• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர்- நாயர் ஹாஸ்பிட்டல்:

டாக்டர் சொன்ன போலவே ஒரு மணி நேரம் சென்று, கிரிஜா பாட்டியை பார்க்க உள்ளே சென்றனர்.


"அங்கிருந்த நர்ஸ், சார் சத்தம் இல்லாமல் அவங்களை பார்த்து விட்டு வந்துடுங்களென்று ரூம் கதவை திறந்து விட்டார்".

"பல ஒயர்கள் சூழ்ந்து, ஓய்ந்து போய் தூங்கி கொண்டிருக்கும் பாட்டியின் அருகில் வந்தவனுக்கு, கண்கள் கலங்கியது".

" அவரின் வலது கையை பிடித்தவன், சிறு பிள்ளை போல் மண்டியிட்டு, பாட்டி படுத்திருக்கும் பெட்டில் தலைவைத்து சத்தமின்றி அழுதான்".

" பேரனின் பின்னாலே வந்த சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டிப்போடு கூப்பிட்டவர், எதுக்கு இப்போ அழற?, அவளுக்கு ஒன்னும் இல்லை".இலங்கையில் இருக்கும் நம்ப வீட்டில் படுக்க இடம் இல்லையென்று, இங்கு வந்து தூங்கிட்டிருக்காள்".

" அவள் தூங்கட்டும் வா என்றவர், மனைவியை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".

"சரி நல்லா தூங்கு , குட்நைட் என்று சொல்லி வெளியே வந்தான்".

" மாமா நான் போய் என வார்த்தைகளை சைலஜா பாட்டி மென்னு முழுங்க, என்கிட்ட இதை கேட்கணுமா டா?".

"பின்னர் கதவை திறந்து கொண்டு கணவரோடு உள்ளே சென்ற சைலஜா பாட்டி, தனது அக்காவின் கால்களை பிடித்துக்கொண்டு, சத்தமின்றி கதறி அழுதார்".

"மனைவியின் தோளை தட்டிய சுந்தரபாண்டியன், சைலு வேண்டாமென்க, கணவரின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தார்".

"சரி வா போகலாமென்று வெளியே அழைத்து வந்தவர், மனைவியின் கையில் தட்டிக்கொடுத்தார்".

" அப்பொழுது அங்கே வந்த ஹாஸ்பிட்டல் அட்டெண்டர்,டைம் ஆகி விட்டது சார். இனி விசிட்டர்ஸ் யாரும் இங்கே இருக்க கூடாது".

" பேஷண்ட் ஐசியு ல் இருப்பதால் அட்டெண்டர்க்கு உள்ளே எந்த வேலையும் இல்லை. வெளியே வந்து வெய்ட் பண்ணுங்களென்றார்".

" சரிப்பாயென்ற சிம்ஹன் தாத்தா, வாங்கயென்று சொல்லி நடக்க, அவர் பின்னாடியே மற்றவர்களும் நடந்தனர்".

"லிப்டில் ஏறி கீழே வந்தவர்கள், வெளியே இருந்த வெய்டிங் ஹாலிற்கு சென்று, அங்கிருந்த காலி இருக்கையில் உட்கார்ந்து கொண்டனர்".
யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".

" சிறிது நேரம் சென்று, அங்கிள் இங்கு பக்கத்தில் எதாவது லாட்ஜ் இருக்காயென்று ருத்ரன் கேட்க,பேரனின் வார்த்தையை கேட்ட சிம்ஹன் தாத்தா, வீரா என்று கண்டன பார்வையோடு பார்த்தவர், உன் பாட்டி வீடு இங்கே இருக்கும் போது, உனக்கு எதற்கு லாட்ஜ்?".

" தாத்தா அது வந்து.. நான் மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கேன், நீங்க போய் ரெஸ்ட் எடுக்க தான்".

" தம்பி ஒன்னும் பிரச்சினை இல்லை, நான் பார்த்துக்குறேன். நீங்க நாலு பேரும் வீட்டிற்கு போங்களென்று மைக்கேல் சொல்ல, பரவாயில்லைங்க அங்கிளென்றான்".

" பாட்டி என்று முதல் முறையாக சைலஜாவை கூப்பிட, சொல்லு அப்புயென்றார். அவர் சொன்ன அப்பு என்ற வார்த்தையை கேட்டு அதிர்ந்தான்".

" கிரிஜா பாட்டி மட்டும் தான், சில நேரம் அவனை அப்பு என்று கூப்பிடுவார்".

" பின் தொண்டையை செருமி தன்னை சரி பண்ணிக்கொண்டவன், நீங்க தாத்தாவை கூப்பிட்டு வீட்டிற்கு போங்கள். நான் பார்த்துக்குறேன்". டாக்டர் தான் சொன்னாங்களே, நாளைக்கு வார்டிற்கு மாற்றிடுவாங்களென்று, பிறகு வாங்கள்".

"அதுலாம் ஒன்னு வேண்டாமென்று சிம்ஹன் தாத்தா சொல்ல, பின்னர் ஒரு வழியாக பேசி மைக்கேலோடு மூவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்".

" சேரில் உட்கார்ந்திருந்தவனுக்கு முதுகு வலிப்பது போலிருக்க, எழுந்து வெளியே வந்தவன், அங்கிருந்த ஓ வடிவ புல் மண்டிய காரிடரில் கொஞ்ச நேரம் நடந்து விட்டு மணியை பார்க்க, நள்ளிரவு 12 என்று காட்டியது".

"தொண்டை வறட்சியாக இருக்கவும், ஹாஸ்பிட்டல் கேண்டினிற்குள் நுழைய, அங்கே பகல் போல பரபரப்பாக இருந்தனர்".

"காஃபி ஒன்று என்க, வேற எதாவது வேண்டுமா என்று ருத்ரனிடம் கேட்டவர், டிபன் ஐட்டமும் சூடாக இருக்குயென்றார்".

" காஃபியும், ஒரு பன் போதுமென்று சொல்ல,வெய்டரும் சிறிது நிமிடத்தில் அவன் கேட்டதை கொண்டு வந்து, டேபிளின் மேல் வைத்து சென்றார்".

"காஃபியை குடித்தவனுக்கு, பன் சாப்பிட தோணவில்லை. அப்பொழுது ஆர்கலி என்ற சத்தம் கேட்டு பட்டென்று எழுந்து திரும்பி பார்க்கவும், இரண்டு வயது குழந்தை ஒன்று கேண்டின் உள்ளே ஓடி வந்தது".

" ஆர்கலி பெயரை கேட்ட பிறகு தான் ருத்ரனுக்கும், தான் எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது நினைவிற்குள் வர, ஆர்கலி என்று பல்லை கடித்தவன், காலையில் வரேண்டி என்று சொல்லிக் கொண்டான்".

" கண்ணை முடியவன்,
சிறு வயதில் சிம்ஹன் தாத்தா அவனுக்கு சொல்லிக்கொடுத்த வரிகளை, மனதிற்குள் சொல்லலானான்".

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்க்களம் தான் மாறுமா.... என்று இரண்டு முறை தனக்குள் சொல்லியவன், பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவன், மீண்டும் உள்ளே போய் வெய்ட்டிங் ஹால் சேரில் சாய்ந்து உட்கார்ந்தவனுக்கு, ஆர்கலியின் நினைவு வந்தது".

" பனி புகையின் ஊடே முதன் முதலாக அவளை கண்ட அந்த நாளை நினைத்து பார்க்க,அவள் சொன்ன லேம்போஸ்ட் வார்த்தையை முணுமுணுத்தவனுக்கு சிரிப்பு வர, வந்துட்டேன்டி".

" ரெண்டு வருஷமா பாக்காத கோவத்தில் தான் சொல்லாமல் இங்கு ஓடி வந்து விட்டாயா? என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவன், எப்போ தூங்கினான் என்பது தெரியவில்லை".

சதுர்வேதமங்கலம்:

"சிறிது நேரம் நகத்தை கடித்து துப்பியவள், கண்ணை மூடி திறந்து விட்டு, எழுந்து மேலே சென்றவள், கபியின் அறையின் முன்பு நின்று கதவை தட்ட யோசித்தாள்".

"அப்பொழுது, படாரென்று கதவை திறந்து,அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தவன், ஏண்டி கூப்பிட்டால் வர முடியாதா?".

"உன்னை என்ன நான் கடித்து தின்றுவிடுவேனா? என்றவாறு தன் மாமன் மகளை ஒரு பார்வை பார்த்தவன், அவள் அதிர்வில் இருப்பதை கண்டு, சிரிப்பு வந்தது".

" ரியா,தாவணி போட்டிருப்பது வசதியாக போக,இடது பக்கமுள்ள இடையில் நறுக்கென்று கிள்ளி விட்டு, தள்ளி நின்றான்".

"வலியில் நிகழ்விற்கு வந்தவளோ எதிரில் இருப்பவனை திட்ட வாயெடுத்தவள், அவன் பார்வையை கண்டு கீழே குனிந்து கொண்டாள்".

"சிறு வயதிலுருந்து இவள் தான் உன்னவளென்று சொல்லி வளர்க்கப்பட்டதால், மாமன் மகள் என்பதை விட, தன் பொண்டாட்டி என்றே, மனதில் நினைக்க தொடங்கினான்".

"வளரும் பருவம் வந்த பின்னர், அவள் மேலிருந்த அன்பு காதலாய் மாறியது. ஆனால் ரியா முகம் கொடுத்து பேச மாட்டாள்".

"சரி ஊரில் தெரிஞ்சவர்கள் கிண்டல் பண்ணுவதால் தான், இப்படி இருக்கிறாளென்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்".

"பருவம் எய்திய பின்னர், அவளை திருட்டு தனமாக பார்த்து ரசிப்பது, கபிலனுக்கு பேரானந்தமாக இருந்தது".

"மருத்துவம் படிக்க சென்னை போகணுமென்று ரியா சொல்லிய பிறகு, அவள் வார்த்தையை தட்ட முடியாமல், மனமேயின்றி அவளை கல்லூரியில் சேர்த்து விட்டு வந்தான்".

"அதன் பின்னரே அவளிடம் இன்னும் ஒதுக்கம் வந்தது".

சரியென்று அதையும் கபிலன் பெரிதாக நினைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவள் ஃபோனில் கூப்பிட்ட மாமா என்ற வார்த்தையில் உள்ள உணர்வு, அவனை வெகுவாக தாக்கியது.

"ரியாவிற்கும் தன் மேல் விருப்பமிருக்கிறது என்பது, அன்று தான் கபிலனுக்கு புரிந்தது".

" யோவ் விருமாண்டினு ரியா கூப்பிட, அவள் சத்தத்தில் நினைவிற்குள்ளிருந்து வெளியே வந்தவன், எதேஏஏ யோவாஆஆ!".

" ஆமாயா".

" மேலே வா வா வா என்று உசுரை வாங்கி விட்டு, என்னமோ இடிச்ச புளி போல நிக்குறீங்க".

" தன்னவளின் வாயாடித்தனமான பேச்சை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்பு வந்து நின்றவள், என்ன கபிலா வாயடைத்து போயாச்சானு அவன் கண் முன்னால் சொடுக்கு போட்டாள்".

" சொடுக்கு சத்தத்தில் கண்ணை மூடி திறந்தவன், அவள் கையை பிடித்து இழுக்க,ஒரு சுற்று சுற்றி அவன் நெஞ்சின் மேல் சாய்ந்து விழுந்தாள்".

"தன் மேல் சாய்ந்திருப்பவளை இறுக அணைத்தவன், ஒரு கையால் அவளின் பின்னந்தலையை பின்பக்கமாய் இழுத்தவன், முதன் முதலாய் தன்னவளின் இதழோடு, தன் முரட்டு இதழை பதித்தான்".

" முதலில் திமிறியவள் பின் தன் மாமனின் இதழ்போரில் இணைந்து கொண்டாள்".

" இருவரும் அவர்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க,கண்ணனின் புல்லட் வரும் சத்தம் கேட்டு விலகியவர்கள், வேறு பக்கம் திரும்பி நின்றனர்".

" தன் தலைமுடியை அழுத்தமாக கோதியவன், அது வந்து வந்து என்க, அண்ணாஆஆஆ என்றவாறு அந்நேரம் ஆதிராவும் அங்கு வந்தாள்".

"அங்கு ரியாவும் இருப்பதை பார்த்தவள், ஏய் நீ இங்கே தான் இருக்கியா?, அம்மா உன்னை தோட்டத்திற்கு தேட போயிருக்காங்க.அம்மா சாப்பிட கூப்பிடுறாங்கள், வாங்க அண்ணா என்றாள்".

" வாடா ஆதி போகலாமென்று கபி முன்னே நடந்து செல்ல, வாடினு தோழியின் கையை இழுத்துக்கொண்டு ஆதிராவும் சென்றாள்".

"மூவரும் மாடியிலிருந்து கீழே வர, கண்ணனும் வீட்டிற்குள் வந்தவர், என்னடா சாப்டீங்களாயென்க,இனி தானுங்கப்பானு ஆதிரா சொல்ல, மணி என்ன ஆகுது?, இப்போ தானென்று சொல்லுற".

" எங்க அவள், ஏய் தேவகி என்று சத்தம் போட்டு கூப்பிட, எதுக்கு இப்படி கத்துறீங்க என்றவாறே தோட்டத்து வாசல் வழியா தேவகியும் வீட்டிற்குள் வந்தார்".

" ஏண்டி மணி பத்தரையாகுது, இன்னும் புள்ளைங்களுக்கு சாப்ட குடுக்காம என்ன பண்ணுற?".

" அப்பா... அம்மா முன்னவே சாப்ட சொன்னாங்க, நாங்க தான் சாப்பிடவில்லையென்று ஆதிரா சொல்ல, அப்படியா கண்ணு என்றபடியே மனைவியை பார்க்க, அங்கே தேவகியோ தனது கணவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்".

" சரி சரி சாப்டுங்கடானு அங்கிருந்து தனது அறைக்கு வேகமாக செல்ல,தனது அருகில் நின்ற அம்மாவை பார்ததவன் என்னம்மா, உன் புருசர் ரொம்ப கொதிக்குறாரு?".

" அவரு கடக்கட்டும், முதல்ல நீங்க சாப்பிடுங்கப்பாளென்று, மூவருக்கும் பரிமாறியவர், கணவரையும் கூப்பிடச்சென்றார்".

" கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, கண்ணன் ரெஸ்ட்ரூமில் இருப்பது தெரிந்தது. சிறிது நிமிடத்தில் கதவை திறந்து வெளியே வந்தவரை பார்த்து, மாமா வாங்க சாப்பிடலாமென்று தேவகி கூப்பிட, எடுத்து வை மா என்றார்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர் -பாண்டியன் பேலஸ்:

"நால்வரும் வீட்டிற்கு வர இரவு 11.30 மணி ஆனது.அவர்களுக்காக காத்திருந்த வசுவோ, சாந்தாம்மா சாப்பாடு எடுத்து வைங்களென்று கிச்சன் பக்கம் குரலை கொடுத்தார்".


" அம்மா ஹாஸ்பிட்டல்ல அவங்க எப்படி இருக்காங்களென்க, வசுந்தராவின் வார்த்தைகளை கேட்ட சிம்ஹன் தாத்தா, அம்மாடி வசுந்தரா, வசுந்தரா தானே என்க, ஆமாமென்று தலையசைத்தார்".

" திரும்பி சைலஜாவை ஒரு பார்வை பார்த்தவர், ஹாஸ்பிட்டலில் என்னோட மனைவி கொஞ்சம் உடம்பு முடியாமல் தான் இருக்கிறாள்".

" அப்புறம் நான் வீர சிம்ஹன், அவள் என்னுடைய மனைவி, கிரிஜா வீர சிம்ஹன் என்றவர், மற்றது என் மனைவி குணமாகி வந்த பிறகு பேசிக்கலாமா என்க,அதற்கு வசுவோ ம்ம் என்று தலையசைக்க சரிம்மா என்றார்".

" தொண்டையை செருமிய சுந்தரபாண்டியன், அண்ணா, ப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாமென்றார்".

" சுந்தரபாண்டியனின் அழைப்பை கேட்ட சிம்ஹன் தாத்தா, சந்தோஷம்பா நீயாவது என்னை அண்ணாக
ஏறுக்கொண்டாயே என்றவாறு எழுந்தவர்,இங்கே ரெஸ்ட் ரூம் எங்கே?, வாங்கணா என்றவர், கீழே இருந்த இன்னொரு அறைக்கு கூப்பிட்டுச் சென்றார்".

"நடப்பதை பார்த்த வசுக்கு தான், ஏதோ புரியாத மொழியில் படம் பார்ப்பது போலிருந்தது".

"நமக்கு தெரியாமல் இவங்க கிட்ட என்னமோ விஷயம் இருக்கென்று தனக்குள் சொல்லிக்கொண்டு டைனிங் டேபிளை நோக்கிச் சென்றார்".

" மைக்கேலும் வந்து விட, ஐவருக்கும் வேலையாள் டிபனை பரிமாற, வசுவையும், மைக்கேலையும் தவிர மற்ற மூவரும் கடமைக்கு சாப்பிட்டு எழுந்தனர்".

" சார் உங்க லக்கேஜ் அங்க ரூமில் வச்சிருக்கேனென்று வசு சொல்ல, அந்த சார் என்ற வார்த்தையை கேட்ட சிம்ஹன் தாத்தா, சைலஜா பாட்டியை ஒரு பார்வை பார்த்தவர், சரிம்மாயென்று சொல்லி விட்டு, வசு காட்டிய ரூமிற்குள் சென்றார்".

" அம்மு சாப்பிட்டாளானு சைலஜா பாட்டி கேட்க, ஆச்சுமா. நான் தான் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.நாளைக்கு அதிகாலையிலே, நான் டெல்லிக்கு போறேன் மா".

"நாளைக்கு பிரதமர் கூட மீட்டிங் இருக்குமா, அண்ணா நமக்கு டிக்கெட் போட்டு விட்டேன்.மார்னிங் 7 மணிக்கு ஃப்ளைட்ணா என்க, சரிடா. நான் பார்த்துக்குறேன்.உனக்கு தேவையானதை எடுத்து வச்சிக்கிட்டியா? என்று மைக்கேல் கேட்க, இல்லைணா.ஒரு முக்கியமான டாக்குமெண்ட்ஸ் நாளைக்கு சப்மிட் பண்ணனும், அதை ரெடி பண்ணிட்டு இருந்தேனென்க, சரிமா.நேரம் ஆகிட்டு நீ போ, காலையில் பார்க்கலாமென்று சொல்லி விட்டு, மைக்கேல் அங்கிருந்து கெஸ்ட்ஹவுஸை நோக்கிச்சென்றார்".

" வசுவும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு படியில் ஏறி,மேலே உள்ள தனது அறைக்கு சென்று விட, கணவரை பார்த்த சைலஜா, வாங்களென்று அறையை நோக்கி போனார்".

"கதிரவனும் தங்கத்தை உருக்கி வார்ததை போல, அதிகாலையில் கிழக்கு நோக்கி உதயமாக தயாராகினான்".

" சூட்கேஸோடு கீழே வந்த வசு, சத்தமில்லாமல் அறைக்கதவை திறந்து மகள் தூங்குவதை பார்த்து விட்டு , கதவை சாற்றிக்கொண்டு ஹாலிற்கு வர, அங்கு மைக்கேலும்,சைலஜா பாட்டியும் காஃபி குடித்துக்கொண்டிருந்தார்கள்".

" மகளை பார்த்த பாட்டியம்மா, எழுந்து போய் பிளாஸ்கிலிருந்த காஃபியை ஊற்றி எடுத்து வந்தவர், இந்தாமா என்றார்".

" அம்மாவிடமிருந்து காஃபியை வாங்கி குடித்து விட்டு, பார்த்துக்குங்கம்மா. நாங்க போய்ட்டு வருகிறோமென்று, வசுவும், மைக்கேலும் சொல்லிச் சென்றனர்".

"புது இடத்தாலும், மனைவியின் உடல்நிலையாலும் சீக்கிரமே எழுந்த சிம்ஹன் தாத்தா, ரெஸ்ட் ரூம் போய்ட்டு அறைக்குள் வர, பேச்சு சத்தம் கேட்டு கதவை திறந்து ஹாலிற்கு வரும் போது தான், வசு வெளியே போவது தெரிந்தது".

" காரில் போகும் மகளை பார்த்துக் கொண்டிருந்த சைலஜா பாட்டி, காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, தனது மாமா வீர சிம்ஹன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது".

" தூங்கலைங்களா மாமாயென்க, தூக்கம் வரலைடா பாப்பு".

" பாப்பு என்ற வார்த்தையிலே சைலஜா உடைந்து விட்டார். மாமாயென்று நா தழுதழுக்க சொல்ல, போய் உன் கையால ஒரு இஞ்சி டீ கொண்டு வா பாப்புனு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார்".

" இதோ மாமா என்றவர், கண்ணை துடைத்துக்கொண்டு வேகமாக கிச்சனிற்குள் சென்றவர், டீயை போட்டு எடுத்து வந்து நீட்ட,உட்காருமா என்றவாறு டீ கோப்பையை எடுத்து ஒரு வாய் குடித்தவர், கண்ணை மூடி திறந்து விட்டு, இந்த கையால் டீ குடிக்க 50 வருஷம் காத்திருக்க வேண்டியிருக்கு போலயென்று சொல்லி குடித்தார்".

" சைலஜா பாட்டியால் எதுவும் சொல்ல முடியவில்லை".

" பாப்பு, நான் குளிச்சிட்டு ரெடியாகி வரேன், அங்க ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு, வீராவை இங்க அனுப்பி வைத்தால், அவனும் ரெப்ரஷ் ஆவான்னு எழுந்து போனார்".

" போகும் தனது மாமாவை பார்த்து விட்டு, தானும் அறைக்குச்செல்ல, அங்கே கணவர் சுந்தரபாண்டியனும் எழுந்து விட்டது தெரிந்தது".

" பின்னர் கிச்சனிற்குள் வந்தவர்,கணவருக்கு போட்டு வைத்த காஃபியை எடுத்துக்கொண்டு ரூமிற்குள் சென்றவர், அங்கிருந்தவரிடம் காஃபி என்க, குடு சைலுயென்றார்".

"வசு போனதையும், தனது மாமா சொல்லியதையும் சொல்ல, சரி நாமளும் போலாம்.நீயும் ரெடியாகுயென்றவாறு, சுந்தரபாண்டியனும், தயாராக உள்ளறைக்குள் சென்றார்".

" முக்கால் மணி நேரம் கடந்து சென்று சிம்ஹன் தாத்தா வெளியே வர, அங்கு சைலஜா- சுந்தரபாண்டியன் இருப்பதை பார்த்தவர், போலாமாபா என்க, போலாம்ணா என்றார்".

" வேலையாட்களிடம் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் ஹாஸ்பிட்டல் போகும் விஷயத்தையும், ஆர்கலியை பார்த்துக்க சொல்லி, தம்பதியினர் இருவரும் சொல்லியதால், மூவரும் வெளியே வந்து, அங்கிருந்த காரில் ஏறி, ஹாஸ்பிட்டலை நோக்கிச் சென்றனர்".

நாயர் மருத்துவமனை:

" கழுத்து வலியின் காரணமாய், விழிப்பு வர,நைட் இந்த சேரிலே தூங்கியிருக்கிறோமென்று, ருத்ரனுக்கு அப்பொழுது தான் புரிந்தது".

" எழுந்தவன், ஹாஸ்பிட்டலில் உள்ள ரெஸ்ட் ரூமிற்கு சென்று சிறிது நிமிடத்தில் வெளியே வந்தவன், கேன்டீனுக்கு சென்று, டீயை குடித்து விட்டு வர, இவர்களும் காரில் வந்து இறங்கினர்".

" பின்னர் அவர்களிடம் வந்து இணைந்து கொள்ள, நால்வரும் ஐசியு வை நோக்கி சென்றனர்".

" இவர்களை பார்த்த அங்கிருந்த நர்ஸ், பேஷண்டை பெட்டிற்கு மாத்தியாச்சி. ரூம் நம்பர் 304 என்க, தேங்க்யூ சிஸ்டரென்று சொல்லிக்கொண்டு, மூன்றாவது ஃப்ளோருக்கு வந்தவர்கள், ரூம் நம்பரை தேடி போய் கதவை திறக்க,அங்கு கிரிஜா பாட்டியோடு பேசிக் கொண்டிருந்தவனை பார்த்த ருத்ரன், அதிர்ந்து போனான்".

" கதவு திறக்கும் சத்தம் கேட்டு கிரிஜா பாட்டி வாசல் பக்கம் பார்க்க, ருத்ரன் நிற்பது தெரிந்தது. அப்பு என்று கையை நீட்ட, பாட்டியின் குரலை கேட்டவன் வேகமாக அவரிடம் வந்து, தோளில் சாய்ந்து கொண்டான்".

" மீண்டும் கதவு திறக்க, சிம்ஹன் தாத்தாவும், அவரின் பின்னாடி வந்தவர்களை இமைக்க மறந்து பார்த்தவர் வாயிலிருந்து சைலு என்று வர, வேகமாக அவரிடம் வந்த சைலஜா, அக்காயென்று கதறினார்".

" இவ்வளவு நேரம் யாரையும் திரும்பி பார்க்காமல் பாட்டியை மட்டும் பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தவனோ, சைலஜாவை பார்த்து அதிர்ந்து எழுந்தான்".

" எப்படி இருவரும் ஒரே போல இருக்கிறார்கள்? என்று அவனுக்கும் மண்டை காய்ந்தது".

" அப்பொழுது அங்க வந்த நர்ஸ், மேடம் இப்படி அழாதீங்க .இப்போ தான் அவங்களை வார்டுக்கு மாற்றி இருக்கிறார்களென்று சொல்லி செல்ல, தன்னுடைய இரட்டை பிறவி அழுது கொண்டிருப்பதை பார்த்த கிரிஜா பாட்டி,சைலு அழாதடியென்றார்".

ஹைதராபாத்:

"மூவரும் எழுந்து குளித்து தயாராகி, வெளியே செல்வதற்காக கதவை திறக்க போக, ஹாலிங் பெல் சத்தம் கேட்டு, வெற்றியும் கதவை திறக்க, அங்கு விஷால் நின்று கொண்டிருந்தான்".

" போலாமாடா என்று வெற்றி கேட்க ரெடிடா என்றான். பின்னர் நால்வரும் கீழே வந்தவர்கள், ரூமை வெக்கேட் பண்ணி விட்டு, புக் பண்ணியிருந்த காரில் ஏறி உட்கார, கார் அங்கிருந்து புறப்பட்டது".

" பத்து நிமிடத்தில், அங்கிருந்த சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி (SVPNPA) முதன்மை ஐபிஎஸ் பயிற்சி மையத்திற்குள் வந்து சேர்ந்தனர்".

" லக்கேஜோடு கீழே இறங்கியதும், கார் அங்கிருந்து சென்றது".

"எங்கேப்பா போகணுமென்று சத்தியமூர்த்தி கேட்க, இருப்பா. வாட்ச்மேனிடம் கேட்டு வருகிறேனென்று வெற்றி சென்றான்".

" ரெண்டு நிமிடத்தில் வந்தவன், உள்ளே போய் லெப்ட் பில்டிங்கென்று சொல்லி நடந்தான். எப்பா எவ்வளவு பெரிய இடமென்று வள்ளி சொல்லிக்கொண்டே வந்தார்".

" வாட்ச்மேன் சொல்லிய 'B' பிளாக்கிற்கு வர, அங்கு சிலர் இவர்களைப்போல வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தனர்".

"நீங்க ரெண்டு பேரும் போய் அங்குள்ள சேரில் உட்காருங்களென்று நண்பர்கள் இருவரும் அனுப்பி வைக்க, வாம்மா என்றவாறு வெய்டிங் ஹாலை நோக்கி சத்தியமூர்த்தி செல்ல, வள்ளியும் அண்ணனின் பின்னாடியே சென்றார்".

" ஒரு மணி நேரம் கடந்து செல்ல, அப்பொழுது ஆபிஸர் ஒருவர் வந்து லிஸ்ட் வாசிக்க, டிரைனிங்கிற்கு வந்தவர்கள் எல்லாம் அவரின் முன்பு வந்து சேர, உள்ளே வாங்கயென்று அழைத்துச்சென்றார்".

" இரண்டு லைனா பிரிந்து வாருங்களென்று ஆபிசர் சொல்ல, அதைப் போலவே பிரிந்து நிற்க, ஒவ்வொருவர் பெயராக கூப்பிட, முன்னால் வந்தவர்களுக்கு, யுனிபார்ம், ஷூ, மற்றும் அவர்களுக்கான தங்கும் ரூம் நம்பரை சொன்னார்".

" வெற்றிக்கும், விஷாலுக்கும் ஒரே அறை நம்பராக இருக்க, இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது. அப்பொழுது,ஆபிசர்ஸ் உங்களோடு இன்னொரு ஆளும் தங்குவார், ஏனென்றால் அந்த ரூம் நான்கு பேர் தங்க கூடியது என்றவர், மிஸ்டர் கபிலனென்று கூப்பிட, எஸ் சார் என்றவாறு கபிலன் அங்கு வந்தான்".

" மூவருக்கும் உரிய ஷூ, யுனிபார்மை கொடுத்தவர், கையெழுத்தை வாங்கி கொண்டு, நெக்ஸ்ட் என,மற்றவர்களை கூப்பிட தொடங்கினர்".

" முதல் மாடியிலிருக்கும் ரூம் நம்பர் 103 யின் கதவை திறந்து உள்ளே வந்தவர்கள், அங்கிருந்த கபோர்டில் தங்களது லக்கேஜை வைத்து விட்டு, திரும்பியவர்கள், ஹாய் என்று சொல்லினர்".

" நான் விஷால், இவன் வெற்றி என்று சொல்ல, நான் கபிலன் என்றான். ஓகே, இனி நாம ப்ரண்ட்ஸ் என்று விஷால் கையை நீட்ட, கபிலனும் ஓகே என்றான்".

"அப்புறம் கபிலன், நீங்க எந்த ஊரென்று ஆங்கிலத்தில் கேட்க, அவனோ தமிழ்நாடு என்றான்".

" என்னாஆஆஆ தமிழ்நாடா என்று விஷால் தனது முட்டை கண்ணை விரித்தான்".

ஆர்கலி எங்கே....?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top