• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 17, 2025
Messages
74
அதேபோல் வளவனின் நண்பர்களும்
அவன் தங்கை திருமணத்திற்கு வந்தார்கள்.

மேடையில் இருக்கும் பூங்குன்றனை,
வளவனின் ஒரு நண்பன்
பார்த்ததும், அதிர்ச்சியாகி வளவனிடம் போய் பூங்குன்றன் பற்றி கேட்டான்.

வளவனும் " ம்ம், இவர் தான் என் தங்கச்சி மாப்பிள்ளை" சொல்லி விட்டு,
வளவன் "மாப்பிள்ளை தான், கருடப் பார்வை நாளிதழில் இவர் முக்கியமானவராம் , இன்று இந்த திருமணம் பற்றி சிறப்பு செய்தியாக அந்த நாளிதழ் போட்டுள்ளது" என்று தன் மாப்பிள்ளை பற்றி பெருமையாக சொல்ல,

அந்த நண்பன் 'அய்யோ இவர் தான் மாப்பிள்ளை என்றால், அன்று நாளிதழ் அலுவலகத்தில் நான் தான் வளவன் கட்சி தலைவர் பிறந்தநாளுக்கு சாதி பெருமை பேசும் வரிகளை போடச் சொன்னேன் என்றும் அதான் அதைப் போட முடியாது என்றும் சாதி பெருமைகள் இல்லாத பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தி முன் பக்கம் போடலாம் என்று பூங்குன்றன் சொன்ன உண்மையும் தெரிந்து விடும். மேலும் வளவன், தலைவரிடம் கெட்ட பெயர் வாங்கி கொடுத்தவனை சும்மா விட மாட்டேன் என்று இன்னும் கோபத்தில் இருக்கிறான். இந்த தவறுக்கு நான் தான் காரணம் என்ற உண்மை தெரிந்தால் என்னை கொன்றே விடுவான் ' என்று மனதிற்குள் பயந்தான். ' இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும் போது, அவனுக்கு பூங்குன்றனைப் பற்றி வளவனிடம் தப்பாக சொல்லி விட்டால், நாம் தப்பிக்கலாம் ' என்று நினைக்கும் போது,

வளவன் " என்னடா, என் மாப்பிள்ளை பற்றி பெருமையாக சொன்னதும், அப்படியே மெய் மறந்து போய் நிற்கிற...!" என்று கேட்க,

அந்த நண்பன் " அன்று உன் தலைவர் பிறந்தநாளுக்கு முன் பக்கத்தில் வாழ்த்து செய்தி போட முடியாது என்று சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்க,

சிரித்து கொண்டு இருந்த வளவனின் முகம் சினந்து போய் " அதை எப்படி மறப்பேன்?" என்று சொல்ல,

அந்த நண்பன் " அதைப் போட முடியாது என்று சொன்ன ஆள் இங்கே இருக்கிறார்" என்று சொல்ல,

வளவன், ஆக்ரோஷமாக " இங்கேயா?
எங்கே, அவனைக் காட்டு, எவ்வளவு தைரியம் இருந்தால் இங்கேயே வந்திருப்பான்" என்று அனலாக பேசினான்.

அந்த நண்பன் " அவர் யாராக இருந்தாலும் சண்டை போடுவியா?" என்று கேட்க,

வளவன் " அவன் யாராக இருந்தால் என்ன?" என்று கோபம் குறையாமல் சொன்னான்.

அந்த நண்பன் " அவன் உன் தங்கச்சி கணவராக இருந்தால்.?" என்று கேட்க,

அதைக் கேட்டு வளவன் அதிர்ச்சியில்,
"என்ன சொ...ன்ன...! " என்று வார்த்தைகள் வராமல் தடுமாறினான்.

அந்த நண்பன் " ஆம் அது உன் மாப்பிள்ளை பூங்குன்றன் தான்" என்றான்.

வளவன் இதைக் கேட்டு " நான் நம்ப மாட்டேன்" என்று சொல்ல, அந்த நண்பன் " சந்தேகம் இருந்தால் நீயே உன் மாப்பிள்ளையிடம் போய் கேள்.
என் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை முன் பக்கத்தில் போட முடியாது என்று சொன்னீர்களா" என்று கேள் என்றான்.

அதைக் கேட்டதும் உடனே மேடைக்கு போனான் வளவன்

அங்கே போய் பூங்குன்றனிடம் " தலைவர் பிறந்தநாள் வாழ்த்து செய்தி சம்பவத்தைப் பற்றி கோபமாக கேட்பது போல் கேட்க"

பூங்குன்றனும் அன்றைய நிகழ்வை நினைத்து பார்த்து விட்டு" ஆம், நான் தான் அதை முன் பக்கத்தில் போட முடியாது என்று சொன்னேன், மேலும் அதில் சாதிப் பெருமை இருந்தது , அதான் போட முடியாது என்று சொன்னேன்" என்று சொன்னதை வளவன் காதில் வாங்காமல், பூங்குன்றன், ஆம் நான் தான் என்று சொன்னது மட்டும் தான் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

வளவனிடம் "என்ன அண்ணா?,
எதுவும் பிரச்சினையா?"என்று குழலி கேட்க,

தங்கச்சியின் குரலால், மாப்பிள்ளை சொன்ன அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து" ஒன்றும் இல்லை டா பாப்பா. என் நண்பர்கள் வந்து இருக்காங்க. அவங்க இங்கே மேடைக்கு வர தயங்குறாங்க "என்று சொல்ல,

" எதற்காக அண்ணா, அவர்கள் தயங்க வேண்டும்?" என்று குழலி கேட்க, வளவன்" மாப்பிள்ளை வேலை செய்யும் அலுவலகத்தில், மாப்பிள்ளை கூட என் நண்பர்கள் ஏதோ ஒரு மனக் கசப்பான சம்பவம் ஒன்று நடந்தது அதான்..." என்று பேச்சை மாற்றினான்.

பூங்குன்றன், நடப்பதைப் பார்த்து விட்டு, " அதனால் என்ன மச்சான், நான் அதை அன்றே மறந்து விட்டேன்.
அவர்களை மேடைக்கு வரச் சொல்லுங்கள் " என்று சொன்ன பூங்குன்றனின் பெருந்தன்மை, வளவனுக்கு பூங்குன்றன் மீது இருக்கும் கோபத்தால் அது தெரியவில்லை.

வளவனும் தன் நண்பர்களை மேடைக்கு அழைத்து வந்தான்.
பூங்குன்றன் அனைவரையும்" வாங்க வாங்க" என்று சிரித்த முகத்துடன் வரவேற்றான்.

வளவனிடம் பூங்குன்றனைப் பற்றி தப்பாக சொன்ன நண்பன் ' அப்பாடா
நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.அதே நேரத்தில் பூங்குன்றன் பற்றி வளவனும் தப்பா நினைக்க வில்லை என்று ' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே, பூங்குன்றன் அருகே போய் பூங்குன்றனிடம்" அன்று நடந்த தவறுக்கு மன்னிக்கவும்" என்று சொல்ல,

பூங்குன்றன் " நான் அதை அன்றே மறந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு அனைவருடனும் ஒரு புகைப்படம் எடுத்தான்.

அடுத்து கருடப் பார்வை நாளிதழ் நிறுவனர் மற்றும் முக்கிய அலுவலர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

குழலி சித்தி " நல்ல நேரம் முடிவதற்குள், பொன்னு மாப்பிள்ளையை மறு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என்று சொல்ல,

சுசீலாவும்" ஆமாம் ஆமாம் " என்று சொல்லி விட்டு அதற்கான வேலையில் இறங்கினார்.

மறு வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் குழலி வீட்டுக்கு வரும் போது, குழலிக்கு தங்கை முறை உள்ள ஒரு பெண், பொன்னு மாப்பிள்ளைக்கு
பாத பூஜை செய்து விட்டு, ஆரத்தி எடுக்கும் போது,
அங்கே இருந்த சில பெண்கள்,
ஆரத்தி எடுக்கும் பெண்ணிடம் " உங்கள் மாமாவிடம், தட்சினை வாங்கி கோ, மறந்து விடாதே" என்று சொல்ல,
ஆரத்தி எடுக்கும் பெண் " நான் கேட்காமலேயே மாமா கொடுப்பார்"என்று சிரித்துக் கொண்டே சொல்ல, பூங்குன்றனும் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தான்.

மறுநாள், பூங்குன்றன் வீட்டுக்கு,
பூங்குன்றன் - குழலி தம்பதியராக புறப்பட தயாராக இருக்க, வீட்டு வாசலில் ஒரு வேன் வந்தது.

அதில் இருந்து இறங்கிய ஒருவர், சுந்தரத்திடம் போய்," பர்னிச்சர் கடையில் இருந்து வருகிறோம்" என்று சொன்னதும், சுந்தரம் " சொன்ன படி சரியான நேரத்திற்கு சீர் வரிசை பொருட்களை உங்கள் கடையில் இருந்து அனுப்பி விட்டார்களே.!" என்று பாராட்டி விட்டு,
"இருங்க, இப்ப என் மகளும் மருமகனும் கிளம்பி விடுவார்கள்.அவர்களுடன் சென்று அவர்கள் வீட்டில் இந்த சீர் வரிசையை இறக்க வேண்டும் " என்று சொல்லும் போது அங்கே பூங்குன்றன் வர, " என்ன மாமா, வேன்?" என்று கேட்க,

சுந்தரம், பூங்குன்றன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்
அமைதியாக இருந்தார்.

அப்போது அங்கே குழலியும் வர, "வேனில் என்னதுப்பா?" என்று கேட்டதும், பூங்குன்றன் " நானும் அதைத் தான் கேட்டேன், ஆனால் உங்கள் அப்பா, எந்த பதிலும் சொல்லவில்லை" என்று சொல்லும் போது,

சுந்தரம்," உனக்கு சீர் வரிசை பொருட்கள் மா" என்று குழலியிடம் சொல்ல, அதைக் கேட்டு குழலி சிரித்த முகத்துடன் இருக்க, பூங்குன்றன் சத்தமாக " எனக்கு தான் சீர் வரிசை எதுவும் பிடிக்காது என்று சொன்னேனே? பிறகு ஏன் " என்று கேட்க,

சுந்தரம் எங்கயோ பார்த்த படி, "இது எங்கள் கடமை" சொல்ல, " எது மாமா?" என்று மீண்டும் பூங்குன்றன் கேட்க, சுந்தரம் சரியாக பதில் சொல்லாமல் வீட்டுக்குள் சென்றார்.

குழலியும், நேற்றிலிருந்து அப்பா, தன் அன்பான கணவரிடம் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வது ஏன் என்று புரியாமல், குழப்பத்தில் இருக்க,

அதேபோல் பூங்குன்றனும் ' ஏன் மாமா நேற்றிலிருந்து நம்மிடம் சரியாக பேச வில்லை ?' என்று யோசித்து பார்த்தான்.' ஒரு வேளை அவர் மகள் அவரை விட்டு பிரிவதால் உள்ள வருத்தமாக இருக்கலாம் ' என்று நினைத்துக் கொண்டான்.

குழலி அம்மா வந்து பூங்குன்றனிடம்
பவ்யமாக" உங்களுக்கு சீர் வரிசை பிடிக்காது மருமகனே,ஆனால்..."
என்று இழுக்க, பூங்குன்றன்" ஊர்ல உள்ளவர்கள் ஏதாவது சொல்வார்கள், என்று சொல்ல வருகிறீர்களா?" என்று கேட்க,

குழலி அம்மா" ஆம், அதான் " என்றார்.

"என் உறவுகள் மற்றும் எங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் என் கொள்கை தெரியும். அதனால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.

குழலியிடம் அவள் அம்மா " நீ தான் மாப்பிள்ளைக்கிட்ட பக்குவமாக பேசி இதை நீ வாழப்போகிற வீட்டுக்கு கொண்டு போக வைக்க வேண்டும், அது தான் உங்க அப்பாவுக்கும் ஆசை " என்று சொல்ல, குழலி, " ம்ம் " என்று சொல்லி விட்டு,பூங்குன்றனின் கொள்கைகளை நினைத்து பார்த்தாள்.

'நேற்று முதலிரவில் கூட என் அனுமதி இல்லாமல் என்னைத் தொடவில்லை.மேலும் பெண் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்க கூடாது என்ற அவரின் கொள்கையை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள வில்லை?' என்று யோசித்து பார்த்தாள்.

' கணவரும் நல்லவர் தான். நம் அப்பா அம்மாவும் நல்ல பாசமானவர்கள் தான், என் கணவரின் கொள்கையையும் பெற்றோர்களின் கடமை என்று சொல்லும் இந்த சீர் வரிசை பிரச்சினையையும் எப்படி தீர்த்து வைப்பது?' என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

' சரி அண்ணனிடம் ஒரு யோசனை கேட்போம் ' என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, வளவனிடம் சென்று தன் "இருதலைக் கொல்லியாக" இருப்பதைச் சொல்ல,

வளவன் ஏற்கனவே பூங்குன்றன் மேல் கோபத்தில் இருக்க, தங்கச்சி கேட்டதும், " உன் மாப்பிள்ளை கடைசி வரை இந்த கொள்கையில் இருக்க முடியுமா?" என்று கேட்டு விட்டு, " ஏன் அவர் அண்ணன் திருமணம் நடக்கும் போது, அவர் அண்ணன் வரதட்சணை வாங்கியதை இவர் தடுத்தாரா? அல்லது அவர் அண்ணி வீட்டில் இருந்து வந்த சீர்வரிசையை வே
ண்டாம் என்று சொன்னாரா" என்று கோபத்தில் கேட்க,

குழலி அண்ணன் சொன்னதைக் கேட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.

தொடரும்,
 
Member
Joined
Jun 3, 2025
Messages
92

குழலி தலை உருளுது
 
Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top