• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இலங்கை இரத்தினபுரி:

மகன் சொன்னதைக் கேட்ட ஆனந்தன்,ஆது என்று பல்லை கடித்தவர்,என் மனைவிக்கு என்னுடைய நிலைமை நல்லாவே தெரியும்.

"உனக்கு அம்மா ஆவதற்கு முன்பே, எனக்கு பொண்டாட்டியானவள்,அதை முதலில்புரிந்து கொள்".

" அப்புறம்,ரெண்டு பேரும் சீக்கிரமா இங்கிருந்து கிளம்பற வழியை பாருங்களென்று சொல்லி விட்டு காரிலிருந்து இறங்கி சென்றார்".

"டேய் ஏன்டா இப்படி பண்றனு ருத்ரன் கேட்க,வேற என்னடா பண்றது?".

"எனக்குனு இருக்கிறது இவர் மட்டும் தானென்று ஆது கண் கலங்க,அப்படி எல்லாம் மாமாக்கு எதுவும் ஆகாதுடா".

அப்போ என்னலாம் பாத்தால் உனக்கு மனுஷனா தெரியலையா?.

"டேய் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேனென்று நண்பனை கூல் படுத்தியவன், இப்போ என்னடா பண்றது என்க,சரி மாமா சொன்ன போல இங்கிருந்து நாம போலாம்".

"கொஞ்சம் சுற்றி பாரு,போலீஸ் மப்டியில் இங்குதான் இருக்காங்க என்க,ஆதுவும் அதைப்போல் பார்த்துவிட்டு பின் மனமே இல்லாமல், இருவரும் அங்கிருந்து கிளம்பினர்".

"கொஞ்ச தூரம் போய் ஓரமாக காரை நிறுத்தி விட்டு,காரிலிருந்து இருவரும் இறங்கி பேங்க்கை நோக்கி வந்தனர்".

"ஆது கன் எடுத்துகிட்டியா?என்க, பேங்கிற்கு தானே போறோம்னு, நான் வீட்டிலே வச்சிட்டு வந்துட்டேன்டா".

அறிவு கெட்டவனே,எத்தனை முறை உன் கிட்ட சொல்றது கன் எதுக்கும் நம்ம கிட்ட இருக்கட்டுமென்று?,எதுக்கு தான் லைசென்ஸோடு வாங்கிருக்கோம்டா என்று கடிந்து கொண்ட ருத்ரன்,தனது இடுப்பில் கன் இருக்கானு பார்த்துக்கொண்டான்.

"இருவரும் பேங்க் அருகில் வரும் போதே,அங்கு ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது".

"டேய் அங்க என்னாச்சிடா என்றவாறே இருவரும் ஓடி வந்தவர்கள் என்னாச்சுனு கேட்க,கொள்ளை கும்பல்,பேங்கில் நுழைச்சிட்டாங்க".துப்பாக்கி முனையில் எல்லாரையும் பூட்டி வச்சிருக்காங்களென்றனர்.

அப்பாயென்று ஆது தேடி பார்க்க, ஆனந்தன் அங்கு இருப்பது போல தெரியவில்லை.

"அப்பொழுது கண்ணாடியை உடைத்துக்கொண்டு,முகமூடி போட்டுக்கொண்ட ஒருவன்,பேங்க் வாசலில் வந்து விழுந்தான்".

"அங்கே போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேட்க,கூடியிருந்த மக்களோ சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்தனர்".

"வண்டியிலிருந்து கீழே இறங்கிய போலீஸ்காரர்கள்,அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவன் கையில் விலங்கை மாட்டி விட்டு,பேங்க்கின் உள்ளே சென்றனர்".

"அங்கு,மற்ற கொள்ளையர்கள் கை,கால் கட்டப்பட்டு தரையில் கிடந்தனர்".

"ஆனந்தனை பார்த்து கண்ணசைத்து விட்டு,அவர்களை இழுத்துக்கொண்டு சென்றனர்".

"ஆனந்தனிடம் வந்த மேனேஜர் ரொம்ப நன்றிங்க சார்.தக்க சமயத்தில் என்னை காப்பாற்றினீர்கள் என்று சொல்ல, இதுல என்ன இருக்குங்க சார்,ஒரு குடிமகனாக இது என்னுடைய கடமை".

"ஆனந்தன் வெளியே வருவதை பார்த்த ருத்ரன்,டேய் மாமாடா என்க,வாடா என்றவாறே அவரிடம் வேகமாக சென்றவர்கள்,உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்க அங்கிருந்த இருவரையும் பார்த்தவர்,அடேய் இன்னும் நீங்க போகலையாடா? உங்க ரெண்டு பேர் கிட்ட மீட்டிங் தானே அட்டென்ட் பண்ண சொன்னேன்".

"உங்களை என்று,இருவரும் பல்லை கடித்தனர்".

"ஹாஹாஹாஹா என்றவர்,அடேய் இது தான் என்னுடைய கடைசி கேஸ் டா,நெக்ஸ்ட் வீக் எனக்கு ரிட்டையர்மெண்ட், நீங்க வீட்டுக்கு போங்க,நான் ஆபிஸிற்கு போறேனென்று சொல்லிச்சென்றார்".

"என்னடா இவர் நமக்கு பல்பு கொடுத்துட்டு போகிறாரென்று ஆது சொல்ல,என்னமோ இது நமக்கு புதுசு போல தான்,அட வாடா போகலாமென்று ருத்ரன் போக,உனக்கு இது தேவையா ஆதுவென்று ஒரு விரலை தனது முகத்தை நீட்டி கேட்டவன்,டேய் நில்லுடா என்றவாறே ருத்ரனின் பின்னே ஓடினான்.

" சிம்ஹன் பேலஸிற்குள் வந்த நண்பர்கள் இருவரும்,ஹப்பாடானு ஓய்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தனர்".

"இருவரையும் பார்த்த கிரிஜா பாட்டி, என்னப்பா ஆச்சு?.

ஏன் இப்படி இருக்கீங்க?.

இருவரும் அமைதியாக இருப்பதை பார்த்தவர்,ஏன் ஆது கண்ணா போன காரியம் சக்சஸ் ஆகலையாப்பா,சரி விடுங்க.இந்த பேங்க் மட்டுமா அதிசயமா இருக்கு?."ஊர் உலகத்தில் எத்தனையே பேங்க் இருக்கு.அதில் ஒன்னுல லோன் கிடைக்குமென்றார்".

கிரிஜா பாட்டி சொன்னதை கேட்ட ஆது,அடேய் கிரி,தலை வலிக்குது.
மனுஷன் குடிக்கிற போல,இரண்டு இஞ்சி டீ எடுத்துட்டு வா.

அடேய் என பல்லை கடித்தவர்,உள்ளே போய் வேலையாளிடம் இஞ்சி டீ போட்டு வந்து,இருவரிடம் கொடுக்கச்சொன்னார்.

"சிறிது நிமிடத்தில்,வேலையாள் இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்து செல்ல,இருவரும் டீயை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த கிரிஜா பாட்டி, தன் கையில் வைத்திருந்த நியூஸ் பேப்பரை சுருட்டி எடுத்து போய், அங்கிருந்த பேரன்கள் இருவரின் தலையில் பட்டு பட்டென்று அடித்தார்".

அட,கிரிஈஈஈ உனக்கு என்ன கிறுக்கு எதாவது புடிச்சிட்டா என்று ஆது கேட்க,ஆமாடா ஆமாம் என்றார். மனுஷன் குடிக்கிற போலவா உனக்கு டீ கேட்குதென்று சொல்லி,ஆதவன் தலையில் மேலும் இரண்டு அடியை கொடுத்தார் கிரிஜா பாட்டி".

" போன காரியம் சக்சஸ் தான் கிரி, ஆனால் அங்கு நடந்தது வேறென்று, பாட்டியிடம் எல்லாவற்றையும் சொன்னான்".

" ப்பூஊஊஊ இவ்வளவு தானா என்றார்".

" எதேஏஏஏ இவ்வளவு தானானு சொல்லுறியே கிரி,அப்போ இந்த விஷயம் எல்லாம் உனக்கு முன்பே தெரியுமா?".

" ஹா ஹா என்று சிரித்தவர் எனக்கு தெரியாமல் எப்படிடா இருக்கும்".

" ரெண்டு பேரும் மேல்படிப்பு படிக்க கனடா போய்ட்டீங்க,அந்த கேப்பில் இங்கு எவ்வளவோ நடந்து விட்டது".

" இப்போ நம்ம மக்கள் நிம்மதியா இங்கு பிஸ்னஸ் பண்ண,நம்ப ஆனந்தனோட உழைப்பு தான் முக்கியமான காரணம்பா".விரும்பி ஆசப்பட்டு இந்த வேலையில் சேர்ந்த புள்ளை,அடுத்த வாரம் இதோ வெற்றிகரமா முடிக்க போகுதென்றார்".

" அப்போ எல்லா விஷயமும் தெரிஞ்சி கிட்டு நீயும் கம்முனு இருக்கிறியா கிரி என்க,போங்கடா பிஸ்கோத்துங்களா".

என்ன வெங்காயத்துக்கு உங்ககிட்ட எல்லாவற்றையும் சொல்லணும்?,போங்கடா போங்க.போய் பொழப்ப பாருங்கடானு சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றார் கிரிஜா பாட்டி".

பொள்ளாச்சி:

வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.வீட்டிற்கு வந்த ஜனனியும்,தோட்டத்தில் கீற்று மறைவில் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்தவள், உள்ளே போய் வேறு உடையை மாற்றிக்கொண்டு அப்பாவிடம் சொல்லிக்கொண்டு பெரிய வீட்டிற்கு சென்றாள்.

"போகும் மகளை பார்த்துக் கொண்டிருந்த மாரியப்பன்,படித்த புள்ளை,மகன் போல கஷ்டப்படுதேனு கலங்கி போனார்".

"மகனின் வருத்தமான முகத்தை பார்த்துக்கொண்டே வந்த ராக்கம்மா பாட்டி,அய்யா மதியம் சாப்பிட்டியா?.

மருந்தெல்லாம் சாப்பிட்டியா?,ஆச்சுமா என்றவர்,ஆம்பளை நான் குத்து கல்லு போல வீட்டில் இருக்க,நீங்க ரெண்டு பேரும் கஷ்டபடுறீங்கிளேனு கண்கலங்க,அய்யா,எதுக்கு ராசா அழுற.

ஆணுக்கு ஆணா, பொண்ணுக்கு பொண்ணா மவளை பெத்து வச்சிருக்கைய்யா என்க,ஆமாம்மா நல்லவன் ஒருத்தன் கையில் புடிச்சு கொடுத்துட்டா கவலை தீர்ந்துடுமென்று மாரியப்பன் சொல்ல, நேரம் கூடி வந்தால் எல்லாம் நடக்கும் ராசா.

அவளுக்குனு இனி புதுசா பொறக்கவா போறானென்றவர், வீட்டின் உள்ளே சென்று மகனுக்கு வரகாப்பியை போட்டார்.

இரும்பு கேட்டை திறந்து உள்ளே வந்தவளை மேலே இருந்து வெற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

"மாரியப்பன் தான் அந்த வீட்டிற்கு இத்தனை வருடமாக கணக்கு பிள்ளையாக இருந்தார்".

சில நாட்களுக்கு முன்பு,வயல் வேலையை மேற்பார்வை பார்த்துக்கொண்டே வரப்பில் நடந்து வரும் போது,சேறு வழிக்கி கீழே விழ, வலது கையில் மூட்டு நழுவி விட்டதென்று,மாவு கட்டு போட்டிருக்கின்றார்.

"இனி கணக்கு பிள்ளை வேலையை தானே பார்த்துக்கொள்வதாக சத்தியமூர்த்தியிடம் ஜனனி வந்து சொல்ல,சிரித்துக் கொண்டே சரிமா என்று சொல்லிவிட்டார்" .

அதனால்,கடந்த ஒரு மாதமாக,
வரவு செலவு எல்லாம் ஜனனி தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"அவளுக்காக ஒரு அறையை பெரியவர் கொடுக்க,மாலை நேரத்தில் வந்து அனைத்தையும் எழுதி வைப்பது தான் வழக்கமாக ஜனனி செய்யும் வேலை".

கதவை திறந்து உள்ளே வந்தவள், அலமாரியில் இருந்து நோட்டை எடுத்து,இன்று மொத்தமாக எத்தனை பேர் வயலில் வேலை செய்தார்கள் என்றும்,அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்றும்,கணக்கு பண்ணி எழுதி முடிக்க ஜனனிக்கு அரை மணி நேரம் ஆனது.

பின்னர் நோட்டோடு வெளியே வந்தவள்,பெரியவரை தேட, சத்தியமூர்த்தி ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

மாமானு கூப்பிட்டுக்கொண்டே அவரிடம் வந்தவள்,நோட்டை காட்டி சம்பளம் எவ்வளவு என்பதை சொல்லி விட்டு மணியை பார்க்க,மாலை ஐந்து என்று காட்டியது.

ஆறு மணிக்கு மேல் வீட்டிலிருந்து பணம்,உப்பு இவைகளை கொடுப்பது நல்லதல்லனு ராக்கம்மா பாட்டி சொல்லுவார்.

மாமா நான் போய் சம்பளத்தை கொடுக்குறேன் என்றவள், அங்கிருந்து வேகமாக ரூமிற்குள் வந்தவள்,டிராவிலிருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்தவள், தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு,மீண்டும் பூட்டி விட்டு வெளியே வந்தாள்.

அங்கே சிலர் சம்பளத்துக்கு காத்திருக்க,ஆண்களுக்கான பணத்தை ஒருவரிடமும், பெண்களுக்கான பணத்தை இவள் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவள்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாள்.

பெரியம்மா,பெரியம்மா என்ற குரல் வாசலில் கேட்க,யாருத்தா என்று கேட்டபடியே வெளியே வந்த கண்ணம்மா பாட்டி,அங்கிருந்த தனது கூடப்பிறந்தா அக்கா மகளை பார்த்தவர்,என்ன பெத்த ஆத்தா மலரு என்று அதிர்ந்தார்.

நானே தான் பெரியம்மா என்றவர், நல்லா இருக்கியாம்மா?, நல்லாயிருக்கேன் ஆத்தா.

நீ எப்படி இருக்க?.

இன்றைக்கு தான் இந்த பெரியாத்தாளை கண்ணுக்கு தெரிஞ்சிதாத்தா என்றவர்,உள்ளே வாம்மானு கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றவர்,நீ இரு நான் போய் டீ வாங்கிட்டு வரேனென்று சொம்போடு வெளியே சென்றார்.

கால் மணி நேரத்தில் டீ சொம்போடு உள்ளே வந்தவர்,எத்தா மலரு இந்தா டீ குடி என்று சொம்பை கீழே வைத்து விட்டு,உள்ளே போய் டம்ளரோடு வந்தவர்,அங்கிருந்த மண் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.

தனக்கும் பெரியம்மாவிற்கும் டம்ளரில் டீயை ஊற்றியவர், இந்தாம்மா என்று கண்ணம்மா பாட்டியிடம் நீட்ட,இருவரும் டீயை குடித்து முடித்தனர்.

"எம்புட்டு மாசமாவது உன்னை பார்த்து".

மருமவன் பேர புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா?என்று பாட்டி கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா,நீ ஜனனி,அங்க அத்தை வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?.

" என்னத்தை சொல்ல,உன் தங்கச்சி புருஷன் தான் கீழே விழுந்து கையில கட்டு போட்டுருக்குத்தா".

" அவளை ஒருத்தவன் கையில புடிச்சி குடுத்துட்டா,உங்கப்பனும், உன் தங்கச்சி மல்லிகாவும் போன இடத்துக்கே,நான் போய்டுவேனென்று சொல்லி பாட்டி கண் கலங்கினார்".

" அம்மா, நானும் அது சம்பந்தமா தான் உங்ககிட்ட பேச வந்துருக்கேன் என்க, அதை கேட்டவர் என்னத்தா சொல்லுறனு கண்ணம்மா பாட்டி அதிர்ந்து போனார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
இலங்கை- இரத்தினபுரி:

"பேங்க் மேனேஜர் சொன்ன போலவே, ஒரு வாரத்தில் நண்பர்களுக்கு லோன் கிடைத்தது".

" ஆபிஸின் உள்ளே இன்டீரியர் வேலையோ,இரவும்-பகலுமென்று விரைவில் நடந்து முடிந்தது".

" பாட்டி,பாட்டியென்று கூப்பிட்டுக்கொண்டே ருத்ரன் படியிலிறங்கி வந்து பார்க்க,அங்கே கிரிஜா பாட்டி,சிம்ஹன் தாத்தாவிற்கு உணவு பரிமாறிக்கொண்டிருப்பது தெரிந்தது".

"வா வீரா,சாப்பிடலாமென்று சொல்லி, பேரனுக்கும் தட்டை எடுத்து வைத்தார்".

" கையை கழுவிக்கொண்டு வந்து ருத்ரன் உட்கார,பேரனுக்கு உணவை பரிமாறினார்".

"வேகமாக சாப்பிடும் பேரனை பார்த்த சிம்ஹன் தாத்தா, இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமென்க,அதன் பின் ருத்ரன் நிதானமாக சாப்பிட்டு முடித்தான்".

" ம்ம்,என்ன விஷயம் வீராயென்று பாட்டி கேட்க,பாட்டி நீங்கள் சாப்பிட்டு முடிங்க,பிறகு பேசலாமென்றான்".

" நீ சொல்லுப்பா".

ஆபிஸ் ரெடியாகிட்டு,நீங்க ஒரு நல்ல நாளை பார்த்து சொன்னீங்களென்றால்,அன்றைக்கே நம்ப ஷோரூம் ஓப்பன் பண்ணிடலாமென்றான்.

" சரிப்பா என்றவாறே எழுந்து போய் காலண்டரை பார்த்தவர்,நாளை மறுநாள் நல்ல நாளாக இருக்கு வீரா, எதுக்கும் நம்ப சோசியர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்".

" பாட்டி சொன்னதை கேட்டவன், சரிங்க பாட்டி,உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது,நீங்கள் பார்த்து பேசிட்டு சொல்லுங்க".

"இன்னைக்கு ஈவ்னிங்,என்னோட ஃப்ரெண்டோட வீட்டில் பர்த்டே பார்ட்டி இருக்கு.நானும்,ஆதுவும் போறோம்.நைட் சாப்பாடு வேண்டாம் என்று ருத்ரன் சொல்ல,ஓஓ கேர்ள் பிரண்டா வீராவென்று சிம்ஹன் தாத்தா கேட்டார்".

"தாத்தாஆஆஆஆ என்று பல்லை கடித்தவன்,அதுலாம் உங்களோட வேலை.என்னோட வேலை இல்லை".

"டேய் சுண்டைக்கா,நான் ஹீரோ டா".

"என் பின்னாடி எப்பயுமே பெண்கள் சுத்துறது வழக்கம் தானென்று, தனது மீசையை முறுக்கிக்கொண்டே சிம்ஹன் தாத்தா சொல்ல,என்ன நடக்குது இங்கே என்றார் கிரிஜா பாட்டி".

"ம்ம் உன் ஹீரோக்கு,இந்த வயசுல பொண்ணு சோக்கு கேட்குது,நாடி தளர்ந்த வயசுல,கேர்ள் ப்ரண்ட் அதும் எப்போதும் சுத்துறாங்களாமே?.

"என்னதான் நீ புருஷனை கவனிக்கிறியோ தெரியல போ கிரியென்று சொல்லிக்கொண்டே ஆதுவும் அங்கு வர,அட சண்டாள பாவி, ஏண்டா இப்படி அவளிடம் கோர்த்து விடுற? என்றார் சிம்ஹன் தாத்தா".

"டேய்,ஷோருமிற்கு சரக்கு வரும் நேரம் டா.நாம தான் போய் செக் பண்ணி ஷோரூம்ல வச்சுட்டு, ஈவ்னிங் பார்ட்டிக்கு கிளம்பணும். ஞாபகம் இல்லையானு ஆது கேட்க, ஆமாடா.ஞாபகம் இருக்கு".

"பின்ன எதுக்கு இந்த ஓல்டு மேன் கிட்ட பேச்சி?".

"அடப்பாவி,அவள் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டு,உங்களுக்கு பார்ட்டி கேட்குதா என்று சிம்ஹன் தாத்தா பல்லை கடித்தார்".

"சரிடா கிரி...,எதுக்கும் கொஞ்சம் கண்டிச்சி வை,நம்ம ஷோரூமிற்கு வேற வயசு பொண்ணுகளை தான் அப்பாயின்ட் பண்ணியிருக்கு".

"பார்த்துக்கோ என்ற ஆதுவை,அடேய் நாரதா...,என்னடா இதெல்லாமென்று தாத்தா பதற,எங்களுக்கு நேரமாகிட்டு".

"நாங்க கிளம்புறோம் என்று சொல்லிக்கொண்டு,இருவரும் அங்கிருந்து சென்றனர்".

"அட குடி கெடுத்த பயல்களா,இந்த விஜயசாந்தி கிட்ட என்ன கோர்த்து விட்டுட்டு போறானுங்களே என்றவர், கிரிஜா செல்லம்,உன்னை தவிர மாமா யாரையாச்சும் நினைப்பேனாடி சொல்லு?.

"இந்த மனசுல நீ தானே இருக்கிறாய், இது உனக்கு தெரியாதா?.

"கணவரை முறைத்து பார்த்தவர், உங்களை பற்றி எனக்கு தெரியாதா என்ற கிரிஜா பாட்டியோ தனது பல்லை கடித்தார்".

"ஹீஹீஹீ என்று சிரித்தவர்,ரொம்ப புகழாதடி.எனக்கு வெட்கமா வருது".

"யோவ் வீர சிம்ஹன் என்ன கொழுப்பா என்று கிரிஜா பாட்டி கேட்க,ஆமாடி,என் பொண்டாட்டி சமைத்து போடுறாள்.அதை சாப்பிட்டு நான் கொழுப்போடு இருக்கேன் என்றவர்,மனைவியை நோக்கி தனது இரண்டு கையை நீட்டினார்".

"வேகமாக வந்து கணவரின் கைக்குள் கிரிஜா பாட்டி அடைக்கலமாக, இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம்,கண்ணீராய் வெடித்து சிதறியது".

"ஐம்பது வருடங்களாக,இந்த நாளில் உடைந்து அழும் மனைவியை, வழக்கம் போல அமைதியாகவே சிம்ஹன் தாத்தா தேற்றினார்".

மாமா,அவள் உயிரோடு இருப்பாளா?

குழந்தைகள் இருக்குமா?

நம் நினைவுலாம் அவளுக்கு இருக்குமாயென்று,வழக்கம் போல அதே கேள்வியை கேட்டு கிரிஜா பாட்டி அழுதார்.

"கிரிஜா,இந்த உலகத்தில் எதோ ஒரு மூலையில்,அவ இருக்குறான்னு தான் என் மனசுக்கு தோன்றுகிறது".

"நானும் இந்த ஐம்பது வருஷமா, அவளை தேடுவதை கைவிடவில்லை.நேற்று கூட டிடெக்டீவை பார்த்துட்டு தான் வரேம்மா".

" ஏதோ ஒரு போறாத காலம் அவளை நம்மிடமிருந்து,அந்த ஆண்டவன் பிரித்து வைத்திருக்கிறான்".

" நிச்சயமா ஓர் நாள்,அவளை நாம் பார்ப்போமென்று மனைவியை தேற்ற,நான் சாகுறதுக்குள் அந்த நாள் வந்துடனுமென்று சொல்லி கிரிஜா பாட்டி அழுதார்".

" ஏய் ஏண்டி இப்படி பேசுற?,அடிச்சி பல்லை ஒடைச்சிருவேன்.நான் வேறு அடுத்த ஹனிமூன் போகலாமானு பிளான்ல இருக்கேனென்று தாத்தா சொல்ல,என்ன சொன்னீங்க? என்றவர்,இந்த வயசுல என்ன பேச்சென்று கணவரின் தோளில் அடிக்க, ஹாஹாஹா என்று சிம்ஹன் தாத்தா சிரித்தார்".

திருச்சூர்:

"பங்களாவிற்கு முன்பு வந்து ஹாரன் அடிக்க,அங்கிருந்த வாட்ச்மேன் இரும்பு கதவை திறந்ததும்,உள்ளே ஓடி வந்த கார்,அங்கிருக்கும் போர்டிகோவில் போய் நின்றது".

"இரவு விளக்கின் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்த வீட்டை, காரிலிருந்தபடியே பார்த்த ஆர்கலி, இவ்வளவு பெரிய பங்களாவானு திகைத்தாள்".

"காரிலிருந்து மூவரும் கீழே இறங்க,வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது".

கதவு திறக்கும் சத்தம் கேட்ட ஆர்கலி,உள் வாசல் கதவை பார்க்க, கையில் ஆரத்தி தட்டுடன் மங்களகரமான முகத்தோடு வருகின்ற முதிய பெண்மணியை பார்த்து திகைத்தாள்.

அவளுக்கு முன்பு வந்து நின்ற சைலஜா பாட்டி,மூன்று சுற்று சுற்றி ஆரத்தி எடுத்து அவள் நெற்றியில் பொட்டை வைத்து விட்டு,சற்று தள்ளி போய் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு வந்தவர், அம்மு என்று ஆர்கலியை நோக்கி கையை நீட்டினார்.

என்ன நினைத்தாளோ,அந்த முதியவரின் கைக்குள் போய் தஞ்சமாக,தன் மகள் வயிற்று பேத்தியை ஆரத்தழுவியவர்,நல்லா இருக்கியா அம்மு?.

நான் நல்லா இருக்கேன் அம்மாச்சி என்றவள்,நீங்க நல்லா இருக்கீங்களா?.

அதான் நீ வந்துவிட்டாயே இனி நல்லா இருப்பேனென்றவர்,.

"நள்ளிரவுக்கு மேலே வீட்டுக்கு வறீங்கள்.அதுவும் இல்லாமல் புள்ளதாச்சி பொண்ணு இல்லையா, எந்த காத்து கருப்பும் அண்டக்கூடாதுனு தான்னு ஆரத்தி எடுக்கும் போது அவள் திகைத்து நின்றதற்கு, இப்பொழுது பதில் சொன்னார்".

பெரியம்மா,என் மருமவளை இப்படியே வாசல்ல வச்சி பேசியே விடிஞ்சிடும் போலயென்று மைக்கேல் சொல்ல,அட ஆமாடா தம்பி மறந்துட்டேன் பாரென்றவர்,வலது காலை எடுத்து வச்சி உள்ள வாடா அம்மு என்றார்.

"ஓஓ முதல் முதலாக நாம இந்த வீட்டுக்கு வரோமென்று,பாட்டி இப்படி சொல்லுறாங்க போலயென்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஆர்கலி,தனது வலது காலை தூக்கி உள்ளே வைத்து சென்றாள்".

" வீட்டின் உள்ளே வந்த ஆர்கலி, அங்கிருந்த ஹாலை சுற்றி பார்த்து வாவ் என பிரமித்து போனாள்".

"பழங்கால பொருட்களின் அலங்காரத்தில்,அவ்வளவு அழகாக இருந்தது அந்த ஹால்".

" உள்ளே இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்த சுந்தரபாண்டியன், பேச்சு சத்தம் கேட்டு கண்ணை திறந்தவரின் பார்வை கண்ணீரின் காரணமாய் மறைத்தது".

" என்னோட பேத்தி என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்".

" என்னங்க,பேத்தி வந்துருக்காளென்று சொல்லும் போதே,சைலஜா பாட்டியின் கண்கள் கலங்கியது".

" வாம்மா என்றவருக்கு,வரேன் தாத்தா என்றவள்,நல்லா இருக்கீங்களா தாத்தா என சம்பிரதாயமாக கேட்க,இருக்கேன்மா என்றார்".

"பபேசக்கிட்டு இருங்க,இதோ வந்துடுறேனென்று சொல்லிக்கொண்டே கிச்சனிற்குள் சென்ற சைலஜா பாட்டி,சிறிது நேரத்தில் அங்கு வந்தவர், முதலில் இதை குடிங்க என்று ஆளுக்கொரு டம்ளரை எடுத்து கொடுத்தார்".

" அம்மாச்சி எனக்கு எதுவும் வேண்டாமென்று ஆர்கலி சொல்ல,அம்மு இது பாதாம் பால் தாண்டா".

"குடிச்சிட்டு போய் படு.நல்லா தூக்கம் வருமென்றவரின் கனிவான பேச்சை தட்ட முடியாமல்,சரிங்க அம்மாச்சி என்று சொல்லி வாங்கிக் கொண்டவள்,உங்களுக்கு என்று கேட்க,பேத்தியின் கேள்வியால் பாட்டிக்கு உச்சி குளிர்ந்தது".

" இதோ நான் எடுத்துவரேனென்று சொல்லிக்கொண்டே உள்ளே போனவர்,தனக்கும் ஒரு டம்ளரில் எடுத்து வந்தார்".

"ஐவரும் குடித்து முடித்ததும்,நான் இந்த சோபாவிலே படுத்துக் கொள்கிறேனென்று ஆர்கலி சொல்ல,அய்யோ அம்மு ஏண்டா இப்படி?".

" இவ்வளவு பெரிய வீட்டில் உனக்கு படுக்க இடமா பஞ்சமென்றவர், பேத்தியின் கையை பிடித்துக் கொண்டு,வலது பக்கம் இருக்கும் இரண்டாவது அறைக்கு அழைத்துச் சென்றவர்,கதவை திறந்து உள்ளே போய்,இது தான் உன்னோட ரூம்".

" நேரம் ஆகிட்டு,வயிற்று புள்ளைகாரி, இவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருக்கக்கூடாதுமா என்றவர்,நீ படுத்து தூங்கு அம்மு,நான் காலையில் பாக்குறேன் என சொல்லிக்கொண்டு வெளியே சென்றார்".

"எட்டுக்கு பத்து அடி அறையில் இருந்தவளுக்கு,அந்த அறையின் பிரமாண்டத்தை பார்த்து மிரட்சியாக இருந்தது".

" ஆண்டவா, இதுக்கெல்லாம் எனக்கு தகுதி இருக்கா?,எங்கையோ கிடந்தவளுக்கு எதுக்கு இந்த வசதி வாய்ப்புகள்?".

"அப்படி இவங்களுக்கு நான் என்ன செய்துவிட்டேனென்று,இவங்க எல்லாரும் இவ்வளவு பாசத்தை என் மேல பொழியுறாங்களென்று கண் கலங்கினாள்".

"ஒரு முறை அறையை சுற்றி பார்த்தவள்,நாளைக்கு முதல் வேலையாக தோட்டத்து வீட்டிற்கு போய்டணும் என்று முணு முணுத்தவள்,கட்டில் மேலிருந்த தலகாணியையும்,
பெட்சீட்டையும் எடுத்து,தரையில் விரித்து போட்டு அதன் மேல் படுத்தவளுக்கு,எதோ தனக்கான இடத்தில் வந்து சேர்ந்த போல நிம்மதியான உறக்கம் வந்தது".

"தனது அம்மா அப்பாவை பார்த்த வசு, என் பொண்ணுக்கு எந்த உண்மையையும் சொல்லி நான் கூப்பிட்டு வரவில்லை".

அவளுக்கு உண்மையை சொல்ல வேண்டியது இருவரென்று தந்தையை பார்த்து சொல்லிவிட்டு, மாடிப்படியிலேறி தனது அறைக்கு வசுந்தரா சென்று விட,போகும் மகளை பார்த்து,முதியவர்கள் இருவரும் வேதனைப்பட்டனர்.

"பெரியம்மா,சீக்கிரம் எல்லாம் சரியாகுமென்ற மைக்கேல்,அங்கிருந்து தனது கெஸ்ட் ஹவுஸை நோக்கிச் சென்றார்".

"சைலு,பேத்தி அப்படியே உன்னை சின்ன வயதில் பார்த்த போலேவே இருக்கா இல்லையா என்று சுந்தரபாண்டியன் கேட்க,ஆமாங்க என்று சைலஜா பாட்டியும் சொன்னார்".

சரி நேரமாகிட்டு வாம்மா போய் படுக்கலாம் என்று,மனைவியை அழைத்துக் கொண்டு தனது அறையை நோக்கிச் சென்றார் சுந்தரபாண்டியன் தாத்தா.

யாருக்கு நல்ல விடியலோ என்று தெரியவில்லை.ஆனால், சுந்தரபாண்டியன் மாளிகைக்கு மட்டும் அந்த அதிகாலை நேரம் புத்துணர்வோடு,ஆதவன் உதிப்பது போல் தோன்றியது.

"வழக்கம் போல் காலையிலெழுந்து குளித்து முடித்து,தயாரான சைலஜா பாட்டி,பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்".

அப்பொழுது,அங்கு வந்த சுந்தரபாண்டியன்,தனது காதல் மனைவியிடம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைலு என்று சொல்லும் போது,கதவைத் திறந்து வெளியே வந்த ஆர்கலிக்கு,அவர் சொன்னது காதில் விழ,உங்களுக்கும் இன்று பிறந்தநாளா அம்மாச்சினு அதிர்ந்து போனாள்!.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top