• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கோவை மாவட்டம்-பொள்ளாச்சி கிராமம்:

"அண்ணா, அண்ணா என்ற குரல் வாசலில் கேட்க,சாமியறையில் இருந்த சத்தியமூர்த்தி,வெளியே வந்து பார்க்க,அங்கே நடுத்தர வயது ஆண் ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்".

"அவரை பார்த்த சத்தியமூர்த்தி, சொல்லுங்க என்றார்".

" அண்ணா, நான் பக்கத்து ஊருணா, என் குழந்தைக்கு ஏதோ வண்டு போல கடிச்சிட்டு,அது உடம்பு முழுவதும் வீங்கி போய் அழுதுங்கண்ணா, புள்ளைய தூக்கி கிட்டு,இம்புட்டு தூரம் வரலானா,தொட்டாவே புள்ளை அழுவுதுங்கண்ணா என்று கண் கலங்கினார்".

" அதைக்கேட்டவர்,இதோ வந்துடுறேன் என்றவாறே உள்ளே சென்றவர்,அங்கிருந்த அவரது தங்கையிடம் விஷயத்தை சொல்லி விட்டு,பச்சிலை இருக்கும் பெட்டியை எடுத்து வெளியே வந்தவர்,வெற்றி வெற்றி என்று குரல் கொடுக்க, இளைஞன் ஒருவன் அங்கு வந்தான்".

" வண்டிய எடு என்றவர்,வாப்பா என்று அழுது கொண்டிருந்தவரையும் கூப்பிட்டுக்கொண்டு,காரில் ஏறியதும், வெற்றியும் பக்கத்து ஊரை நோக்கி வேகமாக காரை ஓட்டினான்".

" கால் மணி நேரத்தில் அந்த ஓட்டு வீட்டின் முன்பு போய் கார் நிற்க, வேகமாக இறங்கி உள்ளே சென்றவர், அங்கு கட்டிலில் படுத்திருக்கும் குழந்தையை சோதித்து பார்த்து விட்டு, தான் எடுத்து வந்த பெட்டியை திறந்தவர்,ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து,கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர சொன்னார்".

அதைப் போலவே தண்ணீர் சொம்பை கொண்டு வந்து கொடுக்க, பச்சிலையில் கொஞ்சம் நீர் விட்டு கலந்து,குழந்தையின் நாக்கில் தடவி விட, கசப்பின் காரணமாய் குழந்தை அழுதது.

" கொஞ்ச நேரத்தில் சரியாகிடும் என்றவர்,கையை கழுவி விட்டு, மேலும் மூன்று நாட்களுக்கு கொடுக்க பச்சிலையையும்,என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் குழந்தையின் தாயிடம் சொன்னார்".

"ரொம்ப நன்றிங்கைய்யா என்று, பெற்றோர் இருவரும் கண்ணீரோடு கையெடுத்து கும்பிட,இது என்னோட தொழில் என்க,குழந்தையின் தந்தையோ ஏம்மணி காசு கொண்டு வந்து குடு என்குவும், சத்தியமூர்த்தியோ அதெல்லாம் வேண்டாமென்றார்".

" அய்யா, இம்புட்டு தூரம் வந்துட்டு, சும்மா போறியேளே என்க,குழந்தைய கவனிங்க என்று சொல்லி வெளியே வந்தவர்,காரில் ஏறியதும், வெற்றியோ தங்கள் ஊரை நோக்கி ஓட்டினான்".

கார் ஓட்டிக்கொண்டிருந்த வெற்றி, கண்ணாடி வழியாக தெரியும் சத்தியமூர்த்தியிடம்,அப்பா நம்ப ஊருக்கு புது கலெக்டர் வரப்போறாங்கனு பேச்சு அடிபடுது.

"அப்படியாப்பா,யார் சொன்னாங்க? என்றார் சத்தியமூர்த்தி".

" நேற்று நம்ப தாலுக்காபிஸூக்கு போயிருந்தேன்,அங்க சொல்லிக்கிட்டாங்கப்பா".

"யாரோ,லேடி தான் வராங்களாம் பா".

" ஓஓ என்றவர்,உனக்கு எப்போ ரிசல்ட் வருது என்க,இன்னும் ரெண்டு வாரத்தில் வரும்னு சொல்லிருங்காங்க, ஏன் பா கண்டிப்பா நான் போலிஸ் ஆகணுமா?".

" நிச்சயமாக".

" அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றார் சத்தியமூர்த்தி".

" இல்லை...,நானும் உங்க கூடவே இருந்து என்று அவன் பேச்சை இழுத்தான்".

ம்ம் என் கூடயே இருந்து பருத்தி புண்ணாக்கு திண்ணுட்டு கிட, அங்கே,மாரியப்பன் யாராவது வேலைக்கார மாப்பிள்ளை வந்தால், ஜனனிய கட்டி வைக்கட்டுமென்றார்.

அவர் சொன்னதைக்கேட்டு சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன், பயத்தோடு பின்னால் திரும்பி பார்த்தான்.

" என்னப்பா என்றார்".

" அப்பா,அது வந்துப்பானு வெற்றி இழுக்க,மருமவள் என்கிட்ட சொல்லிட்டு தம்பி.நீ தான் இன்னும்,என்னை அப்பாயென்று ஏத்துக்கவில்லை".

" ஜனனிக்கு நான் தான் மாமனார் என்றவர்,ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்".

"சிறிது நிமிடம் அந்த இடத்தில் பேரமைதியே நிலவியது".

" பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணியவன், கண்ணாடி வழியாக தனது சித்தப்பாவை பார்க்க,அவரோ ஜன்னல் பக்கம் உள்ள தன் பார்வையை திருப்பவேயில்லை".

" வீட்டிற்கு முன்பு வந்து கார் நின்றதும், கதவை திறந்து பெட்டியோடு இறங்கி உள்ளே சென்றார்".

" போகும் சித்தப்பாவை பார்த்த வெற்றிக்கு,மனதிற்குள் வேதனையாக இருந்தது".

" உள்ளே வந்த சத்தியமூர்த்தி மருந்து பெட்டியை அதற்கான இடத்தில் வைத்து விட்டு,ஹாலில் இருந்த ஃபோட்டோவிற்கு முன்பு போய் நின்றார்".

" அங்கே,சத்தியமூர்த்தி கவுண்டர் என்ற பெயர் தாங்கி,கம்பீர தோரணையோடு அவரின் தாத்தா இருக்கும் ஃபோட்டோ இருந்தது".

"அதற்கு பக்கத்தில் கவுண்டரின் மனைவி கலாவதி,அடுத்த கீழ் வரிசையில் சத்தியமூர்த்தியின் அப்பா சந்திரன்,அம்மா சகுந்தலா, அடுத்ததாக,வெற்றியின் அப்பா சரவணனும்,அம்மா காந்திமதி, சரவணனின் அப்பா இந்திரனும், அவரின் மனைவி லீலாவின் ஃபோட்டோக்களுக்கு மாலை போடப்பட்டிருந்தது".

" தனது குடும்பத்தாரின் ஃபோட்டோக்களை பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது".

திருச்சூர்:

மயங்கி விழுந்த மகளை கண்டு, வசுஊஊஊ என்றவாறு பதறி வந்த சைலஜா பாட்டி,தண்ணீர் கொண்டு வாங்க என்று குரல் கொடுக்க, வேலையாள் ஒருவர்,கிச்சனில் இருந்து தண்ணீரோடு வேகமாக ஓடி வந்தார்.

" அதை வாங்கி மகளின் முகத்தில் தெளிக்க,சிறிது நொடிகள் சென்ற பின்னர் வசுவின் மூடிய இமைகள் அங்கும்,இங்குமாக உருள்வது தெரிந்தது".

" வசு,அம்மாடி வசுவென்று,சைலஜா பாட்டி தனது மகளின் கன்னத்தில் தட்டி எழுப்ப,கண்ணை திறந்த வசுந்தரா,பட்டென்று எழுந்து உட்கார்ந்தார்".

"என்னோட பொண்ணு இப்போ எங்க இருக்காளென்று தந்தையை கேட்க, கோயம்புத்தூரில் இருக்கும் ஆசிரமத்தின் பெயரை சுந்தரபாண்டியன் சொல்ல,கீழே கிடந்த தனது ஃபோனை எடுத்து ஒருவாரம் பர்சனல் லீவிற்கு அப்ளே பண்ணியவர்,மைக்கேல் அண்ணா காரை எடுங்க என்றவாறே வெளியே சென்றார்".

" போகும் மகளை பார்த்து கண்ணீரோடு நின்ற சைலஜா பாட்டி, திரும்பி கணவனை முறைத்து பார்க்க,அவ வாழ்க்கை நல்லா இருக்குமென்று தான் இப்படி பண்ணுனேன்,அதை நம்புமாயென்றார்".

" ம்கும், என் பொண்ணோட வாழ்க்கையே போய்ட்டே?,அதை உங்களால் திருப்பி தரமுடியுமா?".

"சைலஜா,தயவு செய்து கொஞ்சம் என் சூழலையும் புரிஞ்சிக்கோ,அந்த நேரத்தில் இந்த முடிவு தான் எனக்கு சரியென்று தோன்றியது".அதனால் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்".

" நானும் மனுஷன் தான்".

என் பொண்ணு குடும்பமாக வாழவேண்டுமென்ற எண்ணம், எனக்கும் இருக்கும் தானே?.

இல்லையென்று உன்னால் சொல்ல முடியுமா?,சொல்லுமா என்று தனது மனைவியை பார்த்து சுந்தரபாண்டியன் கேட்டார் .

ம்கும்...."அவரவர் நீதி, நியாயம் அவர்களுக்கு பெரியது" என்றவர், இப்போ மட்டும் உங்க பொண்ணு குடும்பமா வாழுறாளா?.உங்க மருமகன் எப்படி, உங்களைப்போலவே ஜமீன் வாரிசா? இல்லை,அரசியல் பின்புலமா?.
இல்லை கோடியில் புரளும் ஓர் ஆளா?, சொல்லுங்க என்றார்.

மனைவியின் கேள்விகளோ, கோடாரியாள் பிளப்பதை போலிருக்க,
அய்யோஓஓஓ சைலஜா, வார்த்தையால் என்னை கொல்லாதேம்மா?.இத்தனை வருஷமா உள்ளுக்குள் நான் செத்துக்கிட்டு இருந்தது போதுமென்றார்.

அது இருக்கட்டும்,என்ன திடீர்னு இப்போ இதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமென்று சைலஜா பாட்டி கேட்க,நம்ப பேத்திய பற்றி மூன்று மாதமா எந்த தகவலும் இல்லைமா.

அவள் சென்னைக்கு போன வரையில் தான் ஃபாதருக்கு தெரியும்,அதற்கு பின்னர் என்ன ஆச்சென்று அவருக்கு தெரியவில்லை.முடிந்த அளவு நான் தேடி பார்க்கிறேன்னு,எனக்கு தகவல் கொடுத்திருந்தார்.

ஆனால்...,இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதர் கிட்டயிருந்தும் எந்த தகவலும் இல்லையென்று சொல்லி சுந்தரபாண்டியன் கண் கலங்கினார் .

அய்யோஓஓ,என் மகளுக்கு ஏன் இந்த தலையெழுத்து?.

இன்னும் நான் உயிரோட இருந்து என்னவெல்லாம் பார்க்க வேண்டுமென்று இருக்கோவென்று சைலஜா பாட்டி கதறி அழுதார்.

" காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த வசுந்தராவிற்கு, அவர் மனநிலையை விவரிக்க வார்த்தையில்லை".

" இருபத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு தன் வயிற்றில் சுமந்த குழந்தை உயிரோடு இருப்பதை கேட்ட பொழுது, ஒரு நொடி தன் மூச்சு நின்றுவிடாதா என்று நினைத்தார்".

" ஒரு நாள் இரண்டு நாட்களா?, இல்லையே,இருபத்தி இரண்டு வருடங்களாச்சே".

" எப்படிப்பா இதை என்னிடம் இருந்து மறைத்தீர்கள்".

" எதை நினைத்து நீங்கள் இந்த காரியத்தை செய்திருப்பீர்களென்று எனக்கு நல்லா தெரியும்பா".

ஆனால்,நீங்க நினைத்த போல என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே?.

"எப்படிப்பா,என்னால் இன்னொருத்தனுக்கு மனைவியாக முடியுமென்று,தனது மனதிற்குள் பேசிக்கொண்டே வரும் வசுந்தராவின் இரு கண்களிலிருந்தும்,கண்ணீர் வழிந்தோடியது".

" தனது நினைவிற்குள் மூழ்கியிருந்த வசுக்கு, அம்மாடி வசு,வசு அம்மாடி வசு என்று கூப்பிடும் குரல் கேட்டு கண்ணை திறக்க,மைக்கேல் தான் கூப்பிடுவது தெரிந்தது".

" என்னங்கண்ணா?".

" வாம்மா,ஒரு வாய் காஃபி குடி".

" நீ எதுவும் சாப்டலைனு தெரியுது வாம்மா என்றார்".

" அண்ணா,அண்ணா என்று வசுவின் நா தழுதழுக்க,எல்லாம் நல்லதே நடக்கும்மா".

" காரணகாரியம் இல்லாமல் கடவுள் எந்த முடிச்சையும் போட மாட்டான்".அதுக்கு நானே மிகச்சிறந்த உதாரணம்.எனக்கும் பசிக்குது என்றார்".

" அவர் பசிக்குது என்றவுடனே, பெண்களுக்கே உள்ள தாய்மை குணம் தலை தூக்க,கண்ணை துடைத்துக்கொண்டவர்,அண்ணா நான் கீழே வந்தால் தேவையில்லாத கூட்டம் கூடிடும்ணா என்க, தெரியும்மா".

" அதான்,நம்ப காரை ஓரமா நிறுத்தியிருக்கேன்".நீ மாஸ்க் மட்டும் போட்டுக்கிட்டு வா.

" அதைப்போலவே,வசுந்தராவும் முகத்தை முக்கால் பாகம் மறைத்த வாரு மாஸ்க் போட்டுக்கொண்டு கீழே இறங்கியவர்,இடது பக்கமிருக்கும் ரெஸ்டாரன்டை நோக்கிச்சென்றார்"

" உள்ளே வந்தவர் சுவர் பக்கமாக இருக்கும் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டார்.மற்றவர்களுக்கு வசுவின் பின்பக்கம் மட்டும் தெரியும் படி இருந்தது".

"எதிரில் உட்கார்ந்திருந்த மைக்கேல் அங்கு வந்த பேரரிடம்,இரண்டு தோசை,இரண்டு காஃபியை ஆர்டர் செய்ய,அண்ணா,எனக்கு எதுவும் வேண்டாமென்றார்".

" சரி நீ சாப்பிடவில்லை என்றால், எனக்கும் வேண்டாம் என்க,எல்லாம் தெரிந்தும் நீங்களே இப்படி பண்ணுறீங்களேண்ணா என்கும் போது வசுவின் கண்ணிலிருந்து நீர் வருவதை பார்த்தவர்,எல்லாம் தாங்குவதற்கு உனக்கு மனதைரியம் மட்டும் போதாது".உடம்பிலும் தெம்பு வேண்டும்மா".

" சிறிது நொடிகள் இருவரிடமும் மௌனமே ஆட்சி செய்தது".

அப்பொழுது, இருவருக்கும் ஆர்டர் பண்ணியதை பேரர் கொண்டு வந்து டேபிளின் மேல் வைக்க,சாப்பிடுமா என்றார்.

பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்து, பில்லை செட்டில் பண்ணி விட்டு தனது காரில் ஏறினர்.அம்மாடி வசு அன்று சொன்னது தான் இன்றும் சொல்லுறேன்.சத்தியமூர்த்தி கிட்ட தப்பு இருப்பது போல எனக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.அவர் சூழல் என்னவென்று தெரியாமல்,நீ அவரை குற்றவாளியாக்குவது சரியில்லை".

" தீர விசாரித்து முடிவு பண்ணுமா".

எப்படிணா குற்றவாளி இல்லைனு நான் சொல்ல முடியும்?.

23 வருஷமா ஒருத்தன் உயிரோடு இருக்கானா?,இல்லையானே தெரியலையேணா?வந்துடுறேன்னு போனான்,ஆனால் இதுவரை வரவே இல்லையேன்ணா? என்று சொல்லி கண்கலங்கினார் அந்த கம்பீரமான பெண்மணி வசுந்தரா சுந்தர பாண்டியன்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
கோயம்புத்தூர்:

கார் ஓட்டிக்கொண்டிருக்கும் மைக்கேலிடம்,அண்ணா கோவைக்கு போக இன்னும் எவ்வளவு நேரமாகுமென்று வசுந்தரா கேட்க,இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் நாம போய்விடலாம்மா.

" ம்ம் சரிண்ணா என்றார்".

" கோவை மாவட்டத்திற்குள் கார் நுழைந்ததுமே,வசுவின் உள்ளுக்குள் படபடப்பாக இருப்பது போல இருந்தது".

என் பொண்ணு என்னை ஏற்றுக்கொள்வாளா?,நான் தான் அம்மா என்று சொன்னால் நம்புவாளா?.

இத்தனை வருஷம் எங்கே போயிருந்தீங்களென்று கேட்பாளா? என,பல கேள்விகள் வசுவின் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

" முக்கால் மணி நேரம் பயணத்தில், அந்த பெரிய இரும்பு கேட்டின் முன்பு வந்து நின்ற காரின் ஹாரன் சத்தம் கேட்டு,தன் நினைவில் இருந்து வெளிவந்தார்".

" வாசல் பக்கமிருந்த வரும் ஹாரன் சத்தம் கேட்டு,கதவை திறந்த வாட்ச்மேன்,சொல்லுங்க,யார் வேண்டுமென்று கேட்டார்?.

"அதற்கு மைக்கேலோ, ஃபாதர் அகஸ்டின் அவர்களை பார்க்க வேண்டுமென்றார்".

" ஃபாதரையா என்று திகைத்தவர், ஒரு நிமிஷம் இருங்கள் என்றவாறே, அங்கிருந்த அறைக்குள் சென்றவர், ஃபோனில் உள்ளே இருப்பவர்களுக்கு விஷயத்தை சொல்ல,அவர்கள் சொன்னதை கேட்டு சரிங்க ஃபாதர் என்று வைத்தார்".

" பின்னர் வெளியே வந்தவர்,ஃபாதர் உங்களை வரச்சொல்லுறாங்கள் என்றபடியே கதவை திறந்து விட,கார் உள்ளே போய் நின்றது".

" காரில் இருந்து இருவரும் கீழே இறங்கி உள்ளேச் செல்ல,அங்கு வராண்டாவில் உட்கார்ந்திருந்த ஃபாதர்,இருவரையும் பார்த்து பிரைஸ் த லார்ட் என்றார்".

"இவர்கள் இருவரும், வணக்கம் ஃபாதர் என்றனர்".

" வாங்க,வந்து உட்காருங்க என்றவர், ஜெனி ரெண்டு டீ கொண்டுவாமா என்க,வேண்டாம் ஃபாதரென்றனர்".

"நான் ஃபாதர் ஜேக்கப்,சொல்லுங்க?, யார் நீங்கள்?,என்ன விஷயமென்று கேட்டார்".

"ஃபாதர்,நாங்கள் திருச்சூர்ல இருந்து வருகின்றோம்".

" ஃபாதர் அகஸ்டீனை பார்க்க வேண்டுமென்று மைக்கேல் சொல்ல, ஓஓஓ என்றவர்,ஃபாதர் அகஸ்டீன் ஆண்டவருக்குள் நித்திரையடைந்து இரண்டு வாரம் ஆகின்றது என்றார்".

அதைக்கேட்ட இருவரும் என்ன என்று அதிர்ந்தனர்!!.

" ஆமாம்,திடீர்னு அட்டாக் வந்துருக்கு, ஹாஸ்பிட்டல் போவதற்குள் உயிர் பிரிந்து விட்டதென்று ஃபாதர் ஜேக்கப் சொன்னார்".

" அடக்கடவுளே, என்ன சோதனை என்று இருவருக்கும் தோன்றியது".

"ஃபாதர் நான் வசுந்தரா சுந்தர பாண்டியன்,ஃபாதரிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்பதற்காக நான் வந்திருக்கேன்,ம்கும் வழக்கம் போல என் தலையில் அதிர்ஷ்டம் என்பதை அந்த கடவுள் எழுதவே இல்லை என்று கண் கலங்கினார்".

" என்ன பேர் சொன்னீங்க? என்று ஃபாதர் கேட்க,வசுந்தரா சுந்தரபாண்டியன் என்று வசு சொல்ல, ஒரு நிமிடம் யோசித்தவர்,எஸ்,எஸ்.ஃபாதர் உங்களுக்காக ஒரு லெட்டர் எழுதி வைத்திருக்கின்றார்".

" ரெண்டு நிமிடம் வெய்ட் பண்ணுங்கள்,நான் இதோ வந்து விடுகிறேன் என்று உள்ளே போனவர், மேலும் இரண்டு நிமிடம் சென்றே வந்தவர்,கையிலிருந்த அழுக்கு நிற கவரை வசுந்தராவிடம் நீட்டினார்".

ஒருவித நடுக்கத்தோடே அதை வாங்கும் போது,வசுவின் கண்கள் கலங்கியது.

"ஃபாதர்காவது நம்மேல் கருணை இருக்கே என்று,மனதிற்குள் சந்தோஷப்பட்டார்".

கையில் இருக்கும் கவரையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த வசுவை,அம்மாடி வசு முதல்ல லெட்டரை படிச்சி பாருமா என்று மைக்கேல் சொல்ல,அண்ணா என்கும் போதே வசுவின் குரல் நடுங்கியது.

" படித்து பாருங்கள் என்று ஃபாதர் ஜேக்கப்பும் சொன்னார்".

" மனதை திடப்படுத்திக்கொண்டு, கவரை பிரித்த வசு அதனுள் கையை விட,மூன்றாக நீளவாக்கில் மடித்திருந்த பேப்பர் கையில் தென் பட்டது".

அதை எடுத்து பிரித்து படிக்க தொடங்கினார்...

திருமதி வசுந்தரா சத்தியமூர்த்திக்கு, ஃபாதர் அகஸ்டீன்,ஆண்டவரின் ஆசீர்வாதங்களோடு எழுதுவது...

என்றாவது ஓர் நாள் என்னை தேடி நீங்கள் வரும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்கு தெரியும்...

அன்று இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்கும் என்பது தான் ஆண்டவரின் செயல்...

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்,நீங்கள் பெற்றெடுத்த பெண் குழந்தையை அப்பொழுது கோவை மாவட்ட கமிஷ்னரும்,உங்களது தந்தையுமான திரு சுந்தரபாண்டியன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தவர்,குழந்தையின் சூழலை பற்றி சொல்லி இங்கு வளர்க்க சொன்னார்.

அந்த குழந்தைக்கு நீங்கள் விரும்பியது போலவே"ஆர்கலி" என்ற பெயரையும் வைத்தவர், பிள்ளையின் செலவை ஏற்றுக்கொண்டு,இங்கிருந்து சென்று விட்டார்.

ஆர்கலியும் இங்கே வளர்ந்தவள்,படித்து முடித்ததும் சென்னையில் உள்ள,பிரைவேட் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்றாள்.

" பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பொது தொலைபேசியில் இருந்து பேசுவாள்".

ஆனால் கடந்து மூன்று மாதங்களாக ஆர்கலியிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

வேலை பளு என்று நினைக்கின்றேன்.

"ஏனென்றால் ஆர்கலியிடம் செல்ஃபோன் இல்லை".

"அது மட்டுமில்லாமல்,தவிர்க்க முடியாத சூழலில் ஆர்கலிக்கு திருமணம் நடந்து விட்டது".

" நேரம் வரும் போது மாப்பிள்ளையின் பின் புலத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்".

" கவலை வேண்டாம்,உண்மையில் பையன் மிகவும் தங்கமானவன், தற்பொழுது அவன் சூழல் இருவருக்கும் நடந்த திருமணத்தை பற்றி வெளியே சொல்ல முடியாதது".

" அதற்கு ஆர்கலியின் படிப்பும் மிக முக்கிய காரணம்".

" இதில் ஆர்கலியின் ஃபோட்டோ இருக்கின்றது".

" நீங்கள் இதுவரை திருமணம் செய்து கொள்ளவேயில்லை என்பதை, உங்கள் தந்தையின் மூலம் அறிந்த பிறகே,இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்".

" ஆண்டவரின் கிருபையால் குடும்பமாக வாழ ஆண்டவரிடம் பிராத்தனை பண்ணிக்கொள்கின்றேன்".

" உங்களின் வாழ்க்கைக்காக தான் தங்கள் தந்தை இந்த முடிவை எடுத்தார் என்பதை புரிந்து கொள்ளவும்".

ஆண்டவரின் ஆசீர்வாதங்களோடு

ஃபாதர் அகஸ்டீன்.

கடிதத்தை படித்து முடித்த வசு, கவருக்குள் கையை விட,மகளின் ஃபோட்டோ இருப்பது தெரிந்தது.

ஆண்டவா என் பொண்ணுயென்று போட்டோவை எடுத்து பார்க்க,கன்னக்குழி மின்ன, எளிமையான சுடிதாரை போட்டுக்கொண்டு,இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்களோடு,கழுத்தில் மெல்லிய செயினும்,காதில் சிறிய அளவிளான தோடும்,நெற்றியில் சிறிய பொட்டோடு அழகு பெட்டகமாய், ஃபோட்டோவில் இருந்த ஆர்கலி சிரித்துக்கொண்டிருந்தாள்.

மகளின் போட்டோவை எடுத்து, தனது முகத்தில் வைத்துக்கொண்ட வசு, சத்தமில்லாமல் குலுங்கி அழுதார்.

"அவர் அழட்டுமென்று,மற்ற இருவரும் அமைதியாக இருந்தனர்".

" மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து சென்றது".

" அம்மாடி வசுவென்று மைக்கேல் கூப்பிட,கண்ணீர் கோடுகளோடு வசுந்தரா நிமிர்ந்து பார்த்தார்".

இலங்கை இரத்தினபுரி:

ஐந்து வருடங்களுக்கு முன்பு....

"பாட்டி, திரும்ப திரும்ப சொல்லுறேன், ரெண்டு பேரும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்".

" நான் இல்லையென்று,ஆயில் ஃபுட் இஷ்டத்திற்கு ரெண்டு பேரும் சாப்பிட்டீங்க என்று தெரிந்தது,பிறகு இருக்கு".

"அப்புறம் ரெண்டு பேரும் என்றும் பதினாறு போல,பீச்சிக்கு போறது,காத்து வாங்குனேன்,கடலைமிட்டாய் வாங்குனேன் என்ற கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.நேரத்திற்கு சாப்பிடுங்க".

" போய் சேர்ந்ததும் கால் பண்ணுறேன்னு சொல்லிக்கொண்டே,இதுவரை தனது பெட்டியில் எடுத்து வைத்த பொருட்களை எல்லாம் சரியாக இருக்கின்றதா என்பதை,மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ர வீர சிம்ஹன்".

" இவ்வளவு நேரம் தங்கள் செல்ல பேரன் சொல்வதையெல்லாம், ருத்ரனின் தாத்தா,பாட்டி இருவரும் எதிரில் இருக்கும் ஃஷோபாவில் உட்கார்ந்து நல்ல பிள்ளையை போல கேட்டுக் கொண்டிருந்தனர்".

" என்ன வாய திறக்கமாட்டுறீங்க? என்றவாறே ருத்ரன் பின்பக்கமாய் திரும்பி பார்க்க,அய்யோ இப்படி மாட்டிக்கொண்டோமே என்று இரண்டு பேரும் திரு திருவென்று முழித்தனர்".

"தாத்தாஆஆஆஆஆ என பல்லை கடித்தவன்,அவர் அருகில் வந்து, அவரின் வலது பக்கம் காதை திருப்ப, காதிற்குள் காட்டன் இருந்தது".

"பின்னர் தனது முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு,மற்றொரு காதில் இருக்கும் காட்டனை,அவரே எடுத்துக்கொடுத்தார்".

" பாட்டி என்றவனிடம், நல்லா பாரு வீராவென்று கிரிஜா பாட்டி தனது காதை காட்ட,அங்கு வழக்கம் போல வெறுமையாக இருப்பது தெரிந்தது".

" அடிப்பாவி என்ற ரேஞ்சில் வீர சிம்ஹன் தாத்தா தனது மனைவியை பார்க்க,கணவரை பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தார்".

" நல்லா பாருங்க".

பாட்டி என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாமல கேட்குறாங்க.

உங்களுக்கு தான் அந்த பழக்கம் கொஞ்சம் கூட இல்லையென்று தாத்தாவை முறைக்கும் போது,அவனின் செல்லிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.பெட்டின் மேல் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க,ஆது என்ற பெயர் வந்தது.அட்டென் பண்ணியவன்,ஆது கிளம்பிட்டேன் டா.இன்னும் பிப்டி மினிட்ஸ்ல ஏர்போர்ட்டில் நான் இருப்பேன் டா,பாய் பாய் என்று சொல்லி கட் பண்ணினான்".

" பின்னர்,தனது தாத்தா பாட்டியிடம் வந்தவன்,என்ன நான் போய்ட்டு வரட்டுமா என்றான்.பேரனை பார்த்த இருவருக்கும், கடந்து சென்ற நிகழ்வுகள் நினைவிற்குள் வந்தது".

ஐந்து வயது பாலகனான தனது பேரனை,மகனும்,மருமகளும் இலங்கைக்கு வந்து கொடுத்துச் சென்றனர்.அன்றிலிருந்து,பேரனே இருவருக்கும் உலகமானது".

"ருத்ரனின் அம்மா,அப்பா இருவரும் வருடத்திற்கு ஒருமுறை இலங்கைக்கு வந்து மகனை பார்த்து செல்வதோடு சரி".

"பள்ளி படிப்பை முடிக்கும் போதே, குலத்தொழிலான வைர வியாபாரத்தை பற்றி தனது தாத்தா-பாட்டி இருவரிடமும் கற்றுக்கொண்டான்".

" மகனும், மருமகளும் தங்களது பிஸ்னஸில் பிஸியாக இருப்பதால், பேரனின் பொறுப்பை இருவரும் ஏற்றுக்கொண்டனர்".

"தாத்தா பாட்டியிடம் வளர்ந்தவனென்றாலும்,மிகவும் கண்டிப்புடனும்,ஒழுக்கத்துடனுமே முதியவர்கள் இருவரும் அவனை வளர்த்தனர்".

" பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், பிஸ்னஸ் சம்பந்தமாக நண்பனோடு வெளிநாட்டிற்கு படிக்கப்போறேன் என்று சொல்லும் பேரனை பார்த்த வீர சிம்ஹன்,அதைப்போல கனடாவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் படிக்க வைத்தனர்".

" படிக்கும் போதே மேலும் பல திறமைகளை வளர்த்துக்கொண்டவன்,நல்லபடியாக மேற் படிப்பை நண்பர்களோடு படித்து முடித்தவன்,மீண்டும் இலங்கைக்கு வந்து சேர்ந்தான்".

" டீனேஜ் பருவத்தில் போனவன் முழுமையான,கம்பீரமான ஆண்மகனாய் திரும்பி வந்திருக்கும் பேரனை பார்த்து,சிம்ஹன் தம்பதியினர் இருவரும் பூரித்து போனார்கள்".

" ஒரு மாத காலம் தாத்தா,பாட்டியோடு நேரத்தை செலவழித்தான்".

"ஓர் நாள் இரவு மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்"

" அப்பொழுது,தாத்தா என்று ருத்ரன் கூப்பிட,சொல்லுப்பா வீரா என்றார் வீர சிம்ஹன் தாத்தா".

" இலங்கையில் உள்ள,குறிப்பிட்ட ஏரியாவின் பெயரைச் சொல்லி, அங்கே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணப்போறேனென்றான்".

" ஓஓஓ,நல்ல விஷயம்பா".

" எஸ் தாத்தா,பில்டிங்கெல்லாம் பார்த்து வச்சிட்டேன்,அட்வான்ஸ் மட்டும் கொடுக்கனும்".

" எனக்கு உடனடியாக 20 லட்ச ரூபாய் கடனாக வேண்டுமென்றான்".

" கடனாகவென்று பேரனின் வார்த்தையை கேட்டு கிரிஜா பாட்டி அதிர்ந்தார்".

" அய்யா வீரா,இந்த மொத்த சொத்துக்கும் நீ தான் வாரிசுப்பா என்க,கிரிஜா நீ கொஞ்ச நேரம் அமைதியாக இருவென்றார் சிம்ஹன் தாத்தா".

" அட என்னங்க நீங்க?,இவ்வளவு சொத்துக்கு வாரிசு என் பேரன்,அப்படியிருக்க கடனா கொடுங்கனு கேட்டால் எனக்கு எப்படி இருக்குமென்று வருத்தப்பட்டார்".

ஆர்கலி எங்கே...?
 
Member
Joined
Nov 8, 2025
Messages
51
பாப்பா ஆர்கலி தற்போது இந்த தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
பாப்பா ஆர்கலி தற்போது இந்த தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி
அண்ணாஆஆஆ... நீங்கள்😁😁😁😁
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top