• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
11



“என்னாச்சிக்கா? ஏன் டல்லாயிருக்க?” என்றான்.

‘ம்கூம்..’ என அவனின் தோள் சாய்ந்தவள், “உன்னைப் பார்த்தா வெளி ஆள் ஃபீல் வரலடா. என் தம்பி இருந்திருந்தா உன்னை மாதிரி இருப்பான்.”

‘நான்தான்க்கா உன் தம்பி.’ வாய்வரை வந்த வார்த்தைகளைத் தொண்டைக்குள் முழுங்கி, “நானும் உன் தம்பிதான்க்கா. ஏன் மனசைக் குழப்பிக்கிற. காலையில் சிரிச்சிட்டு வந்தல்ல அந்த மாதிரி இரு.”

“ம்... சின்ன வயசு நியாபகம்டா. இப்படி பேமிலியோட எத்தனை தடவை வெளியூர் போயிருப்போம். கடைசியா போனப்போ...” சொல்ல முடியாமல் தவிக்கும் அக்காவின் உணர்வுகளை தன்னுள் உணர்ந்தவன், “சரி பண்ணிரலாம்கா” என்றான்.

“ம்... எல்லாத்தையும் சரிபண்ண இளா அத்தான் வருவாங்க.”

“கூப்பிட்டியா மொழி” என்றான் இளங்கதிர்.

இளங்கதிரின் திடீர் வார்த்தையில் பேந்தப் பேந்த விழித்தவள் ‘நா..நானா.. நான் எப்ப... உங்களைக் கூப்பிடல. இளா அத்தானைத்தான்...’ சொல்ல நினைத்த வார்த்தைகள் வெளிவிடாமல் அப்படியே அமைதியாகிவிட்டாள்.

“கோவில் வந்தாச்சி. எல்லாரும் இறங்குங்க. கதையடிக்கிறதெல்லாம் அப்புறமா பார்க்கலாம். வேன் ஐந்து நிமிஷம் முன்னாடியே வந்திருச்சி” என்றதும் ஒவ்வொருவராக இறங்கினர்.

முன்னால் இருந்த குருமூர்த்திக்கு வந்த இடம் கண்டதும் பக்கென்றானது. எந்த இடத்திற்கு வரவேகூடாது அதுவும் கதிரை கூட்டிவரக்கூடாது என்று எண்ணியிருந்தாரோ, அதே காமாட்சியம்மன் கோவில். மனதினுள் பாரம் ஏறிய உணர்வு. இதுதான் விதி போலும் என்றுதான் அவருக்குத் தோன்றியது.

அடுத்து இறங்கிய திருமொழிக்குக் கால்கள் கீழே நிற்கவில்லை. அப்படியே காரில் சாய்ந்து நிற்க... பிரஷாந்திற்கும் அதே நிலையே! ‘யாருமே எதிர்பார்க்கவில்லை இவ்விடத்தை. அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து இங்கு ஏன் வரவேண்டும்?’ கேள்விகள் மனதினுள்ளே!

கதிரோ வேறொரு மனநிலையிலிருந்தான். ‘தன் கனவில் வந்த கோவிலின் முன் பகுதி. தன்னை அழைத்தது எதற்காக? அப்படியானால் மொழியின் குடும்பம் சிதறிய இடம் இதுதானா?’ சட்டென அவள்புறம் திரும்பியவனுக்கு அவளின் அதிர்ந்த அந்த நிலையே பதிலைச் சொல்லியது.

அவ்விடத்தை வெறித்தாற்போல் நின்றிருந்தவளிடம் சென்று, “வா போகலாம்” என்றான்.

“இல்ல. நான் வரல.. வரமாட்டேன்” என தலையசைத்தாள்.

“சாமிகிட்ட என்ன கோவம் மொழி. நான் இருக்கேன்ல என்கூட வா. எதுவானாலும் நான் பார்த்துக்கறேன்.”

“நான் மாட்டேன்” என திரும்பவும் மறுத்தவளிடம்...

“உன்னைச் சேர்ந்தவங்க ஆத்மா இங்கதான் சுத்திட்டிருக்கும் மங்கை. அவங்க உன்னைப் பார்க்க வேண்டாமா? அவங்களோட மூச்சுக்காற்று இங்கதான் இருக்கு. நீ வா அது உனக்கே புரியும்.”

“நிஜமாவா சார்? என் அப்பா, அம்மா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, அண்ணா, தம்பி...”

“தம்பி” எனும்போது பிரஷாந்தும் கதிரும் சில நொடிகள் அதிரத்தான் செய்தார்கள். கதிர் பிரஷாந்தைக் காண... அவளைப் பொருத்தவரை அவர்கள் அனைவரும் இறந்தவர்கள்தானே. அதனால் அமைதியாக நின்றுவிட, ஏதோ சொல்லப்போன கதிரை கண்களால் தடுத்துவிட்டான் அன்பழகன்.

“எல்லாரோட ஆத்மாவும் இங்கதான் இருக்குமா? நான் அவங்களைப் பார்ப்பேனா?”

“அவங்களைப் பார்க்க முடியாது மங்கை. உன்னால அவங்களை உணர முடியும். அவங்க சாமியோட சாமியா ஐக்கியமாகிட்டாங்கன்னு நினை. அவங்க ஆசீர்வாதம் உனக்குக் கிடைக்கணும்னா நீ உள்ள வரணும்.”

கதிர் சொன்னதிலுள்ள உண்மை புரிய, “அப்படின்னா நான் வர்றேன். என்னைச் சார்ந்தவங்களைப் பார்க்க வர்றேன். கண்டிப்பாக வர்றேன்” என்று நடக்க ஆரம்பித்தாள்.

“என்னடா அப்படியே நிற்கிற? நான் சொன்னது அவளுக்கு மட்டுமில்ல உனக்கும் சேர்த்துதான். நட” என்று அவனையும் அதட்டி கோவிலுக்குக் கூட்டிச் சென்றான்.

பிரஷாந்திற்குமே இந்தக்கோவில் என்பதால்தான் தன்னிடம் சொல்லாமல் மறைத்திருப்பது புரிந்தது. தான் எடுத்த முடிவிற்கு இந்த இடம்தான் சரியென்று தோன்ற அதன்பின்னே இறந்தவர்களையும் வணங்கி தன்னைத்தானே சமாதானப்படுத்தி தெளிவாகச் சென்றான்.

அன்று விசேஷநாள் போலும் சற்று கூட்டமாகவே இருந்தது.

சிவகாமியோ கணவனிடம் வந்து, “இடம் ரொம்ப நல்லாயிருக்குல்லங்க. உள்ள ஒரு கோவில் இருக்காம். அங்க போய் பொங்கல் வைக்கணும் சொல்றாங்க. வெயில் இல்லாம சும்மா ஜில்லுன்னு இருக்குதுங்க.”

“பக்கத்துல அருவி இருக்கு சிவா. அதான் கிளைமேட் நல்லாயிருக்கு.”

“ஆமா அக்கா போன முறை கூட மச்சானை இங்க வச்சிதான் சந்திச்சேன்” என்று காமாட்சி சொன்னதும், குருமூர்த்தியிடம் அதிர்வென்றால் சிவகாமி “அப்படியா?” என்றார்.

“வர்ற வழியிலே காண்பிச்சேனே அதான் மஞ்சளாறு. ஏரியா சுத்திலும் ஆறுகள்தான் அதிகமிருக்கும். முன்னாடி யார் எப்ப வேணும்னா உள்ளயிருக்கிற கோவிலுக்குப் போகலாம். கொஞ்சம் வருஷம் முன்ன இந்த இடம் முழுக்க ஃபாரெஸ்ட் ஆஃபீஸ் கண்ட்ரோலுக்கு போயிருச்சி. இப்ப எல்லாமே அவங்க கண்ட்ரோல். உள்ள போகணும்னா ஆபீஸர்கிட்ட பெர்மிஷன் லெட்டர் வாங்கியிருக்கணும். அது கூட குறிப்பிட்ட டைம்தான் தருவாங்க.”

“ஓ... அப்ப கண்டிப்பா அங்க போய்தான் ஆகணும்” என்று சிவகாமி சொல்ல...

“ஆமாம்மா. ஃப்ரண்ட் மூலமா ஏற்பாடு பண்ணிட்டேன். இங்க சாமி கும்பிட்டு உடனே கிளம்பிரலாம்” என்று அருகில் வந்தான் நிஷாந்த்.

முன் இருந்த காமாட்சியம்மனை தரிசிக்கையில்தான் அவளும் வந்தாள். அவளுடன்... அவளறியாமல் அவனும்!

“ஹாய்! ஏன்ங்க நான் கூப்பிட்டா கூட காது கேட்காத மாதிரி நிற்கிறீங்க? கொஞ்சம் திரும்பிப் பாருங்க” என்றான் அவளைக் கண்டு.

“ப்ச்... என்ன சார் உங்க பிரச்சனை? நான் பார்த்து எதுவும் அகப்போறதில்ல. பேசாம போங்க. நின்னு கடுப்பேத்திட்டு” என முனகியபடி அம்மனை வணங்கினாள்.

“கயல்” என்றதில் அவள் வேகமாகத் திரும்ப, இளங்கதிரும் அப்பெயர் கேட்டுத் திரும்பினான்.

“எ..என் பெயர் உங்களுக்கெப்படி?” சுற்றிலும் பார்த்தபடி அவள் திணற...

‘அனைத்தும் நானறிவேன்’ என்று அவன் சிரித்தான்.

“யார் நீங்க? என் பெயர் உங்களுக்கெப்படி? ப்ளீஸ் பெயர் சொல்லிக் கூப்பிடாதீங்க” என சுற்றுமுற்றும் பார்த்து அவன்புறம் கெஞ்சல் பார்வை செலுத்தினாள்.

ஏனோ அவளின் அத்தோற்றம் அவனுள் சில தாக்கங்களை ஏற்படுத்தியது. “சரிமா பெயர் சொல்லல. நான் பிரகாஷ். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? இதோ இந்த அம்மன் மேல ஆணையா கடைசிவரை உன்னை நல்லா பார்த்துப்பேன்.”

அவனை நேர்ப்பார்வை பார்த்தவள், “சாரி எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா கிடையாது. தேவையில்லாம உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாம போயிருங்க” என்றாள் அமைதியாக.

அவனும் அதே பார்வையை அவளிடம் செலுத்தி, “எவ்வளவு டைம் வேஸ்டானாலும் உனக்காகக் காத்திருப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது” என்றான் உறுதியாக.

“ப்ச்... சினிமா டயலாக் விடாதீங்க மிஸ்டர். அதை ரசிக்கிற இடத்தில் நான் இல்ல.”

“தெரியும்” என்றான் பட்டென்று.

“எப்படி.. எப்படித் தெரியும்?” என்றாள் படபடப்புடன்.

“இப்பதான சொன்ன. அப்புறம் என்ன கேள்வி?”

“ஓ...” என்றாலும் சின்ன நிம்மதி மனதினுள்.

“ஹான் அப்புறம் நீ ரசிக்க வேண்டாம். ரசின்னு கம்பல் பண்ணமாட்டேன். என்னைக் கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ. உனக்கான பாதுகாப்பா நான் இருப்பேன்.”

“என்னைப் பாதுகாக்க எனக்குத் தெரியும் சார். இத்தனை வருஷமா பாதுகாப்பா வளராம குழந்தையாவா இருக்கேன். இப்ப என்ன திடீர் பாதுகாப்பு. எனக்குன்னு குடும்பம் இருக்கு. என்னை அவங்க பாதுகாப்பாங்க. எதாவது சொல்லிரப்போறேன். போங்க சார்” என்று கோவிலைச் சுற்றியவள் தனக்கு முன்னே சென்றவர்களுடன் சேர்ந்து நடக்கலானாள்.

‘க... கயல்’ என பெயரைக் கூட சொல்ல முடியாமல் அமைதியாக நிற்க, அவனருகே வந்த நண்பன், “வாடா நாமளும் போகலாம்” என்றான்.

“பர்மிஷன்டா?”

“உன் ஆளு பெர்மிஷன் கேட்டுட்டா போறாங்க. கூட்டத்தோட சேர்ந்துக்கல. நாமளும் அப்படியே ஜாய்ண்ட் அடிக்கலாம். இல்லன்னா அவர்கிட்ட சொல்லி ஒரு போன் பண்ணச்சொல்லு உடனடியா ராஜ மரியாதையோட கூட்டிட்டுப் போவாங்க.”

“அப்படிக் கேட்டுத்தான் போகணும்னா, எனக்கு கோவிலுக்குப் போகத் தேவையில்லடா” என கடுப்புடன் சொன்னான்.

“அப்ப வா நாம அவங்களோட போயிரலாம்” என இழுத்துச் சென்றான்.

“தப்புடா அப்பு. ஏற்கனவே ஏதோ வேற்றுக் கிரகவாசி போல பார்த்து முறைக்கிறா. திரும்பத் திரும்ப அவள் பின்னாடி போனா என்னைக் காவாலிப்பயல்னு நினைச்சிரப்போறா.”

“டீச்சர் அப்படிலாம் நினைக்கமாட்டாங்கடா. ஆளைப் பார்த்து எடை போடுவாங்க. இல்லன்னா இந்நேரம் அவங்க செருப்பு பிஞ்சிருக்காது.”

“டேய்!” என பல்லைக்கடிக்க...

“கஷ்டப்படுற பொண்ணுடா. நீ கேட்டது என்ன சாதாரண விஷயமா. எந்த ஆம்பளைகிட்டயும் நின்னு பேசினதில்ல. அவ்வளவு அமைதி.”

“இவளா அமைதி?” ஏனோ சிறு வயது கயல் அவன் கண்முன் வந்து போனாள். அதைத் தொடர்ந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டதை நினைத்தவன், ‘காலம்தான் எவ்வளவு கொடுமை செய்திருச்சி கயலுக்கு. அதை சரிசெய்தே ஆகணும்’ என்ற வைராக்கியம் அவனுள் எழ “என்ன நடந்தாலும் அவள்தான் என் ஒய்ஃப். எந்த இடத்துல அவள் உறவுகளைப் பறிகொடுத்தாளோ அதே இடத்தில் வச்சி சொல்றேன்டா. எத்தனை தடை வந்தாலும் அவள்தான் எனக்கு” என்றான் உறுதியாய்.

அந்தத் தடையே அவள்தான் என்று அவனுக்கு யார் சொல்வதோ!

“தம்பிப்பையா உனக்கு இந்தக் கோவில் தல வரலாறு தெரியுமா?” என்றவள் குரலில் ஒரு குதூகலம்.

“யாருக்குத் தெரியும்” என்று அவன் தோள்குலுக்க...

“உனக்குத் தெரியுமா மொழி?” என்றார் சிவகாமி.

“ம்... எங்க அம்மா சொல்லியிருக்காங்க. அதிலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொல்வாங்க. எது உண்மை தெரியாது. மொத்தத்துல அசுரனை அழிக்க அவதாரம் எடுத்து வந்த சக்தி வாய்ந்த அம்மன்னு காமாட்சி அத்தையும் சொல்லியிருக்காங்க.”

சிவகாமி ‘நீயா சொல்லிக் குடுத்தது?’ என்பதாய் காமாட்சியைப் பார்க்க... “நான் இல்லக்கா. அவளோட சொந்த அத்தை” என்றதும் “நீயே சொல்லு மொழி?” என்றார் சிவகாமி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“அசுரவதம் செய்வதற்காக இந்த காமாட்சியம்மன் அவதரிச்சி ஐநூறு வருடங்களுக்கும் மேலாகுது. ஒரு பாட்டிதான் இவங்களை வளர்த்திருக்காங்க. எந்த ஆண் அவங்களைப் பார்த்தாலும் தலை வெடிக்கும் என்பதுதான் அவங்க அவதாரத்துக்கானது. அந்தப் பாட்டிக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் அம்மனைப் பார்க்க ஆசைப்பட்டு பாட்டிகிட்ட கேட்க... பாட்டி மறுத்துட்டாங்க. சின்ன வயசு சொன்னா கேட்காம பாட்டிக்குத் தெரியாமல் போய் பார்க்க அப்பவே தலை வெடிச்சிருச்சி. அந்த பாட்டிக்கும் பேரனுக்கும் இங்க சிலை இருக்குது.”

“அம்மன் யாரை வதம் செய்ய அவதரிச்சாங்களோ அந்த அரக்கனோட தலை சிதறி விழுந்தது தலையாறு அருவி. இதயம் விழுந்த இடம் இருளாறு! வயிறு வரட்டாறு! மூளை விழுந்தது மூளையாறு. இப்ப அது முல்லையாறு ஆகிருச்சி சொல்வாங்க.”

“சித்ரா பௌர்ணமி அன்னைக்கு மட்டும் பூஜை நடக்கும். எல்லாருக்கும் அனுமதி உண்டு. வரும்போது பார்த்தோமே அது மஞ்சளாறு டேம். அதோ தெரியுது பாருங்க.. அதான் தலையாறு அருவி. இந்த மலை கொடைக்கானல் மலையின் இன்னொரு பகுதியோட அடிவாரம். இந்தப் பகுதியிலிருந்து ஸ்ட்ரெய்டா போயி எதிர்ல ஜம்ப் பண்ணினா, பழனிமலை வரும்னு சொல்வாங்க. முன் பகுதியில் இருக்கிற கோவில் எல்லாருக்கும் தெரியும். உள்ள இருக்கிற இந்த அம்மன் ஒரு சிலருக்குத் தெரியாது. ரெண்டுமே காமாட்சியம்மன்தான். இரண்டு சன்னிதானத்துலயுமே நேரடி பூஜை நடக்காது. அம்மன் முன்னாடி திரை மறைத்திருக்கும். ஐயர் கூட அம்மனைப் பார்க்க முடியாது.”

“எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான். பொதுவா எந்த கோவிலுக்கும் மூல வரலாறு தேடினா சரியான காரணம் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். இந்த அம்மனுக்கும் இன்னும் சில கதைகள் இருக்கு. எது எப்படினாலும் அவங்க உருவத்தைப் பார்க்கிறது... பார்க்கணும்னு நினைக்கிறது தப்பு. சாமி விஷயத்துல ஒரு லிமிட்கு மேல தலையிடக்கூடாது. அப்படியே ஏத்துக்கணும். அதுதான் நாம அவங்க மேல வச்சிருக்கிற அசைக்க முடியா நம்பிக்கை.”

“வாவ்! இவ்வளவு தெரிஞ்சதே பெரிய விஷயம்” என்று இளங்கதிர் சொல்ல... மற்றவர்களிடமும் மெச்சுதலுடன் கூடிய பாராட்டு.

“ஏய் யக்கா அப்படியே ஒரு கவிதை சொல்லேன்?”

“என்னது கவிதையா? எனக்கு அதெல்லாம் வராது.”

“ட்ரை பண்ணிப்பாரேன்கா?”

“ம்கூம்...” என்ற தலையாட்டல் அவளிடம்.

“மச்சான் நீங்க சொல்லுங்க?” என கதிரிடம் கேள்வியைத் திருப்ப... “ம்...” என யோசித்து

என் மொத்தக் கவிப்புலனையும்

ஒட்டுமொத்தமாய் திருடிக்கொண்ட

கள்ளியிவளோ!

என் கற்பனைகளனைத்தும்

களவு போயின,

இவள்தனைக் கண்டதும்!

என் சொல் கேளா இதயமோ,

தன்னவளைக் கண்டதும்,

தாவிக்குதித்து அவளைத்

தஞ்சமடைந்ததோ! நானறியேன்!

திருடுபோன இதயம்

திரும்ப வேண்டாம் பெண்ணே!

உன்னுள்ளே இருக்கட்டும்

நானும்! என் நினைவுகளும்!

“சூப்பர் சூப்பர். எப்படி எதுவுமே தெரியல சொல்லி அசத்துறீங்க சார்?”

“ஜஸ்ட் தோணிச்சி நிஷா. அதைக் கவிதைன்னு சொன்னது நீங்க. சோ சேட்” என்றான்.

இளங்கதிரிடம் வந்த பிரஷாந்த் “உங்ககிட்ட தனியே பேசணும் மச்சான். அவங்க முன்னாடி போகட்டும். நாம இடைவெளி விட்டு நடக்கலாம்.” கதிர் யோசனையாய் அவனைக்காண... “அட வாங்க மச்சான்” என இழுத்துச் சென்று தான் நினைத்து எடுத்த முடிவைச் சொல்லி கதிரைக் கண்டான்.

சின்னதான அதிர்வு அவ்வளவே! “சரி வருமா?” என்றான் கேள்வியாய்.

“கேள்விக்கு இடமில்லை மச்சான். எனக்கு உங்க விருப்பமும் முடிவும்தான் வேணும்?”

“ஓகே உன்னிஷ்டம்” என்றான் மெதுவாய்.

இளங்கதிரின் முடிவு இதாகத்தான் இருக்கும் என்பதைத் தெரிந்திருந்ததால் சின்னப் புன்னகை மட்டுமே அவனிடம். அப்படியே தன் அண்ணனைக் காண அவனின் புருவத்தூக்கலில் ‘சக்சஸ்’ என்று விரல் உயர்த்த, நிஷாந்திற்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

தாயிடம் வந்த இளங்கதிர் பிரஷாந்த் சொன்னதைச் சொல்லி அதற்குத் தான் சம்மதித்ததைச் சொன்னான். சின்னத் திடுக்கிடலுடன் மகனைக் கண்டவர் “வேண்டாம் ராஜா. இது தப்பு. சின்னப்பிள்ளைங்க விளையாட்டில்லை இது. உங்க வாழ்க்கை பத்தின முடிவு.”

“அம்மா இதுதான் என் வாழ்க்கைன்னு தெரிஞ்சிதான் இந்த முடிவெடுத்தேன். எனக்கு உங்க பர்மிஷன் வேணும். எப்படியும் அப்பா சம்மதிக்க மாட்டாங்க. நடந்த பின்னாடி மறுக்கவும் மாட்டாங்க.”

“என்னவோ செய்டா. பெரிய முடிவை இவ்வளவு ஈஸியா எடுத்துட்ட. ஹ்ம்.. பரவாயில்ல விடு பார்த்துக்கலாம்.”

“தேங்க்யூம்மா” என்று சந்தோஷத்தில் கொஞ்ச... அவன் கையைத் தட்டிவிட்டு குழப்பத்துடன் முன்னே நடந்தார்.

கோவிலை நெருங்கும் சமயம், திருமொழி பிரஷாந்திற்குள் சின்னதான நடுக்கம் பிரஷாந்தை ரத்தினம் பிடித்துக்கொள்ள... காமாட்சி மருமகளின் நிலை தெரிந்து அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டார். அவருக்குமே கோவில் வந்து இறங்கியதும்தான் தெரியும். முன்னரே தெரிந்திருந்தால் கண்டிப்பாக திருவை அழைத்து வந்திருக்கமாட்டார்.

அது வரையிலுமே எந்த நினைவுகளும் இல்லாமலிருந்த இளங்கதிரின் மனம் அலைமோதித் தவிக்க ஆரம்பித்தது. அருவியிலிருந்து வரும் நீரின் சத்தம் பேரிரைச்சலாய்க் கேட்க சட்டென காதை மூடிக்கொண்டான்.

மகனையே பார்த்திருந்த குருமூர்த்திக்கு அவனின் முகமாற்றம் பயத்தைக் கொடுத்தது. இங்கு கிளம்பிய அன்று டாக்டர் சொன்னது நினைவு வர, அம்மனிடம் நிறைய வேண்டுதல் வைத்தவர் மனம் கதிரைவிட அதிக மடங்கு துடித்தது.

“என்னடா ராஜா ஒரு மாதிரியாகிட்ட?”

“அம்..மா அ..அந்தக் கனவு அப்படியே கண்முன்னாடி வருதும்மா. எதேதோ சத்தம் கேட்குது. எதோ ஒரு வெறி என்னையறியாம...”

“ராஜா..!”

“எனக்குப் புரியலம்மா. நான் மங்கை குடும்பத்தாருக்கு நடந்த அநியாயத்தப்ப இங்க இருந்திருப்பேன் தோணுதும்மா. அதான் இந்த இடம் ரொம்பப் பழக்கமானதா இருக்குபோல.”

“சேச்சே இருக்காதுடா ராஜா. அவங்க சொன்னதை அடிக்கடி கேட்டதால உனக்கு அந்த ஃபீல் வந்திருக்கு போல.” மகனிடம் சொன்னாலும் ‘நான் ஏன் இங்கு வர அத்தனைப் பிடிவாதம் பிடித்தேன்? ஏன் இந்த தாய் வந்து என் மகனை அழைத்தாள்? இங்கு வந்தது சரியா? தவறா?’ கேள்விகள் மட்டுமே அவருள். இதற்கான பதில்கள் வரும்பொழுது தாங்குவாரா சிவகாமி? இல்லையெனில் பதிலில்லா கேள்விகளாகவே போய்விடுமா?

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கையில் கயல்விழியும் அவர்களுடனே இருந்தாள்.

தன் உறவுகளனைத்தும் இழந்து தன் அத்தையுடன் பயணப்பட்ட கயல்விழிக்கு சாமி நம்பிக்கை போய்விட்டாலும், தன் குடும்பத்தில் யாரோ ஒருவராவது உயிருடனிருந்து தன்னிடம் வரமாட்டார்களா என்ற எண்ணமே. விவரம் தெரிந்ததிலிருந்து இங்கு வருகிறாள். யாரையும் கண்டாளில்லை. இதோ தன் முன்னாலிருக்கும் மங்கையர்கரசியின் முகத்தைப் பார்த்திருந்தால் கூட அடையாளம் தெரிந்திருக்குமோ! தன் உறவுகளின் முகம் தேடி வந்தவள் அம்மனை மட்டும் பார்த்தபடி ‘என் குடும்பத்தைத் திருப்பிக்கொடு’ என வாதிட்டாள்.

“உன்னவர்கள் யாவரும் உன்னைச் சுற்றியே!” என்ற அம்மனின் குரல் கேட்கவில்லையோ அவளுக்கு.

அவளையே பார்த்திருந்தவன் முதுகில் அடிபோட்டு, “கோவில்ல வச்சி என்னடா பண்ற? பேசாம சாமியைக் கும்பிடு” என்றான் அப்பு.

“அவ அழுறாடா. மனசுக்குக் கஷ்டமாயிருக்கு. அவளோட மொத்தக் குடும்பமும் போன இடம் இதுதான். அவளுக்கு ஆதரவா ஆறுதலா இருக்கணும் தோணுது. ஒரு கட்டத்துல என் காதல் உணர்ந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும், நான் யார்னு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாள்டா.”

“பின்னாடி வர்ற பிரச்சனையை விடு. இப்ப அவங்களை சமாதானப்படுத்தப்பாரு. தனியா கண்கலங்கி நிற்கிறதைப் பார்த்தா எனக்கே மனசு சங்கடமாயிருக்கு.”

“அதுக்குக் காரணமானவங்களைச் சும்மா விடமாட்டேன்டா. இவள் வடிக்கிற கண்ணீருக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். சரி அவகிட்டப் பேசிப் பார்க்கிறேன்” என்று அவளிடம் சென்று, “கயல் அழாதயேன். உன் கவலை சீக்கிரம் தீரும்” என்றான் தெய்வ வாக்காய்!

“என்ன.. ஆருடம் சொல்றீங்களா? என் கவலை என்னன்னு தெரியுமா உங்களுக்கு? என் கவலை தீரணும்னா செத்தவங்க எல்லாரும் உயிரோட வரணும். வருவாங்களா? வரவைக்க முடியுமா உங்களால்? பேசாம போங்க சார். ஆறுதல் சொல்ல வந்துட்டீங்க” என்றாள் எரிச்சலுடன்.

“கயல்!”

“கொஞ்சம் பெயரைச் சொல்லாம இருக்கிறீங்களா. இரிடேட் பண்ணிக்கிட்டு. ஏன் நான் ஒருத்தி உயிரோட இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு? சொல்லுங்க சார்?” என கோபத்தில் சற்று சத்தமாகவே கேட்டாள்.

“என்னாச்சிமா? என்ன பிரச்சனை இங்க?” என அவர்களைப் பார்த்திருந்த இளங்கதிர் வந்தான்.

அந்தக் குரலின் மென்மையில் எதை உணர்ந்தாளோ, யாரென்பதாய் அவனைக்காண... “சொல்லுமா என்ன பிரச்சனை?” என்றவன் அங்கிருந்த ஆண்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேணும்? ஏன் இந்தப் பொண்ணுகிட்ட பிரச்சனை பண்ணிட்டிருக்கீங்க?” அதட்டலாய் கேட்டான்.

“பிரச்சனைன்னு எதுவுமில்லை சார். தெரிஞ்ச பொண்ணுதான்” என்றான் பிரகாஷ்.

“தெரிஞ்ச பொண்ணாயிருந்தாலும் பேச விருப்பமில்லைன்ற பொண்ணுகிட்ட பேசுறது தப்பு ஓகே.”

“ஓகே சார்” என்று அவர்கள் நகர...

“நீ யார் கூடமா வந்த?” என்றவன் அவளை அப்பொழுதுதான் நன்றாகப் பார்க்க பரீட்சயமான அம்முகம் அவனுள் எதையோ புரட்ட... ‘என்னை மறந்துட்டல்ல!’ கனவில் கேட்ட பெண். அன்று வாடிப்பட்டியில் பார்த்த அதே பெண். ‘யார் இந்தப்பெண்? என் கனவிலும் அடிக்கடி என் கண்முன்னும் தோன்றுகிறாள்.’ மனம் கேட்க, இவளின் பாதுகாப்பும் உனைச் சேர்ந்ததே என்றது மூளை.

“தனியாதான் அண்ணா வந்தேன். உள்ள வந்து ரொம்ப வருஷமாகிருச்சி. இன்னைக்கு இங்க வரணும்னு தோணினப்ப உங்க குடும்பம் மொத்தமும் இங்க வந்ததா, உங்களோடவே நானும் வந்துட்டேன். சாரிண்ணா” என்றாள் சின்ன குற்றவுணர்வுடன்.

“பரவாயில்லமா. எங்களோடவே நில்லு. போகும்போது பஸ்ஸ்டாப்ல இறக்கிவிட்டுடச் சொல்றேன்.”

“தேங்க்ஸ் அண்ணா” என்றதும் சின்னப் புன்னகையை வெளியிட்டு “அடுத்த வந்து பிரச்சனை பண்ணினா என்னைக் கூப்பிடுமா” என்று நகர்ந்தான்.

செல்லும் அவனையே கயல் பார்த்திருந்தாள்.

அவளையே பார்த்திருந்த நண்பனிடம், “ஏன்டா ரூட் மாறிடுமோ?” என்றான் யோசனையாய்!

“வாயைக் கழுவுடா. பார்க்கிறவன்கிட்ட பல்லைக்காட்டுறவ கிடையாதுன்னு நீயே சொல்லிட்டு இப்ப மாத்துற. தன்மேல் அக்கறை காட்டியவனை அண்ணனா கூட நினைக்கலாம். கயல் எனக்குதான்றதை உன் மூளையில் பிக்ஸ் பண்ணிக்கோ. அவங்க கிளம்புறதுக்குள்ள எனக்கு இங்க சின்ன வேலையிருக்கு அதையும் முடிச்சிட்டு வந்திருறேன்” என்று சென்றான்.

அரைமணி நேரத்திற்கெல்லாம் பொங்கல் வைத்து பூஜைக்குத் தயாராக திருமொழி தனியாக ஓரிடத்தில் நின்று கதிர் சொன்னாற்போல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் உருவமில்லா ஆத்மாக்களிடம் அமைதியாக மனதிற்குள் பேசிக்கொண்டிருக்க, மனதிற்குள் தன்னையறியாமல் ஏதோ ஒரு இதம் பரவுவதை உணரத்தான் செய்தாளோ! அந்நேரம்...

என் செயினும்

மாண்டார் மீள்வதில்லை தாயி!

உயிர் துடிதுடித்துத்

தன்னுயிர் நீத்த,

ஆத்மாக்களின் துணையுடன் - உன்

பழிதீர்க்கும் நாளும்

வெகுதூரமில்லை தாயி!

வந்துவிட்டான்

உனைச்சேர உன்னுடனே

உன்னிளநாதனானவன்!

அவன் கரம்கொண்டு

உன் மனம்போல்

மாங்கல்யம் தாயி!

சொல்லிச் சென்றார் பெரியவர் ஒருவர். அவரைத்தேடிய கண்களுக்கு சிக்கவில்லை அவர்.

“என் இளா அத்தான் வந்துட்டாங்களா! அதுவும் என்னுடனே! எங்கே இளா அத்தான்?” என்று தேடியபடி திரும்ப, அவளை ஒட்டியபடி நின்றிருந்தான் இளங்கதிர்!
 
Top