Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
வெற்றி-ஜனனி நினைவுகள்:
"இது நம்ம நண்பர் கோதண்டமும், அவரோட மனைவி பரணி என்றவாறு விஷயத்தை சொல்லும் போதே பல்லியின் சத்தம் கேட்டது".
" நல்ல சகுனமா இருக்கேயென்ற ராஜதுரைக்கு, வணக்கமுங்க என் பேரு கோதண்டம். கோயம்புத்தூர் தான் சொந்த ஊரு. ஒரு பையன் ஒரு பொண்ணு".
"பொண்ணு பவித்ராவை சென்னையில கட்டி கொடுத்துட்டேன். ரெண்டு வயசுல பையன் இருக்கு.என் பையன் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் துபாய்க்கு வேலைக்கு போய் இருக்கான்".
" நீங்க ஆளு வச்சி தாராளமா விசாரித்துக்கோங்க.போதும் என்ற அளவு பொருளாதாரம் இருக்கு.வீட்டுக்கு நல்ல குணமுள்ள மகாலெட்சுமி வேண்டும், அதற்கு தான் உங்க கிட்ட வந்தோமென்று முடித்தார்".
"அதற்கு ராஜதுரையோ, அதான் தம்பியே கூட வந்துருக்கே, பிறகு என்னங்க. புள்ளைங்க ஜாதகத்தை போட்டு பார்த்து விட்டு, அடுத்ததை பார்க்கலாமென்க, தாராளமா பார்க்கலாமேயென்றனர்".
" பின்னர் மதிய உணவை அங்கையே சாப்பிட்டு விட்டு, ராணியின் ஜாதக காப்பியை வாங்கிக்கொண்டு, பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர்".
பொள்ளாச்சி:
அத்தை, எங்கே தான் அப்பாவும் வெற்றியும் போயிருக்காங்களென்று மீண்டும் ராணி கேட்க,ஒரு நல்ல காரியமாக போயிருக்காங்க கண்ணு என, காலையிலிருந்து சொன்ன அதே டயலாக்கை வள்ளியும் சொல்ல, ஆஆஆஆ என்று கத்தியவள், டிவியை ஆன் பண்ணி பார்க்க தொடங்கினாள்".
" ஒரு மணி நேரம் கடந்திருக்க, வெற்றியும், சத்தியமூர்த்தியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அண்ணா என வள்ளி கூப்பிட, எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிதுமா".
" கொஞ்ச நேரம் படுக்குறேனென்று சத்தியமூர்த்தி தனது அறைக்கு சென்று விட,அடேய் என்னை தாமரை குளத்துக்கு கூப்பிட்டு போறேனு சொன்னியே என ராணி முறைக்க, அதுக்கென்னடி".
" வா போகலாமென்க,சரியென்று வள்ளியிடம் சொல்லிக்கொண்டு இருவரும் குளத்தை நோக்கி செல்ல,இவர்கள் வயல் வழியாக தான் போக வேண்டுமென்பதால், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜனனி இருவரையும் பார்த்தாள்".
" ஏன் டா, அப்படி எங்கே தான் போனீங்களென்க, உனக்கு தான் மாப்பிள்ளை பார்த்திருக்கு. அது விஷயமாக போனோமென்றான்".
" வெற்றி விளையாடுவதாக நினைத்தவள், அப்படியா சரி டா சரி. மாப்பிள்ளை மன்னார் என்ன செய்யுறான்? என்க, துபாய்ல இருக்கார் டி".
" நீ இனி துபாய்காரியா ஆகிவிடுவாயென்க, ஓஓஓ ஒட்டகம் மேய்க்குறானோ, எது துபாய் குறுக்கு சந்து, விவேகானந்தர் வீதி தானே மாப்பிள்ளை அட்ரஸ் என ராணி சொல்ல, இருவரும் சிரித்துக்கொண்டே நடக்கும் போது, ராணியின் கால் இடறி, வயலில் விழுந்தவள், வெற்றி என்று அலறினாள்".
" அவள் சத்தத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்க்க,பதறி வயலில் இறங்கிய வெற்றி, என்னாச்சுடா பாப்பு என்றவாறு, குழந்தையை போல கைகளில் தூக்க, வலது கால் காட்டி அழுதாள்".
" அங்கே பார்க்க கால் வீங்க ஆரம்பித்தது".
" ஒன்னும் இல்லைடா பாப்பு, ஒன்னும் இல்லை என்றவாறு தூக்கிக்கொண்டே வெற்றி வர, வயலில் இருந்தவர்கள் என்னாச்சிப்பா என்க, கீழே விழுந்துட்டாள் கா. கால் வீங்க ஆரம்பிச்சிட்டென்று சொல்ல, சின்னவரே போர் கொட்டாய்கிட்ட தூக்கிட்டு வாங்களென்று சொல்லியபடியே ராக்கம்மா பாட்டி வரப்பில் ஏறி முன்னே சென்றார்".
"வெற்றியும் அங்கு வர, கீழே இறக்குப்பா என்க, பொறுமையாக ராணியை கீழே உட்கார வைத்தான். பின்னர் கால் முட்டியை சோதித்தவர், நரம்புல சுளுக்கும், சதையும் பிரண்டிருக்கு என்றார்".
கலசங்காடு:
" பதினாறாம் நாள் பூஜையும் ஆரம்பமானது. நல்ல நேரத்தில் தங்களின் பூர்வீகமான தொட்டிலில், குழந்தையை கடத்த சொல்லி லீலாவிடம் மீனாட்சி சொல்ல, சரிங்கத்தை என்றவாறு குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்தாள்".
"அப்புறம்டா, மகனுக்கு என்ன பேர் செலக்ட் பண்ணியிருக்கனு பரமுவும், பன்னீரும் கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்டா என்று ஜெய் சொல்ல, அடேய் மூஞ்ச ஒடைச்சிருவேன்".
" அப்போதிலிருந்து இதே கதையை தான் டா சொல்லுற என்க, நல்ல நேரம் ஆரம்பிச்சிட்டென்று ஐயர் சொல்ல, வீர சிம்ஹன், வீர சிம்ஹன், வீர சிம்ஹன் என தனது மகனின் காதில் ஜெய் மூன்று முறை சொல்ல, பிள்ளையின் பெயரை கேட்டவர்கள் அடி சக்கை, கலக்கிட்ட ஜெய் என்றனர்".
"வந்தவர்கள் எல்லாம் குழந்தைக்கு வாங்கிய நகைகளையும், துணிகளையும் கொடுத்து,ஜீனி தண்ணியை தொட்டு குழந்தையின் நாக்கில் வைத்து, பேரைச் சொல்ல, அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு, ஜெய் குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர்".
"நகுலன் தனது மகளிடமும் சம்மந்திடமும் சொல்லிக் கொண்டு மறுநாள் இலங்கைக்கு சென்று விட்டார். நாட்களும் ஓடியது. குழந்தையும் வளர ஆரம்பித்தது".
" குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும், ஜீவாவை வரவைத்து ,சொந்த பந்தங்களோடு திருச்செந்தூருக்கு போய் மொட்டை அடித்து, காது குத்தி விட்டு முருகனை தரிசித்து வந்தார்கள்".
" வைத்தியகார அம்மா சொன்னது போல் வீர சிம்ஹன் பிறந்த நேரத்திலிருந்து அவர்கள் தொழிலும் மேலும் வளர்ந்தது. கலசங்காட்டிலேயே பெரிய நகைக்கடையை ஆரம்பித்தனர்".
" சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களும், இந்த பெரிய கடைக்கு வர, வியாபாரமும் நன்கு பெருத்தது".
" முதல் குழந்தையின் பிரசவத்தில் லீலாவின் அவஸ்தையை பார்த்த ஜெய்,ஒரு குழந்தை போதும் என்று,
கண்டிப்போடு வீட்டிலும் மனைவிடமும் சொல்லி விட்டான்".
" தாத்தா பாட்டியின் வளர்ப்பிலும், தாய் தந்தை அன்பிலும் வீர சிம்ஹன் வளர்ந்தான்.ஐந்து வயதானவுடன் கலசங்காட்டில் இருக்கும் பள்ளிக்கூடத்திலே மகனை சேர்த்து விட, வீரையன் தான் பேரனை பள்ளிக்கு அழைத்துப் போவதும், திரும்ப கூட்டிட்டு வருவதும் வேலையாக வைத்துக் கொண்டார்".
" ஜெய் தங்களது நகைக்கடையை முழு வீச்சில் பார்ப்பதால், அவனுக்கு உதவியாகவும் இருந்து கொண்டார். தந்தைக்கு இனி ஓய்வு தேவை என்பது தெரிந்து, அப்பா மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்".
" நீ உன் பேரனை பள்ளிக்கூடம் அனுப்புவதை பார்த்துக் கொள் என்று சொல்லி விட,உழைத்த உடம்பென்றாலும், மகனின் பேச்சை அவராலும் தட்ட முடியவில்லை".
"சந்தோஷத்தோடு பேரனோடு பயணப்பட்டார். பேரனின் வாழ்க்கைக்கு தேவையான அத்தனையும், தன் சிறுவயதிலிருந்து பட்ட கஷ்டத்தையும், அதற்கு பிறகு முன்னேறியதையும் ஒவ்வொரு நாளும் சொல்ல மறக்கவில்லை".
"அது எல்லாம் வீர சிம்ஹன் மனதிற்குள் நன்கு பதிந்தது.சில மாதங்களாகவே இலங்கையில் இருக்கும் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பது தெரிந்ததிலிருந்து, லீலாவிற்கு அண்ணனை நினைத்து கவலை வந்தது".
" கடந்த மூன்று வருடங்களாக ஜீவாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி, நகுலனும் வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றார்".
" ஆனால், ஜீவா அதற்கு பிடி கொடுக்கவேயில்லை.மேலும் இரண்டு வருடங்கள் ஓடியது".
" நகுலனின் உடம்பும் மேலும் பாதிக்க தொடங்கியது.தந்தையின் கவலைக்கான காரணம் புரிந்த லீலா,அண்ணனுக்கு ஒரு தந்தியை அனுப்பினாள்".
"நீ கல்யாணம் பண்ணிக்கவில்லை என்றால், நான் எங்கையாவது போயிடுவேன்னு , அதை படித்த ஜீவாவிற்கு தங்கையின் குணம் தெரிந்ததால், சரி நீயே பொண்ணை பாரு".நான் கல்யாணம் பண்ணிக்குறேனென்று தங்கைக்கு, பதில் தந்தி அனுப்பினான்".
" வீர சிம்ஹனுக்கும் ஏழு வயது வந்து விட்டது. முழுஆண்டு பரிட்சை லீவு விட, மனைவியையும், மகனையும் தனது தாய் தந்தையோடு, இலங்கைக்கு அனுப்பி வைத்தான் ஜெய்".
" ஏற்கெனவே பெண் தேடிகொண்டிருந்ததால், தெரிந்தவர்கள் மூலயமாய் வனஜாவின் சம்பந்தம் வர, அதையே பேசி முடித்தனர்".
" ஒரே மாதத்தில் கல்யாணத்தையும் முடித்து வைத்து விட்டு, இவர்கள் கலசங்காட்டிற்கு வந்தனர்".
" இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருக்க, பின்னர் ஒரே பிரசவத்தில் இரட்டை பிள்ளைகளாய் சைலஜாவும் கிரிஜாவும் பிறந்தார்கள்".
"அவர்களுக்கு இரண்டு வயது இருக்கும் போது,குலதெய்வ கோயிலுக்கு மொட்டை அடிக்க வர சொல்ல,வீர சிம்ஹனுக்கு லீவ் நேரம் பார்த்து வைத்ததால், குடும்பத்தோடு எல்லாரும் போயிருந்தனர்".
"அப்பொழுது ஜெய்யும், ஜீவாவும் பேசிட்டு இருக்க, 5 வயது பையன் ஒருவன் ஓடிவந்து அப்பாயென்று ஜீவாவின் காலை கட்டி பிடித்துக் கொண்டான்".
"இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகினர். ஜீவாவிற்கு பையன் யாரென்று அடையாளம் தெரியவில்லை. பின்னர் யாருப்பா நீ என்று கேட்க,அப்பா அப்பா எங்க போனப்பா?,உனக்காக தான், நானும் அம்மாவும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றான்".
" அதைக்கேட்டு என்ன சொல்றதென்று யாருக்கும் ஒன்னும் புரியவில்லை. முதல்ல பூஜையை முடிங்கள். மற்றதை பிறகு பார்க்கலாமென்று நகுலனும், வீரையனும் சொல்ல,குழைந்தைகளுக்கு மொட்டையடித்து காதை குத்தியவர்கள், சாமிக்கு படையலை போட்டு, முடித்தார்கள்".
" பின்னர், அந்த பையனிடம் உங்க வீடு எங்கே இருக்கென்று ஜீவாவும், ஜெய்யும் கேட்க,வாங்கப்பா, அம்மா இங்க தான் இருக்காங்களென்று ஜீவாவின் கையை பிடித்துக்கொண்டு அழைத்து போனவன், பக்கத்து தெருவிலிருக்கும் ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போனான்".
" அங்கே வாசலில் இருந்து பார்க்கும் போது, உள்ளே யாரோ ஒரு பெண்மணி சமையல் பண்ணிட்டு இருந்தாங்க. அம்மா என்று அந்த பையன் கூப்பிட்டு உள்ளே போக,எங்க கண்ணா போனாயென்றவாறு அங்கிருந்த பெண்மணி திரும்பிப் பார்க்க, சித்ரா என்று ஜீவாவும், ஜீவாயென அந்த பெண்மணியும் சொல்லி அதிர்ந்தார்கள்".
" நடப்பதை காலையில் இருந்து பார்க்க பார்க்க, வனஜாவிற்கோ கோவம் தலைக்கு ஏறியது.
"அப்பொழுது, ஜீவாவின் சட்டையை பிடித்து, இவள் யாரென்று வனஜா கேட்க,இவதான் நான் காதலித்து கல்யாணம் பண்ணிய, என்னோட மனைவி சித்ரா".
" கிளிநொச்சியில் வியாபாரத்துக்கு போகும் போது தான் எங்களுக்குள்ள பழக்கம்.ஒரு பிரச்சனையில் அவங்க கிராமத்தை யாரோ தீ வைத்து கொளுத்தி விட்டுட்டாங்க".
"நான் தமிழ்நாட்டுக்கு போயிருந்த நேரத்தில் இது நடந்து விட்டது. நான் வந்து பார்க்கும் போது அந்த இடமே தீக்கிரையா இருந்தால், யாருமே உயிரோடு இல்லை. இங்கிருந்த எல்லாருமே இறந்து விட்டார்களென்று சொல்லிட்டாங்க".
"சந்தர்ப்ப சூழலால் நானும் சித்ராவும் கோயில்ல கல்யாணம் பண்ணிக்கொண்டோம்.தங்கச்சிக்கிட்ட சொல்லி அப்பாக்கு சொல்லலாம் என்கும் போது தான், வீராவிற்கு காது குத்த லீலா அங்க வர சொல்லியது".
" சரி இதான் சந்தர்பமென்று சொல்ல நினைத்தேன்.ஆனால் சூழல் எனக்கு சொல்ல முடியவில்லை.திரும்ப ஊருக்கு வந்த பிறகு தான் செய்தி கேள்வி பட்டு உள்ளுக்குள்ளே செத்து விட்டேன்".
"சித்ராவை மறந்து வேற வாழ்க்கையில் ஈடுபட மனசு வரவில்லை".
" வருஷமும் போக, அப்பாவும் என்கிட்ட பேசுறதை நிறுத்திட்டாங்க. அந்த நேரத்தில் தான் லீலா தந்தி கொடுத்துச்சி. சரி தங்கச்சிக்காக கல்யாணம் பண்ண சம்மதித்தேன் என்றார்".