• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
10



இரண்டு குடும்பத்தினரும் சந்தோஷத்தில் வாழ்த்த, மேடைச் சடங்குகளுடன் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்றார்கள் மணமக்கள்.

வீட்டிற்கு வந்து விளக்கேற்றி பால்பழம் கொடுக்க மணமக்களைச் சுற்றி இளைஞர் பட்டாளங்கள் கூட்டமிட பெரியவர்கள் நாகரீகம் கருதி விலகினார்கள்.

வேகமாக மணமக்களருகில் வந்த அவளின் தோழி சாதனாவும் அவள் கணவன் ப்ரேமும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

கார்த்திகா தன் தோழியின் குடும்பத்தை கணவனுக்கு அறிமுகப்படுத்தி அவள் கையிலுள்ள குழந்தையைக் கொஞ்சி, “உன்னை மாதிரியே க்யூட்டாயிருக்கான் சாதனா” என்றாள்.

“என்னை மாதிரியா? ஹா..ஹா இருக்கட்டும் இருக்கட்டும்” என்று கணவனைப் பார்த்து கண்களால் கெத்துகாட்டி, “கார்த்தி உங்க அண்ணாவுக்கு ஈவ்னிங் மீட்டிங் இருக்கு. இப்ப போனால்தான் சரியா வரும். உன் கல்யாணத்தைப் பார்க்கத்தான் வரமாட்டேன்னு சொன்னவங்களை இழுத்துட்டு வந்தேன். ஃப்ரீ டைம்ல உன்னை வந்து பார்க்கிறேன் கார்த்தி.”

“ஏய் தனா! தப்பா எடுத்துக்கப் போறாங்க” என்று மனைவியின் காதைக்கடித்தான் ப்ரேம்.

“அதெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டா. அப்பேர்ப்பட்ட நட்புனா நான் பழகியிருக்கவே மாட்டேன்” என்றாள் தன் நட்பிலுள்ள நம்பிக்கையில்.

“ஆமா அண்ணா. சாது சொல்றது சரிதான். சூழ்நிலை புரிஞ்சிக்கத் தெரியாத நட்பெதற்கு. நீங்க பிசினஸ்மேன். சாதனாவுக்காக நேரம் ஒதுக்கி வந்ததே பெருசுதான்ணா. நான் தப்பா எடுத்துக்கமாட்டேன். நீங்க போயிட்டு வாங்க” என்றாள் புன்னகையுடன்.

“உங்களுக்காகவும்தான்மா வந்தேன். தனா சொன்ன மாதிரி இன்னொரு டைம் கண்டிப்பா வர்றோம்” என்று மனைவியைப் பார்த்து கிளம்ப சைகை செய்தான்.

கார்த்தியின் காதில் சாதனா ஏதோ சொல்லவும், “ஏய் சீய்.. உதை வாங்கப்போற” என திட்டி, “பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றாள் புன்னகையுடன்.

“சுபாஷ் அண்ணா என் தோழியை உங்ககிட்ட ஒப்படைத்திருக்கிறோம். அதுல நாங்க ஆனந்தக் கண்ணீரைக் கூட பார்க்கக்கூடாது. இப்ப கிளம்புறோம்” என்று குடும்பத்துடன் விடைபெற்றாள் சாதனா.

“கார்த்தி என்ன டெரர் பீஸையெல்லாம் ஃப்ரண்டா வச்சிருக்க? குழந்தைப் பையனைப் பயமுறுத்திட்டுப் போறாங்க” என்றான் சுபாஷ்.

“ரொம்ப நல்லவங்க. யாரும் என்னை எதுவும் சொல்லிட விடமாட்டா. எனக்கு ஒரு பிரச்சனை வருதுன்னா முதல்ல நிற்கிறதும் அவள்தான். ப்ரேம் அண்ணாவும் சூப்பர்தான்.” என்றாள்.

தன் குடும்பப் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போடப்போவதும் அவள்தானோ!

“எப்படி பிரெண்ட் ஆனாங்க?”

“காலேஜ் முடிச்சி சிக்ஸ்த் மன்ந்த் ட்ரைனிங் போயிருந்தப்ப பழக்கம். அப்புறம் நான் வேலைக்குன்னு போகல. அப்பா கூடவே இருந்துட்டேன்.”

“ஓ. ஒகே.” அதே நேரம் மற்றொரு நண்பர்கள் படைவர, “டேய் நண்பா! பார்த்தாலும் பார்த்தேன் உன்னைப் போல ஒரு கிரிமினலைப் பார்த்ததில்லைடா. சிஸ்டரைப் பார்க்கத்தான் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றதுக்கென்ன? அதை விட்டுட்டு என்னை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு, கடைசில சொன்ன பாருடா ஒரு டயலாக், இப்ப நினைச்சாலும் உன் மேல கொலைவெறி வருதுடா. நண்பனாகிட்டியேன்னு விட்டுட்டேன்.”

“என்ன நண்பா... அவள் உன் ஃப்ரண்ட் ஒய்ஃபாகப் போறவளா கூட இருக்கலாம் சொன்னானா?” என்றபடி அவனின் மனதிலுள்ளதை சொன்னான் ஹரீஸ்.

“பாஸ் எப்படி பாஸ் அன்னைக்கு இவன் சொன்னதை நேர்ல பார்த்த மாதிரி சொல்றிங்க?” என்றான் ஆச்சர்யமாக.

“பார்த்து கேட்டதாலதான் சொன்னேன். உங்களுக்கு குடுத்த அதே பல்பை நேத்து நைட் நான் வாங்கினேன் நண்பா. அந்த அனுபவத்துலதான் சொன்னேன்.”

“என்ன விஷயம்னு சொன்னால்தான எங்களுக்குத் தெரியும்” என மற்றவர்கள் கேட்க... அவர்கள் ஷோரூமில் நடந்தது, முன்தினம் மாடியில் நடந்தது அனைத்தையும் சொல்ல... அவ்வளவுதான் அனைவரும் சுபாஷை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.

“ஏன்ணா இவதான் நான் கட்டிக்கப் போற பொண்ணுன்னு சொல்றதை இப்படியா இழுத்து சொல்லியிருப்ப. வெரி பேட். அதைக் கேட்டு என்ன விஷயம்னு முழுசா தோண்டித் துருவாத இவங்களை என்னன்னு சொல்றது. நல்ல ஃப்ரண்ட்ஸ்தான் போ” என்றாள் அவனின் தங்கை.

சற்று நேரத்தில் அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்ல, அங்குள்ள பெரியவர்களின் ஆசியும் சிறுவர்களின் வாழ்த்தும் அவர்களின் மனதிற்கு நிறைவைத் தந்தது. மதிய உணவு அவர்களுடனே சாப்பிட்டு சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஏன்பா இங்க சுபாஷ்னு ஒருத்தன் என் சோகக்கதையைக் கேளு தாய்க்குலமே பாட்டுப் பாடிட்டிருந்தான். அவன் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று அங்கிருந்த முதிய பெண்மணிகளில் ஒருவர் ஆரம்பித்தார்.

“அதெப்படி தெரியாம போகும். நல்ல்லாவே தெரியுது” என்று நன்றாக அழுத்தி தேனு பாட்டி சுபாஷைப் பார்த்தார்.

அவனோ, யாரையும் யார் கேலியையும், கேள்வியையும் கண்டுகொள்ளும் நிலையிலில்லை. அவனின் அகம் புறம் அனைத்தும் அவனவளே நிறைந்திருக்க, இத்தனை நாள் பார்க்காதிருந்த அவளின் அழகை அணுஅணுவாக ரசித்தபடி இருக்க, இதிலெங்கே அவர்கள் பேசுவது காதில் விழப்போகிறது.

“ஆத்தாடி இவன் அவன் இல்ல. சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வையுங்க” என்றார் வேகமாக.

அதில் நாணம் வந்தவள் அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிவிட, திரும்பவும் அவன் அவளையே பார்க்க, சங்கோஜத்தில் “என்ன பண்றீங்க?” என்று கேட்டும் அவன் பார்வை மாறாமலிருக்க இது சரிவராதென்று எண்ணியவள், “நாங்க கிளம்புறோம் பாட்டீஸ்” என்று மற்றவர்களுக்கு முன் கார்த்திகாவே அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஆசிரமம் சென்று வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் தணிகாசலத்தின் ஷோரூம் அருகிலிருந்த இரண்டு பெட்ரூம் உள்ள வீட்டில் பால்காய்ச்சி அவர்களை தனிக்குடித்தனம் இருக்கச் சொன்னார்கள் பெரியவர்கள்.

அதுவரை ஏதுவும் புரியாத ஒரு மாயையில் இருந்தவர்கள் ஏனென்று கேள்வி கேட்டு அதெல்லாம் முடியாது என்று மறுத்தார்கள்.

இருவரையும் அமர வைத்து பெரியவர்கள் நால்வரும் பொறுமையாக பேசினர்.

“தங்கை பாசத்தால் தான் மச்சினனுக்கு செய்த தவறை, பெண் மேலுள்ள பாசத்தால் உன் மாமா செய்தால் என்ன செய்வ? அப்படி செய்யமாட்டார் தான். இருந்தாலும் பக்கத்துல பக்கத்துல வீடுன்னும் போது சின்னச்சின்ன விஷயங்கள் கூட பூதாகரமா தெரியும். என் மருமகளுக்கு நான் அதை செய்ய தயாரில்லை” என்று சுதாகரும்,

“அதுமட்டுமில்ல சுபாஷ், உங்களை நீங்க புரிஞ்சிக்க, உங்க எதிர்கால வாழ்க்கையை திட்டமிட, பிரச்சனைன்னு வந்தா அதை தனியா இருந்து சமாளிக்கன்னு நிறைய இருக்கு” என்று தணிகாசலம் சொன்னார்.

“அதுக்குத்தான் பெரியவங்க நீங்க இருக்கீங்களே! நீங்க சொல்றதைத்தான் நாங்க எங்கயிருந்தாலும் செய்யப்போறோம். அதையேன் தனிக்குடித்தனம் இருந்து செய்யணும். நாங்க இங்கேயே இருந்திடுறோமே!” என்று கெஞ்சினார்கள்.

“ம்கூம்.. நாங்க முடிவு பண்ணிட்டோம். ஒண்ணு பண்ணலாம் கொஞ்ச நாளைக்கு இங்கயிருங்க. ஒரு வாரிசுன்னு வந்துட்டா மருமகளை பார்த்துக்கறோம்ன்ற சாக்குல நாங்க இங்க வந்து செட்டிலாகிடுறோம்” என்றார் சுதாகர்.

அவர்களின் மறுப்பையெல்லாம் மழை நீராய் ஓடவிட்டு, அவர்களின் சம்மதம் பெற்று இரவு அவர்களை தனியே விட்டு கிளம்பினார்கள்.

ஏனோ சுபாஷ் கார்த்திகாவிற்கு அனைத்தும் தலைகீழாகினாற்போல் ஒரு மாயை. தங்களுக்கென்று தனிக்குடித்தனம் வைத்திருந்த வீட்டிலிருந்தார்கள் இப்பொழுது.

காலையிலிருந்தே கல்லுண்டவன் போலிருந்த கணவனின் பார்வையை நேரில் சந்திக்க முடியாமல் வீட்டை சரி பண்ணுகிறார்போல் நின்றாலும் நேரங்கள் ஓடிக்கொண்டே இருக்க வேறு வழியில்லாமல் தங்களறைக்குள் வந்தாள்.

அறைக்குள் வந்தவளை தன்னருகே அமரவைத்து அவளின் தோளில் தலைசாய, சேயாய் கணவன் தலை கோதியவள், “ஏங்க காலையிலிருந்தே ரொம்ப சைலண்ட்டாயிருக்கீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா?” என்றாள் அக்கறையாக.

“ம்கூம்.. மனசுதான் சரியில்ல.”

“ஏன் சரியில்லை. எல்லாம் சரியா நடந்திட்டிருக்குன்னு நான் நினைச்சிட்டிருக்கேன். நீங்க என்ன புதுசா ஒரு புரளியைக் கிளப்புறீங்க. என்னங்க உண்மையிலேயே நீங்க நல்லாயிருக்கீங்கதான?” என்றாள் சற்று கவலையாகவே.

“யா.. எனக்கென்ன நல்லாயிருக்கேன். மனசுதான் ரொம்ப அடிச்சிக்குது.”

“ஏன்னு சொன்னாதானங்க தெரியும்?” என்று அவன் முகம் காண...

“ஐ லவ் யூ கார்த்தி. ஐ லவ் யூ சோ மச்!” என்றான் அவள் கண்பார்த்து. “நினைச்சே பார்க்கல நான் உன்னை லவ் பண்ணுவேன், இவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கும்னு. உன்னோட காதலை உணர்ந்தப்ப அப்படியே மிதக்குற ஒரு ஃபீல். எப்படி மாறிட்டேன்ல” என்றபடி அவளின் கன்னத்தில் முத்தமிட்டு மெல்ல அணைத்துக் கொண்டான்.

கணவனின் ஐ லவ் யூவில் மயங்கி நின்றவள், அவனின் அணைப்பில் கிறங்க, “அன்னைக்கு நைட் எவ்வளவு ஷாப்டா இருந்த தெரியுமா?” என்றான் அவள் காதருகில்.

“ஆமாங்க” என்ற மனைவியின் குரல் ஹஸ்கியாக வந்தது.

“ஹேய் உனக்குமா?” என்றான் ஆர்வமாக.

“அச்சோ.. சொல்றதைக் கேளுங்க” என்று அவனை விலக்கி, “அன்னைக்கு நைட் உங்களை அப்படிக் கட்டி...”

“கட்டி...” என அவன் இழுக்க...

“ம்..இப்படிப் பண்ணினா நான் சொல்ல மாட்டேன்” என சிணுங்கி மிரட்டி, “அன்னைக்கு உங்களை கட்டிப்பிடிச்சி படுத்துட்டு, தூக்கத்துலதான் இருந்தாலும் வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கனும்னா உடம்பும் மனசும் கூசிச்சிது. உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணி கணவன் ஸ்தானத்துல வைக்க முடியாதுன்றதையும் உணர்ந்தேன்.”

“அப்பா சொன்ன பிறகு யோசிச்சது தான்னாலும், அப்பா சொல்லாம விட்டிருந்தா கொஞ்சநாள் கழிச்சினாலும், உங்களை நான் காதலிக்கிறதை உணர்ந்திருப்பேன்” என்றாள் உள்ளார்ந்த வார்த்தைகளில். “அதான் நீங்க பேசுற எதுக்கும் மறுத்து பேசத் தோணல. உங்களை ரசிக்கிறதுக்கே நேரத்தை ஒதுக்க ஆரம்பிச்சிட்டேன். என்னோட ஒவ்வொரு அசைவிலும் நீங்க.. நீங்க.. நீங்க மட்டும்தான்!” என்றாள் அதே ரசனையுடன்.

“ஐம் சாரி கார்த்தி. உன்னைப் புரிஞ்சிக்க லேட் பண்ணிட்டதுக்கு. இனி காலத்துக்கும் உன்னை மட்டும் புரிஞ்சிக்கறேன். சரி நான் கேட்டது என்னாச்சி? அதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவேயில்ல” என்றவன் குரலிலிருந்த குறும்பை அறியவில்லை அவள்.

“எங்க என்ன கேட்டீங்க?” என புரியாத மொழி பேசிய மனைவியை ரசித்து...

“அதான்டா தாலி கட்டுறதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னேனே நியாபகமிருக்கா? இன்னும் தெரியலையா? அதுக்குள்ள உனக்கென்ன நியாபக மறதி. இரு நானே சொல்றேன்” என்றவன், “உன்னோட உள்தோற்றம் பார்க்கணும்னு...” என ஆரம்பிக்க...

“அச்சோ! மானத்தை வாங்காதீங்க” என அவன் வாய்மூட...

அவளின் கையை விலக்கி, “ஹேய் உன் அக அழகைச் சொன்னேன்மா. நீ எதோ தப்பா எடுத்துட்டன்னு தோணுது” என்று கண்ணடிக்க திரும்பவும் அவனின் வாய்மூட, சிறிது சிறிதாய் ஆரம்பித்த விளையாட்டின் முடிவில் அவர்களின் வாழ்வும் ஆரம்பித்தது அற்புதமாய்!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்தவுடன், தனியாக கிப்ட் கொடுத்தால் அம்மாவும் தங்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று, மணமேடையில் மாப்பிள்ளை பெண்ணின் கையில் தன் சார்பாக ஒரு கார் சாவியும், ப்ளாட் ஒன்றின் சாவியும் அதன் பத்திரமும் கொடுத்தவன், மாப்பிள்ளை வீட்டாரின் முன் தன் தங்கையை விட்டுக்கொடுக்கக் கூடாதென்று இரவு வரை அனைத்திலும் கலந்து கொண்டு, இனி சென்னை வருவதில்லை என்ற முடிவுடன் மனதில் தோன்றிய வலியுடனும் பெங்களுருக்கு இரயில் ஏறினான் ஆனந்த்!

வந்ததிலிருந்து வணக்கம் மட்டும் சொல்லி அமைதியாக அமர்ந்திருந்தவனை கேள்வியாகப் பார்த்த சுபாஷிணி, “என்ன தம்பி வந்ததிலிருந்து எதுவும் பேசாம ஏதோ யோசனையோட உட்கார்ந்திருக்கீங்க? உங்களைப் பெத்தவங்களை இங்க விடப்போறதால வந்த கூச்சமா? அப்படிப் பார்த்தா உங்களைப் பெத்தவங்கள்ல, இப்பேர்ப்பட்ட பையனைப் பெத்ததுக்காகக் கூச்சப்படணும்.” இப்பொழுது உள்ள தறுதலைப் பிள்ளைகள் மேலுள்ள கோபத்தையும் சேர்த்து சற்று கடுமையாகவே கேட்டார்.

“ஐயோ மேம்! நான் இருக்கிறப்பவே பெத்தவங்களை ஆசிரமத்துல சேர்க்கிறதா? எங்கம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சது, இப்படி ஒரு பையன் வேண்டவே வேண்டாம்னு சோத்துல விஷத்தை வச்சிக் கொன்னுருவாங்க” என்றான் அலறலாய்.

அவனின் அலறலில் புன்னகை வர, “சரிப்பா. வந்து பத்து நிமிஷமாகுது. எதுவும் பேசாம இருக்கீங்க. அப்ப நான் என்ன நினைக்கிறது? ஆசிரமத்தை நிர்வாகம் பண்ற என்னோட யோசனை இந்த ரீதியிலதான் போகும்” என்றார் நிதானமாக.

“அ..அது வந்து, சாரி மேம். எனக்கு வீட்ல பொண்ணு பார்க்கப் போறதா தங்கச்சி சொன்னா. அதான் நேரா இங்க வந்துட்டேன்.”

“பொண்ணு பார்க்கப்போறேன் சொன்னதால இங்க வந்தீங்களா? உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறதுக்கும் இந்த ஆசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்? இங்க வயசுப் பொண்ணுங்க யாரும் கிடையாதே? அப்புறம் ஏன் இங்க வரணும்?”

“இங்க கிடையாது மேம். ஆனா இங்கதான் அவளைப் பார்த்தேன்.”

“புரியலப்பா? முதல்ல உன் பெயரைச் சொல்லு?” என்றார்.

“நான் ஆனந்த்ராஜ். பெங்களூர் வி.ஆர்.சாப்ட்வேர் கம்பெனியில மேனேஜரா இருக்கேன். சம்பளம் ஒன்றரை லட்சம் வருது. சொந்த வீடு. அப்பா கிடையாது. அம்மா வரலட்சுமி சென்னையில இருக்கிற எங்க வீட்ல இருக்காங்க. ஒரே தங்கை அனுபமா. அவளும் மேரேஜாகி சென்னையிலயேதான் இருக்கிறாள். எனக்கு எந்த கெட்ட பழக்கங்களோ தவறான சகவாசமோ கிடையாது. ஆனா என்கிட்ட ஒரு மைனஸ் இருந்தது. இப்ப இல்லன்னு சொன்னாலும் மத்தவங்க என்னை நம்புவாங்களா தெரியாது. உண்மையைச் சொல்றதுல எனக்குத் தயக்கமில்ல மேம். ஆனா அதைச் சரியா புரிஞ்சிக்கலைன்னா எல்லாமே தப்பாகிடும். அதான் யோசிக்கிறேன்.”

தானுமே சற்று யோசனையிலாழ்ந்து, “பரவாயில்லபா சொல்லுங்க நான் புரிஞ்சிக்கறேன்?” என்றார் அவனை ஆராய்ந்தபடி.

“தேங்க்யூ மேம். இரண்டு வருஷத்துக்கு முன்னால எனக்கு மேரேஜ் பிக்ஸாகி கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால கேன்சலாகிருச்சி. இல்ல நான் கேன்சல் பண்ணிட்டேன்” என ஆரம்பித்து நடந்த அனைத்தையும் சொன்னான்.

அதைக் கேட்ட சுபாஷிணிக்குக் கோபம் வர அமைதியாக அவனையே பார்த்திருந்தார்.

அவரின் கோபம் உணர்ந்தவனோ, “உங்க கோபம் நியாயம்தான் மேம். கடைசிவரை காப்பாத்துறேன்னு சொல்லிதான் கல்யாணம் பேசுறோம். அப்படிப்பட்ட பெண்ணை நடுவுல நடந்த விபத்துக்காக வேண்டாம்னு சொல்றது தப்புதான். இப்பப் புரியுது என்னோட தவறின் ஆழம் எவ்வளவுன்னு. அப்பயிருந்த ஆனந்த் சிட்டி லைஃப்ல வசதியா வளர்ந்தவன். மத்தவங்க உணர்வுகளைப் புரிஞ்சிக்கிற அளவுக்கு பக்குவம் கிடையாது. சுயநலம் அதிகமாயிருந்தது. என் சுயநலத்தால நிறைய இழந்திருக்கேன். அடிபட்டும் அனுபவப் பாடம் கத்துக்கலன்னா எப்படி மேம்? அது நடந்து இரண்டரை வருஷமாகுது மேம். என்னோட வாழ்க்கையின் தரமும் நேராகி இரண்டு வருஷமாகுது. சுயநலமா சிறு பிழை செய்திருந்தாலும் மனதாலும் உடலாலும் கெட்டவனில்ல மேம்.”

அவனின் மனந்திறந்த பேச்சே அவனின் வாழ்க்கையின் உயர்வைச் சொல்ல, “சரிப்பா. அதுக்கும் நீங்க இங்க வந்ததுக்கும் என்ன சம்பந்தம்?” என்றார்.

“மேம் ஒண்ணேகால் வருஷம் முன்னாடி ஒரு ப்ராஜெக்ட் விஷயமா செங்கல்பட்டு வந்திருந்தேன். கம்பெனி ப்ராஞ்ச் ஒண்ணு இங்க பக்கத்துல ஆரம்பிக்கிறதா ப்ளான். அதுக்கு இடம் பார்க்க நானும் என்னோட அசிஸ்டெண்ட் ஒருத்தனும் வந்தோம். அப்பதான் இங்க உங்க ஆசிரமத்துல ஒரு பெண்ணைப் பார்த்தேன். பார்த்ததுமே அவளை வாழ்க்கைத் துணையாக்கிக்கலாம்னு ஒரு எண்ணம். நல்ல துறுதுறுன்னு இருந்தாலும் பக்குவமான பெண். பார்த்ததுமே பிடிச்சது.”

“அவங்ககிட்ட நேர்ல கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்னு பேசல. ஒரு வேளை அந்த நேரத்து சலனமாயிருந்தா... அதான் மேம் கொஞ்சம் இடைவெளி விட்டு என்னை நானே புரிஞ்சிக்க டைம் கொடுத்தேன். யாராவது கல்யாணம் பண்ணிக்கலையான்னு சொன்னாலே எனக்கு அவள் நினைவுதான் வரும். யார் என்னன்னு தெரியாது மேம். இங்க வச்சிதான் பார்த்தேன். இப்ப வீட்ல பேச்செடுத்ததும் இதுக்கும் மேல முடியாதுன்னுதான் இங்க வந்துட்டேன்” என்றான்.

“பெயர் தெரியுமாப்பா?”

“தெரியும் மேம். பெயர் கீர்த்தி.”

“கீர்த்தியா?” என்று அதிர்ந்து எழுந்தவர், “உங்க வயசென்ன அவள் வயசென்ன? டிகிரி முடிச்சி ஒரு மாசம் கூட ஆகல. இதெல்லாம் சரிவராது” என்றார் பட்டென்று.

“மேம் அவங்களை உங்களுக்குத் தெரியுமா? தேங்க் காட்! ரொம்ப தேட வேண்டியிருக்குமோன்னு வருத்தமாயிருந்தது. மேம் எனக்கு இருபத்தெட்டு வயசுதான். கல்யாணம் பேசினப்ப இருபத்தாறு வயசு. அதனால கூட பக்குவமில்லாமல் நடந்துருப்பேனா இருக்கும்.”

“மன்னிச்சிருங்க தம்பி. அந்தப் பொண்ணுக்கு நீங்க வேண்டாம். எப்படிப் பார்த்தாலும் எட்டு வயசு வித்தியாசம் வருது. அதோட அவளுக்கு மூத்தவ ஒருத்திக்கு முடிச்சிட்டுதான் இவளுக்குப் பார்க்கணும்.”

“ஏன் மேம் உண்மையைச் சொன்னது தப்புங்களா? வயசைக் காரணம் காட்டி கல்யாணம் வேண்டாம்ன்றீங்க? அப்படியே ஆனாலும் அதை அவங்களைப் பெத்தவங்கள்ல சொல்லணும். நீங்க ஏன் எமோஷனலாகுறீங்க? உங்க உறவுப்பெண்ணா?” என்றான் விடாமல்.

அருகிலிருந்த தண்ணீரைக் குடித்து தன்னைச் சமன்படுத்தி, “அவளோட அம்மா சொல்லலாம் தப்பில்லை” என்றபடி நேருக்கு நேர் பார்த்தார்.

சடாரென்று எழுந்தவன் என்ன சொல்வதென்று சில வினாடிகள் தயங்கி, “நான் எதிர்பார்க்கலங்க. அதுக்காக நான் கேட்டது தப்புன்னு மன்னிப்பு கேட்கிறதாகவும் இல்லை” என்றான் தைரியமாக.

சுபாஷிணி அவனை ஆழ்ந்து பார்க்க... அசராமல் பதில் பார்வை பார்த்தவன், “என்ன யோசிக்கிறீங்க மேம்? ஏற்கனவே ஒரு கல்யாணத்தை நிறுத்தினவன் இன்னொரு தடவை நிறுத்தமாட்டான்னு என்ன நிச்சயம்னு நினைக்கிறீங்களா? அனுபவம் ஒண்ணு கிடைக்கிறதுக்காக அந்தத் தப்பை நான் செய்ய கடவுள் தூண்டியிருப்பாராயிருக்கும். ஆசிரமம் மேனேஜ் பண்ற உங்களுக்கு மனுஷங்களைக் கணிக்கவும் தெரியும். எங்க அம்மாவைக் கூப்பிட்டு வந்திருந்தா என்னை நம்பியிருப்பீங்களா? டாக்டர் சர்டிபிகேட் வேணும்னா கார்ல இருக்கு மேம். இப்ப எடுத்துட்டு வரவா?”

அப்பொழுதும் அவர் பார்வை மாறாதிருக்க... மனதளவில் சோர்ந்தவன், “சத்தியமா உங்களுக்குப் புரியவைக்க, ஐ மீன் உங்களை நம்பவைக்க என்ன செய்யணும்னு தெரியலங்க. இது என்னோட கார்ட். இது என்னோட பேமிலி போட்டோ. உங்க பதிலுக்காகக் காத்திருப்பேன்” என்று வெளியே செல்லத் திரும்ப...

“பதில் இல்லன்னா...” என்ற குரலில் நின்று, “பதில் வர்றவரை காத்திருப்பேன். வயசுதான் பிரச்சனைன்னா, அடுத்த ஜென்மத்துலதான் வயசு குறைவாயிருக்கும். இப்ப என்னால ஒண்ணும் பண்ண முடியாது” என்று விரைந்து சென்றவனை ஒரு முறுவலுடன் பார்த்திருந்தார் சுபாஷிணி.
 
Top