• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
12



தன் செல்லுக்கு போன் வர, ஆசிரமத்தின் உரிமையாளர் வந்திருந்ததால் அவரைக் கவனிக்கும் பொருட்டு, “வித்தி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க போன் பண்றாங்க. செங்கல்பட்டு வந்துட்டாங்களாம். வீட்டு அடையாளம் சொல்லி எங்க வீட்ல உட்கார வச்சி கவனிச்சிட்டிரு. அதுக்குள்ள இவங்களை அனுப்பிட்டு வந்திடுறேன்” என்று போனைக் கொடுக்க...

அவரிடமிருந்து வாங்கி, “ஹாய் நான் வித்தி பேசுறேன்” என்றாள் சுபாவிடம் பேசியிருந்த நினைப்பிலேயே.

அவனுக்கோ கீர்த்தி என்று விழ சந்தோஷத்தில், “ஹாய் எனக்குக் கொஞ்சம் வழி சொல்ல முடியுமா?” என்றான்.

“இப்ப எங்க இருக்கீங்க?” எனக்கேட்டு, வழி சொல்லி வீட்டினருகில் வரும்வரை போனுடன் வெளியே நின்றிருக்க, காரைக் கண்டதும் கைதூக்கி இதான் வீடு என்பதாய் வரவழைக்க, ஆனந்திற்கோ அவளைக் கண்டதும் சந்தோஷம் பிடிபடவில்லை. அதுவும் அவளே தன்னை வரவேற்பாள் என்பதை எதிர்பார்க்கவேயில்லை.

இன்ப அதிர்ச்சி என்பது இதுதானோ!

அவர்களைக் காருக்கே சென்று வரவேற்று, சுபாஷிணியின் வீட்டில் அமர வைத்து, “அடுத்த வீடுதான் எங்களோடது. இதுதான் அத்தை வீடு. அண்ணிக்கு விசேஷம் முடிஞ்சும் கொஞ்சம் கூட்ட நெரிசலாயிருக்கு. அதான் இங்க இருக்கச் சொன்னாங்க. ஒரு நிமிஷம்” என்று தண்ணீர் எடுத்து வந்து தந்து, “இருங்க கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றாள்.

ஆனந்த் தான் சற்று குழம்பினான். ‘சுபாஷிணி மேடம் தன்னோட பொண்ணுன்னுதான இவளைச் சொன்னாங்க. ஏன் இவள் அவங்க மருமகள்னு சொல்றா’ என்று சுற்றிலும் பார்த்தவன் கண்கள் போட்டோவில் பதிந்து அப்படியே நிற்க, ஒரு சந்தேகத்தில் “கீர்த்தி” என்று அவன் அழைத்ததில், ‘த்தி’ மட்டும் அவள் காதுகளில் விழ சடாரென்று வித்யா திரும்ப... ‘ஷப்பா! கீர்த்திதான்.’ மனதினுள் நிம்மதியெழ சின்னதாக புன்னகைத்தான்.

மரியாதைக்கென்று வித்யாவும் பதில் புன்னகையளித்து, ‘ம்... ஆள் நல்லாயிருக்கார். நல்லவராவும் தெரியுறார். பார்வையில எந்த கல்மிஷமும் கிடையாது. ஆனாலும் ஏதோ ஒண்ணு இருக்கே! கீர்த்திக்கு மேட்சிங்தான். கீர்த்தி இருடி வர்றேன். என்னையவா கிண்டலடிக்கிற? உனக்கிருக்குடி இன்னைக்கு’ என்று அவளைக் கேலி செய்யத் தயாராக...

மகனின் பார்வை மூலம் இவள்தான் பெண் என்பதை அறிந்தவருக்கோ மனதினுள் சிறு வருத்தம் உண்டானது. இன்னும் மகனிடம் சுபாஷிணி பேசியதைச் சொல்லவில்லை. எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை. ஆனால், ஏன் இந்தப் பெண்ணிடமே தங்களை வரவேற்கச் சொன்னார் என்பது புரியவில்லை வரலட்சுமிக்கு. அனுவும் சாரகேஷுமே அவளைக் கண்டபின் ஆனந்திடம், ‘சூப்பர்’ என்று காண்பிக்க... சின்னப் புன்னகையை மட்டுமே அவர்களுக்களித்தான்.

வித்யா அவர்களுக்கு ஜுஸ் கொடுத்துக் கொண்டிருக்கையில் சுபாஷிணி தணிகாசலத்துடன் சுதாகரும் வந்து மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று வித்யாவிடம், “நீ வீட்டுக்குப் போமா நாங்க பேசிக்கிறோம்” என்றனுப்பி, அவர்கள் எதிரில் அமர்ந்த சுபா, “சொல்லிட்டீங்களா?” என்றார் வரலட்சுமியிடம்.

“இல்லங்க. சும்மா பார்த்துட்டாவது போகலாம்னு தோணிச்சி. பொண்ணு எடுத்தால்தான் வரணும்னு இல்லையே.”

தாயின் சொல்லில் மற்றவர்கள் அதிர, “அம்மா என்ன பேசுறீங்க? நாம வந்தது பொண்ணு பார்க்கத்தான?” என்று ஆனந்த் கேட்க நினைத்ததை அனு கேட்க,

“இல்லமா. வளைகாப்புக்குத்தான் வந்தோம்” என்றார் தெளிவாய்.

“இப்பக்கூட...”

“தம்பி தப்பா எடுத்துக்காதீங்க. உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகப் பொருத்தம் சுத்தமா கிடையாதுன்றது காலையிலதான் தெரிஞ்சது. தெரிஞ்சே ஏன் சேராத ஜாதகத்தை பொருத்தணும்?” என்றார் சுதாகர்.

“ரொம்ப பொருத்தம்னு சொல்லிதான வரச்சொன்னீங்க?” தன் வருத்தம் முகத்தில் தெரியாதளவிற்கு மறைத்து கேள்வி கேட்டான்.

“அ..அது ஜாதகம் மாத்திப் பார்த்திட்டோம்பா என்றார் திணறலாய்.

“புரியல மேம்?”

“புரியுற மாதிரியே சொல்றேன்” என்று அன்று நடந்ததைச் சொல்லலானார்.

“சுபா ஜாதகம் எடுத்தாச்சாமா? வாணி நீயும் வித்யா ஜாதகம் எடுத்துக்கோ. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கலாமான்னு கேட்டுறலாம்.”

“சரிங்க” என்று ஜாதகத்தை எடுத்து, “கீர்த்தி ஜாதகத்தோட வச்சிரு சுபா” எனக் கொடுத்து, “ஆமா பையன் ஜாதகத்தை பிரிண்ட் போட்டாச்சா?” என்றார்.

“அதெல்லாம் எடுத்தாச்சி அண்ணி” என்று பேப்பரில் இருந்த ஜாதகத்தைக் காண்பித்து, கீர்த்தியுடன் இருக்க வேண்டிய பையன் ஜாதகத்தை வித்யாவுடன் இணைத்திருந்தார் அவரறியாமலே. வித்யா கீர்த்தி ஜாதகமும் இதே ஐயரிடம் எழுதப்பட்டிருந்ததால் இரு அட்டைகளும் ஒரே மாதிரி இருந்ததில் வந்த குழப்பம் அது.

“சுபா மாப்பிள்ளை எங்க?”

“நம்மளைப் போகச்சொல்லி அவங்க காலையிலேயே கடைக்குப் போயாச்சிண்ணா.”

“இல்லமா நல்லது செய்யப் போறப்ப மூணுபேரா போகக்கூடாது.”

“அப்ப நான் வீட்ல இருக்கேன்ணா. நீங்களும் அண்ணியும் போய் பார்த்துட்டு வாங்க.”

“இல்ல சுபா நீங்க போங்க நான் வீட்லயிருக்கேன். பொண்ணோட அம்மா நீ. உனக்குத் எல்லாம் தெரிஞ்சிருக்கணும்” என்று அவர் வீட்டிலிருந்தார்.

அண்ணன் தங்கை இருவரும் ஐயர் வீடு சென்று கல்யாணத்தைப் பற்றிச் சொல்லி ஜாதகத்தைக் கொடுக்க... கடவுளை வணங்கி அருகிலுள்ள பேப்பரில் பிள்ளையார் சுழியுடன் அரம்பித்து மாப்பிள்ளை பெண்ணின் கட்டங்கள் வரைந்து, விரல்களால் கணக்கிட்டு, பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கால் மணி நேரங்கள் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுடன் நிமிர்ந்தவரையே ஆவலுடன் பார்க்க... “பொருத்தம் ரொம்பவே அமோகமாயிருக்கு சுதாகர் சார்.” அனைவரின் முகமும் மலர, அவரின் ‘ஆனால்’-ல் அப்படியே முகம் மாறியது.

“இந்த பொண்ணுக்கு இந்தப் பையன்தான் பொருத்தம். வேற ஜாதகம் எதுவும் பார்த்திடாதீங்க. பார்த்தாலும் நடக்காதுன்றது வேற. இந்தக் கல்யாணத்துலயும் நிறைய சிக்கல்கள் வரும். அதையெல்லாம் தாண்டி இவங்க வாழ்க்கை அமோகமா இருக்கும்.”

“சிக்கல்னா என்ன மாதிரின்னு...” என்று இழுக்க...

“அதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா நான் கடவுளாகிடுவேன். இந்த சம்பந்தம் அவங்களா வந்ததுதான?”

“ஆமா ஐயரே.”

“இதை வேண்டாம்னு சொல்லிராதீங்க. இவங்க ராசி நட்சத்திரப் பொருத்தம் தாண்டி இரண்டு பேருக்கும் வேற எந்த ஜாதகமும் சரியா வராது. எத்தனை வருஷமானாலும் இவனுக்கு இவள்தான்னு கட்டம் சொல்லுது. வருஷங்கள் போனாலும் விதியை மாத்த முடியாது. வரப்போற சிக்கல்களை மறந்து, இப்பவே கல்யாணத்தை முடிச்சிடுறதுதான் பெட்டர். இது என்னோட கணிப்புதான். முடிவு உங்க கையில்.”

“சரிங்க ஐயரே. நான் மாப்பிள்ளை வீட்ல பேசிட்டு வர்றேன். இன்னொரு ஜாதகத்துக்கு இப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாமா பாருங்க?”

“ரெண்டு பேருக்கும் சேர்ந்தாப்ல முடிச்சிரலாம்னு பார்க்குறீங்களா? அதுவும் நல்லதுதான்.” கேட்டபடி ஜாதகம் பார்க்க ஆரம்பித்தவர், தனக்கு வந்த சந்தேகத்தில் திரும்பவும் பார்த்து, பொண்ணுக்கு வியாழன் திசை நடக்குது. இப்போதைக்கு எந்த நல்லதும் செய்யாதீங்க. அது நமக்கே பாதிப்பை உண்டாக்கும். பதினோரு மாசம் வரைக்கும் எதுவும் செய்ய வேண்டாம். அதுவரை வாராவாரம் வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு விளக்கு போடச் சொல்லுங்க என்று ஜாதகத்தை அவர்கள் கையில் கொடுத்தார்.

சுதாகர் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆனந்த், “எல்லாம் சரியாத்தான இருக்கு. அப்புறம் ஏன் ஜாதகம் சரியில்ல சொல்றீங்க? என்னைப் பிடிக்கலையா? நீங்க சொன்ன வயசு வித்தியாசம்னா வரச்சொல்லியிருக்க வேண்டாமே?” கேள்விகளாய் கேட்டாலும் மனம் சமாதானமடைய மறுத்தது.

“தம்பி அப்படிலாம் நினைச்சிருந்தா பெண் பார்க்க எப்படி சம்மதிச்சிருப்போம். அதுல உள்ள பிரச்சனை இப்பதான் தெரிஞ்சது. இன்னைக்குக் காலையில அண்ணன் வளைகாப்புக்கான நேரம் மறந்துருச்சின்னு கேட்டப்ப, தெளிவு படுத்திக்கிறதுக்காக ஜாதகத்தை எடுத்துப் பார்த்துட்டு வைக்கும் போதுதான். உங்க பெயரோட வித்யா பெயர் சேர்ந்திருந்ததைப் பார்த்தேன்.”

“என்னது?” என்று எழுந்து நின்றுவிட்டான் ஆனந்த்.

“அவங்க சொல்ல வர்றதை முழுசா கேளு ஆனந்த்” என்று வரலட்சுமி அவனை அமைதிப்படுத்தினார்.

“எனக்கு இதுக்கு மேல அதிர்ச்சிபா. சந்தேகத்துல எடுத்துப் பார்த்தப்பதான் எதோ தப்பாயிருக்குன்னு தோணிச்சி. கீர்த்தி அப்பாகிட்டக்கூட சொல்லாம அண்ணனோட போய் பார்த்தப்ப, இதைத்தான் பார்த்து சொன்னேன்னு சொல்லிட்டார். இருந்தாலும் கீர்த்திக்கும் உங்களுக்கும் ஒரு வருஷம் கழிச்சி முடிக்கலாமான்னு பார்த்தா பொருத்தம்ன்றது பெயருக்குக் கூட இல்லைன்னுட்டார். என்ன பண்றதுன்னு தெரியாமதான் உங்க அம்மாவுக்கு போன் பண்ணி வித்யாவுக்கு முடிக்கலாமா கேட்டேன். அவங்க வந்து பேசிக்கலாம் சொன்னாங்க.”

‘என்னம்மா இதெல்லாம்?’ என்பதாய் அவன் பார்வையிருக்க... “இரு பார்த்துக்கலாம்” என்று அவனை அமைதிப்படுத்த... ‘ப்ச்... அவ்வளவுதானா’ என்ற சலிப்புடன் அமர்ந்தான்.

“அண்ணா நீ ஏன் அவங்க சொன்ன வித்யாவைப் பார்க்கக்கூடாது? நல்ல குடும்பமாயிருக்காங்க. ஜாதகமும் வேற அமையாது சொல்றாங்க. நாமளும் பெண் பார்க்கன்னு வந்தாச்சி” என்றாள் அனுபமா.

“இதை நினைச்சிதான் ஆனந்த் நானும் உன்னை அழைச்சிட்டு வந்தேன்.”

“இதை நீங்க முன்னாடியே சொல்லியிருக்கலாம்மா. ஒரு பெண்ணைப் பார்க்க வந்துட்டு இன்னொரு பெண்ணை எடுக்கிறது... வேண்டாம்மா. சரிவராது நாம கிளம்பலாம்” என்றவன் குரல் கம்மியிருந்தது.

சுபாஷிணிக்கு அவன் உணர்வுகள் புரிந்ததாலோ அவர்களை வற்புறுத்தவில்லை. ஐயர் சொன்னது நினைவு வந்தது, ‘எத்தனை வருஷமானாலும் இந்தப் பெண்ணுக்கு இந்தப் பையன்தான். இது மாறாது! இது நடக்குமா? இவன் நேசிப்பது கீர்த்தியாக இருக்கையில் இதெப்படி நடக்கும்?’ குழப்பங்கள் அவருக்குள்.

தான் காரிலிருப்பதாகச் சொல்லி தாய் தங்கை அவள் கணவன் மூவரையும் வளைகாப்புப் பெண்ணைப் பார்த்து வரச்சொன்னான். கார்த்திகாவைப் பார்த்துவிட்டு அவர்கள் காருக்கு வர...

தற்செயலாக வெளியே வந்த வித்யா சுபாஷிணியிடம் வந்து, “அத்தை அவங்க கிளம்புறாங்களா? ஏன் பெண் பார்க்கல? எனக்குத் தெரியாம பண்ணிட்டீங்களா?” என்று கோபப்பட...

“ஜாதகம் சரியில்லாததால வேண்டாம்னு சொல்லியாச்சிமா.”

“இதை முதல்லயே சொல்றதில்லையா அத்தை. தேவையில்லாம அவளைக் கேலி பண்ணியிருக்க மாட்டேன்ல” என்றவளுக்குள் சம்பந்தமில்லாத ஒருத்தருடன் திருமணமாகாத பெண்ணைச் சேர்த்து வைத்துப் பேசியதால் குற்றவுணர்வு வந்தது.

“அவகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் வித்திமா. சும்மா ஃப்ரண்ட்லியா வந்துட்டுப் போகத்தான் வந்தாங்க.”

“ஓ... அப்ப சரி. பையன் பார்க்க ஓகேன்றதால கீர்த்திக்கு பொருத்தமாயிருக்கும்னு தோணிச்சி.”

“நீ அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிறியா வித்தி?” என்றார் மருமகள் மனதைத் தெரிந்துகொள்ள.

“ஹா..ஹா அத்தை எந்த நேரத்துல விளையாடுறதுன்னு இல்லையா? போங்க உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கிற மாதிரி தெரியுது. இந்த சித்து வர்றேன்னா ஆளையே காணோம்” என்று தோழியின் வருகைக்காகக் காத்திருக்கலானாள்.

“அப்ப நாங்க கிளம்புறோம்ங்க” என்றார் வரலட்சுமி.

“சரிங்க. வந்ததுக்கு நன்றி. நல்லபடியா போயிட்டு வாங்க” என்றதும் அவர்கள் காரை நோக்கி நடக்கையில், சுபாஷிணியை நோக்கித் திரும்பி வந்த அனு, “ஆன்ட்டி நாங்க வித்யாவைப் பார்க்கலாமா?” என்றாள்.

அவளை ஆச்சர்யமாகப் பார்த்து, “நீங்க வித்யாவைப் பார்க்கலையா?” என்றார்.

“பார்த்திருந்தா கேட்டிருப்பேனா?” என்றதில் வரலட்சுமியும் அவர்களிடம் வர...

“உங்களுக்கு வீட்டு அட்ரஸ் சொல்லி, வீட்ல உங்களைக் கவனிச்சிக்கிட்டது எல்லாமே என் அண்ணன் பொண்ணு வித்யாதான்” என்றார்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“என்னது? அவங்கதான் வித்யாவா? என்ன ஆன்ட்டி சொல்றீங்க? அவங்க கீர்த்தியில்லையா?” என்றாள் பட்டென்று.

“என் பொண்ணு அவ அக்காவோட, வந்த சொந்தக்காரங்களைக் கவனிச்சிட்டிருக்கா. காலையிலயே அவகிட்ட பொண்ணு பார்க்க வரலைன்னு சொல்லிட்டேன்.”

“இல்ல நாங்க பார்த்த பொண்ணை கீர்த்தின்ற மாதிரி இருந்தது?” என்றார் குழப்பத்துடன்.

“ஓ... அதுவா. வித்யாவை வித்தின்னுதான் கூப்பிடுறது. வித்தி கீர்த்தி இரண்டும் த்தி-ல முடியுறதால குழம்பியிருப்பீங்க. ஏன் எதாவது பிரச்சனையா?” அவர்கள் முகத்தின் கலக்கம் உணர்ந்து கேட்க.

அப்படிலாம் எதுவுமில்லையென்று உடனே மறுத்தவருக்கு, ‘கீர்த்தியில்லன்னா பையன் ஏன் வித்யாவை அப்படிப் பார்த்தான்’ என்ற எண்ணமே!

அதே நேரம் காரினருகில் எதோ யோசனையுடன் டிரைவிங் சீட்டிற்கு வருகையில், அங்கு நின்றிருந்த கீர்த்தி என நினைத்த வித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சின்னப் பெருமூச்சுக்குள் தன் ஆசைகளை அடக்கி கதவு திறந்து அமரப்போக...

“ஏய் வித்தி... வித்தீ... வித்யா எங்கயிருக்க? வா அக்கா உன்னைக் கூப்பிடுறாளாம். ஒரு வாண்டு ஒண்ணு சொல்லிட்டுப் போகுது” என மாடியிலிருந்து அவள் போட்ட சத்தத்தில்...

“இதோ வர்றேன் கீர்த்தி. அதுக்கு ஏன் கத்துற? சித்து வர்றேன் சொல்லியிருக்கா. வந்ததும் கூட்டிட்டு வர்றேன்” என பதில் குரல் கொடுத்தாள்.

உட்காரப் போன ஆனந்த், “வித்யாவா!!” என விழிகள் தெறிக்க கார் கதவினருகில் அப்படியே நின்றுவிட்டான்.

“வித்தி அவள் வந்தா உள்ள வரத்தெரியாதா? முதல்ல நீ வா சொல்றேன்ல. இங்க வந்து நான் சொல்றதை டேஸ்ட் பண்ணிப்பாரு. ம்... யம்மீதான் போ.”

“எரும அண்ணி கூப்பிட்டதா சொன்னதெல்லாம் பொய்யா. இருடி வந்து கவனிச்சிக்கறேன்.”

“அதுக்குத்தான் கூப்பிடுறேன். வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பாயசத்தைக் கவனிக்கலாம்.”

“கீர்த்திமா. அதான் ஃப்ரண்ட் வந்ததும் கூட்டிட்டு வர்றேன் சொல்றாள்ல. அப்புறமென்ன போய் சாப்பாடு பரிமாறு” என்ற தாயின் குரலிலிருந்த அதட்டலில்...

“அதுக்குத்தான் அவளைக் கூப்பிட்டேன். போங்க பாயசம் முழுதையும் நானே காலி செஞ்சிட்டேன்னு பின்னால என்னை திட்டக்கூடாது” என்று நகர்ந்தாள்.

அனைவருக்குள்ளும் சின்னதாக சிரிப்பு எழ... “அவ எப்பவும் இப்படித்தாங்க. எதுக்கெடுத்தாலும் வித்யா வேணும். தனியா ஒரு பத்து நிமிஷம் இருக்கிறதில்ல.”

வித்யாவையே பார்த்திருந்த ஆனந்த்திற்கு அவளின் மெல்லிய புன்னகை தனக்குள் நிம்மதியை அள்ளித் தெளிக்க, ‘வி..த்..யா’ என்றான் தனக்குள்ளேயே!

தன்னை யாரோ அழைத்தாற்போல் தோன்ற சட்டெனத் திரும்பியள் கண்ணில் அனந்த் பட, அறிமுகச் சிரிப்பை வெளியிட்டு திரும்பிக் கொண்டாள். காரில் கண்மூடி அமர்ந்திருந்தவனுக்கு தன் தவறு புரிய, திரும்ப எப்படி பெண் கேட்பதென்ற போராட்டம் மனதினுள்.

“சுபாஷிணி நீங்க தப்பா எடுத்துக்கலன்னா என் பையன்கிட்ட வித்யா பத்திப் பேசிட்டு வந்து முடிவு சொல்லட்டுமா?” என்றார் வரலட்சுமி. ஏனென்று புரியாவிட்டாலும் சம்மதமாகத் தலையசைக்க, மருமகனை பின்னால் அமரச்சொல்லி மகனிடம் உட்கார்ந்து, “ஆனந்த், அம்மா கேட்கிறதுக்கு மறைக்காம சொல்லணும். நீ பார்த்து ஆசைப்பட்டது வித்யாவையா?” என பட்டென்று கேட்டார்.

“அம்மா!” எப்படிக் கண்டுபிடித்தாரென்ற அதிர்வு அவனிடம். “பெயர் மாறினதால வந்த குழப்பம்மா. அன்னைக்கே தீர விசாரிச்சிருக்கணும். ப்ச்.. எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியில்லை போலம்மா. சரி நாம கிளம்பலாமா?” என்றவன் குரலில் வருத்தமே அதிகமிருக்க பார்வை அவளிடமேயிருந்தது.

“இதான் உன் முடிவுனா சரிப்பா கிளம்பலாம். நான் அவங்ககிட்ட சொல்லிட்டு வந்திருறேன்” என்று இறங்கி, சுபாஷிணியிடம் பெயர்க் குழப்பத்தைச் சொல்லி, தாங்கள் பார்க்க வந்தது வித்யாவை என்று உண்மையைச் சொல்லிவிட்டார்.

ஏனோ ஐயர் சொன்னதுதான் ஞாபகம் வந்தது அவருக்கு. ‘விதி வலியதுதான்’ என்பதை நேரில் கண்டதும் சின்னச் சிரிப்புடன், “எனக்கு என் பொண்ணும் அண்ணன் பொண்ணும் வேற கிடையாது அக்கா. வித்யாவுக்கு உங்க பையன்றது கடவுள் போட்ட முடிச்சி. அதை மாத்த முடியாதில்லையா. நீங்க உள்ள வந்து உட்காருங்க. நான் அண்ணனைக் கூட்டிட்டு வர்றேன். பேசிக்கலாம்” என்று அவர்களை உள்ளே உட்கார வைத்து... வேகமாக அண்ணனிடம் சென்று திரும்பவும் வித்யாவுடனான பேச்சை ஆரம்பித்தார்கள்.

அதே நேரம் சித்து என்றழைக்கப்பட்ட பெண் வர, “சரியா சாப்பிடுற நேரம் வந்திருக்க” என்று கிண்டலடித்தபடி வீட்டினுள் சென்ற வித்யாவைப் பார்த்திருந்த ஆனந்திடம், “நாம வேணும்னா இவங்களை கேட்டுப் பார்க்கலாம் மச்சான்” என்றான் சாரகேஷ்.

“அதெல்லாம் சரிவராது சாரகேஷ். ஏன் அம்மாவும் அனுவும் இன்னும் வரல?” எனக்கேட்டு தாய் தங்கை வரவிற்காக காரிலேயே உட்கார்ந்திருக்கையில், கார் கண்ணாடியை யாரோ தட்டுவது புரிய, யாரென்பதாய் ஆனந்த் கண்ணாடியை இறக்கினான்.

நெற்றியில் வைக்கப்பட்டிருந்த சந்தனத்துடனும் புன்னகையுடனுமிருந்த சுபாஷ், “உள்ள வாங்க அப்பா கூப்பிடுறாங்க” என்றான்.

“நா..நானா? நான் எதுக்கு?” ஏன் இன்னும் வரவில்லையென்று தாயைத் தேட... அவர்கள் சென்ற காரணம் அறிந்த சாரகேஷோ அமைதியாக வேடிக்கை பார்த்தான்.

“உங்க அம்மாவைத் தேடுறீங்களா? அவங்க வீட்டுக்குள்ளதான் இருக்காங்க வாங்க.”

“நீங்க யார்?”

“நான்தான் வித்யாவோட அண்ணன். உங்களோட வருங்கால மச்சினன், மாப்பிள்ளை, மச்சான் எப்படி வேணும்னா வச்சிக்கலாம்” என்றான் புன்னகையுடன்.

“மச்சான் அதான் கூப்பிடறாங்கள்ல வாங்க போகலாம்” என்று சாரகேஷ் இறங்கினான்.

யோசனையாய் அமர்ந்திருந்த ஆனந்திடம், “அட வாங்க மச்சான் சார்” என்றழைத்து உள்ளே சென்றவனுக்கு, தாய் வித்யாவைப் பேசியிருப்பது புரிந்தது. தயக்கத்துடன் நின்றிருந்தவனிடம் வாணியை அறிமுகப்படுத்த அவனைப் பார்த்தவருக்கு, மகளுக்கு பொருத்தமாகத்தான் தோன்றியது.

“அண்ணா வாழ்த்துகள். என் சார்பாகவும் உன் மருமகள் சார்பாகவும்” என்றாள் சந்தோஷமாக.

“குழந்தை இருக்காமா? ஏன் கூப்பிட்டு வரல?” என்று வாணி கேட்க...

“கூப்பிட்டுதான் அத்தை வந்திருக்கேன். ஆனா, உங்க கண்ணுக்கு ஆறு மாசம் கழிச்சிதான் தெரிவாங்க” என்றதும் முதலில் குழம்பி பின் புரிந்து, “நாலு மாசமா?” என... அவள் ஆமென்று தலையசைக்க... “உங்க வீட்டுக்காரர் வரலையா?” என்றார்.

“ஆமா அத்தை. நான் மட்டும்தான் வந்தேன். இதோ இவங்க என்னோட வீட்டுக்காரர் இல்லை. என்னோட கணவர்” என்றாள் குறும்புடன்.

புரிந்த தாய் அவள் தலையில் தட்ட, புரியாத மற்றவர்கள் புரிந்ததும் சிரித்து, அங்கிருந்த அனைவருக்கும் நல்ல குடும்பமாகத் தோன்ற மனதில் ஒரு திருப்தி.

“அண்ணா கார்த்திய கூட்டிட்டு வந்ததும் மேற்கொண்டு பேசிக்கலாமா?” என்று சுபாஷிணி கேட்க.

“அப்ப சுபாஷ் இருக்க முடியாதுமா. அவள் இங்க வர்ற நேரம் மாப்பிள்ளைப் பையன் முகம் பார்க்கக்கூடாதுல்ல.”

“அப்ப சரிண்ணா” என்று கீர்த்திகாவிற்கு போன் செய்து வித்யாவை அழைத்து வரச்சொன்னார்.

என்ன ஏதென்று புரியாமல் அண்ணனிடம் வந்த வித்யா, “என்ன விஷயம்ணா? இந்த கீர்த்தி என்கிட்ட எதுவும் சொல்லலையே. ஜாதகம் சரியில்லாததால கிளம்பினவங்க, அதைப் பார்க்க வேண்டாம்னு இன்னைக்கே பூவைக்கப் போறாங்களா?” என்றாள் ரகசியமாக.

“ஸ்.. எனக்கு எதுவும் தெரியாது.”

“பொய் சொல்லாதீங்க. உங்களுக்குத் தெரியாம இருக்கவா நடுவுல நாட்டாமையா நிற்க வச்சிருக்காங்க?”

“வித்தி அப்புறம் பேசிக்கலாம். எல்லாரும் பார்க்கிறாங்க பாரு.”

“அவங்க நம்மளைப் பார்க்கலண்ணா. கீர்த்தியைத்தான் பார்க்க வந்திருக்காங்க. நீங்க என் கேள்விக்குப் பதில் சொல்லலாம்?”

“வித்யா” என்ற தாயின் அழுத்தக் குரலில் அமைதியாகி தலைகவிழ... “கடைசிவரை இதையே ஃபாலோ பண்ணு” என்றான் சுபாஷ்.

சட்டென்று அண்ணனவன் கையில் கிள்ள, ‘ஆ’ என அலறப்போனவன் சூழ்நிலை உணர்ந்து, “உன்னை... அவங்க போகட்டும் அப்புறம் கவனிச்சுக்கறேன்” என்றான் மிரட்டலாக.

“சேலை கட்டச் சொல்லவா அக்கா” என்று சுபாஷிணி கேட்க...

“இல்லங்க சுடிதாரே போதும். இதுக்குன்னு தனியா எதுவும் செய்ய வேண்டாம். அவள் யதார்த்தமா இருக்கிறதே பிடிச்சிருக்கு. இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு பூ வச்சிட்டுப் போறோம். நிச்சயதார்த்தமும் கல்யாணமும் தனித்தனியா வைக்கலாமா? இல்ல ஒண்ணாவான்னு பேசிட்டு சொல்லுங்க. எங்க வீட்ல ஆம்பிள்ளைங்கன்னு பார்த்தா மகன் மருமகன் மட்டும்தான். அதிலும் ரெண்டு பேருமே சின்னவங்கதான். மருமகனோட அப்பா வெளிநாடு போயிருக்காங்க. வர ரெண்டு மாசமாகிரும். நீங்களே பார்த்து பண்ணிடறீங்களா?” என்றார்.

“கண்டிப்பா. நாளைக்கே ஐயரைப் பார்த்து தேதி குறிச்சிடலாம்.”

“அனுமா உன் அண்ணிக்கு நீயே பூ வச்சிடு” என்று மகளை அனுப்ப...

அதுவரை தனியே நின்றிருந்த கீர்த்தி வித்யாவினருகில் வர, கீர்த்தியைக் கேலி செய்ய அவள்புறம் திரும்பியவள் தலையில் பூ வைத்து, “கங்க்ராட்ஸ் அண்ணி” என்று அவளின் கைபிடித்து வாழ்த்தினாள்.

“வாழ்த்துகள் புதுப்பொண்ணே!” என்று கீர்த்தி அவளை அணைத்து விடுவித்தாள்.

சம்பந்தப்பட்டவளோ அதிர்ச்சியில் பேயறைந்தாற்போல் நின்றிருந்தவள், மற்றவர்கள் பேச்சிக்குரலில் உணர்வு வந்து, வேகமாக தாயைப் பார்க்க, அவர் நாத்தனாரிடம் பேசிக் கொண்டிருக்க, அவளின் அதிர்வைத் துள்ளியமாய் கணித்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.
 
Top