• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
37
காரில் அமர்ந்து இருவரும் தங்கள் காதலை பரிமாறிக் கொண்டு இருக்க...

வீட்டிற்குள் இருந்து மறுபடியும் அலறல் சத்தம் கேட்டது அதுவும் இந்த முறை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க ..

ஏய் புவி என்னடி வீட்டுக்குள்ள இவ்வளவு சத்தமா இருக்கு அதுவும் யாரு இப்படி கத்துறாங்க... என்று புவனாவிடம் கேட்டுக்கொண்டே காரில் இருந்து இறங்கியவனை...

பின் சென்று கட்டிக் கொண்டவள்... ரிஷு உனக்கு நிஜமாவே என்னை பிடித்து இருக்கிறதா.. இல்லை நானே வந்து சொன்னதால் நீயும் ஓகே சொல்கிறாயா என்று பின்னால் இருந்து அவனை அணைத்துக் கொண்டே.. அவள் பயத்தோடு கேட்க அவளின் இதயத்துடிப்பை தன் முதுகில் உணர்ந்தவன்...

அப்படியே திரும்பி தன் நெஞ்சுக்குள் அவளை புதைத்துக் கொண்டு

இதுவரைக்கும் நான் உன்னை மட்டும் இல்லை சஞ்சு, மிதுனா இருவரையும் கூட நல்ல தோழிகளாக தான் பார்த்தேன். சிறிது நாட்களாக தான் உன் பார்வையில் சில நேரம் வேறுபாடை உணர்வேன். ஆனால் அது நான் உணர்ந்தது உண்மையா பொய்யா என்று தெரியாத அளவுக்கு நீ மாற்றி விடுவாய்..

அப்போது என் மனமும் தடுமாறும் தான் ஆனால்.. என்னால் நீங்கள் யாரும் என்னால் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து கொள்வேன். அது மட்டும் இல்லாமல் டெய்லியும் நம்ம கிளம்பி போறப்ப அந்த பக்கத்து வீட்ல இருக்க பாட்டி நம்மளை திட்டும் போது அதைப்பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் நீங்கள் வரும் பொழுது அந்த நம்பிக்கையை உடைக்க கூடாது என்று தான் நான் நினைத்தேன்.

இப்பவும் சொல்கிறேன் உங்கள் மூவரின் மீதும் எனக்கு அளவு கடந்த பாசம் மரியாதையும் இருக்கு.. ஆனால் இப்ப நீ என்னிடம் காதலை சொல்லிய பிறகு இந்த நொடி முதல் என்னால் உன்னை வெறும் தோழியாக மட்டும் பார்க்க கண்டிப்பா முடியாதுடி... ஏனென்றால் எனக்குள்ளும் என்னையே அறியாமல் சிறு சலனம் உன் மீது இருக்கிறது அது உண்மை தான்.

அதே சமயம் எனக்கு உன்னை முழுதாக என்னுடைய எல்லாமும் ஆக நான் நினைப்பதற்கு கண்டிப்பாக இந்த இடைவெளி நமக்கு தேவைப்படும். நம் காதலை வளர்க்கும் என்று நினைக்கிறேன். மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே. எனக்கு உன்னை பிடிக்கும். அதாவது டியூப் லைட் ஆக இருந்தாலும்.. அது தான் சரியான நேரத்தில் எரிய வைத்து விட்டாயே.. போதும் டி நம்ம இருவரும் வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. உள்ளே போகலாம் வா என்று கூப்பிட்டான் ரிஷ்வந்த்.

ரிஷு இப்போதைக்கு நம்மளுடைய காதல் நமக்குள் மட்டுமே இருக்கட்டும்... வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.. உள்ளே இருக்கும் குட்டிச்சாத்தான் இரண்டுக்கும் நான் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன் இப்போது வேண்டாம் என்று சொன்னாள் புவனா.

உத்தரவு மகாராணி என்று இடை வரை குனிந்து.. சொன்னவன்.. அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து அவளின் கழுத்தில் அழகாக இதழால் ஒரு கடி கடித்து விட்டு... வாடி போகலாம் என்று உள்ளே அழைத்து செல்ல...

வீட்டிற்குள் இருந்து மறுபடியும் அலறல் சத்தம் கேட்டது.

ஏய் யாரடி இது இப்படி கத்துக்கிட்டே இருக்காங்க என்று கேட்டான் ரிஷ்வந்த்.

அது .. வா.. என்று ராகம் போட்டு இழுத்தவள்... உன்ன போல ஒரு அப்பாவி அடிமை மாட்டி இருக்கும் அது தான் வச்சு செய்வார்களா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருவரும் உள்ளே செல்ல..

தன் ஒரு காதில் கைகளை வைத்து அடைத்துக் கொண்டும் மற்றொரு காதில் போனை வைத்துக்கொண்டும்.. கொஞ்சம் இருங்கள் நான் வெளியே வந்து கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தார் லிங்கம்.

வெளியில் வந்தவர் புவனா வருவதை பார்த்து விட்டு, போனில் இருப்பவரிடம் ஒரு நிமிடம் லைனில் இருங்கள் என்று சொல்லி விட்டு,

போச்சு நீயும் வந்து சேர்ந்துட்டியாடா..... இன்று என் மகன் பாடு பெரும்பாடு தான் என்று சொல்லிக் கொண்டே ... ரிஷ்வந்த் தோளில் தட்டி உள்ளே செல்லு பா என்று சொல்லியவர், போன் பேசிக்கொண்டு வெளியே சென்றார்.

அவனும் சிரித்துக் கொண்டே ஏய் இது சஞ்சு அப்பா லிங்கம் தானே என்று கேட்டான் புவனாவை பார்த்து.

அவளும் ஆமாம் என்று தலை அசைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அப்போ உள்ள அடிவாங்கிக் கொண்டு இருக்கிறது உதயா வா என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான் ரிஷ்வந்த்.

இல்லை இல்லை உள்ளே அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது சரண் அண்ணன் என்று சொல்லி கொண்டே போனவளை நிறுத்தி..

லிங்கம் மாமா சொன்னதை கேட்டு ஒருவேளை உதயாவுக்கு தான் அடி விழுகிறது என்று நினைத்தேன் என்று சொன்னான்.

உதயா அண்ணாவாக இருந்தால் இந்த அளவுக்கு பீல் பண்ண மாட்டாரு... ஏனென்றால் அண்ணாவிடம் நாங்கள் எல்லோருமே பயந்து தான் இருப்போம்.

எங்க எல்லாருக்கும் அடிமை சரண் தான். அதே போல் உதயா அண்ணா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. வந்து இருந்தால் இந்நேரம் சரண் எப்போவோ தப்பித்து இருப்பான். அது மட்டும் இல்லாமல் உதயா அண்ணா இருந்தா கொஞ்சம் வீடு அமைதியாக தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே மாடிக்கு சென்றார்கள். மாடிக்கு சென்றதுமே பெரிய ஹாலில் அனைத்து பெரியவர்களும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க...

சிறியவர்கள் எல்லாம் அதற்கும் மேலே உள்ள மொட்டை மாடியில் சத்தம் கேட்டது.

புவனாவை பார்த்த ஜெயஸ்ரீ வாடா.. எங்க ரொம்ப நேரம் ஆச்சு நீங்க ரெண்டு பேரும் வருவதற்கு என்று கேட்டுக் கொண்டே.. ரிஷ்வந்திடம் குடிப்பதற்கு கலக்கி வைத்து இருந்த நன்னாரி சர்பத்தை எடுத்து நீட்டி குடிப்பா என்று சொல்லி விட்டு தன் மகள் கையிலும் ஒரு டம்ளரை கொடுத்தார்.

ரிஸ்வந்த் எப்படி இருக்க டா என்று.. மீனாட்சியும் கேட்க..

நல்லா இருக்கேன் ஆன்ட்டி என்று சொன்னான்.

அதே போல் மற்ற அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் நலமா என்று கேட்டான்.

அப்போது ஷங்கர் எங்களுக்கு என்னப்பா எங்களுக்கு தொல்லையா இருந்த மூணு முப்பெரும் தேவியாரையும் நீ ஒருவனாக சமாளிக்கிற... அப்புறம் என்ன??.. எங்கள் மகன்கள் புண்ணியத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக இருக்கோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே..
புவனா சண்டைக்கு ரெடியாக.. அங்கு மாடிக்கு உதயாவும் லிங்கமும் மேலே வர..

புவனா மிகவும் நல்ல பிள்ளையாக ஓடி சென்று அண்ணா என்று கட்டிக்கொண்டாள்.

என்ன டா நன்றாக இருக்கிறாயா... என்று கேட்டு விட்டு தன் தங்கையின் தலையில் செல்லமாக முட்டினான்.

ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா என்று சொன்னாள் புவனா.

அப்புறம் எதுக்கு டா கண்கள் எல்லாம் இவ்வளவு சிவந்து போயிருக்கு எதற்காக அழுதாய் என்று கேட்டு கொண்டே...

ரிஷ்வந்தை பார்த்து நீங்கள் இருவரும் தான் இப்போது வந்தீர்கள் என்று அப்பா சொன்னார். ஏன் ரிஷ்வந்த் பாப்பா எழுதி இருக்கா என்று கேட்கவும் இவ்வளவு நேரமும் அவர்கள் இருவரின் பாசத்தில் மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்த ரிஷ்வத்துக்கு... அப்போது குடித்துக் கொண்டு இருந்த சர்பத் புரையேற...

ஏன் உதயா இப்படி வந்ததும் வராமல் பாவம் ரிஸ்வந்தை போட்டு ஏன் டா கிளற.. அவனே உன்னோட மூணு தங்கச்சிகளிடமும் படாத பாடு பட்டு கொண்டு இருப்பான் என்று சொல்லி கொண்டே ரிஷ்வந் தலையை தட்டி விட்டு... குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.

அதை வாங்கி குடித்து விட்டு, பரவால்ல ஆன்ட்டி தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு தண்ணீரை குடித்து விட்டு சொம்பை ஜெயஸ்ரீ இடம் கொடுத்து விட்டு, அது ஒன்னும் இல்லை ப்ரோ புவனாவிற்கு நாளையில் இருந்து வேற பிரான்ச் போட்டு இருக்காங்க.. தன் தோழிகளை எப்படி பிரிவது என்று வருத்தம் தான் என்று மிகவும் இயல்பாகக் கூறினான் ஆனாலும் ஏனோ அவனுக்குள் ஒரு சிறு நடுக்கம் வந்தது..

அப்போது கவிதா... ரிஸ்வந்த் அது என்ன ஆன்ட்டி ப்ரோ இங்கிலீஷ்ல கூப்பிட்டு இருக்க... அத்தை என்று அழகா தமிழ்ல சொல்லு. அப்புறம் உதயா உனக்கு மச்சான் ப்ரோ இல்ல... என்று சொன்னார்.

மனதிற்குள் லேசா பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சரிங்க அத்தை என்று சொல்லி விட்டு..‌

உதயாவை பார்த்து மச்சான் வாருங்கள் மாடியில் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மறுபடியும் சரண் கத்தும் சத்தம் கேட்டது.

இப்போது புவனா உண்மையாகவே உதயாவை பார்த்து பயந்து... அண்ணா ப்ளீஸ் எதுவும் சொல்லாதீர்கள். அண்ணா விளையாட்டுக்குத் தான் விளையாண்டு கொண்டு இருப்பார்கள் என்று கண்களால் கெஞ்சிக் கொண்டே சொன்னாள்.

ஏய் வாலு நீங்க மூன்று பேரும் ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்காதீங்க... ஆனாலும் என் தம்பி ரொம்ப பாவம் வாங்க என்று சொல்லிக் கொண்டே...

மூவரும் மாடியை நோக்கி போனார்கள்.

அங்கே..

ஒரு பக்கத்திற்கு மட்டும் குளிர்ச்சியாக இருக்க கூலிங் சீட் போடப்பட்டு இருந்தது.

அதற்கு கீழே ஒரு சீலிங் ஃபேன் மட்டும் ஓடிக் கொண்டு இருந்தது.

அதற்கு கீழே மூன்று பெண்களும் படுப்பதற்காக பெரிய மெத்தை ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது அதில் தான்.

சரணை போட்டு மிதுனா, சஞ்சனா, லீனா மூன்று பேரும்... அமுக்கி தலையை போட்டு பிய்த்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களோடு போராடிக் கொண்டே உதயா அண்ணா வந்துட்டாங்க இறங்குங்கடி என்று கத்தினான்.

போடா தடிமாடு முன்னாடியும் இதை சொல்லி
தானே ஏமாற்றினாய்...‌ என்று சொல்லிக்கொண்டே அவனை போட்டு நெஞ்சில் அடித்தால் சஞ்சனா.

அப்போது உதயா...
 
Member
Joined
Jun 26, 2025
Messages
37
இங்க என்ன நடக்கிறது என்று வேகமாக கேட்டான்.

அவன் குரலில் மூன்று பெண்களும் அமைதியாக எழுந்து நின்றார்கள்.

சரணும் அமைதியாக எழுந்து அமர்ந்தவன்... தலை குனிந்து அமர்ந்து இருந்தான்.

சரண் அருகில் அமர்ந்து கொண்டு... ரிஷ்வந்த் மற்றும் தன் தங்கைகள் அனைவரையும் அமர சொன்னான்.

என்ன டா பாப்பா எப்படி இருக்கீங்க.. என்று கேட்டான்.

சஞ்சனாவும் மிதுனாவும் .. நல்லா இருக்கோம் அண்ணா என்று சொன்னார்கள்.

சரி இப்ப என்ன சரனை போட்டு இந்த அடி அடித்தால் நாளைக்கு உங்க ஆபீஸ்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கலாம் என்று சொல்ல போறாங்களா... அப்படி சொல்வார்கள் என்றால் சொல்லுங்கள் நானும் சேர்ந்து இரண்டு அடி போடுகிறேன் என்று சொல்லி கொண்டே சரணை பார்த்தான் உதயா.

இவ்வளவு நேரமும் எங்கே அண்ணன் தன்னை திட்டுவானோ என்ற பயத்தில் தலை குனிந்து இருந்தவன்... அவனின் பேச்சில் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்து..

ஏன்... இல்ல ஏன் இப்படி அண்ணா என்பது போல் கண்களாலேயே கேட்டான்...

அவனின் முகபாவனைகளை அனைத்தையும் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க..

அனைவரிடமும் இருந்தும் அழகான ஒரு சிரிப்பொலி அங்கே எழுந்து அடங்கியது...

அதே நேரம்..

ஆபீஸில் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும்...

புதிய ப்ராஜெக்ட் பற்றியும்... முப்பெரும் தேவியர்கள் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தனர்..

அப்போது எஸ்டி தன் அண்ணனிடம்....
அண்ணா என்று அழைத்தான்...

என்ன கேட்கப் போகிறான்.... சொல்லவா.....

இணைந்திருங்கள்
சொல்லவா ... வேண்டாமா...

எம் டி.. மிதுன் தேவ்.

எஸ் டி... சனாதன் தேவ்.

ஆர் டி... ருத்ரதேவ்...

கே டி... கர்ணா தேவ்

எல் டி ... லிபின் தேவ்

என்னோட ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்காக
பஞ்சபாண்டவர்களின் பெயர்களை முன்னமே சொல்லிட்டேன்
...

ஐவரையும் கதையின் போக்கில் பார்ப்போம்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top