• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
பஞ்சாப்- மிலிட்ரி மருத்துவமனை:

வசுக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடிய, அம்மா பகவதி தாயே, நீ தான் என் மகளை காப்பாத்தியிருக்கயென்று சொல்லிய சுந்தரபாண்டியனுக்கு, அதன் பிறகு தான் மனம் நிம்மதியானது.


தம்பி,உன் அம்மாக்கு போன் பண்ணி சொல்லுப்பா என்க, இதோப்பா என்றவாறு தனது போனை எடுத்து சைலஜா பாட்டிக்கு மைக்கேல் கால் பண்ண, ரிங் போய் கொண்டே இருக்க, எடுக்கவில்லை"

"அப்பா, ரிங் போகுது, அம்மா எடுக்கவில்லையே என சொல்ல, ம்ம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை என்றவர், சரி விடு. பார்த்துட்டு, சைலுவே கால் பண்ணுவா என்றார்".

" அந்நேரம் பிரதமரின் செக்ரட்ரி பாதுகாவலரோடு அங்கு வர, அவரை பார்த்து எழுந்து நின்ற தேவ், சார் என்றான்".

" இப்போ எப்படி இருக்காங்களென்க, டாக்டர் சொல்லி சென்றதை மேஜர் தேவ் சொல்ல, சார் உங்களை போலவே நாட்டு மேல மேடமிற்கும் ரொம்ப அக்கறை".

"இவங்களை போல வீராங்கனைகளுக்கு, அவ்வளவு எளிதில் எதுவும் நடக்காது. இன்றைக்கு நம்ப நாடு இவ்வளவு அமைதியாக இருக்க முழுக்க காரணமே, உங்களோட பொண்ணு தான்".

" கடவுள் கிட்ட வேண்டிக்குறேன், விரைவில் குணமாகி அவங்கள் வழக்கம் போல வெற்றி நடை போடணுமென்று சொல்லியவர், மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அங்கிருந்து சென்றார்".

" சிறிது நிமிடம் வரை அமைதியாக இருந்த மைக்கேல், மேஜர் தேவ் கிட்ட வந்தவர், சார் என்னோட தங்கச்சிக்கு என்ன நடந்தது?,வசு எப்படி இங்கே பஞ்சாபில்? என்று கேட்க, நிமிர்ந்து பார்த்த மேஜர் தேவ், இது அபிஸியல் விஷயம்".

" பட், சார் இந்த பீல்டில் இருந்துருக்காங்களென்பதால், சொல்லுறேனென்ற மேஜர்,வசுந்தரா சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் ஆபிசர் மட்டுமில்லை, அவங்க சிபிஐ ஆபிசர் என்பது உங்களுக்கு தெரியும் தானே? என்று கேட்டார்".

" சுந்தரபாண்டியன் தெரியாது என்க, எனக்கு தெரியுமென்று மைக்கேல் சொல்ல, என்னாஆஆ என அதிர்ந்து போன வசுவின் அப்பா, தம்பி நீ சொல்வது உண்மையா? என கேட்க, ஆமாப்பா என தலையசைத்தவர், தங்கச்சி தான் பா உங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்ல வேண்டாமென்று சொல்லுச்சி".

" அம்மாக்கு தெரிந்தால் கஷ்டப்படுவாங்களென்று என்க, ம்கும்... ஏண்டா, அதுக்குனு அப்பன்காரன் என்கிட்டையாவது ரெண்டு பேரும் சொல்லியிருக்கலாமேடா?.

"என் கிட்ட கூட சொல்லாம இருக்க என்ன அவசியமென்க,அபிஸியல்பா என்றார்".

" இந்த நிலமையிலும் மைக்கேல் சொல்லியதைக்கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வர, சுந்தரபாண்டியன் தாத்தாவோ மகனை முறைத்து கொண்டிருக்க... ".

" அப்பா, நம்ப பஞ்சாயத்தை வீட்டில் போய் வைத்துக்கொள்ளுவோம்".

" முதல்ல என் தங்கச்சி குணமாகட்டுமென்று அங்கிருந்து செல்ல, அடுத்த கேள்வி கேட்டுறக்கூடாதென்று எப்படி தப்பிச்சி ஓடுறான் பாரென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், உன் அம்மாக்கு கால் பண்ணி சொல்லு என்க..

"ம்ம், இதோ என்றவர் மீண்டும் சைலஜா பாட்டிக்கு கால் பண்ண, இந்த முறையும் கால் அட்டென் பண்ணவில்லை".

" நேரமும் கடந்து செல்ல, வசுக்கு நினைவு வந்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லி செல்ல, பர்மிஷன் கேட்டுக்கொண்டு சுந்தரபாண்டியன் உள்ளே போய் மகளை பார்த்தவர், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாலும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது".

" அப்பா எனக்கு ஒன்னும் இல்லை, நல்லா இருக்கேன். ஆமாம், அம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா? என கேட்க, ம்ம் என தலையசைத்து விட்டு,தனது மகளிடம் எதுவும் பேசாமல், வெளியே சென்று விட்டார்"

" சில நொடியில் உள்ளே வந்த மைக்கேல், வசு என கண்கலங்க, அண்ணா. ஏன் இப்படி?, சாரி ணா. உன் கிட்ட சொல்லாமல் போய்விட்டேன்".

" அங்க சூழ்நிலை சரியில்லை, அதனால் தான் என்க, சரி மா. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது".

"வசு, அப்புறம் அம்முவை கூப்பிட தான் அம்மாங்க ரெண்டு பேரும் போயிருக்காங்களென்று சொல்ல, நிஜமாவாணா என அதிர்ந்தார்".

" இப்படிலாம் அதிராத, ஆப்ரேஷன் பண்ணிய உடம்பு வசுமா என்க, அண்ணா, இது கொஞ்சம் ஓவர் தான்".

" சின்ன சர்ஜரி தான் என்ற வசுந்தரா, ஏன் ணா?, நீ விருதாச்சலம் போறேனு மட்டும் தான் சொன்னாய், அதன் பிறகு என்ன நடந்துச்சி?, நானும் அங்கு இல்லை"

" அதனால் உன் கிட்ட விசாரிக்க முடியவில்லை என வசு சொல்ல, நீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வா, அங்கு போய் எல்லாம் பேசிக்கலாமென்று மைக்கேல் சொல்ல, அண்ணா.. ".

" ஆம் பர்பெக்ட்லி ஆல்ரைட் டோன்ட் வொரிணா. பிளீஸ் விஷயத்தை சொல்லு என்க..

" கண்ணை மூடி திறந்தவர், விருதாச்சலத்தில் பாட்டி சொல்லியதையெல்லாம் வசு விடம் சொல்லியவர், அதன் பிறகு நடந்ததை சொல்லலானார்".

விருதாச்சலம்- சதூர்வேதமங்கலம்:

" ஆட்டோ டிரைவர் சொல்லியதை கேட்ட மைக்கேலுக்கு, இது சரியான ஐடியா தான் என தோணியது"

"சரியென்று அவரிடம் போன் நம்பரை வாங்கியவர், இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு, பக்கத்தில் இருக்கும் லைப்ரரிக்கு சென்றவர், அங்கிருந்த அலுவலகரிடம் விஷயத்தை சொல்ல, அவரும் மைக்கேல் கேட்டதை எடுத்துக்கொடுத்தார்"

" அன்றைய தேதியில் வந்த எல்லா செய்தித்தாளிலையும் சதூர்வேதமங்கலம் என்ற பேரில் விளம்பரம் வந்திருக்கின்றதா என்று தேட ஆரம்பிக்க,இருபது நிமிடம் கடந்தது".

" இதுவரை தேடிய எந்த நியூஸ் பேப்பரிலும் கிடைக்கவில்லை. மீதம் இருக்கும் பேப்பரை எடுத்தவர், ஒவ்வொரு பக்கமாக தேடிக்கொண்டே வர, பதினொன்றாவது பக்கத்தில் பெரிய எழுத்தில் டீச்சர்கள் தேவையென்ற விளம்பரம் இருந்தது".

" அதை பார்த்து விட்டு, முதலில் எந்த ஊரென்று செக் பண்ண, அதில் கண்ணன்,நம்பர் 6 , மெயின் ரோடு, சதூர்வேதமங்கலம் என்ற அட்ரஸும், போன் நம்பரும் இருக்க, தனது மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டவர், பேப்பரை மடித்து வைத்து விட்டு, தேங்க்ஸ் சொல்லியபடி வெளியே வந்தவர், மேப் ஆன் பண்ணி ஊரை சர்ச் பண்ண, வழியும் காட்டியது".

" பின்னர் தனது காரில் ஏறி மேப் காட்டும் வழியிலே காரை ஓட்டிக்கொண்டு சென்றவர், ஒரு மணி நேரத்தில் அந்த டவுனிற்கு வந்தவர், மணியை பார்க்க, மாலை ஆறு என்று காட்டியது".

" இந்த நேரத்தில் போனால் சரி வருமா? என யோசித்தவர், வேண்டாம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை".

" நைட் இங்கே எங்கையாவது கெஸ்ட் ஹவுஸில் ஸ்டே பண்ணி விட்டு, காலையில் போகலாமென முடிவு செய்தவர், பக்கத்தில் இருந்த கடையில் விசாரித்து விட்டு, அவர் சொன்ன இடத்தில் போய் ரூம் எடுத்து தங்கிக்கொண்டார்".

" கீழ் ப்ளோரில் ஹோட்டல் இருந்ததால், சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்த மைக்கேல், நைட் டின்னரை முடித்துக்கொண்டு, மேலே உள்ள ரூமில் படுக்க,அசதியில் சீக்கிரமாகவே தூங்கி விட்டார்"

இரத்தினகிரி டூ களுத்துறை பயணம்- நினைவுகள்:

" அண்ணா, அம்மாவை கையெழுத்து போட சொல்லி அந்த ஆள் ,கழுத்தை நெரிச்சார்ணா, எவ்வளவோ நானும் அவர்கிட்ட கெஞ்சினேன்".

" உடனே அந்த பொம்பளை என் கழுத்தில் கத்தியை வச்சதும், அம்மா கையெழுத்து போட்டுட்டாங்க".

" அந்த டாக்குமெண்ட்ஸை வாங்கி கிட்டு மேலே சொல்ல முடியாமல் அழுதவளை போதும் விடுடா என ரஞ்சன் தன் தங்கையின் முதுகில் தட்ட, இல்லைணா உன் கிட்ட நான் சொல்லிடுறேன்".

" பிறகு என்னால் நிம்மதியா இருக்க முடியாது என்றவள், மீதத்தையும் சொல்லலானாள்".

" நான் தான் கையெழுத்து போட்டேனே என் பொண்ணை விடுங்கனு அம்மா அந்த ஆள் கால்ல விழுந்து அழ, காலாலே அம்மா கழுத்தில் உதைச்சி கொன்னுட்டார்ணா".

" அதை பார்த்து நான் ஓடி வரும் போது அவள் கால் தடுக்கி கீழே விழுந்தேன். பிறகு என்ன நடந்ததுணா? என்று ராகினி கேட்க, ரஞ்சனும் சுருக்கமாக சொல்லி முடித்தான்".

" பின்னர் ராகினியை டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டுக்கொண்டு ஆதுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்"

யார் வீடுணா? என்றவாறு காரில் இருந்து ராகினி இறங்க, நம்ப மாமா வீடு தான் டா. வா என்ற ரஞ்சன், தங்கையின் தோளோடு அணைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல, செல்லாவும் கிச்சனில் இருந்து வெளியே வந்தவர், வாம்மா".

" இப்போ தான் நீ வராயென்று அண்ணா சொன்னாங்களென்க, யார் என தெரியவில்லை என்றாலும், அவரின் அன்பான வார்த்தைகள் ராகினிக்கு இதமாக இருந்தது".

"உட்காருங்கப்பா, குடிக்க டீ கொண்டு வருனென்று செல்லா உள்ளே சென்ற பின்னர், அந்த ஹாலை சுற்றி பார்த்த ராகினிக்கு,யார் வீடு இதுவென்று, சுவற்றில் இருக்கும் வித விதமான புகைப்படங்களே சொல்லியது ".

"நண்பர்கள் மூவரும் எதுவும் பேசிக்கவில்லை. மதிய உணவும் தயாராகிட்டென்று செல்லா சொல்ல, சாப்பிட்டு முடித்த மூவரும், ஷோரூமிற்கு சென்றனர்".

" மாடியில் இருக்கும் அறையில் இருந்த ராகினி, கையில் இருந்த புகைப்படத்தை தொட்டு பார்த்து அழுதாள். என்னை உங்களுக்கு நினைவு இருக்கின்றதா?, இருக்காது".

"வருஷங்கள் போயிட்டே, இடையில் உங்க வாழ்க்கையில் வேறு யாராவது வந்திருக்கலாமென்று சொல்லும் போதே, அப்படி இருக்க கூடாதென்று ஆழ் மனதும் சொல்லிக்கொள்ள, ஆமாம் அப்படி இல்லை தான்".

" என்னோட ஆது தான் நீங்கள். எனக்கு நல்லா தெரியுமென்று கண்ணை துடைத்தவள், ஃபோட்டோவை எடுத்த இடத்திலே வைத்து விட்டாள்".

" பின்னர் கீழே போய் செல்லாவிடம் பேசிக்கொண்டிருக்க நேரமும் கடந்தது. ஆனந்தும் வீட்டிற்கு வந்த சேர, ராகினியை பார்த்தவர், என்னை ஞாபகம் இருக்கா என்றார்".

" இருக்குங்க மாமா என்று சிரித்தவள், அவர் காலில் விழ, தீர்க்க சுமங்கலியாக வாழுமா என்க, அந்த நேரம் ஆது வீட்டின் உள்ளே வந்தான்".

" நீ எப்போ பா வந்தாயென்றவாறு மாடிக்கு சென்றவன், சிறிது நிமிடத்தில் ஏதோ ஒரு பைலோடு கீழே வந்தவன், ராகினியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்".

" அதன் பிறகு அந்த வீட்டு பொண்ணாகவே ராகினி மாறிவிட்டாள்".

"அதிகாலையிலே எழுந்து குளித்து தயாராகி கீழே வருபவள், தோட்டத்தில் இருக்கும் பூக்களை பரித்து, மாலையாக்கி பூஜையறையில் இருக்கும் சாமிக்கு போடுவதும், செவ்வாய்,வெள்ளி சாம்பிராணி புகை போடுவதையெல்லாம் கண்ட ஆனந்திற்கு, மனைவி இருக்கும் போது, இந்த வீடு இருந்த சூழல் நினைவிற்குள் வந்தது".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
449
சதூர்வேதமங்கலம்:

"டேப்லெட் எழுதி தரேன்,ஒன் வீக் ஆன பிறகு தையல் பிரிகலாமென்க, அய்யோ டாக்டர்.நான் இன்னும் ரெண்டு நாளில் இலங்கைக்கு போயாகணும்".


"சம் பர்சனல் ரீசன் டாக்டர் என ருத்ரன் சொல்ல, நோ பிராப்ளம்.நீங்க அங்கையே ரிமூவ் பண்ணிக்கலாமென்க,ஹம் தேங்க்யூ டாக்டர் என்றவாறு இருவரும் வெளியே வந்தனர்".


"காரிலிருந்து இறங்கி உள்ளே வரும் பேரனை பார்த்த கிரிஜா பாட்டி,அப்பா வீரா என்று அவனருகில் வந்தவர், பேரனின் கையை பார்க்க,அங்கே தையல் போட்டிருப்பது தெரிந்தது".

"வாப்பா, எதாவது குடிக்கிறியா என்க, டீ வேண்டுமென்றான்.ம்ம் என்றவர் அம்மாடி மலர் என்க,இதோ வரேன் பெரியம்மா என்றவாறு, சில நிமிடத்தில் டீ கப்போடு அங்கு வந்தவர்,டீப்பாயின் மேலே வைத்துச் சென்றார்"

" இடது கையால் எட்டி எடுத்தவன் டீயை குடித்து விட்டு,கண்களை சுழற்றி அங்கே மனைவியை தேட, ஆர்கலி இன்னும் வரவில்லை வீரா".

" சைலு போன் பண்ணியதற்கு, கொஞ்ச நேரத்தில் வரெனென்று சொல்லியிருக்காளென்க, ம்ம் என்றவன், தனது போனை எடுத்து பார்க்க, அதில் ஆதுவிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டுகால்ஸ் இருந்தது"

"ஏன் கால் வந்த சத்தம் கேட்கவில்லை? என்று செட்டிங்ஸில் போய் செக் பண்ண,அது
சைலண்டில் இருப்பது தெரிய, அப்பொழுது தான் காலையில் பங்ஷனுக்கு போயிருந்த போது, தொடர்ந்து கால் வர,சிம்ஹன் தாத்தா முறைப்பதை கண்டு, சைலண்டில் வைத்தது நினைவிற்கு வந்தது".

என்னாச்சி?, இவ்வளவு கால் பண்ணியிருக்கானென்று முணவிக்கொண்டே ஆதுவின் நம்பருக்கு கால் பண்ண, நாட் ரீச்சபில் என சொல்ல, சரி மிஸ்டுகால் பார்த்துட்டு பண்ணுவானென்று சொல்லி அழைப்பை கட் பண்ணியவன், எழுந்து ரூமிற்குள் சென்றான்".

" போகும் பேரனையே பார்த்துக் கொண்டிருந்த சிம்ஹன் தாத்தா,கொஞ்ச நேரம் வாக் பண்ணிட்டு வரேனென்று சொல்லி எழுந்து வெளியே சென்றார்".

" அந்த ஹாலில் அக்கா தங்கை இருவர் மட்டுமே இருந்தனர்".

" கிரி உன் கிட்ட ஒன்னு கேட்கணுமென்று சைலஜா பாட்டி சொல்ல, கேளு சைலு, என் கிட்ட கேட்க உனக்கு என்னடி தயக்கமென்று கிரிஜா பாட்டி சொல்ல, ம்ம்"

" எப்படி ஆரம்பிப்பது என்பது தான் தெரியலை என்கும் போது,அம்மா யாராவது பூஜையறையில் போனை வைத்தீங்களா?, ரொம்ப நேரமா கால் வரும் சத்தம் கேட்டுட்டே இருக்கென்க..

அய்யோ என்ற சைலஜா பாட்டி, நான் தான் மலரென்றவர், வேகமாக சென்று போனை எடுத்து பார்க்க, அதில் கணவரிடமிருந்தும், மகனிடமிருந்தும் ஏகப்பட்ட மிஸ்டுகால் இருந்தது".

" மைக்கேல் நம்பருக்கு கால் பண்ண, உடனே அட்டென் பண்ணியவர், வசு நல்லா இருப்பதாக சொல்லி விட்டு, சத்தம் போட, காலையில் உன் தங்கச்சிக்காக வேண்டிக்க வந்தேன் பா".

" அப்போ மறந்து சாமி ரூம்ளையே வச்சிட்டேனென்றவர், அப்பா எங்கே என்க,இதோ தரேனென்று சொல்லி வார்டில் இருந்து வெளியே வந்தவர், சுந்தரபாண்டியனிடம் போய் அம்மா பா என்க, போனை வாங்கி சிறிது நிமிடம் பேசி விட்டு வைத்தார்".

" அம்மா பகவதி தாயே, என் வேண்டுதல் வீண் போகவில்லை என்றபடியே ஹாலிற்கு வந்தவர், தனது அக்காவிடம் வசு பற்றி சொல்ல, அவரும் கடவுளுக்கு நன்றியென்றவர், தனது தங்கையின் தோளில் தட்டி கொடுத்து, சரியாகிடும்".

"நாம் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணவில்லை சைலு, நம்ப புள்ளைங்க நல்லா இருப்பாங்க".

முதல்ல இதுங்களை ஒன்னு சேர்கணும் என்க, ஆமா கிரி, இன்னும் ஏன் வீரா மேல மாமா கோவமாக இருக்காரு?.

" எல்லாம் ஒரு நேரம் தான் என்க, நீ சொல்றதும் சரி தான் சைலு. வீராகிட்டிருந்து இப்படி ஒரு செயலை அவர் எதிர் பார்க்கவில்லை".

"தன் வளர்ப்பு தப்பாகிட்டோ என்ற எண்ணம் தான், உன் மாமாக்கு இப்போ உறுத்தலா இருக்கென்றார்".

ஜன்னல் வழியாக தூரத்தில் மறையும் சூரியனை பார்த்துக் கொண்டிருந்த ருத்ரனுக்கு,அன்றொரு நாள் கடைசியாக ஆர்கலியை பார்த்த நினைவு வந்தது".

ஆர்கலி வீடு:

" இடது கையை நீட்டி, அதன் மேல் தலை வைத்து தரையில் படுத்திருந்த ஆர்கலியின் கண்கள் மட்டும் கண்ணீரை சிந்த மறக்கவில்லை".

" யார் முகத்தில் இனி விழிக்க கூடாது என இருந்தனோ, அவன் கூடவே மீண்டும் எப்படி சேர்ந்து இருக்க முடியுமென்று மனதிற்குள் நினைத்தவள், அன்று திருச்சூரில் நடந்ததை நினைத்து பார்க்கலானாள்".

மூன்று மாதங்களுக்கு முன்னர்-...

திருச்சூர் பாண்டியன் பேலஸ்:

" தூங்கி எழுந்த ஆர்கலிக்கு கண்கள் இரண்டும் எரிச்சலாக இருப்பது போல தோண, சரி எண்ணெய் தேய்த்து குளிக்கலாமென்று, தனது நீண்ட கூந்தலில், எண்ணெய் தடவி சிறிது நேரம் சென்று குளித்து முடித்தவள், தயாராகி வெளியே வந்தாள்".

"அங்கே ஹாலில் யாரும் இல்லாததை பார்த்தது,பாட்டீ பாட்டீ என கிச்சன் பக்கம் குரல் கொடுக்க, எந்திரிச்சிட்டியா அம்மு என்றவாறு அங்கு வந்த மீரா,வா வா சாப்பிட்டுக்கோடா"

" சைலுவும், அண்ணாவும் ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க, வசுவும், தம்பியும் வேலை விஷயமா காலையிலே போயாச்சி. வழக்கமா நீ எழுந்து வரும் நேரம் தாண்ட,உன்னை வந்து பார்த்தேன்".

"நீ நல்ல தூக்கத்தில் இருந்தியா,அதான் திரும்ப வந்துவிட்டேன் அம்மு என்றபடியே, தட்டில் டிபனை பரிமாற,சரி சரி.நீங்க சாப்டீங்களா பாட்டி என்றாள்".

"ம்ம் ஆச்சு,நீ மட்டும் தான் சாப்பிடலை என்றவரை பார்த்து சிரித்தவள், பின்னர் சாப்பிட்டு முடித்து எழுந்தவள், மணி பார்க்க, காலை 10.40 என காட்டியது".

"பின்னர் எஸ்டேட்டில் இருக்கும் மேனேஜருக்கு கால் பண்ணியவள்,இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சொல்லி ஃபோனை கட் பண்ணி விட்டு, தனது ரூமிற்கு தயாராக சென்றாள்".

"வேறு புடவையை கட்டியவள், தலையை பின்னி ஹேர்பேண்ட் போட்டு விட்டு, நெற்றியில் சிறு பொட்டை வைத்தவள், ஹேண்ட் பேகோடு கதவை திறக்க, எதிரில் நிற்கும் உருவத்தை பார்த்து, விழிகள் விரிய அதிர்ந்து போனாள் ஆர்கலி".

"மை டியர் பார்பி டாலென்று சொல்லி, அதிர்ந்து நிற்பவளை தாவி அணைத்தவனுக்கு ஏதோ வித்தியாசம் தெரிய, அணைத்தவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தியவன், அவளை பார்க்க, இப்பொழுது ருத்ரன் அதிர்ந்து போய் நின்றான்".

"பட்டென்று அடுத்த நொடியே சுதாரித்தவன், ஹவ் டாமீட் என்று சொல்லி,அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவன், எப்படி டி எனக்கு துரோகம் பண்ண உனக்கு தோணுச்சு?.

"நான் அங்க இருக்கும் போது,இங்கு எவன் கூட இருந்து இது?.

இப்படி கேட்டதிலே ஆர்கலி உயிரோடே மரித்துவிட்டாள்.

ச்சை ...

எவ்வளவு கேவலமானவள்டி நீ, உன்னை பார்க்க, எல்லாத்தையும் விட்டு வந்தேன் பாரு, என்னை அடிக்கணும்.

சொல்லுடி?.

எவன் குழந்தை இது?.

பிச்சக்கார புத்தியை காட்டிட்ட இல்லை.

தாலி கட்டுனவன் நான் உசுரோட அங்கு இருக்கும் போது, நீ இங்க எவன் கூட ஊர் மேய்ஞ்சி இதை வாங்கினாயென்று, மேலும் இரண்டு அறை விட்டான்.

அப்பொழுதும் அவன் கோவம் அடங்கவில்லை, கதவை தாழிட்டவன், கீழே விழுந்து கிடப்பவளின் முன்பு போய் குனிந்து, அவள் முடியை பிடித்து தூக்கியவன், ஒருத்தன் தான் அப்பனா?.

இல்லை?, பலரா?.

ரேட் எப்படி பேசுனாய்?.

பணமா, இல்லை அக்கவுண்டில் போட்டானுங்களா?.

இந்த கன்னத்துக்கு எவ்வளவு கொடுத்தானென்று கைகளால் அழுத்த, வலியில் அவளுக்கு கண் கலங்கியது.

என்ன வயசுடி உனக்கு?, அதற்குள் எத்தனை ஆம்பிளை தேடியிருக்க, அதும் புருஷன்காரன் வேற தேசத்தில் இருக்கும் போது...

பரதேசி,நல்ல வழியில் பிறந்திருந்தால் நீயும் நல்லவளா இருந்திருப்பாய். நீயே எந்த கேடு கெட்ட நாய்ங்களுக்கு பிறந்தியோ?, அதான் அவங்களோட சாக்கடை புத்தி இப்படி.

அது இருக்கட்டும், எவ்வளவு ரேட் உனக்கு?.

ஏனென்றால் ,உன் கழுத்தில் தாலி கட்டிய நான் இன்னும் உன்னை தொடவில்லையே என்றவாறு, ஆர்கலியின் கழுத்திலிருந்த தாலியை அறுத்தெரிந்தவன், உனக்கு இது ஒன்னு தான் கேடு.

அய்யோஓஓஓ என கத்தியவன், எத்தனை ஆசையா உன்னை பார்க்க வந்தேன்டி.

அத்தனையும் நாசமாக்கிட்டியே என்றவனுக்கு கோவம் தலைக்கு மேல ஏற, அவள் புடவையை பிய்த்து எறிந்தவன், ஜடம் போல நிற்ப்பவளை, அங்கிருந்த கட்டில் மேல் தள்ளி, கணவனாக உரிமையை ஆளுகை செய்தான்.

ருத்ரனின் மூர்கதனத்தில் ஆர்கலி கதறி துடித்தவள்,அவனிடம் இன்னும் வேகம் கண்டு,அப்பொழுது தான் வயிற்றில் பாப்பா என்று வாயை திறக்க, அது மேலும் கோவத்தை மூட்ட,எதையும் உணராதவன், தன் செயலில் மட்டுமே குறியானவன், மேலும் அவளை கடித்து குதறி விட்டு எழுந்தவன், தனது பர்சை தேடி, அதில் இருந்த பணத்தை எடுத்து, ஆர்கலியின் மேலே விசிறி எறிந்து விட்டு, டிரஸை போட்டுக்கொண்டு வெளியே சென்று விட்டான்".

"கிழிந்த நாராய் பெட்டில் கிடந்தவள், பொறுமையாக எழுந்து போய் குளித்து விட்டு, வேறு உடையை மாற்றிக் கொண்டவள், வழக்கம் போல எஸ்டேட்டிற்கு போவது போல ரெடியாகி, ஹேண்ட்பேகில், தனது சர்டிபிகேட், இத்தனை மாதங்களாக வாங்கிய சம்பளத்தையும் எடுத்து உள்ளே வைத்தவள், சாதாரணமாக அங்கிருந்து சென்றாள்"

"சற்று நேரத்திற்கு முன்னர் தான் அவள் போன் பேசும் போது காதில் வாங்கிய மீரா,அதன் பின்னர் ஆர்கலியை கண்டு கொள்ளவில்லை".

"அங்கிருந்த இன்னொரு அறைக்குள் சென்றவன், போட்டிருந்த ஆடைகளை கழற்றி எறிந்து விட்டு, ரெஸ்ட் ரூம் உள்ளே சென்று ஷவரின் கீழே நிற்க, நீர் பட்ட இடங்கள் எல்லாம் எரிச்சலாக இருந்தது".

"தனது இரு கைகளையும் அங்கிருந்த சுவற்றின் மேல் வைத்து நிற்பவனின் கண்ணிலிருந்து கண்ணீரூம் நீரோடு கலந்து ஓடியது".

"வாழ்க்கையில் முதல் முதலா உன்னை தான் டி விரும்புனேன். ஒவ்வொரு நாளும் நாம வாழப்போற நாளை நினைத்து எத்தனை கனவு கண்டுருப்பேன்?, அத்தனையும் நாசமா போச்சே".

"அய்யோஓஓ ஏமாந்துட்டேனே என்று சொல்லி தலையில் கை வைத்தவன்,நோ நோ, நான் ஏன் இதுக்கு வருத்தப்படணும்".

"ஆண்டவா இந்த கேவலமானவளை பற்றி இப்பயாவது தெரிந்ததே என சொல்லிக் கொண்டவன்,வேகமாக குளித்து தயாராகி,காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்".

ஆர்கலி எங்கே....??
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top