- Thread Author
- #1
87. சனாதன் சஞ்சனாவை பார்ப்பதற்காக செல்லும் பெண்கள்...
அவர்களைக் காப்பாற்ற வழிநடத்தும் ஜேம்ஸ்...
தன் தம்பிகளை பார்த்து மிதுனாவை கடத்தி சென்றது... அங்கு வைத்து நடந்த அனைத்து விஷயங்களையும் பொறுமையாக எடுத்துச் சொன்னான் மிதுன்.
அதே போல் திரும்பி வரும் போது சஞ்சனாவை ஒரு கார் இடிக்க வந்ததையும் சொல்லி முடித்து விட்டு...
இப்போது டிரைவர் ஜேம்சை பார்த்து...
ஜேம்ஸ் சனாதனும், சஞ்சனாவும் நலமாக தான் இருக்கிறார்கள்?.. இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டான் மிதுன்...?.
ஜேம்ஸ் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு....
மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.... CP எனக்கு உங்களிடம் சொல்ல அனுமதி தரவில்லை என்று சொன்னான்.
ருத்ரா, கர்ணா, லிபின் மூவருக்கும் என்ன நடக்கிறது என்று சரியாக புரியவில்லை என்றாலும் அந்த டிரைவர் சொன்ன பதில் கோபம் வந்தது.
அதைவிட அதிகமாக மிதுனுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு, காலையில் தன் தம்பி சனாதன், ... ஹோம் மினிஸ்டர் மற்றும் சில உயர் அதிகாரிகளோடு உரையாடிக் கொண்டு இருக்கும் பொழுது அவனிடம் இருந்த தோரணை அனைத்தையும் மனதில் வைத்து உங்கள் CP யார் என்று கேட்டான்.( CP - commissioner of police in Singapore.)
(கமிஷனர் ஆப் போலீஸ் இன் ச சிங்கப்பூர்).
மிதுனின் அடக்கப்பட்ட கோபத்தில் விநாடிக்கும் குறைவாக அதிர்ந்தாலும்.. சாரி சார் அதை சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டு அமைதியாக காரை ஓட்டினான்.
மிதுனோ இப்போது வேறு விதமாக ஜேம்ஸிடம் பேசினான்.
ஏன் ஜேம்ஸ் நீ சொல்லவில்லை என்றால் உங்கள் CP என்று எனக்கு தெரியாதா என்ன என்று நக்கலாக கேட்டான் மிதுன்.
அதற்கு ஜேம்ஸ் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் தன்னுடைய கடமை கார் ஓட்டுவது மட்டுமே என்பது போல் அமைதியாக ரோட்டில் கவனத்தை வைத்து காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
சரி ஜேம்ஸ் நீ எதுவும் சொல்லவே வேண்டாம். ஆனால் இப்போது நீ எங்கள் அனைவரையும் எங்கே அழைத்துச் செல்கிறாய் என்று சொல்லலாம் இல்லையா!..?? அதை நாங்கள் தெரிந்து கொள்வதில் ஏதும் தவறு இல்லையே என்று கேட்டான் மிதுன்.
எதுவும் சொல்லாமல் சிறிது நேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த ஜேம்ஸ், .. சார் நாம் இப்போது சிட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கு தான் செல்கிறோம் என்று மட்டும் சொன்னான்.
ஹாஸ்பிடல் பெயர் சொல்லவும் யாருக்கு என்ன ஆயிற்று என்று பதறிப் போய் நான்கு பேருமே கேட்டனர்..
ஆனால் ஜேம்ஸ் அதற்குப் பிறகு வாயை திறக்கவில்லை... எப்படி கேட்டாலும் அவன் பதில் அமைதியாக மட்டுமே இருந்தது.
அதே நேரம்..
பாண்டவர் இல்லத்தில்..
வீட்டின் லேண்ட்லைன் நம்பருக்கு போன் வர அழகி வந்து அந்த போனை எடுப்பதற்குள் அறையில் இருக்கும் மற்றொரு போன் மூலம் சரோஜா அதை அட்டென்ட் செய்து ஹலோ என்று பேசினார்.
சரோஜா மாவின் குரல் கேட்கவும் அழகி வேறு எதுவும் பேசாமல் அமைதியாக சென்றாள்.
ஆனால் சில நொடிகளில் சரோஜா வேகமாக கூப்பிட்டார்... அழகி... மிதுனா என்று கத்திக் கூப்பிடவும் பயந்து கொண்டு... சமையல் கட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த மிதுனா, அழகி, இருவரும் வேகமாக சரோஜாவின் அறைக்கு செல்ல.. கவியால் வேகமாக நடக்க முடியவில்லை என்றாலும், ருத்ரா கவனிப்பில் வலி குறைவாக இருக்க என்னவோ ஏதோ என்று பதறி அவளும் மெதுவாக நடந்து சென்றாள்.
அங்கு அறையில் சரோஜா மா அழுது கொண்டு இருந்தார்.
மிதுனாவும் அழகியும் ஏன் என்று கேட்டுக் கொண்டு இருக்க... தன்னை சிறிது சமன்படுத்திக்கொண்டு இப்போ ஒரு போன் வந்தது அதில் சஞ்சனாவுக்கு ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டு விட்டதாகவும்... சனாதன் அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பதாகவும், சனாதனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாகவே அமர்ந்து இருப்பதாகவும் அதனால் தான் ஹாஸ்பிடலில் இருந்து யாரோ தகவல் தருவதாக சொல்லி போன் வந்தது என்று அழுதார்.
அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் மிதுனாவால் எதுவும் சொல்ல முடியாமல்.... ஏன் தனக்கொரு ஆபத்து என்ற பொழுது கூட கலங்காமல் ஜாலியாக இருந்தவள்... சஞ்சுவுக்கு விபத்து என்ற கேள்விப்பட்ட அந்த நிமிடம் என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாமல் அப்படியே நின்ற இடத்தில் அமர்ந்து விட்டாள்... ஆனால் அவள் கண்களில் இருந்து அருவி போல் கண்ணீர் மட்டும் கொட்டிக் கொண்டே இருந்தது.
சில நிமிடங்கள் என்ன செய்வது என்று யாருக்குமே புரியவில்லை. அந்த சூழ்நிலையில் அழகி தான் அனைவரையும் தேற்றி சமாதானப்படுத்தி காருக்கு அழைத்துச் சென்றாள்.
அழகியோ கவி உடல் நிலையை மனதில் வைத்து யோசனையோடு கவி நீயும், தாத்தா, அம்மாச்சி மூன்று பேரும் வீட்டிலேயே இருங்க நானும் சரோ அம்மாவும், மிதுனா மட்டும் ஹாஸ்பிடலுக்கு சென்று வருகிறோம் என்று சொல்ல..
இல்லை வேண்டாம் அழகி மனதில் ஏதோ தவறாக படுகிறது... தனித்தனியாக பிரிந்து இருக்க வேண்டாம்... அனைவரும் ஒன்றாகவே போகலாம் என்று சொல்லி விட்டு மிதுனா இப்ப இருக்குற நிலையில் கார் ஓட்ட வேண்டாம்.. அழகி நீ காரை எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல...
அழகி சென்று பார்க்க ருத்ரா கார் முன் பக்கமாக நிற்கவும், உள்ளே சென்று அந்த காரின் சாவியை எடுத்துக் கொண்டு வந்தவள், அந்த காரையை எடுத்துக் கொண்டு வந்தாள்.
வயதானாலும் என் மகளை நான் தூங்குவேன் என்று சொல்லி... காட்டிலும் மேட்டிலும் வேலை பார்த்து நல்ல திடகாத்திரமான உடம்பு என்பதால் சற்றும் யோசிக்காமல் வீல் சேரில் சரோஜாவை தூக்கி அமர வைத்து,.. காருக்கு தள்ளி கொண்டு சென்று காரில் ஏற்றி விட்டார் வீரா.
முத்தாயும் கவியை கைகளில் தாங்கி கொண்டு கூட்டிட்டு வந்தார். மிதுனாவின் கண்களில் கண்ணீரோடு காரில் ஏறி அமர்ந்தாள். ஆனால் அவள் சத்தம் போடவில்லை... அரட்டவில்லை... கண்களில் கண்ணீரும், உடல் அளவில் வெறும் கூடு போல் அமர்ந்து இருந்தாள் மிதுனா.
அழகி வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டே கர்ணாவிற்கு ஃபோன் செய்து விபரத்தை சொன்னாள்.
இங்கே ஜேம்ஸ் சொல்லாமல் கூட்டிக்கொண்டு செல்ல... அங்கு பெண்களுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்ற செய்தி கேட்ட உடனே காரை சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, கர்ணாவின் கையில் இருந்த போனை சட்டென்று வாங்கி அதில் பேசிக் கொண்டு இருந்த அழகியிடம்... மேடம் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள்.. நான் யார் என்று வீணான கேள்விகளை கேட்டு நேரத்தை வீணாக்காமல், நீங்கள் எந்த காரில் வந்து இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்டான். வாய் அவளிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாலும் போனில் ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு தன்னுடைய லேப்டாப்பை எடுத்து ககடவென சில வேலைகளை அதில் செய்து கொண்டு இருந்தான்.
ருத்ராவின் கார் என்று சொன்ன அடுத்த நொடி.. ஓ.. ஷிட் என்று தன் காலில் ஒரு முறை தட்டி விட்டு... காரை எடுத்ததில் இருந்து இதுவரை பிரேக் போட்டீர்களா என்று கேட்க, இல்லை என்று சொன்னாள்.
ஓகே வண்டியை மிகவும் நிதானமாக பொறுமையாக ஒட்டிக்கொண்டு வாருங்கள் பிரேக்கை ஒரு முறை கூட யூஸ் பண்ணிடாதீங்க என்று சொல்லி விட்டு, அதே சமயம் பணிக்காகாமல் தைரியமாக இருக்க வேண்டும். கவனமாக கேளுங்கள் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் பிரேக் மட்டும் நீங்கள் போடக்கூடாது. அதனால் ரோட்டில் மிகவும் கவனமாக கவனத்தை வைத்து ஓட்டுங்கள் போனை ப்ளூடூத்தில் கனெக்ட் செய்து கொள்ளுங்கள்... போனை எந்த காரணத்தை கொண்டும் கட் பண்ணிடாதீங்க... அப்படியே லைன்ல இருங்க உங்களுடைய லொகேஷன் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அவர்களுடைய கரெக்டான லொகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தான். அப்படியே நான்கு பேரிடம் சார் சுற்றிலும் கவனமாக உள்ளே இருந்தே வெளியே என்ன நடக்கிறது என்று கவனித்து பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொல்லிக் கொண்டே... அழகியின் லொகேஷனை கண்டுபிடித்தான்.
மேடம் நீங்கள் இருக்கும் லொகேஷனை நான் கண்டுபிடித்து விட்டேன். அருகில் வயதானவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் பயந்து விடக்கூடாது என்று சொல்ல..
அழகியும் ப்ளூடூத் இல் கனெக்ட் செய்து கொண்டு.. வண்டியை மிகவும் நிதானமாக ஓட்டிக்கொண்டு போனாள்.
சொல்லுங்க சார் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள் அழகி.
மேடம் நீங்கள் சென்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து சரியாக அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அம்மன் கோவில் உள்ளது... நீங்கள் அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு அனைவரும் பத்திரமாக இறங்கி கோவிலுக்குள் செல்லுங்கள் என்று சொன்னான்.
அதே போல் நீங்கள் கோவிலுக்குள் சென்ற உடனேயே உங்களிடம் .. உங்கள் பாதுகாப்புக்கு என்று சொல்லி ஐந்து பேர் வருவார்கள்.
அவர்கள் வந்ததும் அவர்களிடம் உங்களில் யார் ஜேம்ஸ் என்று மட்டும் கேளுங்கள்...
அதற்கு அவர்கள் ஐந்து பேரும் இணைந்து .. விரைவில் உங்கள் கஷ்டம் தீர்க்கப்படும் என்று சொன்னால் மட்டுமே அவர்கள் நம் ஆட்கள் என்று அர்த்தம்.
அதற்கு மாறாக நான் தான் ஜேம்ஸ் என்றோ, இல்லை வேறு விதமாகவும் ஏதேனும் சொல்லி உங்களை பாதுகாப்பதற்காக வந்து இருக்கிறோம் என்றோ, யாரேனும் ஏதேனும் சொன்னால் அதற்கு தகுந்தபடி நீங்கள் தான் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இக்கருணம் கொண்டும் போனை மட்டும் கட் பண்ணி விடாமல் கவனமாக இருங்கள் என்று சொன்னான்.
போனில் ஜேம்ஸ் சொல்லியதை கேட்டு அதன்படியே செய்து கொண்டு இருந்தாள் அழகி.
சரியாக ஜேம்ஸ் சொன்ன அம்மன் கோவிலும் வர அதன் அருகில் வண்டியை நிறுத்தியவள்... மெதுவாக தன் தாத்தாவிடம் திரும்பி சஞ்சனாவிற்காக இந்த கோவிலில் ஒரு சிறு பூஜை செய்து விட்டு செல்லலாம்...
நான் கர்ணா அத்தானிடம் பேசி விட்டேன். அங்கே ஒன்றும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லையாம்... அவளுக்காக சாமி கும்பிட்டு விட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று சொன்னார் என்று சொல்லிக் கொண்டு அனைவரையும் கீழே இறங்க சொல்லி அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றாள் அழகி.
கோவில் உள்ளே செல்ல சரியாக 5 பேர் அவர்களை வழி மறித்து நின்றனர்.
அழகியும் உள்ளுக்குள் எழுந்த பயத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, மிகவும் இயல்பாக கேட்பது போல் உங்களில் யார் ஜேம்ஸ் என்று கேட்டாள்...
அதற்கு அங்கு வந்த ஐந்து பேர்களில் ஒருவன்... மேடம் நான் தான் ஜேம்ஸ்... உங்கள் பாதுகாப்புக்காக மிஸ்டர் சனாதன் சார் தான் இங்கே அனுப்பி வைத்தார் என்று சொன்னான்...
அழகிக்கு உள்ளே உதறல் எடுத்தாலும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது சரியாக...
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...