• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

" கோழி கொக்கரக்கோ என்று பக்கத்து வீட்டில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த ஆர்கலி,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள், காலை கடன்களை முடித்து வெளியே வந்து பார்க்க, அங்கே பாட்டி தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது".


"பின்னர் சத்தம் இல்லாமல் கிச்சனிற்குள் போனவள், ஃப்ரிஜில் இருந்த பாலை எடுத்து சூடு பண்ணி, பாட்டிக்கு டீ போட்டு முடிக்கவும், பாட்டியும் எழுந்து உட்கார்ந்தார்".

" கட்டில் சத்தம் கேட்டு,பாட்டி டீ எடுத்துட்டு வரட்டுமா என்க, மூஞ்சி கழுவிட்டு வந்துடறேன் என்றவர், தோட்டத்திற்கு சென்று முகத்தை கழுவி, வாய் கொப்பளித்து விட்டு உள்ளே வர, அவர் கையில் டீ டம்ளர் கொடுத்து விட்டு, தனக்கானதை குடித்தாள்".

"ஆரா கண்ணு, காலையிலையே விதையை விதைச்சிடலாமா?, சரிங்க பாட்டி என்றவள், முதல் நாளே சாம்பலில் கலந்து வைத்த கீரை விதையையும், ஊறவைத்த மற்ற விதைகளும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு செல்ல, கிழக்கே சூரியன் உதயமாவது தெரிந்தது".

"அதை பார்த்த பாட்டி, சூரிய பகவானே முதன் முதலா இந்த ஊருக்கு வந்து நாங்க ஒரு விதையை விதைக்கிறோம்.நீ தானப்பா அருள் புரியணுமென்று வேண்டிக்கொண்டு விதையை தூவ, ஆர்கலியும் பாட்டி எப்படி செய்கிறாரோ அதேபோல் செய்தாள்".

"பின்னர் பாத்தி கட்டிய இடத்தில் ஒவ்வொரு விதைக்கும் இரண்டு அடிகள் இடைவெளி விட்டு சிறுசிறு துளைகளை போட்டபடி பாட்டியும் செல்ல, அதில் காய்கறிகள் விதையை போட்டு மண்ணை மூடிக்கொண்டே வந்தாள்".

"பிறகு விதைத்த விதைகளுக்கெல்லாம் தண்ணீரை விட்டவர்கள், முதல் நாள் கூட்டி ஒதுக்கிய குப்பைகளை போய் பாட்டியை கொளுத்தி விட, பாட்டி நான் போய் சாப்பாடு பண்ணட்டுமா என்றாள்".

"இவ்வளவு காலையிலேயே எதுக்கு கண்ணு, கொஞ்ச நேரம் இரு கண்ணு. சரி பாட்டி என்றவள் தோட்டத்திலிருந்து எல்லாத்தையும் சுற்றி பார்க்க, முதல் நாள் இருந்ததற்கும், இன்று இப்போது பார்க்க திருப்தியாக இருக்க,பக்கத்து வீட்டில் ஆட்கள் நடமாடுவது தெரிந்தது".

"சரி பாட்டி, நான் போய் முன் வாசலை கூட்டிட்டு கோலம் போடுறேனென்றவள், கிணற்றில் நீரை இறைத்து பக்கெட்டில் ஊற்றி எடுத்துக் கொண்டு,சந்து பக்கமாக முன் பக்கம் வந்தவள், வாசலில் தண்ணீரை தெளித்து கூட்டி விட்டு, கோலத்தை போட்டு முடிக்க, கேட் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க,சங்கர் தான் நின்று கொண்டிருந்தான்".

"தங்கச்சிமா உன் அண்ணி பால் கொடுத்து அனுப்பியிருக்கா. கையிலிருந்த கோலமாவு டப்பாவை கீழ வைத்து விட்டு வாசலுக்கு சென்றவள், தாழ்பாளை திறந்து விட, உள்ளே வந்து வாளியை கொடுத்தவன், வரேம்மானு அங்கிருந்து செல்ல, இவளும் காலை டிபனை செய்ய தொடங்கினாள்".

" மேலும் இரண்டு நாட்கள் வேகமாக கடந்து சென்றது.திங்கட்கிழமை விடியலும் தொடங்கியது".

" இன்று வேலையில் ஜாயின் பண்ண வேண்டுமென்பதால், வழக்கம் போல நேரத்தோடே எழுந்தவள் பாட்டிக்கும் அவளுக்கும் டீ, பால் வைத்து குடித்து விட்டு குளிக்க சென்றாள்".

" அவள் வருவதற்குள் பாட்டியே காய்கறிகள் போட்ட வெஜிடபிள் உப்புமாவும்,சட்னியும் செய்து முடித்தார்".

" புதுப்புடவையில் ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு, சுவற்றிலிருக்கும் கடிகாரத்தை பார்க்க, காலை 8 மணி என்று காட்டியது".

" சரி சீக்கிரமா காலை மதியம் சமைக்கலாமென்று கிச்சனிற்குள் சென்று பார்த்து, பாட்டிஈஈ என்றாள்".

" வாடா ஆரா கண்ணு".

" சூடா சாப்பிட்டுக்கோ".

" நான் பண்ண மாட்டேனா பாட்டியென்க, காலை, மதியம் நான் பார்த்துக்குறேன் கண்ணு.நைட்ல நீ வந்து செய், லீவில் இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம், ஓரளவுக்கு எனக்கும் சமைக்க தெரியும் கண்ணுயென்க, பாட்டியென்று சிரித்தவள், தட்டில் போட்டு ஒரு வாய் வைத்தவள், வாவ் செம்ம செம் டேஸ்ட் என்றாள்".

" நீங்களும் வாங்க பாட்டி என்க, வேணாம் கண்ணு. நான் வீட்டில் தான் இருக்க போறேன் அதானால்,கொஞ்ச நேரம் போன பிறகு சாப்டுகிறேன்."
நீ சாப்பிட்டு,சாமியை கும்பிட்டு விட்டு,நல்ல நேரத்தில் போய் வேலையில் சேர்".

"சரி பாட்டி என்றவள், சாப்பிட்டு முடித்து நீண்ட பின்னலை பின்னி முடித்தவள்,நெற்றி வகுடில் பொட்டு வைக்க போகும் போது, இனி இது ஏனென்றது? அவள் மனசாட்சி".

" மற்றவர்களுக்கு கேள்விக்குறியா ஆகக்கூடதென்று உள்ளுக்குள் சொல்லியவள், பின்னர் குங்குமத்தையும், பொட்டையும் நெற்றியில் வைத்துக்கொண்டு அப்பாயின்மென்ட் லட்டர்,வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டே மணியை பார்க்க எட்டே முக்கால் என்று காட்டியது".

"சரிங்க பாட்டி நான் போயிட்டு வரேனென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போக,அய்யோ ஏன் டா கண்ணு".

" மாசமா இருக்கும் போது எதுக்கு இப்படி?, நல்லா இருப்ப தாயி. பாத்து பத்திரமா போய்விட்டு வா. மறக்காமல்,மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடு".

அவர் அன்பில் கண் கலங்கியவள்,சரிங்க பாட்டி. நீங்க பத்திரமா இருங்களென்று பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றாள்".

கபிலன்- ரியா நினைவுகள்

" வண்ணங்கள் தீட்டி முடித்தவள்,பின்னர் எழுந்து நின்று பார்க்க மனதிற்கு திருப்தியாக இருக்க, ஓகேயென்று உள்ளே செல்ல, அப்பொழுது வாசலுக்கு வந்து தேவகியோ கோலத்தை பார்த்து அசந்து போனார்".

" ஆதிமா ரொம்ப அழகா இருக்குடானு, அவள் நெற்றியை சுற்றி நெட்டி முறித்தவர்,இரு டீ எடுத்து வரேனென்று சொல்லும் போது வாக்கிங் போய்விட்டு வீட்டிற்கு வந்த கபிலன்,யார் மா ரங்கோலி போட்டா?,ரொம்ப அழகா இருக்கு?,ஆதி தான் பா".

" என்னம்மா சொல்லுற என்க, ஆதிராவோ கபிலனை முறைத்து பார்த்தாள்".

" தங்கையின் பார்வையை கண்டவன் சும்மாடா என்க, சமாளிப்பாணா என்றாள்".

" ஹீஹீஹீ என்றவன், நிஜமாகவே நீதான் போட்டியா ஆதி? என்றவனின் அருகில் வந்தவள், சத்தியமா நான் தான் போட்டேனென்று, கபிலன் தலையில் அடிக்க, அய்யோ என் மண்டையென்று கத்தினான்".

" கபிலன் கத்துவதை கேட்டுக்கொண்டே அங்கு வந்த கண்ணன்,என்னமா காலையிலே உன் அண்ணனுக்கு விளையாட்டு?".

"எதேஏஏ விளையாட்டா என்றவன், மண்டை பணியாரம் போல வீங்கி கிடக்கு, இவருக்கு நக்கலென்க, கபிலன் சொன்னதை கேட்ட ஆதிராவோ ஹாஹாஹா என சிரித்து விட்டாள்".

" பின்னர், அப்பா என்க, ம்ம் சொல்லுப்பா னு கண்ணன் கேட்க, உங்களுக்கு கோவம் இல்லையே?".

" மகன் எதைப் பற்றி கேட்கிறான் என்று புரிந்த கண்ணன், நிச்சயமா இல்லப்பா. உன் ஆசையை நிறைவேற்றுவது தான் இந்த அப்பனோட கடமை".

"அதுக்காய், எனக்கு பிடிக்கல என்பதற்காக உன்னோட ஆசையை தடை பண்ணனும் என்கிற எண்ணம், எனக்கு கொஞ்சம் கூட கிடையாது என்றவர், எப்போ கிளம்பணும்பா".

"எப்படி போற போல? என மகனிடம் ட்ரைனிங் பற்றி விசாரிக்க, திங்கட்கிழமை அங்கு இருக்கணும் என்றும், ஞாயிற்றுக்கிழமை கிளம்பினால் சரியா இருக்கும் பா".

" அப்புறம் பா,வர இரண்டு வருஷமாகும். நடுவில் நேரம் கிடைத்தால் தான் வருவேன்.முதல் மூன்று மாதம் உங்களை கான்டக்ட் பண்ண முடியாது.ஆனால் நீங்க வரலாமென்று நினைக்கிறேன்".

"நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்து கொள்வீர்களா?, நாங்க என்னப்பா சின்ன பிள்ளைங்களா?, எங்களை பற்றி கவலை படாதே.".

"ஆமா,ரெண்டு வருஷம் ஆகுமா என்றார்.ம்ம் பார்ட் பார்டா பிரித்து தான் ட்ரைனிங் கொடுப்பாங்கள்பா. ரெண்டு வருஷம் முடிஞ்சா தான் உங்க பையன் ஐபிஎஸ் ஆபீசர் என்க, சந்தோசம் சந்தோஷம்".

"நல்லபடியா போயிட்டு வெற்றியோடு வாப்பா. உன்மேல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு. நீ தொட்டதெல்லாம் வெற்றியாகவே இருக்கட்டும் என்று மகனை ஆசிர்வதித்தவர்,தேவகி தேவகி...".

" டீ போட போனியா?,இல்ல மாடு வாங்கி இனி தான் பால் கரக்குறியா?".

" இதோங்களென்று அங்கு வந்தவர், கணவருக்கும், மகனுக்கும் டீயை கொடுக்க, குடித்து முடித்தவர், தேவகி திடல்ல எள்ளு விதைக்கும் வேலை இருக்கு, நான் வயலுக்கு போயிட்டு வரேனென்ற கண்ணனோ அங்கிருந்து சென்று விட்டார்".

"அம்மா என்ன நீ எதுவுமே அதை பத்தி பேச மாட்டேங்கறனு கபிலன் கேட்க, நான் பேசறதுக்கு என்ன கண்ணா இருக்கு".

"உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பமென்று தேவகி சொல்ல, அம்மான்னா அம்மா என்று அவர் தோளில் சாய்ந்து கொண்டவன், அப்புறம் இனிமே ரெண்டு பேரும் காதல் புறா தானே".

"உங்களை கேள்வி கேட்க ஆள் கிடையாது என்று தாயை கிண்டல் பண்ண, போடா போக்கிரி என மகனின் தலையில் கொட்ட, என்ன அம்மாவும் பொண்ணும் மாத்தி மாத்தி கொட்டி, என் மண்டைய ஒடச்சிடுவீங்க போல?".

"ஆமா அப்படியே, நாங்க கொட்டி தான் மாங்காய் போல பொளந்துடுச்சு பாரு என தேவகி சொல்ல,அம்மா நல்லா பேச கத்துக்கிட்ட நீ என்றான்".

"ஏன்பா, இத்தனை நாள் நான் என்ன ஊமையாகவா இருந்தேன்? என்று தேவகி கேட்க, தேவகி கலக்குற கலக்குற என்றவன், என்னமா,உன் மருமகளுக்கு இன்னும் விடியலையா?,இப்படி இருந்தாக்க எங்கே இருந்து என் வாழ்க்கை பிரகாசிக்கும்".

" அதிகாலை நாலு இல்லை அஞ்சு மணிக்கு எல்லாம் எழுந்து வாசல் கூட்டி, கோலம் போட்டு, 6 மணிக்கெல்லாம் டிபன் ரெடியா இருக்கிறது இல்லையா?, என்னவோ போ".

"உன் அண்ணன் பொண்ணை என் தலையில் கட்டி வைத்து, என் வாழ்க்கையை கெடுத்துட்ட என்று சொல்லிக் கொண்டிருந்தவன் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ரியாவோ,மாடிப்படியிலிருந்து அவனை முறைத்துக் கொண்டே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்".

"ஆத்தாடி, சொன்னதெல்லாம் காதுல வாங்கிட்டா போலயே?, அடேய் கபிலா நீ செத்தடா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".

" ஹிஹிஹி அம்மா உன் மருமகளும் வந்தாச்சி டீ குடு, எனக்கு கொஞ்சம் மெயில் செக் பண்ணுற வேலை இருக்கு, நான் வரெனென்று அங்கிருந்து வேகமாக சென்றான்".

" வாடா ரியா, டீயா இல்லை காஃபி என்க, அத்தை, நான் போட்டுக்குறேன். நீங்கள் இருங்களென்றவள், எதுக்கு உங்க பையன் இப்படி தலைதெறிக்க ஓடுறாரு? என்றாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கலசங்காடு:

" தம்பி சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா,இருமா குளிச்சிட்டு வந்துடுறேன்னு சொல்லி விட்டு தோட்டத்திற்கு சென்றவன்,குளித்து முடித்து விட்டிற்குள் வர,வீரையனும் சாப்பிட உட்கார்ந்தார்".


" வேறு உடையை மாற்றிக்கொண்டு,தந்தைக்கு எதிரில் வந்து ஜெய் உட்கார, இருவர் தட்டிலும் மீனாட்சி பரிமாற, சாப்பிட்டு முடித்தவன், அம்மா ஒரு டீ எடுத்துட்டு வா என்று சொல்லி விட்டு, வராண்டாவில் உட்கார்ந்திருந்த அப்பாவிடம் வந்தான்".

"அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான். அவரோ சொல்லுப்பா என்றார். அது வந்து என தயங்கினான். சொல்லு? என்ன விஷயம் என்க, ஜீவா அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயானு கேட்கிறான் பா என்ற மகனை, ஒரு முறை முறைத்தார்".

"முதல்ல வியாபாரம் பண்ணனும் போகணும்னு கேட்டே. சரியென்று அனுப்பி வச்சேன். அப்புறம் அங்கேயே கடை ஆரம்பிக்கணும்னு சொன்னே, அதுக்கும் சரின்னு சொன்னேன்".

"இப்போ அங்க உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணனும்னு வந்து சொல்லிட்டு இருக்கியே, உன்னை நானென்ன இலங்கைக்கே நேர்ந்து விட்டுட்டேனா?".

"தந்தையின் வார்த்தையில் ஜெய்க்கு முகம் ஒரு மாதிரியாகிவிட்டது.அய்யோ அப்பா, அப்படிலாம் இல்லை. எனக்கு அந்த பொண்ண தான் கட்டிக்கணும்னு எந்த எண்ணமும் கிடையாது".

"நீங்க யாரை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாலும் பண்ணிக்கிறேன். அவன் சொன்ன விஷயத்தை உங்க கிட்ட சொல்றேன் அவ்வளவு தான்.சரிப்பா, நான் போய் பன்னீரையும், பரமனையும் பார்த்துட்டு வரேனென்றவன் பைக்கில் ஏறி, பக்கத்து ஊரிலிருக்கும் பால்யகால நண்பர்களை பார்க்க சென்றான்".

"ஒன்னரை மணி நேர பயணத்தில் பக்கத்து ஊரான சென்னாங்குப்பத்திற்கு வந்து சேர்ந்தவன், பன்னீரின் வீட்டின் முன்பு போய் வண்டியை நிறுத்தி விட்டு,இறங்கி போய் மூங்கில் படலை திறந்தவன், பன்னீரு, பன்னீரூ என்று கூப்பிட, யாருயென்று வெளியே வந்த பன்னீரின் அம்மா, வாப்பா ஜெய் என்றார்".

"வீட்டின் உள்ளே போய் சேரில் உட்கார்ந்தவன், நல்லா இருக்கீங்களாம்மா?, அப்பா பன்னீருலாம் எப்படி இருக்காங்க?, சக்தி, புள்ளைங்க, மச்சான் எல்லாரும் நல்லா இருக்காங்களா?".

" எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா. நீ எப்போ வந்த?, நேற்று கூட அண்ணனை டவுன்ல பார்த்தோம்,நீ வந்திருப்பதாக எதுவும் சொல்லலையேப்பா".

"நல்லா இருக்கேன்மா. நான் இரவு தான் மா வந்தேனென்றவன், எங்கே இவன் என்க,பரமு வீட்டு மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடணும்னு, அப்பாவும் பன்னீரும் போயிருக்காங்கப்பா".

" கையை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாமென்றார். நான் சாப்ட்டு தான் மா கிளம்பினேன் என்க, அப்போ இருய்யா டீ போடுறேனென்றார்".

" அதுலாம் ஒன்னும் வேண்டாம்மா. நான் போய் அங்க பாக்குறேனென்று சொல்லியவன், வண்டியில் ஏறி பக்கத்து தெருவிலிருக்கும் பரமுவின் வீட்டை நோக்கிச்சென்றான்".

"மாட்டை சிலர் பிடித்துக்கொள்ள, பன்னீரின் அப்பா மூக்கனாங்கயிறு போடுவது தெரிந்தது".

" வண்டியை நிறுத்தி விட்டு வந்தவனை பார்த்த நண்பர்கள் ,வாடா இலங்கைகாரா என்க, என்னடா நக்கலா என்றான்".

" பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்து முடிக்க, எப்போடா வந்த?, வரேன்னு சொல்லவேயில்லையேனு நண்பர்கள் கேட்க, ம்ம் திடீர்னு தான் கிளம்பினேன்.வேலைய முடிச்சிட்டு வாங்கடா என்றவன், திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டான்".

" ஐந்து மாடுகளுக்கு கயிறு மாற்றி, லாடம் அடித்து முடிக்க, மேலும் முக்கால் மணி நேரம் கடந்தது".

" பின்னர் நண்பர்கள் மூவரும் கடற்கரையை நோக்கி செல்லும் போது, அங்கிருந்த பாட்டி கடையில் பரமுவும், பன்னீரும் இட்லியை சாப்பிட்டு விட்டு, கட்டுமரங்கள் இருக்கும் இடத்திற்கு மூவரும் வந்தனர்".

" கண்ணுக்கு எட்டிய வரை நீலக்கடலும், சவுக்கை மரங்கள் சூழ்ந்த தோப்பும், மனதுக்கு இதமாய் இருந்தது".

" அப்புறம்டா தொழில் எப்படி போகுதென்று நண்பர்கள் கேட்க, நல்லா போகுதுடா என்றான்".

"ம்ம் என்னடா அங்கையே தங்கிடலாம்னே முடிவு பண்ணிட்டியா? என்க, அடேய் ஏண்டா ஏன்? ".

" அவரும் அதான் கேட்குறாரு, நீங்களும் அதையே சொல்லுறீங்களே என்றவன் முறைக்க, ஓஓஓ.வீச்சருவாள் கூட லந்தாடா என்றான் பரமு".

" பின்னர் நண்பர்களிடம் விஷயத்தை சொல்ல, உனக்கு புடிச்சிருக்கா?, இல்லையாடானு நண்பர்கள் கேட்க, இதுவரை அதை பற்றி நான் யோசிக்கலைடா என்றான்".

" அப்போ நம்ப சுந்தரிய கட்டிக்கயென்று பன்னீர் சொல்ல, எதேஏஏ அந்த வாயாடியவா என்றவன், நண்பனின் தோளில் ரெண்டு அடியை போட்டான்".

" டேய் அந்த புள்ளையும் உன்னையே நினைச்சிட்டு இருக்கென்று பரமு சொல்ல, வேண்டாம் டா.மரியாதையா வாயை மூடுங்களென்றான்".

" பின்னர் நண்பர்கள் கேளி கிண்டலோடு பேசி சிரித்தவர்கள், எது நடக்குமோ அது தான் நடக்கும்டா. விடு, மனசை போட்டு உழட்டாதே என்றவர்கள், கட்டுமரத்தை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றார்கள்".

" ரெண்டு நாளா சரியான மழைடா மச்சானென்று பரமு சொல்ல, அப்படியா என்றபடியே ஜெய் துடுப்பை போட, பன்னீர் சிறிய வலையை எடுத்து கடலில் வீசினான்".

"மூன்று பேருக்குமே,இப்படி நடுக்கடலில் மீன்பிடிப்பது பிடித்தமான ஒன்று".

" நான் துடுப்பை போடுறேனென்று பரமு வாங்கிக்கொள்ள,மற்ற இருவரும் வலையை இழுத்து கட்டு மரத்தில் வைத்து விட்டு, கரையை நோக்கி செல்ல, தூறல் விழ ஆரம்பித்தது".

" டேய் மழை ஆரம்பிக்குதுடா என்றவாறே பன்னீரும் வேகமாக துடுப்பை போட்டு கரைக்குள் வந்து சேர்வதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது".

" பின்னர் மூவரும் மீன் இருக்கும் வலையை தூக்கிக்கொண்டு, சவுக்கை தோப்பிற்குள்ளிருக்கும் சிறு வீட்டை நோக்கி போனவர்கள், மீன் மூட்டையை ஓரமாக வைத்து விட்டு, மர படியில் ஏறி, கதவை திறந்து உள்ளே சென்றனர்".

"பன்னீரின் தாத்தா தான் இந்த மரவீட்டை அப்பவே கட்டி வைத்தார். கடலுக்கு சென்று வீட்டிற்கு வரும் போது, இதைப்போல் மழை புயல் வந்தால், இந்த வீட்டிற்குள் வந்து தங்கிவிடுவார்".

" அவருக்கு பின் பன்னீரின் அப்பா பயன் படுத்த, பள்ளி படிப்பை முடித்த பன்னீரும், பரமுவும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல ஆரம்பித்த பிறகு, அவர்கள் வசமானது".

" நாணல் வேய்ந்த வீட்டை பிரித்து விட்டு, மரத்தால் வீட்டை கட்டி, சமையலுக்கு தேவையானதையும் வாங்கி வைத்தனர்".

" நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெய் இங்கு வர, மூவரும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து, இங்கையே சமைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்".

" உள்ளே கொடியில் தொங்கிய துண்டை எடுத்து மூவரும் துவட்டிக்கொண்டு, ஈர துணியை பிழிந்து வெளியே காய வைத்தவர்கள், அங்கிருந்த கைலியை எடுத்து கட்டிக்கொண்டு சமையல் வேலையை ஆரம்பித்தனர்".

" மூவரும் பேசிக்கொண்டே ,ஆளுக்கொரு வேலையை செய்ய சாப்பாடு குழம்பும் தயாரானது, பின்னர் சாப்பிட்டு முடித்தவர்கள் மழை தண்ணீரிலே பாத்திரங்களை கழுவி விட்டு, அடுத்து என்னவென்று, அவர்கள் தொழிலை பற்றி பேசிக்கொண்டிருக்க, மழையும் விட்டது".

வெற்றி-ஜனனி நினைவுகள்:

"இன்னைக்கு அந்த மாமாவை சும்மா விடக்கூடாதுடியென்று கீதா சொல்ல, ஆமா கீது. நம்மை கிண்டல் பண்ணுறதையே அந்த மனுஷன் பொழப்பா வச்சிருக்கிறார்".

" அந்த மாமா வாய்லையே பொடிய தூவி விடணும்டி என்று இருவரும் பேசிக்கொண்டே செல்ல, அந்த நேரம் இருவருக்கும் முறைப்பையன் ஒருவன் இவர்களை பார்த்து விட்டு, ஏய் ஓடியாங்கடா, கீதாவும் ஜனனியும் வராங்களென்று,இவர்களை துரத்தினான்".

" அய்யோ இந்த மலைமாடு கிட்ட மாட்டினோம் நம்மேல் சேற்றை தான் பூசுவாண்டி என்ற கீதா,ஏய் ஜனா ஓடுடி என்க, ஆளுக்கொரு பக்கம் தோழிகள் பிரிந்து ஓடும் போது, அவன் வரானாயென்னு திரும்பி பார்த்துக்கொண்டே ஜனனி ஓடினாள்".

"அந்தப்புறமிருந்து நண்பர்களிடம் தப்பித்து ஓடி வந்த வெற்றியும் வேகமாக வந்து மோதி அவள் மேலே விழ, கையிலிருந்த கலர் பொடி நினைவில்லாமல், அவன் முகத்தின் மேலே கையை வைத்து தள்ளும் போது, வெற்றியின் முகம் முழுவதும் வண்ணங்களானது".

" முகம் முழுவதும் கலர் பொடியாக இருப்பதால், அவன் யாரென்பது தெரியாமல், அட தடி தாண்டவராயா, எழுந்து தொலைடா".

"என்னமோ மெத்தை மேல படுத்திருக்கிறது போல இருக்கிறாய்?,எந்திரிச்சி தொலை எருமையென்றவள், என்னத்தை சாப்டுறானு தெரியலையே?, செனை பன்னி இவ்வளவு கணம் இருக்கென்று, அவனை தள்ளி விட்டு எழுந்தாள்".

" வெற்றியும் எழுந்து நிற்க, கண்ணு தெரியுமா?, இல்லை தெரியாதாயென்று, வாய்க்கு வந்ததை சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள்".

" அவள் குரலை கேட்ட பிறகு தான் அது ஜனனி என்று வெற்றிக்கும் தெரிய, அடிங்கொப்பன் மவளே,இப்ப பாருடி என்றவன், முகத்தை சட்டையில் துடைத்து விட்டு அவளை முறைத்து பார்த்தான்".

" ஐயோ நீங்களா?என்று வாயை பொத்திக் கொண்டாள்".

" ஆழாக்கு போல இருந்துகிட்டு என்ன பேச்சு பேசுறடி என்றபடியே அவளை நெருங்கி வர, அவளும் பின்னாடியே சென்றவள் அங்கிருந்த சுவற்றின் மேல் இடித்து நின்றாள்".

"என்னடி பேச்சை காணும்?, இவ்வளவு நேரம் எட்டு ஊரு கிழிய பேசினியே?, ஆமாம் முறைப்பையன் மேல தானே கலர் பூசுவாங்க, நீ என் மேல பூசியிருக்கியே, அப்போ நான் உனக்கு கட்டிக்கிற முறை தானே என்க, இல்லையென்று வேகமாக தலையாட்டினாள்".

" பின்ன வேறு எப்படி என்றவன்?, என் உடம்பில் எங்கெல்லாம் கலர் இருக்கோ அது உனக்கும் இருக்கணும் என்றவன், ஜனனியிடம் நெருங்கி சென்று ஒரு கையால் இழுத்தவன், தன்னோடு இறுக்கி அணைத்து விட்டு, அவன் முகத்தை அவள் முகத்தோடு தேய்த்தவனின் செய்கையில் அதிர்ந்து போனாள்".

"அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது".

"ஏய் இங்கே பாரென்றவன், ஒழுங்கா வீட்டுக்கு போற,அதை விட்டு,மஞ்சள் தண்ணி ஊற்ற போறேன், கலர் பொடி பூசணுமென்று போன கை இருக்காது".

"என்னை தவிர எவன் விரலாவது படுவதை பார்த்தேன் மனுஷனா இருக்க மாட்டேன். போயென்று அங்கிருந்து அவளை அனுப்பி வைத்தவன், ஹப்பாடா... ".

" படிக்குறாள்னு அமைதியா இருந்தால், நம்மை பாடா படுத்தி வைக்குறாளே இந்த பாதகத்தியென்று முணுமுணுத்தவன், சிரித்துக்கொண்டே தனது வீட்டிற்கு சென்றான்".

" வீட்டிற்கு வந்தவள், தோட்டத்திலிருக்கும் பாத்ரூமிற்கு சென்று முகத்தை கழுவ, சற்று முன்னர் வெற்றி செய்த செயல்கள் நினைவிற்கு வந்து, வெட்கத்தை கொடுத்தது".

"பிறகு தன் டிரஸை பார்த்து, கண்ணை பொத்திக்கொண்டு, எம்மாடி, இந்த மனுஷன், சரியான விடாகண்டனா இருப்பாங்க போலனு டிரஸை கழட்டி துவைக்க போட, பின்னர் வேண்டாமென்று எடுத்து, நெஞ்சோடு அணைத்து கொண்டவளுக்கும் காதல் பூத்தது".

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top