• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொள்ளாச்சி:

"ஜனனியை காட்டி, அது தான் உன் நாத்தனாரென்று வள்ளி சொல்ல, ம்ம் என்று ராணியும் சிரித்தாள்".


"சரி வாங்க நம்ப வீட்டிற்கு போகலாமென்று ராணியும், பாலாஜியும் கூப்பிட, இருக்குட்டும்மா, போய் தான் வெற்றிக்கு எல்லாம் தயார் செய்யணும்".

" நீ தம்பிய கூப்பிட்டு நம்ப வீட்டிற்கு வாடா, இன்னொரு நாள் நாங்க நிச்சயமா வரோமென்று சத்தியமூர்த்தி சொல்ல, சரிங்கப்பாயென்றாள்".

மேலும் சிறிது நேரம் ராணியுடன் பேசியிருந்து விட்டு, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலிலிருந்து வெளியே வந்தவர்கள், அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பொள்ளாச்சியை நோக்கி புறப்பட்டனர்.

" அசதியின் காரணமாய் பெரும்பாலானோர் பஸ்ஸில் தூங்கி விட்டனர்".

" சரி எப்போ டிக்கெட் போடணுமென்று கோபி கேட்க, அப்பா, வள்ளிக்கும் சேர்த்து ஞாயிற்று கிழமை போடலானு இருக்கேண்டா".

" அதுவும் நல்லது தான், இங்க இருக்குறதை நான் பார்த்துக்குறேன்னு கோபி சொல்ல, நண்பேன்டா என்றவாறு தனது பால்யகால நண்பனை தோளோடு அணைத்துக்கொண்டே வெற்றி சொல்ல,நான் இன்னும் கோவமாக தான் இருக்கேனென்றான்".

"அப்புறம்டா வெற்றி, காலையில அந்த புள்ளை வந்து பேசுச்சி, நல்லா திட்டி விட்டுட்டேனென்றான்".

" யாரு, ஜனனியவா என்க, ஆமாடா என்றவன் காலையில் நடந்ததை பற்றி வெற்றியிடம் சொல்ல தொடங்கினான்".

"வெற்றி குளிக்க போன பின்னர், நல்லபடியாக திருச்செந்தூர் வந்து சேர்ந்து விட்டதாக, கோபி தனது அப்பாவிடம் ஃபோனில் சொல்லிக்கொண்டிருந்தான்".

" அங்கு வந்த ஜனனி, கோபிணா என்றாள்".

"ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவன், சரிப்பா நான் கிளம்பிட்டு சொல்லுறேனென்று கட் பண்ணியவன்,சொல்லுமா என்ன?".

" ஏன்ணா, என் மேல கோவமா இருக்கீங்களா?, முகம் குடுத்து கூட பேச மாட்டீங்கிறீங்கள்?".

"நீங்க பெரிய வீட்டு மருமகள், உங்க மேல கோவப்பட என்ன இருக்கிறது மா".

" என்னணா இப்படி சொல்லுறீங்க?".

" வேற எப்படி சொல்லணும்?,அது தானே உணமை".

" நீங்க இப்படிலாம் பேசுற ஆளே இல்லையேணானு வருத்தமாக கேட்க, நான் கூட தான் நினைச்சேன், நீ வழக்கமாக பேராசை புடிச்ச புள்ளை இல்லை, நல்ல பொண்ணுனு.உன் லட்சணம் நேற்று பந்தலில் தானே தெரிந்தது".

"அந்தனை பேருக்கு முன்ன வாய் கூசாமல் பேசுனியே?, ஏன் உனக்கு காதலிக்கும் போது அவன் வேலை பார்க்கவில்லைனு தெரியாதா?.

"இத்தனை வருஷமா இந்த ஊர்ல தான் இருந்தியா இல்லை, வெளிநாட்டில் வாழ்ந்தியா?, அப்போலாம் அவன் அவங்க பூர்வீக வயல்ல உழைக்குறது கண்ணு தெரியலையோ?.கல்யாணம்னு வந்ததும், உனக்கு இதுலாம் குறையாகிட்டு".

" சரி அதை விடு, என் மாமா எப்படியாப்பட்ட மனுஷன், அவரை பற்றி கொஞ்சமாவது யோசித்தியா?, இல்லையே".

" அவ்வளவு பெரிய மனுஷனை ஊருக்கு முன்னால் கை கூப்பி மன்னிப்பு கேட்க வச்சிட்டியே, உன்னையெல்லாம் பார்த்தாவே எரிச்சலா வருது".உனக்கு புடிக்கலைனா போக வேண்டியது தானே".

" அவனுக்கு வேலை கிடைச்சிட்டுனு லட்டர் வந்ததும் நீ பேசியதையெல்லாம் மறந்துட்டு போல".

" உன்னை போல சுயநலவாதிங்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது,சாமிக்காக வந்துருக்கோம், கண்ணு முன்னாடி நிக்காதே போய்டு என்றான்".

" கோபியின் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாய் ஜனனியின் மேல் விழ,அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்".

"இதான்டா நடந்துச்சியென்று கோபி சொல்ல, நண்பனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூட,வெற்றியின் கண்களிலிருந்து நீர் கசிந்தது".

"பொள்ளாச்சிக்கு வந்து சேர இரவு ஏழு மணியானது, அப்பொழுது அய்யா இந்தாங்களென்று மாரியப்பன் பணத்தை நீட்ட,அதற்கு சத்தியமூர்த்தியோ என்னங்க கணக்கு( கணக்குபிள்ளை)?".

" கோயில் சமாச்சாரம் என்பதால், வந்திருந்த எல்லாரும், அவர்களால் முடிந்த தொகை கொடுத்திருக்கிறார்கள்".

" ஓஓஓ...என்ற சத்தியமூர்த்தி, சரிங்க கணக்கு,இந்த பணத்தை அப்படியே நம்ம கோயில் கணக்கில் வைத்து விடுங்க.ஏதாச்சு கோயில் சம்பந்தப்பட்ட வேலை வந்துச்சு என்றால், அதுக்கு எடுத்து செலவு பண்ணிடுங்க".

"வழக்கம் போல் சத்தியமூர்த்தியின் பெருந்தன்மையான குணத்தை மனதிற்குள்ளும் பாராட்ட தவறவில்லை".

" பின்னர்,சத்தியமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டு,கோயிலுக்கு வந்தவர்களெல்லாரும், அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றனர்".

" ஹப்பாடா என்றவாறே ராக்கம்மா பாட்டியும், கண்ணம்மா பாட்டியும், வீட்டு சுவற்றில் சாய்ந்து உட்கார,பாட்டிகள் இருவரையும் பார்த்த ஜனனி, பஸ்ஸில் தானே வந்தீங்க?, என்னமோ நடந்து போன போல சீன் போடுறீங்களென்றாள்".

" அடி போடி".

"எப்போ பாரு நோரு குத்துறதுக்குனே வந்துருவாள்".

"அந்த பாவி பய, ரோடுனா வண்டி ஓட்டுனான் என்றார் ராக்கம்மா பாட்டி".

" அதுக்கு நீங்க நடந்து போகணுமென்று சொல்லியவள், இரவு உணவை சமைக்க போக,எம்மாடி சமைக்க வேண்டாம்தா".

" நான் போய்,நம்ப சின்னா கடையில் இட்லி வாங்கிட்டு வரேனென்ற மாரியப்பன், செருப்பை போட்டுக்கொண்டு வெளியே சென்றார்".

"சிறிது நிமிடத்தில் டிபன் வாங்கிக்கொண்டு மாரியப்பன் வந்து சேர, நால்வரும் சாப்பிட்டு முடித்து, பின்னர் படுத்து விட்டனர்".

பெரிய வீடு:

" டைனிங் ஹாலில் சாப்பிட்டுக்கொண்டே,அப்பா ஞாயிற்றுக்கிழமை நாலு மணிக்கு கோவையிலிருந்து ஃப்ளைட்னு வெற்றி சொல்ல,அப்படியாப்பா.சரி காலையில் பேசிக்கலாம், இப்ப போய் ரெஸ்ட் எடு என்றவர்,எழுந்து போய் கையை கழுவி விட்டு தனது அறையை நோக்கிச்சென்றார்".

" வள்ளி நீயும் வா என்றான்".

" அண்ணன் மகன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவர், அங்க சூதானமா இருக்கணும் கண்ணு".

" சரியா சாப்பிடு, மாசா மாசாம்( மாதம்) நானும், அப்பாவும் உன்னை பார்க்க வரோம்.உனக்கு என்ன வேண்டுமானாலும் ஃபோன் பண்ணு, அத்தை உடனே அப்பாகிட்ட சொல்லி அனுப்புறேனென்றார்".

" வள்ளி சொல்லியதையெல்லாம் கேட்டவன், ஹாஹாஹா , நான் என்ன பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கா போறேன்?, எல்லாம் அங்கையே இருக்கும் வள்ளி, நீ கவலைப்படாதே".

சென்னை- மகாபலிபுரம்:

"அப்போ எதற்கு நாம வீட்டிற்கு போகணும்?.

"இங்கையே நைட் இருந்து விட்டு, காலையில் போயிக்கலாமே வசந்தியென்று தேவி சொல்ல, சரி தேவி என்றார்".

"பின்னர் தோழிகள் இருவரும்,கடல் அலையை, தங்கள் அறையிலிருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து பேசியபடியே உறங்கினர்".

"காலைக்கதிரவன் தன் செக்கச்சிவந்த உருவத்தை உலகிற்கு காட்டிக்கொண்டு, கிழக்கே உதயமாகினான்".

"முதலில் எழுந்த வசந்தி, கடலின் மேல் உதயமாகும் கதிரவனின் தகதகப்பை, கண் குளிர கண்டு ரசித்தார்".

"எத்தனையோ வருடங்களாய் இந்த கடற்கரையில் நின்று ரசித்த சூரியன் தான். இருந்தும் திகட்டவில்லையேனு முணுமுணுத்துக்கொண்டு, குளிக்க சென்று விட்டார்".

"தேவியோ, வழக்கம் போல ஆற அமர எழுந்து தனது ஃபோனை எடுத்து பார்க்க,அதில் டார்லிங் என்ற பெயரில் மூன்று மிஸ்டுகால் இருந்தது".

"அச்சோ தூக்க கலக்கத்தில் கால் வந்தது தெரியலையே என்றவாறே, தனது கணவருக்கு கால் பண்ண, ரிங் போய்க்கொண்டே தான் இருந்ததே தவிர, கால் அட்டென் பண்ணவேயில்லை".

" சரி, வேலையா இருப்பாங்க போல, பார்த்து விட்டு பண்ணுவாங்களென்று சொல்லிக் கொண்டு, ஃபோனை டேபிளின் மேல் வைத்து விட்டு குளிக்கச்செல்லும் போது, கதவை திறந்து கொண்டு வசந்தி உள்ளே வந்தார்".

" மேடம் நடந்துட்டு வந்தாச்சா என்றவாறே, தேவி ரெஸ்ட் ரூமிற்குள் சென்று விட்டார்".

" உள்ளே வந்த வசந்தி, இருவரின் உடைகளை பேக்கிங் பண்ண தொடங்கினார்".

" போட்டுக்கொள்ள தேவையான டிரஸை, தேவி எடுத்து வைத்து சென்றதால், மற்றதை பேகில் வைத்து ஜிப்பை பூட்டினார்".

" அரைமணி நேரத்தில் குளித்து வெளியே வந்த தேவியோ, எடுத்து வைத்த டிரஸை போட்டுக்கொண்டு, கண்ணாடி முன்பு உட்கார்ந்தவர், மேக்கப்பை போட தொடங்கினார்".

" கால் மணி நேரத்தில் தயாராகியவர், கிளம்பளாம் வசந்தினா அறையை ஒரு முறை செக் பண்ண, ம்ம் போலாம் தேவி. நான் செக் பண்ணிட்டேனென்று வசந்தி சொல்ல, தோழியின் தோளில் சாய்ந்து கொண்ட தேவியோ, நீ இருப்பதால் தான் நான் நிம்மதியா இருக்கேன்டி.".

" ஏன் தேவி இப்படி".

" இது என்னுடைய கடமை டி, எப்படியோ போயிருக்க வேண்டியவள், இன்றைக்கு கௌரவமா வாழுறேனென்றால் அது நீ போட்ட வாழ்க்கை".

" அதற்கு கைமாறா என்னால் பெரியதாக எதுவும் செய்ய முடியாது. ஏதோ என்னால் முடிந்ததை, உனக்காக செய்கிறேனென்று வசந்தி சொல்ல, தெரியும்டி".

"நீ எனக்காக உயிரையே தருவாயென்று, போன பிறவியில் நான் செய்த பலன் தான், இந்த பிறவியில் தனா, நீ, அண்ணாலாம் எனக்கு கிடைத்ததென்று சொல்லி, தேவி கண் கலங்கினார்".

" ஏய் கண்ணு மை அழியுதுடி அப்புறம் அந்த பேய் போல உள்ள முகத்தை என்னால் பார்க்க முடியாதென்று வசந்தி சொல்ல, பேயாடி நானென்று அழுகையை நிறுத்தி விட்டு தேவி கேட்டதில், வசந்திக்கு சிரிப்பு வந்து விட்டது".

" தனது தோழி சிரிப்பதை பார்த்த தேவியோ, கிண்டலாடி பண்ணுறயென்று வசந்தியின் கன்னத்தை கிள்ள,அடிப்பாவி, விடுடி விடு.உன் விரல் நகம் பாதி கன்னத்து சதையை எடுத்துவிடும் போலயென்றார்".

" பின்னர் இருவரும் அறைகதவை லாக் பண்ணி விட்டு, லக்கேஜோடு ரிசப்ஷனிற்கு வந்து ரூம் சாவியை கொடுத்தவர்கள், அங்கு வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த டிரைவரிடம் லக்கேஜ் பேகை கொடுத்து விட்டு, உள்ளே இருந்த ரெஸ்டாரன்டிற்குள் நுழைந்தனர்".

" இருவரும் இருக்கையில் அமர்ந்ததும் வெய்டரும் அங்கே வந்தவர், வணக்கம் மேடம் என்றார்".

" அடிக்கடி இங்கு வருவதால் இவர்களுக்கு அங்கிருப்பவர்கள் நன்கு தெரியும்".

" இருவரும் அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் பண்ணியதும், சிறிது நிமிடத்தில் உணவும் அவர்கள் டேபிளிற்கு வந்து சேர்ந்தது".

"பிறகு சாப்பிட்டு முடித்தவர்கள், பில்லை பே பண்ணி விட்டு,காரில் ஏறி புறப்பட்டனர்".

" டிராபிக்குள் புகுந்து வந்து சேரவே,மூன்று மணி நேரங்களானது".

" எத்தனை பிரிட்ஜ் கட்டினாலும் டிராபிக் குறைய வழியில்லை என்று தேவி புலம்பிக்கொண்டே வர, கார் ஓட்டுர எனக்கு தான் எரிச்சல் வரணும்.ஏசி காரில் சொகுசா வரும் இந்த மேடத்திற்கு, இவ்வளவு காண்டானு, டிரைவர் தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்".

" மேலும் சிறிது நிமிடங்கள் பயணத்தில் சிம்ஹன் பேலஸிற்கு முன்பு வந்து ஹாரைனை அழுத்த, உள்ளேயிருந்த வாட்ச்மேன் எழுந்து வந்து கதவை திறந்து விட, கார் ஓடிப்போய் அதன் இடத்தில் சென்று நின்றது".

" ஹப்பாடா என்றவாறு ஹாயாக ஹேண்ட்பேகை ஆட்டிக்கொண்டே சென்ற தேவியோ, அங்கிருந்தவர்களை பார்த்து பேயறைந்தது போல அதிர்ந்து நின்றாள்".
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சூர் மருத்துவமனை- மைக்கேல் பிளாஷ் பேக்:

ஒருவாரமாய் காலை, மாலை இரண்டு வேளையும்,மைக்கேலை பார்க்க வருவதை,எந்த காரணத்திற்காகவும் வசுந்தரா தவறவிடவில்லை".


" பின்னர், மைக்கேலின் கால் கட்டு பிரித்து, நடக்க வைத்து செக் பண்ண, அவரும் சிறிது தூரம் நடந்து காட்டினார்".

" இனி பிரச்சினை இல்லைங்க மேடம், தாரளமாக வீட்டிற்கு கூப்பிட்டு போகலாம்.காயத்திற்கான மருந்தை மட்டும் மறக்காமல் போடணுமென்று சொல்லியவாறு, டாக்டர் அங்கிருந்து சென்றார்"

"பிறகு வழக்கமான ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸை முடித்து விட்டு, பணத்தையும் கவுண்டரில் கட்டி வெளியே வர, இவர்களுக்கு முன்பு வந்து காரும் நின்றது".

" நம்ப கார் தான் அண்ணானு பின் கதவை திறந்து விட, மைக்கேலும் பொறுமையாக உள்ளே போய் உட்கார்ந்தார்".

" வசந்தராவும் முன் சீட்டில் உட்கார்ந்ததும், கார் அங்கிருந்து வீட்டை நோக்கிச்சென்றது".

" கால் மணி நேர பயணத்தில் அந்த பெரிய வீட்டின் போர்டிக்கோவில் வந்து கார் நிற்க, இது தான் நம்ப வீடுணா".

" வாங்களென்று கீழே இறங்கி வந்து மைக்கேலுக்கு கதவை திறந்து விட, எவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் பெண், இப்படி நமக்கு அன்பு காட்டுதேயென்று நினைத்த மைக்கேலிற்கு, கண்கள் கலங்கியது".

" ஒரு நிமிஷமென்று சொல்லிக்கொண்டு ஆரத்தி தட்டோடு வெளியே வந்தார் சைலஜா".

"மறுபிறவி எடுத்து வந்துருக்கப்பானு ஆரத்தி சுற்றி, மைக்கேல் நெற்றியில் பொட்டு வைத்தவர், வாசலில் போய் ஊற்ற சொல்லி வேலையாளிடம் தட்டை கொடுத்து விட்டு, வாப்பா , இப்போ உடம்பு நல்லாயிருக்கா?".

" சைலஜாவின் கரிசனையான விசாரிப்பு,மைக்கேலுக்கு தனது சிறு வயதில் உணர்ந்த தாயின் அன்பை இன்றும் உணர வைத்தது".

"நல்ல இருக்கம்மா. நீங்க நல்லா இருக்கீங்களா?, நான் நல்லா இருக்கேன்.நானும் உங்க அப்பாவும் எத்தனையோ முறை ஹாஸ்பிடலுக்கு பாக்க வரோமென்று கேட்டோம் பா".

" உன் தங்கச்சி தான் வர வேண்டாமான்னு சொல்லிட்டு".

" சரி சரி வாசல்லையே நிக்கிறோம்.உள்ளே வாப்பானு அழைத்துக்கொண்டு போய், அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, சுந்தரபாண்டியனும் வந்து விட அவரும் மைக்கேலிடம் நலம் விசாரித்தார்".

"பின்னர் எங்களுக்கு இத்தனை நாள் ஒரு பொண்ணு தான் இருந்தாள். எப்போ உன்ன பத்தி வசு சொன்னாளோ, அப்போயிருந்து நீயும் இந்த குடும்பத்தில் ஒருவர் தான்பா.இனி நம்ப நாலு பேரு தான் குடும்பமென்று தம்பதிகள் இருவரும் சொல்லினர்".

" இத்தனை வருடம் அனாதையாக வாழ்ந்தவன், இடையில் அவனுக்கென்று ஒருத்தி வந்தாள் அதையும் இந்த கடவுள் பறித்துக் கொண்டான்".

"எந்த ஒரு ரத்த சொந்தமும் இல்லாமல், தன்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்ட இந்த மூவருக்காகவே வாழ வேண்டுமென்று முடிவு பண்ணிய மைக்கேல், அன்றிலிருந்து வசுந்தராவின் நிழலாய் மாறினார்".

" கடந்த 22 வருடங்களாக ஒரே குடும்பமாய் தான் நாங்க நால்வரும் வாழ்கிறோம் அம்முனு, இதுவரை தன் வாழ்வில் நடந்த அத்தனையும் மறைக்காமல் மைக்கேல் சொல்லி முடித்தார்".

இதோடு மைக்கேல் பிளாஷ் பேக் முடிந்தது.

இனி....

" இவ்வளவு தான்டா அம்மு உன் மாமாவோட வாழ்க்கை என்க,எதுவும் பேசாமல் எழுந்தவள், மைக்கேலின் தோளில் சாய்ந்து கொண்டு கதறி அழுதாள்".

" தனது மனைவி ஷாலியை நினைத்து தான் அழுகிறாளென்பது மைக்கேலால் புரிந்து கொள்ள முடிந்தது".

" அவள் அழட்டுமென்று விட்டவர், குழந்தையை தட்டிக்கொடுப்பது போல, மருமகளின் தலையில் தட்டிக்கொடுக்கும் போதே, மைக்கேலின் கண்களிலும் வெள்ளம் சீறிப்பாய்ந்தது".

" சில நிமிடங்கள் சென்று, அவளிடம் விசும்பல் மட்டும் வருவதை கண்டு, அம்மு போதும் தங்கம்.முகத்தை துடைச்சிக்கோடா என்றார்".

" எப்படி மாமா அந்த கொடுமைய தாங்கிட்டு இருக்கீங்க?, அதுவும் உங்க கண்ணு முன்னாடியே அத்தையும், வயிற்றில் குட்டி பாப்பாவுமென்று சொல்லும் போதே, ஆர்கலிக்கு அழுகை தாங்க முடியவில்லை".

"அம்மு, அந்த நாட்களை நான் மறக்கவில்லை. இன்னும் என் கண்ணுக்குள்ள தானிருக்கு".

" ஒவ்வொரு நாளும் எனக்கு நரக வேதனையா இருந்ததுடா. வசு கூட கேம்பிற்கு நானும் வெளியே போக ஆரம்பித்த பிறகு தான், சிலர் நம்மை விட கொடுமையான சூழலில் வாழுறாங்களென்ற உண்மை புரிந்தது".

"அதன் பிறகு நிதர்சனம் புரிந்தது அம்மு, நாம் நேசிக்கிறவங்க நம்மோடு இல்லையென்றால் என்ன, அவங்களோட அற்புதமான நினைவுகள் நம்மோடு இருக்குமே.அது மட்டுமில்லாமல், என்னை நினைத்து பெரியம்மாவும், அப்பாவும் வருத்தப்பட்டு பேசுறதை ரெண்டு முறை கேட்டேன்.இனி இவங்க மூனு பேருக்காக தான், வாழணுமென்று முடிவு பண்ணிட்டேன்டா.

நீங்க கிரேட் தான் மாமா என்றவள், அதன் பிறகு நீங்க பீகாருக்கு போகவில்லையா?,போனேன் டா அம்மு.ஷாலியோட முதல் வருட நினைவு நாளன்று போனேன், அங்கிருந்த மெக்கானிக் ஷாப்பை விற்று, ஷாலியோட அம்மா அப்பாவிற்கு கொடுத்துவிட்டேன்.

" மகள் போன கவலை இருந்தாலும், அவங்க என்னை தவறா நினைக்கவில்லை என்பது தான், எனக்கு பெரிய அதிர்ச்சிடா அம்மு".

"இந்த ஒரு வருஷத்தில் நாங்க எங்கேயோ போய்டோமென்று தான், அவங்க நினைத்திருந்திருக்காங்கள்".

" நான் உண்மைய சொன்ன பிறகு தான் அவங்களுக்கு தெரியும், அதுவும் இல்லாமல் சம்பவம் நடந்த இடம் காட்டு பாதை.ஷாலியையும், கரீமையும் வசு தான் ஆள் வைத்து,அந்த இரவிலே அடக்கம் பண்ணிருக்குடா".

" இப்போவும் நீங்க பீகார்க்கு போறீங்களா மாமானு ஆர்கலி கேட்க, இல்லடா அம்மு. ஷாலியோட அம்மா-அப்பாவும் இறந்துட்டாங்க".

"அவ தங்கச்சி ஷமியும் கல்யாணம் பண்ணிட்டு லண்டன்ல செட்டில் ஆகிவிட்டாள்".

" ஏதோ சினிமா பார்ப்பது போலிருக்கு மாமா உங்களோட கதையை கேட்கனு அழுது கொண்டே கண்ணை துடைத்தவள், இனி உங்களுக்காக நானும் இருக்கேன் மாமா.அதைக்கேட்ட மைக்கேலோ,கண்டிப்பாக நீ இல்லாமலா அம்முனு சிரித்தார்".

" பிறகு மேனேஜரும் வந்து விட, அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். மைக்கேலும் அவர்களிடம் சொல்லி விட்டு, காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டார்".

சென்னை சிம்ஹன் பேலஸ்:

"இடது புறமிருந்த சோபாவில் வீர
சிம்ஹனும், அவருடைய மகன் தன வீர சிம்ஹனும் உட்கார்ந்திருக்க, அவர்களுக்கு எதிர்ப்புறமாக உள்ள சோபாவில் கிரிஜா வீர சிம்ஹனும், ருத்ரனும் உட்கார்ந்திருந்தனர்".

" கணவரை மட்டுமல்ல, மாமியார், மாமனார், மகனையும் இன்றைய பொழுது விசாலாதேவி,இந்த வீட்டில் எதிர்பார்க்கவில்லை என்பது, அவர் முகத்தில் ஏற்பட்ட அப்பட்டமான அதிர்ச்சியே, அங்கு இருப்பவர்களுக்கு காட்டிக் கொடுத்தது".

" வீட்டிலிருந்த வேலை ஆட்களை பார்த்த தனா, தனது தலையை அசைக்க, எல்லாரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்".

" வசந்தி தான் வந்திருந்தவர்களை பார்த்து வாங்க வாங்களென்று வரவேற்தார்".

" தந்தையின் அருகில் உட்கார்ந்திருந்த தனா, வேகமாக எழுந்தவர் இரண்டு அறையை மனைவியின் கன்னத்தில் விட்டார்".

"வாங்கிய அறையில், சில அடி தள்ளி போய் விஷாலாதேவி கீழே விழுந்தார்".

" என்னடி பண்ணி வைத்திருக்கிற என் பையனோட வாழ்க்கையிலென்று கேட்டவாறே, மனைவியின் முன்பு போய் நின்றவர், அவர் முடியை பிடித்து தூக்கி நிறுத்தி, மேலும் இரண்டு அறையை விட்டார்".

" தேவி என ஓடி போய் தடுக்க வந்த வசந்தியை ஒரு பார்வை முறைத்துப் பார்க்க, தனாவின் அந்த பார்வையிலே, வசந்தி சில அடி தூரம் தள்ளி போய் நின்று கொண்டார்".

" குப்பையில் கிடந்ததை கோபுரத்தில் உட்கார வைத்ததும், கொம்பு முளைத்து விட்டது போல?".

" தனா என்று கிரிஜா கூப்பிட, தேவியை பார்த்து ச்சை என்று சொல்லி விட்டு, அமைதியாக போய் தந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டார்".

" இப்பொழுது மருமகளின் அருகில் வந்த கிரிஜா,விஷாலாதேவி ஏன் இப்படி பண்ணினாய்? ".

" எல்லா முடிவும் நீயே எடுக்கிறதுக்கு, பின்ன வீட்டில் பெரியவர்களென்று நாங்கள் எதற்கு இருக்கிறோம்?".

" மாமியாரின் வார்த்தையை கேட்ட தேவி, போயும் போயும் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்த பிச்சைக்காரியை ,எப்படி எனது மருமகளென்று சொல்ல முடியும் அத்தை?,என்னுடைய ஸ்டேட்டஸ் என்ன, என்னோட கௌரவம் என்ன?.

"பார்க்கிறவர்கள் என்ன பத்தி என்ன நினைப்பார்கள் என்று கேட்க, ஸ்டேட்டஸாஆஆஆ என்று சிரித்தவர், உன்னுடைய ஸ்டேட்டஸ் எங்கிருந்து வந்ததென்று, கொஞ்சம் நினைத்து பார்".

"கிரிஜாவின் கேள்வியில், தேவியோ, செருப்படி வாங்கியது போல் முகத்தை வைத்துக் கொண்டார்".

" இந்த ஸ்டேட்டஸ் நீ சொல்ற கௌரவம், பணம்,புகழெல்லாம் என் மகன் மூலயமாய் உனக்கு வந்தது".

" என்னோட மகன் வாழ்க்கையில் நீ வரவில்லை என்றால், இந்நேரம் நீ எந்த குப்பத்தில் இருப்பேன்னு கொஞ்சம் நினைத்து பாரு தேவி என்றவர்,முடிந்து போனதை பேச எனக்கு சுத்தமாக விருப்பமில்லை".

"ஆர்கலி பற்றி உனக்கு எப்படி தெரிந்தது? என்று நீயே சொல்லிவிடு".

"மாமியார் கேட்ட தோரணையே தேவிக்கு கிலி பிடித்தது போல் இருந்தது. ஏனென்றால் அவரின் குணம் தெரியும். நல்லவருக்கு நல்லவர்,கெட்டவருக்கு கிரிஜா வீர சிம்ஹன் மிகவும் கெட்டவர்".

" இன்றைக்கு பல கோடிகளாக அவர்களின் பிசினஸ் சாம்ராஜ்யம் விரிந்திருப்பதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவரே,இந்த கிரிஜா வீர சிம்ஹன் தான் என்று தேவிக்கு நன்கு தெரியும்".

" அத்தை அது வந்து வந்து என்று தேவி பேச்சை இழுக்க, நீயும் ரெண்டு அரை போடுமா, அப்பயாவது வாயிலிருந்து உண்மை வருமென்று தனா சொல்ல, வாயை மூடு தனா".

"இவ்வளவுக்கு மூல காரணமே நீதான் என்றார் வீர சிம்ஹன்".

" அவளை கேள்வி கேட்க, முதல்ல உனக்கு என்ன தகுதியிருக்கு?, பெற்றது ஒரு குழந்தை. அதை உங்களால உருப்படியா பார்க்க முடிந்ததா?, தனவால் எதுவும் பேச முடியாமல் கீழே குனிந்து கொண்டார்".

" அம்மா விஷாலாதேவி நடந்து முடிந்த கதை எல்லாம்,உன் மாமியார் சொன்ன போல எனக்கு தேவையில்லாத விஷயம்".

"என் பேரனோட பொண்டாட்டி விஷயம் உனக்கு எப்படி தெரிந்தது? என்பதை மட்டும் சொல்லு என்று வீர சிம்ஹன் கேட்டார்".

"மாமனாரின் குரலில் இருக்கும் அடக்கப்பட்ட கோபத்தை தெரிந்து கொண்ட தேவி, இனியும் அமைதியா இருப்பது நல்லதில்லை".

" எல்லாரும் நமக்கு எதிரா இருக்கிறார்கள் என்பது புரிந்து,தேவியும் விஷயத்தை சொல்ல தொடங்கினார்".

ஆர்கலி எங்கே?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top