• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் 1

New member
Joined
Mar 19, 2026
Messages
4
வீட்டின் வாசலை பார்ப்பதும் சமையல் அறைக்கு செல்வதுமாய் இருந்தார் கிரிஜா.

மணி ஆறு ஆச்சு. அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வரவேண்டிய ஆளு எங்க சுத்திட்டு இருக்காளோ என்று தோசையை சுட்டு கொண்டே வசை பாடினார். தோசையை ஹாட்பாக்ஸில் மூடியவர், ஹே நந்தினி என்றார்.

தன் அன்னையின் குரல் கேட்டவுடன் சொல்லுங்க மா என்று வந்தாள் நந்தினி.

எங்கடி போனா உன் தங்கச்சி என்று கேட்டவரிடம் திருதிருவென முழித்து நின்றாள்.

ம் நல்லாத்தான் தங்கச்சிக்கு ஆதரவா இருக்க. ஆனா இன்னைக்கு இருக்கு அவளுக்கு. பொம்பள புள்ள போலவா நடந்துகுது என்று புலம்பியவாரே ஹாலில் உட்கார்ந்து சீரியல் பார்க்க தொடங்கிவிட்டார்.

வாசலில் ஒரு கண் வைத்திருக்க மணி ஏழு ஆனதே தவிர அவள் வரவில்லை. பெற்ற தாயாய் நெஞ்சம் பதற, நந்தினி அவளுக்கு கொஞ்சம் ஃபோன் பண்ணு டி என்றார்.

அவளும் தோ பன்றன் மா என்று விட்டு மாடிக்கு சென்றாள்.

கிச்சனில் திடீரென பாத்திரம் உருள, என்ன என்று பார்க்க போனார் கிரிஜா.

அந்த சமயத்தில் ஹாலில் இருந்து அந்த உருவம் அறைக்குள் ஓடிவிட்டது.

கதவை தாழிட்டவள் வேகமாக குளிக்க சென்றாள். குளித்து இரவு உடை உடுத்தி வெளியில் வர, அதுவரை பதைபதைபோடு அமர்ந்து இருந்த கிரிஜா அவளை முறைதார்.

வேகமாக அவள் அருகில் சென்றவர் ஏண்டி எப்படி உள்ள வந்த என்றார்.

மா நான் அஞ்சறை மணிக்கு வந்தேன். வந்த களைப்புல அப்படியே தூங்கிட்டேன். இப்போதான் எழுந்தேன். அதன் குளிச்சுட்டு வந்தேன் என்று ஒப்பித்தவளின் காதை திருகியவர், ஹே காயத்ரி என்கிட்டே உன் தில்லாலங்கடி வேலைய கட்டிரியா என்று வலிக்க திருகினார்.

அம்மா ஆ ஆ வலிக்குது மா என்று துடித்தாள்.

அவளது காதை விட்டவர் வயசு பொண்ணு நூ ஏதாவது இருக்கா என்று திட்டியவர் எங்க போன டி என்றார்.

இதற்கு மேலும் மறைக்க முடியாமல் மா என் பிரென்ட் ரேஷ்மிக்கு இன்னைக்கு பர்த்டே. அதான் ட்ரீட் கொடுக்கிறேன்னு கூட்டிட்டு போணா என்று கூறியவளை, என்ன செய்வது என்று தெரியாமல் என்னவோ பண்ணு. நாலையில இருந்து லீவ் தன. வீட்ல இருந்து கால வெளில வச்சு பாரு அப்போ தெரியும் இந்த கிரிஜா யாருனு என்றுவிட்டு டிவி முன்பு அமர்ந்து விட்டார்.

அப்பாடா என்றுவிட்டு அவர் அருகில் உட்கார்ந்து அவளும் நாடகம் பார்க்க சிறிது நேரத்திலே அம்மாவும் மகளும் கூட்டு சேர்ந்து நாடக வில்லியை திட்டி தீர்த்தனர்.

தன் அன்னையை சகஜமாக்க காயத்ரி கையாளும் யுக்தி. மாடியில் இருந்து நந்தினி வர அவளுடன் சேர்ந்து காயத்ரியும் கிரிஜாவும் நாடகம் பார்த்துக்கொண்டே தோசை சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றுவிட்டனர்.

நந்தினி எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருக்க என்ன நந்து கா என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு என்றாள்.

ஒன்னும் இல்ல காயூ ரெண்டு நாள்ல இந்த மகேஷ் ஒரு தடவ கூட கால் எடுக்கல என்று வருத்தபட்டாள்.

காயத்ரியும் விடுக்கா ஏதாவது முக்கிய வேலையா இருக்கும் என்று கூறியவள் அவளை ஒருவாறு இயல்புக்கு கொண்டுவந்து விட்டாள்.

இருவரும் உறங்கிய பின் நந்தினியின் ஃபோன் அலறியது. எடுத்து பார்த்தவள் மகேஷ் என்றதும் உடனே எடுத்து பேசினால். ஹலோ மகேஷ் என்றதுமே அவளது கண்கள் கலங்கியது. தன் கண்களை துடைதவல் அவன் கூறி வைத்த செய்தியில் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்துவிட்டார். எதுவும் பேச முடியாமல் அப்படியே விடியற்காலை நேரம் வரை அமர்ந்திருந்தாள்.

காலையில் குளியலறை சென்று காயத்ரி குளித்துவிட்டு வர அப்போதும் நந்தினி அப்படியே அமர்ந்திருந்தாள்.

அக்கா அக்கா இங்க பாரு என்று அழைத்து பார்த்தாள். நந்தினி எதுவும் பேசவில்லை. அவள் அருகில் சென்றவள் அக்கா என்று அவளை உளுக்க, காயத்ரியை கண்ட நந்தினி அவள் மீது அழுது கரைய, பதரிவிட்டால் காயத்ரி.

என்னாச்சு கா என்றால்.

மகேஷ்... மகேஷ்...என்ன. என்று ஒவ்வொன்றாக அழுதுகொண்டே கூற பொறுமை இழந்து போனால் காயத்ரி.

அக்கா என்ன விஷயம் என்று அவளை முறைத்து அழுத்தமாக கேட்க,

நந்தினியோ மகேஷ்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ண போறாங்களாம். நம்ப ப்ரேக் அப் பண்ணிக்கலாம் அப்படினு சொல்றாரு. ஒண்ணுமே புரியல டி என்றால்.

காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தும் நந்தினியை சமாதானப்படுத்த நான் போய் மகேஷ் சார் கிட்ட பேசறேன் கா என்றால். அப்போதுதான் நந்தினி ஒருவாறு சரியானால்.

அவளை குளியல் அறைக்கு அனுப்பியவள் எப்படி மகேஷ் ஐ பார்ப்பது என்றே யோசித்து வந்தாள். அக்காவின் நிலையை மாற்ற காயத்ரி என்ன செய்ய என்று புரியாமல் வெளியில் சென்று டிவி முன்பு அமர்ந்துவிட்டார். என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டே தன் நண்பி தீபிகாவை அழைத்தாள்.

நந்தினியின் நிலையை மாற்றுவாளா காயத்ரி பொறுத்து இருந்து பார்ப்போம்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top