- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
12
வியாழன் காலையிலேயே வரதராஜன் மனைவியுடனும் இன்னும் நெருங்கிய உறவினர்கள் சிலருடனும் வந்திறங்கினார்கள். சம்பந்தப்பட்ட சாதனாவோ, கோபத்தில் ஒன்றும் செய்ய இயலாமல், அவசர திருமணத்தில் ஆர்வமும் இல்லாதவளாய் இருந்தாள். இதையே கொஞ்சம் நாட்கள் கழித்து வைத்திருந்தாலோ, ராஜ் தங்கள் வீட்டிற்கு வரும் முன்னரோ என்றால் சந்தோஷமாக ஏற்றிருந்திருப்பாள் என்பதுதான் நிஜம்.
சுபா தனக்கு கண் தெரியும் என்பதை மறைக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். அன்றைய நாளின் பிறகு தன்னை நெருங்கிய கணவனை, எதாவது காரணம் சொல்லி விலக்கியே நிறுத்தியவளுக்கு, தான் செய்வது தவறென்று புரிந்தாலும் ஒன்றுமே செய்ய இயலாதவளாய் தன்மேலேயே கோபம் வர, அமைதியை முகமூடியாகப் போட்டுக்கொண்டாள். வீட்டிலுள்ள இரு இளம்பெண்களின் மனநிலையும் வெவ்வேறாக இருக்க...
நிச்சயதார்தத்திற்கு அலங்காரம் செய்யமாட்டேனென்று அழிச்சாட்டியம் செய்தவளிடம், “அப்ப உனக்கு எங்கண்ணனைப் பிடிக்கலையா?” என்று வருத்தமாக சுபா கேட்க...
“அப்படில்லாம் இல்லண்ணி. இருந்தாலும், திடீர் கல்யாணம் மனசுல உறுத்துது. எதோ தப்பு பண்ணிட்டு அவசர அவசரமா பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்.”
“அதெல்லாம் சரியாகிடும்” என்று தைரியம் சொல்லி, அவளை ரெடியாக வைத்தாள். ப்ரேமால் அன்று வரமுடியாத சூழ்நிலையில், இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்ற அறிக்கையுடன், நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது.
அன்றே சுபாவின் பெற்றோர் மற்றவர்களுடன் கிளம்ப, நானும் வருவேன் என அடம்பிடித்த மகளை அடக்கி, “முதல் டைம் மாப்பிள்ளையோட தான் வரவேண்டும்” என ராஜன் உத்தரவிட, வேறு வழியில்லாமல் அடங்கி எரிச்சலுடன் அனுப்பிவைத்தாள்.
சென்னைக்கு இங்கிருந்து எப்படி செல்வதென்று மூளையைக் கசக்கியவள் ஒரு ஐடியா கண்டுபிடித்து, ப்ரேமிற்கு போன் செய்து, “அண்ணா எப்ப பொண்ணு பார்க்க வர்ற?” என்றாள்.
“அதான் பேசி முடிவு பண்ணியாச்சேமா. மேரேஜ்கு டைம் கம்மியாகத்தானிருக்கு. பார்த்த பொண்ணு தான. நான் நேரடியா கல்யாணத்தன்னைக்கே பார்த்துக்கறேன்.”
‘லூசு அண்ணா!’ என மனதில் நினைத்து, “சாதனாவுக்கு உன்னைப் பார்க்கணும்னு ஆசையிருக்காதா? வெளில சொல்லலதான் நிச்சயத்தன்னைக்கு வந்திருந்தா பரவாயில்ல. இது என்னால நடக்கிற திடீர் கல்யாணம். நீ வந்து நம்பிக்கையா பேசினாதான அவளுக்கும் கொஞ்சம் தைரியம் வரும்.”
“ஓ... அப்படி வேற இருக்கா. இப்ப அங்க வந்தா என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா தேவிமா?”
“உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கண்ணா. நீ வந்துதான் பாரேன்.”
“சரிமா நான் மண்டே வர்றேன்” என்றவனிடம், “அண்ணா யார்கிட்டயும் சொல்லாத. அப்புறம் உன்னை வர விடமாட்டாங்க” என அண்ணனை சம்மதிக்க வைத்து பேசி முடித்து போனை வைக்க, அடுத்து எப்படி மூவ் பண்ணி ஜீவாவையும் நம்பவைத்து, சென்னை போவதென்று யோசிக்க ஆரம்பித்தாள்.
தங்கையின் ஆணைக்கிணங்க திங்களன்று காலையிலேயே ப்ரேம் வர...
காலையிலேயே “வந்துமா நான் வேலைக்குக் கிளம்பறேன்” என வந்தவளை... “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. எங்கேயும் போகவேண்டாம் விட்லயே இரு” என்று அதட்டினார்.
“வந்துமா கல்யாணத்துக்குத்தான் இன்னும் நாள் இருக்கே. அதுவுமில்லாம, என்னோட ட்ரெய்னிங் பீரியட் கூட முடியல?”
“முடிய வேண்டாம். முடிய நிறைய நாட்களும் இருக்கு. அதனால, ப்ரேம் கம்பெனியிலேயே வேலைக்கு போய்க்கோ?”
“அது எங்களுக்குத் தெரியும். நீங்க சொல்ல வேண்டியதில்லை. இப்ப அனுப்ப முடியுமா? முடியாதா?”
“சாதனா என்ன இது, பெரியவங்ககிட்ட மரியாதையில்லாமல் பேசுறது. முதல்ல அத்தைகிட்ட மன்னிப்பு கேளு” என்றபடி ப்ரேம் உள்ளே நுழைய...
அவனின் குரல்கேட்டு வந்தனா ப்ரேமை வரவேற்க, வேகமாகத் திரும்பிய சாதனா அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, பின் திடீர் நிச்சயதார்த்தம் நினைவு வர, முகம் கடுமையாக மாறி கோபத்தில், “எங்கம்மா நான் சொல்றேன் உனக்கென்ன?” என்று வெளியே சொன்னாலும், தாயிடம் பேசிய வார்த்தைகளின் தவறு புரிந்து, “வந்துமா சாரி. இவங்க சொன்னதால கேட்கல? நானா தான் கேட்கிறேன்” என்றதும்...
“அப்ப ப்ரேம்கிட்டயும் சாரி கேளு?” என்றார் வந்தனா.
“எதுக்கு? ஏன் கேட்கணும்? நான் என்ன தப்பு பண்ணினேன்?”
“நீ, வா, போ சொன்னியே அதுக்குத்தான்.”
“நானொண்ணும் வா, போ சொல்லல?”
“ஆமா. நீ சொல்லல? உன் வாய்தான் சொல்லிச்சி. நீங்க உட்காருங்க தம்பி காஃபி எடுத்துட்டு வர்றேன். ப்ரஸ் பண்ணியாச்சா? எடுத்துத் தரட்டுமா?”
“இல்லத்தை. ட்ரெய்ன்ல வந்ததால, அங்கேயே பண்ணிட்டேன்.”
சாதனாவிடம் சாரி கேட்கச்சொல்லி வந்தனா கிச்சன் செல்ல... அவளின் முகபாவம் கண்டு சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தவன், “உட்காரு சாதனா” என்றான்.
“எனக்கு உட்கார தோணும் போதுதான் உட்காருவேன்” என்றாள்.
ஹா...ஹா... என்று சிரித்தவனையே பார்த்திருக்க... என்ன என்று புருவம் தூக்கி கேட்டவனிடம்... “நீங்க சிரிக்கும்போது, அப்படியே எங்க அண்ணி சிரிக்கிற மாதிரியே இருக்கு.”
மீண்டும் சிரித்து சிரிப்புனூடே “அவ என்னோட தங்கைதான்மா.”
“ஆமால்ல” என அசடு வழிந்து, “அச்சச்சோ! இன்னும் சாரி கேட்கல. சாரி” என்றாள்.
“ஏன் தப்பு பண்ணனும்? ஏன் சாரி கேட்கணும்?”
“நானெங்க தப்பு பண்ணினேன். என்னையறியாம ஒன்றிரெண்டு வார்த்தை வெளியே வந்திருது. அதுவும் இப்ப நான் கோபமா வேற இருக்கேன்ல.”
எதனால கோபம்? யார் மேல?”
“உன் மே... சாரி உங்க மேல தான்.”
“மரியாதை அப்பப்ப பட்டமா பறந்து போயிருதே எப்படிமா?”
“ம்... பட்டம்னா ரொம்ப பிடிக்கும். அதான் மரியாதைன்ற பட்டத்தை அடிக்கடி பறக்கவிடுறேன்.”
“பார்த்துமா காத்து ஸ்பீடா அடிச்சி பட்டத்துக்கு முன்னாடி நீ பறந்திடப்போற” என்று அவளின் ஒல்லியான உடல்வாகை கிண்டலடிக்க...
“உங்களை!” என கழுத்தை பிடிக்க நெருங்கியவளை தடுத்தது அவளின் கைபேசி. ப்ரேமைப் பார்த்து ஒழுங்கு காட்டியவாறே போனில் யாரென்று பார்க்காமல் ஆன் செய்து காதில் வைக்க... எதிரில் பேசிய வார்த்தைகள் மனதிற்குள் எரிமலையையே வெடிக்கச் செய்ய முகம் ரெத்தமெனச் சிவந்தது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரேம் எழுந்து எதிரில் நின்று யாரென்று சைகையில் கேட்க...
கைநீட்டி ‘வெய்ட் பண்ணுங்க’ என்றவள் வாயிலிருந்து, “ம்... சரி... ஓகே என்ற வார்த்தைகள் விழுந்து போனை கட் செய்ததும், கோபத்தில் ஷோபாவில் தூக்கி எறிந்து, தலையில் கைவைத்தபடி குனிந்தமர்ந்தாள்.
அவளருகில் அமர்ந்து அவளைத் தொட கையைத் தூக்கியவன், பின் இறக்கி, “என்னமா? யார் போன்ல?” என்று மென்மையாய் கேட்க, அவனின் கேள்விகளுக்கு விடையாக, அவள் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விடையாக விழுந்தது.
பதறியவன் அவள் முகம் உயர்த்தி, “ஏன்டா அழற? யார் என்ன சொன்னாங்க? ப்ளீஸ் சொல்லுமா? யாராயிருந்தாலும் நானிருக்கேன், நான் பார்த்துக்கறேன்” என்று முடிக்கும் முன் அவனின் இடது கையை தன்னிரு கைகளால் இறுக்கிப்பிடித்து தோள் சாய்ந்தாள்.
அவளின் செய்கையில் அதிர்ந்தாலும், ‘இந்த அளவுக்கு மனம் கஷ்டப்படுமளவுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்? யாராவது எதையாவது சொல்லி, இவளை ப்ளாக்மெய்ல் மாதிரி எதாவது பண்றாங்களா? எதுவாயிருந்தாலும் நானே இவளுக்குத் துணை’ என்று ஆறுதலளிக்கும் விதமாக, மறுகையால் அவள் தலையை மெல்ல தடவியபடி, “எதாவது பிரச்சனையா தனா?” என்றான்.
‘ம்...’ என்று தலையாட்டியவளுக்கு அவனின் பெயர் சுருக்கம் கவனத்தில் பதியாமல், “நீங்க இன்னைக்கு என்னோட ஆஃபீஸ் வர்றீங்க?” என கட்டளையிட...
ஏன்? எதெற்கென்ற கேள்வி கேட்காமல் “சரிமா வர்றேன். இப்ப அழாதேயேன். மனசுக்கு கஷ்டமாயிருக்கு. உன் பிரச்சனை எதுவாயிருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்” என்றான்.
“நான் அழுதா உங்களுக்கென்ன? பெரிய பிரச்சனையெல்லாம் இல்ல. நீங்க என்னோட வந்தா போதும்” என்றவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவன் தோள் சாய்ந்திருப்பதை... படக்கென்று அவனை விட்டுவிலகி “சாரி” என்று வந்த வெட்கத்தை மறைத்து ஓடியவள் காதில் பிரேமின் சிரிப்பு சத்தம் கேட்டது.
அண்ணன் சத்தம் கேட்டு வெளியே வந்த சுபா போக யத்தனிக்கையில் மாமியார் உள்ளே செல்ல, அவர்களின் தனிமையைப் பார்த்து, தனியே பேசட்டுமென்று வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே இருக்க, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் அவர்களிருவரும் இருந்த கோலத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டாலும், ‘அடிப்பாவி சாது... சாது மாதிரி எனக்கு கல்யாணம் வேணாம்னு இப்ப வரைக்கும் அட்டகாசம் பண்ணிட்டு, இப்பப்பாரு கல்யாணத்துக்கு முன்னாடியே எங்கண்ணனோட டூயட் பாடுற’ என்று நினைத்ததை வெளியே காட்டாமல், சாதனா மாடிக்குச் சென்றதும், “அத்தை அண்ணா குரல் கேட்ட மாதிரி இருந்தது?” என தெரியாதது போல் ஹாலிற்கு வந்தாள்.
“வா... தேவிமா. நான் இங்கதான் இருக்கிறேன்” என தங்கையை தன்னருகில் அமர்த்தினான்.
வெளியே சென்றிருந்த ஜீவாவும் ப்ரேமைப் பார்த்து நலம் விசாரித்தபடி வந்து மனைவியினருகில் அமர்ந்து, முகத்திலுள்ள வியர்வைத் துளிகளை, அவளின் நைட்டியிலுள்ள கைப்பகுதில் துடைக்க, பதற்றத்தில் அவனை முறைத்து எழுந்து செல்லப்போனவளை கைபிடித்திழுக்க, இழுத்த வேகத்தில் ஜீவாவின் மடியில் விழ, அருகில் அமரவைத்தவன் “எங்க எழுந்து போற சுப்பு?” என்றபடி, பிரேமிடம் திரும்பி “மச்சான் இவளுக்கு கண்ணு தெரியாதுன்னா நம்ப முடியுதா பாருங்க? என்னை முறைக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்.”
கணவனின் அந்த வார்த்தையில் ‘உண்மை தெரிஞ்சிருச்சா?’ என அதிர்ச்சியாக நோக்கி, ‘சே... சே... இருக்காது? தெரிஞ்சிருந்தா இப்படியா எதுவுமே தெரியாதது மாதிரி இருப்பாங்க’ என நினைத்தாள்.
“நல்லா பாருங்க ஜீவா. உங்களை முறைக்கத்தான் செய்றா.”
“அண்ணா நீயுமா இவங்களோட சேர்ந்து என்னை கிண்டலடிக்கிற?”
“ஹி...ஹி மலை ஏற மச்சான் உதவி தேவைமா? அதான் இப்பவே ஐஸ் வச்சிக்கிறேன்.”
“ஐஸ்னதும் தான் நியாபகம் வருது. அம்மா காஃபி” என்று சொல்லி முடிக்கும் முன் வந்தனா காஃபியுடன் வர...
“ஏன் நாங்க காஃபி குடிக்க மாட்டோமா?” என்றபடி அங்கு சாதனா ஆஜராக...
“யார்டா அது நாங்க? நீ மட்டும் தான இருக்க? வேற யாரும் கண்ணுக்குத் தெரியலையே?” சாதனாவின் பின்னால் வந்தனா தேடினார்.
“ம்... வந்துமா நக்கல் ஓவராயிருக்கே. குறைச்சிக்கோங்க. நாங்கன்னா, நான்னு அர்த்தம்.”
“ஓ... அப்படியா. தமிழ்ல இப்படி கூட அர்த்தம் வருதா? சரி முறைக்காத உன்னை கூப்பிடாம விட்டா என்னை ஒரு வழியாக்கிட மாட்டியா?”
“ஆமா, ஆக்கிட்டாலும். சரி அதை விட்டுட்டு என்னோட பிரச்சனைக்கு வாங்க. நான் ஆஃபீஸ் போகப்போறேன். உடனே எல்லாரும் முறைக்காதீங்க. இன்னைக்கு மட்டும் தான். அதுவும் உங்க மாப்பிள்ளை கூடத்தான் போகப்போறேன்.”
“கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா சாது?” எங்கே ராஜால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம் தாய்க்கு.
“ஆஃபீஸ்ல எதாவது ஃபார்மாலிட்டீஸ் இருந்தா முடிச்சிட்டு வரணும்லம்மா அதான்.”
தாய் மறுத்து வாய் திறக்குமுன், “சரி போயிட்டு வாங்க” என்ற பதில் ஜீவா, சுபாவிடமிருந்தும் வர, அதற்குமேல் சொல்ல எதுவுமில்லாமல் வந்தனாவும் சம்மதித்தார்.