• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அதிர்ச்சி

Member
Joined
Sep 12, 2024
Messages
35
படித்ததும் அதிர்ச்சி தான். தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!

இப்படில்லாமா இருக்கு? என்ன கருமம் இதெல்லாம்...
ஒருகாலத்தில் யாரென்றே தெரியாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது என சொல்வார்கள், தற்போது SWIGGYயில் சாப்பிடுகிறோம். யாரென்று தெரியாதவர்களுடன் எங்கேயுமே வெளியே போகாதீர்கள் என்று சொல்வார்கள். இப்போது OLAவில் போறோம். Tinderல டேட்டிங், பார்க்கிற படத்துக்கு ரேட்டுங், Swiggy-ல ஈட்டிங்னு இப்போது எல்லாமுமே ஆன்லைன்ல வந்துவிட்டது. தற்போது வயதான ஆயாக்கூட பாக்கெட்டுல செல்போனை வைத்துக்கொண்டு டிக்டாக் பார்க்குது.
இப்படி ஆன்லைன்ல இருக்கும் சர்விஸ்களில் #நிஜமாவா என கேட்கும் அளவிற்கு நம்பவே முடியாத 8 ஆன்லைன் சர்விஸ் பற்றிதான் இப்போது பார்க்கபோகிறோம்.
⤵️
8.BREAKUP SERVICE:
சிங்கிளா இருப்பவர்கள் எப்படியாவது கமிட்டடா ஆனா போதும் என்று இருப்பார்கள். ஆனால் கமிட்டடா இருப்பவர்கள் எப்போதும் கன்னி வெடி மீது காலை வைத்ததுபோல் எப்போதும் கன்ப்யூஸா இருப்பார்கள். எப்படி லவ் சக்ஸஸ் ஆகி கல்யாணம் வரை சென்று மேக்கப் போட ஆட்கள் இருக்கிறார்களோ அதேபோல் அந்த லவ்வை பிரேக் அப் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
உங்கள் லவ்ல பிரச்சனை வந்து லவ் சொதப்பிவிட்டது என்றால், ஆனால் அதை உங்களுடைய லவ்வரிடம் சொன்னால் அவர்களின் மனது கஷ்டம் என்று நினைத்தால் இந்த விஷயத்தை உங்களுடைய லவ்வரிடம் சொல்வதற்கு Breakup shop.com இதற்காக புரப்பஷனல்ஸ் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் சென்றால் இந்த ப்ரேக் அப் மெசேஸை உங்கள் பார்ட்னரிடம் அவர்களே சொல்லிவிடுவார்கள்.
இந்த #புனிதமான சர்விஸ்க்கு இவர்களிடம் பல பேகேஜஸ் இருக்கிறது. 700 ரூபாய்க்கு உங்களுடைய பார்ட்னருக்கு டெக்ஸ்ட் மேசேஸ் அனுப்பி சொல்வார்கள், 2000 ரூபாய்க்கு உங்களுடைய பார்ட்னர் மொபைல் நம்பருக்கு கால் செய்து சொல்வார்கள். இதில் இருப்பதிலேயே அதிக ப்ரீமியம் பேக்கேஜானாது 5000ரூபாய் பேக்கேஜ் தான், இதில் ஒருவர் உங்களுடைய பார்ட்னரிடம் நேராகவே சென்று சொல்வார், அதனால் உங்களுடைய பார்ட்னரின் மனது கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தால் ஒரு பாடலாக பாடி சொல்லிவிடுவார்கள்.
7.CURSE SERVICE:
பொதுவாக யார் மீதாவது தீராத கோபத்துடன் இருக்கும் சில பேர் சாபம் விடுவார்கள் பார்த்திருக்கிறீர்களா.. அதை நீங்கள் குழாயடி சண்டையில் பார்க்கலாம். ஆனால் உண்மையில் சாபம் விடுவதற்கென்றே ஆன்லைன்ல புரப்பஷனலா நிறைய பேர் இருக்கிறார்கள். "நீயெல்லாம் நல்ல இருப்பியா நாசமா போய்டுவ" இந்த மாதிரியான சாபத்துக்கு 1000 ரூபாயும், அதை விட அதிகமாக சாபம் விட 8000 ரூபாய் என்று இவர்களிடமும் ஒரு பட்டியலே இருக்கிறது.
6. BILLBOARDS:
தொலைக்காட்சி சேனல்கள் எப்படி சாம்பாதிக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒளிப்பரப்பும் விளம்பரங்களின் மூலமாகத்தான், இப்போதும் ட்ரெண்டாக இருக்கும் YOUTUBE-ல் ஒவ்வொரு வீடியோவிற்கு முன்னால் வரும் 5s அல்லது 10s விளம்பரங்களில் தான் அதிகமான சம்பாதிப்பார்கள், அப்படி நீங்களும் சம்பாதிக்கலாம். நீங்களும் அதே விளம்பரத்தின் மூலம் சம்பாதிக்கலாம் வீடியோ போடாமலேயே, அப்படி எப்படி சம்பாதிக்க முடியும், அதற்கு அதிக புத்தி வேண்டுமா? இல்லை அதற்கு அதிக நெற்றி இருந்தாலே போதும்.
பெரிய பெரிய கம்பெனியின் விளம்பரங்களை நெற்றியில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும், அது சாகிற வரைக்கும் அப்படியே தான் இருக்கும். இந்த அருமையான ஐடியா எப்போது ஆரம்பித்தது என்றால் ஒரு மெடிஜன் Green Pharmaceutical என்ற மெடிசின் தயாரிக்கும் ஒரு நிறுவனம் குறட்டைவிடுவதை தடுப்பதற்காக Snore Stooper என்ற மருந்தை தயாரித்தது, இதை விளம்பரப்படுத்த அந்த நிறுவனம் Andrew Fisher என்ற நபருக்கு 25 லட்சம் கொடுத்து அவருடைய நெற்றியில் Snore Stop என்ற ப்ராடெக்டின் விளம்பரத்தை அவருடைய நெத்தியில் பச்சைக்குத்தியது. இது தற்போது ஒரு ட்ரெண்டாக மாறி பலபேர் தற்போது நடக்கும் நோட்டீஸ் போர்ட்டாக சுற்றிக்கொண்டு திரிகிறார்கள்.
5.HUMAN FURNITURE:
நம்முடைய வீட்டில் இருக்கும் சேரில் யாராவது உட்காரலாம் ஆனால் சேராகவே யாராவது உட்காருவதற்கு ஒரு ஆன்லைன் சர்விஸ் இருக்கிறது. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் போர் அடிக்குது, இல்லை வீட்டில் பார்டி போன்றவை நடக்கிறது என்றால் உயிருடன் இருக்கும் மனிதர்களை கூட்டிகொண்டு வந்து டேபிள், சேர், லைட் லேம்ப் போன்றவைகளாக எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் பயன்படுத்திக் கொள்ளளாம்.
4. LAST MEAL:
யாருக்காவது வித்தியாசமாக சாப்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டால் டொராண்டோ என்று இடத்தில் இருக்கும் பால் மீல்ஸ் என்பவர் எந்த ஹோட்டலும் தரமுடியாத ஒரு அனுபவத்தை தருகிறார். எந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்றால் அந்த ஹோட்டலின் மெனு கார்டை வாங்கி பார்த்தால் டிஷ்களின் பெயர்களுக்கு பதிலாக தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின் பேர் தான் இருக்கும். அதை பார்த்து நீங்கள் குழப்பமாக வேண்டாம், பொதுவாக ஒரு தூக்கு தண்டனை கைதிகளுக்கு கடைசியாக என்ன சாப்பிட ஆசை என கேட்டு அதை வாங்கி கொடுத்து அதை சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவரை தூக்கில் போடுவார்கள். இந்த ஹோட்டலுக்குள் சென்று எந்த தூக்குத்தண்டனை பெயரை தேர்ந்தெடுக்கிறோமோ அந்த கைதி கடைசியாக எந்த மீல்ஸை ஆசைப்பட்டு கேட்டு சாப்பிட்டாரோ அதைத்தான் நமக்கு கொடுப்பார்கள்.
இதில் இருக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால் "உப்பு கொஞ்சம் அதிகமாக வேண்டும்", "காரம் கொஞ்சம் தூக்கலாக வேண்டும்" என்ற எந்தவொரு மாற்றமும் அந்த Meals-ல சொல்ல முடியாது. அவங்களுக்கு அந்த உணவை எப்படி தந்தார்களோ அதேபோல் நமக்கும் தருவார்கள்.
3.RENT A FRIEND:
நிறைய பேருக்கு வீட்டில் தனியாக இருக்கும் Full day கரண்ட் கட் ஆகி அல்லது லீவில் இருக்கும் போது செம்மையா போர் அடிக்கும் "ச்சே... பேசுறதற்கு யாராவது இருந்தா நல்லா இருக்கும்" என்று நினைத்தால் Rent a friend.com என்ற இணையத்தில் ப்ரண்டை நாம் ரெண்ட்க்கு எடுத்துக்கலாம்.
ஒரே ஒரு இரவிற்கு மட்டும் படத்துக்கு போறது அல்லது எதாவது ரெஸ்டாரெண்டிற்கு போறது, ஒரு வீக்-எண்ட் ஏதாவது வந்தால் Saturday and sunday வெளியில் போவது, அப்படியும் இல்லையென்றால் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்ப்பது போன்று இவர்களிடம் பல மெனு இருக்கிறது. உங்களுக்கு எந்த மாதிரியான ஃப்ரண்ட் தேவைப்படுகிறார்களே அதற்கு ஏற்றாற் போல் ப்ரண்டை செலக்ட் செய்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
2.COLOGNE IT:
உங்கள் ப்ரண்ட் யாராவது போன பொங்கலுக்கு குளிச்சிட்டு அடுத்து பொங்கல் வரும் வரை குளிக்காமல் இருக்கிறாரா? உங்கள் ப்ரண்ட் சோப்பு, சீப்பு, ப்ரஸ், பேஸ்ட் இது எதுவுமே என்னவென்றே தெரியாம உங்க கூட சுத்துறார அப்போ இந்த சர்விஸ் உங்களுக்குத்தான். உங்களுடன் வேலை செய்யும் உங்களுடைய ப்ரண்ட், காலேஜ் ப்ரண்ட், ஸ்கூல் ப்ரண்ட் என்று யாரவது ஸ்ரைட்டா கூவத்திலிருந்து குளிச்சிட்டு வந்தது போல இருந்தால் அவர்களிடம் நேராக சொல்ல முடியாதுல.
MY FRIEND SMELLS என்ற இணையதளத்தில் அந்த ப்ரண்டின் அட்ரஸை எண்டர் செய்துவிட்டீர்கள் என்றால் அந்த ப்ரண்டிற்கு பெர்ப்யூம், செண்ட் , கலோன் இந்த மாதிரியெல்லாம் அனுப்பி வைப்பார்கள், இதில் இன்னொரு சுவார்ஸ்மான விஷயம் என்னவென்றால் இதை நீங்கள் உங்களுடைய ப்ரண்ட்க்கு அனுப்பி வைக்கும் போது அது எங்கிருந்து வந்தது யார் அனுப்பி வைத்தது என்று யாருக்குமே தெரியாது.
1.PROFESSIONAL CUDDLING:
இப்போது நீங்கள் படிக்க போகும் இந்த சர்விஸ் பற்றி எப்படி எழுதினாலும் லைட்டா கேவலமாகத்தான் இருக்கும், நீங்கள் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது ரொம்ப கஷ்டத்தில் இருந்தால் அவர்களை உடனே கட்டிப்பிடிப்போம்ல அப்போது ஒரு உணர்வு வரும் பார்த்தீர்களா "நான் உங்களுக்காக இருக்கிறேன்" என்று அதையேதான் கொஞ்சம் டீப்பாக செய்தால் அதான் CUDDLING.

ஆனால் சிலபேர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கும் போது நம்மை கட்டிப்பிடிக்க கூட யாருமில்லையே என ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கென்றே ஒரு வெப்சைட்டே இருக்கிறது. உங்களுக்கு யாரையாவது கட்டிபிடிக்க வேண்டும் போல் இருந்தால் நீங்கள் இந்த வெப்சைட்டில் சென்று உங்களுக்கு தேவைப்படுபவர் ஆணா, பெண்ணா, என்ன உயரம், என்ன கலர் என்ன வயது என அனைத்துமே செலெக்ட் செய்து ஒரு புரப்பஷனல் கட்டலரை தேர்ந்தெடுக்கலாம்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top