Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 501
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
போட்டோவில் இருக்கும் தனது குடும்பத்தார்களையெல்லாம் சொல்லிய வள்ளி,பக்கத்தில் இருந்த வெற்றி- ஜனனியின் நிச்சயதார்த்த போட்டோவை காட்டியவர்,இது ஜனனி.
வெற்றிக்கு நிச்சயம் பண்ணியிருக்கும் பொண்ணு.இந்த வீட்டோட அடுத்த தலைமுறை மருகளென்றவர்,மற்ற அறைகளை சுற்றி காட்டி விட்டு தோட்டத்திற்கு அழைத்து போனவர்,இங்கயிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் உள்ள நிலங்கள் எல்லாம் நம்பளோடது தான்.
இந்த ஜாதி சாக்கடையை எங்க தாத்தா காலத்திலே ஒழிச்சி கட்டிட்டோம்.அண்ணன் வந்த பிறகு எல்லாரும் மனித இனம் என்ற ஒரே எண்ணம் தான்.
உங்க கிட்ட ஒன்னு சொல்லணுமென்க,சொல்லுமா என்றார் சிம்ஹன் தாத்தா.அது வந்துங்க மாமா என தயங்க,அம்மாடி வள்ளி உன் அண்ணனுக்கு நான் மாமனாரென்றால்,உனக்கும் மாமனார் தான் மா. நீ தயங்காமல் மாமா என்றே கூப்பிடலாமென்றார் சுந்தரபாண்டியன் தாத்தா.
ரொம்ப சந்தோஷங்க மாமா என்றவர்.அப்புறம் மாமா, தயவு செய்து என்னோட அண்ணியை இங்கையே விட்டுட்டு போங்க.இது அவங்க வாழ வேண்டிய வீடு. இந்த 17 வருஷமா,ஒரு நாள் கூட அண்ணிக்காக எங்கண்ணன் கோயில்ல பூஜை பண்ணாமல் இல்லை.
அதிர்ந்து ஒரு வார்த்தை எங்க அண்ணன் பேசாது.எது வேண்டுமானாலும் வாயை திறந்து கூட கேட்காது.அது கேட்பது என்று பார்த்தால் டீ மட்டும் தான்.
இத்தனை வருஷத்தில் என்னுடைய அண்ணன் முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்ததில்லை.
இந்த சந்தோஷம் கடைசி வரைக்கும் என் அண்ணனோட இருக்கணுமென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கண்ணீரோடு வள்ளி சொல்ல,அவரின் கையை பிடித்த கிரிஜா பாட்டி கவலை படாதே மா.உன் அண்ணியை உங்க கூடவே வச்சிக்கோ.எங்களுக்கொன்றும் வேண்டாமென்று சிரித்தார்.
கதறி அழும் மனைவியின் கண்ணீரை துடைத்த சத்தியமூர்த்தி,தாரா அப்போ அப்போ என்னும் வார்த்தையை முடிக்க முடியாமல் தடுமாற,ம்ம் சக்தி.
எக்ஸாம் முடித்து நான் கோயம்புத்தூருக்கு போகலை.உங்களுக்கு தான் தெரியுமே,எனக்கு கலெக்டர் ஆவது தான் பெரிய கனவென்று.
நான் கெஸ்ட்ஹவுஸிலே தங்கி படிச்சிட்டு இருந்தேன்.மூன்று மாதம் கடந்து போயிடுச்சி.
நமக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டையும் உன்னை பற்றி விசாரிக்க,யாருக்குமே உன்னை பற்றி சின்ன விஷயம் கூட தெரியவில்லை.
அப்போ தான் தேவ்ராஜ்- பிரியா இருவருக்கும்,வடபழனியில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிருந்தாங்கள்.
பிரியா படித்து முடித்ததால்,இனியும் தன்னை வளர்த்த மாமா வீட்டிற்கு பாரமாக இருக்க வேண்டாமென்று வேலைக்கு போக,அது தேவ்ராஜ்கு தெரிஞ்சி,உடனே இந்த முடிவு எடுத்துட்டான்.
அந்த கல்யாணத்திற்கு போய்ட்டு வரும் போது தான் எனக்கு தலை சுற்றுவது போலவும்,வாமிட் வரும் பீலிங்காவே இருந்தது.
கல்யாணத்திற்காக அதிகாலையிலே எழுந்து கிளம்பி போனதால் தான்,இப்படி இருக்கென்று நான் நினைத்தேன்.
வீட்டுக்கு வந்தால் வாமிட்.
சரி உணவு தான் ஏதோ சேரலைனு இருக்க,மறுநாளும் அதோ போல வாமிட் வந்ததும்,உடனே நான் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு போனேன்.
அங்கு போய் டாக்டர்கிட்ட விஷயத்தை சொல்ல,டெஸ்ட் எடுக்க எழுதி கொடுத்தாங்க.எதுக்கு டாக்டர் டெஸ்டென்று நான் கேட்க,கன்பார்ம் பண்ணதான் என்றாங்கள்.
அவங்கள் என்ன சொல்லுறாங்களென்று எனக்கு புரியலை.பட் டெஸ்ட் கொடுத்து முடிச்சிட்டு,பதினைந்து நிமிடம் வெய்ட் பண்ணிட்டு இருக்குப் போது,வசுந்தரா உங்களுடைய ரிப்போர்ட் ரெடினு கூப்பிட்டாங்கள்.
நானும் போய் வாங்கினேன்.ஆனால் பிரித்து பார்க்கவில்லை.பிறகு உள்ள போய் டாக்டர் கிட்ட கொடுக்க அவங்க படிச்சு பார்த்துட்டு மிஸஸ்னு கேட்க, மிஸஸ் வசுந்தரா சத்தியமூர்த்தியென்று சொன்னேன்.
கங்கிராட்ஸ் மா நீங்க கன்சிவா இருக்கீங்கன்னு சொன்னாங்க.என்னாஆ என்று எனக்கு அதிர்ச்சியாயிடுச்சு.
டாக்டர் நீங்க என்ன சொல்றீங்கன்னு? கேட்க,ஆமாமா.
நீங்க 3 மந்த் கன்சீவா இருக்கீங்களென்று சொல்ல,எனக்கு சந்தோசப்படுவதாக இல்லை அழுவதானே தெரியவில்லை சத்தி.
எப்படி இதை அப்பா அம்மா கிட்ட சொல்றதுன்னு எனக்கு பயம்.ஒரு பக்கம் உன்னை பற்றி எதுவும் தெரியலை.குழந்தையை கலைக்கவும் எனக்கு மனசு வரவில்லை.
எப்படியாவது உன்னை கண்டுபிடிச்சிடலாம்.நீ வந்திடுவாயென்று நம்பிக்கையோடு மேலும் இரண்டு மாதம்,நம்ப நண்பர்களை விட்டு உன்னை திருச்சியில் தேட சொன்னேன்.
அப்படியே நாட்கள் போக,வயிறும் கொஞ்சம் பெருசா ஆயிடுச்சு.நம்ம வீட்டுல சமையல் செய்தவங்க,என் மேல் டவுட் வந்து,அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிட்டாங்க.
அந்த நேரம்,அம்மா சிலரோடு புனித யாத்திரைக்கு போயிருக்க,அப்பாவும் கேள்விப்பட்ட உடனே கிளம்பி அங்க வந்துட்டாரு.
மறுநாள் காலையில் நான் தூங்கி எந்திரிச்சு வரும்போது பார்த்தேன்,அப்பா கால் மேல கால் போட்டு,ஹால்ல இருந்த சோபாவில் உட்கார்ந்திருக்கிறார்.
அவரை பார்த்ததும் கை காலெல்லாம் எனக்கு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.இங்க வந்து உட்காரு வசுனு சொன்னாங்க.
நானும் கையை பிசைந்து கொண்டு, அவருடைய பக்கத்தில் இருந்த சோபாவிலா போய் உட்க்கார,பையன் யாரு?.அவனுடைய டீட்டைல்ஸ் சொல்லுனு கேட்டாங்க.
அவரோட அந்த அமைதியான நடவடிக்கை எனக்கு பயத்தை கொடுத்துடுச்சி.அப்பா இந்த குழந்தையை மட்டும் என்னால கலைக்க முடியாது.
அப்படி ஏதாச்சும் உங்க மனசுல எண்ணம் இருந்தாக்க நிச்சயமாக நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதை நான் அப்பாகிட்ட உறுதியா சொல்லிட்டேன்.
நீ என்ன பேசுறனு புரிஞ்சி தான் பேசுறியா வசு?.
எல்லாருக்கும் தெரிஞ்சால் என்ன நினைப்பாங்க?.நான் ஒரு கௌரவமான போலிஸ்.என் மகள் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்துருக்கியே உன்னை என்ன செய்யலாம் சொல்லு?.
அதுவும் இல்லாமல் குழந்தை உண்டாகி நான்கு மாதங்களுக்கு மேலானதால் அபார்ட் பண்ணினால்,இருவர் உயிருக்கும் ஆபத்தென்பதையும் வசு சொல்ல, சுந்தரபாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
விஷயம் வெளியே தெரியிரதுக்கு முன்னால் அவன் கூடவே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேனென்றார்.
உன் பேரு சத்யமூர்த்தி அப்பா பேரு சந்திரன் திருச்சியில் பாலக்கரை.இது தவிர,எனக்கு எதுவுமே தெரியாதென்று சொன்னேன்.
அப்பாவும் முடிஞ்ச அளவுக்கு விசாரிக்க, உன்னை பற்றி எதுவும் தெரியவில்லை.மாதமும் ஓடியது.
சதூர்வேதமங்கலம்:
மனைவியின் கேள்வியில் அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தவன்,நிஜமாகவே என்னை பற்றி உனக்கு தெரியாதாடி? என பாவமாக கேட்டான்.
யோவ் நீ என்ன லூசா?இல்லை செவிடா?.அதை தானே இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன் என்றாள் ஆர்கலி.
ஓ...நான் சொல்வதை விட உன் புருஷன் யாரு என்பதை,நீயே பார்த்து தெரிந்து கொள்ளுடியென்று மனதிற்குள் சொல்லியவன்,பின்னர் திரும்பி நேராக உட்கார்ந்து சீட்டில் சாய்ந்து கண்ணை மூடினான்.
கண்ணை மூடியிருந்தாலும்,ருத்ரனின் அகக்கண்கள் விழித்துக் கொண்டிருந்தது.இன்னும் இரண்டு நாட்கள் கோவில் விஷயத்தில் போய்விடும்.
அதன் பின்னர் என்ன பண்ணுவது என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்க,ஆர்கலியின் தலை அவனின் மேல் சாய்வதை உணர்ந்து கண்களை திறக்க,அவளோ நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
எட்டி ஜன்னல் கதவை சாத்தியவன்,சிறிது இடைவெளி மற்றும் விட்டு விட்டு,தனது வலது கையை தூக்கி சீட்டின் மேல் வைக்க,அவளோ இன்னும் வசதியாக அவனோடு ஒட்டிக் கொண்டாள்.
இவளுக்கு விழிப்பு வருவதற்குள் இந்த தருணத்தை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றவாறு,தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன்,விதவிதமாக புகைப்படம் எடுத்து தள்ளினான்.
மெல்லிசை பாடல்கள் ஒலிக்க, தன் மனங்கவர்ந்தவளின் அருகாமையும் ருத்ரனுக்கு காதலையும் ஆண்மகனாய் அவஸ்தையையும் வாரி வழங்க,படுபாவி இப்படி கொல்லுறாளே என்று ஆர்கலியின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளி முத்த மிட்டவனும்,கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.
நன்கு உறக்கத்தில் இருந்த ஆர்கலிக்கு எதிரில் வந்த பஸ் ஹாரன் சத்தத்தில் விழிப்பு வர,கண்ணை திறந்தவள்,தன் தோளின் மேல் உள்ள ருத்ரனின் கையை பார்த்தவள் முறைத்தபடி அவனை பார்க்க, அப்பொழுது தான் அவன் வலது கையின் மேல் தான் சாய்ந்து தூங்கி வந்தது புரிய,அய்யோஓஓ என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
சிறிது நிமிடம் சென்று ஓரக்கண்ணால் ருத்ரனை பார்க்க,அவன் நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.
ஹப்பாடா நல்ல வேளைடி ஆர்கலி இந்த மனுஷன் தூங்கிட்டு இருக்கிறார்.
நாம மட்டும் இந்த மனுஷன் மேல் சாய்ந்து தூங்கிட்டு வந்தது தெரிந்தது,இதுக்கும் ஒரு டீல் பேசுவான் கிராதகனென்று முணு முணுத்தவளுக்கு ரெஸ்ட் ரூம் போகணும் போல இருந்தது. அவளின் அசைவில் ருத்ரனுக்கு விழுப்பு வர,என்னாச்சிடி என்று பதறி கேட்க...
எதுக்கு இப்படி கத்துற?,எல்லாரும் தூங்கிட்டு தானே இருக்காங்களென்று சொல்லி ஆர்கலி முறைக்க,அண்ணா வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்துங்களென்றான்.
சொல்லிருக்கேன் மாப்ளையென்று சங்கர் அங்கிருந்து குரல் கொடுத்தார்.
சிறிது நிமிடத்தில் ரோட்டோரமாய் இருந்த கஃபேவின் பார்க்கிங்கில் போய் டிராவலர் நிற்க,தூக்கத்தில் இருந்தவங்களும் எழுந்தனர்.
கீழ இறங்கியவர்களில் ரெஸ்ட் ரூம் போக வேண்டியவர்கள் எல்லாம் போயிட்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் அவர்களுக்கு தேவையானதை வாங்கி சூடாக குடித்து விட்டு அங்கிருந்து கிளம்ப அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமானது.
இந்த முறை ருத்ரன் சங்கரின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள,அவன் வருவான் என்று காத்திருந்த ஆர்கலி,ருத்ரன் அங்கே உட்கார்ந்து விட்டதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
ருத்ரன் நினைத்ததோ சரி இரண்டு சீட்டாக இருந்தால்,தன்னவள் கால்களை கொஞ்சம் நீட்டி மடக்க வசதியாக இருக்கும் என்று எண்ணத்தில் தான் அவன்,முன்பக்கம் போய் உட்கார்ந்தது.
அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நம்ம போய் ரீச் ஆக என்று கேட்க,தம்பி இன்னொரு அரை மணி நேரத்தில் பாம்பன் பாலம் போயிடலாம்.அங்கு கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்துறேன்.
நீங்கலாம் பாத்துட்டு வந்ததும் நாம கிளம்பிட வேண்டியது தான்.பாம்பன்ல இருந்து உள்ளார கோயில் இருக்கும் இடத்துக்கு போக,எப்படியும் 20 ல இருந்து 30 நிமிஷம் ஆகும்.
டிராபிக் இந்த நேரத்தில் அவ்வளவாக இருக்காது தம்பி.அதனால்,குறிப்பிட்ட நேரத்துக்கு நாம உள்ளே போய்டலாம் என்றார்.