Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
நண்பர்கள் பிரிவு:
ஊட்டியில் மூன்று நாட்கள் சுற்றி பார்த்தவர்கள், மீண்டும் எப்போ சந்திப்போமோ என்பது தெரியாமல், மனமேயின்றி அங்கிருந்து புறப்பட்டனர்.
"கடந்த மூன்று நாட்களின் நிகழ்வுகளை தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு பர்தில் படுத்தவர்கள், களைப்பில் உறங்கி விட்டனர்".
" இருவரும் மயிலாடுதுறை ஜங்ஷனிற்கு வந்து சேர இரவு 9 மணி ஆனது. லக்கேஜோடு வெளியே வர, அங்கே டிரைவரோடு, கண்ணனும் காத்திருந்தார்".
டிரைவர் தான் வருவார் என்று எதிர்பார்க்க, இங்கே கண்ணன் வந்திருந்தது இருவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது".
" பின்னர் ஊட்டி பயணத்தை கேட்டுக் கொண்டே காரில் சென்றவர்கள், போகும் வழியிலே இரவு டின்னரை முடித்துக்கொண்டு கிளம்பினர்".
" இவர்களுக்காய் தேவகியும் தூங்காமல் காத்திருந்தார்".
"மேலும் இரண்டு நாட்கள் செல்ல,மூவரிடமும் சொல்லிக்கொண்டு ஆதிரா இலங்கைக்கு( லண்டன்) கிளம்பினாள்".
ஆதிரா லண்டன் பயணம்:
" சென்னை ஏர்போர்டிற்கு ரியாவும், கண்ணனும் வந்திருந்தனர்.இன்னும் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு செல்ல வேண்டிய ஃப்ளைட் வந்து விடும். அதற்குள் இவர்களை அனுப்பி வைக்கணுமே, என தனக்குள் ஆதிரா முணுமுணுத்தாள்".
" அவள் நேரமோ என்னவோ, இலங்கைக்கு செல்லும் விமானம் இரண்டறை மணி நேரம் தாமதமாக செல்லுமென்று அறிவிப்பு வந்தது".
" தேங்க்யூ காட் என்றவள் ஒரு வழியாக பேசி இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தாள்".
பின்னர் அவளுக்கான ஃப்ளைட் அறிவிப்பு வர,பார்மாலிட்டிஸ் முடிந்து ஆதிராவும் ப்ளைட்டில் ஏறினாள்.25 மணி நேரம் வானில் பறந்து வந்த விமானம்,லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்து இறங்கியது".
" இது தான் ஆதிராவின் நீளமான விமானப்பயணம். தன் கனவை எப்படியாவது வெற்றியாக்கி விட்டு தான் இங்கிருந்து போக வேண்டுமென்ற உறுதியோடு , ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வர,பேபி என்ற குரலில் திரும்பினாள்".
"அங்கே நடுத்தர வயதுள்ள ஆண் ஒருவர் நிற்க, அங்கிள் என்றவாறு போய் அணைத்துக்கொண்டாள்" .
" வா பேபி வீட்ல போய் பேசிக்கலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு சென்றார்"
" ஆதிராவுக்கும் அவருக்கும் பேசுவதற்கு வார்த்தை வரவில்லை. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதால், மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது".
" ஒரு மணி நேர கார் பயணத்தில் அந்த வில்லாவின் உள்ளே கார் நுழைந்தது.இருவரும் லிப்டில் ஏற, அவர் 17 வது ப்ளோரை பிரஸ் பண்ண, சிறிது நிமிடத்தில் மேலே வந்து லிப்ட் நிற்க, கமான் பேபி என்றவர், ஆதிராவின் டிராலியை இழுத்துக் கொண்டு முன்னாடி நடக்க, ஆதிராவும் அவர் பின்னாடியே சென்றாள்".
"அங்கிருந்து லெப்ட் சைடு திரும்பியவர், நான்காவதாக இருக்கும் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்".
" சில நொடியில் கதவை திறந்த பெண்மணி, என்ன ஜேம்ஸ் லக்கேஜ் என்க, சர்ப்ரைஸ் என்றவாறு ஆதிரா வந்து நிற்க, ஜேம்ஸின் மனைவியான ஆலீஸ், ஜீசஸ் என்று அதிர்ந்து போய், தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்".
" சிரித்துக்கொண்டே ஆலிஸை போய் ஆதிரா அணைக்க, பேபிமா என்று அணைத்துக் கொண்டவரின் கண்கள் கலங்கியது".
" சரி சரி வழியை விடுங்க உள்ள போகலாமேன்று ஜேம்ஸ் சொல்ல, வாடா பேபிமா என்று ஆதிராவோடு வீட்டின் உள்ளாரே சென்றவர் எத்தனை வருஷம் ஆகுது உன்னை பார்த்து பேபிமா என்று, அவள் கன்னத்தைக் கிள்ளி ஆலீஸ் முத்தம் கொடுத்தார்".
" சரி முதல்ல மாம், டாட் கிட்ட இங்கு வந்ததை சொல்லுறேனென்றவள், ஜேம்ஸிடமிருந்து ஃபோனை வாங்கி மேகலாவிற்கு கால் பண்ணினாள்".
" கால் அட்டென் பண்ணிய மேகலா, அண்ணா என்க, மாம் என்று தனது முகத்தை ஆதிரா காட்ட, ஹேய்..., நல்லபடியாக போய்ட்டியா பாப்பு".
" ம்ம் என்றவள், இந்தா உன் ஆருயிர் தோழியிடம் பேசுயென்று ஆலிஸிடம் ஃபோனை கொடுத்து விட்டு, ப்ரஷ் ஆக சென்றாள்".
" தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு ஜேம்ஸிடம் கொடுக்க அவரும் பேசி முடித்தவர், பின்னர் போனை வைத்தனர்".
" அதற்குள் ஆதிராவும் பிரஷ் ஆகி வெளியே வந்தவள், என்ன ஆலிஸூஊஊஊ, ஒருத்தி ஊர்ல இருந்து வந்திருக்காளே, அவளுக்கு பசிக்குமே , ஏதாச்சு கொடுக்கணும்கிற எண்ணமே இல்லாமல், இப்படியே உக்காந்து இருக்குறியே என்கவும் நான் பார்த்து பிறந்தவளா நீ?, இன்று இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திட்டியே என்று ஆச்சரியப்பட்டார்".
" ஹலோ டீச்சர்,இப்ப நான் வயசு பொண்ணு மட்டும் இல்லை. ஐ அம் டாக்டர், ஞாபகம் இருக்கா என்க?, நீ எப்பவும் எனக்கு பேபி மா தாண்டா என்று, அவள் கன்னத்தை கிள்ளியவர், இருடா பேபிமா,உனக்கு புடிச்ச காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி, வேகமாக கிச்சன் உள்ளே சென்றார்".
"பின்னர் ஜேம்ஸூம், ஆதிராவும் காம்படேஷன் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்".
"அப்பொழுது பார்வையை வீட்டினுள் சுழல விட்டவள்,ஒரு பக்கம் சுவர் முழுவதும் இருந்த ஃபோட்டோக்களை பார்த்து விழி விரித்தாள்".
" அந்த சுவர் முழுவதும் ஆதிராவின் சிறு வயது புகைப்படங்களும், ஜேம்ஸ், ஆலிஸ், சுந்தர், மேகலா நால்வரும் இலங்கையில் இருந்த போது, எடுத்த புகைப்படங்களாக இருந்தது".
" அதன் அருகில் போய் பார்த்தவளுக்கு, களுத்துறையில் இவர்களோடு இருந்த சிறு வயது ஞாபகங்கள் வந்து செல்ல, இன்னொரு புகைப்படத்தை பார்க்க, அதில் இருந்த முகத்தை உற்று பார்க்க, ஆதிராவின் கண்கள் கலங்கியது".
" விரைவில் உங்களை மீட் பண்ணுவேன் மிஸ்டர். மை டியர் என மனதிற்குள் சொல்லிக் கொண்டவளின் தோளை தொட்ட ஆலீஸ், பேபிமா காஃபி ரெடிடா என்றார்".
"அதன் பிறகு இரண்டு நாட்கள் லண்டனில் சில இடங்களை மூவரும் சுற்றி பார்த்தனர். இன்னும் போட்டிக்கு ஒரு வாரம் தான் மீதம் இருந்தது".
" இரவும் பகலும் தங்களுக்கு தெரிந்தையெல்லாம் ,ஆதிராவிற்கு ஜேம்ஸ் தம்பதிகள் சொல்லி கொடுத்தனர்".
"ஆதிராவிற்கு ஓவியம் வரைய கற்று கொடுத்ததே ஆலீஸ் தான்".
" நேரமும் நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது".
" போட்டிக்கான நாளும் வந்தது".
" மூவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தனர்".
சதூர்வேதமங்கலம்:
" ஆர்கலிக்கு நாட்களும் வேகமாக ஓடியது".
" அவ்வப்போது சித்தர் சொல்லிய வார்த்தைகளும் நினைவுக்குள் வராமலில்லை".
" அன்று ஞாயிறு விடுமுறையாகையால் ஓய்வாக வாசல் திண்ணையில் உட்கார்ந்து, பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது, தேவகியும், ரியாவும் அவர்கள் வீட்டு கதவை திறந்து வருவது தெரிந்து, பொறுமையாக கையை ஊன்றி எழுந்தவள், வாங்க என்றாள்".
" சிரித்துக்கொண்டே வந்த தேவகி, உடம்பு நல்லா இருக்காமா என்க, நல்லா இருக்குங்கம்மா என்றவள், உள்ளே வாங்க".
" நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரியா இந்த வீட்டிற்கு வந்ததால், இடத்தையும், அவர்கள் பராமரிப்பதையும் பார்த்தவளுக்கு, திருப்தியாக இருந்தது".
" பாட்டி, பாட்டி என தோட்டத்து பக்கம் குரல் கொடுத்தவள், இருவருக்கும் தண்ணீர் டம்ளரை நீட்ட,எடுத்துக்கொண்டனர்".
" இதோ வரேன் ஆரா கண்ணு என்றபடியே உள்ளே வந்த பாட்டியம்மா, வாங்கம்மா என்றார். பின்னர் பொதுவாக நலம் விசாரித்து விட்டு, இவள் தான் என்னுடைய அண்ணன் பொண்ணு ரியா".
" என் பையனுக்கு தான் மா நிச்சயம் பண்ணியிருக்கென்க, அப்படியாமா, ரொம்ப சந்தோஷமென்றனர். ரியாவும் ஆர்கலியை பார்த்து சிரித்து வைத்தாள்".
"அம்மா நாளைக்கு வீட்டில் பூஜை வைத்திருக்கோம். அதற்கு ரெண்டு பேரும் கட்டாயம் வர வேண்டும். அதான் நேரில் பார்த்து சொல்லிட்டு போகலாமென்று வந்தோம்".
" அதற்கு பாட்டியம்மாவும், சரி கண்ணு. ஸ்கூலும் கிருஷ்ண ஜெயந்திக்காக லீவ் தான். நிச்சயமாக வரோமென்றார்".
" இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே,ப்ரிஜில் இருந்த முட்டை கோஸைபகோடாவாக பொறித்தெடுத்தவள், ஆளுக்கொரு பிளேட்டில் வைத்து, அதனோடு காஃபியும் போட்டு ஹாலிற்கு கொண்டு வந்தாள்".
"அதை பார்த்த தேவகி, அட என்ன பொண்ணுமா நீ, எதற்கு உனக்கு இந்த வேலை என்க, இருக்கட்டுங்கம்மா. தினமுமா வரீங்களென்று சொல்லியபடியே ஆளுக்கொரு தட்டை கொடுத்தாள்".
" சாப்பிட்டு பார்த்த இருவரும் ரொம்ப நல்லா இருக்கே என்க, முட்டை கோஸில் பண்ணியது தான் என்று ஆர்கலி சொல்ல, நிஜமாவாயென வியந்தார்கள்".
" மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு எழுந்தவர்கள், தென்னை காய்க்குது தானே என்றவாறு தோட்டத்தை போய் பார்த்த தேவகி அசந்து போனார்".
" காய்கறிகள் செடிகளும், அவரை, புடலை பந்தலென்று, பார்க்கவே சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது".
" ரொம்ப நல்லா இருக்குமாயென்றவருக்கு, எல்லாம் பாட்டியோட கை வண்ணம் தான் என்றாள் ஆர்கலி".
"சரிங்கம்மா நாளைக்கு பார்க்கலாமென்று சொல்லிக்கொண்டு, தேவகி ரியாவோடு அங்கிருந்து சென்றார்".
" அடுத்த நாள் விடியலும் தொடங்கியது. நல்லநேரத்தை பார்த்து காலையிலே வீட்டில் கிருஷ்ணஜெயந்திக்கான பூஜையை பாட்டியும் செய்து முடித்தார்".
"நேரமும் ஓடியது. சரி கண்ணு பெரிய வீட்டின் பூஜைக்கு கிளம்பலாமென்க, ஓகே பாட்டி என்றவள், ரூமிற்கு தயாராக போனாள்".
" சிறிது நிமிடத்தில் தயாராகி வந்தவளை பார்த்தவர்,அழகா இருக்கடா கண்ணு. யாரு கண்ணும் என் பேத்தி மேலே படக்கூடாதுயென்றவர், அங்கிருந்த மை டப்பாவை திறந்து, விரலில் தொட்டவர், ஆர்கலியின் காதுக்கு பின்னால் பொட்டு வைக்க, அவள் சிரித்து விட்டாள்".
" பின்னர் வீட்டை பூட்டிக்கொண்டு, வாசல் லைட்டை ஆன் பண்ணியவர்கள், மெயின் கேட்டையும் பூட்டி விட்டு பெரிய வீட்டை நோக்கி நடந்தனர்".
"பூஜைக்காக வீடு அலாங்காரம் பண்ணியிருந்ததை பார்த்துக்கொண்டே இருவரும் உள்ளே செல்ல, அங்கே இருந்த கருப்பாயி இவர்களை பார்த்து கையசைத்தார்".
" வந்தவர்களை வரவேற்ற தேவகியும், ரியாவும், இருவரையும் வாங்க வாங்களென்று சொல்ல, தலையசைப்போடே உள்ளே வந்தவர்கள், ஹாலில் அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் உருவச்சிலையின் அழகில் மயங்கி போனார்கள்".
" அங்கே தெரிந்தவர்களும் இருக்க, டீச்சர் இங்கே வாங்களென்று இருக்கையை காட்ட, பாட்டியும் ஆர்கலியும் அங்கு சென்று அமர்ந்தனர்".
" கண்களால் வீட்டை சுற்றி பார்க்க, அங்கங்கே மாயக்கண்ணனின் ஃபோட்டோக்கள்,சுவற்றில் பிரேம் பண்ணபட்டது தொங்கிக் கொண்டிருந்தது".