Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வெற்றி- ஜனனி நினைவுகள், பொள்ளாச்சி:
"பரவாயில்லை, நல்லபடியாக தான் சார் பேசுறாங்கள். மற்றவர்கள் தான் எப்படினு தெரியலையே? என புலம்பிக் கொண்டிருக்கும் போது,மற்ற பாட வேலைக்கான ஆசிரியர்களும்,வகுப்பிற்கு வந்தனர்".
"அவர்களும் அதே போல முதல் நாள் வகுப்பென்பதால், சாதாரணமா பேசி சென்று கொண்டிருந்தனர். மாணவர்களுக்கான மதிய உணவு இடைவேளையும் வந்தது".
"ஜனனி, கீதா இருவருக்கும் இன்னும் மூன்று தோழிகள் இருந்தனர். அவர்களில் அஞ்சு- மஞ்சு இருவரும் இரட்டையர்கள்,மற்றவள் கவி".
" ஐவரும் ரவுண்டாக உட்கார்ந்து கொண்டு, அவரவர் டிபன் பாக்ஸை பிரித்து ஷேர் பண்ணிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவளுங்கள், கிளாஸின் முன்புறமிருக்கும் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு இலந்தை அடையை சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜனனிக்கு வயிற்றை வலிப்பது போலிருந்தது".
" என்னாச்சென்று யோசித்தவள், இன்னொரு வாய் சாப்பிடப்போக, மீண்டும் வலித்தது".
" ஏன் இப்படி வலிக்குதென்று யோசனையோடே பார்த்தவளின் கண்ணில், ஹெட்மாஸ்டர் ரூமிலிருந்து வெளியே வரும் வெற்றியும், கோபியும் தென்பட்டனர்".
"ஹேய் வெற்றி அண்ணன் டி. சர்டிபிகேட் வாங்க வந்துருக்காங்க போலயென்று கவி சொல்ல, ஆமாடி. இந்த வருஷம் அவங்க காலேஜ் போறாங்களென்று கீதா சொன்னாள்".
" ஜனனியோ வெற்றி வருவதை பார்க்க, அந்நேரம் வெற்றியும் தற்செயலாக அங்கிருந்து ஜனனியை பார்க்க, அப்பா என்று வயிற்றை பிடித்துக்கொண்டவள் , பக்கத்தில் உட்கார்ந்திருந்த அஞ்சுவின் மீது சாய்ந்து கொண்டாள்".
" அதைப்பார்த்த தோழிகள், ஜனா ஜனா என்னாச்சென்று பதற, அவர்கள் சத்தத்தில் அக்கம் பக்கமிருந்த மாணவர்களும் அவர்களிடம் ஓடி வர, டேய் அங்கே என்னாச்சுனு தெரியலை ?,வாடா என்று கோபியை இழுத்துக்கொண்டு வெற்றியும் அங்கே ஓடி வந்தவன், கூட்டத்தை விலக்கி என்னாச்சுமா என்க, திடீர்னு அப்பானு கத்துனாள்ணானு கீதா சொன்னாள்".
" அதற்குள் மாணவி ஒருவர் டீச்சர்ஸ் ரூமில் போய் விஷயத்தை சொல்ல, தமிழாசிரியரும்,கணக்காசிரியரும் அவ்விடம் வந்தனர்".
" ஏய் எட்ட போங்களென்று அருகில் வந்தவர்கள், என்னாச்சி என்க, ஜனனி வயிற்றை பிடிச்சிக்கிட்டு அழுறாள் டீச்சரென்றாள் மஞ்சு".
" சரி சரி எல்லாரும் போங்களென்று விலக்கி விட்டவர், ஜனனி எந்திரி என்கவும், அவள் எழுந்த இடத்தில் ரத்தத்தின் ஈரமிருக்க, கீதா ஓடி போய் பி.டி டீச்சர் கிட்ட புர்கா வாங்கிட்டு வா என்றார்".
" சிறிது நிமிடத்தில் வந்தவளிடமிருந்து புர்காவை வாங்கியவர், இந்தா மா. இதை போடுயென்று கொடுக்க, அதை வாங்கி போட்டுக் கொண்டவளை பார்த்தவர், நீயும் கீதாவும் போய் சிக் ரூம்ல இருங்க".
" அஞ்சு,ஆயா கிட்ட சொல்லி வாளியில் தண்ணீர் எடுத்து வர சொல்லுமாயென அனுப்பி வைத்த கணித ஆசிரியர், டீச்சர் நான் போய் ஜனனி அப்பாவிற்கு விஷயத்தை சொல்லிட்டு வரேனென்று சென்றார்".
" மஞ்சு, கவி, உங்க தோழி பெரிய பொண்ணா ஆகிட்டாடி. பயப்படாதீங்களென்று தமிழாசிரியர் சொல்லிய பிறகே, இருவர் முகத்திலும் சிரிப்பு வந்தது".
" டீச்சர் நாங்க போய் ஜனாவை பார்க்கட்டுமா?, ஹாஹா போங்கடி போங்க. அடுத்து நீங்க தானென்று சிரித்தார்".
" மஞ்சுவும், கவியும் டீச்சர் வார்த்தையை கேட்டு வெக்கப்பட்டுக்கொண்டே, சிக் ரூமை நோக்கி ஓடினாளுங்கள்".
"உள்ளே ஓடி வந்த இருவரும் அங்கே அழுது கொண்டிருந்த கீதாவையும், ஜனனியையும் பார்த்து என்னடி ஆச்சி? என்று பதறினர்".
" மஞ்சு, கவி, ஜனாவிற்கு என்னமோ ஆகிட்டுடி, அவள் உடம்பிலிருந்து ரத்தம் வருதாமென்று கீதா அழ, அடி பைத்தியம் வாயை மூடுடி என்றாள் கவி".
" ஜனா வயசுக்கு வந்துட்டாளாம் டி. தமிழ் டீச்சர் சொன்னாங்களென்று கவி சொல்ல, என்னாஆஆஆ என்று இப்பொழுது, ஜனனியும், கீதாவும் அதிர்ந்தனர்".
"என்னடி சொல்லுறனு கீதா கேட்க, மஞ்சுவோ, ஆமாடி. அதான் ஜனாவுடைய அப்பாக்கு விஷயத்தை சொல்ல டீச்சர் போயிருக்காளென்றாள்".
" இப்பொழுது தோழி பக்கம் திரும்பிய கீதா, அய்யோ,கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவள் என்னை எப்படி எல்லாம் பயமுறுத்துட்டா தெரியுமா என்க, கீதா சொன்னதை கேட்டு, என்னடி ஆச்சு என்று மஞ்சுவும்,கவியும் கேட்டனர்".
"அது வந்து என் உடம்பில் ரத்தம் வருது. நான் சாகப் போறேன். இனி உங்க கூட நான் படிக்க முடியாது. உங்க கூட என்னால விளையாட முடியாது".
" நான் ஆவியா தான் உங்க கூட இருப்பேனு சொன்னாளென்று கீதா அழ,தோழிகள் இருவரும் சத்தமாக சிரித்து விட்டனர்".
" ஏண்டி அவள் தான் சொல்லுறாளென்றாள், அப்படியே நீயும் நம்பிட்டியா லூசு புடிச்சவளேனு சொல்லும் போதே, ஜனனி என்று ராக்கம்மா பாட்டியின் குரல் கேட்டது".
"ஏய் பாட்டி வந்துடுச்சுடி என்றபடியே கவி போய் கதவை திறக்க, ராக்கம்மா பாட்டியும் கலாவும் அந்த ரூமிற்குள் வந்தவர்கள், ஆத்தா மகமாயினு சொல்லிக்கொண்டே பேத்தியியின் நெற்றியில் கை வைத்து திருஷ்டி சுற்றி போட்டவர், தாயி நீ தான் கூட இருந்து எல்லாத்தையும் பார்க்கணுமென்று சொல்லும் போதே, பாட்டியின் கண்கள் கலங்கியது".
" பின்னர்,ஏண்டி யாரு முகத்தையும் பாக்கலை தானேனு பாட்டி கேட்க, கீதாவோ யாரு மூஞ்ச பார்க்கணும்? என்றாள்".
"இல்லடி இங்க இருக்க பயலுங்க யாருடைய மூஞ்சியாவது பார்த்தீங்களா என்க,ஆமா இப்ப எங்களுக்கு அது தான் வேலை பாரு என்று கோவமாக மஞ்சு சொல்ல, போங்கடி கோட்டிக்காரி சிறுக்கிங்களா".
"கேட்கிறதுக்கு பதில் சொல்றாளுங்களா பாரு கலா என்றவர், சரி சரி வாத்தா வீட்டுக்கு போகலாம் என்க, கீழே உட்கார்ந்திருந்த ஜனனியும் எழ,கலாவும் ராக்கமா பாட்டியும், ஆளுக்கு ஒரு பக்கம் அணைத்துக் கொண்டு வெளியே வந்தவர்கள், சற்றி தள்ளி நிற்கும், சத்தியமூர்த்தி வீட்டின் அம்பாசிட்டர் காருக்கு அருகில் அழைத்துச் சென்றார்கள்".
" ஜனா கண்ணு, உள்ள போய் உட்காரு. ஐயா தான் கார் கொடுத்து அனுப்பியிருக்காங்க என்று கலா சொல்லும் போது, வெற்றியும் அங்கு வந்து டிரைவர் சீட்டின் பக்கத்து சீட்டில் உட்கார, ராக்கம்மா பாட்டிக்கும், கலாவிற்கும் நடுவில் ஜனனி உட்கார்ந்தாள்".
"பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த டீச்சரிடமும், மஞ்சு அஞ்சு கவியிடம் சொல்லிக் கொண்டு, கீதாவையும் காரில் அழைத்துக்கொண்டு,வீட்டை நோக்கி சென்றனர்".
" அப்பொழுது,சின்னதம்பி எப்ப காலேஜ் சேருறீங்க என்க, சர்டிபிகேட் வாங்கணும் மா".அப்பா தான் கையெழுத்து போடணும். அதுக்குள்ள ஏதோ கோயம்புத்தூர்ல பஞ்சாயத்து வந்திருக்குன்னு போயிட்டாங்க".
"நாளைக்கு தான் வந்து வாங்கணும் என்றவன், கண்ணாடி வழியாக ஜனனியை பார்க்க, அவளோ லேசாக தலை குனிந்து உட்கார்ந்திருக்க, அவளின் கண்கள் மட்டும் படபடப்பாக அடித்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு தெரிந்தது".
சதூர்வேதமங்கலம்:
" இரண்டு பெண்களும் மேலும் சிறிது நேரம் பாட்டியிடம் பேசியிருந்து விட்டு, வேறு ஒன்னும் விஷயம் தெரிஞ்சுக்க முடியாதென்பதை தெரிந்து கொண்டவர்கள்,சரிங்கம்மா.வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது.நாங்கள் சென்று வருவோம்மானு சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்".
" போகும் இருவரையும் பார்த்து சிரித்த பாட்டியம்மா, எத்தனை பேரை என் வாழ்க்கையில் பார்த்திருப்பேனென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், இடது பக்கமாய் இருந்த அடி பாம்பில் தண்ணீர் வருதானு சோதித்துப் பார்க்க, குழாயிலிருந்து தண்ணீரும் வந்தது".
" இரண்டு நிமிடம் பைப்பின் கைப்பிடியில் அழுத்தி தண்ணீரை வெளியேற்றியவர், பரவாயில்ல நல்லா தான் தண்ணீர் வருதென்று சொல்லிக் கொண்டவர், வீட்டின் உள்ளே சென்று வாளி ஏதாவது இருக்கா என்று பார்த்தார்".
" கிச்சன் செல்பின் கீழ் பக்கத்தில் இரண்டு வாளிகள் இருப்பது தெரிந்தது. பிளாஸ்டிக் வாளியை எடுத்து வந்தவர் அதில் தண்ணீரை இறைத்து, இவ்வளவு நேரம் சுத்தம் பண்ணி இடத்திலெல்லாம் தெளித்தார்".
"பின்னர் கை கால்களை கழுவிக்கொண்டவர், முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்த திண்ணையில் சாய்ந்து உட்காரும் போது,வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது".
"ஆட்டோவிலிருந்து கருப்பாயியும், ஆர்கலியும் வண்டியிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்".
" தங்கச்சிமா,எப்ப வேண்டுமானாலும் ஆட்டோக்கு கூப்பிடுங்கள், நான் வருவேனென்றவாறு அங்கிருந்து சென்றார்".
" இருவரும் போகும் போது இருந்ததற்கும் இப்பொழுது சுத்தமாக இருப்பதை பார்த்து, எதுக்கு நீங்க மட்டும் தனியா செஞ்சீங்க? நாங்களும் வந்திருப்போமே என்றனர்".
ஆராமா நீ அம்மாவுக்கு டீயை கொடு, நான் போய் பைகளை வைக்கிறேனென்ற கருப்பாயி,பைகளை தூக்கிக் கொண்டு வீட்டில் உள்ளே சென்றவர், அங்கே வைத்து விட்டு,செல்ஃபிலிருந்த இரண்டு டீ டம்ளரையும் எடுத்து வந்து ஆர்கலியின் முன்பு நீட்ட,அதை வாங்கிக் கொண்டாள்".
" பிளாஸ்கை திறந்தவள், இரண்டு டம்ளரிலும் டீயை ஊற்றி, பாட்டி இந்தாங்க, அண்ணி இந்தாங்கள் என்று இருவரிடமும் டீ டம்ளரை நீட்ட,நீ என கருப்பாயி கேட்க, நான் டீ குடிக்கிறது இல்லை என்றாள்".
" அடக்கொடுமையே அப்போ உனக்கு வேறு ஏதாச்சும் வாங்கி இருக்கலாமே ஆராமா என்றவர், சரி இரு. நம்ம வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் டீ கடை இருக்கு".
"உனக்கு பால்-டீ வாங்கிட்டு வரேன் என்று கருப்பாயி சொல்ல ,அதுலாம் ஒன்றும் வேண்டாம் அண்ணி என்று சொல்லிவிட்டாள்".
" அட சும்மா இரு ஆராமா. வயித்து புள்ளைக்காரி இப்படியா இருக்கிறதென்று, வேகமாக டீயை வாயில் ஊற்றிக்கொண்டு இதோ வருகிறேனென்று சென்றார்".
"நம்ப சொல்லாமலே எப்படி இவர்களுக்கு நாம் கர்ப்பமாக இருக்கிறது தெரிந்தது? என்று ஆர்கலி முழிக்க,அவள் முகத்தைப் பார்த்து பாட்டியும் சிரித்து விட்டார்".
"ஆராமா, அது தான் பெண்களோட மதிநுட்பம். ஒருவரை பார்த்த உடனே எடை போடுவது".
" நல்ல பொண்ணா தான் இருக்காளென்றவர், ரொம்ப செலவு ஆகிட்டாத்தா?".
" இல்லைங்க பாட்டி என்க,வந்த பையிங்களை பார்த்தால் அப்படி தான் தெரியுது என்றவர், ஹப்பாடா என்று திண்ணையின் தரையில் சாய்ந்து படுக்க, உங்களுக்கு ஏன் இந்த வேலை பாட்டி".
" ஒரு ஆளை வச்சி நாளைக்கு சுத்தம் பண்ணிக்கலாமென்று ஆர்கலி சொல்ல, சும்மா எப்படிமா இருக்க ,அதான் கொஞ்சோண்டு இடத்தை சுத்தம் செய்தேன்".