• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதூர்வேதமங்கலம்:

"சிறிது நிமிடத்தில், சின்ன சொம்பில் பூஸ்ட் வாங்கிக்கொண்டு வந்த கருப்பாயி, ஆராமா இதை குடியென்று சொம்போடு இன்னொர் பொட்டலத்தையும் நீட்டினார்".

"என்னது அண்ணி? எனக் கேட்டுக் கொண்டே, பேப்பரை பிரித்துப் பார்க்க, அதில் இரண்டு பன் இருந்தது".

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணி என்றவள், பக்கத்தில் இருந்த டம்ளரில் பூஸ்ட்டை ஊற்றி,பன்னை தொட்டு சாப்பிட்டு முடித்தாள்".

"சரி வா,நாம போயிட்டு வாங்கிய பொருளெல்லாம் அடுக்கி வைத்து விடலாமென்று கருப்பாயி சொல்ல,நீங்க இருங்க.நான் பிறகு அடிக்கிக்கிறேன்ணி என்றாள்".

"அட என்ன இது, நானும் சும்மா தான் இருக்கேன்.உன் அண்ணன் வருவதற்கு எப்படியும் ஏழு, எட்டு மணி ஆயிடும். மதியம் ஆக்கின குழம்பு இருக்கு, தோசை நாலு போட்டுக்கலாமென்றார்".

"பின்னர் இருவரும் பேசிக்கொண்டே, வாங்கிய பொருட்களையெல்லாம்,.அடுக்கி வைத்தனர்".

"பிறகு, பக்கெட்டில் தண்ணீர் வைத்து, அதில் மாப்பை முக்கி எடுத்த ஆர்கலி, வீடு முழுவதும் துடைத்தெடுத்தாள்".

"அப்பொழுது, தங்கச்சிமா என்கும் சங்கரின் குரல் கேட்க, உன் அண்ணன் வந்தாச்சு என்றவாறு பிரித்த கவர்களையெல்லாம் ஒரு பையில் போட்டு கட்டிய கருப்பாயி, அங்கிருந்த டஸ்பினினுள் போட்டார்".

"உள்ளே வந்த சங்கர், என்னம்மா எல்லாம் வாங்கிட்டீங்களா?,ம்ம் வாங்கியாச்சு அண்ணா".

"வாங்கியதையும் அடுக்கி முடித்து விட்டோமென்க, சரிமா சரி என்றவர்,மனைவியின் பக்கம் திரும்பி, ஏன் புள்ள இராவுக்கு, தங்கச்சிக்கும் ஆச்சிக்கும் என்ன சோறு?".

"மாவு இருக்கு மாமா.சட்னி மட்டும் அரைக்கணும், சரி சரி வா பின்னே, அதை போய் செஞ்சு எடுத்துட்டு வரலாமென்று, மனைவியை கூப்பிட்டுக்கொண்டு சென்றார்".

"வேலை செய்தது கசகசப்பாக இருக்க, ஒரு குளியலை போட்டு வெளியே வர,பாட்டியும் தோட்டத்திலிருந்த கிணற்று நீரில் குளித்திட்டு உள்ளே வந்தார்".

"வாங்கிய புடவையை எடுத்து போனவள், இந்தாங்க பாட்டியென்று நீட்ட,இத்தனை புடவையானு, மலைத்து போனார்".

"ரொம்ப அதிகமாகலாம் வாங்கவில்லையென்று சொல்லிக் கொண்டே சென்றாள்".

பின்னர் இருவரும் ஆடையை மாற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்க, கருப்பாயியும் சங்கரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

உங்களுக்கு வேற நாங்கள் சிரமம் கொடுக்கிறோம் இல்லையானு பாட்டி, கேட்க என்ன ஆச்சி இப்படிலாம் சொல்றீங்க?.

"யாரும் இல்லாத அனாதைகளுக்கு, நீங்க தான் இப்போ, உறவா கிடைத்திருக்கீங்களென்று,சங்கர் கண் கலங்கினார்".

"என்னப்பா சொல்றனு பாட்டி கேட்க,ஆமா ஆச்சி.அப்பா அம்மா எல்லாம் சின்ன வயசா இருக்கும் போது இறந்துட்டாங்க".

"ஐயா வீட்டுல தான் எங்க அப்பா மாடு மேய்த்துக்கொண்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம், தேவராஜ் அய்யாவோட அப்பா தான் கவனிச்சிக்கிட்டாங்க".

"வளர்ந்த பின்ன நானும் அங்க வேலைக்கு போயிட்டேன். பெரியைய்யா எவ்வளவோ சொன்னார், பள்ளிக்கூடம் போடா, படியென்று,நமக்கு சுத்தமா மண்டையில் ஏறவில்லை".

" சினிமா பாட்டும், மாட்டுக்கு புண்ணாக்கு அளவும் தான் நல்லா தெரிஞ்சிது. கத்திக்கத்தி பார்த்துட்டு, பெரியைய்யாவும் போடாணு விட்டுட்டார்.அவங்க பார்த்து தான், பக்கத்து ஊர்லிருந்த, இவளை என் தலையில கட்டி வச்சாங்க".

"இவளுக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க ஆச்சி. எங்க கூட வந்துருங்களென்று எவ்வளவோ கூப்பிட்டு பார்க்கிறோம், வர மாட்டேன்னு சொல்றாங்க".

"அதனால் தான், ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை, புள்ளைங்களை மட்டும் நான் போய் சைக்கிளில் விட்டுட்டு, திங்கள் கிழமை காலையிலே போய் கூப்பிட்டு வந்துடுவேன் .

"என்னப்பா பொல்லாத உறவு...அதான் உன் தங்கச்சி இருக்கிறாள், ஆச்சி நான் இருக்கிறேன், இது போதாதா?, இது போதும் ஆச்சியென்று தம்பதிகள் இருவரும் கண் கலங்கினர்".

"பின்னர் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மேலும் சிறிது நேரம் இவர்களோடு பேசியிருந்து விட்டு, காலையில் வருவதாக சொல்லிக் கொண்டு சென்றார்கள்".

" பாட்டி உங்களுக்கு படுக்கையை விரிக்கட்டுமானு ஆர்கலி கேட்க, கொஞ்ச நேரம் போகட்டும் ஆரா கண்ணு".

" நீ உள்ள படுத்துக்கோ, நான் இப்படி படுத்துக்குறேனென்றவர், ஹாலின் ஓரமாய் இருந்த, ஒயர் கட்டிலில் போய் உட்கார்ந்தவர், எங்கையோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து, இப்போ இங்க வந்து சேர்ந்திருக்கிறோம்".

" வாழ்க்கை தான் எத்தனை விசித்திரங்களை கொண்டதாக இருக்கின்றது?, நேற்று வரை யாரும் இல்லாமலிருந்த நமக்கு, இன்று பேத்திகளும், பேரனும் கிடைத்திருக்கு".

" அப்பா நீலகண்டா, அம்மா சண்டி சாமுண்டா, உங்க ஆட்டம் இன்னும் எத்தனையோ என் வாழ்விலென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவாறு கட்டிலின் மீது சாய்ந்து படுத்தார்".

" உள் அறையிலிருந்த ஆர்கலிக்கு தூக்கம் வரவில்லை. இரவு விளக்கை போட்டவள், அங்கிருந்த ஜன்னலை திறந்து விட, மெல்லிய காற்று அறைக்குள் வந்தது".

" பின்னர் எழுந்து போய் அங்கிருந்த கபோர்டை சத்தமில்லாமல் திறந்தவள், அதிலிருந்த ஹேண்ட் பேகை எடுத்து, ஜிப்பை திறந்து, உள்ளே இருந்த ஃபோட்டோவை எடுத்துக் கொண்டாள்".

" பிறகு ஜன்னலோரம் வந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவள்,கையிலிருந்த ஃபோட்டோவை, ஜன்னலின் வழியே,உள்ளே வந்த நிலவொளியின் வெளிச்சத்தில் பார்க்க, கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அந்த ஃபோட்டோவில் பட்டு தெரித்தது".

" என்னை மன்னிச்சிடுங்கள்".

" நிச்சயமாக என்னை காணாமல் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பது, எனக்கு நன்கு தெரியும்".

" என்ன செய்ய?,இந்த பிறவியில் சொந்த பந்தத்தோடு வாழும் வாழ்க்கையை, அந்த ஆண்டவன் என் தலையில் எழுதவில்லை போல".

" எங்கு இருந்தாலும் நீங்கள் நால்வரும் நலமோடு இருங்களென்று, ஃபோட்டோவில் இருக்கும், வசு, சுந்தரபாண்டியன் தாத்தா, கிரிஜா பாட்டி, மற்றும் மைக்கேலின் உருவங்களை தொட்டு சொல்லியவள், கண்ணை மூடி ஜன்னல் மேலே சாய, ருத்ரனின் முகம் நினைவிற்கு வந்தது".

"ச்சை... என்று வலு கட்டாயமாக அவனை தனது நினைவிலிருந்து விலக்கி விட்டு,அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று யோசனையில் மூழ்கியவள், வெகு நேரம் சென்றே தூங்கினாள்".

" ஆராமா... ஆராமா... என்ற சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்த ஆர்கலி கண் விழித்து பார்க்க, அங்கே பாட்டி நின்று கொண்டிருந்தார்".

" எந்திரிச்சி இதை குடி கண்ணு என்று டம்ளரை நீட்ட, என்னது பாட்டி என்றவாறே எழுந்து போய் முகத்தை கழுவி, வாயை கொப்பளித்து வந்து, அவரிடமிருந்து டம்ளரை வாங்கி குடித்தவள், நீங்களென்று கேட்டாள்".

" நான் குடிச்சிட்டேன் கண்ணு. உன் அண்ணன்காரன் தான் வந்து கொடுத்துட்டு போனான்".

" நல்ல நேரம் ஒன்பது மணியிலிருந்து பத்தரை வரைக்கும் உண்டாம், அந்த நேரத்தில் பால் காய்ச்சிக்கலானு சொல்லிட்டு போயிருக்கானென்றவர், இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்க கண்ணுனு வெளியே சென்றார்".

திருச்சூர்- பாண்டியன் பேலஸ்:

" ஆது கண்ணானு கிரிஜா பாட்டி கூப்பிட, பின்ன என்ன கிரி.. ".

" அதான் வார்னிஷ் அடித்த வெள்ளை பணியாரம் போல, இருவரும் ஒரே போல இருக்கீங்களே இது எங்களுக்கு தெரியாதா?,புதுசா குண்டு போடுறாராம் உன் சிங்கமென்றான்".

" ஆது சொன்னதை கேட்டு சிம்ஹன் தாத்தா முறைத்து பார்க்க, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்".

" அப்பொழுது அத்தைஐஐஐஐ என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் பார்க்க, ஆனந்தன் தான் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தார்".

" ஆனந்தனை பார்த்த ருத்ரன், இந்த போலீஸ் எப்படிடா வந்தாரென்க,அதற்கு ஆதுவோ,பரதேசி பயலே நானும் உன் கூட தான் இருக்கேன். எனக்கு மட்டும் எப்படி தெரியும் டா? என்றான்".

" சோபாவில் உட்கார்ந்திருந்த கிரிஜா பாட்டியிடம் வந்த ஆனந்தன், அத்தை உனக்கு என்னாச்சி?, ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை? என்று பதறினார்".

" நீயும் வந்துட்டியாடானு சிம்ஹன் தாத்தா அதிர, மாமா என்று பல்லை கடித்தவர், இவ்வளவு நடந்துருக்கு, இந்த ரெண்டு எருமை மாடும் தான் சொல்லவில்லை, நீங்களுமா மாமா என்றவாறு திரும்பியவர், அங்கிருந்த வசுந்தராவை பார்த்து அதிர்ந்தார்".

" மேடம் நீங்களென்று சொல்லியவர்,பக்கத்தில் இருந்த சுந்தரபாண்டியனை பார்த்து, சார் நீங்களுமா என்க, வசுவும் ஆனந்தனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பது, அவர் முகத்திலிருந்த அதிர்விலே தெரிந்தது".

"எஸ் மிஸ்டர் ஆனந்தன், நான் தான்".

" எங்க வீடு தான் இது, இவங்க என்னுடைய அப்பா தானென்று வசு சொல்ல,இங்கு என்னடா நடக்குதென்று, ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை".

"சுந்தரபாண்டியன் தாத்தாவிற்கு தொண்டை ஒரு மாதிரி இருப்பதாக பேசிக்கொண்டிருக்கும் போது சொல்ல, கசாயம் எடுத்து வரேனென்று உள்ளே சென்ற கிரிஜா பாட்டியும் அப்பொழுது கிச்சனிலிருந்து ஹாலிற்கு வர, அவரின் முக சாயலை பார்த்து ஆனந்தனும் அதிர்ந்து போனார்".

" ஆனந்தனின் ரியாக்க்ஷனை பார்த்த நண்பர்கள் இருவரும், டேய் போலீஸ் மூஞ்சை பாருடா, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லையென்று ஆது சொல்ல, அதற்கு ருத்ரனும்,சத்தியமா என்னாலையும் முடியலைடா என்றான்".

"அத்தை இவங்கள் இவங்களென்று ஆனந்தன் சொல்ல, என்ன?,தி கிரேட் பிசினஸ் மேன் ஆனந்தனுக்கு திக்குவாயோனு ருத்ரன் சொல்ல,கூப்பிட்டு வாடா.நல்ல டாக்டரை பார்க்கலாமென்றான் ஆது".

" அடேய்... ரெண்டு பேரும் வாயை மூடலை, இப்போ நான் என்ன செய்வேன்னு தெரியாதென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, அதான் தெரியாதுனு சொல்லியாச்சே, பிறகென்ன சிங்கத்துக்கு வாய் சவடாலென்று ருத்ரன் கேட்டான்".

" கிரிஜாஆஆஆஆ என்று சிம்ஹன் தாத்தா பல்லை கடிக்க, ஆது கண்ணா, வீரா கண்ணா கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா என்றார் கிரிஜா பாட்டி".

" பின்னர் ஆனந்தின் பக்கம் திரும்பிய கிரிஜா பாட்டி, ஆனந்த், அவங்க உன்னுடைய சின்ன அத்தை சைலஜா. என் கூட பிறந்த இரட்டை பிறவி".

" அப்படியா என்று மீண்டும் அதிர்ந்தவர், சரி மற்றது பிறகு பேசிக்கலாம். முதல்ல உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குங்கத்தை?, ரஞ்சன் சொன்னதும் கிடைத்த ஃப்ளைட்டில் வந்துட்டேன்".

" மாமாவும் எதுவும் சொல்லவில்லை, இந்த எருமைங்களும் ஒன்னும் சொல்லவில்லை, எனக்கு எப்படி இருக்குமென்று ஆனந்த் வருத்தப்பட்டு சொல்ல, அதற்கு ஆதுவோ, என்ன பீலிங்கா இருந்துருக்கும் என்றான்".

" ஆது பேசுவதை கேட்டு, மற்றவர்களுக்கு சிரிக்காமலும் இருக்க முடியவில்லை".

" ஏய் சைலு, வா எதுக்கு இப்படி பேயறைந்த போல நிக்குறனு தங்கையை அழைத்த கிரிஜா பாட்டி, இது ஆனந்த்".

" ஆது கண்ணாவோட அப்பா என்கும் போது, உன்னோட அண்ணன் பையனும்தானென்று, சிம்ஹன் தாத்தா ஒரு குண்டை போட்டார்".

"சிம்ஹன் தாத்தா சொன்னதை கேட்டு அங்கிருந்த அக்கா தங்கை மட்டுமல்ல, ஆனந்தன், ருத்ரன் மற்றும் ஆதுவும் அதிர்ந்து போயினர்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கண்ணன்- ரியா நினைவுகள்:

" இன்று ஊரறிய தன்னவளானவளை பார்த்த கபிலனுக்கு, சந்தோஷத்தில் வார்த்தை வரவில்லை".

" நினைவு தெரிந்த நாளிலிருந்து இவள் தான் மனைவியாய் வரப்போறவளென்று சொந்த பந்தங்கள் சொன்னாலும், மனதில் ஏதோ ஒரு சுணக்கம் கபிலனுக்கு இருந்து கொண்டே தானிருந்தது".

" அதுவும் சிறிது நிமிடத்திற்கு முன்னர் காணாமல் போக, அவன் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி வெளிப்படையாகவே தெரிய, அதைக்கண்ட அவன் நண்பர்கள் கிண்டல் பண்ணினர்".

" அப்பொழுது, ஹலோ ஹலோ.. என்னும் தேவராஜ் குரல் மைக்கில் கேட்க, எல்லாரும் சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்தனர்".

" தன் அருகில் இருந்த ரியாவிடம், என்னடி பொண்டாட்டி, உங்கப்பா பாட்டு கச்சேரி பண்ணப்போறாரானு கபிலன் கேட்க, அவன் சொன்ன பொண்டாட்டி என்ற வார்த்தையிலே ரியா ஆப் ஆகிவிட்டாள்".

" அவளின் முகத்தை பார்த்தவன், அந்த அகண்டு விரிந்திருந்த விழியில், மொத்தமாய் தொலைவது போல உணர்ந்தான்".

" இப்பொழுது தான் அவளின் முழு அலங்காரத்தை உச்சி முதல் பாதம் வரை பார்த்த கபிலன், சொக்குறடி என்கும் போது, எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும், வணக்கம்".

" சரி இவளை அப்புறம் கவனிச்சுக்கலாம். முதல்ல மாமா என்ன சொல்றாரு என்று பார்க்கலாம் என, தேவராஜ் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தான்".

" இன்று எங்களது பிள்ளைகளுடனான நிச்சயதார்த்தம் மட்டுமல்ல, உங்கள் எல்லாருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேனென்று தேவராஜ் சொல்ல, என்னவா இருக்குமென்று கூட்டத்தில் அங்கங்கே சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது".

" இந்நாள்வரை, என்னுடைய தங்கை மகனை ஒரு விவசாயியாக தான் எல்லாருக்கும் தெரியும். இனி எனது தங்கை மகன் கபிலன் விவசாயி மட்டுமல்ல, வருங்கால ஐபிஎஸ் ஆபீஸர் என்க, என்ன என்று பெரும்பாலோனர் அதிர்ந்து போயினர்".

"கூட்டத்திலிருந்தவர்கள் மட்டும் இல்லை, இதை கேட்டுக் கொண்டிருந்தது ரியாவும், எதேஏஏ போலீசானு அதிர்ந்து போய் கபிலனை பார்த்தாள்".

"அப்பொழுது தீபன், ராகவன் ஐபிஎஸ் எங்க மாமா ராகவன் ஐபிஎஸ் ஆகிட்டாரு. அடியேய் ரியா, இனி புல்லட்டில பாட்டு தான்".

"பார்த்த முதல் நாளே, உன்னை பார்த்த முதல் நாளே என்று பாடல் தானா..ஹை ஹைஹைஹை...இனிமே எந்த குற்றம் வேணாலும் நான் செய்யலாம்.எங்க மாமா என்ன காப்பாத்திடுவாறு என்று தீபன் பேசிக்கொண்டே போக,அட தடுமாடு".

"வாயை மூடி தொலைடா என்று, மேகா அவன் தலையில் தட்டினாள்".

"அண்ணா கங்கிராட்ஸ்னு ஆதிரா சொல்ல, சந்தோஷம்டா ஆதி என்றவனை, மாமா என்று தீபனும் அணைத்துக்கொண்டவன், வாழ்த்துக்கள் மாமா".

" எத்தனை கேஸ் இருக்கோ, அத்தனையிலும் இவளை உள்ளே தள்ளுங்களென்று மேகாவை காட்டி தீபன் சொல்ல, நீ செத்தடா என்றவள், அங்கிருந்து அவனை துரத்தினாள்".

"பின்னர் எல்லாரும் மீண்டும் கபிலனை வாழ்த்தி விட்டு, வயிராற சாப்பிட்டவர்கள், அங்கிருந்து சென்றனர்".

"ஒரு வழியாக அவரவர் அறைக்குள் வந்து சேரவே இரவு 11 மணி ஆனது. சரி, போய் படுங்கள், காலையில் பார்த்துக் கொள்ளலாமென்று, அவரவர் அறைக்கு அனுப்பி வைத்த தேவகி, தங்கள் அறையை நோக்கிச் சென்றார்".

"மெத்தையில் படுத்திருந்த ரியாவிற்கு கால் வரும் சத்தம் கேட்க,எடுத்து பார்த்தவள், அட்டென் பண்ணி ம்ம் என்றாள்".

" ஓய் பொண்டாட்டி மேலே வாடி என்று அழைப்பை துண்டித்தான்".

" இந்த விருமாண்டிக்கு என்ன கிறுக்கு ஏதாவது பிடித்து விட்டதா?.இந்த நேரத்தில் போய் மொட்டை மாடிக்கு வர சொல்றாரு? என்று தனது தலையில் தட்டிக் கொண்டவள், பொறுமையாக கதவைத் திறந்து சுற்றி கீழே பார்க்க,யாரும் இல்லை என்பது தெரிந்தது".

"பின்னர் சத்தமின்றி பொறுமையாக கதவை சாத்தியவள், அங்கிருந்த மாடிப்படியில் ஏறி மேலே போக, அங்கே சுவற்றின் மேல் சாய்ந்து,தனது கைகளை கட்டிக்கொண்டு கபிலன் நின்று கொண்டிருந்தான்".

"வேகமாக வந்து விட்டவள், பின்னர் மாடிப்படியின் முடிவில் தயங்கியே நிற்க, அவளை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டினான்".

" வில்லிலிருந்து பாய்ந்த அம்பாய், ஓடிப்போனவள், அவன் நெஞ்சில் போய் அடைக்கலமானாள்".

" தன்னவளை கபிலன் இறுக்கி கட்டிக்கொள்ள,ரியாவிற்கு அந்த அணைப்பு,தாயிடம் சேர்ந்த பறவை போலிருந்தது".

"மாமா மாமா என்று அவள் விசும்பி அழுக, அவள் அழும் காரணம் தெரிந்தவன், ஒன்னும் இல்லைடா ஒன்னும் இல்லைடானு தன்னவளின் தலையில் தடவி கொடுத்தான்".

"உன்னோட ஆசையை எப்படி டி நான் நிறைவேற்றாமல் இருப்பேன்?".

"ஆம், சிறுபிள்ளையாய் இருக்கும் போது, ஒரு முறை இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது,நீ போலீஸ் ஆக வேண்டும் மாமானு ரியா சொல்ல, அன்று சரிடி என்று சொன்னான்".

"காலப்போக்கில் அவள், அதை பற்றி பேச்சு எடுக்கவில்லை.ஆனால் படத்தில் நடிகர்களை பார்க்கும் போது,மாமா போலீஸ் ஆகவில்லையே என்பது, ரியாவின் மனதிற்குள் ஏக்கம் ஒரு பக்கம் இருந்தது".

" அடியேய் செல்ல பொண்டாட்டி. உன் ஆசை நிறைவேத்திட்டேன் போதுமாடி?,இனி கபிலன் கண்ணன் ஐ பி எஸ் டி என்று தனது மீசையை முறுக்கி கொண்டே சொல்ல, சந்தோஷம் மாமா என்றவள், அவனை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்".

" அப்புறம்டி, இது மட்டும் தானா? வேற ஒன்னும் இல்லையா என்க, வேற என்ன வேண்டும் விருமாண்டிக்கென்று, மனதில் பேசுவதாக நினைத்து வாயை விட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்".

" என்னடி எப்போ பாரு விருமாண்டி விருமாண்டினு.இப்போ இந்த விருமாண்டி என்ன பண்ண போறான்னு பாருடி என்றவன், அவளை தலைக்கு மேலே, தண்டால் எடுப்பது போல தூக்க, ஐயோ மாமா பயமா இருக்கு பயமா இருக்கென்று கத்தினாள்".

" ஏய் சத்தம் போடாதடி, யாராவது வந்து விடுவார்கள்னு சொல்ல, நாங்க யாரும் வரவில்லை என்கும் குரல் கேட்டது".

"ஐயோ என்று அவளை கீழே இறக்கி விட்டவன், சத்தம் வந்த திசையில் பார்க்க, அங்கே ஆதிரா, மேகா,தீபன் மூவரும் நின்று கொண்டிருந்தனர்".

"அவர்கள் மூவரையும் பார்த்தவன் அடேய் நீங்க எங்கடா இங்க வந்தீங்களென்று, தனது தலையில் கோதிக்கொண்டே கேட்க, ஹேய் ஹேய்...அங்க பாருடி மாமா வெட்கம்லாம் படுறாருனு தீபன் சொல்ல, அடேய் பன்னி பயலே".

"உன்னை போலயாடா என் அண்ணன். அதெல்லாம் வெட்கம் நல்லா வரும். நீ தான் மானங்கெட்டவன் .உனக்கு ஒன்னும் வராதென்று மேகா சொல்ல, எல்லாம் நேரம்டி என்றான்".

பொள்ளாச்சி- வெற்றி- ஜனனி நினைவுகள்:

" ஜனனி வீட்டின் மூன்பு வந்து கார் நிற்க,மூவரும் இறங்கி கொண்டனர். அங்கே காத்திருந்த மாரியப்பன் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு பக்கம் கவலை தெரிந்தது".

" ரொம்ப நன்றிங்க சின்ன தம்பியென்று மாரியப்பன் சொல்ல, இதிலென்ன மாமா இருக்கென்று சொல்லியவன், போலாம்ணா என்க,கார் அங்கிருந்து புறப்பட்டது".

"உள்ளே அழைத்துக்கொண்டு போனவர்கள், உலக்கையும் , அருவாளையும் அவளுக்கு பாதுகாப்பாக பக்கத்தில் வைத்து விட்டு, அடுத்தது என்ன செய்ய வேண்டுமென்று வெளியே போய் பேசிக் கொண்டிருந்தார்கள்".

"வீட்டுக்கு வந்த வெற்றி கண்ணாடியில் தன்னை பார்க்கும் போது ஜனனியின் கண்கள் நினைவிற்கு வந்தது".

"என்னா கண்ணு...பார்க்க சின்ன பொண்ணு போலிருக்கா, கண்ணு படபடப்பா இருக்கும் போது, ரொம்ப அழகா தெரியுறாளே என்கும் போது சிரிப்பு வந்தது".

" அப்பொழுது வெற்றி வெற்றியென வள்ளியம்மையின் குரல் கேட்க,இதோ வரேன் அத்தைனு கீழே இறங்கி கீழே வந்தவன், சொல்லு வள்ளி என்றான்".

"அண்ணன் நேராக நெல்லு களத்திற்கு வந்துடுச்சாம். சாப்பாடு கொண்டு போய் கொடுக்கணும், சரி எடுத்து வை. நான் போய் கொடுக்கிறேன், ம்ம் உனக்கும் அதில் வைக்கட்டுமா?".

" நீ சாப்டியா என்கவும், இன்னும் இல்ல கண்ணா என்றார். உன்னை நேரத்துக்கு சாப்பிடணும்னு எத்தனை வாட்டி சொல்றது?".

"என்னைக்கு தான் நீ சொல்ற பேச்சை கேட்பாயென்று தெரியவில்லை என்றவாறே தனது தலையில் தட்டிக் கொண்டவன், போய் பையை கொண்டு வா, நான் வயலுக்கு போறேன்".

" சிறிது நிமிடத்தில் பெரிய பையோடு வெளியே வந்தவர், இந்த கண்ணா என்று வள்ளியம்மை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன், சரி நான் போயிட்டு வரேன்".

"நீ சாப்பிடு என்றவாறு அங்கிருந்த பைக்கில் ஏறி தங்களது வயலை நோக்கி சென்றான்".

" வண்டியில் செல்லும் போது எதிரில் அவன் நண்பன் கோபி வர, வண்டியை நிறுத்தியதும், அவனும் பின்னாடி ஏறி உட்கார்ந்து கொண்டான்".

"பின்னர் இருவரும் காலேஜ் பற்றி பேசிக்கொண்டே வயலுக்கு வந்து சேர்ந்தனர்.அங்கே ஆட்கள் ஒரு பக்கம் நாற்று பறிப்பது தெரிய, அதை சத்தியமூர்த்தி களத்து மேட்டில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்".

" காலடி சத்தம் கேட்டு சத்தியமூர்த்தி திரும்பி பார்க்க, கோபியும் வெற்றியும் வருவது தெரிந்தது".

" அவரின் அருகில் வந்தவன் அப்பா சாப்பாடு என்க,இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் பா என்றார்".

" பின்னர் சாப்பாட்டு பையை, அங்கிருந்த மரத்தின் கீழே வைத்தவன், பள்ளிக்குப் போன விஷயத்தை சொல்ல, நாளைக்கு வந்து அப்பா கையெழுத்து போட்டுவிடுறேன்".

" அங்க பஞ்சாயத்து முடிய நேரம் போய்ட்டு.கணக்கும், புள்ளை பெரிய பொண்ணு ஆகிட்டென்று வீட்டுக்கு போயாச்சி.அதான் நான் நேரா இங்கே வந்துட்டேன்.எப்படியும் அடுத்த வாரம் தானே காலேஜ் சேர்வதாக இருக்குமென்று சத்தியமூர்த்தி கேட்க,ஆமாம் பா என்றான்".

"சிறிது நிமிடத்தில் வயலில் வேலை செய்த ஆட்கள் மதிய சாப்பாட்டிற்கு கலைந்து செல்ல,இவர்கள் மூவரும் வள்ளி கொடுத்த சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்டனர்".

"அப்பொழுது,மாமா உங்க கிட்ட ஒன்னு கேட்கணுமென்று கோபி சொல்ல, கயிற்று கட்டிலில் படுத்திருந்த சத்தியமூர்த்தி, சொல்லுடா மாப்பிள்ளை".

" உனக்கு என்ன தெரியணுமென்க,அது வந்து மாமா, அப்படி என்ன ரகசிய மருந்து சாப்டுறீங்க?,எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே இதே இளமையாவே இருக்கீங்களே? என்க, அட தடிமாடு, எங்கப்பா மேலையாடா கண்ணு வைக்குறேயென்று, நண்பனின் முதுகில் இரண்டு அடியை வெற்றி போட்டான்".

" அட சண்டாளா, உனக்கும் சேர்த்து தான் டா நான் கேட்குறேனொன்று கோபி சொல்ல, இப்பொழுது சத்தியமூர்த்தி சத்தமாக சிரித்து விட்டார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top