• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
பொள்ளாச்சி:

அது வந்து தாத்தா,அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால்,நீங்க அவர்களை ஏத்துக்காமல்,வீட்டை விட்டு அனுப்பிட்டீங்கன்னு சொன்னாங்க. அதோட உங்க போட்டோ ஒன்னு வீட்ல இருக்கு.அத வச்சு தான் எனக்கு தெரியும் நீங்க தான் தாத்தா என்று வேற எதுமே சொல்லவில்லை என்றார்.

சத்யா சொன்னதை கேட்ட பெரியவர் உன் அம்மா சகுந்தலா யாரு தெரியுமா? நம்ம வீட்டில் வேலை செய்த வேணுகோபாலுடைய தங்கச்சி தான் சகுந்தலா.

உன்னோட பெரியப்பா இந்திரனுக்கு குழந்தை பிறந்திருக்க,நாங்களாம் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கும் போது தான்,உன் அப்பா சந்திரனும் சகுந்தலாவும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்த போது தான் விஷயம் கேள்விப்பட்டேன்.

அந்த காலத்தில் ஜாதி பார்த்து தான் பழகுவாங்க.எங்க குடும்பமும் பரம்பரை பரம்பரையா அந்த ஜாதி வெறியிலே வளர்ந்தது தான். நான் படிச்சு வேலைக்கு போன பிறகு தான் இதெல்லாம் தவறுன்னு எனக்கு தோணுச்சு.

குடும்பம் குலம் கோத்திரம்னு இருக்கும் போது உனக்காக அது எல்லாம் இழக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.எனக்கும் அவங்க ரத்தம் தானே ஓடுது.பின்ன நானும் அப்படித்தானே இருப்பேன். பொண்ணு யாருன்னு தெரிஞ்ச பிறகு,எனக்கு ஜாதி முதல்ல ஞாபகத்திற்கு வந்தது.

நம்ம வீட்டுல வேலை செய்றவங்க பொண்ண போய் எப்படி மருமகளா ஏத்துக்க முடியும் என்று,சொந்தபந்தம் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க அது இல்லாம,ஊருக்கே பஞ்சாயத்து பண்றவன் நானு.இத நான் எப்படி ஏத்துப்பேன்.

அன்னைக்கு சாயந்திரமே கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து நிற்க,இனி அப்பா புள்ள எந்த உறவும் கிடையாது. என் முகத்தில் முழிக்க கூடாதுன்னு சொல்லி வீட்டை விட்டுவிட்டு அனுப்பிட்டேன்.

இருவரும் எங்க போனாங்களென்று எதுவுமே எனக்கு தெரியாது.நானும் அவங்களை தேடவும் இல்லை.

வருஷமும் ஓடி போய்ட்டு.உன் பெரியப்பா பையன் சரவணனுக்கு கல்யாணம் முடிந்து வெற்றியும் பிறந்தான்.

வெற்றிக்கு ஒரு வயசு ஆனது.

அப்போ வெற்றியோட நான் வயலுக்கு போய்ட்டு வீட்டிக்கு வர,வீட்டு வாசல்ல ஒரே அழுகை சத்தம்.

என்னாச்சினு பதறி போய் நான் பார்க்க,என் மனைவி,மகன், மருமகள்,பேரன் சரவணன்,அவன் பொண்டாட்டி எல்லாருமே செத்து கிடந்தாங்க.

என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.இடிஞ்சு போய் நான் உட்கார்ந்திருக்கும் போது,கணக்குபிள்ளை வேணுகோபால் வந்து சொன்னாரு.

ஐயா சாப்பிடுற சாப்பாட்டுல விஷம் கலந்துருக்குங்க.இதை சாப்பிட்ட பிறகு தான்,எல்லாருமே இறந்திருக்காங்கன்னு சொன்னாரு.

யார் இந்த வேலை செஞ்சாங்கணு விசாரிக்கும் போது தான்,நம்ம ஊருக்கு தோல் தொழிற்சாலை வேண்டாமென்றும் அதால் மக்களுக்கும்,சுற்றுச்சூழலை பாதிக்குமென்று அரசாங்கத்துக்கு நான் லட்டர் போட்டு தடுத்ததால், அவன் தான் ஆளு வச்சி சாப்பாட்டில் விஷத்தை கலந்துருக்கான்னு தெரிஞ்சது.

பிறகு போலீஸ்ல கேஸ் போட்டு,வருஷம் ஓடியது.தீர்ப்பு நம்ப பக்கம் சாதகமாக வந்தது.அவனுக்கு கொலை குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுத்தாங்க.

அப்போ தான் வள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருந்தது.சரி பிள்ளைய காலேஜ் சேக்கலாம், தூரத்தில் இருந்தால் பாதுகாப்பா இருக்குமென்று,தெரிஞ்சவங்க மூலமா சென்னையில் காலேஜ் சேர்க்க நாங்க வந்துட்டு இருந்தோம்.அப்போ மகாபலிபுரத்துகிட்டு ஆக்சிடெண்ட் ஒன்னு நடந்திருப்பது தெரிஞ்சது.

நாங்க இறங்கி போய் பார்க்கும் போது,ரோட்டோரமா குப்புற கிடந்த உன்னை தான் முதல்ல பார்த்தோம்.

தலையில் அடிபட்டு ரத்தம் வழிச்சி ஓடிட்டு இருந்தது.அய்யோனு உன்னை தூக்கும் போது ஆம்புலன்ஸூம் அங்கு வந்தது.

அடிபட்ட எல்லாரையும் அதில் ஏத்திட்டு போனாங்க.உன்னையும் அதுல ஏத்திட்டு போகும் போது,உன் பாக்கெட்ல இருந்து பர்சு ஒன்று கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது.அதில் இருந்த போட்டோவில் என் பையன் சந்திரன், சகுந்தலா நீ,என மூணு பேரும் இருந்தீங்க.

நீ என்னோட பேரனென்று எனக்கு தெரிஞ்சது. அதோட நீ கோமாக்கு போய்ட்டான்னு டாக்டர் சொன்னாங்கஅந்த பர்சில் தந்தி வந்த ரசிது ஒன்னு இருந்துச்சு.

சகுந்தலாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கதால் உன்னை வர சொல்லின்னு,அந்த அட்ரஸை வச்சுக்கிட்டு நானும் இந்த ரெண்டு பசங்களையும் கூப்பிட்டு,கணக்கு புள்ளை வேணு கூட திருச்சிக்கு போய் பார்த்தா,சகுந்தலாவும் அங்க உயிரோட இல்லை.

ஆளுங்களை வைத்து சகுந்தலாவை அடக்கம் பண்ணிட்டு,அங்க இருந்த கொஞ்சம் பொருட்களையெல்லா நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வச்சுட்டேன்.

உனக்கு எப்ப வேணாலும் ஞாபகம் வரலாம்.இல்ல ஞாபகம் வராமலும் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார். பிறகு அங்கு இருக்கிறவங்க கிட்ட பேசி கோயம்புத்தூருக்கு கொண்டுட்டு வந்தேன்.

நாலு வருஷமா குணாளன் தான் உனக்கு வைத்தியம் பார்த்தது.வேணுகோபல் நல்லவர். அவருக்கு தெரியாம நடந்த விஷயம் இது.அதனால் அவரை என்னால் தள்ளி வைக்க முடியலை.

அவரோட கணக்குபிள்ளை வேலைய அவர் பையன் மாரியப்பன் தான் பாக்குறார்.இவ்வளவுதான்ப்பா என்று சத்தியமூர்த்தி கவுண்டர் சொல்லி முடித்தார்.

தாத்தா சொன்னதை எல்லாம் கேட்ட சத்தியமூர்த்திக்கு,தனது அம்மாவின் ஞாபகம் வர அம்மா என்று கதறி அழுதார்.

சத்யா என் பையன் சந்திரனுக்கு என்னையா ஆச்சு?நாங்க போயிருக்கும் போது என் புள்ள போட்டோவுக்கு மாலை போட்டிருந்ததுய்யா என்று பெரியவரும் அழுது கொண்டே கேட்டார்.

நான் 12 படிக்கும் போது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அதுல இறந்துட்டாங்க.அதன் பிறகு அம்மா தான் ஜவுளி கடைக்கு போய் குடும்பத்தை பார்த்துக் கொண்டாங்க.

12த்ல நான் நல்ல மார்க் எடுக்க எனக்கு சென்னையில் ஃப்ரீயா சீட்டு கிடைத்தது.அவ்வளவு தூரம் நான் போய் படிக்கணுமாயென்று அம்மாகிட்ட கேட்கும் போது,வெளி உலகத்தையும் நீ தெரிஞ்சிக்கணும்.

அம்மா கைக்குள்ளே வளர வேண்டாம்னு அனுப்பி வச்சாங்க. இவ்ளோ தான் தாத்தா எனக்கு ஞாபகம் இருக்கு என்றார்.

சரி பரவால்ல விடு.இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றார் டாக்டர் குணாளன்.

சில வருடங்களும் கடந்து சென்றது. வெற்றி அப்பொழுது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வள்ளியம்மை காலேஜ் படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு முழு நேரமும் வீட்டு பொறுப்பை பார்க்க ஆரம்பித்தார்.

அப்பொழுது ஒரு நாள் படுத்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு, யாருக்கோ தாலி கட்டுவது போல் நிழல் படமாக தெரிந்து,திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்.

அவ்வப்போது இதைப் போல ஞாபகங்கள் வரும்.அதை ஓவியமாக வரைந்து வைக்க ஆரம்பித்தார். தாத்தாவிடமும் அந்த கனவில் வந்ததைப் பற்றி சொல்ல மறக்கவில்லை.

வெற்றி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது,வயது மூப்பின் காரணமாக சத்தியமூர்த்தி கவுண்டரும் இந்த உலகத்தை விட்டு சென்றார். பிறகு மொத்த பொறுப்பும் சத்தியமூர்த்திக்கு வந்து சேர்ந்தது.

வள்ளிக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்க, வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து விட்டார். ஒருநாள் வீட்டில் பின்பக்கம் இருக்கும் அறைக்கு சென்றவர்,தாத்தாவின் பொருள் ஒன்றை தேடும் போது,சில மூட்டைகள் அங்கு இருப்பதை பார்த்து, இது என்னவென்று திறந்து பார்த்தார்.

முதல் இரண்டு மூட்டைகளில் பாத்திரங்கள் இருக்க,அடுத்த மூட்டையை திறந்து பார்க்க,அதில் புத்தகங்களும்,சில போட்டோக்களும் இருந்தது.

போட்டோக்களை பார்த்துக் கொண்டே வரும் போது,அதில் கல்லூரியில் படித்த போது எடுத்த போட்டோக்கள் இருந்தது.

அதில் யார் முகமாவது ஞாபகம் வருதா என்று பார்த்துக் கொண்டே வந்தவருக்கு,சிலர் முகங்கள் மட்டும் நிழலை போல் வந்தது.

அடுத்த போட்டோவை பார்க்க, அதிலிருந்த ஒரு பெண்ணை பார்க்கும் போது,தாரா என்று முணுமுணுத்தார். இப்ப நான் என்னன்னு சொன்னேன் என்று சத்தியமூர்த்தி யோசிக்கும் போது தான்,சில நினைவுகள் அவருக்கு வரத்தொடங்கியது.

சிறிது நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர் தேவா தேவா தேவா தேவராஜ்,பிரியா,என்னுடைய தாரா வசுந்தரா,பாபு,வினோத் என்றார்.

சதூர்வேதமங்கலம்:

தங்க குட்டிக்கு பசி தீர்ந்துவிட்டதா என்று, வயிற்றில் தனது விரல்கள் வைத்து தடவி கேட்க,அவளுக்கோ அவன் விரல்கள் பட்டு உடல் சிலிர்த்தது.

என்ன பண்ணுகிறாய் என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள்.ஏன் உனக்கு கண்ணு தெரியாதா?

என் பிள்ளை கிட்ட பேசிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுது இல்ல.பின்ன,என்ன பண்றேன் நொண்ண பண்றேன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க.

கம்முனு இருடி.உன்ன ஒன்னும் நான் பண்ணவில்லை என்றவன், பொறாமை புடிச்சவள்,உன்கிட்ட என்ன பேச விட மாட்டேங்குறாள் தங்கமென்று சொல்ல,ஆர்கலியே பல்லை நர நரவென்று கடித்தாள்.

படுபாவி இப்படி என்னை படுத்தி வைக்கிறானே?

இவனுக்கு தான் கூச்சநாச்சம் ஒன்னும் இருக்காது.இவனைப் போல நாம என்ன கல்லா இல்ல மண்ணா?

டேய் ரொம்ப சோதிக்காதடா என்று முணு முணுக்க,சோதனை தான் என்ன செய்யடி பார்பி பொண்டாட்டி.

உன்னை யாருடி என் கண்ணில் பட சொன்னா?

கியூட்டா,பார்பிடால் போல வந்து மோதுன பாரு,யப்பாஆஆஆஆ, சின்ன பொண்ணு இடிச்ச போலவா இருந்தது என கண்ணடித்து ருத்ரன் சொல்ல,ஆர்கலிக்கும் அந்த நாளை நினைத்து வெட்கமாக வந்ததும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு மௌனமாக சிரித்தாள்.

ஆனா பாப்பா,சத்தியமா நினைக்கலடி அந்த நிமிஷமே நான் பிளாட் ஆகுவேனென்று ருத்ரன் சொல்ல,என்ன பாப்பாவா என்றாள்.

நான் என்ன பால்வாடி பாப்பா போலவா இருந்தேனென்று ஆர்கலி மூக்கு விடைக்க கேட்க,ஆமாண்டி...

"குட்டியா பாப்பா போல க்யூட்டா இருந்தடி"என்று,அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே சொல்ல, அவளோ கணவனின் தீண்டல்கள் ஏற்படுத்தும் கிரக்கத்தை மறைக்க முடியாமல் திணறிப்போனாள்.

ஐயோ இந்த ஒரு நாளுக்கே இவ்வளவு பாடுபடுத்துறானே இந்த ஒரு வருஷம் எப்படி போகுமோயென்று நினைத்தவளுக்கு,உள்ளுக்குள் ஒரு பக்கம் வலித்தது.

உண்மையிலேயே ஒரு வருஷமானதும் நம்மளை வீட்டு விட்டு அனுப்பி விடுவானா?,இல்லை அனுப்ப மாட்டானா?என நினைக்க, மனசோ அனுப்பமாட்டான் என்றும், அறிவோ அவன் சொன்னதை செய்பவன்.
"சோ,கண்டிப்பாக உன்னை அனுப்பிடுவானென்று சொல்லியது"

அவள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவன்,என்ன யோசிக்கிறாள்? கோவப்பட்டு அடிச்சிடுவாளா?

செய்ற ஆளு தான் இவள். அன்றைக்கு கன்னத்திலே விட்டாளே. எப்பாஆஆ...

ஆள பாக்க ஒல்லியா இருக்கிறாள். அடிச்சா பலமா வலிக்குதென்று தனது கன்னத்தை தடவியவன்,ருத்ரா கொஞ்சம் அடக்கி வாசி டா .

ரொம்ப ஓவரா தான் போற.இது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டவன்,சரிடா தங்கம் நீங்க ரெஸ்ட் எடுங்க.

அப்பாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேனென்று அங்கிருந்து எழுந்தவன்,தள்ளி படுடி என்று சொல்லி விட்டு,ஆர்கலியின் பக்கத்திலேயே கட்டிலில் படுத்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டான்.

அதான் இவ்வளவு இடம் இருக்கே, அங்க போய் படுக்க வேண்டியது தானே என்று ஆர்கலி கேட்க,அதற்கு ருத்ரனோ ஓஓ எஸ்.இப்ப தான் ஞாபகம் வந்தது என்றவன்,அவள் வயிற்றின் மேல் தனது இடது கையை வைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
499
ருத்ரனின் செய்கையை பார்த்தவள், கொஞ்சமாவது மண்டையில மசாலா இருக்கா?,இல்லையா?.

பாட்டி வந்து பார்த்தா என்ன நினைப்பாங்க?,கடவுளே என்று தனது தலையில் தட்டிக் கொண்டாள்.

இவ்வளவு தான் விஷயமா என்றவாறு,எழுந்து போய் கதவை லாக் பண்ணிட்டு வந்தவன், அவளோடு இன்னும் நெருக்கமாய் படுத்து,அவள் வயிற்றை அணைத்தான்.

இப்பொழுது இருவரின் முகமும் மிகவும் அருகருகே இருந்தது.

ஆர்கலிக்கோ சொல்ல முடியாத அவஸ்தையாக இருந்தது.

ஒரு நிமிடம் வரை அவனையே இமைக்காமல் பார்க்க,மனைவியின் பார்வையில் உள்ள காதலை கண்டு கொண்டவன்,யாஹூ என்றவாறு அவள் வயிற்றில் மேல் இருந்து கையை எடுத்து,அவள் தலையின் பின் பக்கம் கொடுத்து,தன் உதட்டின் அருகே இழுத்தவன் மனைவியின் உதட்டில் முத்தமிட தொடங்கினான்.

ம்ம் என்று தலையசைத்தவள்,தனது கை விரல் நகத்தால் ருத்ரனை கிள்ள, வலித்தாலும் தன் செய்கையை ருத்ரன் விடுவதாக இல்லை.

சிறிது நிமிடங்களுக்கு பின்னர் அவள் உதட்டை விட்டவன்,ஏண்டி,இவ்வளவு அழகான பொண்டாட்டி பக்கத்துல வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க நான் என்ன சாமியாரா?, நெவர்..

இந்த ருத்ரன் ஹீரோடி என்றவன், கொஞ்சம் ஜாக்கிரதையா இருடி.நீ பக்கத்துல இருந்தால் எனக்கு என்ன ஆகுதென்றே தெரியலைடி.

"அப்படி ஒரு லவ் மூட் வருது".

காதுக்குள்ள மெலடி சாங்கா கேக்குது.

ஏண்டி ஆர்கலி,உன் மனசாட்சியை கொஞ்சம் தொட்டு சொல்லு.ஒரு நிமிஷம் கூட இல்லை,ஒரு நொடி கூட என் மேல உனக்கு காதலே இல்லையா என்று சீரியஸாக ருத்ரன் கேட்க...

"பட்டென்று இல்லை என்றாள்".

ஓஓ என்றவன்,காதல் இல்லாம தான், உதட்டு சண்டைக்கு நல்லா கம்பெனி குடுத்தியா என்று,வாயை மூடி சிரித்தான்.

"மானங்கெட்டவனே".

வாய மூடிட்டு போடா என்று வேறு பக்கம் திரும்பி படுத்தவளுக்கு சிரிப்பு வந்தது.

தான் சிரிப்பதை கண்டு கொண்டானென்றால்,இன்னும் ரொம்ப பண்ணுவான் என்பதால்,கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

சிறிது நிமிடம் வரை இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.ஓஓஓ தூங்கிட்டானோ என நினைத்தவள், பொறுமையாக திரும்பி பார்க்க, ருத்ரன் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

மெதுவாக அவனின் காடு போன்ற தலைமுடியை தடவி விட்டவள், பின்னர் தையல் போட்டிருந்த கையை பார்க்க,என்னால் தானே இப்படியென்று கண் கலங்கியவள், ஏண்டா அன்றைக்கு அப்படி பேசுன?

என்ன பார்த்தால் காசுக்காக, கண்டவன் கூட வாழுறவள் போலவா தெரியுது?

நீயும் தான் பெரிய கோடீஸ்வரனாச்சே,மனைவி என்னும் உரிமையில்,இதுவரை உன் கிட்ட எதையாவது நான் கேட்டிருக்கிறேனா?

எத்தனையோ முறை நீ பேசும் போதெல்லாம் சொல்லுவாயே, உனக்கு ஆசையே இல்லையாடினு.

இல்லையே...

எதுவும் இல்லாமல் வளர்ந்ததால் தான் என் நடத்தையை உன்னால் கேவலப்படுத்த முடிந்தது.

அப்போ உன் பார்வையில் பணம் இருப்பவளே உத்தமி அப்படி தானே என்கும் போதே,ஆர்கலிக்கு அழுகை தாங்க முடியவில்லை.

வாயை பொத்தியபடி திரும்பி படுத்தவள்,சத்தமின்றி அழுதபடியே தூங்கிவிட்டாள்.

நேரமும் கடந்தது.

பறவைகளின் கீச் கீச் சத்தத்தில் கண் விழித்த பாட்டி,எழுந்து போய் வாளியில் இருந்த நீரில் முகத்தை கழுவி விட்டு,குருவிகளுக்காக வைத்திருக்கும் அரிசியை அள்ளி தூவ,அவைகளுக்கு உணவு கிடைத்த குஷியில் குருவிகளும் பறந்து வந்து கொத்தி தின்றன. ருத்ரனும் கதவை திறந்து வெளியே வந்தான்.

டீ கண்ணு என்க, குடுங்க பாட்டியென்றவன்,அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு,போனில் மூழ்கினான்.

சில நிமிடத்தில் இந்தா கண்ணுயென்கும் பாட்டியின் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்,அவரிடமிருந்து டீயை வாங்கி குடித்து விட்டு,பாட்டி உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்க, கேளுய்யா என்றார்.

தப்பா எடுத்துக்க வேண்டாம். உங்களை பற்றி சொல்லுங்களென்க, அதுக்கென்ன கண்ணு,சொல்லிட்டா போச்சி.

நமக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேக்கம்பட்டி தான் கண்ணு.வாக்கப்பட்டது நீலாம்பூர்.

நல்ல மனுஷன் கண்ணு. வாழ்க்கை நல்லா தான் போச்சி.ரெண்டு புள்ளைங்க.ரெண்டும் பயலுங்க தான். புள்ளைங்களுக்கும் கல்யாணத்தை முடிச்சி பேர புள்ளைங்களும் பொறந்துச்சி.அவரும் தவறிட்டாரு.

அப்போ ஒரு நாள் இராவுல படுத்துருக்கும் போது,உங்கப்பா கூடவே உன் ஆயியும் போய் தொலைஞ்சிருக்களாம்.கெழவி இருந்து உசுர வாங்குறாள்னு மருமவள் பேசுறது காதில் கேட்டுச்சி.

அப்படியே கட்டுன புடவையோட வீட்டை விட்டு கிளம்பிட்டேன்யா.நல்ல மகராசி ஒருத்தி பஸ் ஸ்டேண்டுல பார்த்தாள்.

அவள் கிட்ட பேச்சு குடுத்தப்போ எனக்கு துணி தைக்க தெரியும்னு சொன்னேன்.சரி வாங்க பாட்டினு திருச்சூருக்கு கூட்டிட்டு போய் அவள் வீட்டிலே தங்க வச்சிக்கிட்டு, மிசினையும் குடுத்து துணி தைக்க சொல்ல,நாலு வருஷம் போய்ட்டு.

திடீர்னு வெளிநாட்டுல இருக்கும் மருமவளுக்கு உடம்புக்கு முடியலைனு,அந்த மகராசி போக வேண்டிய சூழ்நிலை.

என்னை மெட்ராஸ்ல மருமவளோட அப்பா வீட்ல இருக்க சொல்லி டிரைன் ஏத்தி விட்ட பொண்ணுகாரி,கையில கத்தை பணத்தையும் குடுத்துட்டு போனாள்.

கொஞ்ச நேரம் போக, பாத்ரூமுக்கு போகலானு நடக்கும் போது எனக்கு தலைசுத்தி கீழே விழப்போக,ஆரா கண்ணு தான்யா தாங்கி பிடிச்சா. வயித்து புள்ளக்காரி,பக்கத்தில் சத்தம் போட்டு தண்ணி வாங்கி,என் முகத்துல தெளிச்சிருக்காள்.

எந்திரிச்ச நான்,முதல் நாள்ல இருந்து ஒன்னும் சாப்டலையா,அதான் பசில மயங்கிட்டேன் தாயினு சொன்னேன்.

உடனே தோள்ல இருந்த பைய திறந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து குடுத்தவள்,இதை சாப்பிடுங்க பாட்டினு சொல்லுச்சி.

பிறகு அவங்கவங்க கதைய பேசிக்கிட்டு வரும் போது தான், பக்கத்தில் ஒருவர் பேப்பர் படிச்சிட்டு இருந்தார். அதுல இருந்த விளம்பரத்தை பார்த்து பாட்டி என் கூட வந்துடுறீங்களானு கேட்டுச்சி.வரேனு சொன்னேன்.

பிறகு இந்த ஊருக்கு வந்தோம்.ஆரா கண்ணுக்கும் வேலை கிடைச்சிது.பேத்தி மட்டும் கிடைக்கல, பேரனும்- பேரனுடைய குடும்பமும் கிடைச்சிது.

இதோ தாயா புள்ளையா ஆகிட்டோம்.

மாசமும் ஓடி போயிடுச்சி.

மனுச வாழ்க்கை எப்போ என்ன நடக்குமென்று தெரியாது கண்ணு. இன்னைக்கு எனக்கு வந்த நிலமை, நாளைக்கு நீ மாமியாரா ஆகும் போது உனக்கும் வரும். கடவுள் புண்ணியத்துல அப்படி நடக்ககூடாது.சும்மா ஒரு வார்த்தைக்கு சொல்லுறேன் கண்ணு.

அதனால் இருக்குற வாழ்க்கைய நாலு பேருக்கு புண்ணியம் உள்ளதா வாழ்ந்துட்டு போகணும். கண்ணு, ஆராவை மட்டும் நீ அழைச்சிட்டு போயா.நானும் வந்துட்டேனா சங்கரு ஒடைஞ்சிடுவான்.

எனக்கு ரெண்டு பேரும் வேணும் கண்ணு.இதுவரை உன்கிட்ட இதை பற்றி நான் பேசலை.

கொஞ்சம் இரு கண்ணு வரேனென்று கிச்சனிற்குள் சென்று சிறிது நிமிடத்தில் வந்தவர்,இந்த நாலு வருஷமா நான் துணி தச்சி சம்பாரிச்சது இந்த பேங்க் ல இருக்குப்பா.
தாய் வீட்டு சீதனமா இதை ஆராகண்ணுக்குனு வச்சிருக்கேன்.

ஒன்னே ஒன்னு சொல்லுறேன்யா, என் பேத்தியை நல்லபடியா வாழ வை. ஏழை பொண்ணுனு இளக்காரம் வேண்டாம்.

இதுல எப்படியும் நாலு லட்சத்துக்கு மேல இருக்கும்.ராப்பகலா நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுயா வாங்கிக்கோயென்றார்.

பாட்டி என்று வேதனையோடு அழைத்தவன்,மன்னிச்சிடுங்க.இனி நல்ல புருஷனா நடந்துப்பேன் என்பதை விட,நல்ல மனுஷனா நான் நடந்துப்பேன்.

இப்படி என்னை பாவியாக்காதீங்க பாட்டி.உங்க பேத்தி இல்லை இல்லை என் பொண்டாட்டியை நல்லபடியாக என் மூச்சு இருக்கும் வரை பார்த்துப்பேன்.இது சத்தியமென்றான். இது போதும் கண்ணு என்று கலங்கிய கண்ணை துடைத்தார்.

பின்னர் இருவரும் பொதுவா பேசி சிரித்துக் கொண்டிருக்க,ஆர்கலியும் எழுந்து வந்து பார்த்தவள், அமைதியாக அங்கிருந்த இன்னொரு சேரில் உட்கார,பாதாம்பால் எடுத்துட்டு வரட்டுமா கண்ணு என்க,நான் எடுத்துக்குறேன் பாட்டியென்று எழுந்து கிச்சனிற்குள் சென்றாள்.

பொள்ளாச்சி:

உங்க அஞ்சு பேர் ஞாபகம் மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு.மற்றபடி எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை. "நானும் எவ்வளவு யோசிச்சு பாத்துட்டேன்". குணாளன் சித்தப்பாவும் என் உடல்நிலை பற்றி யோசித்து, இப்படியே விட்டுருப்பாயென்று சொல்லிட்டார்.

"அதன் பிறகு வெற்றியும்,வள்ளியும், இங்குள்ள மக்களும் தான் எனக்கு உலகமாக ஆனாங்கள்".

"உன்னை தேடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு இல்லை"

இந்த இடைப்பட்ட காலத்தில் உனக்கு வேற கல்யாணம் ஆகியிருந்தால், என்னால உன் குடும்ப வாழ்க்கையில எந்த ஒரு பிரச்சனையை வரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான், உன்னை நான் தேடவில்லை தாராயென்று,இதுவரை தன் வாழ்வில் நடந்ததையெல்லாம் சத்தியமூர்த்தி சொல்லி முடிக்க,அந்த இடமே குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.

யாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சத்தியமூர்த்தி வாழ்க்கையில் நடந்ததும் பெரிய விபத்து தான்.

"கடவுளின் சித்தம் இது தான் என்கும் போது,மனுஷனால் என்ன பண்ணிட முடியும் என்றார் சிம்ஹன் தாத்தா".

அப்பொழுது தம்பி,தம்பி என்னும் சத்தம் வாசல் பக்கமிருந்து கேட்க, நான் போய் பார்க்கிறேணாயென்று வள்ளியம்மை அங்கிருந்து வெளியே சென்று பார்க்க,மாரியப்பன்,சோமு மற்றும் ஊரில் உள்ள வயதானவர்கள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

உள்ளே வாங்க.

"எதற்கு வாசல்லையே நின்றுகொண்டுயென வள்ளி சொல்ல,தம்பியை பார்த்துட்டு போலாம்னு வந்தோமா என்றனர்".

அண்ணன் உள்ளே தான் பெரியப்பா இருக்காங்க.வாங்க எல்லாரும் என்கும் போது,சத்தியமூர்த்தியும் வெளியே வந்தவர்,என்ன வாசல்லையே நின்னுகிட்டு.

உள்ளே வாங்களென்க, மருமவள் வந்துருக்குனு கேள்வி பட்டோம் கண்ணு.அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலானு நான் வந்தேன்.

கூடவே உன் மாமானும் வந்தாச்சி. எங்களை பார்த்துட்டு இவனுங்களும் வந்தாச்சியென்று பெரியவர் சொல்லி சிரித்தாவாறு,வாங்கப்பா உள்ள போகலாமென்க,பின்னர் அனைவரும் உள்ளே வந்தனர்.

எல்லாரும் வாங்க வாங்கயென்று சத்தியமூர்த்தியின் பங்காளி வீட்டு பெரியப்பா கண்ணுசாமி கவுண்டர் சொல்ல,இவர்களும் எழுந்து வணக்கம் சொல்லினர்.

மருமவள் வந்துருக்குனு காதுல சேதி விழுந்துச்சி.அதான் உடனே வந்துட்டோமென்றார்.

பெரியவர்களை பார்த்து எழுந்து நின்ற வசுந்தராவை கண்டவர்,இங்க வா அம்மணி என்க,வசுந்தராவும் கண்ணுசாமி கவுண்டரின் முன்பு செல்ல,இடுப்பில் இருந்த விபூதி பொட்டலத்தை எடுத்து பிரித்தவர், மூர்த்தி என்று எழ,சத்தியமூர்த்தியும் வசுந்தராவின் அருகில் வந்து நின்றார்.

தீர்க்க சுமங்கலியா,நோய்நொடி இல்லாமல் இரண்டு பேரும் வாழனும் என்று,இருவர் நெற்றியில் விபூதியை பூச இருவரும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

பின்னர், பரஸ்பரம் இரண்டு குடும்பத்தையும் சத்தியமூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.

காலம் போடுற கணக்கு மனுசனால போட முடியாது.எப்ப என்ன நடக்குமோ,அப்போ தான் அது நடக்கும்.

இன்னைக்கு தான் என் தம்பி ஊட்டுக்கு மருமவ வரணுமென்று விதி இருக்கு.
அதை யாரால மாற்ற முடியும்?. காலம் இன்னும் கொஞ்சம் தான் அம்மணி. கோவதாபத்தை தூக்கி போட்டு, ஒன்னா வாழுங்க கண்ணுங்களா என்றார்.

மேலும் சிறிது நேரம் எல்லாரும் பேசியிருந்து விட்டு, வந்திருந்தவர்களெல்லாரும் அங்கிருந்து சென்றனர்.

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top