• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 18, 2025
Messages
7
ஹாய் மக்களே!

இதோ நான் என்னோட கதையுடன் வந்துட்டேன். ஆதவன் ஐஸ்வர்யா ரெண்டு பேரும் உங்களை தேடி வாங்க. சோ அவங்கள சப்போர்ட் பண்ணுங்கப்பா...🥰🥰🥰


அத்தியாயம் - 1

சில்லென தென்றல் காற்று மேனியை வருடிச்செல்லும் இளங்காலை பொழுது! தாமிரபரணி ஆற்றின் உபயத்தில் சுற்றி பார்க்கும் இடம்மெல்லாம் பச்சைபசேல் என காட்சி தரும் வயல்வெளிகள். அந்த வயல்களின் எழிலை சலிக்காது நாம் ரசித்தபடி முன்னே சென்றால், வரும் அந்த ஊரே பாபநாசம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த பாபநாசம் ஊரின் அழுகை ஒரு வரியில் சொல்லிவிட முடியாதுதான். அப்படி கொஞ்சும் எழிலை தன்னகத்தே கொண்ட அந்த ஊரின் மத்தியில் இருந்த லட்சுமி மஹால் வாசலில் ரேடியோ செட்டில் பாடல்கள் காதை பிளக்க பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

அந்த இளங்காலை கதிரவனின் சோம்பல் வண்ண ஒளியால் கண்கள் கூசும் அளவு மண்டபம் வெளியே பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. வண்ண வண்ண பூக்களின் தோரணம், ஆங்காங்கே சிறியதும் பெரியதுமாய் கட்டவுட்டுகள், அதுபோக பக்கத்து ஊர் வரை கேட்கும் வண்ணம் காதை கிழிக்கும் மைக் செட்டு என ஜகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

பின்னே இருக்காதா ஊரின் பாதி நிலபுலன்கள், பெரிய கடைகள், தியேட்டர், ஏன் அந்த லட்சுமி மஹால் உட்பட அனைத்தையும் தங்கள் வசம் கொண்ட பெரிய வீட்டின் திருமணம் அல்லவா. ஊர் உலகம் போற்றும் படி மிகச்சிறப்பாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் நடப்பதை வெறுமையாய் பார்த்து நின்றிருந்தான் அவன்.

வாழ்க்கையை வெறுத்த மாதிரி நிற்கும் அவன் வேறு யாரும் இல்லை, அங்கு இன்னும் சிறுது நேரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தின் மாப்பிள்ளைதான் அவன். இன்னும் சொல்லப்போனால் திருமணத்தை வேடிக்கை பார்க்க வந்து, திடீரென மாப்பிள்ளை ஆனவன். அவன் ஆதவமூர்த்தி.

"ஏய் ஆதவா என்னடா நடக்குது இங்க. உன் அண்ணங்காரன் அந்த வீனாப்போன பைரவ மூர்த்திக்கு கல்யாணம்னுதானே வரசொன்ன. இப்ப நீதான் மாப்பிள்ளைனு நிக்கிற, என்னதான்டா நடக்குது"

நண்பனின் அண்ணன் திருமணமென வந்தால் தன் நண்பனே புது மாப்பிள்ளையாக நிற்பதை கண்டு குழம்பிப்போய் கேட்டான் ஆதவனின் நண்பன் சத்யா.

என்னவோ இந்த திடீர் கல்யாணம் சத்யாவுக்கே நடக்கப்போவதைப் போல் அவன் பதற்றத்தில் துடிக்க, மாப்பிள்ளையாக போற நம் ஆதவனோ யாருக்கோ வந்த விருந்தென ஜன்னலின் வெளியே வருவோர் போவோரை வேடிக்கை பார்த்திருந்தான். அவன் மனமோ காலையில் அவன் அண்ணன் மொட்ட கடுதாசி எழுதி வைத்து சென்றதில் நடந்த கலவரங்களை நினைத்தபடி இருந்தது.

அதிலும் முகத்தில் எந்தவொரு ஏமாற்றமோ சஞ்சலமோ இல்லாமல் நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த அவன் மணமுடிக்கப்போகும் அந்த மணமகளின் மீதே‌. இவன் யோசனையை முடித்தானோ இல்லையோ, அங்கே ஐயர் "மாப்பிள்ளை பையன அழைச்சுட்டு வாங்கோ!" என அழைத்து விட்டார்.

என்ன மனநிலையில் இருக்கிறான் என அவனே அறியாது பலவித யோசனையில் இருக்கும் வேளையில், யாரோ ஒருவர் மாலையைப் போட வேறொருவர் அவனை மணமேடை பக்கம் இழுத்து சென்று அமர்த்திவிட்டனர்.

சத்யாவிற்கோ நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவன் நண்பன், வெட்ட செல்லும் ஆட்டைப்போலவே தெரிய பீதியுடனே மேடைக்கு சென்றான்.

எங்கே ஆதவன் தானும் கல்யாணம் வேண்டாமென சொல்லி விடுவானோ என பயந்த பெரியவர்கள், அவன் யோசனை தெளியும் முன்பு சட்டுபுட்டென ஐயரை வேலையை ஆரம்பிக்க சொல்லி நின்றனர்.

ஆம் முதலில் ஆதவனின் அண்ணன் பைரவனுக்கே இந்த கல்யாணத்தை நிச்சயித்து இருந்தனர் பெரியவர்கள். ஆனால் விடிந்தால் கல்யாணம் என வந்தபோது, நேரம் பார்த்து மாப்பிள்ளை பையன் கம்பியை நீட்டிவிட்டான்.

அப்போது அவன் அருகேதான் இருந்தாள் மணமகள் ஐஸ்வர்யலட்சுமி. அவள் பெயருக்கு ஏற்றவாறு அவ்வளவு ஐஸ்வர்யத்தையும் தன்னகத்தே கொண்ட அழகு பதுமை. இந்த லட்சுமி மஹால் உட்பட பல சொத்துகளின் சொந்தகாரரான தேவநாதனின் மூத்த மனைவியின் ஒரே மகள் இவள்.

ஆதவனின் முகம் கூட ஒருநிமிடம் ஒரு எக்ஸ்பிரஸனை காட்டியது. ஆனால் நம் நாயகி ஐஸ்வர்யாவோ இங்கே நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் நின்றிருந்தாள். அதில் அவளை ஆச்சரியமாகதான் பார்த்து வைத்தான் நம் நாயகன்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த இரு குடும்பமும் தெரியாதவர்கள் இல்லை, சொநத்காரர்களே. இன்னும் சொல்லப்போனால் பைரவன் ஆதவன் இருவரின் தந்தை சிவநேசனின் உடன்பிறந்த தங்கை ராதா. தேவநாதனின் இரண்டாவது மனைவியே ராதா.

சொந்தம் விட்டுவிட்டு போய்விட கூடாது என ஐஸ்வர்யாவை தன் சொந்த அண்ணன் மகனுக்கு பேசி முடித்தார் ராதா. ஆனால் ராதாவின் உண்மையான நோக்கம் சொத்து வெளியே போய்விடக்கூடாது என யாரும் அறிய வாய்ப்பில்லைதான்.

இப்படி மாப்பிள்ளை கடைசி நேரத்தில் ஓடிவிட ஊர் உலகத்தில் நடக்கும் வழக்கத்தை மாற்றாது, மாப்பிள்ளையின் தம்பியை பிடித்து மாப்பிள்ளை ஆக்கிவிட்டனர் அனைவரும். அதுவும் ஆதவனின் தாயாகிய அம்பிகாவோ

"நீ மட்டும் இப்ப இந்த கல்யாணத்தை பண்ணலை மண்டப வாசல்லையே தூக்குல தொங்குவேன்"

என ஒரு முழ கையிற்றோடு ஆதவனை மிரட்டி பெரிய டிராமாவாக போட, அம்பிகாவின் ஓவர் ஆக்டிங்கை பார்க்க முடியாமலே இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டு விட்டான் ஆதவன்.

அதன் விளைவாக இப்போது மணமேடையில் பன்னீர் தெளிக்கும் பொம்மைக்கு காம்படீஷன் தரும்படி அமர்ந்திருக்கிறான் நம் நாயகன்.

'பேசாம இப்புடியே எந்திரிச்சு போயிடலாம். மணமேடைல இருந்து எஸ் ஆனா எவனாலையும் உன்ன ஒன்னும் பண்ண முடியாது' என அவன் மூளை எடுத்துக் கொடுக்க, அவன் எந்திரிக்க முற்பட்டான்.

அதேநேரம் ஒரு கை அவன் தோளை அழுத்தி அவனை அமர வைத்ததில் 'யாருடா' என பார்த்தான். வேறு யாரும் இல்லை அவனை பெற்ற சீமாட்டி, அவன் தாய் அவர் மறைத்து வைத்திருந்த அதே கயிற்றி காட்டிக் கொண்டு நின்றார்.

'ப்ச் இந்த தாய்கெழவி இம்சை வேற தாங்க முடியலடா சாமி!'

சலித்தபடி கஷ்டப்பட்டு முன்னே கவனத்தை வைத்தான். அப்போது அவனுடைய மறுபக்கத்தில் கேட்ட அரவத்தில் 'ச்ச இன்னும் என்னடா' என சலித்தபடி மெல்ல திரும்பி பார்த்தான்.

தேவலோகத்தில் இருந்து அந்த தேவதைதான் இறங்கி வந்து விட்டதோ என எண்ணும் வகையில் பளிச்சென வந்த ஐஸ்வர்யாவை ஆதவன் பார்த்த நொடி, அவன் கண்களில் மின்னல் வெட்டி சென்றது.

அவன் முகமோ பகலில் ஜொலிக்கும் சூரியனின் பிரகாசத்தை ஒரு நிமிடம் காட்ட, மறுநொடியே யாரும் அவன் ஊத்தும் ஜொல்லை கண்டுவிடாதவாறு தன் முகபாவங்களை வெற்றிகரமாக மாற்றிக் கொண்டான்.

இங்கு ஐயர் தன் பங்கிற்கு அவர் வேறு அடிக்கடி "சுவாகா! சுவாகா!" என்க, ஒன்றும் புரியாது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸுடன் தானும் "சுவாகா!" போட்டா வைத்தான் ஆதவன்.

ஆதவன்தான் ஒரு சுவாகாவை ஏனோதானோவென போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் நம் நாயகி ஐஸ்வர்யா ஐயர் சொல்லும் மந்திரங்களை மிக கவனமாக கேட்டு பொறுப்பாக சொல்லிக் கொண்டிருத்தாள். ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து போர் அடித்ததில் தலையை திருப்பிய ஆதவன் சீரியசாக மந்திரம் சொல்லும் ஐஸ்வர்யாவை பார்த்து ஷாக் ஆகிவிட்டான்.

'என்னையவிட அவ செமையா பர்பாம் பண்றாளே. ம்ஹூம் இதை இப்படியே விடக்கூடாது. ஆதவா ஸ்டார்ட்டா இன்னைக்கு நானா அவளான்னு பாத்திடனும்"

உடனே ஒரு முடிவை எடுத்த ஆதவன் அடுத்து ஐயர் சொன்ன அனைத்து மந்திரங்களையும் கவனமாக கேட்டு தானும் அக்யூரட்டாக சொல்ல ஆரம்பித்தான்.

இதுவரை அசால்ட்டாக இருந்த ஆதவன் திடீரென அலர்ட் ஆனதை கவனித்த மணமகள் ஐஸ்வர்யாவின் கண்களில் பளிச்சென ஒரு ஒளி தோன்றி மறைந்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை தான்.

'என்ன இவ்வளோ நேரம் தேமேன்னு சும்மா இருந்தவன் திடீர்னு ஸ்பீட் எடுக்குறான். இது சரியில்லையே! நம்ம பர்பாமன்ஸ ஏத்தனும் போலையே. என் லைஃப்ல ஒன்னேயொன்னு கண்ணே கண்ணுன்னு ஒரேயொரு கல்யாணம் நடக்குது, அதுலகூட நிம்மதியா இருக்கவிட மாட்டானா பாவிபய.. இருடா வரேன் இன்னைக்கு பர்மான்சல எப்படி என்ன நீ பீட் பண்றனு பாக்குறேன்'

இங்கு மனதிற்குள் வீராவேசமாக சபதம் எடுத்து ஐஸ்வர்யா, இன்னும் அலர்ட் ஆனாள்.

இப்படி மணமேடையில்கூட போட்டி போடும் இவர்களின் இடையே எதுவும் பிளாஷ்பேக்கு இருக்குமோ என உங்களுக்கு டவுட் வரலாம். டவுட்டே வேண்டாம் மக்களே இவர்களின் இடையே ஒரு ரயில் ஓடும் அளவு பெரிய பிளாஷ்பேக் டிராக்கே இருக்கிறது. அப்படி என்ன பிளாஷ்பேக் என சுருக்கமாக இரண்டு வரியில் பார்ப்போமா!
 
Joined
Feb 18, 2025
Messages
7

சுமார் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் மாட்டி ஐஸ்வர்யாவின் தாய் இறந்துவிட, நான்கு வயதில் தனித்து விடப்பட்டாள் ஐஸ்வர்யா. பெண் பிள்ளையை தனியே பார்த்துக் கொள்ள முடியாது என அது இதுவென பேசி அவருக்கு இரண்டாவதாக ராதாவை திருமணம் செய்து வைத்தார் தேவநாதனின் தாயார்.

தன் அம்மா இடத்தில் வேறு ஒருவர் வருவதை அந்த நான்கு வயது குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராதா மணமாகி வீட்டிற்கு வந்த நாளில் அழுது, தரையில் உருண்டு பிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து அனைவரையும் ஒருவழியாக்கினாள் ஐஸ்வர்யா.

அவளோடு தரையில் அமர்ந்து அவளை ராதா சமாதானம் செய்ய பார்க்க, ராதாவையும் பிடித்து தள்ளிவிட்டாள்.

தன் பாசமான அத்தையோடு மாமா வீட்டிற்கு வந்தான் ஆறு வயது ஆதவன். ஐஸ்வர்யா தன் அத்தையை இப்படி தள்ளிவிடுவதை கண்டு அவன் முகத்தில் ஜிவுஜிவென கோபம் வர, அன்றிலிருந்து ஐஸ்வர்யாவிடம் வம்பிலுக்க ஆரம்பித்தான் ஆதவன்.

ஐஸ்வர்யாவும் ஒன்றும் சும்மா இருக்கவில்லை, ஆதவன் ராதாவிற்கு சப்போர்ட் செய்யும் ஒவ்வோரு தடவையும் 'அந்த சகுனிக்கு சப்போர்ட்டா செய்யுற என் சப்போட்டா' என கலத்தில் இறங்கி விடுவாள்.

இவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்புகளும் அடிதடியில் முடியாமல் இருந்தாலே அதிசயம்தான். அப்படி இருந்த இருவரை பிடித்து கட்டி வைக்கப் போகும் பெரியவர்களின் மூலையை எல்லாம் மியூசித்தால்தான் வைக்க வேண்டும்.

இவர்கள் இத்துப்போன அடிதாங்கி பிளாஷ்பேக்கை விட்டுவிட்டு இப்போது மணமேடையில் என்ன நடக்கிறது என பார்க்கலாம் வாங்க!

மணமேடையில் கல்யாணம் நடக்கிறதா இல்லை ஐயர் சொல்வதை யார் பர்பெக்டாக செய்யப் போகிறார்கள் என போட்டி நடக்கிறதா என தெரியாத அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துக் கொண்டிருக்க, பாவம் ஐயரே இங்கு கல்யாணம்தான் நடக்கிறதா என குழம்பி விட்டார்.

இவர்கள் செய்த கூத்து ஐயர் ஆதவனிடம் தாலியை எடுத்து கொடுத்து கட்ட சொல்லும் வரைதான் நீடித்தது. அந்த தாலியை கையில் வாங்கிய ஆதவனுக்கு இவ்வளவு நேரம் இல்லாத பதற்றம் பயம் எல்லாம் தொற்றிக் கொண்டதில் எச்சிலை விழுங்கினான்.

'சண்டிராணி இவளை எப்படி கட்டி மேய்க்க போறனோ. முருகா எப்படியாவது இந்த ராட்சசிய என்கிட்ட இருந்து காப்பாத்து.. ச்சை என்னை அவக்கிட்டு இருந்து காப்பாத்து'

பயத்தில் தாறுமாறாக ஒரு வேண்டுதலை போட்டான் நம் ஹீரோ. இங்கே ஐஸ்வர்யாவுக்கும் அதே நிலைதான். இன்னும் சிறிது நொடியில் ஆதவன் கையில் இருக்கும் தாலி அவள் கழுத்திற்கு வரப்போகிறது என நினைக்கும்போதே மனதிற்குள் ரயில் வண்டி ஓடும் சத்தமெல்லாம் கேட்டது.

'முருகா! போயும் போயும் இந்த வீணாப்போனவன என தலைல கட்டுறியே இது உனக்கே நியாயமா. போச்சு என வாழ்க்கை இதோடு போச்சு.. பேசியே என்னை கொல்லப்போறான்..'

ஆதவனை நினைத்து உள்ளே பயந்தாலும் வெளியே வீராப்பாய்தான் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா. இப்படி இரண்டு பேரின் வேண்டுதலையும் கேட்கும் முருகனின் நிலை...

மாறி மாறி இருவரும் தங்களுக்கு தானே பேசிக்கொண்டாலும், ஆதவனின் கரங்கள் வெற்றிகரமாய்‌ ஐஸ்வர்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டது.

கல்யாணம் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்ததில் 'ஹப்பாடா' என நிம்மதி பெருமூச்சு விட்டு நின்றிருந்தனர் இரு குடும்பத்தினரும்.

ஆனால் அவன் மேற்கு என்றால் இவள் கிழக்கு என்றிருந்த இந்த இருவருக்கும் இனி வாழ்க்கை என்ன செய்ய காத்திருக்கிறதோ. இல்லை வாழ்க்கையை வைத்து செய்ய இவர்கள் காத்திருக்கிறார்களோ. இவர்களால் அப்படியும் நடக்க வாய்ப்புள்ளதே..

இதில் காதல் மன்னன் கியூப்பிட்டு எப்படி இவர்களுக்குள் காதலை கொண்டு வரப்போகிறாரோ, அவருக்கு இனி ஓவர்
நைட் ஒர்க் கன்பார்ம். பார்ப்போம் இருவரும் இனி எப்படி வாழ்வில் ஒன்றாக பயணிக்கப் போகிறார்களென.

-தொடரும்
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top