• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
523
சதூர்வேதமங்கலம்:

கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தனது காதல் மனைவியின் வாயிலிருந்து அவள் அழைக்கும் பிரத்தியோகமான அழைப்பான லாம்ப் போஸ்ட் என்ற வார்த்தையை கேட்டவனுக்கு உள்ளுக்குள் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது..

தன்னை அணைத்துக் கொண்டிருப்பவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் அட ஆண்டவா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?

ருத்ரா உன் வீர தீர செயலை காட்ட வேண்டியது தானென்று சொல்லியவன் தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளை தூக்கி நிமிர்த்தியவன் அவள் உயரத்திற்கு தனது தலையை கீழே சாய்த்து அவள் உதட்டோடு தனது உதட்டை பதித்தான்.

இந்த அதிரடி அதிர்ச்சியால் ஆர்கலியின் அழுகை நிற்க ருத்ரனும் தனது காதல் லீலைகளை காட்டத் தொடங்கினான்.

அதில் அவளின் எண்ணமும் மாற மனைவியாக அவனுக்கு இசைந்து கொடுத்தாலும் மூன்று நாட்களுக்கு முன்பு தான் டெலிவரி ஆகிய உடம்பு என்பதால் சிறிது பயம் வந்து அவனை தன்னிடம் இருந்து விலக்க,எல்லா ஈர வெங்காயமும் எனக்கும் தெரியும்டி என்று அவள் காதோரம் சொல்லும் போது ருத்ரனின் தாடியும் மீசையும் குத்தி ஏற்படுத்திய குறு குறுப்பில் கணவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

மனைவியின் அணைப்பிலேயே அவள் மனம் புரிய அந்நேரம் பார்த்து குழந்தைகள் இருவரும் அழுக,அட கரடி குட்டிங்களா!

இப்போதாண்டா என் பொண்டாட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா அது உங்களுக்கு பொறுக்கவில்லையா என்று ருத்ரன் சொல்ல அவன் முதுகில் பட்டு பட்டென்று அடித்தவள் என்ன குழந்தைகளை போய் கரடி குரடி என்று சொல்லுற.அப்பனை போல தான் பிள்ளைகளும் இருக்கும் என்று திட்டினாள்.

மனைவியின் இயல்பான குணம் திரும்பியதை கண்டவன் ஏண்டி என்ன பாத்தா என்ன கரடி போலயா இருக்கு?
கொஞ்சம் உன்னுடைய மனசாட்சியை தொட்டு சொல்லு என்றான்.

தன் மேல் இருந்தவனை பார்த்தவள் ஆமா சத்தியமா நிஜமா உண்மையா என்று சொல்ல வர,கமான் கமான் சொல்லுடி..

உன் புருஷன் ஸ்மார்ட்டா செம்மையா ஹேண்ட்ஸமா இருக்கேன் அதானே என்று ருத்ரன் கேட்க,அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் 100 சதவீதம் சத்தியமா நீ கரடி போல தாண்டா இருக்க என்றாள்.

அவள் சொன்னதை கேட்டவன் கரடி என்ன பண்ணும் என்பது தெரியுமாடி என்று அங்கே அங்கே அவளை கடித்து வைத்தான்.

அப்பொழுது குழந்தைகளும் இன்னும் கொஞ்சம் சத்தத்தை கூட்ட தள்ளு எருமை.எவ்வளவு வெயிட்டா இருக்க...

உன் வெயிட்டை எப்படி தாங்க முடியும் என்று சொல்ல ஏண்டி புருஷன் என்று கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்குறியா?.

உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டி கிடக்கு.தள்ளுடா என்று தன் மேலிருப்பவனை புறட்டி கீழே தள்ளியவள் எழுந்து போய் தொட்டிலில் இருந்த குழந்தைகளை பார்க்க இரண்டு பேரும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு அழுதார்கள்.

பெட்டிலிருந்து எழுந்து வந்த ருத்ரனும் தங்க குட்டிங்க ஏன் அழுறீங்க என்றவாறு ஆளுக்கொரு குழந்தையை தூக்கினர்.

ஏய் பசிக்குது போலடி என்றான்.ஆமாம் என்றவள் சரி நீ ஒரு குழந்தையை தூக்கிட்டு வெளியில போ நான் ஒருவரை பார்க்கிறேன் என்று சொல்ல அதுக்கு ஏண்டி நான் வெளிய போகணும். இங்கே இருக்கிறேன் என்றான்.

சரி அப்போ திரும்பி உட்காரு என்றாள். என்னாலையெல்லாம் திரும்பி உட்கார முடியாது நான் இப்படி தான் இருப்பேன் என்க,ஆண்டவா இவன் ரொம்ப படுத்துறானே என்று மனதிற்கு நினைத்தவள் வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

இரண்டு குழந்தைகளுக்கும் மாற்றி மாற்றி பசியாற்றியவள் பின்னர் ஆளுக்கு ஒரு குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தனர்.

இருவரும் சிறிது நிமிடத்தில் ஏப்பம் விட்டதும் பெட்டில் கிடத்த கை காலை உதைத்து கொண்டிருந்தனர்.

பெட்டில் படுத்திருந்த குழந்தைகளை இருவரும் பார்த்த கொண்டிருக்கும் போது நிஜமாகவே உன்னை போல தான் ரெண்டு பேரும் இருக்கிறாங்கள் லாம்ப் போஸ்ட் என்று ஆர்கலி சொல்ல தேங்க்யூ தேங்க்யூ.

என் பொண்டாட்டிக்கு என் மேல அம்புட்டு காதல் டி.என் குட்டிங்க அவள் வயிற்றில் இருக்கும் போது என்னை ரொம்ப சைட் அடிச்சிட்டா.அதான் அப்படியே அய்யா போலவே ஜூனியர்ஸ் வந்தாச்சி என்றவன்,
ஆர்கலி என்று கூப்பிட்டான்.

அவன் வழக்கமாய் கூப்பிடும் செல்லப்பேரான பார்பி டால் இல்லாமல் ஆர்கலி என்று மூச்சிக்கு மூச்சி சொல்வது அவளுக்கு கோபம் வந்து முறைத்து பார்த்தாள்.

ஏன் இந்த பார்பி டால் எங்க போயிடுச்சாம்? என்னமோ இவன் பெயர் வைத்த போல ஆர்கலி ஆர்கலி என்று ஏலம் விடுறான் என முணுமுணுத்தாள்.

அவள் முணுமுணுப்பது ருத்ரனின் காதில் நன்கு விழுந்தது.

அப்பொழுது மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு தேவகியும் கருப்பாயியும் வீட்டிற்கு வந்தனர்.

வாம்மா என்று பாட்டி சொல்லும் குரல் உள்ளே இருந்தவர்களுக்கு கேட்க ஆர்கலியும் பொறுமையாக எழுந்து வாசலுக்கு வந்தவள் வாங்கம்மா என்றாள்.

பேரப்பிள்ளைகள் ரெண்டு பேரும் என்னம்மா பண்றாங்க என்று தேவகி கேட்க முழிச்சிட்டு தான் படுத்திருக்காங்கம்மா என்றாள்.

அம்மா,ஆர்கலிக்கு இதில் பத்திய சாப்பாடு தனியாக இருக்கு.மத்தது உங்களுக்கும் தம்பிக்கும் என்று தேவகி சொல்ல சரிமா என்றார்.

ஆரமா நீ நேரத்தோடு சாப்பிடு குழந்தைகளுக்கு பால் கொடுக்கணும் இல்லையா.அவங்களை நாங்க பாத்துக்குறோம் என்க,சரிங்கண்ணி என்றவளுக்கு எடுத்து வந்த சாப்பாட்டை பரிமாறியவர்,தம்பி என்று வாசல் பக்கம் நின்று குரல் கொடுக்க உள்ளே வாங்கக்கா என்றான்.

மருமக குட்டீங்க என்ன பண்றாங்க என்றவாறு அங்கே போய் பார்க்க இரண்டு பேரும் விழித்துக் கொண்டு பெட்டில் படுத்திருப்பதை கண்டவர்,நான் பார்த்துக்கிறேன் பா.

நீயும் போய் சாப்பிடு என்க,இல்லக்கா காலையில் டிபன் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்கு.நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுகிறேன்.எனக்கு இஞ்சி டீ மட்டும் வச்சி தாங்களென்க,இதோப்பா என்றவாறு கிச்சனிற்குள் சென்று டீயை போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தார்.

தேங்க்ஸ்க்கா என்றவன் எங்கக்கா மாமாவை ஆளைக் காணும் என்க உங்க மாமா திருச்செந்தூர் வரைக்கும் போயிருக்காங்க தம்பி என்றார்.

என்னக்க சொல்றீங்க நேற்று ஈவ்னிங் பார்த்தேனே என ருத்ரன் சொல்ல,ஆமா தம்பி.மாமா இராவுக்கு தான் கிளம்பி போனாரு.

தங்கச்சிக்கு நல்லபடியா பிரசவம் ஆனால் கோயிலுக்கு வரேன்னு வேண்டி இருந்தாராம்.அதுக்கு தான் போயிருக்கிறாரென்று கருப்பாயி சொல்ல அதைக் கேட்டு ருத்ரனுக்கும் வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்கலிக்கும் சங்கரின் பாசத்தை நினைத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நேரமும் கடந்து சென்றது மூவரும் அங்கிருந்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்.

குழந்தைகள் இருவரும் தூங்கிவிட அவர்களை தூக்கி தொட்டிலில் கிடத்திய கருப்பாயி ஆராமா நீயும் கொஞ்ச நேரம் படுத்துக்க.

உன் மவனும் மவளும் தான் ரா முழுவதும் தூங்க விடமாட்டேங்குறாங்களே என்று சொல்லி சிரிக்க ஆமாங்கண்ணி என்றாள்.

சரி நீ படு என்றவாறு கருப்பாயி திண்ணைக்கு வந்தவர் பாட்டியோடு உட்கார்ந்து கொண்டு ஏற்கனவே தைத்த சட்டைகளுக்கு இருவரும் பட்டன்களை கட்டினர்.

சிறிது நேரம் போனில் மூழ்கியிருந்தவன் உள்ளே வந்து பார்க்க குழந்தைகளும் மனைவியும் தூங்குவது தெரிந்து அங்கு இருந்த தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவன் அதை ஆன் பண்ணி அவன் வேலையை பார்க்கலானான்.

ஆச்சி பதினாருக்கு குழந்தைங்களுக்கு படைக்கணும்.அன்றைக்கே பேர் வைப்பாங்களாயென்று கருப்பாயி கேட்க, அது தெரியலையே கண்ணு.

ஆனால் பதினாறுக்கு நம்ப வழக்கம் போல படைச்சிடலாமென்றவர் அதற்கு என்னென்ன செய்யலாமென இருவரும் கலந்து பேசியபடி வேலை பார்க்க நேரமும் கடந்து சென்றது.

அப்பொழுது கார் ஒன்னு அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க,இருவரும் சத்தம் கேட்டு யாரென்று பார்த்தார்கள்.

கதவை திறந்து கொண்டு தனாவும், தேவியும் இறங்கினர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

வணக்கம்மா என்க,பாட்டியும் வணக்கம் பா என்றவர்,தமிழர்களுக்கே உரிய பண்பாடானா வந்தவர்களை வாங்கயென்று உள்ளே அழைத்தார்.

அந்த ஓட்டு வீட்டிற்குள் வந்த தனா ஹாலில் வேலையாய் இருந்த மகனை பார்த்து வீரா என்க, தனது வேலையில் மூழ்கியிருந்தவன் அந்த குரலில் நிமிர்ந்து பார்த்து திகைத்தான்.

அவருக்கு பின்னாடி இருந்து தேவியை பார்த்த ருத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வாங்க உள்ள வந்து உட்காருங்கள் என்றார் பாட்டி.

இருவரும் ஆளுக்கொரு சேரில் உட்கார்ந்தனர்.கருப்பாயி ஆளுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எடுத்து குடித்துவிட்டு அங்கிருந்து டேபிளில் வைத்தனர்.

பாட்டியையும் கருப்பாயியையும் பார்த்தவர் நான் தன வீர சிம்ஹன். இவங்க என்னோட மனைவி விஷாலா தேவி.நாங்கள் தான் ருத்ரனுடைய அப்பா அம்மா என்று அவரே அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பேரப்பிள்ளைங்க பிறந்திருக்காங்கன்னு மைக்கேல் அண்ணே சொன்னாங்க. அதான் ரெண்டு பேரும் உடனே கிளம்பி வந்துட்டோம் என்றார்.

அம்மாடி டீ போடு என்று கருப்பாயி கிட்ட சொல்ல வேண்டாங்கம்மா வரும் போது தான் குடிச்சிட்டு வந்தோம் என்று மறுத்து விட்டார்.

ருத்ரனுக்கு அவர்கள் இருவரிடமும் பேச சிறிதும் மனம் வரவில்லை ஒரு பார்வையாளராக அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

அம்மா குழந்தைகள் எங்கே என்று தேவி கேட்க இரண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்கம்மா என்றார்.

தூங்கிட்டு இருக்காங்களா என்று முணவியர் அம்மா உள்ள போய் பார்க்கலாமா?.

இது என்னமா கேள்வி?

உன்னோட பேர பிள்ளைகளை நீ போய் பார்க்க அதுக்கு யாருடைய அனுமதி உனக்கு வேண்டும் என்று பாட்டி கேட்க ரொம்ப நன்றிங்கம்மா என்றவர் வேகமாக எழுந்து அங்கிருந்து உள்ளே சென்று பார்த்தவருக்கு இரண்டு குழந்தைகளும் தனது மகன் ருத்ரனுடைய குழந்தை பருவத்தை விஷாலா தேவிக்கு ஞாபகப்படுத்தினர்.

தன் மகனும் பிறந்த போது இவர்களைப் போல தானே இருந்தான்.முப்பது வருடங்களுக்கு பின்னர் அப்படியே மகனின் சாயலில் தனது பேர பிள்ளைகள் பிறந்திருப்பதை பார்த்தவருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.

சிறிது நொடிகள் சென்று உள்ளே வந்து குழந்தைகளை பார்த்த தனாவிற்கும் அதே எண்ணம் தான் தோன்றியது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
523
கண்கள் குளிர இரண்டு பேரப்பிள்ளைகளை பார்த்தவர்களுக்கு அவர்களை அள்ளிக் கொஞ்சி முத்தமிடனும் போல் ஆசை வந்தது.

ஆனால் இருவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்களே என்ன செய்வதென,தங்களது மன ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு மனமே இல்லாமல் வெளியே வந்து உட்கார்ந்தனர்.

அப்பா,அம்மாலாம் எங்கேமா இருக்காங்க என்று தனா கேட்க,கண்ணன் தம்பி வீட்டுல இருக்காங்கப்பா என்றார்.

அய்யா நான் போய் பெரியம்மாவை வர சொல்கிறேன் என்று கருப்பாயி அங்கிருந்து செல்ல போக,இருக்கட்டும் வேண்டாமா நானே போய் பார்க்கிறேன்.
குழந்தைங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்க.அவங்க எழ எப்படி இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்.

அதற்குள்ள அவங்களையும் பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்லியபடியே அங்கிருந்து தனா எழுந்து செல்ல,தேவியும் அவர் பின்னாடியே அமைதியாக சென்றார்.

ருத்ரனும் யாருக்கோ வந்ததென்று அவர்களை கண்டு கொள்ளாமல் அமைதியாக தான் இருந்தான்.

ராஜா அந்த பெரிய வீட்டுக்கு நீ கார் எடுத்துட்டு வந்துருப்பா.நான் நடந்து வருகிறேன் என்று தனா சொல்ல, பரவால்ல சார் கார்ல உட்காருங்க இதோ போயிடலாம் என்றார்.

இல்ல ராஜா வீடு பக்கத்துல தான் இருக்கு.வேணும்னா மேடத்தை கூட்டிட்டு போ என்று சொல்லி தனா நடந்து செல்ல,நானும் அவர் கூடவே வந்துடுறேன் ராஜா.நீங்க கார் எடுத்துட்டு போய்டுங்களென்று தேவி சொல்ல,அதைக் கேட்ட ராஜாவோ அட ஆண்டவா என்னதான்டா நடக்குது இந்த வீட்ல?

இந்த அம்மா என்ன இப்படி மாறிட்டாங்க?.உண்மையிலே நான் கனவு எதாவது காணுறேனா?.
சரி நல்ல விஷயம் தான்.மனுஷனுக்கு மாற்றம் வராமலா போய்விடும் என்று சொல்லியவர் கார் எடுத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்த மெயின் கேட்டை திறந்து உள்ளே வந்த இருவரும் வீட்டையும் அங்கிருந்து முன்புற தோட்டத்தையும் பார்த்து அசந்து போயினர்.

தேவிக்கோ அன்று களுத்துறையில் இவர்களை போயா ஏளனமாக நினைத்தோம் என்பது அந்தநேரம் மனதிற்குள் எண்ணம் வராமலும் இல்லை.

இருவரும் உள்ளே செல்ல, அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சுந்தரபாண்டியன் தாத்தாவும் கண்ணனும் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர்கள்,இருவரையும் பார்த்துவிட்டு வாங்க வாங்க என்ற வரவேற்த்தனர்.

எப்ப கிளம்புனீங்க சொல்லவே இல்லையேமா என்று சுந்தரபாண்டியன் தாத்தா கேட்க,மூன்று மணி நேரம் ஆகுது மாமா என்றார் தேவி.

தேவகி தேவகி என்று கண்ணன் குரல் கொடுக்க,கிச்சனில் இருந்தவர் இதோ வரேன் என்று அங்கு வந்தவர்,அவரும் பார்த்துவிட்டு வாங்க அண்ணா வாங்க அண்ணி என்க,தனாவும்,தேவியும் தலையசைத்தனர்.

மலரக்கா காபி எடுத்துட்டு வாங்க என்று தேவகி குரல் கொடுக்க,சிறிது நிமிடத்தில் காபி டிரோயோடு அங்கு வந்தவர் ஆளுக்கு ஒன்று கொடுக்க கார்ல டிரைவரும் இருக்கிறாங்க என்க,நான் கொடுத்துடுறேனென்று மலரும் சொல்லிவிட்டு உள்ளோ போனார்.

அப்பா,எங்க அம்மா அப்பா எல்லாம் என்று தனா கேட்க,அண்ணா உள்ள படுத்திருக்கிறார்கள்.

அண்ணியும் சைலுவும் குழந்தைக்கு 16க்கு படைப்பதற்காக பெரிய லிஸ்ட் எழுதிட்டு இருக்காங்க தனா.நானும் ரெண்டு தடவை போய் பார்த்திட்டு திரும்பி வந்துட்டேன் பா. ஆனால் அவங்க லிஸ்ட் முடிஞ்ச போல இல்லப்பா என்று சிரித்தார்.

அத்தைங்க எந்த ரூமில் இருங்காங்க தேவகியென்று தேவி கேட்க,வாங்கண்ணி என்றவரோடு எழுந்து போக,இடப்புறமாக இருக்கும் மூன்றாவது அறைக்கதை திறந்து உள்ளே போன தேவகி,அம்மா யாரு வந்துருங்காங்களென்று பாருங்களென்க,கிரிஜா பாட்டி எதையோ சொல்ல,சைலு பாட்டி நோட்டில் அதை எழிதியபடி இருந்த இருவரும் தேவகி சொன்னதை கேட்டு நிமிர்ந்து பார்க்க தேவகியின் பின்னால் தேவி நிற்பது தெரிந்தது.

வாம்மா தேவி எப்போ வந்த?

நல்லா இருக்கியா?

தனா எப்படி இருக்கான்?

நீ மட்டும் தனியாக வந்தியாயென்று இரண்டு மாமியார்களும் அன்போடு கேட்க,மன்னிச்சிடுங்கத்தை என்றவாறு கிரிஜா பாட்டியின் கால்களை பிடித்து அழுதார்.

அய்யோ தேவி என்னமா இதெல்லாமென்க,அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது மாமியார் அதே அன்பாக பேசுவதை பார்த்த குற்ற உணர்ச்சியில் தேவி குறுகி போனார்.

அம்மாடி என்ன நடந்துட்டு நீ இப்படி அழற,எந்திரிமாயென்க, மேன் மக்கள் மேன் மக்கள் தான் என்னும் எண்ணம் தேவியின் மனதிற்குள் வந்தது.அது இருக்கட்டும் உன் பேர பிள்ளைகளை பார்த்தியா தேவியென கிரிஜா பாட்டி கேட்க,தனது சின்ன மாமியாரின் கேள்விக்கு பார்த்தேனுங்கத்தை.

ரெண்டு பேரும் அப்படியே என் புள்ளை போலவே இருக்காங்க.ருத்ரா பிறந்த போது எப்படி இருந்தானோ அதே போலங்கத்தை என்று பெருமையாக சொல்ல,மருமகளின் முகத்தில் இருக்கும் மலர்ச்சியும் வார்த்தையில் இருக்குமா நிதானமும் அனுபவஸ்தர்களான அக்கா தங்கை இருவருக்கும் தேவி மாறிவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லியது.

முதல் முறை பார்க்கும் போது எனக்கும் அப்படி தான் சைலு இருந்துச்சி.வீரா சென்னையில் தான் பிறந்தான்.
கொழு கொழுனு அப்போ அவன் நாலரை கிலோ இருந்தானா பாரேன்.

இவ்வளவு வெயிட் உள்ள குழந்தை நார்மல் டெலிவரியானது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கென்று டாக்டர் சொன்னாங்க.

உடனே உங்க மாமா முதல்ல இந்த ஆளு கண்ணை சுற்றி போடு கிரியென்று சொன்னாரு.அதே 29 வருஷம் கழித்து வீராவோட புள்ளைங்க அவனை போலவே உறிச்சி வச்சிட்டு வந்துருக்காங்க பாரேன் என்று சிரித்தார்.

அத்தை வசுவும்-அண்ணாவும் எங்கே என்க,ரஞ்சன் ஆதிரா மேரேஜ் முடிஞ்சதும் வசுக்கு டெல்லியில் இருந்து கால் வந்துச்சிமா.ரெண்டு பேரும் அங்கிருந்தே போயாச்சி.அங்கு சூழல் என்னவென்று தெரியாமல் கால் பண்ணலை.இன்னைக்கு தான் பண்ணி பார்த்தோம் ஆனால் எடுக்கலை.

பிரதமர் ஆபிஸில் மீட்டிங் இருக்கென்று வசு சொன்னாளென்றார் சைலஜா பாட்டி.

நேரமும் கடந்து சென்றது...

ஒருவழியாக தூங்கி எழுந்த ஆர்கலி குழந்தைகள் இருக்கும் தொட்டிலை பார்க்க அது காலியாக இருந்தது.

எங்கே போனாங்களென்று பதற்றமாக ரூம் கதவை திறந்து வெளியே வந்தவள் அங்கிருந்த தேவியை பார்த்து நீயா என்று அதிர்ந்து போய் கேட்டவள்,அவர் கையிலிருக்கும் குழந்தையை பார்த்து உன்னை யாரு என் குழந்தையை தூக்க சொன்னாயென்றவாறு வேகமாக வந்தவள் அவர் கையிலிருக்கும் குழந்தையை பதறி தூக்கியவள்,இந்த பொம்பளைய யாரு பாட்டி வீட்டிற்குள் விட்டா என்று ஆங்காரமாக கத்தினாள்.

திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருத்ரன் ஆர்கலியின் சத்தம் கேட்டு என்னாச்சு என்று உள்ளே ஓடி வந்து பார்க்க அங்கே மூக்கு விடைக்க கண்களில் கோபம் பொங்க காளி அவதாரம் எடுத்து நிற்பவளை கண்டவனுக்கு ஒரு நொடி திக்கென்றது.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த பொம்பளை இங்கு வந்தாங்க?நான் கொலைகாரியா ஆவதற்குள் போக சொல்லு உன்னோட அம்மாவை என்று ருத்ரனை பார்த்து வேகமாக கத்தி சொல்லியவள்,எங்கே என்னுடைய இன்னொரு குழந்தை என்று கேட்டு பதறினாள்.

மற்றவர்களுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை.மாலை நேர சூரிய ஒளியை காட்டுவதற்காக தோட்டத்திற்கு குழந்தையை தூக்கி சென்றிருந்த கருப்பாயி,ஆர்கலியின் குரலை கேட்டு உள்ளே வந்தார்.

அண்ணி குழந்தை தூக்கிகிட்டு சீக்கிரமா உள்ள வந்துடுங்க என்றவாறு ஆர்கலி உள்ளே போக,இவளுக்கு என்ன ஆச்சு?

எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறா என்று ருத்ரன் யோசனையாக,இவ்வளவு நேரம் அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த தனா தனது மனைவி தேவியிடம் வந்தவர் என்ன நடந்துச்சு?
மருமகள் இந்த அளவுக்கு கோபப்படுவதற்கு நீ என்ன பண்ணுவ சொல்லு என்றார்.

மற்றவர்களும் தேவியையே பார்த்துக் கொண்டிருக்கு உள்ளிருந்து வெளியே வந்தவள் இந்த பொம்பளை கிட்ட கேட்க என்ன சார் இருக்கின்றது.

நான் சொல்லுறேன் என்கும் போதே அவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.உங்க மனைவி ஒரு கொலைகாரி என்றாள்.

என்ன என்று எல்லாரும் அதிர ஆமாம் பாதர் இறந்து போனதுக்கு முழு காரணம் இந்த விஷாலா தேவி தான் என்றாள்.

இவங்களை கூப்பிட்டு போங்களென்று தனாவிடம் சொல்லியவன்,மனைவியை அணைத்தவாறு ரூமிற்குள் சென்று கட்டிலின் மேல் உட்கார வைத்தவன்,எதாவது குடிக்கிறியா என்க,அவன் கையை இருக்கி பிடித்தவள் நான் அந்த போல பொண்ணு இல்லை.என்னை நம்பு நம்பு என்றவாறு அவன் மேல் மயங்கி சரிந்தாள்.

ஹேய் ஆர்கலி ஆர்கலி என்னாச்சுடி என்ற ருத்ரன் அக்கா சீக்கிரமாக கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க என்று ருத்ரன் கத்தினான்..

உள்ளே வந்த விசாலாட்சி பாட்டியிடம் திடீர்னு மயங்கிட்டாளென்று ருத்ரன் பதற்றமாய் சொல்ல,கருப்பாயியும் டம்ளரில் தண்ணீரோடு உள்ளே வர,அதை வாங்கி ஆர்கலியின் முகத்தில் தெளித்தான்.

சில நொடியில் கண்களை திறந்தவள் தன்னையே வேதனையோடு பார்த்தவாறு இருந்தவனை எதுவும் பேசாமல் இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.

ஆரா கண்ணு உனக்கும் ஒன்னும் இல்லையேமா என்று பாட்டி கேட்க, ஆர்கலியிடமிருந்து அழுகை ஒன்றே பதிலாக இருந்தது.

அப்பொழுது உள்ளே வந்த தேவி,ஆர்கலி என்னை மன்னிச்சிடுமாயென்று கையை கூப்பி கேட்க,ம்கும்...

மன்னிப்பு?,அதும் உங்களுக்கு??

எப்படி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் என் வீட்டிற்கு வந்துருக்கீங்க?என்றாள்.

ஹேய் ரிலாக்ஸ்..

நீ டென்ஷன் ஆகாதே என்றவன்,தயவு செய்து நீங்க போங்களென்று வாசல் பக்கம் கையை நீட்டி சொல்ல,அவங்க என்ன பண்ணினாங்களென்று உனக்கு தெரியுமா லாம்ப் போஸ்டென்று கோவமாக கேட்டாள்.

எனக்கு ஒரு மண்ணும் தெரிய வேண்டாம்.நீ அமைதியாகுடி அது போதுமென்று அவளின் தலையில் தடவி கொடுக்க,என்னை விபச்சாரினு சொல்லி தான் இவங்க டைவர்ஸ் வாங்கினாங்கடா என்று கதறினாள்.

ஆர்கலி சொன்னதை கேட்டு அங்கிருந்த எல்லாரும் அதிர்ந்து போனார்கள்.

ஏய் நீ என்னடி சொல்லுறயென்று ருத்ரன் கேட்க,ஆமாம் என்றவள் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.

ரெண்டு வருஷத்திற்கு முன்பு நான் காலேஜ்ல இருக்கும் போது என்னை பார்க்க விசிட்டர்ஸ் வந்துருக்காங்களென்று அட்டென்டர் வந்து சொன்னார்.நான் நினைத்தேன் நீ தான் சர்ப்ரைஸ் குடுக்க வந்துருக்கணு...

சந்தோஷமா ஓடி வந்தேன்.அங்கே இந்த லேடியும்,ஆதிராவுடைய அப்பா சுந்தரும் இருந்தாங்கள்.

இருவரையும் எனக்கு யாரென்று தெரியாததால் நம்மை பார்க்க யார் வந்துருக்காங்கயென்று நான் சுற்றி தேட,அப்பொழுது ஆர்கலியென்று இந்த மேடம் என்னை கூப்பிட்டாங்க.

அப்பொழுது பாதரும் அங்கு வந்தாங்கள்.எனக்கு ஒரே குழப்பம்.
பாதர் தான் இவங்க உன்னுடைய அம்மா,அவர் உன்னுடைய மாமாயென்று சொன்னாங்க.

நானும் சந்தோஷமாகி அவங்க கிட்ட பேசும் போது,ருத்ரனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆனதை இவங்க எல்லாருக்கும் சொல்லணுமாம் ஆர்கலி.

அதனால் இந்த பேப்பரில் சைன் பண்ணுமாயென்று பாதர் சொல்ல,அவர் மேல இருந்த நம்பிக்கையில் நானும் படிக்காமல் சைன் பண்ணிட்டேன்.

அது தான் நான் பண்ணிய தப்புயென்று அழுதாள்...!

ஆர்கலியில் விழுந்தேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top