• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
சதூர்வேதமங்கலம்:

பாதாம் பாலோடு ஆர்கலியும் எதிரில் உள்ள சேரில் வந்து உட்கார, மனைவியை ரசித்துக் கொண்டே பாட்டியிடம் ருத்ரனும் பேசிக் கொண்டிருந்தான்.

சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்தவள்,இருவரும் பேச்சில் தீவிரமாக இருப்பதை பார்த்து,இவன் என்ன என்னோட பாட்டிக்கூட இவ்வளவு இயல்பா பேசுறான்.

அதானே பேச்சிலே மயக்கும் வித்தை தெரிஞ்சவன்.அப்போ பாட்டியும் பேரான்டினு இவனோட அன்பு வார்த்தையில் மயங்கிட்டாங்க.

நெவர்...!!

இவனை என் பாட்டி கூட பேச விடக்கூடாது என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,பாட்டி என்று இருவரின் பேச்சில் குறுக்கிட்டாள்.

சொல்லுடா ஆரா கண்ணு என்க,நைட் டிபன் என்ன சமைக்கவென்று கேட்டாள்.

அதுவா கண்ணு,ருத்ராக்கு புட்டும் கடலைகறியும் வேண்டுமாம் டா. கடலைஊற வச்சிட்டேன்,அது கூட தோசையும்,நேற்று அரைச்ச பூண்டு பொடி இருக்கு,அதையும் சாப்பிட்டுக்கலாம் என்றார்.

ஓஓஓ இந்த குரங்குக்கு புட்டு கேட்குதோ என தனக்குள் ஆர்கலி சொல்ல,உன் பொண்டாட்டி சமையல்ல டாப்பு ருத்ரா.

சும்மா கிள்ளி போட்டு ரசம் வைப்பா, தேவாமிர்தமா இருக்கும்.ருசியா சமைக்கும் பொண்டாட்டி கிடைக்க, நீ கொடுத்து வச்சிருக்க ருத்ரா என்று பாட்டி சொல்ல,வாவ்...

அப்போ இன்னைக்கு என் பொண்டாட்டி கை பக்குவத்தில் கடலை கறியும் புட்டும் வெளுத்து வாங்கலாம்.

ஹேய் சூப்பர் சூப்பர் இதுக்காகவே அவ கைக்கு இன்னொரு ஜோடி தங்கவளையலை வாங்கி போடலாமே என்று ருத்ரன் சொல்ல,ஆர்கலியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை.

அடக்கடவுளே இன்னைக்கு நாம தான் இவனுக்கு சமைச்சு கொடுக்கணுமா??
இப்படி நம்மை பாட்டி கோர்த்து விட்டுட்டாங்களே?

இது சாப்பாடு விஷயம். எந்த தில்லுமுல்லும் பண்ண முடியாது.சரி வேற வாய்ப்பு கிடைக்கும் அப்போ இவனை பழி வாங்கிடலாமென்று தனக்குள் சொல்லியபடியே தோட்டத்திற்கு சென்று,அங்கிருந்து மல்லிகை செடியில் இருந்த பூக்களை பறித்து உள்ளே எடுத்துட்டு வந்தவள், ப்ரிஜ் மேலிருந்த நூல் கண்டை எடுத்துக்கொண்டு,திண்ணையில் போய் உட்கார்ந்து பூவை கட்ட ஆரம்பித்தாள்.

சிறிது நிமிடம் சென்று கருப்பாயி அங்கு வர,என்ன அண்ணி இன்றைக்கு ரொம்ப பிசியா?காலைல இருந்து ஆளையே காணோமே? என்றாள் ஆர்கலி.

ஆமா ஆராமா. அம்மா வீடு வரைக்கும் போயிருந்தேன்.அங்க ஊர்ல இருந்து சிலர் பஸ் ஏற்பாடு பண்ணி ராமேஸ்வரம்,வேளாங்கண்ணினு கோயிலுக்கு போறாங்கலாம்.

அம்மாவும் பசங்களை கூப்பிட்டு போறாங்க.கை செலவுக்கு உங்கண்ணன் பணம் கொடுத்தாறு.

அதான் கொண்டு போய் குடுத்துட்டு,ராவுக்கும்,நாளை காலைக்கும் சாப்பிடுற போல, மூவருக்கும் சாப்பாடு கட்டி குடுத்துட்டு வந்தேன்மா என்றார்.

ஓஓஓ அப்படிங்களாணி, சரி சரி என்றவள், நாமளும் போயிருக்காலாமில்லை என்க,எது இந்த வயித்தோட அந்த கூட்டத்தில் நீ போகணுமா?.

பிரசவம் நல்ல படியாக முடியட்டும் ஆராமா.என் மருமக்களோட இந்த உலகத்தையே சுத்தி வந்துடலாமென்று கருப்பாயி சொல்ல,அதைக்கேட்டவளின் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது.

ஆமாணி, பின்ன அதை விட வேறு வேலையென்று சொன்னாலும், ஆர்கலியின் மனமோ,அவன் தான் ஒரு வருஷம் ஆன பிறகு குழந்தையை வாங்கிட்டு என்னை துரத்தி விட்டுறுவானே அண்ணி, பிறகு நான் இங்கு தான் வரணும்.

உங்க கூடயே கடைசி காலத்தை ஓட்டிருவேனென்று நினைத்தாள்.

இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவாறு ருத்ரனும் பாட்டியும் வெளியே வந்தவர்கள்,அங்கிருந்த மற்றொரு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு,அப்படி எங்க போறதுக்கு ரெண்டு பேரும் பிளான் போடுறீங்கக்கா?என்றான்.

அவனிடமும் விஷயத்தை சொல்ல, இவ்வளவு தானா?,போய்ட்டா போச்சு என்றவன்,அப்போ நைட் நாமளும் கிளம்பலாமா?என்க...

ஆர்கலியோ இது என்ன விளையாட்டு என்று கேட்டு முறைத்தாள்.

ஏய் பார்பி டால் நான் நிஜமாகத்தான் கேட்குறேன்டி என்க,அப்படியா என்று சந்தோஷமாக கேட்டவள்,பின்னர் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.

பாட்டி, அக்கா,நீங்க சொல்லுங்க?, நாம கோயிலுக்கு போகலாமா இல்லை வேண்டாமா என்று கேட்டான்.

இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆர்கலியை பார்க்க, அவளை ஏன் பாக்குறீங்க?.

கேள்வி கேட்டது நான் தானே?,அப்போ எனக்கு தான் பதில் சொல்லணுமென்றான் ருத்ரன்.

அதற்கு பாட்டியோ,கோயிலுக்கு போக யார் கண்ணு வேண்டாமென்று சொல்லுவாங்க?.

உன் கை இப்படி இருக்கு?,ஆரா கண்ணுக்கு இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு பிரசவத்துக்கு,அதான் கண்ணு யோசனையென்றார்.

பொள்ளாச்சி:

தம்பி உங்ககிட்ட ஒன்று கேட்கணும்? என்று சைலஜா பாட்டி சொல்ல கேளுங்கம்மா?.உங்களுக்கு என்ன தெரியணும் என்றார் சத்தியமூர்த்தி.

மருமகன் அம்மா என்று சொன்னதிலேயே,சைலஜா பாட்டியின் மனசு குளிர்ந்து விட்டது.

இல்லை,வசுவை பார்க்க வந்தேன்னு பெரியவங்க எல்லாம் சொல்லிட்டு போனாங்களே.அவங்க எல்லாருக்கும் உங்க கல்யாணம் பற்றி தெரியுமா? என்று கேட்டார்.

ஊர்ல இருக்க பெரியவங்க எல்லாருக்கும் தெரியும்மா.நீ,நான்னு பொண்ணு குடுக்குறேன்று தாத்தா கிட்ட வந்து எல்லாரும் கேட்க ஆரம்பிச்ச உடனே,எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு நானே சொல்லிட்டேன்.

தாத்தாவும் வசந்தராவோட போட்டோவ காமிச்சி,ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.சின்ன குடும்ப பிரச்சினை.அதான் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்கன்னு சொல்லிட்டாங்கம்மா என்றவாறு தங்கையிடம் திரும்பிய சத்தியமூர்த்தி,வள்ளி எல்லாருக்கும் மதிய சாப்பாடு என்க...

அண்ணா உனக்கு போன் பண்ணும் போதே,சமைக்கிறதுக்காக கண்ணகி அக்காவையும்,நீலாவையும் வர சொல்லிட்டேன்ணா.

தாரா உன் கிட்ட கொஞ்சம் பேசணுமென்று சத்தியமூர்த்தி சொல்ல,மற்றவர்களை வாங்க வீட்டை சுற்றி பார்க்கலாமென்று வள்ளி கூப்பிட்டு போனார்.

இப்பொழுது அந்த ஹாலில் வசுவும் சத்தியமூர்த்தி மட்டும் தான் எதிரெதிரில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தனர்.சிறிது நிமிடம் வரைக்கும் இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.

வசுவே பேச்சை ஆரம்பித்தார்..உனக்கு என்ன நடந்தது என்று நான் சொல்லணும்,அவ்வளவுதானே நான் சொல்றேன்.

ஆனா இதை யாராச்சும் காதுல வாங்குனாக்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்று சொல்லும் போது வசுந்தராவின் முகத்தில் வெட்கம் வந்தது.

அதை பார்த்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு கடவுளே,ஏதோ ஏடாகூடமாக பண்ணி இருக்கோம் போலையே என்று முணு முணுத்தவர், சரி வா நம்ப ரூமுக்கு போகலாம் என்று அழைத்துப் போனார்.

பின்னர் அங்கிருந்து கதவை தாழிட்டு விட்டு உள்பிரகமாக இருந்த கதவை திறந்து உள்ளே போக,பின்னாடியே வந்த வசு அங்கு ஆளுயரத்தில் இருக்கும் தனது போட்டோவை பார்த்து விழி விரித்து அதிர்ந்து போய் நின்றார்!!.

மனைவியின் அதிர்ந்த முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே,அவர் பின்புறம் வந்து நின்ற சத்தியமூர்த்தி, வசுந்தராவின் தோளோடு அணைத்துக் கொண்டு எப்படி இருக்கு தாரா? என்க,லவ் யூ சத்தி என்று அவர் தோளின் மேல் தலை சாய்த்து கொண்டு சொல்ல,லவ் யூ டூ தாரா என்றார்.

சிறிது நிமிடம் வரை இருவரும் அந்த நிலையை ரசித்தவர்கள்,சரி வா வா. நடந்ததை சொல்லு தாராயென்றபடி அங்கிருந்து சோபாவில்,இருவரும் அருகருகே இணைந்து உட்கார்ந்து கொண்டதும்,வசந்தராவும் சொல்ல தொடங்கினார்.

பிளாஷ்பேக்...

மெட்ராஸ் யுனிவர்சிட்டி...

எல்லாரும் வந்தாச்சா என்று ப்ரொபோசர் தீனதயாளன் மீண்டும் ஒருமுறை கேட்க,அங்கிருந்த பிரியா, சார் வசுந்தரா மட்டும் இன்னும் வரவில்லை என்று சொன்னாள்.

"என்னமா சொல்லுற?

இப்போ கிளம்பினால் தான் டிரைனை பிடிக்க சரியாக இருக்கும்.இல்லை இந்த டூர் கேன்சலென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

மாணவர்களோ மனதிற்குள் வசுவை திட்டிக்கொண்டிருக்க,சிறிது நிமிடத்தில் வசுவும் அரக்க பரக்க ஓடி வந்து சேர்ந்தாள். ஏம்மா வசுந்தரா கொஞ்சம் முன்னாடியே வருவதில்லையா என்று கேட்க,சாரி சார் என்றாள்.

இந்த சாரி ஒன்றை கத்து வச்சிக்கீங்க எல்லாருமே.சரி சரி சீக்கிரம் போய் பஸ்ல ஏறுங்க.ட்ரெயினுக்கு இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு.

ஹெச்ஓடி வேற சத்தம் போட்டுட்டு இருக்காங்க என்றவர்,அப்பனே விநாயகா எல்லாரும் நல்லபடியாக போய்ட்டு வரணும்.

அதற்கு உன் கருணை வேண்டுமென்று சொன்னவர், அங்கிருந்த மற்ற பேராசிரியர்களிடம் சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏற, பஸ்ஸூம் சென்னை சென்ரல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றது.

பாருங்க எல்லாரும் கவனமா இருங்க. எங்க போனாலும் ரெண்டு,இல்லை மூணு பேராக போங்க. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கவனிச்சிக்குங்க.ட்ரெயின்ல உங்களுக்கு ஏதாவது அன்னீசியாக இருந்துச்சுன்னா பக்கத்துல இருக்குறவங்கள எழுப்பி சொல்லணும் சரியா.

நமக்கு s4,s5கோச்.இந்த காலேஜ் லைப்ல இது உங்க எல்லாருக்கும் கடைசி வருஷம்.ஒவ்வொரு முறையும் இந்த மூன்றாவது வருஷம் மாணவர்கள் கூட டூர் போகும் போது,எனக்கும் புது அனுபவமா தான் இருக்கும்.

முதல் முறை போகும் போது எனக்கு கஷ்டமா இருந்துச்சு,இன்னும் ரெண்டு மாசத்தில் இவர்களை பிரிய போறோமேயென்று.பிறகு இந்த 20 வருஷ அனுபவத்தில் பழகிடுச்சு.

நல்ல என்ஜாய் பண்ணுங்க.எந்த பிரச்சினையா இருந்தாலும் உடனே சொல்லணும் என்று மீண்டும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தீனதயாளன் சொல்ல,மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து எஸ் சார் என்றனர்.

சிறிது நிமிடத்தில் ஸ்டேசனுக்கு வந்து சேர,அங்கே இவர்களுக்காக காத்திருந்தனர்,இவர்களோடு டூருக்கு வரும் பேராசிரியர் கவிதா, பவானி மற்றும் விஜயன்.

பின்னர் அவர்களுக்கான டிரைன் வந்ததும் ஏறி உள்ளே போய் அவர்களுக்கான சீட்டில் உட்கார்ந்தனர்.

வசுந்தரா, பிரியா, தேவ்ராஜ், பாபு, சத்தியமூர்த்தி, வசந்த் இவர்களுக்கு எதிரெதிராக பர்த் கிடைக்க, நண்பர்களுக்கு வசதியாக போனது.

சத்யா இதுதான் நல்ல வாய்ப்பு.இந்த முறையாவது வசு கிட்ட உன் காதலை சொல்லுடாயென்று நண்பனிடம் தேவ்ராஜ் சொல்ல, கண்டிப்பாக என்றான்.

"தயவு செய்து சொல்லித் தொலைடா மச்சான்".

கடந்த மூன்று வருடமாக இப்படித்தான் உயிரை வாங்கிட்டு இருக்குற.இப்படி தூரத்தில் இருந்து நீனும்,அவளும் பார்த்துக்கொண்டே இருந்தால் என்னடா அர்த்தம்?

இன்னும் ரெண்டு மாசத்துல நம்ப காலேஜ் லைப் முடிஞ்சிடும் சொல்லிட்டேனென்றவன்,தன் காதலியான பிரியாவோடு கண்ணால் பேச ஆரம்பித்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
டேய் எல்லாரும் இங்கதான் இருக்கிறோம் என்று பாபு சொல்ல,உங்களை யாருடா எங்களை பார்க்க சொன்னா?

லவ்வர்ஸை தொந்தரவு பண்றதே இந்த பேய்ங்களுக்கு வேலை என்ற தேவராஜ்,பிரியா நீ மேலே வா செல்லம்.
இங்கே டிஸ்டர்பன்ஸ் தாங்க முடியவில்லை என்றான்.
நண்பர்கள் அரட்டையோடு நேரம் போக இரவும் வந்தது.அனைவருக்கும் உணவு பார்சலை கவிதா மேம் கொடுக்க, பேசிக்கொண்டே சாப்பிட முடித்தவர்கள்,அவரவருக்கான பர்தில் படுத்து விட்டனர்.

நள்ளிரவு இருக்கும் போது,வசுக்கு ரெஸ்ட் ரூம் போகணும் போல இருக்க,அவளுக்கு மிடில் பர்தில் சீட். பொறுமையாக கீழே இறங்கியவள், லோவர் பர்தில் தூங்கும் பிரியாவை எழுப்ப போக,அந்த நேரம் தீனதயாளன் சார் அங்கு வந்தார்.

என்னாச்சிமா வசு என்றவர்,பின்னர் இதோ பவானியை வர சொல்லுறேன் இரு மா என்று சொல்லி செல்ல,சில நொடியில் பவானி மேமும் அங்கு வந்தார்.

வா வசுயென்று ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து போனவர்,நீ போய்ட்டு வா.நான் வெளியே தான் நிற்கிறேனென்க,ம்ம் மேடம் என்றவாறு கதவை திறந்து உள்ளே போனவள் சில நிமிடத்தில் வெளியே வந்தாள்.

பின்னர் அவரும் தனது பர்திற்கு சென்று விட,வசு மேலே ஏறி படுக்க போகும் போது எதிர் பர்தில் படுத்திருந்த சத்தியமூர்த்திக்கு ஏதோ ஒரு உணர்வு வந்து எழுந்தவன் வசுவை பார்த்தான். வசுவும் அவனை பார்த்தாள்.

கண்களாலே இருவரும் பேசிக் கொண்டனர்.கடந்து மூன்று வருடமாக இருவரும்,ஒருவரை ஒருவர் உயிருக்குயிறாய் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். காதலை வாயைத் திறந்து சொல்லவில்லையே தவிர, பார்வையாலேயே தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை சென்ரலில் இருந்து புறப்பட்ட பாண்டிச்சேரி நியூடெல்லி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 35 மணி நேரமாய் தனது நீண்ட பயணத்தை முடித்து,நள்ளிரவு 12.10 க்கு டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

பசங்களா பார்த்து வாங்களென்று பவானி மேம் சொல்லிக்கொண்டே முன்னே இறங்க,மாணவர்களும் தங்கள் லக்கேஜோடு கீழே இறங்க,பின்னர் அங்கிருந்து அனைவரும் வெளியே வர, இவர்களுக்காய் பஸ்ஸூம் காத்துக் கொண்டிருந்தது.

இரண்டு பஸ்ஸில் எல்லாரும் ஏறிவிட்டார்களாயென்று வசந்த் சார் செக் பண்ணி விட்டு போகலாமென்க...

சில நிமிட பயணத்தில் அந்த காட்டேஜின் பார்க்கிங்கிள் போய் பஸ் நிற்க,கீழே இறங்கியவர்கள்,அவர்களுக்கான காட்டேஜிற்கு சென்று படுத்து விட்டனர்.

காலை உணவுக்கான நேரம் தாண்டி தான் மாணவர்களும் எழுந்தனர். அவர்களுக்காக மதிய சாப்பாடும் அங்கையே தயாராகியது.

இன்று ரெஸ்ட் எடுத்து விட்டு மறுநாளிலிருந்து சுற்றி பார்க்கலாமென்று முன்பே முடிவு செய்திருந்தனர்.

அதைப்போல,லிஸ்டில் உள்ள டூரிஸ்ட் பிளேஸ்ங்களை மூன்று நாளில் சுற்றி பார்த்தவர்கள்,கடைசியாக குலுமணாலி சென்றனர்.

முதல் நாள் ஓரளவிற்கு சுற்றி பார்த்து வந்தனர்.மறுநாளும் விடிந்து, அனைவரும் தயாராக,வசுக்கு லேசாக காய்ச்சல் அடித்தது.

அவளுக்கு துணையாக பிரியா இருப்பதாக சொல்ல,இருவருக்கும் துணையாக சத்தியமூர்த்தியும், தேவ்ராஜூம் கூட இருப்பதாக சொல்லினர்.

இவர்களின் நடத்தையை பற்றி தெரிந்ததால் தீனதயாளன் சாரும் எதுவும் மறுப்பு சொல்லாமல் பார்த்துங்குங்களென்று சொல்லி சென்று விட்டார்.

சிறிது நிமிடம் சென்றிருக்க டேய் தாராவை நான் பார்த்துக்குறேன்.நீ பிரியா கூட பக்கத்தில் இருப்பதை சுற்றி பார்த்திட்டு வாடா என்று அனுப்பி வைத்தவன்,வசு தூங்குவதை பார்த்து விட்டு,ரூம் கதவை பூட்டி,வெளியே வந்து டீ கடையை எங்கையாவது இருக்கா என தேட,சில அடி தூரம் தள்ளி டீ ஷாப் இருப்பது தெரிந்தது.

அங்கே போன சத்தியமூர்த்தி இரண்டு டீ வேண்டுமென்றும்,அதை பிளாஸ்கில் தருமாறு கேட்டான்.

காட்டேஜிற்கு வந்துருக்கும் கல்லூரி மாணவரென்று தெரிந்ததால்,அவரும் சிறு பிளாஸ்கில் டீயை ஊற்றி கொடுத்தார்.

பிளாஸ்குடன் வெளியே வரும் போது எதிரில் வந்தவருடன் தெரியாமல் மோத,கையில் இந்த பிளாஸ்க் கீழே விழுந்தது.அதேப்போல் அவரிடம் இருந்த டீ பிளாஸ்கும் கீழே விழ,சாரி என்று சொல்லிவிட்டு கீழே விழுந்ததை ஆளுக்கொன்று எடுத்துச் சென்றனர்.

கதவை திறந்து உள்ளே வந்து சத்தியமூர்த்தி,கிளாஸில் டீயை ஊற்றி,அவளை எழுப்பியவன்,தாரா இதை குடி என்று சொல்லி விட்டு அவனும் ஒரு கிளாஸில் டீயை ஊற்றிக்கொண்டான்.

இருவரும் குடித்தது மட்டும் தான் தெரியும்.அடுத்தது என்ன நடந்தது என்று தெரியவில்லை.சில மணி நேரம் சென்று கண் விழித்த வசுந்தரா,தன் மேல் எதோ பாரமாக இருப்பதை உணர்ந்து,ரஜாயை விலக்கி பார்க்க,சத்தியமூர்த்தி அணைத்து படுத்திருப்பதும், இருவரின் கோலம் தெரிந்து அய்யோ என அதிர்ந்து போனாள்.

சத்தி சத்தி என்ற அழுது கொண்டே தட்டி எழுப்ப,கண் விழித்தவன் தனது அருகில் இருந்த வசுவை பார்த்து தாரா,நீ எப்படி இங்கு என்று அதிர்ந்தார்.

வசுக்கு அழகை தாங்க முடியவில்லை. கதறி அழுதாள்.கண்ணை மூடி திறந்த சத்தியமூர்த்தி,எழுந்து போய் குளித்து வேறு உடை மாற்றியவர்,இதோ வந்துடுறேன்.

நீ குளிச்சிட்டு ப்ரஷ் ஆகியிரு என்று சென்றவன்,அரை மணி நேரம் கழித்து ரூமிற்கு வந்தவன்,அங்கே சோகமாக உட்கார்ந்திருந்தவளின் முன்பு போய் நின்றவன்,தனது பாக்கெட்டில் இருந்ததை எடுத்து வசுவின் முகத்தை பார்த்தவாறு அவள் கழுத்தில் மூன்று முடிச்சை போட,நடப்பதை கண்ட வசுந்தரா மீண்டும் கதறி அழுதார்.

ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு தனது காதலை சொன்னார். உண்மையிலே என்ன நடந்துச்சுன்னு சத்தியமா எனக்கு தெரியாதும்மா என்க,உங்களை நான் நம்புறேன் சத்தியென்று அழுது கொண்டு வசுவும் சொன்னாள்.

வசு இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.படிப்பு முடிஞ்சு வேலையோடு உங்க அம்மா அப்பா கிட்ட பொண்ணு கேட்டு வரேன் என்று சத்தியமூர்த்தி சொல்ல, சரியென்றாள்.

பின்னர் டூர் முடிந்து காலேஜுக்கு வந்து சேர்ந்தனர்.மேலும் ஒரு மாதம் கடந்து செல்ல பைனல் செமஸ்டர் ஆரம்பித்தது.

கடைசி நாள் பரீட்சை எழுதி முடித்து வெளியே வந்து தாராவிடம் நல்ல வேலையோடு சீக்கிரம் வரேனென்று பேசிக்கொண்டிருக்கும் போது,டேய் சத்தியா உனக்கு தந்தி வந்துருக்குடாயென்று தேவ்ராஜ் சொல்ல,தந்தியா என அதிர்ந்து ஹாஸ்டலிற்கு போனவர்,வாங்கி படிக்க,அதில் சத்தியமூர்த்தியின் அம்மா சீரியசாக இருப்பதாக வந்திருந்தது.

தாராவிடம் விஷயத்தை சொல்லியவன் சீக்கிரம் வந்துடுறேன் என்று சொல்லிப் போனவன் தான்,அதன் பிறகு இருபத்தி நான்கு வருடங்களுக்கு பின்னர் ஏர்போர்ட்டில் தான் உன்னை பார்த்தேனென்று அழுது கொண்டே வசுந்தரா சொன்னார்.

சதூர்வேதமங்கலம்:

ஓ பாட்டி இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்கு. அதுக்குள்ள எல்லாம் என் புள்ள வெளியில வர வாய்ப்பு இல்லை.

தாராளமா போகலாம் என்றவன்,சரி நீங்க பேக்கிங் எல்லாம் பண்ணிக்குங்க.இன்னைக்கு நைட்டு போறதுக்கான ஏற்பாடு நான் பண்ணுறேனென்று சொல்லி விட்டு அங்கிருந்து பெரிய வீட்டிற்கு வந்தவன்,அங்கிள் கோயிலுக்கு போகலாம் என்று ஒரு எண்ணம் இருக்கு என்று சொன்னான்.

அதற்கு கண்ணனோ,தாராளமா போகலாம் ருத்ரா.எந்த கோயிலுக்கு என்க,ராமேஸ்வரம் போயிட்டு அப்படியே வரும் போது கன்னியாகுமரி சன்ரைஸ்
பார்க்கலாம் என தோணுது என்றான்.

நல்ல விஷயம் ருத்ரா.அப்போ நாங்களும் வரலாமா என்க,என்ன ஆன்டி கேள்வி இது?நீங்கள் இல்லாமலா என்றான்.

அப்போ எப்படி போகலாம்?யார் யார் போறோம் என்று கண்ணன் கேட்க,அங்கு சங்கர் மாமா கருப்பாயி அக்கா,பாட்டி,ஆர்கலி,பிறகு நாம மூன்று பேர் என்று ருத்ரன் சொல்ல,அப்போ நம்ம ட்ராவலர் வேன் எடுத்துக்கலாம் ருத்ரா.

சரி நான் டிரைவர் வர சொல்லிடுறேன்.நைட் நாம கிளம்பினால் காலையிலேயே ராமேஸ்வரம் போக சரியா இருக்கும் என்றார்.

அப்பொழுது கண்ணனை பார்க்க பங்காளி வீட்டில் இருந்து இருவர் வந்திருந்தனர்.அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ராமேஸ்வரம் போவது பற்றி சொல்ல,நாங்களும் வரோமே கண்ணா அந்த ஈஸ்வரனை தரிசிக்க என்றனர்.

அதற்கு என்னணா.நம்ப வண்டி தான்.தாராளமாக போகலாமென்க, அவர்கள் இருவரும் குடும்பத்தோடு பெரிய வீட்டிற்கு வந்து விட்டனர்.

நேரமும் கடந்து சென்றது.இரவு 11 மணிக்கு ட்ராவலர் வேன் சதுர்வேதமங்கலத்தில் இருந்து ராமேஸ்வரத்தை நோக்கி புறப்பட்டது.

சங்கர் டிரைவருக்கு எதிரில் உள்ள சீட்டில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டே வர,பாட்டி பின்னாடி உள்ள சீட்டில் படுத்துவிட்டார்.

மற்றவர்கள் அவரவர் துணையோடு உட்கார,ஆர்கலியும்,ருத்ரனும் ஒன்றாக உட்கார வேண்டிய சூழல் வந்தது.

அவன் தான் பிளான் பண்ணி எல்லாரையும் முதலில் உள்ளே போக சொல்லி விட்டு,கடைசியாக வந்தவன், இயல்பாய் இருப்பது போல்,ஆர்கலியின் பக்கத்தில் இருக்கும் சீட்டில் போய் உட்கார்ந்தான்.

மனைவியின் அருகாமையை மனதிற்குள் ரசித்தவன்,டிராவலரில் ஒலிக்கும் பாடலோடு சேர்ந்து பாடலானான்.

வாவ் இவர் குரல் என்ன இவ்வளவு இனிமையா இருக்கு?.
மனுஷனுக்கு நல்லா பாட வருமோயென்று ஆர்கலி முணு முணுக்க,அவளின் இடது பக்கம் தோள் பட்டையில் சாய்ந்தவன்,ஓய் உன் புருஷன் டாப் சிங்கர் டி.

பத்து வயசிலே மேடை கச்சேரிலாம் பண்ணியிருக்கேன்.பிறகு ஸ்கூல்,காலேஜ்ல பாட அங்குலாம் ஃபேன்ஸ் தொல்லை தாங்க முடியலைடி.

லவ்வு காதல் கல்யாணம்னு உசுர வாங்குனாளுங்கணு அதன் பின்னர் பாட்டு பாடுறதையே விட்டுட்டேன்.

உன்னை பார்த்த பிறகு தாண்டி திரும்ப பாட ஆரம்பிச்சேனென்றவன்,உனை பார்த்த பின்பு தான் நானாக இல்லையே என்று பாட,அதே நேரம் பிளேயரிலும் அதே பாட்டு ஒலித்தது.

உனக்கு தமிழ் பாட்டுலாம் தெரியுமாயென்று ஆர்கலி கேட்க, ருத்ரனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

இப்போ நான் என்ன ஜோக் சொல்லிட்டேன்,விளம்பரத்தில் பல்லை காட்டுவது போல இப்படி நீ சிரிக்குறயென்று ஆர்கலி கேட்டு முறைக்க,ஏண்டி உன் கிட்ட தமிழ்ல தானே பேசிட்டு இருக்கேன்.பிறகு தமிழ் பாட்டு தெரியுமாயென்றால் சிரிக்காமல் என்னடி செய்யவென்றான்.

ஆஆஆஆ என பல்லை கடித்தவள்,நீ சிங்களன் தானே.உனக்கு அந்த மொழி தான் தெரியுமென்று இருந்தேனென்றாள்.

ஆர்கலி சொன்னதை கேட்டவன், குழப்பமாய் அவளை பார்க்க,ஹலோ என்ன லுக்கென்றாள்.

உனக்கு என்னை பற்றி என்ன தெரியுமென்று ருத்ரன் கேட்க,நீ என்ன லூசா?

உன் பேர் ஊர் தெரியும்.மற்றபடி உன்னை தெரிஞ்சிக்க அப்படி என்ன ரகசியம் இருக்கென்றாள்.

ஓஓஓ என்றவன்,ஆமாம் நான் என்ன வேலை பாக்குறேனென்று தெரியுமா என்க,ஹம். நீ டிசைனர் தானே என்றாள்.

எஸ் அதே..ம்ம் என்ன டிசைனர் என்க,அதை எங்கே நீ சொல்லியிருக்க?.சென்னையில் டெக்ஸ்டைல்ஸ் வச்சிருக்கீங்க,அப்புறம் உங்க அப்பா,பீங்கான் பேக்ட்ரி வச்சிருக்காங்க அவ்வளவு தான்,வேற என்ன என்று ஆர்கலி கேட்க,ஓஓஓ மை காட்...

இவளுக்கு நம்மை பற்றி எதுவும் தெரியாதா?,அடக்கடவுளே?என தன் தலையில் தட்டியவன்,ஏய் நான் யார் தெரியுமாடி?என பாவமாக கேட்க,ம்ம் நீ ருத்ர வீர சிம்ஹனென்றவள்,எனக்கு தூக்கம் வருது என்றவாறு ஜன்னல் பக்கமாய் தலையை சாய்த்து கண்ணை மூடினாள்.

உலகத்திலே புருஷனை பற்றி எதுவும் தெரியாத பொண்டாட்டி இவளா தான் இருப்பாளென்று ருத்ரன் சொல்ல,உன்னை பற்றி இதுவரை என்கிட்ட நீ சொன்னியாடா என்றாள்.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top