• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஹைதராபாத்- பொள்ளாச்சி:

"ஹைதராபாத்தில் இருக்கும் வெற்றியும், பொள்ளாச்சியில் தனது வீட்டில் படுத்திருந்த ஜனனியும், அவர்களின் கடந்த காலத்தின் நினைவுக்குள் மூழ்கினர்".


"முழு ஆண்டு விடுமுறை முடிந்து, எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த ஜனனியும்,முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்".

" ஒன்றரை மாதம் விடுமுறைக்கு பிறகு, வகுப்பறையில் தோழிகளை பார்த்துக்கொண்டவர்கள்,இடைப்பட்ட நாளில் என்னென்ன நடந்தது?,யார் யார் எங்க போனார்களென்று, அவர்கள் அனுபவத்தை சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது,ஆசிரியர் ஒருவர் உள்ளே வந்தார்".

" மாணவர்கள் எல்லாரும் எழுந்து நின்று குட்மார்னிங் சார் என்க,குட் மார்னிங் ஸ்டூடென்ட்ஸ் உட்காருங்கென்று கையை காட்டி சொன்னவர், நான் தான் இந்த வருடம் உங்களுடைய வகுப்பு ஆசிரியர். எனது பெயர் வாசுதேவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்".

" அப்புறம், உங்களுடைய அறிவியல் ஆசிரியரும் நான் தான்.முதல் நாள் வகுப்பு என்பதால், உங்களை பற்றி சொல்லுங்கள் என்க, மாணவர்களும் அவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்து முக்கால் மணி நேரம் செல்ல, முதல் வகுப்பு முடிந்ததற்கான பெல் அடிக்கும் சத்தம் கேட்டது".

" ஓகே ஸ்டூடென்ட்ஸ் நாளையிலிருந்து வழக்கமாக வகுப்பை ஆரம்பிக்கலாம். அதுவுமில்லாமல் உங்களுக்கு இன்னும் புக்ஸ் வரவில்லை".

"அதனால் பழைய யுனிட்டை நாளைக்கு தருகின்றேன்.புதிய நோட் வாங்கி, அட்டை போட்டு எடுத்து வாங்களென்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".

திருச்சூர்:

"என்னமோ கடையில் போய் சட்டை வாங்கினேன் என்பது போல, கல்யாணம் பண்ணிக்கிட்டேனென்று, சாதாரணமாக சொல்லுறனு ஆது கேட்க".

" வேற என்ன பண்ண சொல்ல?, அந்த நேரத்தில் அவளுக்கு மூச்சு கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற, எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது".

"சுற்றி இருப்பவர்களை பற்றி நான் எதுவுமே நினைக்கவில்லை".

" ஆனால் அந்த செயலே அவளை தற்கொலை பண்ணிக்கும் அளவிற்று கொண்டு போய் நிறுத்தியிருக்கென்றால், அவளை எவ்வளவு தூரம், அவனுங்கள் காயப்படுத்தியிருக்கணும்?, நல்லா யோசித்து பாரென்று ருத்ரன் சொன்னான்".

" நண்பனின் வார்த்தையை கேட்ட ஆதுவோ, நீ சொல்லுறதும் வாஸ்தவம் தான் டா".

" சும்மாவே ஒன்னும் இல்லாத விஷயத்தை, ஊதி பெருசாக்கும் ஆளுங்கள், நிச்சயமா அந்த பொண்ணை ,இஷ்டத்திற்கு பேசியிருப்பாங்க தான்".

" சரி அடுத்து என்னாச்சினு சொல்லுடா , நானும் அவள் சின்னப்பொண்ணு, தப்பான ஆசைகளை அவளுக்குள் உண்டாக்க வேண்டாமென்று, பத்து நாளைக்கு ஒருமுறை, ஆசிரமத்திலிருக்கும் ஃபோனில் பேசிட்டு இருந்தேன்".

" உங்க கிட்ட சொன்னால், உடனே கிரியும், சிங்கமும் என்ன சொல்வாங்க, அவளை கூப்பிட்டு வந்து குடும்பம் பண்ணுனு, ஒத்த கால்ல நிப்பாங்கள்".

" அதுவும் இல்லாமல் அவங்க மருமகள்,விசாலாதேவி சும்மா இருப்பாங்களா?, இதெல்லாம் மனதில் எனக்கு உழன்டுக்கிட்டே இருந்துச்சி".

" ஆனால், எப்போ அவளை கல்யாணம் பண்ணினேனோ, அன்றிலிருந்து அவளுக்கு மட்டுமில்லைடா, ஆசிரமத்து புள்ளைங்களுக்கும் சேர்த்தே, மாதம் மாதம் ஒரு தொகையை அனுப்பிடுவேன்".

" ரெண்டு வருஷம் போன்லையே வாழ்க்கை போச்சி, அதுலாம் அழகான நாட்கள் டா".

" அவ காலேஜ் முடிந்து வந்த பிறகு தான் பேசமுடியும். அவள் போனை அட்டென் பண்ணுவதற்குள், காத்திருக்கும் போது ஒரு பீலிங் வரும் பாரு அய்யோஓஓ".அதையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாதுடா "

" அப்போ எழுதி காட்டு நான் படிச்சிக்கிறேனென்ற ஆதுவை, வெட்டவா குத்தவானு முறைத்து பார்த்தவன், நீ காதலிச்சி பார்த்தால் என் மனசு புரியும்".காதல் உனக்குள் இல்லை என்பதால் தான், நான் பேசுவது கிண்டாலாக இருக்குடா.

ருத்ரனின் வார்த்தையை கேட்டவனுக்கு, கண் முன் ஒரு முகம் நிழலாட,எனக்காடா காதல் இல்லைனு நினைத்தவன், காரிலிருந்து இறங்கியவன், அங்க போய்ட்டு வரேனென்று இடது பக்கமிருந்த காட்டினுள் சில அடி தூரம் சென்றவன், தனது போனிலிருந்த போட்டோவை எடுத்து பார்த்து, எப்போ டி நீ வருவாய்?.

உனக்காக இங்க ஒருத்தன் காத்திருப்பது தெரியலையா?.

ஏன் டி இப்படி ஒரு தண்டனைய குடுத்துருக்கிறாய்?.

என்னை பார்த்து வீர் கேட்குறான்?, காதல் பற்றி என்ன தெரியுமென்று ?.

எனக்கா தெரியாது, சொல்லுடி எனக்கா தெரியாது?.

உள்ளுக்குள் இத்தனை வருஷமா செத்துக்கிட்டு,வெளியே இயல்பா இருப்பது போல நடிச்சிக்கிட்டு இருக்கேனே, எனக்கு பீலிங் இல்லையா?.

முடியலைடி..

"சீக்கிரமா என்கிட்ட வந்துடுடி குட்டிமானு, போட்டோவில் இருப்பவளை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தவன் கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது".

அப்பொழுது ருத்ரனிடமிருந்து கால் வர, முகத்தை துடைத்துக்கொண்டவன், மீண்டும் காருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, ம்ம்... "அப்புறம் என்னாச்சி?..

ஆர் யூ ஓகே தானே ஆதுனு ருத்ரன் கேட்க, ஏண்டா, நல்லா தான் இருக்கிறேன்.எனக்கு என்ன எருமை என்க, பேஸ் டல்லா இருக்கு அதான் கேட்குறேனென்றான்.

இவ்வளவு தானா, இப்போ பாருயென்றவன், காரிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவிய பின், ஒளி வட்டம் தெரியுதாடா சொல்லு என்க..

"ஜோக்கா... சிரிக்கிற மூடு இல்லைனு முகத்தை திருப்பிக்கொண்டான்".

சரி டா,மற்றதை சொல்லு, பின்னர் பொள்ளாச்சியில் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்...

அப்புறம், நான்கு மாதங்களுக்கு முன்பு, நம்ப சிங்கப்பூர் பிராஞ்சை பாக்க போவதாக சொல்லி விட்டு, நான் சென்னையில் போய் ,
ஒரு வாரம் முழுவதும் தேடிப்பார்த்தேன் டா".ஆனால் அவளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை".

" நாலு மாதம் இப்படியே போனது, வழக்கம் போல சர்சிற்கு கால் பண்ண, அங்கிருந்த சிஸ்டர் ஒருவர் சொல்லி தான் ,ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகிட்டுனு தெரிஞ்சிது".

" நான் தான் அந்த பார்மில் கையெழுத்து போட்டுருக்கேன்னு, அந்த சிஸ்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாங்கடா".

" எனக்கு ஒன்னுமே புரியவில்லை?, பிறகு அவங்களே சொன்னாங்கடா. சுந்தர்னு ஒருத்தவர் தான், அந்த பேப்பரை ஆஸ்ரமத்தில் வந்து கொடுத்துட்டு போனார்னு".

" அவர் ஆசிரமத்திற்கு வந்த புட்டேஜ் எதாவது இருக்காயென்று கேட்கும் போது,மாமா ஆசிரமத்திற்குள் வந்து போன புட்டேஜ் எனக்கு அனுப்பினாங்க".

"இவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்ததுனு பயங்கர ஷாக்டா".

" மாமாவை விசாரிக்கும் போது தான் இதற்கு பின்னாடி இருந்தது, சிங்கத்தோட மருமகள் விசாலாதேவி".

" இதுவரை நண்பன் சொல்லியதை கேட்டுக்கொண்டிருந்த ஆது, கடைசியாக ருத்ரன் சொன்னதை கேட்டு என்னடாஆஆஆஆ சொல்லுறனு அதிர்ந்து போனான்".

" ஆமாடா.... அவங்களே தான் என்பதை உறுதி படுத்தியவன், இது எப்படி அவங்களுக்கும் , இங்க நம்ப சிங்கத்துக்கும்( சிம்ஹன் தாத்தா) தெரிந்தது என்பது தான்,இந்த நிமிஷம் வரை எனக்கு, கொஞ்சம் கூட புரியவில்லைடா".

" யார் சொல்லியிருப்பார்களென்று, நானும் எல்லா வழியிலும் யோசித்து பார்த்து விட்டேன், ஆனால் நோ ஐடியா".

" டேய்,அதை பற்றிய ஆராய்ச்சி பிறகு வச்சிக்கலாம், மீதி குண்டையும் போட்டு தொலை, ஒரேடியா தெரிஞ்சிக்கிறேன் என்ற ஆது, ஒரு நிமிஷம் என்றவன், மீதமிருந்த கூல்டிரிங்ஸை குடித்து முடித்து, பாட்டிலை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து விட்டு, ஆல் ஈஸ் வெல் ஆது, ஆல் ஈஸ் வெல் னு தனது நெஞ்சில் கை வைத்து சொல்லிக்கொண்டான்".

" ஆதுவின் செயலை பார்த்த ருத்ரன், அய்யனார் போல முறைக்க, அடேய் ஆது, இந்த பயல் மலையேறினான் உனக்கு சங்கு தான், போதும் அடக்கி வாசியென்று மனதிற்குள் நினைத்தான்".

" எட்டி ஒரு உதை விட்டேன் குருத்தெலும்பு தெரித்து விடுமென்று ருத்ரன் சொல்ல,நோ நோ நோ வீர்".

" ஆம் அல் ரைட் வீர்".

" நீ சொல்லுடா".

" பிறகு நான் வீட்டுக்கு வரும் போதே ராம்க்கு விஷயத்தை சொல்லிட்டு உள்ளே வந்தேன்டா".

" மேலேயிருந்து சிங்கம் வந்து, கன்னத்தில் விட்டுது ரெண்டு அறை, உடனே எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டேன், பிறகு சிங்கம் சொன்னார், டிக்கெட் போட்டாச்சு கிளம்புனு".

" சென்னைக்கு போய் பார்த்தால், சிங்கத்தோட மகன் பேயறைஞ்ச போல உட்கார்ந்து இருந்தார், மருமகள் பிக்னிக் போயிருக்கு".

" விடிஞ்சி சாவகாசமா வந்தவங்க கிட்ட கேட்டாங்க என்ன நடந்துச்சினு, அதற்குள் டிடெக்டிவ், ஆர்கலி பற்றி சொல்ல, ஹாஸ்பிட்டலுக்கு போனால்,கலெக்டர் வசுந்தரா சுந்தரபாண்டியன்,திருச்சூர் என்னும் அட்ரஸ் கிடைத்தது".

" இங்க வந்து பார்த்தால், அந்த வீட்டில் இருந்த பாட்டியை பார்த்து, சைலுனு சொல்லி, கிரி மயங்கி விழுந்துடிச்சிடா".

" ஹாஸ்பிட்டல் வந்தால், சிவியர் அட்டாக்னு சொல்லிட்டாங்கள். அந்த பாட்டியும், அவங்க வீட்டுக்காரரையும், நம்ப சிங்கம், தாத்தா பாட்டினு சொல்லி, மற்றதை கிரி எந்திரிச்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டார்".

" பிறகு தான் நடந்தது உனக்கு தெரியுமேனு மனதில் இருந்ததை எல்லாம் தனது ஆருயிர் நண்பனிடம் சொல்லி முடித்த ருத்ரன், காரின் பின் சீட்டில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினான்".

" ஆதுவோ நண்பனை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்".

"சிறிது நிமிடம் சென்ற பின்னர் கண் விழித்தவனுக்கு ஆதுவின் முறைப்பு தெரிந்தது".

" அதான் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டேனே,பிறகு இன்னும் என்ன டா?,ம்ம் எல்லாம் சொல்லியவன், நடுவுல ஒரு எட்டு மணி நேரம் காணாமல் போனியே?,அந்த கதையை பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே? என்க,கிராதகன் எப்படி பாயிண்டை பிடிக்கிறான் பாரு? என, மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".

"ஓஓஓ அதுவாடா,அதான் இவ்வளவு தூரம் வந்திருக்காமே, அப்படியே ஊரை சுத்தி பார்க்கலாம்னு போனேன்னு ருத்ரன் சொல்ல, ஆஹான், அப்படியா?,நல்லா சுத்தி பார்த்தியானு ஆது கேட்கும் போது, ருத்ரன் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".

" ஹப்பாடா...நல்ல வேளை, ஏதோ ஒரு போன் கால் வந்து நம்பள காப்பாற்றி விட்டதேனு நினைத்துக் கொண்டே, தனது பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்க்க, சிங்கம் என்று வந்தது".

" டேய் சிங்கம் தான் ஃபோன் பண்ணுதுடானு, அட்டென் பண்ண,ரெண்டு மாடும் எங்கடா போனீங்க?,மணி என்ன ஆகுதென்று சிம்ஹன் தாத்தா சத்தம் போட்டார்".

" இதோ வந்து விடுகிறோமென்று அழைப்பை கட் பண்ணியவன் வாடா நம்மள தான் தேடுறாரென்க, சரி மற்றதை பிறகு பேசிக்கலாம்".

"இப்போ நாம போகாலாமென்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணிய ஆது,ரோட்டில் எதாவது வண்டி வருதா என்று பார்த்து விட்டு, வந்த வழியில் திருப்பியவன், ஹாஸ்பிட்டலை நோக்கி காரை ஓட்டிச்சென்றான்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
"காரை பார்க்கிங்கில் விட்டு விட்டு, லிப்டில் ஏறி மேல வந்தவர்கள், பொறுமையாக கதவை திறந்து உள்ளே பார்க்க, சிம்ஹன் தாத்தா ஃபோனில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது".

" கதவு திறக்கும் சத்தம் கேட்டு சிம்ஹன் தாத்தா எட்டி வாசலை பார்க்க, ருத்ரனும் ஆதுவும் உள்ளே வருவது தெரிந்தது".

"பெட்டில் படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து இருவரையும் முறைத்து பார்க்க, ஹிஹி என்று,ரெண்டு பேரும் சத்தம் இல்லாமல் சிரிக்க, தூ என்று துப்பியவர்,அங்கிருந்து பெட்டை கையை காட்டி விட்டு போய் படுத்துக் கொண்டார்"

" அது விஐபி தங்கும் ரூம் என்பதால், எல்லா வசதியும் கொண்டதாக இருந்தது. சிங்கிள் பெட்டில் சிம்ஹன் தாத்தா படுத்துக்கொள்ள, டபுள் பெட்டில் ருத்ரனும் ஆதுவும்,ஆளுக்கு ஒரு பக்கம் படுத்துக் கொண்டார்கள்".

"இரவு விளக்கின் வெளிச்சத்தில் மூவரும் கண்ணை மூடி இருந்தாலும்,சிந்தனைகள் மட்டும் மூவருக்கும் வெவ்வேறாக இருந்தது.

"நீண்ட நேரத்திற்கு பிறகே,மூவரும் தங்களை மறந்து உறங்கினார். அலாரம் சத்தம் கேட்டு சிம்ஹன் தாத்தா கண் விழித்தவர், தனது உள்ளங்கையை பார்த்து விட்டு, அருகிலிருந்த ஃபோனை எடுத்து பார்க்க, காலை ஆறு மணி என்று காட்டியது".

"பெட்டிலிருந்து எழுந்தவர், மனைவியின் அருகில் சென்று பார்க்க, கிரிஜா பாட்டியும் அந்த நேரம் கண் விழிக்க, அங்கிருந்த கணவரைப் பார்த்து சிங்கம் என்க,டோய் என் செல்ல குட்டி வந்துட்டாள், என் பொண்டாட்டி செல்லம் வந்து விட்டாளென்று சிரித்தார்".

"சிம்ஹன் தாத்தாவின் சந்தோஷமான குரலை கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் எழுந்து அவரிடம் வர,கிரிஜா பாட்டியோ புன்னகையோடு இரண்டு பேரன்களையும் பார்த்தார்".

"கிரி என்று கோராஸாக சொல்லிய ஆதுவும், ருத்ரனும்,பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டனர்".

" பேரன்களின் தலையை தடவி விட்டவர்,காஃபி- டீ ,போய் குடிச்சிட்டு வாங்களென்க,ஆமா குடும்பத்தோட கேரளாவுக்கு பிக்னிக் தானே வந்திருக்கிறோம்".

"பீர் குடி, பிராந்தி குடி, காபி குடி கஞ்சி தண்ணி குடினு?, அங்கே நம்ப வீட்டில் இடம் இல்லைன்னு உன் பாட்டுக்கு இங்க உள்ள பெட்ல படுத்து கிட்டனு கிண்டலாக சொன்னாலும், ஆதுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது".

"பேரனின் கண்ணீரை துடைத்தவர், தனது இரண்டு காதையும் பிடித்து சாரி ஆது கண்ணா என்றார்".

" உன் சாரி, பூரியையெல்லாம் நீயே வச்சுக்கோ. எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பு நம்ம இலங்கைக்கு போகலாம். அங்க போய் புட்டும் கடலைகறியும் பண்ணி கொடு, சாப்பிடலாமென்க,அட தின்னி முண்டமே என்று சிம்ஹன் தாத்தாவும், ருத்ரனும் ஆதுவை பார்த்தனர்".

"அவர்கள் இருவரின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிய ஆது,ஆமா நீங்களாம் வேடிக்கை தானே பார்ப்பீங்களென்க,அடேய் உன் கிட்ட மனசுக்குள்ள கூட எதையும் பேச முடியலைடா என்றார் சிம்ஹன் தாத்தா".

"கண்ணா, போய் ப்ரஷ் ஆகிட்டு வாங்க, இன்றைக்கு நாம வீட்டிற்கு போகலாமென்று டாக்டர் சொன்னாங்கப்பா,அப்படியா டா கிரி,சந்தோஷம் என்ற ஆது, சிங்கம் மனுஷன் தொண்டை வரை இனிக்கிற போல, டீ போட்டு வை என்றவன், அங்கிருந்து நேராக உள் அறையில் இருக்கும் ரெஸ்ட் ரூமிற்கு சென்றான்".

"ஆதுவை பார்த்த சிம்ஹன் தாத்தா, டேய் வீரா என்க, ம்ம் தாத்தா என்றபடியே ருத்ரன் பார்க்க, என்னை பார்த்தால் டீ மாஸ்டர் போலவா இருக்கென்றார்".

" தாத்தாவை மேலும் கீழும் பார்த்தவன், எனக்கு காஃபில சுகர் லைட்டா போடுங்களென்று அவனும் அங்கிருந்து செல்ல, இப்பொழுது மனைவியிடம் திரும்பியவர், எல்லாம் இவனுங்களுக்கு நீ கொடுத்த இடம் டி".

" ரெண்டு தடிமாடும் என்னை டீ கடையில் வேலை பாக்குறவானா ஆக்கிட்டு போறானுங்களென்க,மாமா எனக்கு ஹார்லிக்ஸ் என்கவும், அதைக்கேட்ட சிம்ஹன் தாத்தா ,எதேஏஏ என்று மனைவியை முறைத்தார்".

சதூர்வேதமங்கலம்:

"பாட்டி, நான் அண்ணி கூட போயிட்டு வந்துவிடுகிறேன். நீங்க பத்திரமா இருங்களென்று சொல்ல, பார்த்து போயிட்டு வாங்கமா".

" இந்த கிழவிக்கு என்ன கண்ணு பயம்னு எழுந்து போய் தோட்டத்து கதவை திறந்து கொண்டு, வெளியே சென்று பார்க்க, அங்கே ஒரு பக்கம் கேணியும், இரண்டு தென்னை மரங்களும், ஒரு எலுமிச்சை மரமும், அதை சுற்றியிருந்த காலி இடத்தில் புல்லும்,சில செடிகளும் மண்டி கிடந்தது".

" ஏங்கண்ணு கருப்பாயியென்க, இதோ வரேன் ஆச்சி என்றவாறு அங்கு வந்தவரிடம், இந்த இடத்தை சுத்தம் பண்ணுறது இல்லையா?".

" சுத்தமாக தான் இருக்கும் ஆச்சி .கடந்த ரெண்டு வருஷமா இந்த வீட்ல யாருமே இல்லை. ஸ்கூலிற்கு வர டீச்சர் எல்லாம் கிராமம் என்பதால்,பாதியிலேயே ஓடிடுறாங்க".

" சின்னதம்பி தான், இங்க உள்ள புள்ளைங்க எல்லாருக்கும், பெரிய சார், இன்னொரு டீச்சரம்மா கூட சேர்ந்து பாடம் எடுத்துட்டு இருந்துச்சு. இப்ப தம்பியும் வேலை விஷயமா,வெளி ஊருக்கு போயிட்டாங்க".

" அதனால தான் டீச்சர் வேணும்னு விளம்பரம் கொடுத்தது,நாளைக்கு அவரை வைத்து இதெல்லாம் சுத்தம் பண்ணிடுறேன் ஆச்சி".

" அதுலாம் அவனுக்கு ஒன்னும் நீ வேலை வைக்காதே,இங்க மண்வெட்டியும், கத்தியும் இருக்கானு பாரு கண்ணு என்க, எல்லாம் இந்த வீட்டில் இருக்கு தான் ஆச்சி என்றபடியே, தோட்டத்து வாசலுக்கு மேலே உள்ள மர பரணை காட்டி அதில் இருக்குது".

" இருங்க ஆச்சி நான் எடுத்து தருகிறேன் என்றவர், சுவரின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஏணியை எடுத்து, பரணில் சாய்த்து வைத்து, அதன் மேலே கருப்பாயி ஏற, பார்த்து கண்ணு என்றார்".

"ஆச்சி, பயப்படும் அளவிற்கு இந்த ஊரில் அரவம் இல்லை.அப்படி இருந்தாலும் நம்ப கண்ணில் படமாட்டாங்க".

" நான் வாக்கப்பட்டு வந்து பத்து வருசம் ஆகிட்டு, இதுவரை அரவத்தை பார்த்ததில்லைனு சொல்லிக்கொண்டே, பரணில் இருந்த, அருவாள், மண்வெட்டி, குப்பை அள்ளும் தட்டு கூடை, தென்னம் விளக்கமாறு, மற்றும், சிறு கைப்பாறையையும் எடுத்து கீழே நின்ற பாட்டியிடம் கொடுத்து விட்டு, ஏணியிலிருந்து கீழே இறங்கிய கருப்பாயி, மீண்டும் அதே இடத்தில் கொண்டு போய் வைத்தார்".

"ஆரா கண்ணுனு பாட்டியம்மா கூப்பிட, இதோ வரேன் பாட்டி என்றவாறு தோட்டத்திற்கு வந்தவள், அங்குள்ளதை சுற்றி பார்த்தாள்".

" கண்ணு,போற இடத்தில் எங்கையாவது விதைகள் தென்பட்டால், எல்லாத்திலையும் கொஞ்சம் வாங்கிட்டு வா".

" சரி சரி,வேறு ஏதாவது வேண்டுமா என்க, அதிகமாகலாம் துணி வாங்காதே".

"சும்மா ரெண்டே ரெண்டு புடவை, இரண்டு ஜாக்கெட்டு இரண்டு பாவாடை மட்டும் வாங்கு, அதை நான் பார்த்துக்கிறேன் பாட்டி என்கும் போது, வாசலில் ஹாரன் சத்தம் கேட்டது".

" ஆட்டோ தான் வந்துடிச்சி போல என்றவள், அண்ணி வாங்க என்றபடியே வாசலுக்கு செல்ல, ஆட்டோ தான் நின்று கொண்டிருந்தது".

"பின்னர் ஆச்சியிடம் சொல்லிக்கொண்டு,இருவரும் ஆட்டோவில் ஏறி டவுனிற்கு சென்றனர்".

" ஆட்டோ கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்த பாட்டியம்மா, தோட்டத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்தவர், முதலில் வாசல் பக்கம் இருந்த செடிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்".

" அப்பொழுது, இரண்டு பெண்மணிகள் கதவை திறந்து உள்ளே வந்தவர்கள், அம்மா என்று கூப்பிட, வேலை செய்து கொண்டிருந்த பாட்டியும் நிமிர்ந்து பார்த்தார்".

" புதுசா வந்திருக்கீங்களாமா என்று வந்திருந்த பெண்மணிகளில் ஒருவர் கேட்க ஆமாமா என்றவர், வாங்க உட்காருங்களென்று,அங்கிருந்த சிமெண்ட் திண்ணையை காட்டினார்".

" எந்த ஊரிலிருந்து வந்துருக்கீங்கம்மா என்க, கோயம்புத்தூரில் இருந்து வந்திருக்கோம்மா என்றார்".

"எதேஏஏஏ...அவ்வளவு தூரத்தில் இருந்தானு இருவரும் ஆச்சரியப்பட்டனார். ஆமாமா வேலை தானே என்ற பாட்டி,நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க என்க, இருவரும் அவர்கள் வீட்டை அங்கிருந்து காட்டினர்".

" நீங்க இரண்டு பேரும் தான் வந்திருக்கிறீர்களானு பெண்மணிகள் விசாரிக்க, ஆமாமா நானும் என் பேத்தியும் தான் வந்திருக்கிறோம்.பேராண்டி வெளிநாட்டில் இருக்கிறார்".

"ஓ..அப்போ உங்க பேத்தி தான் டீச்சரா?, ஆமாமா டீச்சர் வேலைக்கு தான் வந்திருக்கு.இருங்க தண்ணி எடுத்துட்டு வரேன் குடிக்க என்று சொல்ல, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா".

" வாசல்ல ஆட்டோ நின்னுச்சி.அதான் பார்த்துட்டு போகலாம் என்று வந்தோம் என்றவர்கள், மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்க, பாட்டியும் அவர்களுக்கு பேச்சு கொடுத்துக்கொண்டே,வாசல் பக்கம் உள்ள அனைத்தையும் சுத்தம் பண்ணி முடித்தார்".

" அடியேய் கலா,இந்த வயதிலும் இந்த அம்மா, எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்யுறாங்க பாரேன், நம்ப வீட்டிலையும் இருக்குதுங்களே கிழவிங்களென்று சொல்ல, ஆமாடி சுதா,இந்த அம்மா பலே ஆளு தானென்று இருவரும் பொறுமையாக பேசிக்கொண்டனர்".

"ஆர்கலியும், கருப்பாயியும் தேவையானதையெல்லாம் வாங்கி முடித்தனர். இன்னும் எதாவது வாங்கணுமா என்க, ஆமா அண்ணி".

" ஒரு பிளாஸ்க் வேண்டும், பாட்டிக்கு அதில் டீ வாங்கிட்டு போய்டலாமென்க, சரி மா. இங்க ஆறுமுகம் கடையில் டீ நல்லா இருக்கும்".

"உங்க அண்ணன் டவுனுக்கு கூப்பிட்டு வந்தார்னா, அங்க தான் வாங்கி கொடுப்பாரு அங்கயே போய் வாங்கிக்கலாம்".

" சரி வா...அந்த கும்பகோணம் பாத்திர கடையில பொருளெல்லாம் நல்லா இருக்குமென்ற கருப்பாயி, அந்த கடைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்".

" இருவரையும் பார்த்த கடைகாரர், வாங்கம்மா, என்ன பார்க்கணும் என்க, பிளாஸ்க் வேண்டுமென்று ஆர்கலி சொல்ல,எத்தனை பேருக்குமா என்றார்".

" ஆர்கலியோ மில்டன் கம்பெனியில் இருந்து, ஒரு லிட்டர் அளவு கொடுங்களென்றாள்".

" பின்னர் விலையை கருப்பாயி குறைத்து பேசி வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள்".

" சரி ஆராமா, நீ ஆட்டோகாரருக்கு போனை போடு, போகும் போது டீ வாங்கிக்கலாமென்று கருப்பாயி சொல்ல, ஆர்கலியும் சரிங்கண்ணி என்றவள், ஆட்டோகாரருக்கு கால் பண்ணி, இருக்கும் இடத்தை சொல்லி வரச்சொன்னாள்".

" சிறிது நிமிடத்தில் ஆட்டோவும் அங்கு வர, இருவரும் உட்கார்ந்து கொள்ள, ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட,அண்ணா ஆறுமுகம் கடை கிட்ட கொஞ்சம் நிறுத்துங்களென்று கருப்பாயி சொல்ல, ஆட்டோகாரரும் சரிமா என்றார்".

ஆர்கலி எங்கே...?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top