• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வெற்றி- ஜனனி நினைவுகள்:

" மாமா, எனக்கு பதில் சொல்லிட்டு நீங்கள் பொறுமையாவே சிரியுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லைனு கோபி சொல்ல, வெற்றியோ அடேய் வாய மூடுடா என்றான்".

" உனக்கு என்னடா வந்தது?,என்ன மருந்து சாப்பிடுறார்னு தெரிஞ்சிக்கிட்டால், பின்னாடி நமக்கு யூஸ்டா என்று கோபி சொல்ல, அதைக்கேட்ட சத்தியமூர்த்தி, மீண்டும் சிரித்தார்".

அய்யோ மாமா... எனக்கு மண்டை காயுது".என் கேள்விக்கான பதில் சொல்லி விட்டு பொழுது முழுவதும் சிரிச்சிட்டே இருங்க என்க,

"சரி வீடு என்றால் எப்படி இருக்கும் சொல்லு?, வீடு என்றால் சுத்தமா இருக்கணும்".அந்தந்த பொருள் அந்தந்த இடத்துல இருக்கணும்.அப்புறம், அப்புறம், ஆங் மூணு வேலை சாப்பாடு இருக்கணும். ".

"அதை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடணும், பிறகு நம்மகிட்ட இருக்கிறதை வச்சுக்கிட்டு, போட்டி பொறாமை இல்லாமல் சந்தோஷமா வாழணும், இதான் மாமா".

" ம்ம் ஒரு வீடே அப்படி என்றால், அதில் இருக்கும் நாம் எப்படி இருக்க வேண்டுமென்பதை யோசித்து பார்த்தால்,உனக்கு பதில் கிடைத்து விடுமென்றார்".

" அவர் சொன்னதை கோபியும், வெற்றியும் யோசித்துப் பார்த்தனர்".

" மாமா புரிந்து விட்டதென்று கோபி சொல்ல, என்ன புரிஞ்சது பா?., கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் நம்ம மனசுக்குள்ள இருக்கு.அதை முதல்ல தூக்கி வெளியில போடணும்".அடுத்து உணவு, அதை நேரத்திற்கு நாம சாப்பிடணும், அதே நேரம் அது சத்துள்ளதாகவும் இருக்கணும் சரியா?".

" ம்ம் சரி தான்டா மாப்பிள்ளை".

" இப்படியே மாற்ற மாற்றி சத்தியமூர்த்தியும், கோபியும் பேசிக்கொண்டிருக்க, வீட்டிற்கு சாப்பிட போன ஆட்களும், வயலுக்கு வந்து மீண்டும் வேலையை தொடங்கினர்".

" ஒரு வழியாக நாற்று பறித்து முடித்து வயலில் கொண்டு போய் வைக்க, மாலை 5 மணி ஆனது. பின்னர் அனைவரும் கலைந்து செல்ல, இவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்".

" மேலும் இரண்டு நாட்கள் சென்றது. மூன்றாவது நாள் ஊருக்குள் பாட்டு சத்தம் காலையிலே கேட்க,ஜனனிக்கு தான் சடங்கு என்பது வெற்றிக்கு புரிந்தது".

" சத்தியமூர்த்தியும் வெற்றியும் காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வள்ளி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் போது, ஐயா என்று மாரியப்பன் குரல் வாசலில் கேட்க".
உள்ளே வாங்க கணக்கு என்றார்".

"அங்கு வந்த மாரியப்பன், சாயங்காலம் புள்ளைக்கு சடங்கு வச்சிருக்கேங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்களென்றவர், அம்மாடி வள்ளி நீயும் வந்துடுமா என்க, அதற்கு வெற்றியோ, மாமா அப்போ நான் வர வேண்டாமா? என்றான்".

" அச்சச்சோஓஓஓ அப்படிலாம் இல்லைங்க சின்ன தம்பி. நீங்க இளைஞர் சங்கம் என்பதால், கண்டிப்பாக வந்துருவீங்களென்று தெரியும்".

"சரிங்க மாரியப்பன் கண்டிப்பா நாங்க வந்துடுறோம், வாங்க ஒரு வாய் சாப்பிடுங்களென்று சத்தியமூர்த்தி சொல்ல, சாப்பிட்டு தான் வந்தேங்க".

"இன்னும் சிலரை கூப்பிடனுங்க, அப்போ நான் வருகிறேனென்று அங்கிருந்து சென்றார்".

" மாலை வேளையும் வந்தது".

" சொந்த பந்தத்தின் வருகையால் ஜனனி வீடு நிறைந்திருக்க, சிறு பிள்ளைகள் அங்கங்கே ஓடி ஆடி விளையாண்டனர்".

" வாசலில் நீண்ட பந்தல் போட்டு, அதில் அவளை உட்கார வைக்க அலங்கரிக்க பட்ட சேர் இருக்க, சில பிள்ளைகள் ஓடிப்போய் அதில் உட்கார்ந்து ஓடி வந்தனர்".

"நேரம் கடந்து கொண்டிருக்க தூரத்தில் மேள சத்தம் கேட்டது".

" தன்னிடம் உள்ளதை கொண்டு சொந்த பந்தங்களை வைத்து, பேத்திக்கு சீர் சாமான்களை வாங்கிக்கொண்டு, சொந்தங்கள் சூழ கண்ணம்மா பாட்டி வந்து கொண்டிருந்தார்".

" சத்தியமூர்த்தியும், வள்ளியும் விசேஷ வீட்டிற்கு வந்து சேர, மாரியப்பனும், ராக்கம்மாவும் இருவரையும் வரவேற்தனர்".

"வள்ளியம்மை தனது தோழியை தேட, மலரு சீர் எடுத்து வருதுங்க என்றார் மாரியப்பன்".

" சீரோடு வந்தவர்களை கலா ஆலம் சுற்றி வரவேற்தார்".

" ஆண்கள் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு கதைகளை பேசினர்".

" சீர்வரிசை தட்டுகளை பந்தலில் வைத்து விட்டு, ஜனனியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தார்கள்".

" மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்தவளுக்கு, எப்போடா குளித்து வேறு டிரஸ் மாற்றுவோமென்று இருந்தது".

"இங்க வந்து உட்காரு ஜனனி என்றவர் வாங்க புள்ளைக்கு நலுங்கு வைங்களென்று சொல்லி, அவரே ஆரம்பித்து வைத்தார்.மற்றவர்களும் எண்ணெய், சீயக்காய் தொட்டு அவள் தலையில் வைத்தனர்".

" பின்னர் கலாவே அவளை கூப்பிட்டு போய், தலையில் சீயக்காயையும், ஷாம்பையும் ஊற்றி நன்கு தேய்த்து விட்டு, அண்ணி வாங்க தண்ணீர் ஊற்றலாமென்று கூப்பிட்டார்".

" ஐந்து சுமங்கலி பெண்கள் சேர்ந்து மஞ்சள் வேப்பில்லை கலந்த தண்ணீரை மொண்டு,ஜனனி தலையின் மேல் உள்ள சல்லடையில் ஊற்றி விட்டு,எம்மாடி நல்லா தேய்ச்சி குளிச்சிட்டு வாடியம்மானு வெளியே சென்றார்கள்".

திருச்சூர் -பாண்டியன் பேலஸ்- பிளாஷ் பேக்:

" அப்பா, நம்ப ஜெய சிம்ஹன் தான் மாப்பிள்ளை என்று நகுலனிடம் சொல்ல, ம்ம் நல்ல பையன் தான் பா.".
ஆனால்,அந்தப் பையனுக்கு இதுல இஷ்டம் இருக்கணுமே?என்று நகுலன் கேட்க,அவன் கிட்ட நான் பேசிட்டேன்ப்பா".

"நேன்று தான் அவன் தமிழ்நாட்டுக்கு போயிருக்கிறான்.பேசிட்டு வந்து, பதில் சொல்றேன்னு சொல்லி இருக்கான் பா, ஓஓ நீயே எல்லாம் பேசி முடிச்சிட்டியா, அப்போ சந்தோஷம் சந்தோஷம்".

நல்ல பையன் தான்.நல்ல திறமைசாலி மற்றும் உழைப்பாளி. லீலாவை நம்பி கொடுக்கலாம் பா என்றவாறு மகளிடம் திரும்பியவர் லீலா, நீ என்ன சொல்லுற? அப்பா உங்க ரெண்டு பேருக்கும் எது சரியென்று படுகின்றதோ, அதை எனக்கு செய்யுங்கள்.

" மகளின் வார்த்தையைக் கேட்டு பெற்றோராக அவருக்கு பெருமையாக இருந்தது.இல்லடா இது உன்னோட வாழ்க்கை".

"கடைசி வரைக்கும் வாழப் போறது நீதான். உனக்கு அப்படி வேற ஏதாச்சு விருப்பமிருந்தால், மறைக்காம அப்பா கிட்ட சொல்லுடா என்க, இல்லப்பா எனக்கு அப்படி தனிப்பட்ட முறையில் எந்த ஆசையும் இல்லை".

"தாராளமா நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேனென்று உறுதியாக சொல்லி விட்டு, லீலா அங்கிருந்து சென்றாள்".

கலசங்காடு:

"இரண்டு நாட்களாக இரவில் மட்டும் விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது".

" திண்ணையில் உட்கார்ந்து மழையை பார்த்துக்கொண்டிருந்த வீரையன், மாசம் மூனு ஆவது,பிறகு ஏன் ஜெய் வரவில்லை?, புள்ளைக்கு எதாவது உடம்பு சுகமில்லையோனு தெரியலையே? என்று கவலையோடு தனது மனைவியான மீனாட்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்".

"நம்ம செந்தூரன் புண்ணியத்துல அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுங்க.வேலையா இருக்குமென்றவர், சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்க, சரிமா போய் எடுத்து வை நான் வரேன்".

" வீட்டின் உள்ளே இருந்த முற்றத்தில், சமைத்த உணவுகளை கொண்டு வந்து வைத்தவர்,ஜெய் அப்பா என குரல் கொடுக்க, முற்றத்து கம்பி வழியாக வரும் மழை நீரில், கையை நீட்டி கழுவி விட்டு, வந்து உட்கார்ந்தார்".

"கணவருக்கு தட்டை வைத்து அதில் சூடான சாப்பட்டை போட்டு, அதன் மேல் குழம்பை ஊற்றப் போக, யாரோ வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டது".

" யாரு இந்த மழையிலென்று போய் பாருமா என்க,குழம்பை போட்டுட்டு போறேனேங்க என்று மீனாட்சி சொல்ல, இருக்கட்டும்மா".

" போய் பார்த்துட்டு வா, சோறும்-குழம்பும் எங்கே போய்விடப்போகிறதென்றார்".

"சரிங்க என்றபடியே எழுந்து போனவர் அங்கு தண்ணீரை உதறிக்கொண்டிருந்தவனை பார்த்து ஜெய்ஈஈஈ என்க, நான் தான் மா என்று திரும்பியவன், துண்டு எடுத்து வாம்மா என்றான்".

" இதோப்பா என வேகமாக உள்ளே வந்தவர், ஏங்க ஜெய் தான் வந்திருக்கானென்று சொல்லியபடியே, கொடியிலிருந்த துண்டையும், கைலியையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த மீனாட்சி, இந்தாப்பா என்க, அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டவன், இந்த பைய எடுத்துட்டு போய் உள்ள வை மா என்று, போட்டிருந்த ஈர ஆடையை கழற்றினான்".

" கைலியை கட்டிக்கொண்டவன், தலையை துவட்டிக்கொண்டே உள்ளே வர, வாப்பா என்றார்".

" நல்லா இருக்கீங்களாப்பா என ஜெய் கேட்க, ம்ம் நீ ஏன் இப்படி மெலிஞ்சிருக்க?, சரியா சாப்டுறாயா?, இல்லையா என்ற வீரையன், மீனாட்சி இன்னும் என்ன பண்ணுற என்க, மகனுக்கு சூடாக போட்ட ஆம்ப்லேட்டோடு அங்கு வந்தார்".

" வாப்பா சாப்பிடு என்க, தந்தையின் அருகில் வந்து ஜெய் உட்கார, மகனுக்கும் சாதத்தை போட்டு, அதன் மேல், சூடான மீன் குழம்பை ஊற்றியவர், முட்டையை எடுத்து வைத்தார்".

" நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அம்மாவின் கைமணத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டான். இன்னும் கொஞ்சம் சோறுப்பா என்க, அய்யோ போதும் மா".

" இனி முடியாது என்று எழுந்து போய் கையை கழுவியவன், தனது அறைக்குள் சென்று, கபோர்டில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு முற்றத்திற்கு வந்தான்".

" ஏன்டி நீயும் உட்கார்ந்து சாப்பிடேனென்று வீரையன் சொல்ல, இருக்கட்டுங்க, நீங்க சாப்பிடுங்க என்றவர், இன்னும் கொஞ்சமென சாதத்தை காட்ட, வேண்டாம் போதுமென்று எழுந்தார்".

" பின்னர் மீனாட்சியும் சாப்பிட்டு முற்றத்திற்கு வர, அப்பா என்று கணக்கு நோட்டை எடுத்து நீட்டினான்".

"என்ன அவசரம்?,காலைல பாத்துக்கலாமே?, இல்லப்பா பார்த்துடுங்களேன், ஒருவேலை முடியுமே என்றான்".

" அந்த அனுபவஸ்தர், அரை மணி நேரத்தில் 3 மாத கணக்கை பார்த்து முடித்தவர், சில இடத்திலிருந்த சந்தேகத்தை எல்லாம் மகனிடம் கேட்டார்".

" சரி நேரம் ஆகுது போய் படுயென்றவர், தனது அறைக்குள் எழுந்து செல்ல, மீனாட்சியும் ஜெய்யும் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தனர்".

" ஏம்பா, சரியா சாப்பாடு தண்ணீரில்லையா?, கழுத்து எலும்புலாம் இப்படி தெரியுதேயென்று மகனின் கன்னத்தை பிடித்து மீனாட்சி கேட்க, நல்லா தான் சாப்டுறேன்மா".

" அப்புறம்மா ஒரு விசயமென்க, சொல்லுப்பா என்றார். இதோ வரேனென்று எழுந்து உள்ளே போனவன்,சிறிது நிமிடத்தில் ஃபோட்டோவோடு வந்து, தாயின் முன்பு நீட்டினான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கலசங்காடு:

"மகன் காட்டிய புகைப்படத்தை வாங்கி பார்த்தவர், பொண்ணு நல்லா, மூக்கும் முழியுமா, பார்க்க ரொம்ப லட்சணமா தானிருக்கு".ஆனால் பாவம்...சாப்பாட்டுக்கு வழி இல்லை போல பா. ரொம்ப நோஞ்சான் போல இருக்கே?".

"தனது அம்மா சொல்லியதை கேட்ட ஜெய்,சப்தமிட்டு சிரித்து விட்டான்".

"அப்படி என்ன சொல்லிட்டேன் நீ சிரிக்கிறனு மீனாட்சி கேட்க, பின்ன என்னம்மா".

"அந்த பொண்ணு ஒல்லியா இருக்கு. அதனால உனக்கு அப்படி தெரியுது. நோய் எல்லாம் ஒன்னும் இல்லை".

"இந்த பொண்ணு தான் ஜீவாவின் தங்கச்சி.அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறியானு ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட பேசினான் மா".

"நான் அப்பா அம்மா கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்ம்மா, மகனின் வார்த்தையை அறைக்குள்லிருந்து கேட்டுக் கொண்டிருந்த வீரையனிற்கு, பெருமையாக இருந்தது".

"பரவால்ல நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு வந்து சொல்லாமல், அப்பா அம்மா சம்மதத்தோடு கேட்டு வரேன்னு வந்திருக்கானே, நம்ம வளர்ப்பு ஒரு போதும் தப்பா போகலையென்று நினைத்து,தனது மீசையை தடவிக் கொண்டார்".

"மகன் சொன்னதை கேட்ட மீனாட்சி,அப்படியா நல்ல விஷயம் தான் பா. உனக்கும் கல்யாண வயசு தான் ஆகுது.அப்பாவும் பொண்ணு பார்க்கணும்னு,சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க.நல்ல வேளை பா,நீயே ஒரு நல்ல பொண்ணா கொண்டு வந்து இருக்க".

"நீ இந்த பொண்ண பார்த்திருக்கியா?, பேசி இருக்கியா?,இல்லமா நான் இதுவரை நேரில் பார்த்ததில்லைமா".

"வயசு பொண்ணு இருக்குற வீட்டுக்கு நம்ம போனா நல்லா இருக்காது, அதனால நான் அவனோடு பட்டறையில் பார்த்து பேசிக்கிறதோடு சரி".மத்தபடி அவங்க வீட்டுக்கு நான் போனதே இல்லம்மா".

" ஓஓஓ என மனதிற்குள் மகனை நினைத்து பூரித்தவர்,சரி ஜெய், நீ படுத்து தூங்குப்பா. காலையில அப்பா கிட்ட நான் பேசுறேன்".

"ஆமா,பொண்ணோட பேரு என்ன?, லீலா மா. லீலா ஜெய சிம்ஹன் என சொல்லி பார்த்தவர், நல்லா இருக்கேனு கையிலிருந்த ஃபோட்டோவை எடுத்து மகன் முகத்துக்கு பக்கத்தில் வைத்து ஜோடி பொருத்தம் பார்த்தார்".

" என்னமா பண்ணுற என்க,ரெண்டு பேருக்கும் நல்லா இருக்கு கண்ணா.இதை போய் அங்க சாமி ரூம்ல வைக்கிறேன்.காலையில அப்பா கிட்ட பேசுறேன்".

"நீ போய் படு என்றவர்,வாசலுக்கு சென்று கதவுகளை எல்லாம் நன்கு தாழிட்டு விட்டு, இரவு விளக்கை போட்டு விட்டு, தங்களது அறைக்குள் வந்து பார்க்க,கணவர் கண் மூடி படுத்திருப்பது தெரிந்து, தூங்கிட்டீங்க போல என்றவர்,கீழே பாய் விரித்து அதில் மீனாட்சி படுத்துக்கொண்டார்".

"விடியலும் அழகாய் ஆரம்பமானது".

"தோட்டத்திலிருந்த பசுமாட்டில் பாலை கரந்து எடுத்துட்டு வந்த மீனாட்சி டீயை போட்டு, மகனுக்கு எடுத்துக் கொண்டு போய் பார்க்க, அங்கே ஜெய் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது".

"பின்னர் கணவரிடம் கொடுக்க, அவர் குடித்து விட்டு மகன் நேற்று காட்டிய கணக்கு நோட்டை, மீண்டும் ஒரு முறை செக் பண்ணி பார்த்தார்".

"இந்த கணக்கு புள்ளைக்கு வேற வேலை கிடையாது. ஒரு முறை பார்த்தாலும் இல்லை, ஓராயிரம் முறை பார்த்தாலும், கண்ணுல விளக்கெண்ணெய் விட்ட போல, தெளிவாகத்தான் பார்ப்பீங்க".

"அப்படி இருந்தும் அய்யா நோட்டோடு காலையிலேயே எழுந்து உட்கார்ந்தாச்சென்று மீனாட்சி கிண்டல் பண்ண, என்ன மீனாட்சி,மகன் வந்தாச்சென்று புருஷனை கிண்டல் பண்றியா என்றவாறு வீரையன் சிரித்தார்".

"என் புருஷனை நான் கிண்டல் பண்ணாம,வேற யாரு கிண்டல் பண்ண? காலையில் என்ன சமைக்கிறது என்க, உன் மகனுக்கு பிடிச்சது பண்ணுடி".

"எத்தனை நாள் கழிச்சு வந்திருக்கிறான் என்க, ம்ம் என்று உள்ளே போனவர் இட்லியை ஊத்தி சாம்பார் சட்னி தயாரித்து, வெங்காயம், பூண்டு அதோடு உப்பையும் போட்டு நன்றாக இடித்து அதில் மிளகாய் தூளையும், நல்லெண்ணெயும் கலந்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து மூடி வைத்தார்".

"ரூமில் தூங்கிக்கொண்டிருந்த ஜெய் எழுந்து வெளியே வந்தவன், அம்மா டீ என்க, இதோ என்று சொல்லியவர், போட்ட டீயை மீண்டும் சூடு பண்ணி, ஒரு கிளாஸில் ஊற்றி எடுத்துட்டு வந்து கொடுத்தார்".

"அதை வாங்கி குடித்தவன் நான் போய் ஜலால் மாமாவை பார்த்துட்டு வரேன்மா என்க, ம்ம் பாத்துட்டு வா. அண்ணாவும் போன வாரம் தான் வந்தாங்க என்றார்".

"சரிமா என்றவன், சட்டையை போட்டுக் கொண்டு அங்கிருந்து பக்கத்து தெருவிலிருக்கும் ஜலால் பாய் வீட்டிற்கு சென்றான்".

"போகும் வழியில் தெரிந்தவர்கள் அவனிடம் நலம் விசாரிக்க, அவர்களிடம் பேசிக்கொண்டே ஜலால் பாய் வீட்டிற்கு போக,காலையில் வாசலில் யாரிடமோ பஞ்சாயத்து விஷயமாக பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது".

"நல்லா இருக்கீங்களா மாமா என்று கேட்டுக் கொண்டு, அவர் அருகில் வந்து உட்கார்ந்தான்.மற்றவர்களும் அவனிடம் நலம் விசாரிக்க,பதில் சொல்லியவன் நீங்க பாருங்க மாமா அப்புறம் பேசலாம் என்றான்".

"பின்னர் சிறிது நிமிடம் அந்த பஞ்சாயத்து விஷயம் பேசி முடிந்ததும் எல்லாரும் கலைந்து சென்றனர்".

" ஜெய்,எப்படி இருக்க? மூணு மாசம் ஆகுது உன்ன பார்த்து.கடை எல்லாம் எப்படி போகுது என்க, எல்லாம் நல்லா போகுது மாமா என்றவன்,லீலா விஷயத்தை சொல்ல, அப்படியா நல்ல பொண்ணு தான்.நானும் ரெண்டு முறை பார்த்திருக்கிறேன். தங்கமான பொண்ணு. அவங்க அப்பா அதைவிட ரொம்ப நல்ல குணம்".

"அவ்வளவு பெரிய சொத்துக்காரவங்க, ஆனா வெளியில பார்த்தியா எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்கள்".

"நல்ல விஷயம் தான். உங்க அப்பா என்ன சொல்றாரு? அப்பாக்கு சொல்லலை மாமா. அம்மா கிட்ட மட்டும் தான் சொன்னேன்"

"சரி சரி உள்ள வா என்றவர்,பேகம் பேகம் என்று குரல் கொடுக்க, முக்காடு போட்ட பெண்மணி ஒருவர் வெளியில் வந்து பார்த்தவர்,ஜெய் எப்போ வந்தப்பா? நல்லா இருக்கியா?,நைட்டு வந்தேன் அத்தை".

" நீங்க நல்லா இருக்கீங்களா, ஜீனத், ஜஹார் நல்லா இருக்காளா?,எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா.இரு டீ எடுத்து வரேனென்று உள்ளே போக, வேண்டாம், குடிச்சிட்டு தான் இங்கு வந்தேன்.

"மேலும் சிறிது நேரம் அவர்களோடு பேசியிருந்து விட்டு தனது வீட்டிற்கு வந்தான்".

வெற்றி- ஜனனி நினைவுகள்:

"தலை முதல் கால் வரை இருந்த எண்ணெய் பிசு பிசுப்பை நீக்கவே ஜனனிக்கு,போதும் போதுமென்று ஆக, மீண்டும் ஒரு முறை சோப்பு தேய்த்து குளித்து முடித்தவள், அத்தையென்று குரல் கொடுத்தாள்".

" இந்தா ஜனனினு அவளுக்கு டவலையும், மற்ற துணிகளையும் போட்டு வர சொல்லி நீட்ட, வாங்கிக் கொண்டவள், சிறிது நிமிடத்தில் வெளியே வந்தவளின் தலையில் ஈரம் போக துவட்டி விட்டு அலங்கரிக்க ஆரம்பித்தனர்".

" அதற்குள் மலரும், கண்ணம்மா பாட்டியும் தயாரா, தயாரானு இரண்டு முறை கேட்டு சென்றனர்".

" அரை மணி நேரம் சென்றிருக்க, அங்கிருந்த பெண்களில் ஒருவர், பந்தலுக்கு போய் புள்ளை ரெடினு சொல்லுங்கம்மா என்றார்".

" அதைப்போல சொல்லி வர மலரும், கலாவும் வந்து ஜனனியை பார்த்து நெட்டி முறித்தவர்கள், அவளை கூப்பிட்டுக்கொண்டு பந்தலுக்கு வர, அப்பொழுது கோபியோடு அங்கு வந்த வெற்றியோ, அலங்காரத்தில் இருப்பவளை பார்த்து மலைத்து போனான்".

"வாடமல்லி கலரில் தங்க ஜரிகை போட்ட பட்டுப்புடவையில்,பேரழகியாய் இருப்பவளின் மேலிருந்து பார்வையை, சிறிதும் அவனால் திருப்ப முடியவில்லை".

" அப்பொழுது மாமன்காரவங்க வந்து மாலையை போடுங்களென்க, அன்பு கையில் மாலையை கொடுத்த மலர், போய் போடுப்பா என்க,அவனும் ஜனனியின் முன்பு வந்தவன்,மாலையை அவள் கழுத்தில் போட, வெற்றிக்கு கொலை வெறியானது".

"அவன் பல்லை கடிக்கும் சத்தம் கேட்டு நண்பனை பார்த்த கோபி, என்னாச்சிடா என்க, ஒன்னும் இல்லைடா என்று சமாளித்தான்".

" பின்னர் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி,குங்கும பொட்டு வைத்து , ஜனனியை ஆசீர்வதித்து சென்றனர்".

" ரொம்ப நேரமாக யாரோ தன்னை பார்ப்பதின் குறுகுறுப்பில், நிமிர்ந்த ஜனனி, தனது கண்களை சுழற்றி பார்க்க,இடது பக்கம் பந்தலின் ஓரத்தில் வெற்றி நிற்பதும், இவளையே அவன் பார்ப்பதும் தெரிந்தது".

" அவனை பார்த்தவள் அந்த பார்வையின் வீச்சில் கீழே குனிந்து கொண்டவள், இந்த மனுஷன் ஏன் இப்படி பாக்குறாரென்று யோசனையானாள்".

" சிறிது நிமிடங்கள் சென்று தற்செயலாக பார்ப்பது போல, மீண்டும் ஜனனி பார்க்க, இப்பொழுது வெற்றி அங்கு இல்லை".

"ஜனனி என்ற சத்தத்தில் பக்கத்தில் பார்க்க, சத்தியமூர்த்தி, வள்ளியம்மை, வெற்றி மூவரும் மேடைக்கு வருவது தெரிந்தது".

வள்ளியும், சத்தியமூர்த்தியும் பொட்டு வைத்து ஆசிர்வாதம் செய்தவர்கள், அவர்கள் எடுத்து வந்த தாம்பூலத்தை ஜனனியிடம் இணைந்து நீட்ட, வெற்றி மறுபக்கம் வந்து நின்றான்.

"பின்னர் வந்தவர்களெல்லாரையும் வயிறார சாப்பிட வைத்து, கிப்டையும் கொடுத்தனுப்பினர்".

" எல்லாரும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்".

"ஜனனியும் கீதாவும் சாப்பிட்டு உள்ளே வந்தவர்கள்,ஜனா டிரஸ் மாத்திக்கலாமா மா என்க, அன்புவை விட்டு மாலையை கழட்டி விட்டு, இப்போ போய் மாத்திக்கமா என்றார் கலா".

" ச்சூஊஊஊ என்றவள் கட்டியிருந்த புடவையை கழட்டி விட்டு நைட்டியை போட்டுக் கொண்டவள்,தலையில் இருக்கும் ஹேர்பின்னை கழட்டுடி".
ஏதோ மூட்டையை தூக்கி வைத்திருக்க போல இருக்கென்று ஜனனி சொல்ல, கீதாவும் தோழிக்கு உதவி செய்தாள்".

" பின்னர் இருவரும் பேசிக்கொண்டே படுத்தவளுங்கள் தூங்கி விட்டனர்".

" நாட்களும் வேகமாக ஓடியது".

"வெற்றியும்- கோபியும் பக்கத்து ஊரில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார்கள்".

" இரண்டு வருடங்கள் ஓடியது".

" இப்பொழுது ஜனனியும், கீதாவும் பத்தாம்வகுப்பு வந்து விட்டார்கள்".

" ஊரிலிருக்கும் அம்மன் கோயிலில் திருவிழா என்பதால், கூட்டம் எங்கு பார்த்தாலும் நிரம்பி இருந்தது".

" முதல் நாள் ஊர்வலம் போய் சன்னதிக்குள் அம்மன் வந்து சேர, மறுநாள் மஞ்சள் நீர் விழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே".

"கீதாவும் ஜனனியும், யார் மேல் தண்ணீரை ஊற்றலாமென்று முதல் நாள் இரவு தூங்கும் போதே பேசிக்கொண்டனர்".

" வழக்கம் போல அந்நாளும் விடிந்தது".

" தோழிகள் இருவரும் வாசலில் வந்து பார்க்க, இந்த கூறு கெட்ட மனுஷனுக்கு இப்போ தான் பன்னிரெண்டு வயசுனு நினைப்பென்று, ஈரத்தை துடைத்துக்கொண்டே ராக்கம்மா பாட்டி உள்ளே வந்தார்".

"ஏய் வாடி மஞ்சதண்ணி ஆரம்பமாகிட்டென்று கீதா சொல்ல, இருவரும் கலர் பொடியை எடுத்துக்கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும், அவர்களை கிண்டல் பண்ணும் மாமா முறை உள்ளவரின் மேல் பொடியை தூவ சென்றாளுங்கள்".

ஆர்கலி எங்கே...?
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top