்பது போல் சுபா பார்க்க, “அண்ணி நான் உங்ககிட்டத்தான் பேசிட்டிருக்கேன். என்ன பண்ணிட்டிருக்கீங்க? மாத்திரை குடுத்தீங்களா? இல்லையா?” சற்று குரலை உயர்த்தியபடி கேட்டாள்.

சுபா இல்லையென்றதும் சாதனா, “என்ன தங்கச்சி நீங்க? கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?” என திட்ட ஆரம்பிக்க, சுபா போனை கொஞ்சம் தள்ளிவைக்க, அதற்குள் கட் செய்திருந்தாள் சாதனா.

“என் கணிப்பு சரின்னா, இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வருவா” என்றாள்.

ப்ரேம் திரும்பி தங்கையைப் பார்க்க, ராஜ் முகம் தெரியாததால் தங்கையை மட்டும் பார்த்து, அவளின் அமைதியான தோற்றத்தில் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.

சுபா சொன்னதுபோல் பத்து நிமிடங்களில் வந்தவள், சுற்றிலும் ப்ரேமைத்தேட, யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ப்ரேம் கண்ணில்பட்டான். வேகமாக வந்தவள், சுபாவையோ, ராஜையோ கவனிக்காமல் போக, ராஜ் அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர்களைத் தாண்டி ப்ரேமிடம் சென்றவள், அவன் நெற்றியில் கைவைக்க, அவள் வந்ததை கவனிக்காத ப்ரேம், ‘யாரது?’ என கையைத் தட்டிவிட்டுப் பார்க்க... “ஹேய்! தனா! நீ எங்கயிங்க? அதுவும் இந்த நேரத்துல?” என ஒரே நேரத்தில் சந்தோஷமும், அக்கறையுமாக வினவினான்.

“உங்களுக்கு தலைவலின்னு அண்ணி சொன்னாங்க. அதான் பதறியடிச்சி ஓடிவந்தேன்.” சாதனா வந்தவுடன் ப்ரேமிடம் பேசிக்கொண்டிருந்தவர் விடைபெற, தேவி ஏன் அப்படிச் சொன்னாள்? என்று தெரியாவிட்டாலும் எதாவது காரணமிருக்கும் என்று, “ஆமா, லைட்டா” என்றான் ப்ரேம்..

“ ஹ்ம்... அது லைட்டோ, ஸ்ட்ராங்கோ இந்தாங்க மாத்திரை, தண்ணீர்” என கையில் திணிக்க, அண்ணனைப் பார்த்த சுபாவிற்கு சிரிப்பு வர வாய்மூடி அடக்கி, ‘சாரிண்ணா’ என்று மனதில் மன்னிப்பு கேட்டாள். சாதனா-ப்ரேமை அங்கேயே உட்காரவைத்து “ரொம்ப வலிக்குதா?” என்றவள் கண்கள் கலங்கியபடி திரும்பவும் நெற்றியைத் தொட்டுப் பார்க்க...

அவளின் கைபிடித்து, கன்னம் தொட்டு “நீ ஃபீல் பண்றளவுக்கு ஒண்ணுமில்லடா?” என்றான்.

அவர்களின் நெருக்கத்தைப் பார்த்த ராஜ், “அவங்க ஏற்கனவே லவ் பண்ணாங்களா?” தன் சந்தேகத்தை சுபாவிடம் கேட்க...

“இல்ல. இது நிச்சயத்துக்குப் பின்னான காதல். அவங்க ரெண்டு பேரும்தான் வாழ்க்கையில சேரப்போறாங்கன்ற முடிவுக்கு பின்னாடி வந்த காதல். ராஜின் ஏமாற்றமான முகமே சொன்னது அவன் புரிந்துகொண்டான், இனி அவனால் எந்த பிரச்சனையும் வராதென்று. “என்ன சார் போதுமா? இல்ல வேற எதாவது கேள்வியிருக்கா?”

தெரிந்தே இரண்டு நல்ல பெண்களை இழந்த வருத்தம் வந்தது ராஜ்கு. இவங்களைப் போயி பட்டிக்காடுன்னு நினைச்சோமே, என்ற தன் புத்தியை தானே நொந்தான். “பின், இல்லங்க சுபா. சாரி எல்லாத்துக்கும் இனி உங்க பேமிலிக்குள்ள என்னால எந்த தடங்கலும் வராது என்னை நம்பலாம்” என உறுதி கொடுத்துச் சென்றான். அடுத்த பிரச்சனைக்கு தன்னையறியாமலேயே பிள்ளையார் சுழி போடுவோமென்று தெரியாமல்.

ராஜ் செல்ல, ஜீவா அருகில் வந்தான். தற்செயலாக திரும்பியவள் கணவனைக் கண்ட கண்கள் பளிச்சிட்டு மறைய... “யார் அது?” என்றபடி வந்தான் ஜீவா.

“யாரைக் கேட்குறீங்க?” என்றாள் அவன் ராஜைக் குறிப்பிடுகிறான் என்பதையறியாமல். “அதான்மா இப்ப உன்கிட்ட நின்னு யாரோ பேசிட்டுப் போனமாதிரி இருந்துதே.”

“ஓ... அவர் என்னோட ப்ரண்ட்” என்றவளுக்கு தன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிய ராஜிடம் கூட பேச முடிந்த தன்னால், தனக்குத் தாலி கட்டியவனிடம் பேச முடியவில்லையே என மனம் முரண்டியது. தலைவலிப்பது போல் தோன்ற அதை வெளியே சொன்னால், சென்னை பயணம் ரத்து செய்யப்படும் என்று பொறுத்துக்கொண்டாள்.

“ஏன் டல்லாயிருக்க தேவி?”

ஒண்ணுமில்லையே என்றவள் “சாதனா அப்பவே வந்துட்டாளே? நீங்க ஏன் லேட்?”

“காரை பார்க் பண்றது வரை மேடம்கு பொறுமையில்லை. சும்மா ஜெட் வேகத்துல வந்துட்டா” என்றபடி மனைவியினருகில் அமர்ந்தவன், “உனக்கு கண்ணு சரியானதும் சேலைகட்டு சுப்பு. அதுலதான் நீ சூப்பராயிருப்ப. சுடிதாரெல்லாம் சுத்த வேஸ்ட் தெரியுமா. சேலைக்கு நடுவுல வெற்றிடையில் கைவிட்டு பிடிக்கிறதே ஒரு கிக்தான் தெரியுமா?” என்று இடையில் கைபோட்டு தன்னுடன் சேர்த்து இறுக்கியணைத்து காதோரம் காதலில் கசிந்துருக...

“கணவன் சொன்ன வார்த்தைகள் நிஜமாகவே அவளுக்கு கிக் கொடுக்க, ஸ்... பப்ளிக்ல என்ன பண்றீங்க?” கையை எடுங்க என்றாள் இறங்கிய குரலில்.

“ஹம்... எங்க பப்ளிக்ன்றதால தொடவாவது விட்டிருக்க. வீட்ல இருக்கும்போது என்னைவிட்டு விலகிப்போற மாதிரியே இருந்தது தேவி” என்றதும் கனவனுடன் கனவுலகில் சஞ்சரித்தவளை அவன் குரலிலுள்ள ஏமாற்றம் நிகழ்வுக்கு அழைத்து வந்தது. “நீ முன்னாடி மாதிரி பேசுறதுமில்லயா. ஏனோ தனியா இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வருது” என்று எதிரில் வேடிக்கை பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தான். சுபா அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க...

“ஹேய்! சுப்பு! அங்க பாரேன் அந்த குழந்தையை” என்றவன், தன் தவறை உணர்ந்து, “சாரிமா. உனக்கு தெளிவா தெரியாதுல்ல” என்றதும் அவன்புறம் திரும்பிப் பார்த்தவளின் பார்வை, ஜீவாவை இழுக்க இன்னும் நெருங்கி அமர்ந்தவன், “அங்கயிருக்கிற பாப்பா நீ குட்டி வயசுல இருந்தது மாதிரி கொழுகொழுன்னு இருக்கு. நாமளும் இதே மாதிரி ஒரு குட்டியை ரிலீஸ் பண்ணுவோமா? ஒரு தாய்க்கு மகனாயிருக்கேன்! ஒரு தங்கைக்கு அண்ணனாயிருக்கேன்! ஒரு பொண்ணுக்கு புருஷனாவும் இருக்கேன்! அதே மாதிரி ஒரு குழந்தைக்கு அப்பாவா இருக்கணும்னு மனசு தவிக்குது. இந்த டைம் பெயிலியராகிருச்சி. நெக்ஸ்ட் ப்ரேம்-சாதனா மேரேஜ்கு பின்னாடி நாம ஆரம்பிக்கலாம்” என்றான்.

நெஞ்சில் படபடப்புடன் தலைகவிழ்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தவள், ‘பெயிலியராகிடுச்சி’ என்ற வார்த்தையில் அப்படியே தேங்கி என்னவென்று யோசித்தவளுக்கு, மாலையில் கணவனென்ற உரிமையில் தன்னை நெருங்கியபோது சொன்ன அந்த மூன்று நாள் பொய் கண்முன் வந்தது. இல்லையென்று மறுக்க முடியாமல், சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும் என்று நினைத்தாள்.

மனைவியின் தலைகுனிவை வெட்கமென ஜீவா நினைத்து, “என்ன ஓகேவா” என்றான். வேறு வழியில்லாமல், “ம்...” என்ற வார்த்தையை வெளியிட்டாள் வேதனையுடன். பேசாமல் தன் நிலைமையைச் சொல்லி, இந்த பிரச்சனைக்கு தீர்வை சம்பந்தப்பட்டவனிடமே கேட்கலாமா? என நினைத்தவள், இல்லை வேண்டாம், அண்ணா கல்யாணம் எந்த ப்ராப்ளமும் இல்லாமல் நடக்கவேண்டுமென்று அதை கைவிட்டாள். ஆக மொத்தம் இருவரும் தங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்க்காமல், ப்ரேம்-சாதனாவை காரணமாக்கி அமைதியானார்கள்.

அதற்குள் ப்ரேம்-சாதனா வர, “என்ன மச்சான் மாத்திரை போட்டாச்சா?” என ஜீவா கிண்டலாக கேட்க...

அசடு வழிய சிரித்த ப்ரேம், “நான் மாத்திரை போட்ட நேரம் நீங்க தேவிகிட்ட கடலை போட்டுட்டிருந்தீங்க போல?” என்றான் பதிலுக்கு.

“ஒய்ஃப்கிட்ட யாராவது கடலை போடுவாங்களா மச்சான்? காதல் தான் பண்ணுவாங்க” என்று யாருமறியாமல் இடையில் சற்று அழுத்தி கண்ணடித்தான்.

‘அடப்பாவி! கேப்ல கெடா வெட்டுறதுன்றது இதுதானா?’ நெளிந்தபடி முகத்திலும் வேறுபாடு காட்டாமல் சுபா நினைக்க, நீங்க எதாவது நினைங்க நான் கிளம்புறேன் என்று சென்னை எக்ஸ்ப்ரஸ் சென்னைக்கு அழைப்பு விடுக்க, ப்ரேம், சுபாவை ஏற்றிக்கொண்டு ஜீவா, சாதனாவின் டாட்டாவையும் பெற்றுக்கொண்டு கிளம்பியது.

ட்ரெயின் கிளம்பியதும், தங்கை சொன்ன தலைவலிக்கான காரணத்தை ப்ரேம் கேட்க, ராஜ் வந்ததையும், அவனின் கிறுக்குத்தனமான வார்த்தைகளையும் சொன்னவள், மறந்தும் அவன்தான் ஆனந்த் என்பதைச் சொல்லாமல் விட்டாள்.. அதனால் வரும் விபரீதத்தை உணர்ந்து.

“ஓ...” என விஷயத்தை கிரகித்தவனுக்கு இதனால்தான் காலையிலிருந்து சாதனா டிஸ்டர்பாக இருந்திருப்பாளோ என்று தோன்றியது.

வீடு வந்த ஜீவாவிற்கு, வீட்டினுள் நுழையும் போதே மனைவியில்லாத வெறுமை முகத்திலடித்தது. “ஹ்ம்... சுப்பு இப்பவே இப்படின்னா. இன்னும் பத்து நாள் எப்படி நீயில்லாமல்?” நீண்டநேர விழிப்பிற்கு பின் கண்ணுறங்கினான் ஜீவா.

பத்து நாள் பிரிவு பத்து நாளோடு முடியுமா? இல்லை பத்து மாதங்களாகி, வருடங்களாக தொடருமா?
 
Top