Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 477
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ரஞ்ஜன் போனை வைக்க, "ஸ்சூஊஊஊ..."
"எவ்வளவு பேச்சு? இவனுக்கு
வாய் வலிச்சிருக்குமா, இல்லையா? என முணு முணுத்தவன்,மீண்டும் டிசைன் பண்ணும் வேலையில் மூழ்கினான்"
"நேரமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலே கடந்து செல்ல,ஆட்டோ வந்து வாசலில் நிற்க,அதிலிருந்து மூவரும் இறங்கியவர்கள்,உள்ளே உட்கார்ந்திருப்பவனை கண்டனர்"
"அம்மாடி கொஞ்சம் சீக்கிரம் போய் கதவை திற.எவ்ளோ நேரம் தம்பி வெளியில இருக்காங்கன்னு தெரியலையே என்றவாறு அங்கு வந்த பாட்டி,தம்பி வாங்க என்றார்"
"ருத்ரனோ காதில் உள்ள புளுடூத்தில் பேசிக்கொண்டிருக்க,பாட்டி கூப்பிட்டது காதில் விழவில்லை"
அப்பொழுது பாட்டியை தொட்டுக் கூப்பிட்ட ஆர்கலி லேப்டாப்பை காட்டி,யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை சைகையில் சொல்ல,ஓ சரி சரி என்று கதவை திறந்து மூவரும் வீட்டின் உள்ளே சென்றவர்கள்,வேகமாக மதிய உணவை சமைக்க தொடங்கினர்"
"சமையலை முடித்து விட்டு வெளியே வந்து கருப்பாயி பார்க்க,ருத்ரன் அவனது வேலையில் கவனமாய் இருப்பது தெரிந்தது"
" தம்பி,தம்பி என்று அந்த சத்தத்தில் நிமிர்ந்தவன்,வாங்கக்கா. ஹாஸ்பிட்டலில் இருந்து இப்போ தான் வந்தீங்களா என கேட்க,எதேஏஏ என அதிர்ந்தவர், தம்பி நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆகிட்டுப்பா" வாங்க தம்பி சாப்பிடலாம் என்க, அதுக்குள்ளே சாப்பாடா என்றவாறு தனது மொபைலில் அதுவும் மதியம் 1.15 என்று காட்டியது"
"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேலை இருக்குங்கக்கா. நான் முடிச்சுட்டு வந்துடறேன்.நீங்க போய் சாப்பிடுங்க என்று சொன்னவன், அக்கா,டாக்டர் என்னக்கா சொன்னாங்களென்று தயங்கியபடியே கேட்டான்"
"ஒன்னும் பிரச்சனை இல்ல.இன்னும் ரெண்டு இல்லை மூன்று வாரத்துல, எப்ப வேணாலும் டெலிவரி ஆகும்னு சொன்னாங்கப்பா என்க,சரிங்கக்கா என்றான்"
"வேலைய முடிச்சிட்டு வாப்பா என்றவாறு உள்ளே சென்றவர், ஆராமா நீ முதல்ல சாப்பிட்டுக்கோ என்க,சரிங்கண்ணி என்றவள், தரையில் உட்கார்ந்து கொண்டு, நீங்களும் வாங்களேன் பாட்டி என்க, தம்பி சாப்பிடட்டும் கண்ணு, நான் பிறகு சாப்பிட்டுக்கிறேனென்றார் பாட்டி"
"ம்கூம்,பொல்லாத தும்பி,இந்த உலகத்தில் இல்லாதவன் வந்திருக்கிறான்.அந்த தொம்பிக்கு பசிச்சா அவன் வந்து சாப்பிட போறானென்று முணு முணுத்தவள், நீங்க எனக்கு குடுங்கண்ணி,ரொம்ப பசிக்குது என்றாள்"
"வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இலையில் தான் ஆர்கலி சாப்பிடுவது. இலையை போட்டு சமைத்தவைகளை அவளுக்கு பரிமாறும் போது, ருத்ரனும் உள்ளே வந்தான்"
"கையை கழுவிவிட்டு வாப்பா, சாப்பிடலாமென்று பாட்டி சொல்ல, அய்யோ பாட்டி அந்த டாக்டர் கையை கழுவ வேண்டானு சொல்லியிருக்காரே,நான் ஸ்பூனை வேண்டுமானால் கழுவிட்டு சாப்பிடுறேனென்று சொல்ல,அவன் சொல்லியதை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரை ஏறியது"
"ஏய் பார்த்து பார்த்து என்று அவள் தலையில் தட்ட,ஆர்கலியோ நிமிர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்"
"டேய்,அவள் பார்வையே சரியில்லை டா.அடக்கி வாசியென ருத்ரன் தனக்குள் சொல்லியவன், ஆர்கலியின் அருகிலேயே தரையில் உட்கார,ஏன் உனக்கு வேற இடம் கிடைக்கலையா? என ஆர்கலி கேட்க,இருவருக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தவன்,ஓஓ கேப் வேண்டானு சொல்லுறாயா,சரி சரி புரிஞ்சிட்டுயென்று அவளருகில் நெருங்கி உட்கார,ஆர்கலியோ ஆஆ என தனது பல்லை கடித்தாள்"
"பாட்டிக்கும் கருப்பாயிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.அம்மாடி நான் செத்த காத்தாட உட்காருறேனென்று பாட்டி எழுந்து தோட்டத்திற்கு சென்று விட, சமைத்த உணவுகளை எடுத்து கீழே வைத்தவர்,ருத்ரனுக்கு தட்டும் அதில் ஸ்பூனும் வைத்து விட்டு,கூப்பிடாத பாட்டிக்கு,இதோ வரேன் ஆச்சியென்று சொல்லி கருப்பாயியும் தோட்டத்திற்கு சென்றார்"
ஏண்டா பெரியவங்களாம் இருக்கும் போது இப்படி நடந்துக்கறியே,கொஞ்சம் கூட உனக்கு வெட்கமா இல்லையா?என்று பல்லை கடித்துக் கொண்டு ஆர்கலி கேட்க, அவளை பார்த்து கண்ணடித்தவன், என் செல்ல பொண்டாட்டி பக்கத்தில் உட்காருவதற்கு,நான் ஏண்டி வெக்கப்படணும் என்று கேட்டான்"
"நான் உன் பொண்டாட்டினு யாரு உனக்கு சொன்னா என்று ஆர்கலி கேட்க,அதற்கு ருத்ரனோ,இது யார் சொல்லி எனக்கு தெரியனும்டி?
சட்டப்படி நம்ம கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிருக்கே கண்மணி என்க,இது யாரு புதுசா கண்மணி?
ஏன் அந்த ஆதிரா எங்க போனாள்,இப்ப கண்மணியை புடிச்சு தொங்கிட்டு இருக்க என கடுப்போடு கேட்க..
"ஓஓஓஓஓ எனக்கு புரிஞ்சிட்டுடி செல்லம்"
"ஆதிரா உன் வாழ்க்கையில் குறுக்க வந்ததால தான்,என் கண்மணிக்கு இவ்வளவு கோவமா?என்று ருத்ரன் கேட்க,அதைக்கேட்டு ஆர்கலிக்கு மேலும் கோவம் வந்தது"
"இங்க பாரு,ஒழுங்கு மரியாதையா வாயை மூடிட்டு போய்டு".
"குழம்புலாம் கொதிக்க கொதிக்க இருக்கு.எடுத்து மூஞ்சிலியே ஊத்திடுவேன் என்க,ஏய் இந்த மூஞ்சை தான் டி சில வருஷமா நல்லாவே சைட் அடிச்ச"
"அதும் வீடியோ கால்ல முழுங்குற போல,இந்த முட்ட முழிய வச்சிக்கிட்டு பார்ப்பியே,அதெல்லாம் மறந்துடுச்சா செல்லம் என்றான்"
"டேய் பிசாசு ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு போயிடுடா.எனக்கு வர கோவத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று ஆர்கலி சொல்ல,என்னடி வர வர மரியாதை ரொம்ப தேயுது என்று,அவள் கன்னத்தை பிடித்து ஆட்டிக்கொண்டே ருத்ரன் கேட்டான்"
"கையை எடுடா கபோதி என்றாள்"
ஏன்டி ஒரு டீச்சர் போலவா பேசுறே?,வாயில இப்படி வார்த்தைகள் வருது என்க,எனக்கு இன்னமும் வரும்.அது நீ நடந்து கொள்வது பொறுத்து என்றாள்.
"ஹேய் செல்லம் நான் நல்லா ஸ்டைலா தாண்டி நடப்பேன்".
இரு இப்போ நடந்து காட்டுறேனென்று உட்கார்ந்திருந்தவன் எழப்போக,டேய் இப்படி சாப்பிட உட்கார்ந்து பாதிலே எந்திரிக்கிறியே,கொஞ்சம் கூட உனக்கு அறிவே கிடையாதா? என்க,ஐயோ ஐயோ....
"என் பொண்டாட்டிக்கு என் மேல எவ்வளவு அக்கறை.இதை பார்க்கும் போது உடம்புலாம் அப்படியே புல்லரிக்குதென்று,தனது இரண்டு கைகளையும் அவள் முன்பு காட்டி ருத்ரன் சொல்ல, அதற்கு ஆர்கலியோ, குஷ்டமா இருக்க போகுது.போய் நல்ல டாக்டரிடம் காட்டு என்றாள்"
"எனக்கு வைத்தியம் பண்ண தான் பெரிய டாக்டர் என் செல்ல பொண்டாட்டி இருக்கியேடி"
"உன்னை விட பெரிய மருந்து இந்த உலகத்தில் இருக்கா செல்லம்"என கண்ணடித்து கேட்க,கோவத்தில் என்ன செய்கிறோமென்று தெரியாமல்,சாதத்தில் இருந்த கரண்டியை எடுத்தவள்,ருத்ரன் சுதாரிப்பதற்குள் தையல் போட்ட கையில் வேகமாக அடித்து விட,வலியில் ஆஆ என்று கத்தி விட்டான்"
"ருத்ரனின் சத்தத்தில் தோட்டத்திலிருந்த கருப்பாயியும், பாட்டியும் என்னாச்சு என்று உள்ளே வந்து பார்க்க,தையல் போட்ட கையில் இருந்து ரத்தம் கசிந்தது"
"அய்யோ தம்பி என்றவாறு செல்பில் இருந்த பஞ்சை எடுத்த கருப்பாயி அவன் கையில் துடைத்து விட, இரத்தம் மேலும் அதிகமாக வெளியேற,தம்பி இருய்யா உன் மாமனை வரச்சொல்லுறேன்"
"டாக்டர் கிட்ட போகலாமென்றவர், இடுப்பில் இருந்த போனை எடுத்து சங்கருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,ஏய் புள்ள இன்றைக்கு நம்ப ஊருக்கு நர்ஸ் வரும் நாள் தான் டி"
"அங்க போகலாம் இதோ வரெனென்றவர் வேகமாக வந்து ருத்ரனை கூப்பிட்டுக்கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும் பால்வாடிக்கு சென்று நர்ஸிடம் விஷயத்தை சொல்ல,செக் பண்ணி பார்த்தவர் நல்ல வேளை தையல் பிரியலை என்றவாறு கையை துடைத்து விட்டு,தன்னிடமிருந்த மருந்தை போட்டு விட்டார்"
கனடா-களுத்துறை:
"வீடியோகாலில் இருப்பவனின் உருவத்தை பார்க்க முடியாத அளவுக்கு
ஆதிராவின் கண்கள் நீரால் நிரப்பி இருந்தது"
சரி நாம பக்கத்தில் இருந்தால் என்னத்தை பேசுவாங்களென்ற ஆனந்த்,ரஞ்சா நீ போய் பேசிட்டு வா என்க,"சரி மாமா என்றவாறு மொபைலோடு எழுந்து வெளியே வந்தான்"
"தன்னவனின் உருவத்தை கண்டவள் கண்ணை ஒரு நொடி சிமிட்டினாலும் உள்ளிருந்த நீர்த்துளி கீழே பட்டு சிதறும்"
நிச்சயமாக இது அருகில் இருக்கும் ரியாவிற்கு தெரிந்துவிடும் என்பதால், போனை எடுத்துக் கொண்டு, "அங்கிருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்"
"ஓஓஓ மேடமிற்கு வெட்கம் போலவென்று ரியா சிரித்து விட்டு, இரவு உணவை தயார் பண்ண கிச்சனிற்குள் சென்று விட்டாள்"
" ஹலோ ஹலோ என்ற ரஞ்ஜனின் குரல் கேட்டு,ஆதிராவிற்கு ரொம்ப பட படப்பாக இருந்தது"
"ஹலோ ஆதிரா நீங்க லைன்ல இருக்கீங்களா,இல்லையா?என்று ரஞ்ஜன் கேட்க,அந்த குரலில் உள்ள கம்பீரத்தில் சற்று மயங்கி போனவள், மீண்டும் ஒருமுறை தனது பெயரை சொல்ல மாட்டானா??என்று ஆவலோடு காத்திருந்தாள்"
"சிறிது நொடி அமைதியாக இருந்த ரஞ்ஜன்.ஓகே மிஸ் ஆதிரா.
உங்களுக்கு என்கிட்ட பேச பிடிக்கவில்லை என்பது நல்லா தெரியுது"
"இதிலேயே உங்கள் முடிவும் எனக்கு புரிந்து விட்டது".
இது சரிவராது என்று நான் வீட்டில் சொல்லி விடுகிறேனென்க,அய்யோஓஓஓ!!
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று வேகமாக சொன்னாள்"
"தன் மனதிற்கு பிடித்தவளின் பதற்றமான குரலை கேட்டு, ரஞ்ஜனின் உள்ளுக்குள் சாரல் மழை வீசி சென்றது"
"அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,பின்ன என்னங்க ஆதிரா,நீங்க என் முகத்தை கூட பார்த்து பேச மாட்டேங்கிறீங்க.
"ஒருவேளை உங்க அழகுக்கு நான் ஈடான ஆள் இல்லை என்று நினைத்து விட்டீர்களா?போல என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்"
"உங்களுக்கு என்ன அப்பதிலிருந்து நீங்க ஹேண்ட்ஸமா தானே இருக்கீங்க என்று,பொறுமையாக ஆதிரா சொல்வது ரஞ்ஜனின் காதில் நன்கு விழுந்தது"
"எப்போ இருந்து என்று ரஞ்சன் ஒரு மார்க்கமாக கேட்க,நீங்க மூன்று பேரும் என்னை காப்பாற்றினீங்களே அன்றிலிருந்து தான் என்றாள்"
"ஆதிராவின் பேச்சு ரஞ்ஜனுக்கு எதையோ புரிய வைக்க,ஒரு நிமிஷம் உன் முகத்தை நல்லா காட்டியபடி என்னை பாரு என்று போனை பார்த்து சொல்ல,என்னால இப்போ பார்க்க முடியல என்று சொன்னாள்"
"ஏன் வெட்கமா இருக்கா?என்று கேட்க ம்ம் என்றவளை பார்த்து,எதே பிடாரிக்கு வெட்கம்லாம் வருமா என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தான் ஆது"
" இங்க குடுடா என்றவாறு போனை வாங்கியவன், ஏய் பிடாரி எப்படி டி இருக்க என்க,நல்லா இருக்கேன்ணா, நீங்கள் எப்படி இருக்கிறீங்க என்றாள்"
எதேஏஏஏ அண்ணனாவாஆஆஆ என்றபடி ஆது தனது நெஞ்சில் கையை வைக்க,ம்ம்.நீங்க கடைசியா பார்த்த ஆதிரா இப்போ இல்லைணா.
இந்த ஆதிராவிற்கு உலகம் புரிஞ்சிட்டு. மனிதர்களுடைய நிறங்களை கண்டறியும் அறிவும் வளர்ந்துட்டுணா என்க, ஆதி உண்மையிலே நீயாடா பேசுற என ஆது கேட்க,நானே தான் அண்ணா.
இப்போ பேசுறது புது மனுஷி தான் என்றவள்,என் தப்பை நான் அன்றே உணர்ந்துட்டேன் ணா.நீங்க நம்பலாமென்று ஆதிரா கம்பிரமாக சொல்ல,இது போதும்டா ஆதி.
"நாம் பேசுறது இங்க ஒரு பண்ணாடைக்கு வயிற்றெரிச்சலா இருக்கு.உன் வாயை திறந்து ஒரு வார்த்தை புடிச்சிருக்கென்று சொல்லிடுடா என்க,எனக்கு ரொம்ப புடிச்சிருக்குணா,நீங்களேஇதை நம்ப வீட்ல சொல்லிடுங்களென்று சொல்லிய ஆதிரா அழைப்பை கட் பண்ணினாள்"