Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
"என்னப்பா பண்ணுறீங்க என்றவாறே சிறிய தந்தையிடம் சென்றவன், அவர் கையை கீழே இறக்கி விட்டான்".
"நீ அமைதியா இருப்பா.என் மகன் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.ஆசைப்பட்ட பொண்ணை விட்டுக்கொடுக்க முடியாமல் தான்இப்படி பண்ணிட்டானென்று சத்தியமூர்த்தி சொல்ல,எவ்வளவு பெரிய மனுஷன்,இப்படி எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டாறேனு சிலர் வருத்தப்பட்டனர்".
"அந்த நேரத்தில்,ஆத்தா மலரு, நான் ஒன்னு சொல்லுறேன் கேட்குறியானு ராக்கம்மா பாட்டி கேட்க, சொல்லுங்கத்தை என்றார்".
"கீதாவை உன் ஊட்டுக்கு மருமவளா கூட்டிட்டு போத்தா.ஜனனி வேற அவள் வேற இல்லை.இவளும் உன் மகள் தானே?".ரெண்டு பேரும், ஒரு தாய் கிட்ட தானே பால் குடிச்சி வளர்ந்தாளுங்க?".
"உன் தங்கச்சி புள்ளைய பெத்துட்டு போய் சேர்ந்துட்டாள்.அவளுக்கு ஆத்தாளா இருந்தது கலா.அப்போ கலாவும் உன் தங்கச்சி தானே?".
"அத்த..ஒருத்தி தான் போய் சேர்ந்துட்டாள்.எனக்கு கூட பொறந்த பொறப்பா இருக்குறது கலா தான்.கீதாவும் எம் மவள் தான்.என்னங்க நீங்க என்ன சொல்லுறீங்கனு கணவரை கேட்க,கந்தனோ தனது தங்கை மகனை திரும்பி பார்த்தார்".
"தலையாட்டி அன்பு சம்மதம் சொல்ல,பெரியாத்தா,நீ சொல்றது வாஸ்தவம் தானென்ற கந்தன்,சகலை நீங்க என்ன சொல்றீங்க? என்க".
"சோமுவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை".
"அவர் அமைதியாய் இருப்பதை பார்த்த மலரோ, மாமா என்னை நம்பி கீதாவை தரமாட்டியா என்க,என்னாத்தா பேச்சு இது?".உனக்கு என்ன தோணுது பண்ணுத்தானு மனைவியை பார்க்க கலாவும் சம்மதம் சொன்னார்".
"அப்புறம் என்னப்பா, அதான் சோமுவும் சம்மதம் சொல்லியாச்சி, சட்டு புட்டுனு புள்ளைய கூப்பிட்டு போய், துணிய மாற்றி கூப்பிட்டு வாங்க என்றார் கண்ணம்மா பாட்டி".
"அதுக்கு முன்ன,வெற்றி தம்பிக்கும் ஜனனிக்கும் சம்பிரதாயத்தை முடிச்சிடலாமென்று கலா சொல்ல, அதுவும் சரியென்று பட்டது".
"பின்னர், இருவரையும் சேரில் உட்கார வைத்து, அனைவரும் வந்து மஞ்சள் குங்குமம் பூசி ஆசீர்வாதம் செய்தனர்".
"இவர்களுக்கு முடிந்த பின்னர் அன்புக்கும்- கீதாவிற்கும் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு நிச்சயத்தை முடித்து, இன்னும் ஆறு மாதத்தில் கல்யாணம் என்று முடிவெடுத்தார்கள்".
"வீட்டின் உள்ளேயிருந்த ஜனனியோ, ஆத்தா மகமாயி என் வேண்டுதலையை நிறைவேற்றிட்ட தாயி".உனக்கு வேண்டியபடியே பொங்கல் வைத்து, தீ மிதிக்கிறேன் ஆத்தானு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டாள்".
"வந்தவர்கள் எல்லாருக்கும் மதிய உணவை பரிமாறினர்".
"இரண்டு ஜோடிகளையும் ஒன்றாக உட்கார வைத்து இலை போட, நால்வரின் மன நிலையும்,நாலு விதமாக இருந்தது".
"வெற்றியின் முகமோ, எள்ளு அள்ளி போட்டால் வெடித்து சிதறி விடும் போல, அவ்வளவு கோவத்தோடு அய்யனார் கணக்காய் இருந்தான்".
"ஜனனியோ தன்னவன் ஆசைப்பட்ட வேலை கிடைத்ததை நினைத்து, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள்".
"அன்புவோ எதையும் காட்டிக்காமல் இயல்பாய் இருந்தான்".
"கீதாவோ,ஒரு வித பயத்தோடே அன்புவின் அருகில் உட்கார்ந்திருந்தாள்.தன்னருகில் உட்கார்ந்திருப்பவளை கடைக்கண்ணால் பார்த்த அன்பு, எதிர் பார்க்கவில்லை இல்லையா இப்படி ஒரு டுவிஸ்டை?, என்றான்".
"அவன் குரலை கேட்டு நிமிர்ந்து பார்க்க, மறக்கலைடி, எதையும் மறக்கலைனு பல்லை கடித்தவன், சாப்பிட்டு முடித்ததும் உங்க வீட்டிற்கு பின்னாடி உள்ள புங்க மரத்து கிட்ட வெய்ட் பண்ணுறேன், மரியாதையா வந்து சேருடி என்றவன், இலையில் பரிமாரிய உணவை சாப்பிட ஆரம்பித்தான்".
பாவம்,கீதாவிற்கு தான் சாதம் உள்ளே இறங்கவில்லை.ஜனனியோ, தனது இலையில் பரிமாறியதையெல்லாம் ரசித்து ருசித்து சாப்பிட்டாள்".
"சிறிது நிமிடங்கள் அவள் சாப்பிடுவதை பார்த்தவன், எவன் கூட வேண்டுமானாலும் முந்தி விரிக்க தயாராகணும் இல்லையா, நல்லா சாப்புடுடி என்று வெற்றி சொல்ல,அவன் சொல்லியதை கேட்டவளின் கண்ணில் நீர் திரண்டது".
"அதன் பிறகு அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை".
"அவளுக்கு எதிர்மாறாக வெற்றியோ வெளுத்து கட்டியவன், அன்புவை பார்த்து என்ன சகலை எழலாமா என்க, சரிங்க சகலை என்றான்".
"அவனுங்கள் இருவரும் எழுந்து செல்ல, தோழிகளும் இலையை மூடி விட்டு, இயந்தர கதியாய் எழுந்து போய் கையை கழுவி உள்ளே சென்றனர்".
"அன்பு சொல்லியது போலவே மரத்தின் கீழ் காத்திருக்க, பயந்து கொண்டே கீதாவும் வந்து சேர்ந்தாள்".
"சில அடி இடைவெளியில் கீழே குனிந்து நிற்பவளை, உச்சி முதல் பாதம் வரை ரசனையோடு பார்த்தவன்,பருவத்தில் பார்த்ததை விட அழகாய் தான் டி இருக்கனு அவளை நோக்கி செல்ல, பின்னாடியே நடந்து சென்றவளோ அங்கிருந்த சுவற்றில் இடித்து நின்றாள்".
"இனியும் நகர முடியாதென தெரிந்து கீழே குனிந்து நிற்க,வெளிநாட்டிற்கு போனவன் திரும்பி வரமாட்டானு நினைச்சிட்டியோ? என்றான்".
"அன்புவின் வார்த்தையை கேட்டவள் பதறி நிமிர, பின்ன?, இத்தனை வருஷமா எத்தனை ஃபோன் பண்ணிருப்பேன், ஏன் எடுக்கலை".
"ஏண்டி உன்னை காத்திருனு சொல்லிட்டு தானேடி போனேன்?, பிறகு எப்படி உங்க வீட்டில் உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாமென்று அவள் கழுத்தை பிடிக்க, நான் தான் சம்மதம் சொல்லவில்லையே என்றாள்".
"ஐந்து வருடங்களுக்கு பின்னர், தன்னவளின் குரலை கேட்டவனுக்கு சில்லென்று இருந்தது".
"கழுத்தை பிடித்திருந்தவன் கையை தட்டி விட்டவள், என்னை விரும்புறேன், காத்திருனு சொல்லிட்டு, இன்னொருத்தி கூட நிச்சயம் பண்ண வந்தது நீங்களென்றாள்".
"ஓஓஓஓ.... அது நடந்துச்சா?".
"நடக்குமா?".
"ஏண்டி,நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து என்னை அண்ணனு கூப்பிட்டவள், எப்படி புருஷனா ஏற்றுக்கொள்ளுவாள்?".
"சொல்லுடி? "
சென்னை- மகாபலிபுரம்:
"தனக்குள் பெருமூச்சி விட்ட வசந்தி, கடவுளே, நான் அப்படி என்ன பாவம் பண்ணுனேன்?".
"எல்லாரையும் போல தானே குடும்ப வாழ்க்கையை சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்".
"அதில் எனக்கு மட்டும் ஏன் பொய்த்து போனது? என்றவாறே தன் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்க, போன் பேசி முடித்து விட்டு தேவியும் அங்கு வந்து சேர்ந்தார்".
"வசந்தி வசந்தி என்க, ம்ம் சொல்லு தேவி".
"அவர் போன காரியம் சக்சஸ் ஆகிட்டாம்டி".
"ஆனால் வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் என்க, அப்போ நாம இங்கையேவா இருப்பதென்று கேட்க, நோ நோ".
" நாளைக்கு நம்ம கடை விளம்பரத்தில் நடிக்க, மாடல்சுக்கு ஆடிஷன் இருக்குடி.நான் போயே ஆகணும் என்றவர், காலையிலே கிளம்பிடலாம் என்க, சரி வா.இப்பவே நேரம் ஆகிட்டு என்றபடியே ரூமிற்குள் சென்று இருவரும் படுத்து விட்டனர்".
"ஏன் தேவி, எனக்கு என்னமோ வீராவிற்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோயென்று தோணுதுடி".
"என்னாடி வசந்தி சொல்லுறனு தேவி பதற, ஆமா தேவி".
"என் உள் மனசு இதான் சொல்லிக்கிட்டு இருக்கு".
"வீரா இங்கு வர வாய்ப்பு இல்லை. அதனால் நீ ஆசைப்பட்ட போல, ஆதிராவிற்கும் நம்ப வீராவிற்கும் சீக்கிரம் திருமண ஏற்பாடு பண்ணுவது நல்லது".
"நீ சொல்லுறதும் சரி தான் வசந்தி".
"ஆதிரா இதே சென்னையில் படிக்கிறாள், ஆனால் நம்ப வீட்டிற்கு வரமாட்டுறாள்".
"நாம தான் போய் பார்க்குறோம், ஒரு வேளை மேகலா எதாவது சொல்லிருக்கலாம், கல்யாணத்திற்கு முன்பு அடிக்கடி அத்தை வீட்டிற்கு போகக்கூடாது என்று, அதனால் தான் வரமாட்டுறாள் போலடி".
"என் அண்ணன் பொண்ணு தான் எனக்கு மருமகளா வரணும்".
"இந்த சிம்ஹன் குடும்பத்துக்கு ஏத்த மருமகள் ஆதிரா தான்".
"நடுவில் யாரோ ஒரு அன்னக்காவடி நாய் என் பையன் வாழ்க்கையில் குறுக்கே வந்தால், நான் விட்டுருவேனா?".
"நெவர்".
"ஒரு வேளை என் அண்ணனுக்கு பொண்ணு இல்லாமல் இருந்திருந்தால், அப்போ வேண்டுமானால் வேற ஒருத்தியை பற்றி யோசிக்க வாய்ப்பு இருந்திருக்கும்".
"அந்த கடவுளே அதுக்கும் எனக்கு வழி செஞ்சிட்டாரு".
"எவ்வளவு பெரிய சொத்துக்கு முதலாளியா ஆகப்போறவள், இன்னும் அவள் அம்மா போலவே எளிமையா இருக்காள் பாறேன்".
"அந்த குணம் அவள் கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது வசந்தி என்று தனது அண்ணன் மகளைப்பற்றி தேவி சொல்ல, ஏற்கெனவே கேட்ட விஷயமாக இருந்தாலும், வசந்தியும் தோழி சொல்வதை புதிதாய் கேட்பது போல் கேட்டுக்கொண்டார்".
சென்னை கே.எம்.சி.மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல்.
"தனது அம்மாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரா, ஜன்னல் வழியாக ரோட்டில் போகும் வாகனத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்".
"அவள் இலங்கையில் இருந்து சென்னைக்கு படிக்க வந்து,நான்கு வருடம் ஆகப்போகின்றது".
"எந்த சூழலில் இங்கு வந்தாள் என்பது ஆதுக்கும், ஆதிராவிற்கு மட்டும் தான் தெரியும்".
"மேகலாவும் எத்தனையோ முறை மகளை கெஞ்சி பார்த்து விட்டார். ஒரு முறை வந்து முகத்தை காட்டேன்டி என்று,அதற்கு ஆதிராவோ, படித்து முடித்த பிறகு தான் வருவேனென்று உறுதியாக சொல்லி விட்டாள்".
"அப்பொழுது அவள் செல்ஃ போனிற்கு கால் வரும் ரிங் டோன் சத்தம் கேட்டு, டேபிள் மேல் இருக்கும் ஃபோனை எடுத்துப் பார்க்க, அதில் வந்து பெயரை பார்த்து புருவத்தை சுருக்கியவள்,அட்டென்ட் பண்ணி ஹலோ அங்கிள், சொல்லுங்க என்றாள்".
"அவர் சொன்ன விஷயத்தை கேட்டவள், அப்படியா உடனே பார்க்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு, தனது லேப்டாப்பை திறந்தவள்,டேட்டா கார்டு போட்டு ஆன் பண்ணினாள்".
"பின்னர் மெயில் பாக்ஸை திறந்து பார்க்க, அதில் ஏகப்பட்ட மெயில்கள் வந்து குவிந்து போய் கிடந்தது".
"கடந்த ஒரு வாரமாக எக்ஸாம் நடந்து கொண்டிருப்பதால், அவளின் பர்சனல் மெயிலை பார்க்க முடியவில்லை".
"பின்னர் அங்கிள் சொன்ன மெயிலை ஓப்பன் பண்ணி படித்து முடித்தவள், அதற்கு பதில் அனுப்பி விட்டு, ஷட்டவுன் பண்ணியவளின் சிந்தனை எங்கெங்கோ சென்றது".
"உங்களை பார்க்கும் போது எதிர்பாராத உச்சத்தில் இருப்பேனென்று ஃபோனில் இருக்கும் உருவத்தை பார்த்து சொல்லிக்கொண்டவள், படிக்கும் வேலையை பார்க்க தொடங்கினாள்".
"நேரம் சென்று கொண்டிருந்தது. படிப்பில் மூழ்கியிருந்தவளை கதவு தட்டும் சத்தம் திசை திருப்ப, எழுந்து போய் கதவை திறக்க, அங்கே அவளின் ஒரே தோழியான ரியா நின்றிருந்தாள்".
"ரியாவின் முகமோ எதுவோ சரியில்லை என்பதை உணர்த்த, சரி இப்பொழுது தோழியிடம் ஏதும் கேட்க வேண்டாம் என்று ஆதிராவும் அமைதியாகிவிட்டாள்".
"உள்ளே வந்து பெட்டின் மேல் படுத்த ரியாவோ, சத்தமின்றி அழுவது தெரிந்தது".
"அழுது முடித்து அவளே சொல்லட்டும் என்று ஆதிராவும் இருந்தாள்".